தொகுப்பு

Archive for நவம்பர், 2009

எல்லா திருமணங்களையும் இனி பதிவு செய்ய வேண்டும் – அரசு உத்தரவு

G.O on compulsory marriage registrationதிருமணப் பதிவு விண்ணப்பத்தின் முக்கிய பகுதி வரதட்சணை பற்றியது. அந்தப் படிவத்தில் கணவன், மனைவி இருவரும் ”வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ” இல்லை என்று வாக்குமூலமளித்து சாட்சியங்கள் முன் கையொப்பமிடவேண்டும். அதன் பிறகே திருமணம் பதிவு செய்யப்படும்.

9. We hereby declare:-

(v) no dowry was demanded, given and taken.

இதனால் கணவன்மார்களுக்கு ஒரு நன்மை, இனிமேல் கெடுமதிப் பெண்கள் திடீரென்று நினைத்துக்கொண்டு தற்போது பொய் 498A புகார்களில் சொல்வதுபோல், “திருமணத்தன்று ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்தேன்” என்று அண்டப்புளுகு புளுக முடியாது. ஆனால், இதையும் தாண்டி இந்த சட்டத்தில் இண்டு இடுக்கு கண்டுபிடித்து, வேறு வித பொய்ப் புகார்கள் கொடுப்பதற்கு வழிவகைகள் தேடி வன்கொடுமை செய்யலாம், அதற்கென்றெ இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் வக்கீல்கள் இதற்குத் துணை போகலாம். பொய் சொல்பவர்களையும், சோரம் போகிறவர்களையும் சட்டம் போட்டு முழுவதும் தடுக்க இயலாது.

ஆனால் இந்த அரசாணை ஒரு “ஸ்பீட் பிரேக்கர்”. அவ்வளவுதான்!

இனி செய்தி:-

சென்னை : “அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். உரிய நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் அல்லது தவறான தகவல் அளித்தால் குற்ற வழக்கு தொடரப்படும்’ என்று, பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு:

தமிழக அரசு இந்த ஆண்டு இயற்றிய திருமணங்கள் பதிவுச் சட்டப்படி, பல மதங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்கள், நவம்பர் 24ம் தேதி முதல், தமிழகத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். பல்வேறு மதச் சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இந்த சட்டப்படி, பதிவுத் துறைத் தலைவர், தலைமை திருமணப் பதிவாளராகவும், மாவட்ட பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும், சார்பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருமணப் பதிவுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக, அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

கட்டாய திருமணப் பதிவுக்கான விவரங்கள் மற்றும் படிவங்கள், துறையின் இணையதளத்தில் (www.tnreginet.net) வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்து விவரங்களை அறிந்து, படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.திருமணப் பதிவுக்கான படிவம் மற்றும் விண்ணப்பத்தில் எவ்வித அடித்தலோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையெழுத்துடன், திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் 100 ரூபாய் கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேலானால், 150 ரூபாய் கட்டணம்) திருமணம் நடந்த எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் அளிக்க வேண்டும். அல்லது அஞ்சல் வழி அனுப்ப வேண்டும்.

திருமணத்துக்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆள் அறிவதற்கான அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும். விண்ணப்பமும், ஆதாரங்களும் முறையாக இருந்தால், சம்பந்தப்பட்ட திருமணப் பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய வகையில் இல்லாத மனுக்கள், குறைகளை சரிசெய்து திரும்ப அளிக்குமாறு மனுதாரரிடம் திரும்ப அளிக்கப்படும்.மணமக்கள் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டால், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப் பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.இந்த மறுப்பு உத்தரவு மீது, சம்பந்தப்பட்ட நபர்கள், உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

அந்த மேல்முறையீடு மீது மாவட்ட பதிவாளர் பிறப்பிக்கும் உத்தரவு திருப்தி இல்லையெனில், 30 நாட்களுக்குள் பதிவுத் துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத் துறை தலைவரின் உத்தரவே இறுதியானது.திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நவம்பர் 24ம் தேதி முதல் நடக்கும் அனைத்து திருமணங்களும், எந்த ஜாதி மற்றும் மதமாயிருப்பினும், உரிய நாளில் பதிவு செய்யாவிட்டாலோ, தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தாலோ, விதி மீறல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரிவுகள்:ஆண்கள் நலன் குறிச்சொற்கள்:, , , , , , , ,

பெற்ற குழந்தையைக் கொன்ற தெய்வத்தாய்

குன்னூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 1 வயது குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது

குன்னூர், நவ.29 – தினத்தந்தி

குன்னூர் அருகே 1 வயது குழந்தையை கொன்று, தற்கொலைக்கு முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சபரி மலைக்கு மாலை

குன்னூர் அருகே வெலிங் டன் ஜெயந்தி நகரை சேர்ந்த வர் அரிகரன். இவரது மனைவி சியாமளா (வயது 26). இவர்களுக்கு 1 வயது ஆண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் உள்ளன. அரிகரன் சபரி மலை அய்யப் பனுக்கு மாலை அணிய முடிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் அரிகரன் சபரி மலைக்கு மாலை போடுவது, அவரது மனைவி சியாமளாவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இத னால் அவர்களுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

வாக்குவாதம்

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அரிகரனுக்கும், சியாமளாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நடக்கும் போது அரிகரன் வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

சியாமளா தனது குழந்தைக்கு காயம் ஏற் பட்டாலோ அல்லது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலோ, சபரி மலைக்கு மாலை போடுவதை தனது கணவன் செய்யப்பட்டார் என்று நினைத்து இருந்தார்.

குழந்தை சாவு

இந்த சமயத்தில் அரிகரன் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன், சியாமளா வீட்டின் பின்புறம் வைத்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் தனது ஒரு வயது ஆண் குழந்தையான அபினுவை போட்டு, மூடி விட்டார். இது குறித்து தனது கணவனிடம் அவர் எதுவும் கூறவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து தண்ணீர் தொட்டியை திறந்து பார்க்கும் குழந்தை அபினு இறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சியாமளா, தானும் தற்கொலை செய்து கொள்ள, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, வெலிங்டன் எம்.ஆர்.சி. வளாகத்தில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அவள் கிணற்றில் குதிப்பதை ராணுவ வீரர் ஒருவர் பார்த்துவிட்டார். உடனே அந்த ராணுவ வீரர் சியாமளாவை காப்பாற்றினார்.

இதற்கிடையில் குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி கிடப்பது அந்த கிராம மக்களுக்கு தெரிய வந்தது. உடனடியாக இறந்த குழந் தையை எடுத்துக் கொண்டு கிராம மக்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தை செத்து விட்டதாக கூறினார்கள்.

அதே நேரத்தில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சியாமளாவையும் கிராம மக்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாய் கைது

இது பற்றி தகவல் அறிந்த குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தர்மராஜ் உத்தரவின் பேரில் வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக் டர் பிலிப் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசா ரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் சியாமளாவை கைது செய்தனர்.

பணம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளுக்கு வலைவீச்சு

பெண்ணியவாதிகள் “போராடிப்” பெற்ற பொய்வழக்கு சட்டங்கள் எதற்குப் பயன்படுகின்றன பாருங்கள்? வரதட்சணை முறை ஒழிய வேண்டுமானால், வரதட்சணை கேட்போரையும் கொடுப்போரையும் ஒருங்கே கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். ஆனால் அது நடப்பதில்லை. இந்திய சட்டங்கள் அனைத்திலிருந்தும் பெண்களுக்கு, முக்கியமாக, “இளம்” பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டீருக்கிறது. அவர்கள் துணிந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இப்படியே போனால் சீக்கிறமே ஆண் சிசுக்கொலை பரவலாக நடக்கும். மேலும் உயிருடன் மீதமிருக்கும் ஆண்கள் அனைவரும் “காயடிக்கப்பட்டு” பொதி சுமக்கும் ஆடுகாளாக மாற்றப்படுவர்கள் என்ப்து திண்ணம்!

இப்போது செய்தி:

மதுரையில் ரூ. 5 லட்சம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலைமுரசு – மதுரை. நவ. 28, 2009

மதுரையில் ரூ. 5 லட்சம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை எச்.எம்.எஸ் கலனியை சேர்ந்தவர் எஸ்.ஏ.ராஜன் (62). இவரது மகன் சீனிவாசன். இவருக்கும் சீதா பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே சீதாபிரியதர்ஷினிக்கு ஏற்கனவே 2003-ம் ஆண்டு திருமணமாகி இருப்பது தெரியவந்தது.

இதனால் இவருக்கும் சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் எச்.எம்.எச் காலனி வீட்டில் சீனிவாசனின் தந்தை ராஜன் இருந்தார். அப்போது சீதாபிரியதர்ஷனி மற்றும் சில பெண்கள் நுழைந்தனர்.

வீட்டில் நுழைந்த சீதாபிரியதர்ஷினி ராஜனிடம் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டினார். கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் ராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீதாபிரியதர்ஷினியை வலைவீசி தேடி வருகின்றனர்.

என்னே ஒரு அமர காதல் காவியம்!

இரண்டு பெண் குழந்தைகளின் தாய் இந்த 40 வயது முதிய தாய்க்குலம். இவருக்கு (ஒரு மரியாதை வேண்டாம்!) தன் கணவருடனுடனும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழும்போதே, ஒரு 20 வயது இளைஞனின் கலவைச் சுகம் தேவைப்பட்டது. இதை “கள்ளக்காதல்” என்றோ “கள்ள உறவு” என்றோ அழைக்கக் கூடாதாம்! பின்னே எப்படி அழைப்பது? தொடுப்பு என்கலாமா? அந்தக் காலமாக இருந்தால் “அவிசாரி” என்று சொல்லிவிடுவார்கள். இப்போது அதுபோல் சொன்னால் பெண்ணியவாதிகள் கோபப்படுவார்கள். எந்த எழவோ, போங்கள்!

லைலா – மஜ்னு, அம்பிகாபதி – அமராவதி போன்ற அமரக் காதல் காவியங்களின் வரிசையின் முன்னணியில் வைத்துப் போற்றப்படத்தக்க இந்த தெய்வீகக் காதல் கதையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!

உசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது பெண் சாவு; வாலிபர் கவலைக்கிடம்

எழுமலை, நவ.27 – 2009. செய்தி – தினத்தந்தி

உசிலம்பட்டி அருகே 40 வயது பெண், 21 வயது ஆண் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர். இதில் காதலி மரணமடைந்தார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை மில்லில் காதல்

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னன் மகன் திருமலை(வயது 21). இவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்தார். அதே மில்லில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி விஜயாவும் (40) வேலை பார்த்தார்.

செல்வராஜ்-விஜயா தம்பதிக்கு பிளஸ்-2, 9-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமலைக்கும், விஜயாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

சொந்த ஊருக்கு வந்தனர்

இவர்களின் தொடர்பு தெரிய வந்ததும், செல்வராஜ் தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும் அவர் கேட்கவில்லை. திருமலையுடன் உள்ள தொடர்பை துண்டிக்கவில்லை. இதனால் அங்கு பிரச்சினை அதிகரித்தது.

இதையடுத்து, திருமலையும், விஜயாவும் கோவையில் இருந்து கிருஷ்ணாபுரம் வந்தனர். இங்கு வசிக்க திட்டமிட்டனர். ஆனால் இங்கும் குடும்பத்தினரும், உறவினர்களும் அவர்களை ஏற்க மறுத்தனர். அவர்களது காதல் பற்றி சுற்றுப்பகுதியினர் கேலியாக பேசினர்.

விஷம் குடித்தனர்

இதனால் கள்ளக்காதல் ஜோடி மனம் உடைந்தது. மீண்டும் கோவைக்கும் செல்ல முடியாது. இங்கும் வாழ முடியாது. இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த காதல்ஜோடி இறுதியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது.

அதன்படி நேற்று அருகே உள்ள மொட்டமலைக்கு திருமலையும் விஜயாவும் சென்றனர். அங்கு விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தனர்.

நேற்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் இதைப்பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயா உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து எம்.கல்லுப்பட்டி போலீசில் கணவர் செல்வராஜ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ரமாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சுட்டி

கணவன்கள் ஏ.டி.எம்., மிஷின்களா? மனைவிகளுக்கு எதிராக போர்க்கொடி

Husbands are not free ATM machinesபுதுடில்லி:”கணவன் என்பவன் மனைவிக்கு எப்போதும் பணம் கறக்கும் ஏ.டி.எம்., மிஷினா?’ என்று ஆண்கள் உரிமை சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.கடந்த 19ம் தேதி உலக ஆண்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் டில்லியில் “இந்தியன் பேமிலி பவுன்டேஷன் (ஐ.எப்.எப்.)’ சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து ஆண்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி விட்டனர்; ஆண்கள் ஏ.டி.எம்., மிஷின்கள் அல்ல’ என இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.டில்லியில் ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.எப்.எப்., நிறுவனர் பந்தி ஜெயின் குறிப் பிடுகையில், “கணவர் மீது பெண்கள் புகார் கொடுத்தால் 498ஏ பிரிவின் கீழ் ஆண்கள் தண்டிக்கப்படுகின்றனர். எந்த விசாரணையும் ஆண்களிடம் நடத்தப்படுவதில்லை. இந்த சட்டம் பெண்களுக்கு ஆதரவானது என்பதை விட மனைவிகளுக்கான சட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், மனைவிகள் புகார் கொடுத்ததும் கணவர் மட்டுமல்லாது, கணவரது தாய், சகோதரிகளும் கைது செய்யப்படுகின்றனர். 498ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் பெரும்பாலான புகார்கள் அடிப்படையில்லாதவை. நானும் எனது மனைவியால் பாதிக்கப்பட்டவன் தான். கணிசமான தொகையை ஜீவனாம்சமாக கொடுத்து வருகிறேன்’ என்றார்.

பேரணியில் கலந்து கொண்ட ராகேஷ் ஜெய்ஸ் வால் குறிப்பிடுகையில், “என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது, ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக் கிறார். ஓராண்டில் இரண் டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அவர் ஜீவனாம்சம் கேட்டு விண்ணப்பித்திருப்பது நியாயமில்லாதது’ என் றார்.

கமல் கபாடியா(59) என்பவர் குறிப்பிடுகையில், “என் மருமகள் என் மகன் மீதும் மனைவி மற்றும் என் மீதும் 23 குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் கொடுத்துள்ளார். இதில் ஒன்று கூட உண்மையில்லை. ஆனால், போலீசார் 498ஏ பிரிவை பயன்படுத்தி எங்களை தொல்லை செய்கின்றனர்’ என்றார்.

சீரழிவை நோக்கி ஒரு பயணம்

நம் பெண்களை பெண்களாக இருப்பதையே வெறுக்கும்படி செய்யும் பெண்ணியவாதிகளின் ஓயாத பிரசாரத்தின் பலனாய் மணமான பெண்கள், அதுவும் காதல் மணம் புரிந்து கொண்ட பலர், இன்னொருவரோடு ஒத்துப் போக மனமில்லாமல் விவாகரத்தை வேண்டி நிற்கின்றனர். த்ங்கள் எதிர்காலத்தை வடிவமைத்து குடும்ப வாழ்வை மெலோங்கச் செய்ய வேண்டிய வயதில் கோர்ட்டு வராண்டாவில் வக்கீல் பின்னால் லோலோவென்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். தவிர, இவர்களில் பலர் கணவனிடமிருந்து காசுபிடுங்கும் ஆசையில் பொய்வழக்கு போட்டுத் திரிகிறார்கள்.

இவர்களாவது பரவாயில்லை, இன்னும் பலர் ஒரு ஆண்மகனிடம் அனுபவிக்கும் செக்ஸில் மட்டும் திருப்தி அடையாமல் பலவகை சுகத்தைத்தேடி கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற நிக்ழ்வுகள் அதிகமாகும்போதுதான் பெண்ணியவாதிகளின் அடிப்படை நோக்கமாகிய நம் குடும்ப வாழ்வு முறைச் சிதைவு முழுதாக நிறைவேறும்.
ஆனால் அந்தப் பெண்கள் கதி?

இந்தச் செய்தியைக் கூர்ந்து நோக்குங்கள்:-

கடலூரில் பெண் கற்பழித்துக் கொலை : கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

நவம்பர் 23,2009. செய்தி – தினமலர்

கடலூர் : கடலூரில், இளம் பெண்ணை கற்பழித்துக் கொலை செய்த வழக்கில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர். கடலூர் பச்சையாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் இந்துமதி(19). கடந்த 14ம் தேதி இரவு 7.30 மணியளவில் தோட்டத்திற்கு சென்றவர், மர்ம நபரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்துமதியின் மொபைல் போனில், சம்பவத்திற்கு சற்று நேரத்திற்கு முன் பேசிய அவரது காதலன் ராஜ்குமார் மற்றும் அந்தோணி இருதயராஜ் (27) ஆகியோர் மீது போலீசார் சந்தேகம் கொண்டனர். இந்நிலையில், ராஜ்குமார் 15ம் தேதி இரவு அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், அந்தோணி இருதயராஜை தேடி வந்தனர். அவரை, நேற்று பிடித்து விசாரணை செய்தனர்.

அந்தோணி இருதயராஜ் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான்கு ஆண்டிற்கு முன் எனது பெற்றோர் ஆரோக்கியமேரி (35) என்ற பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரோக்கிய மேரிக்கு வயது அதிகமாக இருந்ததால், எங்களுக்குள் ஒத்துவரவில்லை. அவர் பிரிந்து சென்றுவிட்டார்.

பின், நான் புதுக்கோட்டைக்கு கரும்பு வெட்டச் சென்றபோது, டெய்ஸி ராணி என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். அதை நான் கண்டித்தும் விடவில்லை. அதனால், நான் விலகி விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பணிபுரிந்த மாலதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது மாலதியின் குடும்பத்தாருக்கு தெரியவரவே, தொடர்பை நிறுத்திக் கொள்வோம், உறவிற்கு வற்புறுத்த வேண்டாம் என மாலதி கூறினார்.

ஆத்திரமடைந்த நான், 2008 ஆக., 13ம் தேதி மாலதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். பின்னர் புதுக்கோட்டை சென்று டெய்ஸி ராணியின் கழுத்தில் கத்தியால் வெட்டினேன். அதில், டெய்ஸி ராணி பிழைத்துக் கொண்டார்.

பின்,கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது இந்துமதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை நான் காதலித்தேன். அவர் என்னை காதலிக்கவில்லை. தொடர்ந்து அவரின் மனதை மாற்ற போனில் பேசிவந்தேன். கடந்த 14ம் தேதி, புதுச்சேரியிலிருந்து கடலூர் வந்த நான், இந்துமதியிடம் பேசி, தோட்டத் திற்கு வரவழைத்து, கற்பழித்து கொலை செய்துவிட்டு தப்பியோடினேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கடலூர் முதுநகர் போலீசார், அந்தோணி இருதயராஜை கைது செய்து கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பணம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்: மனைவியிடம் ரூ.25 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் கணவர்

சென்னை, நவ. 22 – 2009. செய்தி: மாலைமலர்

Kalai Selvan, the warrior against evil!திருச்சியை சேர்ந்தவர் கலைசெல்வன். குவைத்தில் என்ஜினீயர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு 1997-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2002-ல் கோர்ட்டில் விவாக ரத்துக்கு மனு செய்தனர். கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவுபடி குழந்தை கலைச் செல்வன் வசம் வந்தது.

விவாகரத்து வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட முறை குவைத்தில் இருந்து தமிழகம் வந்து சென்றார். இதற்கு ஏராளமான பணம் செலவானது. இடைப்பட்ட காலத்தில் அவரது வேலையும் பறிபோனது.

வருமானத்திற்கு வழியின்றி சேமிப்பு பணத்தை செலவிட்டார். இதற்கிடையே மலர்விழி கொடுத்த வர தட்சணை கொடுமை வழக்கிலும் கலைசெல்வன் சிக்கினார். இதில் 3 மாதம் வரை ஜெயிலில் இருந்தார். ஒருவழியாக வெளியே வந்த அவர் மனைவி கொடுத்த புகாரில் இருந்து வெளியே வந்தார்.

ஒரு பக்கம் குழந்தையின் செலவு, தனது வழக்கு செலவு என்று கலைசெல்வன் சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலைக்கு செல்லப்பட்டார். தனது கஷ்ட நிலைமைக்கு காரணமான முன்னாள் மனைவி மலர்விழியின் நிலைமையோ தலைகீழ் என் கிறார் கலைசெல்வன்.

மேலும் கூறியதாவது:-

நான் திருமணம் செய்து கொண்டபோது மலர்விழி வேலை இல்லாமல் இருந்தார். நான் உழைத்து சம்பாதித்து அனுப்பிய பணத்தில், வேலைக்கு செல்ல முன்னேற்பாடுகள் செய்தாள். ஏராளமான பணத்தையும் வைத்து கொண்டார். தற்போது கல்லூரி ஒன்றில் பேராசிரியராக நல்ல சம்பளத்தில் உள்ளார். நானோ குழந்தையுடன் நடுத் தெருவில் நிற்கிறேன்.

எனவே மலர்விழியிடம் இருந்து மொத்தமாக ரூ.25 லட்சம் அல்லது மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் ஜீவனாம்சம் பெற்று தரவேண்டும் என கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு செய்துள்ளேன். அது வருகிற டிசம்பர் 15-ந்தேதி விசாரணைக்கு வருகிறது என்றார்.

‘டிவி’ தொடர் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து: தீர்ப்பை எதிர்த்து கணவன் அப்பீல்

Wife threatens divorce for the sake of television serialமும்பை : “எனக்கு பிடித்த “டிவி’ தொடர்களை பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்; இதனால், எங்களுக்குள் தினமும் சண்டை ஏற்படுகிறது. இதை மனதில் வைத்து, பலவகையில் என்னை துன்புறுத்துகிறார்!’ – இப்படி சொல்லி, குடும்ப கோர்ட்டில் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார் மனைவி. “திருமணத்தை முறிக்க விரும்பவில்லை; நான் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்’ என்று கணவன் அப்பீல் செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக இருக்கிறார் ஹர்ஷத்(34); இவர் மனைவி சீமா (31). சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்; திருமணம் ஆகி எட்டாண்டு ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. “என் கணவர் என்னை பலவகையில் கொடுமைப்படுத்துகிறார். எனக்கு பிடித்தமான “டிவி’ தொடர்களை பார்க்க அனுமதிப்பதில்லை. இது தான் சண்டைகளுக்கு காரணம். அதனால், எனக்கு சரியான பாதுகாப்பு அளிப்பதில்லை. நள்ளிரவில் தனியாக ஆட்டோவில் பயணிக்க வைக்கிறார். இது போன்ற சித்ரவதைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்று குடும்ப நல கோர்ட்டில் மனு செய்தார் சீமா. வழக்கை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் கணவன் ஹர்ஷத் அப்பீல் செய்தார்.

“இந்திய சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம் திருமண பந்தம். அதை சாதாரணமாக முறிக்க முடியாது. “எந்த ஆதாரமும் இல்லாமல், என் மனைவி என் மீது சொன்னதை வைத்து விவாகரத்து கொடுத்திருப்பது சரியல்ல; திருமண முறிவு தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் பல முறை சுட்டிக்காட்டிய கருத்துக்களை குடும்ப நல கோர்ட் காற்றில் பறக்க விட்டு, இப்படி விவாகரத்து அளித்துள்ளது. “எனக்கு திருமண முறிவுவேண்டாம். அதில் விருப்பமில்லை. என் குழந்தையை நான் வளர்க்க அனுமதிக்க வேண்டும்’ என்று அப்பீல் மனுவில் அவர் கூறியுள்ளார்.

==================

நல்ல வேளை, இந்தப் பெண்மணி விவாகரத்தோடு நிறுத்தி விட்டார். வேறு சில பெண்குலத் திலகங்கள் இன்னேரம் சட்டப் புத்தகத்தின் இண்டு இடுக்குகளில் உள்ள அத்தனை சட்டப் பிரிவுகளையும் கையிலெடுத்து கேசு மேல் கேசாக கணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது போட்டு நடுத்தெருவில் நிறுத்தியிருப்பார்கள்.

சரி, நீதி(!)மன்றங்கள் அவற்றுக்குச் செவி சாய்க்குமா என்றுதானே கேட்கிறீர்கள். ஹும். உங்களுக்கு நாட்டு நடப்பே தெரியாது போலிருக்கிறது!!

கொடுமைக்கார தாய், தகப்பனிடம் சென்ற சேய்

சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

Judge acknowledges shared parenting

நவம்பர் 23,2009. தினமலர்

கோல்கட்டா : வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பத்து வயது சிறுமியை, நீதிபதியே, கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் கோல்கட்டா கோர்ட்டில் நடந்தது. தனது தந்தையுடன் வசிக்க வேண்டும் என்ற, அந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசையையும் நீதிபதி நிறைவேற்றி வைத்தார்.

கோல்கட்டாவைச் சேர்ந்தவர் ராணா. இவரது மனைவி அனாமிகா. இவர்களுக்கு பத்து வயதில் பர்பி என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ராணாவும், அனாமிகாவும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தை பர்பி, அம்மாவுடன் தங்கி இருந்தாள். ஆனாலும், அப்பாவுடன் தங்கியிருக்க வேண்டும் என்பது தான், அவளது விருப்பம். குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்பதில் அனாமிகாவுக்கும், ராணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. வேறு வழியின்றி இருவரும் கோர்ட் படியேறினர். கோல்கட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையின்போது, பர்பியும் கோர்ட் டுக்கு அழைத்து வரப்பட்டாள். “தந்தையுடன் தான், வசிப்பேன்’ என, பர்பி உறுதியாக தெரிவித்தாள். இருந்தாலும், நீதிபதி முகோபாத்யாயா, இதில் அவசரப்பட்டு முடிவு எடுக்க விரும்பவில்லை. தந்தையின் மிரட்டல் காரணமாக, பயந்து போய் குழந்தை இவ்வாறு கூறுகிறதா என்பது உட்பட பல்வேறு சிந்தைனைகள் அவரது மனதில் ஓடின.நீதிபதி முகோபாத்யாயா, தனது இருக்கையை விட்டு எழுந்தார். நேராக சிறுமி பர்பி இருக்கும் இடத்துக்கு வந்தார். அடுத்ததாக கோர்ட்டில் நடந்த நிகழ்வு தான், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பர்பியின் கையை பிடித்து வெளியில் அழைத்துச் சென்றார், நீதிபதி. அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, சாக்லேட் வாங்கி கொடுத்தார். மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டாள், பர்பி. பின்னர், சிறுமிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேச்சுக் கொடுத்தார்.”இங்கே பார். இப்போது இருந்து நான் உனக்கு நண்பன். எந்த பள்ளியில் படிக்கிறாய்? உனது பொழுது போக்கு என்ன? உன் நண்பர்கள் யார்?’ என, சிறுமியின் மனதுக்குள் இருப்பதை சிறிது, சிறிதாக கேட்டுத் தெரிந்து கொண்டார். நீதிபதியின் மென்மையான அணுகுமுறையால், அவர் மீது பர்பிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

மீண்டும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார். விசாரணை தொடர்ந்தது.”உனக்கு ஏன் அம்மாவிடம் இருக்க பிடிக்கவில்லை’ என, விஷயத்துக்கு வந்தார், நீதிபதி. இதற்கு சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,“அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்” என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,”என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை’ என, அழத் துவங்கினாள்.

பர்பியின் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி, தனது தீர்ப்பை வாசித்தார். “பர்பியை அவளது தந்தையுடன் தங்கியிருக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது’ என்றார். இதைக் கேட்ட பர்பி மகிழ்ச்சி அடைந்தாள். நேராக நீதிபதி இருக்கும் இடத்துக்கு சென்று,”நன்றி நீதிபதி அங்கிள்’ என, கூறி விட்டு, வேகமாக தனது தந்தையின் கையை பிடித்தபடி, கோர்ட்டை விட்டு வெளியேறத் துவங்கினாள். சென்று கொண்டிருக்கும்போதே, நீதிபதியை நோக்கி தனது தலையை திருப்பி, மெல்ல புன்னகைத்தாள். அங்கு கூடியிருந்தவர்களின் முகங்களிலும் புன்னகை அரும்பியது.

கட்டம் கட்டி சுபாரி போட்டுடுவாய்ங்கப்பா, உஷார்!

Wife targets husband's money

சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருக்கிறது. அதற்குள் கணவன் மண்டையைப் போட்டவுடன் அவனுடைய சேமிப்பு மற்றும் இன்ஷ்யூரன்ஸ் பணத்தை விள்ளாமல் விரியாமல் எப்படி தேட்டை போடுவது எப்படி என்று திட்டம் போடுகிறார் பாருங்கள் இந்த மாதர்குலத் திலகம்!

பாவம், அந்தக் கணவன்! அவன் காலம் இன்னும் எவ்வளவு காலமோ! “கொலை மட்டுமே செய்வாள் பத்தினி”.

இதில் வேடிக்கை, அந்தப் பெண்குல மாணிக்கத்தை ஜாதகம் பார்த்து அலசி அலசிதேடிப் பிடித்திருப்பான் அந்த சோப்ளாங்கி!!

உஷாரா இருந்துக்கங்கப்பா! போட்டுத் தள்ளிடுவாய்ங்க!