தொகுப்பு

Archive for மார்ச், 2010

பெண்கள் மசோதாவால் பயனில்லை : துணை ஜனாதிபதி மனைவி பேட்டி

துணை ஜனாதிபதி மனைவிஆக்ரா : ‘கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா போன்றவை பெரியளவில் பயன் அளிக்காது’ என, துணை ஜனாதிபதி அமீது அன்சாரியின் மனைவி சல்மா தெரிவித்தார்.

லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் ‘பெண்கள் இடஒதுக்கீடு மசோதா’ கடந்த 9ம் தேதி ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை அதன் தற்போதைய நிலையிலேயே ஏற்றுக் கொள்ள சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா லோக்சபாவில், இனிமேல் தான் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், இந்த மசோதா குறித்து, உ.பி., ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி அமீது அன்சாரியின் மனைவி சல்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசு ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால், இந்த திட்டங்களால், எவ்வளவு பெண்கள் பயனடைந்துள்ளனர். கிராமப்புற அளவிலான, பெண்கள் கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை பெறாமல், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா போன்ற சட்டங்கள் பெரியளவில் உதவிகரமாக இருக்காது.

தற்போதும் கல்வியறிவு பெறாத, பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். தங்களின் வாழ்க்கையை, தாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை, அந்த பெண்கள் உணராத வரை, இத்தகைய மசோதாக்கள் எவ்வளவு நிறைவேற்றப்பட்டாலும், அதனால் பயன் இல்லை. இவ்வாறு சல்மா கூறினார்.

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=23455

Advertisements

தன் பெண்ணைக் கொடுமைப் படுத்தும் தாய்

கட்டாய திருமணம் செய்து வைக்க பெண் எஸ்.ஐ. (பெண்ணின் தாய்) முயற்சி : மதுரை துணை கமிஷனரிடம் கல்லூரி மாணவி புகார்

மார்ச் 30,2010, தினமலர்

மதுரை : மதுரையில் 19 வயது கல்லூரி மாணவிக்கு, 39 வயதுக்காரருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க, அப்பெண்ணின் தாயான பெண் எஸ்.ஐ., முயற்சி செய்வதாக போலீஸ் துணை கமிஷனரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் சந்திரா(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெண்கள் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு ஆங்கிலம் படிக்கிறார். இவரது தாய் பரமேஸ்வரி; குற்றப்பிரிவு எஸ்.ஐ.,யாக உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், செங்கப்படையைச் சேர்ந்த கணேசன்(39) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க தாய் முயற்சி செய்வதாக, துணை கமிஷனர் தேன்மொழியிடம் சந்திரா புகார் அளித்தார்.

அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

திருமணத்திற்கு நான் மறுக்கவே, தனி அறையில் அடைத்து வைத்து என் தாய், லத்தியால் அடித்து உதைத்தார். தொடர்ந்து உடல் ரீதியாகவும், வார்த்தை ரீதியாகவும் சித்திரவதை செய்தார். மார்ச் 23ல் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். தற்போது சென்னையில் விடுதி ஒன்றில் தங்கி, சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிகிறேன். எனது உயிருக்கு, தாயால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. நான் மதுரையில் இருந்தால், நிச்சயம் கணேசனுக்கு திருமணம் செய்து வைப்பார். தாய் தூண்டுதல் பேரில், எனது நண்பர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துகின்றனர். எனது விருப்பத்திற்கு மாறாக, கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரிக்க, தல்லாகுளம் போலீசாருக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

நிருபர்களிடம் சந்திரா, ”கணேசன் கால் ஊனமானவர்; ஏற்கனவே திருமணம் ஆனவர். என்னை தொடர்ந்து தாய் சந்தேகித்து, துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறினேன். கல்லூரிக்கும் செல்ல முடியவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் தங்கையையும், தாய் கொடுமைப்படுத்துகிறார்,” என்றார். சந்திராவின் வக்கீல்கள் ராஜ்குமார், பாஸ்கர் மதுரம் கூறுகையில், ‘மதுரை விடுதியில் தங்கி, கல்லூரி படிப்பை தொடர, தகுந்த பாதுகாப்பு அளிப்பதாக துணை கமிஷனர் தெரிவித்தார்’ என்றனர்.

33 என்ன, முழுதுமாகவே கொன்றுவிட்டாள் கணவனை!

இன்னும் என்ன உரிமை வேண்டும்?

கணவரை கார் ஏற்றி கொலை செய்த மனைவி கூலிப்படையினருடன் கைது

மார்ச் 29,2010. செய்தி: தினமலர்

சாணார்பட்டி:கூலிப்படை உதவியுடன் கணவனை, கார் ஏற்றி கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேரை, சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், அதிகாரிப்பட்டி மெயின் ரோட்டில் மார்ச் 23ல் அடையாளம் தெரியாத ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். சிலுவத்தூர் வி.ஏ.ஓ., தந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். இறந்தவர் தாராபுரம் விஜயகுமார் என தெரிய வந்தது.

அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கூறியதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.இறந்த விஜயகுமார், தாராபுரம் மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கும், மனைவி ஜோஸ் மேரிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. விஜயகுமார் சில ஆண்டுகளாக பழநி அருகே கீரனூரில் வசித்து வந்துள்ளார். இங்கு எலக்ட்ரிக் கடையும் வைத்துள்ளார்.

இவருக்கு தாராபுரம், உடுமலைப்பேட்டையில் சொந்தமாக வீடுகள் உள்ளன.தாராபுரத்தில் வசித்து வந்த மனைவி ஜோஸ் மேரி(43), பிரிந்து வாழும் கணவர் விஜயகுமாரிடம் ஜீவனாம்சம் கேட்டு, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆத்திரமடைந்த விஜயகுமார் கடந்த வாரம் தாராபுரம் சென்று, ஜோஸ் மேரி வசிக்கும் வீட்டை காலி செய்யுமாறு தகராறு செய்துள்ளார். தாராபுரத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் இவர்களை சமாதானம் செய்துள்ளார்.

பஞ்சாயத்து பேச வந்த ஹரிதாசிடமே, தனது கணவர் விஜயகுமாரை கொலை செய்தால் பணம் தருவதாக ஜோஸ் மேரி பேரம் பேசியுள்ளார். பணத்திற்கு ஆசைப்பட்ட ஹரிதாஸ், தனது நண்பரான திண்டுக்கல் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியைச் சேர்ந்த நடராஜன் உதவியுடன், விஜயகுமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.விஜயகுமாரிடம், திண்டுக்கலில் வைத்து பேசி முடித்துக் கொள்ளலாம் என கூறிய ஹரிதாஸ், அவரையும், ஜோஸ் மேரியையும் தனது காரில் அழைத்து வந்துள்ளார்.

திண்டுக்கலில் சிறிது நேரம் பேசிய பின், சாணார்பட்டியில் பேசலாம் என நடராஜன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில், அதிகாரிப்பட்டியில் விஜயகுமார் சிறுநீர் கழிக்க இறங்கியுள்ளார். அங்கேயே அவர் மீது காரை ஏற்றி கொலை செய்து விட்டனர். சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிந்து ஜோஸ் மேரி, ஹரிதாஸ், நடராஜன் ஆகியோரை கைது செய்தனர்.