தொகுப்பு

Archive for ஓகஸ்ட், 2010

எத்தனை எத்தனை திருமணமோ, எத்தனை எத்தனை போலீஸ் கேசோ!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த மனோஜ் மனைவி அனுராதா (25), தஞ்சை எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

சிறு வயதில் தாயார் இறந்து விட்டதால், என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமை தாங்காமல், 15 வயதில் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

முதல் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், மதுரை நிறுவனம் ஒன்றில், புகார் செய்தேன். அவர்கள், “என் திருமணம் செல்லாது’ என அறிவித்தனர். தனியே குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தேன்.

மதுரை ஐ.சி.ஐ.சி.ஐ., இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, திருச்சி கண்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையை சேர்ந்த, மனோஜுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், மதுரை மருத்துவக் கல்லூரியில் மூன்றாம்ஆண்டு படித்து வந்தார்.

மாட்டினான்யா மனோஜ்!மனோஜ் ஒருநாள், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அனுபவித்துவிட்டு, நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாசப் படங்களை மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். தொடர்ந்து அந்த படங்களை காட்டி, மிரட்டி அனுபவித்தார் (அவர்தான் அனுபவித்தார், இவர் அனுபவிக்கவேயில்லை. பெண்களுக்குத்தன் செக்ஸ் ஆசையே கிடையாதே. சண்டாளப் பாவி ஆண்கள்தானே செக்ஸுக்கு அலைவது!).

இப்பிரச்னை பெரிதாகாமல் இருக்க, திருமணம் செய்துகொண்டு அவருடன், மதுரை டி.வி.எஸ்., நகரில் குடும்பம் நடத்தினோம். படித்து முடித்தவுடன், தஞ்சை பொன்னகர் ஒன்றாம் தெருவில் வசித்து வந்தோம். ஒருநாள், அவரது மொபைல்போன் மெமரி கார்டை பார்த்தேன். அதில், பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டராக அவர் இருந்தபோது, கருக்கலைப்புக்கு வந்த பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். அவரிடம் கேட்டதற்கு, “இதை வெளியில் சொன்னால் உன்னையும், உன் குழந்தைகளையும் கொன்று விடுவேன். உன் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன்’ என, மிரட்டுகிறார். போலீசார் அவரிடம் உள்ள மொபைல்போன் மெமரி கார்டை பறிமுதல் செய்து, அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. (ஒண்ணுமே பிரியல்லயேப்பா!)

தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி மற்றும் படம்- தினமலர்

Advertisements

ஆணுக்கு இழைக்கப்படும் அநீதி

செய்திகள் இரண்டு. இரண்டிலும் பாதிக்கப்பட்டது ஆண்களே!

செய்தி – 1:

”தாலி கட்டும் நேரத்தில் மணமகன் பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால், திருமணம் நின்றது.”

மொபைல் போனால் தாலி கட்டும் நேரத்தில் நின்றது திருமணம்

தினமலர் : ஆகஸ்ட் 23,2010. (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68592)

திண்டுக்கல் : திண்டுக்கலில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால், திருமணம் நின்றது. இருவரும் பிரிய மொபைல் போன் காரணமாக அமைந்தது.

திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த மரியலூயிஸ் மகன் டோமினிக் லாரன்ஸ்(27). எலக்ட்ரீஷியன். இவருக்கும், பெரியகுளம் தாமரைக்குளத்தை சேர்ந்த ஹென்றி மகள் சூரியாவிற்கும்(20) மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திண்டுக்கல் புனித வளனார் சர்ச்சில் நேற்று காலை 11 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது. அப்போது பங்கு தந்தை மணமகன் விருப்பத்தை கேட்டார். அவர் இந்த திருமணத்திற்கு சம்மதம் என்றார். மணமகள் விருப்பத்தை கேட்ட போது, அவர் இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றார். இதையடுத்து திருமணம் நின்றது. உறவினர்கள் மணமகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை சம்மதிக்க வைத்தனர்.

ஆனால் மணமகனோ, “என்னை பிடிக்கவில்லை என்று கூறிய பெண்ணுடன் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும். பெண் பார்க்கும் போதே பிடிக்கவில்லை என்று கூறியிருக்கலாம். நிச்சயதார்த்தம் நடந்த போதும், திருமண உடைகளை அணியும் போது கூட கூறியிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி திருமணம் நடக்கும் நேரத்தில் என்னை வேண்டாம் என்று கூறி அவமானப்படுத்தி விட்டார்’ என்றார். திருமணம் நின்று போனதால் திருமணத்திற்கான செலவுத் தொகையை தருமாறு மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் கேட்டனர். இரு வீட்டார் உறவினர்களும் மாறி, மாறி ஆலோசனை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டார் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இருதரப்பினரையும் அழைத்து நகர் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவு ஏற்படாததால், இருதரப்பினரும் திருமணம் முடிக்காமல் பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்து போலீசார் முன்னிலையில் பிரிந்து சென்றனர்.

மொபைல் போன் காரணம்: போலீசார் கூறியதாவது:

மணமகன் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மணமகளுக்கு ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். (அசட்டுப் பயப்புள்லைகளுக்கு மூளையே கிடையாது. எத்தையாவ்து வாங்கிக் கொடுத்து நட்டப் பட்டுகிட்டே கிடaப்பானுக!)

இதில் இருவரும் பேசும் போதே, திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் வரவேண்டும் என்று மணமகள் வற்புறுத்தியுள்ளார். இதற்கு மணமகன் மறுத்துள்ளார்.. (திருமணத்திற்கு முன்னாலேயே தனிக்குடுத்தன ஆசை) இதில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெண் அழைப்புக்கு வேன் அனுப்பாமல், பஸ்சில் ஏறி மணமகளை வரச் சொல்லியுள்ளனர். இதையெல்லாம் மனதில் வைத்து தான் மணமகனை பிடிக்கவில்லை என்று மணமகள் தெரிவித்துள்ளார்.திருமண செலவுத்தொகை 25 ஆயிரம் ரூபாய் தருவதாக மணமகள் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரும் பிரிந்து செல்ல ஏற்பாடு செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

======================

செய்தி: 2

காதலனுக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இளம்பெண் போராட்டம்

செய்தி – தினமலர்: ஆகஸ்ட் 22,2010. (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68097)

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, காதலனுக்கு நேற்று நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இளம்பெண் போராட்டம் நடத்தி வருவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியை அடுத்த மேகலசின்னம்பள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி முனுசாமி. அவரது மகன் விஜயேந்திரன்(30). அவர், பெங்களூரில் தங்கி பெயின்டராக வேலை பார்த்தார். அப்போது, அவருக்கும், பெங்களூரைச் சேர்ந்த நர்ஸ் அம்மு(23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்தனர்.

சில மாதம் முன்னர் இருவரின் காதல் விவகாரம், விஜயேந்திரன் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே பெற்றோரும், அவரது உறவினர்களும் பெங்களூரு சென்று காதலை கைவிடுமாறும், தாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படியும் விஜயேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளனர். வேறு வழியில்லாமல் விஜயேந்திரன் வேலையை விட்டு விட்டு பெற்றோருடன் மேகலசின்னம்பள்ளிக்கு வந்துள்ளார். விஜயேந்திரனின் பெற்றோர் அவருக்கு கிருஷ்ணகிரி அடுத்த ஐகொந்தம் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா(20) என்ற பெண்ணை பார்த்து திருமணம் பேசி முடித்தனர். உறவினர்களுக்கு பத்திரிகை அடித்து வினியோகம் செய்து, நேற்று காலை விஜயேந்திரன் வீட்டில் வைத்து திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணத்திற்காக மணப்பெண் உறவினர்கள், நேற்று முன்தினம் இரவு மேகலசின்னப்பள்ளிக்கு வந்தனர். இரவு நிச்சயதார்த்தம் நடந்தது.

நேற்று காலை 9 மணிக்கு மணமக்கள் இருவரும் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு சடங்குகள் நடந்தன. இந்நிலையில், விஜயேந்திரனுக்கு திருமணம் நடப்பதை அறிந்த காதலி அம்மு, நேற்று காலை மகாராஜகடை இந்நிலையில், விஜயேந்திரனுக்கு திருமணம் நடப்பதை அறிந்த காதலி அம்மு, நேற்று காலை மகாராஜகடை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தான் காதலனால் ஏமாற்றப்பட்டதையும், திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

போலீசார் அவரை அழைத்துக் கொண்டு, திருமணம் நடக்க இருந்த மேகலசின்னம்பள்ளிக்கு வந்தனர். அங்கு விஜயேந்திரன், மணமகள் திவ்யா கழுத்தில் தாலி கட்டுவதற்காக மணமேடையில் அமர்ந்து சடங்குகள் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அவரது காதலி அம்மு, திடீரென்று மணமேடைக்கு சென்று அவரது சட்டையை பிடித்து, தரதரவென பந்தலுக்கு வெளியே இழுத்து வந்தார்.

பின், அவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அம்மு, மகாராஜகடை போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாகச் சென்றார். கண் இமைக்கும் நேரத்தில் திருமணம் நின்றதால், இரு வீட்டு உறவினர்களும் அதிர்ச்சியில் செய்வதறியால் திகைத்து நின்றனர். மணமகனை மீட்டு, மீண்டும் திருமணம் நடத்துவதற்கு இரு வீட்டு உறவினர்களும் மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு, மகாராஜகடை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது காதலி அம்மு, “ஐந்து ஆண்டுகளாக காதலித்து தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்ட விஜயேந்திரனுக்கு தன்னை திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என போலீசாரிடம் தெரிவித்தார். (இது எப்படி முடியும்? உடலுறவு இரண்டு பேரும் சேர்ந்துதானே அனுபவித்தார்கள். பிறகு ஆண் மட்டும் “கொண்டான்” என்று எப்படி கூற முடியும்?)உடனே மணமகள் திவ்யா எழுந்து, “விஜயேந்திரனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், மணப்பெண் உறவினர்கள் திருமணத்தை நிறுத்தி விட்டு ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

மணமகன் வீட்டார் போலீசாரிடம், “விஜயேந்திரனை காதலித்த அம்மு வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், அவரை திருமணம் செய்து வைக்க முடியாது’ என தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து நடந்து வருகிறது.

————
சட்டம் ஒழுங்கைக் கவனிக்கிறார்களோ இல்லையோ, இந்த மாதிரி கட்டப்பஞ்சாயத்துகள் போலீஸ் ஸ்டேஷனில் கட்டாயம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதுதான் நிதர்சனம்!
————

ஏற்காட்டில் கொந்தளித்த கணவர்கள்…!

ஆண் பாவம்...!ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள‌ ”ஆண் பாவம்” பற்றிய கட்டு​ரை

”எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்களால் முடியவில்லை. நாங்கள் சிக்கிச் சீரழிந்துகிடக்கிறோம்.”

– இப்படிச் சொல்வது பாலஸ்தீனம் அல்லது இலங்கை அகதிகள் அல்ல. மனைவியால் பாதிக்கப்பட்டு ‘வாழ்க்கை இழந்தவர்கள்‘!

இவர்கள் ‘அகில இந்திய ஆண்கள் நல சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூன்றாம் ஆண்டு மாநாட்டை கடந்த சுதந்திர தினத்தன்று ஏற்காட்டில் நடத்தி இருக்கிறார்கள்!

2005-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஸோரூப் சர்க்கார் என்பவரால் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு. மனைவிமார்களால் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு ரிலாக்ஸ் தேடவோ…. ஹனிமூன் ஜோடிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றோ… சுற்றுலாத் தலங்களாகப் பார்த்து மாநாடுகளை நடத்தி வருகிறார்கள். முதல் மாநாட்டை சிம்லாவிலும், இரண்டாம் மாநாட்டை கோவாவிலும் நடத்தி முடித்தவர்கள், இம்முறை அந்த மாநாடு ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில்!

Save Indian Family from false dowry casesமாநாட்டில் சோகமே உருவாக இருந்த கேரளாவின் கோகுலிடம் பேசினோம். ”எனக்கு சொந்த ஊர் திருச்சூர். வசதியான குடும்பத்தில் நான் ஒரே பையன். எனக்கும் ஆலப்புழாவைச் சேர்ந்த கிருஷ்ணகலாவுக்கும் 2001-ம் வருஷம் கல்யாணம் நடந்துச்சு. நாங்க மும்பையில் குடும்பம் நடத்தினோம். கல்யாணம் ஆனதில் இருந்தே எங்களுக்குள் சின்னச்சின்னப் பிரச்னைகள் முளைச்சது.

அடிக்கடி அவங்க வீட்டு பெருமையைப் பேசுற மாதிரி என்னைக் குத்திக்காட்டுவா. நான் யார்கிட்ட பேசினாலும் அவளுக்கு சந்தேகம்தான். அடிக்கடி ஆபீஸுக்கே வந்து என்னைப்பத்தி விசாரிச்சு அசிங்கப்படுத்தினா. வீட்டுக்கு வந்த உடனே என் மொபைல் போனைப் பிடுங்கி சோதனை செய்றது வழக்கமாப்போச்சு.

ஒருநாள், ‘நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்’னு கேரளாவுக்குப் போயிட்டா. 10 நாளுக்கு மேலாகியும் வரலை. நான் போன் செய்து கூப்பிட்டா, ‘எங்க வீட்டுல உங்களை வீட்டோட மாப்பிள்ளையா இருக்கச் சொல் றாங்க. இஷ்டம் இருந்தா வாங்க…’ன்னு சொல்லிட்டா. நான் வரலைன்னு சொன்னதும், எங்க குடும்பத்துல இருக்குற அத்தனை பேர் மேலயும் வரதட்சணை வழக்கு போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் நீதிமன்றத்துக்கும் அலையவிட்டாள். சமீபத்தில்தான், இந்த அமைப்புபத்தி கேள்விப்பட்டு அதில் சேர்ந்தேன். இவங்க சட்டரீதியாக எனக்குத் துணையா இருக்காங்க…” என்றார்.

சுரேஷ் ராம் என்பவர், ”நான் சென்னையில் வியாபாரம் பண்றேன். என் மனைவியின் குடும்பத்தினர் பொய்யாக என் மேல் வரதட்சணை வழக்கு போட்டு அலையவெச்சாங்க. நானும் இந்த அமைப்பில் சேர்ந்தேன். இவங்கதான், ‘என் மேல் தவறு எதுவும் இல்லை. நான் வரதட்சணை கேட்கவும் இல்லை’ன்னு சட்டரீதியாக நிரூபிச்சாங்க. இந்த அமைப்பு மட்டும் இல்லைன்னா, நான் ஜெயிலுக்குப் போய் இருப்பேன்.” என்றவர் தொடர்ந்து,

”நம் நாட்டில் ஆண்களுக்கு எதிராக பல சட்டங்கள் இருக்கின்றன. அதுவும் ஒரு பெண், கணவனால் தனது மனநலனுக்கு ஆபத்து ஏற்படும் என்று புகார் தெரிவித்தாலே, கணவனையும் அவரது உறவினர்களையும் விசாரணை இன்றி மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம் என்று சட்டம் இருக்கிறது. ஒரு பெண் திருமணமாகி ஏழு ஆண்டுக்குள் தற்கொலை செய்துகொண்டாலோ, வேறு வகையில் இறந்தாலோ, சந்தேகத்தின் பேரில் விசாரணை இன்றி, உடனடியாகக் கணவரையும் உறவினர்களையும் கைது செய்ய முடியும். ஆனால் அதேபோல, ஏழு வருடங்களுக்குள் கணவன் இறந்துவிட்டால், மனைவிக்கும் அவளது உறவினர்களுக்கும் எந்த விசாரணையோ தண்டனையோ கிடையாது. இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டங்களில் திருத்தங்கள் தேவை.” என்றார் ஆதங்கத்துடன்.

இந்த அமைப்பின் தமிழக மாநிலத் தலைவர் பிரான்ஸிஸ், ”எனது மனைவி இன்னொருவனுடன் படுக்கையில் இருந்ததைப் பார்த்துவிட்டேன். ஆனால், என் மீது வரதட்சணை வழக்குப் போட்டு 500 பவுன் நகையும், 75 லட்சம் பணமும் கேட்டு மிரட்டினார்கள். நானும் என் பெற்றோரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். உலகத்தில் அரபு நாடுகளில்கூட இங்கு இருப்பது போல் கணவர்களுக்கு எதிரான சட்டங்கள் இல்லை. இங்கு ஆண்களுக்கு எதிராக சுமார் 30 கிரிமினல் சட்டங்கள் இருக்கின்றன. ஆண்கள் சார்பாக ஒரு சட்டமும் இல்லாத நிலையில், பெண்கள் சார்பாக 84 சட்டங்கள் இருக்கின்றன. திருமணமான ஆண் இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தால், தண்டனை உண்டு. ஆனால், பெண் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தால் தண்டனை எதுவும் கிடையாது!

ஓர் இளைஞர் ஒரு பெண்ணைக் காதலித்துவிட்டு ஏமாற்றினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ஒரு பெண் வாலிபனைக் காதலித்துவிட்டுக் கை கழுவிவிட்டுச் சென்றால் நடவடிக்கை கிடையாது. இதுபோன்ற சட்டங்கள் இருப்பதால்தான் பெண்கள் துணிச்சலுடன் தவறு செய்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற சட்டங்களால் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 512 ஆண்கள் தண்டனை பெற்று இருக்கிறார்கள். நம் நாட்டின் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீலின் சகோதரர் தொடங்கி, அர்ஜுன்சிங், செம்மலை, எஸ்.எஸ்.சந்திரன், பிரசாந்த் எனப் பிரபலமான குடும்பங்கள்கூட பெண்களால் இதுபோல் பழிவாங்கப்பட்டு இருக்கிறார்கள்…” என்று ஒரு வி.ஐ.பி. பட்டியலைப் போட்டார்.

அகில இந்தியத் தேசியத் தலைவர் ஸோரூப் சர்க்கார், ”நான் டெல்லியில் வசிக்கிறேன். என் அனுமதி இல்லாமல் என் மனைவி கருக்கலைப்பு செய்தார். இதனால், மனரீதியாகப் பாதிக்கப்பட்டேன். அப்போதுதான் வலைத்தளம் மூலம் மனைவியால் பாதிக்கப் பட்டவர்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பை ஏற்படுத்தினேன். இதில் சேர சந்தா எதுவும் கிடையாது. இலவசம்தான். இப்போது 84 ஆயிரம் பேர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் சட்டம் சமமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

Victims of false dowry cases

சமீபத்தில் நடத்தப்பட்ட தேசியக் குற்றப் புள்ளியியல் ஆய்வில் ஒரு வருடத்துக்கு மனைவியால் பாதிக்கப்பட்டு 58 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். 32 ஆயிரம் பெண்கள் மட்டுமே ஆண்களால் பாதிக்கப்பட்டுத் தற்கொலைக்குத் தள்ளப் படுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. கால்நடைகளைப் பாதுகாக்கக்கூட இங்கு அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், ஆண்களைப் பாதுகாக்க அமைப்புகள் இல்லை. அதனால், பாதிக்கப்பட்ட ஆண்கள் எங்களை http://www.498a.org, http://www.aimwa.in என்ற வலைத் தளத்தில் தொடர்புகொண்டால் கட்டாயம் உதவுவோம்!” என்றார் நம்பிக்கையுடன்.

அப்புறம் என்னத்தைச் சொல்ல… ஹைய்யோ… ஹைய்யோ!

வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் துஷ்பிரயோகம்-மறு பரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

False dowry harassment casesடெல்லி: வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதால், அதுகுறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் அளித்த உத்தரவில்:

அண்மைக்காலமாக வரதட்சணை கொடுமை வழக்குகள் மிகவும் அதிகரித்து விட்டன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இவற்றில் பல வழக்குகள் உண்மைக்கு புறம்பானதாகவும், தவறான நோக்கத்துக்காகவும் தொடரப்படுகின்றன.

இது போன்ற வழக்குகளை கீழ் கோர்ட்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஒரு சில வழக்குகளில் வெளிநாட்டில் இருக்கும் கணவரது உறவினர்கள் மீதும், வீட்டுக்கு எப்போதாவது வரும் உறவினர்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.

குற்ற விசாரணை கள் சம்பந்தப்பட்ட அனைவர் மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தி விடுகின்றன. நிரபராதிகள் என தீர்ப்பு வந்தாலும் வடுக்கள் மறைய வாய்ப்பில்லை.

கூறப்படும் குற்றச்சாட்டுகள் நடைமுறைக்கு சாத்தியமா என்பதை கோர்ட்கள் ஆராய வேண்டும். பல வழக்குகளில் கணவன் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் சுமத்தப்படும் புகார்கள் மிகைப்படுத்தி கூறப்படுகின்றன. உண்மை எது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.

சில சந்தர்ப்பங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறிய பின்னரும், உண்மை இதுதான் என தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது. மக்களின் கருத்தைக் கேட்டு இந்த சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இதற்கான நடவடிக்கைகளை தொடங்க இந்த தீர்ப்பின் நகலை மத்திய சட்ட அமைச்சருக்கு அனுப்பி வைக்க உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தனர்.

இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆண்கள் அமைப்புகளை எதிர்த்து போராடி வருகின்றனர். சமீபத்தில் கூட இந்த சட்டத்தைக் கண்டித்து ஏற்காட்டில் நடந்த ஆண்கள் அமைப்பின் கூட்டத்தில் பேசப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

புதன்கிழமை, ஆகஸ்ட் 18, 2010: News: Thatstamil.com

Comments to the original news item:

“ AS PER OFFICIAL RECORDS (AS OF NOW) 98 % COMPLAINTS FILED UNDER ‘ DOMESTIC VIOLENCE ACT-2005’ ARE BASELESS , FALSE, AND IT IS REVENGEFUL /EGOISTIC, SADISTIC TOWARDS HUSBANDS. ALSO THE FACT IS AUTHORITIES HANDS ARE TIED “ SO THEY HAVE TO OBEY THE COMPLAINT AND CHARGE (ARREST )EVERY BODY MENTIONED IN THE COMPLAINT GIVEN BY THE SO CALLE D WIFE , IRRESPECTIVE OF HER MENTAL STATE , CHARACTER , BACKGROUND . This is what happening now .THE SO CALLED WIFE HAS FULL POWER UNDER THIS ACT…,

Couple of months back in the FIR of a dowry case they have included a 2 month old baby also.

அப்பாடா எங்க வயித்துல பால வார்தீங்கட எசமானே ..கோடி புண்ணியமா போகும் எதாச்சும் பண்ணுங்க. பொண்ணுங்க பொய்யா செத்து போன பாட்டி பெற கூட வழகில சேர்த்து டார்ச்சர் பண்றன்கப்பா.

பெருகிவரும் பூவரசிகள்!

தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை (சுட்டி இங்கே):-

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்

By: கீதா சாம்பசிவம்

சிறுவன் ஆதித்யாவைப் பூவரசி என்ற பெண் கொன்றுவிட்டாள்.

Poovarasi, the child killerவேறொருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாஸ்திரக்கனி என்னும் காவல்துறைப் பெண் காவலர், தன் பழைய நீண்டநாள் காதலனான மின்வாரிய ஊழியர் ராஜேந்திரனைக் கொன்று எரித்து விட்டார். அதுவும் தன் புதுக் கள்ளக் காதலன் வீரராஜனோடு சேர்ந்து கூட்டமைத்துக் கொண்டு.

இந்தப் பெண்கள் இருவருமே கள்ளத்தனமாய்க் காதல் செய்து வந்திருக்கின்றனர். இதே ஓர் ஆணாக இருந்தால் மனைவியை ஏமாற்றியதற்கும் கள்ளக் காதலில் ஈடுபட்டதற்கும் அவன் மேல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க முடியும். ஆனால் பெண்களுக்கு மென்மையான சட்டங்களே இருக்கின்றன. அவ்வளவு எளிதில் அவர்களைத் தண்டிக்க முடியாது. பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளும் பெண் விடுதலை பற்றிப் பேசும் ஆண்களும் சரி இத்தகைய பெண்களின் நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் செயல்கள் பற்றியும் கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. ஆண்களிடம் பெண்கள் கஷ்டப் படுவதாயும், கொடுமைப்படுத்தப் படுவதாயும் சொல்லும் பெண்ணியவாதிகள் இந்தப் பெண்களால் சீரழிந்த குடும்பங்களைப் பற்றி நினைத்தானும் பார்க்கிறார்களா? சந்தேகமே! அந்தச் சீரழிக்கப்பட்ட குடும்பங்களிலும் பெண்கள் இல்லையா? அந்தப் பெண்களுக்கு மட்டும் எந்தவிதமான உரிமையும் கிடையாதா?

Congress MLC Jyoti Devi breaking flower pots outside the Bihar Assemblyமேலும் லஞ்சம் வாங்குவதிலும் பெண்கள் நாங்கள் ஒருவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக்கொண்டு வருகின்றனர். சில மாதங்கள் முன்னால் பாஸ்போர்ட் அதிகாரியான பெண்மணி ஒருவரின் லஞ்ச ஊழல் வெளிவந்தது. மேலும் காவல் துறையில் இருக்கும் சில பெண்களும் லஞ்சம் வாங்குவதாயும் வேறு துறைகளிலும் லஞ்சம் வாங்கும் பெண்மணிகள் இருப்பதாயும் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. மருந்துகள் வழங்கும் மருத்துவத் துறையையும் பெண்கள் விட்டு வைக்கவில்லை. பிஹாரில் காங்கிரஸ் மேலவை உறுப்பினரான ஜோதி தேவி என்ற பெண்மணி சட்டசபை நுழைவாயிலில் இருந்த பூந்தொட்டிகளை எல்லாம் உடைத்துப் போட்டு அமர்க்களம் செய்தார். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் இந்த அநாகரிகமான, பெண்மைக்குச் சற்றும் பொருந்தாத, ஆர்ப்பாட்டமான நிகழ்ச்சி காட்டப் பட்டது. என் கணவரோடு அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்குக் கூச்சமாய் இருந்தது. இது மட்டுமா?

பெண்களுக்கு உரிமைகள் இல்லை என்றும் அவர்களை அடிமைகள் என்றும் சொல்லிக் கொண்டு பெண்ணியவாதிகள் எதற்கெடுத்தாலும் கொடிதூக்கிக் கொண்டு அலைகின்றனர். சமீபத்தில் ஷர்மிளா தாகூர், பிருந்தா காரத், ஜெயந்தி நடராஜன், ஷபனா ஆஸ்மி போன்றோர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவிற்காக நடுத்தெருவில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர்; தினசரிகளில் செய்தியாக வந்தது. இப்படி எல்லாம் இருக்கும்போது பெண்களுக்கு உரிமை இல்லை என்றும் அடிமையாக நடத்தப்படுகிறாள் என்றும் பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்றும் முழங்குவதைப் பார்த்தால் சிரிப்பாய் வருகிறது. உடை உடுத்துதலில் தொடங்கிய ஆபாசம் இன்று கள்ளக் காதலிலும் லஞ்சம் வாங்குவதிலும் அதற்காகச் சிறு குழந்தை என்று கூடப் பார்க்காமல் கொலை செய்வதிலும் போய் முடிந்திருக்கிறது. நமக்குத் தெரிந்து வெளியே வந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் இவை. சம உரிமை கொடுக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அப்படி இருக்கும்போதே இப்படி எல்லாம் நடந்துகொள்ளும் பெண்கள் சம உரிமை கொடுத்துவிட்டால்– அதாவது அவர்கள் கேட்பதெல்லாம் இப்போது கிடைப்பதில்லை என்று இப்போது சொல்கிறார்கள்; அதெல்லாம் கிடைத்துவிட்டால்– இப்படி எல்லாம் நடக்காதா?

இன்று பெண்கள் எந்தத் துறையில் இல்லை? ஆட்டோ ஓட்டுநராக, பேருந்து ஓட்டுநராக, மின்சார ரயில் ஓட்டுநராக, தபால் பட்டுவாடா செய்பவராக, பெட்ரோல் பங்குகளில், ரேஷன் கடைகளில் பொருள்களை அளந்துபோடுபவராக… இன்னும் உயர்ந்த நிலையில் சொல்லவேண்டுமானால் விமானம் ஓட்டுபவராக, விண்வெளிப் பயணியாக, விண்வெளி விஞ்ஞானியாக என்று பல துறைகளிலும் பரிமளிக்கிறார்கள் தானே? இதை விடவும் என்ன முன்னேற்றமும் உரிமையும் வேண்டும்? ஒரு சிலர் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும், பட்டங்களும் கிடைக்கின்றன? இன்னும் சில ஆண்கள் மூட்டை தூக்கியும், வண்டி இழுத்தும், ரிக்ஷா ஓட்டியும் பிழைக்கின்றனர்? ஏன் இப்படி?? அவர்களுக்காகப் போராட யாருமே இல்லையா? ஆண்கள் முன்னேறவேண்டாமா? அவங்களுக்கும் இதில் எல்லாம் உரிமை இல்லையா?

கேட்டால் காலம் காலமாய்ப் பெண்கள்தான் அடிமையாக நடத்தப்படுவதாய்ச் சொல்லுவார்கள். பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்? எப்போதும் இல்லை! ஆனால் இந்தப்பெண் உரிமை பேசுபவர்களுக்கு என்னவோ பெண்கள் அடிமையாக இருப்பதாயும் அவர்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவதாயுமே நினைப்பு. சமீப காலங்களில் கிட்டத்தட்ட இந்தக் கள்ளக்காதல் பிரச்சினைகளால் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. அனைத்திலும் அநேகமாய்ப் பெண்களே குற்றவாளிகள். ஓர் ஆண் தன் மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணோடு உறவு பூணும் பட்சத்தில் சட்டம் அவன் மேல் வலிமையாகப் பாய்கிறது. அதுவே ஒரு பெண் என்றால் மென்மையாக அணுகுகிறது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்று வருகிறபோது இதில் மட்டுமே ஏன் பெண்ணிடம் மென்மையான அணுகுமுறை?? பெண்ணிய வாதிகளும் இப்படிப் பட்ட பெண்களைப் பற்றி ஒருவார்த்தை கூடப் பேசுவதில்லை. உடல் ரீதியாகவும், இயக்கங்களின் மூலமாகவும் ஆணும் பெண்ணும் மாறுபடுவது இயற்கை. ஆனால் அதற்காக ஒரு பெண் என்னவேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்பது அருவருப்பாய் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்தெல்லாம் பார்க்கவே வேண்டாம்.

பெண்களுக்கு இப்போது பணமும் ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசப் பொழுது போக்குகளும் மட்டுமே முக்கியமாய் இருக்கின்றன. எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டவில்லை. நானும் ஒரு பெண்தான். குடும்பத் தலைவிதான். ஆனாலும் தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களில் பெண்களை மட்டமாய்ச் சித்திரிப்பதற்கு ஒரு வரையறையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எந்தத் தொடரை எடுத்தாலும் அதில் கணவன் அல்லது மனைவிக்கு ஒரு கள்ளக் காதல், அதற்காகப் பழிவாங்குவது, அல்லது மாமியாரைப் பழிவாங்குவது, மாமியாரையோ, கணவனையோ பழிவாங்குவதற்காக ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தான் வாழ வந்த குடும்பம் என்ற எண்ணமே இல்லாமல் பழி தீர்த்துக்கொள்ளுவது…. அத்தகைய பெண்களைத் திறமைசாலிகளாய்க் காட்டுவது. அவர்களால் கஷ்டப் படும் பெண்களைத் திறமையற்றவர்களாய் வாயில்லாப் பூச்சிகளாய், பயந்தவர்களாய்க் காட்டுவது. ஒரு நாள் பூராவும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சராசரிப் பெண் மனதளவில் மிகவும் பாதிக்கப் படுகிறாள். அவளுக்குத் தன் நிலைமையை நினைத்துத் தன்னிரக்கம் ஏற்படுகிறது. தான் வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா என்று எண்ணுகிறாள். மேலும் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் பெண்கள் உடுத்தும் உடைகள், அணியும் ஆபரணங்கள் இந்தப் பெண்களின் கருத்தையும், கவனத்தையும் கவருகின்றன. ஆனால் சராசரிப் பெண்களால் வாங்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கும் அவற்றின் விலைகள். ஆகவே பெண்களுக்குத் தேவை பணம், அதனால் வரும் ஆடம்பர வாழ்வு. அதற்காகத் தன்னையே அழித்துக்கொள்ளவும் தயங்கவில்லை அவர்கள்.

மேலும் இன்றைய அவசர உலகில் கணவன், மனைவி இருவரும் அநேகமாய் வேலைக்குச் செல்கிறார்கள். மனைவிக்கு அலுவலகம் இருக்கும்போது கணவனுக்கு இருக்காது. கணவன் அலுவலகம் சென்றால் மனைவி வீட்டில் இருப்பாள். ஆக, பெண்களுக்கு முதல் எதிரி இந்தத் தனிமையே. வீட்டில் இருக்கும் பெண்கள்தான் என்றால் நாள் முழுதும் தொலைக்காட்சித் தொடர்களே அவர்களின் ஒரே பொழுதுபோக்கு என்றாகிவிட்டது. அதிலோ பெண்கள் தைரியமாய் என்னவெல்லாம் செய்கிறார்கள்? தனிமையில் வாடும் பெண்கள் தங்களுக்கு ஆறுதல் சொல்லவும், தங்கள் அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கவும் யாரானும் இருக்க மாட்டார்களா என உள்ளூர ஏங்குகிறார்கள் என்பது சில உளவியல் நிபுணர்களின் கருத்து. அதனால்தான் அவர்கள் பாதை மாறுகிறார்கள் என்பதும் அவர்கள் கருத்து. முன்பு கூட்டுக்குடும்பமாய் இருந்த போது இந்தப் பிரச்சினை அதிகம் எழவில்லை. அன்பைத் தேடி ஏங்குவதும் தனிமை தரும் சுதந்திரமும் காரணங்களாய்ச் சொல்கிறார்கள். நம் வீட்டில் நம் கணவனிடமும் நம் குழந்தைகளிடமும் கிடைக்காத அன்பா வெளியில் கிடைக்கப் போகிறது? விசித்திரமாய் இல்லை? ஏன் அவர்கள் கணவன்மார்களிடம் மனம் விட்டுப் பேசி, இதைத் தீர்த்துக்கொள்ளக் கூடாது. குழந்தை பெற்ற பெண்கள் என்றால் ஏன் குழந்தைகளோடு பொழுது போக்கக் கூடாது? ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. குழந்தைகளையும் இன்று தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சிகள் பெருமளவில் பாதித்திருக்கின்றன. அதைப் பற்றி அடுத்துப் பார்ப்போம். இப்போது பெண்களின் இந்த நிலைமைக்குத் தீர்வு என்னவென்று யோசிக்கலாம்…

நன்றி: தமிழ் ஹிந்து மற்றும் திருமதி. கீதா சாம்பசிவம்

பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா ஆண்களுக்கு எதிரானது

கொடி தூக்கும் ஆண்கள் அமைப்பு.

(http://www.dinamalar.com/News_Detail.asp?Id=53457)

புதுடில்லி : “குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டு வரப்படவுள்ள பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா, பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கு பாதகமாகவும் உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்’ என, ஆண்களுக்கான அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், “பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா’ இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மசோதா, “அலுவலகங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க, அவற்றின் தலைமையாதிகாரி உட்பட பெண்கள் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிந்துரைக்கிறது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த “தி சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன்’ என்ற ஆண்களுக்கான அரசு சாரா அமைப்பு ஒன்று, இம்மசோதா தற்போதைய நிலையில் நிறைவேற்றப்பட கூடாதென, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து அவ்வமைப்பின் பொதுச்செயலர் நீலாத்ரி சேகர் தாஸ் கூறியதாவது:

பெண்கள் எப்போதும் பொய்யே பேச மாட்டார்கள் என்றும், ஆண்கள் பிறக்கும் போதே “கிரிமினல்’களாக தான் பிறக்கின்றனர் என்றும் அம்மசோதா கருதுகிறது. ஆனால், பெண்களால் ஆண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இம்மசோதா, பெண்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. அதனால், இருபாலினத்தவரையும் சமமாக மதிக்கும் முறையில் மசோதா திருத்தப்பட வேண்டும். இதன் தற்போதைய வடிவம், இந்திய அரசியல் சாசனத்தின் 15வது பிரிவின், மத அல்லது பாலின ரீதியில் பாகுபாடு காட்டப்படக் கூடாதென்ற உரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவையில்லாமல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

மசோதா கூறியுள்ள இத்தகைய கமிட்டிகள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஏற்கனவே உள்ளன. அந்த கமிட்டியில் இடம் பெறுபவர்களுக்கான அடிப்படை தகுதியாக, ஒருவர் பெண்கள் நலம் குறித்து கவலை கொள்பவராக இருந்தால் போதும் என்று மசோதா கூறுகிறது. பெண்களே பெரும்பான்மையாக உள்ள கமிட்டியில் எப்படி ஆண்களுக்கான நீதி கிடைக்கும்? ஆண்கள் குற்றம் செய்யக் கூடாதென கூறும் மசோதா, பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், அவர்களையும் விசாரிக்க வேண்டுமென்பதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? பெண்களால், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கற்பனை செய்திகளின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது, அபாயகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி விடும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும், ஆண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும் நடவடிக்கை ரீதியாகவோ, சம்பவ ரீதியாகவோ சம நோக்கில் பார்க்க கூடாதென, அமைச்சகம் கருதுகிறது. இது தவறு.

இவ்வாறு நீலாத்ரி சேகர் தாஸ் தெரிவித்தார்.

பிரிவுகள்:ஒருதலைச் சார்பு குறிச்சொற்கள்:, , , , , , ,