தொகுப்பு

Archive for ஏப்ரல், 2009

பலே ரம்யா!

இதுபோல் இனிமேல் தினமும் நடக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும். தவாறான அணுகுமுறையில் இயற்றப்பட்டு, துஷ்பிரயோகம் செய்வதற்கென்றே பிறப்பிக்கப்பட்ட முட்டாள்தனமான 498A, DV Act போன்ற ஆணழிப்புச் சட்டங்கள் திருத்தி யமைக்கப்படவில்லை யெனில், குடும்ப வாழ்க்கை என்பதே கேலிக்கூத்தாகி, அனைத்து ஆண்களும் அவர்களின் பெற்றோரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!

இப்போது இந்த செய்தியை வாசியுங்கள்:-

பழநி அருகே உள்ள மானூரைச் சேர்ந்தவர் ரம்யா (26). திருமணமானவர். கணவனை விட்டு பிரிந்து பெற்றோருடன் இருந்த இவர் இதே ஊரை சேர்ந்த செந்தில்குமாரை காதலித்துள்ளார். தன்னை திருமணம் செய்ய செந்தில் மறுப்பதாக அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். கைதான செந்தில் ஜாமீனில் உள்ளார்.

ஏப்., 29ல் தன்னை காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி ரம்யா மானூரில் ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். டி.எஸ்.பி., விஜய ரகுநாதனிடமும் முறையிட்டுள்ளார். டி.எஸ்.பி., கூறுகையில், “இந்து திருமண சட்டப்படி இப்பிரச்னை கையாளப்பட வேண்டியுள்ளது. முதல் கணவரிடம் இருந்து சட்டப்படி ரம்யா விவாகரத்து பெறவில்லை. எனவே, செந்தில்குமாருடன் நாங்கள் திருமணம் செய்து வைக்க இயலாது. அவருக்கு மனநல ஆலோசனை தர முடிவு செய்துள்ளோம். இரு தரப்பு வக்கீல்கள் முன்னிலையில் இப்பிரச்னை குறித்து இன்று பேச உள்ளோம்,’ என்றார்.

சரி, பிறகு ஏன் அந்த செந்திலைக் கைது செய்தனர்?

இப்போது புரிகிறதா, இத்தகைய சட்டங்கள், சமுதாயம், காவல் துறை மற்றும் நீதிமன்றங்களின் அணுகுமுறைகள் இவற்றில் உள்ள குறைபாடுகள்!

இதுபோன்ற கொடுங்கோன்மை சட்டங்கள் டோண்டு, செல்வன் போன்றவர்களைத் தீண்டும் காலம் வரும்போது அவர்கள் உணர்வார்கள்!

செய்தி: தினமலர் மே 01,2009

ஒண்ணுந்தெரியாத பாப்பா உல்லாசமா இருந்தாளாம்!

திருமணம் செய்வதாக கூறி உல்லாசம்: காதலன் மீது போலீசில் இளம்பெண் புகார்

திருப்பதி, ஏப்.29- 2009 தினத்தந்தி

திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து தற்போது தலைமறைவான, காதலன் மீது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சொசைட்டி காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் சித்ரா (வயது 15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரய்யா என்பவரது மகன் சுரேஷ் (19) என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.

காதலிக்கும்போது சுரேஷ், சித்ராவிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் சித்ரா கர்ப்பமானார். (அதாவது, சுரேஷ் மட்டும் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த “உல்லாசத்தில்” சித்ரா பங்கு பெறவில்லை, அப்படித்தானே? பிறகு எப்படி சித்ரா கர்ப்பமானார்!)

இதனால் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி, சுரேஷை, சித்ரா வற்புறுத்தி வந்தார். அதற்கு சுரேஷ், “நீ 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்ததும் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சித்ராவுக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிந்தது. அதைத் தொடர்ந்து சுரேஷை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்பதற்காக, அவரது வீட்டிற்கு சித்ரா சென்றார். ஆனால் அவரை காணவில்லை. இதற்கிடையில் அவருக்கு நேற்று மதனப்பள்ளி அரசு
ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் இதுகுறித்து சித்ரா நேற்று மதனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், “நானும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்து விட்டார். (கற்பழிப்பு என்றால் என்ன ஐயா!)

இந்த நிலையில் சுரேஷை ஒரு வாரமாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனர்.

ஐயோ பாவம் பெண்குலம், ஆசிட் வீசிய மனைவி

குடும்ப வன்முறைச் சட்டம் வரையறைத்துள்ளது என்ன?

1. “குடும்ப வன்முறை என்பது ஆண்கள் மட்டுமே செய்வது.”

2. ”குடும்பத்தில் உடலாலோ, மனத்தாலோ, சொல்லாலோ வன்முறைக்கு
உட்படுத்தப்படுவது பெண்கள் மட்டுமே.”

3. அதனால் ஒரு பெண் அவளுடைய கணவன் தன்னை முறைத்துப் பார்த்தோ, தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தோ, அவனுடைய தலையைத் திருப்பிக் கொண்டா உளவியல் ரீதியான வன்முறை செய்ததாக புகார் கொடுத்தால் யாதொரு விசாரணையும் இன்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்தக் கணவனும் அவனது பெற்றோரும் அவர்களுடைய வீட்டிலிருந்தே (அதாவது அந்தக் கணவனும் அவர்தம் பெற்றோரும் தங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டிலிருந்து) வெளியேற்றப்பட்டு, அந்த வீடு புகார் கொடுத்த பெண்ணிடம் ஒப்படைக்கப்படும்.

இதுதானய்யா இந்த THE PROTECTION OF WOMEN FROM DOMESTIC VIOLENCE ACT, 2005 (D.V. Act) சட்டம் சொல்வது!

சந்தேகமிருந்தால் இந்த வலைத்தளத்திற்குச் http://indiankanoon.org/doc/542601/ சென்று படித்துப் பாருங்கள். அல்லது ஒரு வக்கீலிடம் கேளுங்கள்.

சரி. இப்போது இந்த செய்தியை வாசியுங்கள்:-

குடும்பத் தகாறாரில் போலீஸ் ஏட்டு மீது `ஆசிட்’ வீசிய மனைவி. பூந்தமல்லி, ஏப்.25- 2009

குடும்பத்தகராறு காரணமாக போலீஸ் ஏட்டு மீது அவருடைய மனைவியும் மகளும் ஆசிட்டை வீசினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆவடி நந்தனம் மேட்டூர் பாரதி தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 51). இவர் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வனஜா. ரவிக்கு தெரியாமல் மூத்த மகள் நித்யமூர்த்திக்கு, வனஜா திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக ரவி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரவி, அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு கோர்ட்டுக்கு சென்றது. இருவரையும் சேர்ந்து வாழ கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்பேரில் சில நாட்களாக ரவி, தன்னுடைய மனவி வனஜா, மகள் சரண்யா ஆகியோருடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று ரவி வீட்டுக்கு சென்றபோது வனஜாவும், சரண்யாவும் சேர்ந்து அவர் முகத்தில் ஆசிட்டை வீசியதாக கூறப்படுகிறது. இதில் முகம் வெந்த நிலையில் ரவி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதால் பின்னர்அவர் எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்ற குழந்தையின் கழுத்தை நெறித்த தாய்க்குலம்

கணவன் மேல் கொண்ட கோப வெறியில் தான் பெற்ற பச்சிளம் குழந்தைகளை கழுத்தை நெறித்தும், வீசியெறிந்தும் கொலை செய்ய முயற்சித்தாள் தாய்!

சென்னை, ஏப்.25- 2009

சென்னை கோடம்பாக்கம் புலினிர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா(வயது 30). இவர் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தனது 2 குழந்தைகளுடன் வந்தார். திடீரென்று தனது குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றார். குழந்தை கதறி அழுதது. பின்னர் இன்னொரு குழந்தையை வேகமாக வந்த போலீஸ் வேன் முன்பு தூக்கி வீசினார். வேனை பிரேக் போட்டதால் குழந்தை தப்பியது. இதற்கிடையில் அந்த இளம் பெண்ணும் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கு காவலுக்கு நின்ற பெண் போலீசார் 2 குழந்தைகளையும், இளம்பெண் திவ்யாவிடம் இருந்து மீட்டனர். குழந்தையை மீட்க பெண் போலீசார் பெரும் பாடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் எழும்பூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசிமா விரைந்து சென்று திவ்யாவையும், 2 குழந்தைகளையும் அழைத்து சென்றார். எழும்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்தது.

விசாரணையில், தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து இளம் பெண் திவ்யா, போலீசாரிடம் கூறியதாவது:-

எனது கணவர் கமிஷனர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். அவர், என்னையும், எனது குழந்தைகளையும் சரியாக பார்த்துக்கொள்ளவில்லை. இரவு நீண்டநேரம் கழித்து வீட்டுக்கு வருகிறார். இதுதொடர்பாக அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே எனது கணவர் அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதன்பின் என்னை திருமணம் செய்து கொண்டார். அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வாங்கித்தர வேண்டும்.
இவ்வாறு திவ்யா கூறினார்.

பெண் போலீசார் திவ்யாவை கவுன்சிலிங் மூலம் சமாதானப்படுத்தினார்கள். உங்கள் கணவரோடு 6 மாதம் சேர்ந்து வாழுங்கள். அதன்பிறகும் உங்களுக்கு திருப்தி ஏற்படாவிட்டால், கோர்ட்டில் சட்டப்பூர்வமாக வழக்குபோட்டு கணவரிடம் விவாகரத்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர்.

திவ்யாவின் கணவரிடமும் விசாரணை நடந்தது. அவர் இனிமேல் ஒழுங்காக வாழ்வதாக போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.

===========

இந்திய கோர்ட்டுகளில் விவாக ரத்து நிகழும்போது குழந்தைகளை தாயிடம்தான் பெரும்பாலும் ஒப்படைக்கிறார்கள். ஆனால் தாய்க்குலத்தின் லட்சணம் எப்படி இருக்கிறது பாருங்கள்! இத்தகைய கொலைகார, வெறி பிடித்த பெண்பேய்கள் கையில் சிக்கி, தகப்பன் அன்பு தெரியாமல் வளர்வதால்தான் பல சிறார்கள் இள வயதிலேயே குற்றவாளிகளாகவும், சமூக விரோதிகளாகவும் மாறுகிறார்கள்!

பெண்களுக்கு தங்கள் கோபமும் வெறியும்தான் முக்கியம். தான் பெற்ற குழந்தைகளோ, தன்னைப் பெற்ற தாய் தந்தையரோ முக்கியமில்லை!

உங்கள் பெயரும் புகாரில் இருக்கப் போகிறது ஜாக்கிறதை!

வீட்டை விட்டு துரத்தியதாக கணவர் உள்பட 8 பேர் மீது இளம்பெண் போலீசில் புகார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

சாத்தூர் அருகே உள்ள ஊத் துப்பட்டியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள ஒரு புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், சோரம்பட்டியைச்சேர்ந்த கார் டிரைவர் துரைப்பாண்டி என்பவருக் கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 30 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் துரைப்பாண்டிக்கு 11/2 பவுனில் பிரேஸ்லெட், மோதிரம் ஆகியவை கொடுத்தனர். எங்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதனிடையே எனது கண வர் துரைப்பாண்டிக்கும், சிவகாசியில் உள்ள ஒரு வங்கி மானேஜரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனை நான் தட்டிக்கேட்டேன்.

இதனால் ஆத்திரமடைந்த எனது கணவர் துரைப்பாண்டி, மாமனார் மாரியப்பன், மாமியார் முனியம்மாள் கொழுந்தனார் பூபாண்டி, உறவினர்கள் குணசேகரன், பாண்டிகனி, போலீஸ்காரர் தமிழரசன், வங்கி மானேஜரின் மனைவி ஆகியோர் என்னை சித்ரவதை செய்து வீட்டை விட்டு துரத்தினர். எனவே அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டு உள்ளது.

மனுவை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு, புகார் மீது நடவடிக்கை எடுக்கசாத் தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் கணவர் துரைப்பாண்டி உள்பட புகார் கூறப்பட்ட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக் காதலனை கைப்பிடிப்பதற்காக கணவரை கொன்ற புதுப்பெண்

பெங்களூர், ஏப்.16- 2009

திருமணம் ஆன 5 மாதங்களில், கணவரை கொன்ற புதுப்பெண் கைது செய்யப்பட்டார். கல்லூரி காதலனை கைப்பிடிப்பதற்காக அவர் கணவரை கொலை செய்தது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூர், ராமசாமி பாளையம் நஞ்சுண்டப்பா கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் உமேஷ்கிருஷ்ணன் (வயது 26). கம்ப்னிட்டர் என்ஜினீயர். இவர் பெங்களூரில் ஒரு கால் சென்டரில் வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி பெயர், ஹனிமேரி.

உமேஷ் கிருஷ்ணன் ஈரோட்டை சேர்ந்தவர். இவரது தந்தை ரெயில்வே துறையில் வேலை செய்து வருகிறார். உமேஷ்கிருஷ்ணன்-ஹனிமேரி திருமணம், கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. அதன் பிறகு 2 பேரும் பெங்களூரில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் மார்ச் மாதம் 2-ந்தேதி அதிகாலையில் மர்ம மனிதர்கள் வீட்டிற்கு நுழைந்து உமேஷ்கிருஷ்ணனை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து தப்பி விட்டதாக பக்கத்து வீட்டில் வசித்தவர்களிடம் ஹனிமேரி பதற்றத்துடன் கூறினார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது உமேஷ்கிருஷ்ணன் கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய முகம் முழுவதும் செல்லோ டேப் ஒட்டப்பட்டிருந்தது.

தகவல் கிடைத்ததும் பெங்களூர், பானஸ்வாடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், ஹனிமேரி புகாரில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது செல்போன் நம்பரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி ஹனிமேரியை கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-

கல்லூரி காதல்

ஹனிமேரி, கோயம்புத்தூரில் படிக்கும்போது அவருக்கு முத்துகுமார் என்ற என்ஜினீயருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முத்து குமார், திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர். கடந்த 2006-ம் ஆண்டு கோயம்புத்தூரில் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த போது ஹனிமேரி-முத்து குமார் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்தது.

இதற்கிடையே, முத்துகுமார் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார். இந்தநேரத்தில்தான், ஹனிமேரிக்கும் உமேஷ்கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

ஹனிமேரியின் தந்தையும் உமேஷ்கிருஷ்ணனின் தந்தையும் நண்பர்கள். 2 பேரும் ரெயில்வே துறையில் வேலை செய்து வந்ததால் நட்பு அடிப்படையில் 2 குடும்பத்தினரும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் ஹனிமேரி தனது காதல் விவகாரத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.

ஹனிமேரி-உமேஷ் தம்பதி திருமணம் முடிந்ததும் பெங்களூருக்கு தனிக்குடித்தனம் வந்தார்கள். பெங்களூர் பானஸ்வாடி போலீஸ் சரகத்தில் உள்ள நஞ்சுண்டப்பா கார்டன் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் வசித்தனர்.

திருமணம் ஆன பிறகும் ஹனிமேரிக்கு தனது காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்தார். பெற்றோர் பார்த்து திருமணம் செய்துவைத்த கணவனோடு வாழ அவரது மனம் இணங்கவில்லை. உமேஷ், கால்சென்டர் வேலைக்கு சென்றதும் ஹனிமேரி குஜராத்தில் உள்ள முத்துகுமாருடன் செல்போனில் பேசுவது வழக்கம்.

அப்போது, 2 பேரும் தங்களது காதல் நாட்களை மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள். இதனால் ஹனிமேரியின் மனம், கணவனை விட்டு காதலனை நாடத்தொடங்கியது. இதன்விளைவு ஹனிமேரிக்கு காதலனுடன் வாழ வேண்டும் என்று விரும்பத்தொடங்கினார். இதனால் ஹனிமேரி காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்ட ரகசிய திட்டத்தை தீட்டினார்.

முத்துகுமார் அந்த ரகசிய திட்டம் பற்றி அவருடன் வேலைபார்க்கும் சஜ்ஜன் என்பவரிடம் கூறினார். சஜ்ஜன் அவருடைய நண்பரான சந்தன் என்பவரிடம் கூறி, ஆலோசனை கேட்டுள்ளார். அதன் பிறகு பிபின் குமார் மற்றும் பாஸ்கல் ஆகிய 2 பேர் பெங்களூருக்கு வந்து ஹனிமேரியை சந்தித்து முத்துகுமார்தான் தங்களை அனுப்பினார் என்று கூறினர்.

பிபின்குமார், பாஸ்கல் ஆகிய 2 பேரும் ஹனிமேரி தங்கியிருந்த வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் யார் வசிக்கிறார்கள் என்பது பற்றி நோட்டம் விட்டு குஜராத் சென்று முத்துகுமாரிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உமேசை எப்படி கொலை செய்வது என்று ஆலோசனை நடத்தினார்கள்.

சம்பவத்தன்று அதிகாலை பிபின்குமார் மற்றும் பாஸ்கல் ஆகிய 2 பேரும் உமேஷ் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர். அவர்களது வருகையை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த ஹனிமேரி இரவு கதவை பூட்டாமல் சாத்தியே வைத்திருந்தார். இதனால், எந்த சத்தமும் இல்லாமல் அவர்கள் 2 பேரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அப்போது உமேஷ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். உடனே, அவர்கள் 2 பேரும் உமேசின் கை கால்களை கட்டிப்போட்டு முகத்தில் செல்லோ டேப் கொண்டு அழுத்தமாக ஒட்டி விட்டனர். இதனால் மூச்சு திணறி உமேஷ் பரிதாபமாக இறந்தார்.

அதன் பிறகு, ஹனிமேரியிடம் இருந்து தங்கச்சங்கிலி மற்றும் 2 செல்போன்களை வாங்கிக்கொண்டு அவர்கள் 2 பேரும் குஜராத் சென்று முத்துகுமாரிடம் தகவலை தெரிவித்தனர். பிபின்குமார் மற்றும் பாஸ்கல் ஆகிய 2 பேரும் தப்பி சென்ற பிறகு, ஹனிமேரி வெளியே வந்து அக்கம் பக்கத்து வீட்டினரிடம் கொள்ளையர்கள் அவரது கணவரை கொலை செய்துவிட்டு நகைகளை பறித்துச்சென்றதாக நாடகம் ஆடியது விசாரணையில் அம்பலம் ஆனது.

இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கடந்த 11-ந் தேதி பிபின் குமாரை சென்னையில் கைது செய்தார்கள். ஹனிமேரி, பெங்களூரில் உள்ள அவரது மாமா வீட்டில் இருந்த போது கைது செய்யப்பட்டார்.

இவர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்கி விட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட முத்துகுமார், சந்தன், பாஸ்கர் மற்றும் சஜ்ஜன் ஆகிய 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள். கொலை செய்தபின் ஹனிமேரி-முத்துகுமார் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பூஜாவின் தெய்வீகக் காதல்

முன்பு ஜெயகாந்தன் எழுதிய கதையொன்றில் இது போன்ற பதிவிரதை சொல்வாள், “அவன் பூட்டான்; இவன் வண்ட்டான்” என்று. அதுபோல் உள்ளாடை மாற்றுவதுபோன்று கணவனை மாற்றும் காரிகைகள் நிறைந்த உலகமடா இது. அவள் இருந்தும் கெடுப்பாள்; செத்தும் கெடுப்பாள்!

இந்த உன்னதக் காதல் கதையைப் படியுங்கள். அந்தக் கணவன் கதை ஒரு பரிதாபம். இந்தக் காதலன் கதை ஒரு கந்தல். வாழ்க பெண்ணியம். வளர்க பெண்கள் விடுதலை! வீழ்க ஆண்குலம்!

பூந்தமல்லி, ஏப்.19- 2009. காதலன் கை விட்டதால் துணை நடிகை பூஜா (தெனாவெட்டு, அதிசயமணல் மாதா உள்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.) தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையொட்டி அவருடைய காதலனை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த போரூர் காரம்பாக்கம் பொன்னி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் ஷேர்-ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி காமாட்சி (45). இவர்களுடைய மகள்தான் துணை நடிகை பூஜா (25).

இவருக்கும் திலீப் குமார் (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெயலட்சுமி (3) என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பூஜாவுக்கும், திலீப் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு (இதற்க்குக் காரணம் மனைவியினுடைய பழைய காதலுடன் அவள் தொடர்ந்த கள்ளத் தொடர்பு) 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். மேலும் திலீப் குமார் மனைவி வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டார். (நெலைமைய்யா!)

இந்த நிலையில் பூஜாவின் பழைய காதலன் நீலாங்கரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகன் (25) அடிக்கடி பூஜாவை சந்தித்து தனது காதலை புதுப்பித்தார்.

இதைத்தொடர்ந்து பூஜா கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு புறப்பட்டு ஜெகன் வீட்டுக்கு சென்றார். அவரை அழைத்துக் கொண்டு புதுக்கோடைக்கு சென்றார்.

மகள் மாயமானதால் பூஜாவின் தாயார் காமாட்சி வளசரவாக்கம் போலீசில் மகளை காணவில்லை என்று வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பூஜா ஓடி சென்றதாக கூறி இருந்தார். இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, பூஜாவின் காதலன் ஜெகன் வளசரவாக்கம் போலீசில் சரண் அடைந்தார். அப்போது அவர் போலீசாரிடம், “பூஜா எனது காதலி; நானும், பூஜாவும் புதுக்கோட்டைக்கு சென்று நண்பர் வீட்டில் தங்கி விட்டோம். போலீசார் தேடுவதை அறிந்து போலீசில் சரண் அடைந்தேன்” என்றார்.

அதன் பிறகு போலீசார் புதுக்கோட்டைக்கு சென்று பூஜாவை வளசரவாக்கத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது பூஜா போலீசாரிடம் கூறியதாவது:-

நானும், ஆட்டோ டிரைவர் ஜெகனும் உயிருக்கு உயிராக காதலித்தோம். இதையும் மீறி என்னை திலீப் குமாருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். (இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து அதற்கு 3 வயதாகிறது) திருமணத்திற்கு பிறகும் ஜெகனை காதலித்தேன். இதை அறிந்த திலீப் குமார் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நான் என்னை திருமணம் செய்யுமாறு ஜெகனை வற்புறுத்தினேன். அவரும் என்னை கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்து சென்று எனக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு பூஜா கூறினார்.

ஆனால் ஜெகன் போலீசாரிடம் கூறுகையில், “நான் தாலி கட்டியது உண்மைதான். ஆனால் பூஜாவுடன் குடும்பம் நடத்த முடியாது. அவருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனால் எனது பெற்றோர் ஏற்க மறுக்கிறார்கள்” என்று தெரிவித்தார். ஆனால் பூஜா வாழ்ந்தால் ஜெகனுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்தார். இதனால் உறவினர் மூலம் பிரச்சினைகளை தீர்த்து கொள்கிறோம் என்று எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

இப்போது ஜெகனுடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கேட்டாராம் பூஜா. ஆனால் ஜெகன் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ‘உல்லாசமாக இருக்கலாம் என்பதால்தான் நான் பூஜாவுடன் புதுக்கோட்டைக்குச் சென்றேன். ஆனால் அவரைக் கல்யாணம் செய்வதெல்லாம் முடியாத காரியம். எனக்கு அதில் இஷ்டமில்லை. மீறி கட்டாயப்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு ஏற்கெனவே மனைவி குழந்தைகள் உள்ளனர்’ என கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஜெகன்.

தலையிலடித்துக் கொண்ட போலீஸ், ஜெகனை எச்சரித்து அனுப்பியது. பூஜாவுக்கும், ‘தயவு செய்து இந்தமாதிரி புகாரில் எல்லாம் சிக்க வேண்டாம்’ என புத்திமதி கூறி அனுப்பி வைத்தது.

தாயாருடன் வீடு திரும்பிய பூஜா, ஜெகனை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என முடிவு செய்து அவருடன் போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் ஜெகன் போனை எடுக்கவே இல்லை என்று தெரிகிறது.இதனால் மனம் உடைந்த பூஜா நேற்று இரவு தூக்க மாத்திரை உள்பட ஏகப்பட்ட மாத்திரைகளை மொத்தமாக விழுங்கி விட்டார்.

இதனால் மயங்கி கிடந்த பூஜாவை முகலிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பூஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. இது குறித்த தகவல் வளசரவாக்கம் போலீசாருக்கு தாமதமாக கிடைத்தது.

உடனே ஜெகனை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

உல்லாசமாக இருப்பதற்குப் பெயர் கற்பழிப்பா?

நான்கு நாட்கள் ஒரு பிளஸ் டூ படிக்கும் பையனுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, அவன் கற்பழித்தான் என்று புகார் கொடுக்கிறாள் ஒரு பெண்ணரசி. அதையும் ஏற்றுக்கொண்டு காவல் துறை அந்தப் பையனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

உல்லாசம் அனுபவித்தது இருவரும். ஆனால் கைது மட்டும் அந்தப் பையனை! என்னய்யா முட்டாள்தனமான சட்டங்கள் இந்த நாட்டிலே!

இந்தச் செய்தியைப் படியுங்களேன்:-

கற்பழிப்பு வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது

அம்பத்தூர், ஏப்.18- கற்பழிப்பு வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அம்பத்தூர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சுதாராணி. இவர் அரசு பொதுத்துறை நிறுவனமான தொலை பேசித் துறையில் வேலை செய்றீது வருகிறார். இவர்களுடைய மகள் கீதா (வயது 17-பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற கீதா இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாராணி அம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகிலா வழக்குப்பதிவு செய்து மாயமான கீதாவை வலை வீசி தேடினார்.

இந்த நிலையில் மாயமான கீதா அம்பத்தூர் பஸ் நிலையத்தில் அழுதபடி நின்று கொண்டிருந்தார். ரோந்து பணியில் இருந்த போலீசார் விசாரித்தபோது காணாமல் போன கீதா என்பது தெரிய வந்தது. அவரிடம் மாயமான சம்பவம் குறித்து போலீசார் துருவித் துருவி கேட்டனர். அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே உள்ள மதனபள்ளி எங்களது சொந்த ஊர். அங்கிருந்தபோது எனது தந்தை ரவி இறந்து விட்டார். அவரது வேலை வாரிசு அடிப்படையில் எனது தாய்க்கு கிடைத்தது. அவர் அம்பத்தூரில் வீடெடுத்து தங்கி இருந்தார். நான் மதனபள்ளியில் எனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தேன்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அசோக்குமாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை காதலிக்க தொடங்கினேன். இருவரும் உயிருக்கு உயிராக நேசித்தோம். இதற்கு எங்கள் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

உல்லாசம்

இதையடுத்து என்னை அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இருப்பினும் நானும் அசோக்குமாரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். இதற்கிடையே கடந்த 13-ந் தேதி சென்னை வந்த அசோக்குமார், உடனடியாக என்னை கோயம்பேடு வரச் சொன்னார். அதன்படி நானும் கோயம்பேடு பஸ் நிலையம் சென்று அங்கிருந்து இருவரும் மதனபள்ளிக்கு சென்றோம். அங்கு எனது சக மாணவி அனிதா வீட்டிற்கு சென்று தங்கினேன். அங்கு வைத்து என்னை கட்டாயப்படுத்தி அசோக்க்குமார் உல்லாசமாக இருந்தார். இப்படி 4 நாள்கள் உல்லாசமாக இருந்தார். இதற்கிடையே என்னைக் காணவில்லை என்று எனது தாயார் அம்பத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் என்னை தேட தொடங்கினார்கள்.

இதனால் பயந்து போன அசோக்குமார் என்னை சென்னை அழைத்து வந்து அம்பத்தூர் பஸ் நிலையத்தில் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இவ்வாறு கீதா கூறினார். கைது இதை தொடர்ந்து உஷாரான போலீசார் விரைந்து செயல்பட்டு அம்பத்தூர் கனரா வங்கி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அசோக்குமாரை மடக்கிப் பிடித்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் ஜமால், கற்பழிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை (19) கைது செய்தார். 24 வயது பூர்த்தி ஆனவுடன் தான் புழல் மத்திய சிறையில் அடைக்கமுடியும். கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அசோக்குமாருக்கு 19 வயது ஆவதால் சைதாப்பேட்டை கிளை சிறையில் (சப்-ஜெயில்) அடைக்கப்பட்டார்.

தந்தைகள் ஜாக்கிறதை!

இதுநாள்வரை கணவன்மார்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள், உடன் பிறப்புக்கள் மட்டும்தான் கண்ணியமற்ற இளம் பெண்களின் கைகளில் சிக்கி, பொய் வழக்குகளில் மாட்டி விடப்பட்டு சீழிந்து கொண்டிருந்தனர். ஆனால் இந்தப் பிரச்னை தற்போது இந்த சாராருடன் நிற்காமல் அடுத்த பரிமாணம் எடுத்துவிட்டது!

”ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து” தற்போது இந்தப் பெண்கள் தங்களுடைய தந்தையர்கள் மேலும் பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யத் துணிந்து விட்டனர். இதற்கு செய்தித் தாள்களும், ஊடகங்களும், பெண்ணியவாதிகளும் துணை போகின்றனர்.

முந்தைய பதிவு ஒன்றில் தன்னுடைய ஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்ததால் பெற்றோரைப் படுகொலை செய்த இளம் பெண்ணைப் பற்றிப் படித்தோம். இப்போது ஒருபடி மேலே போய், தான் கேட்டபோது பணம் கொடுக்க மறுத்தாலோ, அல்லது தன் உடன்பிறந்த சகோதரனுக்கு ஏதாவது உதவி செய்தாலோ, அல்லது தான் யாரையோ இழுத்துக் கொண்டு ஓடுவதற்கு மறுப்பு சொன்னாலோ, உடனே, “என் தந்தை என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். பல ஆண்டுகள் என்னை அடைத்து வைத்து வன்புணர்ந்தான்” என்று வாய் கூசாமல் பொய் புகார் ஜோடிப்பதில் இந்தப் பெண்கள் இறங்கியிருக்கிறார்கள். உடனே பெண்ணியவாதிகள் “ஓ”வென்று காது கிழியக் கூச்சலிடுவார்கள். ஊடகங்கள் அந்தப் பெண்ணின் “கண்ணீர்க் கதையை” மீண்டும் மீண்டும் வெளியிட்டு மேலும் பல பெண்கள் இத்தகைய அட்வென்சரில் இறங்க ஊக்குவிக்கும்.

ஆகையால் பெண்ணைப் பெற்றவர்களே, ஜாக்கிறதை!

இதோ, இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

தாராபுரம், ஏப்.18- கொடைக்கானலில் சாமியாரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கல்லூரி மாணவி, தாராபுரம் போலீசில் சரணடைந்தார். “என்னை யாரும் கடத்தவில்லை. வீட்டில் என் தந்தை என்னை கொடுமை படுத்தியதால்தான் நான் வீட்டைவிட்டு வெளியே வந்து சாமியார் அசோகிஜியுடன் இருக்கிறேன்.” என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் புளியமரத்து செட் என்னும் இடத்தில் ஷீரடி சாய்பாபாவுக்கு ஒரு கோவில் கட்டி, அதன் அருகில் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் அசோக்ஜி. இவர் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் மந்திரம் மூலம் விபூதி வரவழைத்து ஜோதிடம் சொல்லி வந்தார். இந்தநிலையில், கொடைக்கானல் ஏரிச்சாலையில் பெட்டிக்கடை நடத்தி வரும் செல்வம் என்பவர் அசோக்ஜியின் சீடர் ஆனார். இளம்பெண் மாயம் அதனால் செல்வம் வீட்டுக்கு சாமியார் அசோக்ஜி அடிக்கடி வருவது வழக்கம். அப்போது, கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வரும் செல்வத்தின் மகள் ராகசுதா (வயது 19)வுடன் அசோக்ஜிக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்,

“என் மகள் ராகசுதாவை சாமியார் அசோக்ஜி கடத்திச் சென்று விட்டார். என் மகளை கண்டுபிடித்து தர வேண்டும்” என்று செல்வம் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். தனிப்படை போலீசார், தலைமறைவான அசோக்ஜி, மாணவி ராகசுதா இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், மாணவி ராகசுதா நேற்று முன்தினம் காலையில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார். மாஜிஸ்திரேட்டு சந்திரனிடம் (பொறுப்பு) கோர்ட்டில் சரணடைவதாக கூறி மனு கொடுத்தார். மனுவை பெற்ற மாஜிஸ்திரேட்டு சந்திரன் (பொறுப்பு), இந்த சரண்டர் மனுவில் கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்த நகல் இணைக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளதா, இல்லையா என்றும் தெரியவில்லை. எனவே இளம்பெண் ராகசுதாவின் சரண்டரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவி ராகசுதா, வக்கீல் சேகர் மூலம் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மறைமலை முன் சரணடைந்தார். “என் தந்தையால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். என்னை யாரும் கடத்தவில்லை. என் தந்தையின் தொந்தரவை தாங்க முடியாமல் தான் வீட்டைவிட்டு வெளியே வந்தேன்” என்று, போலீஸ் துணை சூப்பிரண்டிடம் கூறினார்.

“இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொடைக்கானல் போலீசில் உள்ளதாலும், கொடைக்கானல் சரக போலீஸ்தான் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்பதாலும் நாங்கள் பாதுகாப்பு வழங்கமுடியாது” என்று தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தெரிவித்தார்.

பின்னர் ராகசுதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் குடும்பத்துக்கும் அசோக்ஜிக்கும் கடந்த 16 வருடமாக பழக்கம் உண்டு. இதன் காரணமாக அவர் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வருவார். அதுபோன்று நாங்களும் அடிக்கடி அவரது வீட்டுக்கு செல்வோம்.

என் தந்தை, “பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது; ஆண் பிள்ளைகள்தான் படிக்க வேண்டும்” என்ற கொள்கை உடையவர். இதன் காரணமாக என்னை 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது என்று கூறினார்.

இந்த நிலையில், அசோக்ஜி பலருக்கு உதவி செய்து வந்தார். அதனால் எனது படிப்புக்கு உதவி செய்யுமாறு அவரிடம் கேட்டேன். அதனால் அவர் என்னை படிக்க வைத்தார்.

நான் 12-ம் வகுப்பு முடித்த பின்பு பி.சி.ஏ. படிக்க விரும்பினேன். எனது விருப்பத்தை தந்தையிடம் கூறினேன். அவர் `நீ படிக்கவே கூடாது’ என்று சொல்லி என்னை துன்புறுத்தினார்.

படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், நான் அசோக்ஜியிடம் சென்று என்னை பி.சி.ஏ. படிக்க வைக்குமாறு கூறினேன். அவரும் நான் பி.சி.ஏ. படிக்க அனைத்து உதவிகளும் செய்தார். தற்போது நான் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.

எனது படிப்புக்கு அசோக்ஜி உதவி செய்து வருவதும், நான் படித்து வருவதும் என் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் கடந்த வாரம் நான் படித்து வரும் கல்லூரிக்கு வந்து, மாணவிகள் முன் என்னை அடித்து உதைத்தார். இது எனக்கு பெரிய அவமானமாக இருந்தது.

வீட்டுக்கு சென்ற நான் பெற்றோரிடம் இருக்க பிடிக்காமல், வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டேன். என்னை அசோக்ஜி கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாக என் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். என்னை அசோக்ஜி கடத்தவும் இல்லை; திருமணம் செய்யவும் இல்லை. வீட்டில் என் தந்தை என்னை கொடுமை படுத்தியதால்தான் நான் வீட்டைவிட்டு வெளியே வந்து இருக்கிறேன்.

இனிமேல் நான் எனது வீட்டுக்கு செல்ல மாட்டேன். ஏதாவது ஒரு காப்பகத்தில் தங்கியிருந்து பி.சி.ஏ. படிப்பை முடித்து விட்டு, பின்னர் ஐ.ஏ.எஸ். படிக்க உள்ளேன். இவ்வாறு இளம்பெண் ராகசுதா கூறினார்.

இந்தநிலையில், தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த கொடைக்கானல் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரனிடம், மாணவி ராகசுதாவை கொடைக்கானல் அழைத்து செல்கிறீர்களா என்று கேட்டதற்கு, அவர் கூறியதாவது:-

“ராகசுதா மீது எந்த வழக்கும் பதிவு செய்ய வில்லை. எனவே நாங்கள் அவரை கொடைக்கானல் அழைத்து செல்லவில்லை. அவர் தாராபுரம் போலீசில் சரண் அடைந்துள்ளார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. ராகசுதாவை கடத்தி சென்ற சாமியார் அசோக்ஜி இங்கு வந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்தான் இங்கு வந்தோம். ஆனால் சாமியார் இங்கு இல்லை என்பதால் நாங்கள் அவரை தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் கூறினார்.

இளம்பெண் ராகசுதா, தாராபுரத்தில் உள்ள வக்கீல் மூலம் கொடைக்கானல் வக்கீலிடம் ஒப்படைக்கப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

லாரி டிரைவரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி

ராசிபுரம் அருகே லாரி டிரைவரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றதாக அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வட்டூர் குட்டகாரனூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). லாரி டிரைவர். இவரது மனைவி அமிர்தவள்ளி (32). இவர்களுக்கு அழகரசன் (17) என்ற மகன் உள்ளான். கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத் தன்று குடிபோதையில் கணேசன் வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன் – மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைதொடர்ந்து கணேசன் தூங்கி விட்டார்.

நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த கணேசன் தன் மீது பெட்ரோல் ஊற்றப்படுவதை அறிந்து , திடுக்கிட்டு எழும்ப முயற்சி செய்தார்.
அப்போது அவரது கை, கால்கள் படுத்திருந்த கட்டிலோடு கட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அருகில் இருந்த மனைவி அவர் மீது தீ வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

வலி தாங்க முடியாமல் கணேசன் எழுப்பிய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் உயிருக்கு போராடிய கணேசனை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனின் மனைவி அமிர்தவள்ளி, மகன் அழகரசன் ஆகியோரை கவூது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.