தொகுப்பு

Archive for மே, 2010

பெண்-என்றாலே-டேஞ்சர்

இந்த மூன்று செய்திகளைப் படித்து இன்னாட்டில் ஆண்களின் நிலைமையை அறிந்து கொள்ளுங்கள்

1. செய்தி: தட்ஸ்தமிழ்

killer womanடெல்லி: கடும் போதையில் ராணுவ அதிகாரியின் மனைவி காரை படுவேகத்தில் ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதினார். அதில் 2 பேர் பலியாயினர்.

டெல்லியில் பணிபுரியும் கலோனல் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி ராகுல் சிங்கின் மனைவி நிவேதிதா சிங் (32), சனி்க்கிழமை இரவு பப் ஒன்றில் முழு போதையை ஏற்றிக் கொண்டு தனது ஹோண்டா சிட்டி காரில் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

கடும் போதையிலும் அவர் காரை மிக வேகமாக ஓட்டினார். தனது வீட்டருகே வந்த நிலையில் சர்ச் ரோட் என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் அருகே எதிரே வந்த ஆட்டோ மீது மோதினார். இதில் ஆட்டோ டிரைவர், பயணி உள்பட 2 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து நிவேதிதா கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் உடனே நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு நிவேதிதா மீது மிக சாதாரணமான வழக்குகளை கண்டோன்மென்ட் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

==================

2. செய்தி: தினமலர்

பெண் தற்கொலை வழக்கில் காதலன் கைது

கள்ளக்குறிச்சி : இளம்பெண் தற்கொலை வழக்கில் தொடர் புடைய காதலனை கச்சிராயபாளையம் போலீசார் கைது செய்தனர். கச்சிராயபாளையம் அடுத்த வடக்கநந்தல் காலனியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ஆனந் தன்(24), ராஜா மகள் மாதேஸ்வரி(19) இருவரும் காதலித்து வந்தனர். ஆனந்தனிடம் மாதேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். ஆனந்தன் பெற்றோர் சம்மதத்திற்கு பின் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி வந்தார்.

கடந்த 20ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய மாதேஸ்வரி 23ம் தேதி ஆனந்தன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு போட்டு இறந்தார்.மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ராஜா கச்சிராயபாளையம் போலீசில் புகார் செய்தார். தலைமறைவான ஆனந்தனை நேற்று காலை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

=========================
3.

மனைவி தற்கொலை கணவர் கைது

செய்தி: தினமலர்

மதுரை: வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (26).இவரது மனைவி உஷாராணி (20). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. நடத்தையில் கணவர் சந்தேகம் அடைந்ததால், உஷாராணி ஏப்.,23 ல் வாடிப்பட்டி அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரவிச்சந்திரனை நேற்று, ரயில்வே டி.எஸ்.பி., சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் அப்துல்ரகீம் கைது செய்தனர்.

===========================

செய்தி: தினமலர்

மொபைல் போன் காதலர் ஏமாற்றியதால் பெண் தற்கொலைக்கு முயற்சி

கம்பம் : கம்பத்தை சேர்ந்த ராணுவவீரர் சுரேஷ், தன்னை திருணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, மதுரையை சேர்ந்த தனலட்சுமி கம்பம் பஸ்ஸ்டாண்டில் தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவரை போலீசார் மீட்டு, ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் நேதாஜி தெருவைச் சேர்ந்த ராஜூ மகள் தனலட்சுமி (25). இவருக்கும் கம்பம் மாலையம்மாள்புரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் (30) க்கும் மொபைல் போனில் காதல் மலர்ந்தது. அடிக்கடி மொபைலில் பேசி வந்த இருவரும், நேரில் சந்திக்க விரும்பினர். மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு சுரேசை வரச் சொன்னார், தனலட்சுமி.

தனது மொபைல் போன் காதலியை பார்க்கும் ஆசையில், சுரேசும் மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றார். நேரில் தனலட்சுமியை பார்த்தவுடன் சுரேசுக்கு பிடிக்கவில்லை.அவரிடம் பேசி, தப்பி வந்துவிட்டார். ஆனால், தனலட்சுமியோ அவரை தேடி கம்பத்திற்கே வந்துள்ளார்.

பின், ஒருவழியாக பஞ்சாயத்து பேசியுள்ளனர். இருந்த போதும், சமாதானம் ஆகாத தனலட்சுமி, கம்பம் பஸ் ஸ்டாண்டில் தூக்க மாத்திரைகளை தின்று, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மயங்கி கிடந்தவரை வடக்கு எஸ்.ஐ., ஜோதிசுப்ரமணியன் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். தனலட்சுமி மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி, ஏமாற்றியதாக தனலட்சுமி கொடுத்த புகாரில், ராணுவவீரர் சுரேஷ் மீது உத்தமபாளையம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். .

Advertisements

க, கா … கொ!

பணத்துக்காக மூதாட்டி கொலை: இளம்பெண், அவளுடைய‌ கள்ளக்காதலனுடன் கைது

இப்போதெல்லாம் கள்ளக்காதல் என்றாலே அது பெரும்பாலும் ஒரு கொலையில் முடிவதைக் காணமுடிகிறது. அதனால்தானோ என்னவோ காவல் துறையினர் எந்த கொலை கேசு வந்தாலும் அதில் கள்ளக்காதல் ஆங்கிள் உள்ளதா என்பதை கூர்ந்து கவனிக்கின்றனர். அதிலும் செல்ஃபோனின் பங்கு கள்ளக்காதல்களில் மிகவும் கணிசமானது என்பதால் விமான விபத்து நிகழ்ந்தவுடன் கருப்புப் பெட்டியை தேடுவது போல் கொலை கேசுகளில் செல்ஃபோனைத்தான் முதலில் தேடுகிறார்கள்!

ஆனாலும் நம் நாட்டுச் சட்டங்களும் தீர்ப்புக்களும் ஆண்கள்தான் தவறிழைப்பார்கள், பெண்கள் அனைவருமே அபலைகள், கள்ளம், கபடு, சூது அறியாத பேதைகள் என்னும் அடிப்படை கருத்தாக்கத்தில்தான் கட்டமைக்கப்படுகின்றன‌.

தவறிழைப்பவர்களில் ஆணென்ன, பெண்ணென்ன!

நாகர்கோவில் மே 23,2010: செய்தி: தினமலர்

பணத்துக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த ராமனாதிச்சன்புதூரைச் சேர்ந்தவர் சிலுவைதாசன்(80); இவரது மனைவி ஞானப்பிரகாசி(58). இவர்களுக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.மகள்களை திருமணம் செய்து கொடுத்ததில் கடன் பட்டிருந்த சிலுவைதாசன், மகள் சுதாவின் தோழி அமுதா என்பவர் வழியாக ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் வீட்டுப்பத்திரத்தை அடமானமாக வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.ஆனால், பணத்தை சிலுவைதாசனிடம் கொடுக்காமல் அமுதா இழுத்தடித்துள்ளார்.

சம்பவத்தன்று பணம் கேட்க சென்ற சிலுவைதாசன் மற்றும் ஞானப்பிரகாசியை பல இடங்களுக்கும் அமுதா ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார்.கூடவே, அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜு என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். ஒழுகினசேரி ரயில்வே பாலம் அருகில் சென்றதும் இருவரையும் அமுதா பிடித்து கொண்டார். மாணிக்கராஜு கத்தியால் குத்தியுள்ளார். இருவரும் இறந்து விட்டதாக நினைத்து விட்டு சென்றுவிட்டனர்; ஞானபிரகாசி இறந்துவிட்டார்.

சிலுவைராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அமுதா எதுவும் தெரியாதது போல் அங்கு சென்றுள்ளார். அமுதாவை பார்த்ததும் சிலுவைராஜன் சைகையில் எதுவோ சொல்ல உறவினர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசின் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த அமுதா, பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார்.கணவர் சிவலிங்கம் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், மாணிக்கராஜுவுடன் அமுதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றியதால் ஏற்பட்ட கடனை அடைக்க சிலுவைதாசனிடம் பணத்தை அபகரிக்க முடிவு செய்துள்ளனர்.

முதலில் பணத்தை கொடுத்து விட்டு மாணிக்கராஜு மூலம் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளனர். பின்னர், கொலை செய்ததாக அமுதா போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மாணிக்காராஜுவும் கைது செய்யப்பட்டார். மாணிக்கராஜு மீது ஏற்கனவே 12 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இது போன்ற பொய்க்கேசுகள் ஒவ்வொரு குடும்பத்திலும் நுழையப்போவது நிச்சயம்!

சேலை கட்டச் சொல்வது கொடுமைப்படுத்துவதாகுமா? பெண்ணிடம் ஐகோர்ட் கேள்வி

செய்தி: தினமலர், மே 20,2010.

மும்பை: விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த மனைவியிடம்,’சேலை கட்டும் படி கூறுவதைக் கூட கொடுமை செய்வதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது’ என்று ஐகோர்ட் கூறியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த அல்கா-ஆனந்த் தம்பதியருக்கு, 2003ல் திருமணம் ஆனது. கணவரின் கூட்டுக் குடும்பத்துடன், அல்காவால், மனமொத்து வாழ முடியவில்லை. இதனால் அல்கா, குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், கணவர், அவரது தாய், கணவரின் இரு சகோதரிகள் ஆகியோர், வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவதாகவும், கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இவை தவிர நாத்தனார்கள் தன்னை சேலை கட்டச் சொல்லிக் கொடுமைப்படுத்துகின்றனர் எனவும், ஒரு நாத்தனார் தன்னைத் தாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட், அல்காவின் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது.

அல்கா, ஐகோர்ட்டில் மேல் அப்பீல் செய்தார். அவரது மனுவை விசாரித்த ஐகோர்ட் கூறுகையில்,

‘கொடுமை செய்யும் உள்நோக்கத்துடன்தான் நாத்தனார் சேலை கட்டும் படி கூறுகிறார் என்பதை, விவாகரத்துக்கான காரணமாக ஏற்க முடியாது. தன்னைத் தாக்கியதாக இவர் கூறும் நாத்தனார் ஒரு மாற்றுத் திறனாளி. அதனால் அந்தக் குற்றச்சாட்டும் தவறு’ என்று தெரிவித்து, வரதட்சணை பற்றிய விசாரணையை வேறொரு தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.

இருந்தும் கெடுப்பாள், செத்தும் கெடுப்பாள்!

புதுடில்லி: செய்தி: தினமலர் மே 19,2010

The Supreme Court has said:

“The court has to examine a dying declaration scrupulously with a microscopic eye to find out whether the dying declaration is voluntary, truthful, made in a conscious state of mind without being influenced by the relatives present or by the investigating agency who may be interested in the success of investigation or which may be negligent while recording the dying declaration.”

பெண்கள் கொடுக்கும் மரண வாக்குமூலங்களை கோர்ட் துல்லியமாக ஆராய வேண்டும். உறவினர்களின் நிர்பந்தத்தால் சில இளம் பெண்கள் அளிக்கும் பொய்யான வாக்குமூலம், அப்பாவிகளை தண்டிக்க வழி வகுத்து விடும் என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

அரியானாவைச் சேர்ந்த குர்தியால் என்பவர், 1997, டிசம்பர் 8ம் தேதி தனது மனைவி சந்தோஷை தீ வைத்து கொன்றது தொடர்பாக ஐகோர்ட் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குர்தியாலின் சகோதரர் பூரண் சந்த், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிர்புர்கர், முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

‘பெண்கள் தங்கள் கணவன் அல்லது புகுந்த வீட்டாரை பற்றி மரண வாக்குமூலம் அளிக்கும் போது, அதை கோர்ட் தீர விசாரிக்க வேண்டும்.’ஒரு சில பெண்கள் தங்கள் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் பொய்யான மரண வாக்குமூலம் தந்து விடுகின்றனர். இதனால், கணவனோ, அவரது குடும்பத்தாரோ தண்டனைக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மரண வாக்குமூலத்தை ஏற்கக்கூடாது என சொல்ல வில்லை. அந்த வாக்குமூலத்தில் தவறு இருக்கக்கூடாது என, வற்புறுத்துகிறோம்’ என, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

பூரண் சந்த்தின் மனுவை தள்ளுபடி செய்து, குர்தியாலின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.

(இதுக்குன்னே தனி சட்டம் ‍ “டவுரி டெத்” (Sec 304-b of IPC) அப்படின்னு பெயரு. அதுலேயிருந்து தப்பிக்கவே முடியாது!
அவ்வளவுதான், கட்டினவன் கதி அதோகதிதான். ஆம்புளையாவும் பொறந்து கல்யாணமும் கட்டிக்கிட்டானில்ல, பொறவு ஜெயிலுக்குப் போக வேண்டியதுதானே!)

மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை

செய்தி: தினமலர் மே 18,2010.

சென்னை : மாமியார் கொலை வழக்கில், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தா (70). இவருக்கு நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரு மருமகள் லட்சுமி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர்களை சரிவர கவனிப்பதில்லை என, மருமகள் லட்சுமியை சாந்தா கண்டிப்பார். இதனால், மாமியார் சாந்தா மீது லட்சுமிக்கு கோபம் ஏற்பட்டது. பூஜை அறையில் சாமி கும்பிடும் போது, சாந்தாவை கத்தியால் லட்சுமி குத்தினார். படுகாயமடைந்த சாந்தா, அங்கேயே இறந்தார்.

2007ம் ஆண்டு மே மாதம் இச்சம்பவம் நடந்தது. லட்சுமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கை, சென்னை மகளிர் கோர்ட் நீதிபதி முகமது ஜபருல்லாகான் விசாரித்தார். லட்சுமி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி முகமது ஜபருல்லாகான் தீர்ப்பளித்தார்.

மயக்க ஊசி போட்டு டாக்டர் கணவனை சித்ரவதை செய்த மனைவிக்கு வலைவீச்சு

சேலம்: மே 17,2010 செய்தி: தினமலர்

சேலம் அருகே மயக்க ஊசி போட்டு கணவனை சித்ரவதைக்கு ஆளாக்கியதுடன், உறவினர்களுடன் சேர்ந்து வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய டாக்டரின் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

“குடும்பத்தில் வனமுறை செய்வது கணவன் மட்டுமே” என்கிறது “குடும்ப வன்முறைச் சட்டம்” (Domestic Violence Act).

அச்சட்டத்தின் அடிப்படையில் மனைவிதான் கணவன் மீதும் அவனது பெற்றோர் மீதும் கிரிமினல் புகார் கொடுத்து அவர்களை தங்கள் வீட்டிலிருந்தே வெளியேற்றி ஜீவனாம்சமும் கொடுக்கச் செய்யலாம். மனைவி எவ்வளவு கொடுமையும் சித்திரவதையும் செய்தாலும் கணவன் அவள்மீது புகார் கொடுத்து நிவாரணம் பெற இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் இடமில்லை!

எனெனில் இந்தியாவில் சமூகம், சட்ட மன்றங்கள், கோர்ட்டுகள் இவை அத்தனையின் பார்வையிலும் ஆண் என்பவன் கிரிமினல், கொடுமைக்காரன், அனைத்து கணவன்மார்களும் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து கொண்டு மனைவிகளை எரித்துக் கொன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனைவிகள் அனைவரும் அபலைப் பெண்கள். வாயில் விரல் வைத்தால்கூட கடிக்கத் தெரியாதவர்கள்!

இப்படித்தான் இருக்கின்றன இந்நாட்டில் சட்டங்களும் தீர்ப்புகளும்!

மயக்க ஊசி போட்டு கணவனை சித்திரவதை செய்த மனைவிசேலம் மாவட்டம் காகாபாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(41); லேப்ராஸ்கோபி டாக்டர். அவரது மனைவி சித்ரா(44); மகப்பேறு டாக்டர். இவர்களது மகன் நவீன்(16).

காகாபாளையத்தில் சி.கே., மருத்துவமனையை சித்ரா நடத்தி வந்தார். இடைப்பாடியில் நவீன் மருத்துவமனையை கண்ணன் பார்த்து வந்தார். பிரபல மருத்துவமனைகளில் ஆபரேஷன் பணிக்கும் அவர் சென்று வந்தார்.கடந்த 18 ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்த டாக்டர் தம்பதிகளிடையே கடந்த சில ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டது.

இது விவாகரத்து வரை சென்றது. பின் பெற்றோர், உறவினர்கள் தலையீட்டால் பிரித்து வாழ்ந்த தம்பதியர், இரண்டு மாதமாக சேர்ந்து வாழ்ந்தனர்.அவர்கள் வாழ்வில் சொத்துப் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்தது. கண்ணன் பெயரில் உள்ள சொத்துக்களை, தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என, சித்ரா பிரச்னை செய்துள்ளார்.

இதற்கு அவர்களது உறவினர்களும் ஆதரவாக இருந்துள்ளனர்.கடந்த 24ம் தேதி வீட்டுக்கு வந்த கண்ணனை, மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் தனி அறையில் கட்டி வைத்து மயக்க ஊசி போட்டு சித்ரவதை செய்து வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளனர். உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த கண்ணனை, அவரது மாமா மீட்டு சேலம் தரண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அதைத் தொடர்ந்து, மகுடஞ்சாவடி போலீசாரிடம் டாக்டர்கண்ணன் அளித்தபுகார் விவரம்: ஐந்து ஆண்டுகளாக நான் சம்பாதித்த சொத்து சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவிக்கும், எனக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று வாழப்பாடி சென்று விட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். சாப்பிட்ட பின், மனைவி அறைக்கு சென்றேன்.

அப்போது திடீரென லேப் டெக்னீஷியன் மகாதேவன், சித்ராவின் தம்பி கோபு, என் சகலை பாலசுப்பிரமணியம், சித்ராவின் அக்கா விஜயலட்சுமி, கோபுவின் மனைவி விமலா மற்றும் என்னுடைய மனைவி சித்ரா ஆகியோர் என்னை பிடித்து எலக்ட்ரிக் ஒயரால் கைகளையும், கால்களையும் கட்டி, அடித்து படுக்கையில் முகத்தை அமுக்கி, அதிகப்படியான மயக்க மருந்து மூலம் இடுப்பில் ஊசி போட்டனர்.

இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்களாக ஐந்து முறை மயக்க ஊசி போட்டனர். சித்ரா என்னிடம் வந்து, ‘எங்கப்பா பத்திரங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அதில் நான் கையெழுத்து போட்டு சொத்துக்களை அவர் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் ஊசி போட்டு கொலை செய்து விட்டு, நீயே தற்கொலை செய்து கொண்டதாக கூறி விடுவேன்’ என, மிரட்டினார்.உயிருக்கு பயந்து நானும் எழுதிய பத்திரம், எழுதாத பத்திரங்களில் கையெழுத்து போட்டேன்.

அதன் பிறகு மயக்க ஊசி போட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு அறையில் அடைத்து விட்டனர். மயக்கம் தெளிந்து, ‘காப்பாற்றுங்கள்’ என்று கத்தினேன். என் மாமா வந்து என்னை மீட்டு, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் என கூறினார். அதன்படி தரண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கூறுகையில், ”டாக்டர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் அவரது மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ளனர்; தேடி வருகிறோம். இன்று புகார் அளிப்பவர்கள், பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம் என்று வருவர். சித்ராவிடம் விசாரணை நடத்தினால், உண்மை நிலை தெரியவரும்,” என்றார்.

இந்த சம்பவத்துக்கு பின், சித்ரா மற்றும் அவருடன் இருந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர். சேலம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற அவர்கள் முயற்சித்ததாகவும், அந்த மனு தள்ளுபடியானதால், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டுமனு தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கணவன் வேண்டாம், கொண்டா காதலனை!

கணவனை வேண்டாம் என்று விலக்கிவிட்டு காதலருடன் சேர்ந்து வாழ ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோட முயன்ற புது மணப் பெண்ணை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையே அந்தக் கணவன் செய்திருந்தால அவனைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். பிறகு அந்த மனைவி கண்வன் மீது வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை போன்ற ஆணழிப்பு, ஒருதலைப் பட்ச சட்டங்களை ஏவி விட்டு அவனை சின்னாபின்னமாக்கி யிருப்பாள். இதுதான் இந்த நாட்டில் சட்டங்கள் செயல்படும் நிலைமை.

செய்தி: தினமலர் மே 12,2010

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் செல்வலட்சுமி(19). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியிலுள்ள அவரது உறவினர் சீனி ராஜா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது அதே பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வரும் கணேஷ் என்பவரு டன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் செல்வலட்சுமியின் காதல் விவரம் தெரிந்த அவரது பெற்றோர், சென்னை யில் மளிகை கடை நடத்தி வரும் உறவினரான செல்வராஜ் (25) என்பவருக்கு கடந்த மாதம் 25ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். செல்வலட்சுமிக்கு கணவர் செல்வராஜியுடன் சேர்ந்த வாழ விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார்.

இதனை அறிந்த செல்வராஜ் தங்களது உறவினர்களின் துணையுடன் செல்வலட்சுமியை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்து, நேற்றிரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து தூத்துகுடிக்கு அழைத்து சென்றனர்.விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது திடீரென செல்வலட்சுமி கதவை திறந்து கொண்டு ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குதித்தார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு ராஜமோகன், பெண் போலீசார் அம்பிகா ஆகியோர் செல்வலட்சுமியை மீட்டனர். பின்னர் விசாரணை செய்து அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். நள்ளிரவில் ஓடும் ரயிலிலிருந்து பெண் ஒருவர் குதித்த சம்பவம் விழுப்புரம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.