தொகுப்பு

Archive for நவம்பர், 2010

மூன்று திருமணங்கள் செய்த இளம்பெண் தற்கொலை, நாலாவது காதலன் கைது!

Stop husband suicideஎப்படி இருந்தாலும், ஒரு இந்திய ஆண் தன் வாழ்க்கையில் ஒருநாள் கைது ஆகப்போவது நிச்சயம்!

என்றைக்கு ஒரு இந்தியப் பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொண்டானோ – அது திருமணமோ, காதலோ, உடன் வேலை செய்வதோ, பள்ளியில் அல்லது கல்லூரியில் உடன் பயில்வதோ, லிஃப்டில் உடன் செல்வதோ, லாட்ஜில் ஒரு இரவை உடன் கழித்தலோ, அல்லது வெறுமனே கடலை வறுத்துக் கொண்டிருந்ததோ – எவ்வகையிலேனும் அவன் ஒருநாள் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் 40-க்கும் அதிகமான ஒருதலைப்பட்ச ஆணெதிர்ப்பு சட்டங்கள் எய்யப்பட்டு கைதாகப் போவது நிச்சயம்!

இதோ இந்த புதுமைப் பெண்ணின் கதையைக் கேட்டுவிட்டு, அந்த அசட்டு காதலனுக்காக சிறிது கண்ணீர் சிந்துங்கள்!

ஈஞ்சம்பாக்கம்:நான்காவது திருமணம் செய்யும் முயற்சியில், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, ஈஞ்சம்பாக்கத்தில் கேளிக்கை விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கில் காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தி: தினமலர் – நவம்பர் 25, 2010.

கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் கேளிக்கை அரங்க விடுதியில் ஒரு பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நீலாங்கரை இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த பெண் மயிலாப்பூர், விசாலாட்சிதோட்டத்தை சேர்ந்த கந்தசாமியின் மகள் விஜயலட்சுமி(25) என்பது தெரிந்தது.

போலீஸ் விசாரணையில் மேலும் கிடைத்த தகவல்கள்:

விஜயலட்சுமிக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு எட்டு வயது மகன் இருக்கிறான். விஜயலட்சுமிக்கு ஆண் நண்பர்கள் அதிகம். இதனால், கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் விஜயலட்சுமியிடம் இருந்து விவாகரத்து பெற்ற கணவன், மகனுடன் பிரிந்து சென்று விட்டார். கந்தசாமியும் மரணமடைந்துவிட்டதால் தனது தாய் ஜெயாவுடன் விஜயலட்சுமி வசித்து வந்தார். அப்போது, விஜயலட்சுமி அடுத்தடுத்து இருவரை காதலித்து திருமணம் செய்து கணவர்களை பிரிந்து விட்டார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஷெட் நடத்தி வரும் மதன்குமார்(25)என்பவருடன், கடந்த நான்கு மாதங்களுக்கு முன் விஜயலட்சுமிக்கு காதல் மலர்ந்தது.

இருவரும் கணவன்-மனைவிபோல பல இடங்களில் உல்லாசமாக சுற்றி திரிந்தனர். இவர்களின் காதல் விவகாரம் மதன்குமார் பெற்றோருக்கு தெரிந்தது. மகனை கண்டித்து, அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்தனர். இதனால்,மதன்குமாரும், விஜயலட்சுமியும் ரகசிய திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை அரங்க விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தனர்.

நேற்று முன்தினம் காலை மதன்குமாரின் தாய்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக மொபைல்போன் மூலம் தகவல் வந்தது. விஜயலட்சுமியை அறையிலேயே விட்டுவிட்டு மதன்குமார் மயிலாப்பூர் சென்றார். அங்கு மதன்குமாரிடம் அவரின் தாய் உருக்கமாக பேசி மனதை மாற்றினார். திருமண திட்டத்தை மதன்குமார் கைவிட்டார். அதை விஜயலட்மியிடம் மொபைல் போனில் தெரிவித்தார். இதனால், விரக்தியடைந்த விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். பயந்துபோன மதன்குமார் தனது மாமாவுடன் விடுதிக்கு விரைந்தார். அங்கு, விஜயலட்சுமி கூறியபடி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.விஜயலட்சுமியை தற்கொலை செய்ய தூண்டியதாக, மதன்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

=============

டேஞ்சர் அய்யா, டேஞ்சர்!

சினிமா, கவிதை, கதை இதையெல்லாம் கண்டு, கேட்டு காதல் என்பது ஏதோ தெய்வீகமானது, வாழ்க்கையின் அடிப்படையே காதல் செய்வதுதான் என்ற மாயையில் சிக்கி சீரழியும் ஆண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்!

Advertisements

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி!

1. வேதாரண்யம்: காதலித்த பெண்ணை திருமணம் செய்த மறுத்த காதலன் கைது செய்யப்பட்டார்.

2. காதலனை மறக்க முடியாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; மணமேடையில் தாலியை தட்டிவிட்டார். (அவர் கைது ஆக மாட்டார். எனெனில் அவர் பெண் என்பதால். ஆண்தான் கிரிமினல்)

3. தாலி கட்ட வேண்டிய கடைசி நிமிடத்தில் “மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என மணமகள் எழுந்து நின்றதால், திருமணம் தடைபட்டு மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

4. உடுமலை : பல ஆண்டுகள் காதலித்து, கல்யாணம் செய்யாமலேயே குடும்பம் நடத்திய காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்ததை தடுத்த காதலி, போலீசார் உதவியுடன் நிச்சயிக்கப்பட்ட நேரத்திலேயே காதலனை கரம் பிடித்தார்.

========================

இனி செய்தி விவரங்கள்:-

========================

வேதாரண்யம் அடுத்த பண்ணால் மேற்கு ஞானபிரகாசம் மகள் பிரபா (25). இவருக்கும் தென்னாடார் மேற்கு அய்யாத்துறை மகன் ராஜா (31). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்யும் படி ராஜாவிடம், பிரபா வற்புறுத்தினார். அதற்கு ராஜா மறுத்து விட்டார். இது குறித்து பிரபா வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். எஸ்.ஐ., அமுதா வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார். மருத்துவ பரிசோதனைக்காக பிரபா நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

செப்டம்பர் 12,2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=82977

———–

காதலனை மறக்க முடியாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; மணமேடையில் தாலியை தட்டிவிட்டார்

பூந்தமல்லி, செப்.12-

போரூர் மதனந்தபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தாம்பரம் மணிமங்கலத்தை சேர்ந்தவர் நதியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரும் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

சுபாசுக்கும், நதியாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இன்று காலை இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது.
நேற்று மாலை காரம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள சமுதாய கூடத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலை திருமணத்துக்கான சடங்கு நிகழ்ச்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. மணமகன் சுபாஷ் தாலி கட்டும் நிகழ்ச்சிக்காக மணமேடையில் அமர்ந்திருந்தார். மணப்பெண் நதியாவை தோழிகள் அழைத்து வந்து மணமகன் அருகில் அமர வைத்தனர்.

தாம்பூல தட்டில் வைக்கப்பட்டிருந்த தாலியை பெரியவர்கள் மற்றும் பெண்கள் தொட்டு வணங்கினார் கள். புரோகிதர் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் சுபாஷ், மணமகள் நதியா கழுத்தில் கட்ட தயாரானார்.

அப்போது நதியா திடீரென ஆவேசமாக தாலியை தட்டிவிட்டு மணமேடையில் இருந்து எழுந்தார். கழுத்தில் போடப்பட்டிருந்த மாலைகளையும் கழற்றி வீசினார். எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மணமேடையிலேயே அறிவித்தார்.

இதை கேட்டு மண மகன், உறவினர்கள் மற்றும் திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோர்களும், உறவினர்களும் நதியாவை சமரசப்படுத்தினார்கள். ஆனால் அவர் திருமணத்துக்கு பிடிவாதமாக மறுத்து விட்டார். காதலனைத்தான் திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த சம்பவங்களை பார்த்து மணமகன் சுபாஷ் கண்ணீர் விட்டு அழுதார். திருமணத்திற்காக செலவு செய்த பணத்தை மாப்பிள்ளையின் பெற்றோர், பெண் வீட்டாரிடம் கேட்டனர். அந்த பணத்தை 2 மாதத்தில் தருவதாக மணப்பெண்ணின் பெற்றோர் ஒத்துக் கொண்டனர். இதையடுத்து மணப் பெண்ணும், அவரது உறவினர்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

நேற்று மாலை முதல் ஆரவாரமாக இருந்த திருமண மண்டபம் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால் இன்று காலை களை இழந்து காணப்பட்டது.

http://www.maalaimalar.com/2010/09/12141629/bride-marriage-stop.html

================
மாலையை உதறிய மணமகள்

காரம்பாக்கம் : தாலி கட்ட வேண்டிய கடைசி நிமிடத்தில் “மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என மணமகள் எழுந்து நின்றதால், திருமணம் தடைபட்டு மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போரூரை அடுத்து மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்(45). இவரது மகன் சந்தோஷ்(26). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தாம்பரம் பகுதியை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்த அலமேலு மகள் பிரியா(24) உடன், கடந்த மாதம் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.

வளசரவாக்கத்தை அடுத்த காரம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் எதிரேயுள்ள சமுதாயக் கூடத்தில் நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை திருமணம் நிகழ்ச்சிகள் நடந்தன. முகூர்த்த நேரம் நெருங்கியதும் அர்ச்சகர் தாலி எடுத்துக் கொடுத்தவுடன், தாலி கட்ட மாப்பிள்ளை சந்தோஷ் தயாரானார். அப்போது மணமகள் பிரியா திடீரென எழுந்து நின்றார்.

“தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்வேன்’ என பிரியா கூற, மண்டபத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இருதரப்பினரும் பிரியாவிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கணபதியும் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். எதற்கும் பிரியா ஒத்துக் கொள்ளாமல் போகவே, திருமணம் நிறுத்தப்பட்டது.

திருமண ஏற்பாடுகளை செய்த மாப்பிள்ளை வீட்டாருக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூற, இறுதியில் பெண் வீடு தரப்பில் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வழங்க உறுதியளித்தனர். பிரியா அணிந்திந்த நான்கு சவரன் செயினை மாப்பிள்ளை வீட்டார் பெற்றுக் கொண்டனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83181

=================

காதலித்து ஏமாற்ற முயன்ற காதலனை போலீஸ் உதவியுடன் கரம் பிடித்த காதலி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83200

செப்டம்பர் 12,2010

உடுமலை : பல ஆண்டுகள் காதலித்து, கல்யாணம் செய்யாமலேயே குடும்பம் நடத்திய காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்ததை தடுத்த காதலி, போலீசார் உதவியுடன் நிச்சயிக்கப்பட்ட நேரத்திலேயே காதலனை கரம் பிடித்தார்.

பொள்ளாச்சி அருகேயுள்ள ஏரிப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர்(31). டிப்ளமோ முடித்தவுடன், புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அங்கு வேலை பார்த்து வந்த புதுச்சேரி சிந்தாமணியும்(24), சுதாகரும் காதலித்துள்ளனர்.

மும்பையிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்ற சுதாகர், கடந்த மே மாதம், திருமணம் செய்து கொள்வதாக சொல்லி சிந்தாமணியை அழைத்துச் சென்றுள்ளார். திருமணம் செய்யாமலேயே இருவரும் மும்பையில் ஒரே அறையில் குடும்பம் நடத்தியதில், சிந்தாமணி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், சுதாகருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், சிந்தாமணியை கழட்டி விட்டுவிட்டு தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார். இதற்காக கடந்த வாரம் சிந்தாமணியை மும்பையிலிருந்து அழைத்து வந்து பொள்ளாச்சியில் தங்க வைத்துள்ளார்.

பின், தனது திருமண வேலைகளில் மும்முரமான சுதாகர், சிந்தாமணியை தொடர்பு கொள்ளவில்லை. சந்தேகமடைந்த சிந்தாமணி, ஏரிப்பட்டிக்கு சென்று விசாரித்துள்ளார். இதில், சுதாகருக்கு வேறோரு பெண்ணுடன் நிச்சயம் ஆனதும், செப்., 13ம் தேதி (இன்று) திருமணம் என்பதும் தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் அறைக்கு சென்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் அவரை கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து உடுமலை அருகே வரதராஜபுரத்தில் பணியாற்றி வந்த சிந்தாமணியின் அண்ணன் நாகராஜூக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் சிந்தாமணியை அழைத்து வந்து நாகராஜ் புகார் அளித்தார்.

மகளிர் காவல் நிலைய போலீசார், சுதாகரை அழைத்து வந்து விசாரித்ததில், சிந்தாமணியுடன் பழகியதை தெரிவித்து, அவரையே திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டார். இன்று காலை வேறோரு பெண்ணை திருமணம் செய்ய கனவு கண்டிருந்த சுதாகரின் கனவு சிந்தாமணியின் போராட்டத்தால் வீணானது.

ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த அதே தேதி மற்றும் அதே நேரத்தில் சுதாகர் தனது காதலி சிந்தாமணியை போலீசார் முன்னிலையில் உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் முன்பு திருமணம் செய்து கொண்டார்.

ஆண் பாவம் பொல்லாதுங்க!

ஆண்களுக்கு எதிராக இழக்கப்படும் சட்ட மீறல்கள், போலியாக கொடுக்கப்படும் வரதட்சணை புகார்கள், மற்றும் பல அவமதிப்புகளுக்கு எதிராக ஆண்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலக ஆண்கள் தினமான நவம்பர் 19, 2010 அன்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மெமோரியல் ஹால் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Men in distress

நன்றி: தினமலர்

ஆண்களுக்கு தனி அமைச்சகம் : துவங்கியாச்சு விநோத கோரிக்கை

International Men's Day, Chennai 2010தினமலரின் விஷமத் தலைப்பு இது!

ஆண்களுக்கென்று எது கேட்டாலும் அது “விநோத”மாகத்தான் தோன்றுகிறது பத்திரிக்கைகளுக்கு! இந்த கண்ணோட்டமே இந்தியாவில் இன்றையை ஆண்களின் பரிதாப நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு!

மேலும் வாசியுங்கள்:-

ஆண்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்பட தனி ஆணையம் மற்றும் அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு பொரிந்து தள்ளினார் சுரேஷ் ராம்.இந்த கோரிக்கைகள் வேடிக்கையாக இருந்தாலும், பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டு வருவது தான், ஆண்களை கோஷம் போட வைக்கும் அளவிற்கு தள்ளியுள்ளது.

வாசகர் கருத்துக்கள்:-

ஸ்ரீனி ம – உச,யூ.எஸ்.ஏ
2010-11-22 05:05:13 IST
சூப்பர்! கடைசியாக ஒரு அமைப்பாவது இருக்கிறதே! நல்ல செய்தி!…
ராம் – இந்தியா,இந்தியா
2010-11-22 00:48:13 IST
இந்த கோரிக்கைல் தவறேதும் இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருக்க வேண்டும்….
குமார் – துபாய்,இந்தியா
2010-11-22 00:17:40 IST
இந்த கோரிக்கை ஒன்றும் வேடிக்கையானதில்லை! நம் நாட்டில் ஆண்கள் மனைவிகளின் பல்வேறு சட்ட துஷ்ப்ரயோகங்களுக்கு இரையாகிறார்கள்!! இதில் ரொம்ப வேதனையான விஷயம் என்னவென்றால், கணவன் சம்பத்தப்பட்ட எல்லாவிதமான சொந்தங்களும் சட்ட சிக்கல்களிலும் மனைவிகளின் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள்!!! இதை பெண் ஆதரவு சட்டங்கள் என்பதைவிட மனைவிகள் ஆதரவு சட்டங்கள் என்றுதான் சொல்லவேண்டும்!!! இந்த கண்மூடித்தனமான மனைவி ஆதரவு சட்டங்களால் பாதிக்கப்பட்ட கணவனுக்கோ அல்லது அவனின் சொந்தங்களுக்கோ எந்தவிதமான ஆறுதலும் சட்டத்தில் இடமில்லை!!! இந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டவேண்டும் என்றால் ஆண்களுக்கென்று அமைச்சைகம் அமைத்து ஆண்களின் பிரச்சனைகளை காத்து கொடுத்து கேட்டு தீர்வு ஏற்பட வழி செய்ய வேண்டும்!!! நம் நாட்டில் ஆண்கள் அவர்கள் பிரச்சனைகளை பெரும்பாலும் வெளியில் சொல்லாமல் உள்ளேயே வைத்து புழுங்கி கொண்டிருப்பார்கள்! தனி அமைச்சகம் அமைத்தால் ஆண்கள் வெளியில் கொண்டு வருவார்கள்!!! தீர்வு கிடைக்கும்!!…

முழு செய்தி: (உங்கள் கருத்துக்களை அந்கும் இடலாம்)

ஊழியர்கள், அலுவலர்கள், தொழிற்சங்கங்கள் என பல தரப்பினரும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவர். இதில் புதுவிதமாக, “ஆண்களுக்கு தனி ஆணையமும், அமைச்சகமும் ஏற்படுத்த வேண்டும்’ என்று விநோத கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. அகில இந்திய ஆண்கள் நலச்சங்கத்தினர் தான், இந்த கோரிக்கையை வலியுறுத்தி கொடி பிடித்துள்ளனர்.

நவம்பர் 19ம் தேதி, உலக ஆண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கடந்த 19ம் தேதி சென்னை, டில்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில், ஆண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தர்ணா மற்றும் ஊர்வலங்கள் நடந்தன.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், அகில இந்திய ஆண்கள் நலச்சங்க உறுப்பினர் சுரேஷ் ராம் கூறியதாவது:ஆண்களுக்கு எதிராக, வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏராளமான பொய் வழக்குகள் போடப்படுகின்றன. வரதட்சணை, குடும்ப வன்முறை உட்பட பெண்கள் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தும், ஆண் எதிர்ப்பு சட்டங்கள் தான். ஆண், பெண் இரு பாலருக்கும் பொருந்தும் வகையில் சட்டங்கள் இயற்ற வேண்டும். பெண்களுக்காக பல மருத்துவ திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்களை தாக்கும் நோய்களுக்கு தீர்வு காணும் வகையில் திட்டங்களை உருவாக்குவது கிடையாது. பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தவறாக ஆண்கள் மீது பயன்படுத்துகின்றனர்.

ஆண்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்பட தனி ஆணையம் மற்றும் அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு பொரிந்து தள்ளினார் சுரேஷ் ராம்.இந்த கோரிக்கைகள் வேடிக்கையாக இருந்தாலும், பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டு வருவது தான், ஆண்களை கோஷம் போட வைக்கும் அளவிற்கு தள்ளியுள்ளது. வரும் காலங்களில் ஆண்களுக்கு ஆதரவாக, தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகள் வாய்க்குவந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும் வியப்பதற்கில்லை.

இன்று உலக ஆண்கள் தினம்!

ஆம், நவம்பர் 19-ம் நாள் அகில உலக ஆண்கள் தினமாக (International Men’s Day) கொண்டாடப்படுகிறது!

சர்வதேச ஆண்கள் தினம்

இவ்வாண்டுக்கான உலக ஆண்கள் தினம் (International Men’s Day) 2010 நவம்பர் 19-ம் நாள் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் சென்னை, டில்லி, மும்பை, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு போன்ற பல நகரங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சர்வதேச ஆண்கள் தினம் (IMD – International Men’s Day) ஆண்டு தோறும் நவம்பர் 19-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999-இல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.

“ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும்?” என்னும் கேள்வி இன்னும் சிலருக்கு எழுகிறது. அதை சிலர் கேலி வேறு செய்கிறார்கள் – “ஆண்களுக்கென்ன கேடு, தனியாக ஒரு நாள் வேறு ஒன்று தேவையா?” – என்று!

ஏன் அப்படி? அனைத்து சிறப்புக்களும் பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள் மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

இந்த ஆண்கள் தினத்தை அனுசரிக்கும் நோக்கங்களில் சில:

 • ஆண்கள் மற்றும் இளைஞர்களின் சுகாதார மேம்பாடு, ஆண், பெண் இருபாலரும் சம உரிமையுடன் மனமொருமித்த செயல்பாடு போன்றவற்றை வேண்டுவது, ஆணினத்தின் வழி காட்டுதலுக்கு நேர்மையும், மனத்திண்மையும் ஒருங்கே கொண்ட முன் மதிரிகளை அடையாளம் காண்பது
 • அனைத்துத் துறைகளிலும் கடினமான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பல இடர்களுக்கு மத்தியில் முழுமையான அர்ப்பணிப்புடன் பணி புரிந்துவரும் ஆணினத்தின் சாதனைகளை அடையாளம் கண்டு அதற்கு நியாயமாகக் கிட்டவேண்டிய அங்கீகாரத்தை சமுதாயத்திலிருந்து பெறுதல்
 • வரலாறு தோன்றிய காலத்திலிருந்து ஆண் என்பவன் சமுதாயத்தின் காப்பாளனான, சமூகத்தின் அடிப்படைத்தேவைகளை தன் உழைப்பால் பூர்த்தி செய்பவனாக அறியப்படுகிறான் (the role of a protector and provider). அதுதான் ஆணின் முக்கிய கடமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆணின் இந்த மிக முக்கிய பங்களிப்பு சமூகத்தில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறவில்லை. இந்த அடிப்படை மனப்பான்மையின் நீட்சியாகத்தான் தன்னை விட்டு வெளியேறிய முன்னாள் மனைவிக்கும் பராமறிப்புத்தொகை, ஜீவனாம்சம் என்ற வகைகளில், அவன் கப்பம் கட்டி அழவேண்டிய கட்டாயத்திற்கு அவனைத் தள்ளும் சட்டங்களும் தீர்ப்புக்களும் அமைகின்றன! இத்தகைய தவறான போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் நாளாக இந்த ஆண்கள் தினம் அமைகிறது
 • முக்கியமாக இன்றைய நிலையில் இந்திய ஆண்கள் எதிர்கொள்ளும் சட்டபூர்வ பயங்கரவாதத்தையும், ஆண்களை பொருளாதார ரிதியிலும் மன ரீதியாகவும் கொடுமைப் படுத்தும் போக்கையும், பல ஆணெதிர் சட்டங்களின் செயல்பாடுகளால் இந்திய ஆண்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் சித்திரவதைகளையும், ஆணினத்தையே அழிக்கச் செய்யும் ஒரு பால் சார்பு நிலையையும் எதிர்த்துப் போராடுவது

நம் சமூகத்தில் ஆண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் சில:-

 1. அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளுக்கு பெண்களைப் போன்று ஆண்கள் கிரமமாக உட்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக பெண்களின் பல வகை நோய்களைத் தடுக்கவும் கட்டாய ஸ்கிறீனிங் (screening) செயற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. இதனால் ஆண்களை மட்டுமே தாக்கும் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோய், இதய அடைப்பு (Heart attack) போன்ற நோய்களை ஆண்கள் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் உள்ளது. இதனால் ஆண்கள் மத்தியில் அநியாய மரணங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
 2. சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் கழிந்தும் ஆண்கள் நலனுக்காக என்று பிரத்தியேகமாக இந்திய அரசு ஒரு ரூபாய் கூட செலவழிக்க வில்லை என்பது வருத்தத்தக்க விஷயம்! எந்த வித நலத்திட்டமும் ஆண்களுக்காகவென்று செயல்படுத்தப்படவில்லை. நிதிநிலை அறிக்கைகளிலும் (Budget) யாதொரு வழங்கலும் செய்யப்படவில்லை.
 3. ஆண்களின் பிரச்னைகளை அணுகி தீர்வு காணவென்று எவ்வித அரசு சார்ந்த நிறுவனங்களோ, ஆணயமோ (பெண்களுக்கு இருப்பதுபோல) அமைக்கப்படவில்லை
 4. கற்பழிப்பு வழக்குகளில் ஒருதலைச் சார்பு சட்டங்களினால் ஆண்களை மட்டும் குற்றவாளியாக்கும் போக்கு தீர்வின்றித் தொடர்கிறது.
 5. குடும்ப வன்முறையில் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு நிவாரணம் பெற சட்டத்தில் எந்த வழியும் இல்லை. ஏனெனில் குடும்ப வன்முறை என்பதே ஆண்தான் செய்வான், பெண்கள் செய்யவே மாட்டார்கள் என்று திட்டவட்டமாக D.V. Act சட்டத்தில் கட்டமைக்கப்படுள்ளது
 6. விவாகரத்து பெறும்போது சட்டரீதியாக குழந்தைகள் தந்தையரிடம் வாழ பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதே இல்லை. தந்தையும் பெற்றோரில் ஒருவர்தான், தந்தைக்கும் பாசமும் பொறுப்பும் உண்டு என்பதையே சமூகமும் நீதிமன்றங்களும் அங்கீகரிப்பதில்லை. இந்த பயங்கரமான போக்கு தொடருமானால் வருங்காலத்தில் தந்தை என்னும் உறவைப் பற்றியே அறியாத இளம் சமூகம் நம் நாட்டில் உருவாகும் அபாயம் உள்ளது!
 7. தொழில்ரீதியாக ஆண்கள் சில தொழிற்துறைகளில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவது, பெண்களின் உடலழகு மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டு வேலை வழங்குதல் போன்ற பாரபட்சம் தொடர்கின்றது.
 8. ஆண்களுக்கு உளரீதியாக உணர்வுக் கிளர்ச்சியூட்டி, அவர்களை தவறான வழியில் செல்லத் தூண்டும் பெண்களுக்கு சட்ட ரீதியான தண்டனை ஏதுமில்லாமலிருப்பதால், ஆண்கள் தவறாக வழிநடத்தப்படுவது தொடர்கின்றது.
 9. ஆண்களுக்கு எதிராக செய்யப்படும் பாலியல் கொடுமைகளை சமூகம் அங்கீகரித்து அதைத்தடுக்க யாதொரு முனைப்பும் இல்லாமை
 10. ஆண்களின் தனிப்பட்ட பிரச்னைகளாக எதனையும் அடையாளங்கண்டு அவற்றிற்கு தீர்வுகள் தேடப்படுவதில் அக்கறை செலுத்தாமையும் புறக்கணிப்பும்.
 11. காதல், டேட்டிங் என்ற போர்வைகளில் ஆண்களிடம் உள்ள சொத்து மற்றும் சுகத்தை பறித்துக் கொண்டு செல்லும் பெண்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாமை. குழந்தைகளைக் காட்டி நிகழ்த்தப்படும் சொத்துப்பறித்தலை சட்டரீதியாக ஊக்குவித்தல்.
 12. ஆண்கள் மீது பகிடி வதை புரியும் பெண்கள் மீது சட்டம் பாயாமல் தடுக்கப்படுகின்ற நிலை
 13. ஆண்களுக்கு மன உழைச்சல் ஏற்படும் வகையில் செயற்படும் பெண்களுக்கு தண்டனையே இல்லாத நிலை
 14. வர்த்தக விளம்பரங்களில் பெண்களுக்கு அதிக முக்கியமளித்து ஆண்கள் புறக்கணிக்கப்படும் நிலை
 15. விமானப்பணியாளர்கள், கால் செண்டர்கள், செவிலியர்கள் (நர்சுகள்) போன்ற பணிகளில் ஆண்களுக்கு வாய்ப்பேதும் இல்லாமல் முழுமையான புறக்கணிப்பு. ஆனால் கடுமையான உடலுழைப்பு, உயிரைப் பணையம் வைக்கும் ரிஸ்க் அதிகமான வேலைகள் – இவைகளுக்கு மட்டும் ஆண்கள் தேவையாக இருக்கிறது!
 16. அந்தரங்கச் செயலாளர்கள் என்று பெண்களை நியமிப்பதை வழக்கமாகக் கொண்டிருத்தல். அங்கு ஆண்களுக்குரிய சம தொழில் வாய்ப்பு புறக்கணிக்கப்படுதல்.
 17. கடினமான வேலைகளில் மட்டும் ஆண்கள் தேர்வு செய்யப்பட்டு ஈடுபடுத்தப்படுதல். ஆனால் அத்தகைய கடின உழைப்பால் நேரும் சுகக் கேடுகளுக்கு யாதொரு தீர்வையும் அளிக்காதிருத்தல்
 18. இராணுவத்தில் ஆண்களை மட்டுமே சேர்த்து அவர்களை போருக்கு இரையாக்குதல்.
 19. குடும்பங்களில் பெண்களால் ஆண்களின் பேச்சுரிமை, சுதந்திரமான செயலாற்றல் சுதந்திரம் போன்றவை பறிக்கப்படுவது குறித்து அக்கறை இல்லாதிருத்தல்
 20. பெண்கள் அட்ஹிகம் சம்பாதித்தால் கூட, ஆண்களின் ஊதியத்தை பெண்களுக்கு பறித்துக் கொடுக்கும் பாரபட்ச சட்டங்கள்
 21. போரின் போதும், பேரிடர்கள் நேரத்திலும் பெண்களை மற்றும் குழந்தைகளைக் காக்க இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் ஆண்களைக் காக்க இல்லாமை. Men are deemed to be a disposable commodity.
 22. ஆண்களின் சராசரி ஆயுட்காலம் குறைவடைந்துள்ளமைக்கான சரியான காரணிகளை இனங்கண்டு ஆண்களுக்கு கிரமமான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி அதற்கான தீர்வுகளை செயலாக்க அரசு முன்வராத நிலை
 23. குழந்தை ஒன்றை உருவாக்குவதில் உள்ள ஆணின் 50% பங்களிப்பு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதோடு, குழந்தை பெற்றபின் குழந்தையைப் பராமரிக்க என்று ஆணுக்கு விசேட நீடித்த விடுமுறை வழங்கப்படுவதில் முழுமையான பாரபட்சம் காட்டப்படுதல்.

மேலும் ஆணினத்திற்கு அடிப்படைக் கடமைகளை மட்டும் விதித்துவிட்டு, எந்தவித உரிமைகளையும் அவர்களுக்கு அளிக்காமல் இருக்கும் நிலைமையால் கீழ்க்காணும் கொடுமைகளுக்கும் ஆணினம் இந்நாட்டில் உட்படுத்தப்படுகிறது:

 • தன் பெற்றோர் உடன்பிறப்புக்கள் மற்றுமில்லாமல் தன் மனைவியின் உடன் பிறப்புக்களின் தேவைகளையும் அவர் பூர்த்தி செய்யும்படி எதிர்பார்க்கப்படும் நிலை
 • ஒருஆண் தன் வாழ்நாள் முழுதும் குடும்பத்தினருக்காக கடன்பட்டு நிற்கும் நிலையால் அவன் முடிவில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகிறான். வீட்டிற்காக லோன், குழந்தைகளின் கல்விக்கான கடன், மனையின் வைத்தியச் செலவுக்கான கடன் இப்படி பல விதங்களில் அவன் சுமைகளை ஏற்றிக்கொண்டு நிற்கிறான். ஆனால் பெண்கள் கல்வியிலும் சம்பாதிப்பிலும் மெலோங்கி இருப்பினும் ஆண்தான் பொருள் ஈட்டி குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என்னும் விதியை அமுல் செய்யும் அதே நேரத்தில் அவனை பல வழிகளில் தாக்கி துன்புறுத்தும் போக்கும் தொடர்கிறது
 • இ.பி.கோ 498A, குடும்ப வன்முறைச் சட்டம் (D.V.Act) போன்ற கொடுங்கோன்மைச் சட்ங்களினால் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான கணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படும் கொடுமை தொடந்து நிகழ்கிறது. அரசின் அனைத்து அங்கங்களும் இத்தகைய தவறான பயன்பாட்டினை உணர்ந்திருத்த போதும் சில பெண்ணியவாதிகள் மற்றும் தனி நபர் ஆதாயங்கள் பெறும் குழுவினரின் எதிர்ப்பால் யாதொரு மாற்றமும் செயல் படுத்தப்படாமல் தொடர்கிறது இந்த வன்முறை
 • கணவனுடன் வாழப் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய மனைவிக்கு அந்த மனைவி படித்து பட்டங்கள் பெற்று பெருமளவில் சம்பாதித்தாலும், அவருக்கு கணவன் தான் பராமரிப்புத்துகை வழங்கவேண்டும் என்னும் அநியாயமான சட்ட்ங்கள் மற்றும் தீர்ப்புக்களினால் இந்நாட்டின் கணவன்மார்கள அனைவரும் இலவச ஏ.டி.எம் மெஷின்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். விவாகரத்து ஆன பிறகும் கூட அவர்கள் மாஜி மனைவிக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை
 • இந்த நிலை தொடர்ந்தால் இந்நாட்டின் ஒட்டு மொத்த ஆண்களும் உளவியல் ரீதியாக சிதைக்கப்பட்டு காயடிக்கப்பட்ட செக்கு மாடாக தரம் தாழ்த்தப்படும் அபாயம் ஏற்படும்.

ஆணினத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய கொடுமைகளைக் களைய பாடுபடுவதற்காக அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (All India Men’s Welfare Association) “AIMWA” என்னும் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் நாடெங்கும் சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நாட்களில் அனைத்து ஊடகங்களிலும், திரப்படங்களிலும் ஆணினம் எவ்வாறு தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் (Negative stereotyping) என்பதைக் காணுங்கள்:

 1. முட்டள்கள், பொறுப்பற்றவர்கள், வன்முறையாளர்கள், மனைவியை அடிப்பவர்கள், குடிகாரர்கள், எப்போதும் செக்ஸ் தேடி அலைபவர்கள்
 2. வரதட்சணைக் கொடுமை செய்பவர்கள், பாலியல் தொழிலில் தரகராக உள்ளவர்கள் (பெண் தரகர்கள் கிடையாதா?, ஏன் அவர்களை சித்தரிப்பதில்லை?), கொலைகாரர்கள், வன்புணர்வு செய்பவர்கள், மனைவியை எரிப்பவர்கள், கஞ்சா அபின் பாவிப்பவர்கள்
 3. ஒழுங்கற்றவர்கள், ஒழுக்கமற்றவர்கள், மனரீதியாக முழு வளர்ச்சியடையாதவர்கள், எதற்கும் பெண்கள் துணையில்லாமல் செயலாற்ற லாயக்கற்றவர்கள்
 4. ஆண்கள் மட்டுமே வன்முறையாளர்கள், பெண்கள் மட்டுமே பாதிக்கப்படும் அபலைகள்

இப்படி சமூகத்தின் எண்ணப்பாங்கு அமைந்திருப்பதால் ஆண் எக்கேடு கெட்டல் என்ன என்னும் நோக்கு இருக்கிறது. வெள்ளம், புயல், சுனாமி, நெருப்பு, குண்டு வெடிப்பு போன்று ஏதேனும் பெரும் இடர் வரும் நேரத்தில் பெண்களை மட்டும் காப்பாற்றும் நிலை இருக்கிறது. ஆண்களைக் கண்டு கொள்வோர் கிடையாது!

அதே போல் ஒரு நிகழ்வில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று குறிப்பிடும்போதுகூட “பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர்” என்றுதான் சொல்வார்கள். ஏன்? ஆண்கள் ஒரு பொருட்டேயல்ல! இத்தகைய அணுகுமுறை மாற்றி அமைக்கப்பட்டு ஆண்களும் உயிரினம்தான் என்ற புரிதல் ஏற்பட வேண்டும்!

ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை:

ஆண்கள் பல வகைகளில் குடும்ப வாழ்வில் மனைவியின் கையால் வன்முறைக்கு ஆழ்த்தப்படுவது அன்றாட நிகழ்ச்சி. உளவியல், பொருளாதாரம், உடல், பேச்சு இப்படி பலவகையிலும் கண்வன் மனவியால் துன்புறுத்தப்படுகிறான். ஆனால் அது சட்டத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை. குடும்ப வன்முறை என்பது கனவன் மனைவிமீது செய்வது மட்டும்தான் என்று D.V.Act வரையறுத்துள்ளது.

அந்த D.V. Act படி கணவன் தலையைத் திருப்பிக் கொண்டால் கூட அது வன்முறை; உடனே மனைவி புகார் கொடுத்து கனவனை அவனுக்குச் சொந்தமான வீட்டிலிருந்தே விரட்டி அடித்து, அதற்காக மனைவிக்கு கப்பம் கட்ட வைக்கலாம். ஆணால் மனைவி கணவனை ஆண்மையற்றவன், ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று இன்னொரு ஆணுடன் ஒப்பிட்டு திட்டினாலும், ஏன் அடித்தால் கூட அது குற்றம் கிடையாது! இதுபோன்ற அநாகரிகமான சட்டங்கள் மாற்றப்படாவிட்டால் விபரிதமான விளைவுகள் ஏற்படும் என்பது திண்ணம்.

இத்தகைய முடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சாதாரணமாக பெண்கள்தான் அதிக அளவு தற்கொலை செய்து கொள்வதாக ஒரு தவறான பொய்த் தோற்றம் மக்கள் மனத்தில் உள்ளது. ஆனால் அந்த மாயத்தோற்றம் உண்மையல்ல. ஆண்களின் தற்கொலை பெண்களுடையதை விட இரண்டு பங்கு என்பதே உண்மை!

அரசின் ஒரு அங்கமான தேசிய குற்றத் தரவுகள் மையம் (National crime Records Bureau -NCRB) வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி கடந்த 2005-2007 மூன்று ஆண்டுகளுக்கான தற்கொலைச் சாவு விவரம்:

1. 2005: 52583 married men committed suicide :: 28188 married women.
2. 2006: 55452 married men committed suicide :: 29869 married women.
3. 2007: 57593 married men committed suicide :: 30064 married women.

உலக ஆண்கள் தினத்தன்று அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கத்தின் கோரிக்கைகள்:-

இந்திய அரசியல் சட்டதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள்:-

 1. ஓர வஞ்சனையுடன் ஒரு பாலருக்கு மட்டும் நன்மை செய்வித்து ஆண்களுக்கு எதிராக இயற்றப்பட்டிருக்கும் ஒரு பக்கச் சார்புச் சட்டங்கள் அனைத்தையும் இரு பாலருக்கும் பொருந்துபடியாக மாற்றியமைக்க வேண்டும்
 2. “கணவன்”, “மனைவி” போன்ற சொற்களின் பயன்பாட்டைத் தவிர்த்து இருவருக்கும் பொருந்தும்படியாக “துணைவர்” (spouse) என்னும் சொல்லாட்சி வேண்டும்
 3. பொது இடங்களில் ஆண்களின் தன்மானத்தைக் காப்பாற்றும் வகையில் (பெண்களுக்கு இருப்பது போல்) 51(E) பிரிவில் திருத்தம் கொண்டுவர வேண்டும்
 4. அதே போல் 15(E) பிரிவையும் திருத்தம் செய்து பெண்கள் குற்றம் செய்தால் அவர்களுக்கு தண்டனைகளிலிருந்து விலக்கும், குறைவாக தண்டனையும் அளிக்கும் சிறப்பு அணுகுமுறை அமைப்பை மாற்ற வேண்டும்

சட்டங்களில் மாற்றங்கள், திருத்தங்கள்:

 1. இருபாலரும் ஒத்து செயல்படும் கலவைக்கு ஆணை மட்டும் குற்றவாளியாக்கும் சட்டங்களை மாற்றி (present laws that hold man alone guilty by converting consensual sex into rape) 15 வயத்திற்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் மனமொத்து பாலியல் தொடர்பு கொள்வதை சட்ட பூர்வமாக்க வேண்டும்.
 2. கற்பழிப்பு தொடர்பான சட்டத்தில் (IPC 376) ஆண்களை மட்டும் தண்டிக்கும் தற்போதைய அமைப்பை மாற்றி செக்ஸ் உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றும் பெண்களுக்கும் தண்டனை அளிக்க வகை செய்ய வேண்டும்
 3. ஆணின் விந்து வங்கி முறையை அறவே ஒழித்திடல் வேண்டும். இதனால் எதிர் காலத்தில் ஒரு சில “பொலிக் காளை” ஆண்களே இருந்தால் போதும் என்று முடிவெடுத்து ஏனைய ஆண்களைக் காயடித்து வண்டி மாடு போல் பொதி சுமக்கும் அடிமைகளாக மாற்றும் நிலை ஏற்படக்கூடும்!

குடும்ப நலச் சட்டங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்:

 1. தற்போது இயற்றப்பட்டுள்ள வரதட்சணை, ஜீவனாம்சம், குடும்ப வன்முறை போன்றவை சார்ந்த சட்டங்கள் திருமண முறையின் ஆணி வேரையே கெல்லி எடுத்து குடும்ப வாழ்வு முறையை சிதைத்து, ஆணாகப் பிறந்தவன் திருமணம் செய்து கொள்வதே ஒரு கிரிமினல் குற்றமாக மாற்றி விட்டன. இந்த நிலையை மாற்ற இச்சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.
 2. குற்றவியல் சட்ட அமைப்புக் கோட்பாடுகளை (CrPC) தக்க முறையில் மாற்றி IPC 498A சட்டப் பிரிவின் கீழ் புகார் கொடுத்தவுடன் கைது நடவடிக்கை மற்றும் பிணைத்தடுப்பு போன்ற கொடுங்கோன்மை தன்மையைக் களைய வேண்டும் (make sec 498A of IPC non-cognizable and bailable).
 3. குடும்ப வன்முறைச் சட்டத்தின் (D.V.Act) 31(B) பிரிவை மாற்றி மனைவியின் சாட்சியத்தை மட்டும் கருத்தில் ஏற்று கணவனை தண்டிக்கும் முறையை ஒழிக்கவேண்டும்
 4. இ.பி.கோ 304-B சட்டத்தில் அடிப்படையில் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால், கனவனே கொலை செய்திருப்பான் என்று சட்டபூர்வ அனுமானத்துடன் அணுகும்படி இற்றைப் படுத்தியிருப்பதை மாற்றி அத்தகைய அணுகுமுறை கணவன் 7 ஆண்டுகளுக்குள் இறந்தாலும் பொருந்தும்படியும், அதன் அடிப்படையில் மனைவியை குற்றவாளியாக ஏற்கும்படி இருவருக்கும் பொதுவாக அமைக்கப்பட வெண்டும்.
 5. இ.பி.கோ 497 சட்டத்தில் கள்ளக்காதல் குற்றத்திற்கு அதில் ஈடுபடும் அடிப்படை குற்ரவாளியான மனைவிக்கு தண்டனையிலிருந்து முழுதுமாக விலக்களித்து ஆணை மட்டும் குறவாளியாக்கும் தற்போதைய அமைப்பை மாற்றி கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க வழி செய்ய வேண்டும்.
 6. கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து குடும்பம் நடத்தாத மனைவிக்கும், விவாக ரத்து பெற்ற முன்னாள் மனைவிக்கும் அந்தக் கணவனிடமிருந்து பல வகை சட்டங்களின் அடிப்படையில் (CrPC 125, Divorce laws, DV Act, HAM Act etc.) பராமறிப்பு, ஜீவனம்சம் என்ற பல வகைகளில் காசு பிடுங்கி அளிக்கும் கொடுமையை அகற்ற வேண்டும்
 7. கணவனிடமிருந்து பிரிந்து வாழும் மனைவிகளைக் காப்பாற்றும் பொறுப்பை அரசே ஏற்று “சுவதார்” போன்று அரசால் துவங்கப்பட்டிருக்கும் காப்பகத்தில் சேர்க்க வழியமைக்க வேண்டும்
 8. கணவர்களும் பொறுப்பான பெற்றோர்தான் என்னும் உணமையை அங்கீகரித்து விவாகரத்து பெற்று பிரியும்போது குழந்தைகளின் முறையான வளர்ப்புக்கு தந்தை, தாய் இருவரின் பராமரிப்பும் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு கணவனுக்கும் குழந்தைகளின் காப்புப் பொறுப்பை சரிசமமாக பங்கிட்டு வழங்குதல் வேண்டும் (Shared parenting)
 9. மனைவிகளுக்கு தங்கள் மாமியார், மாமனாரைக் காப்பாற்றும் கடமை உண்டு என்று வரையறுத்து முதியோர் காப்பகங்களை ஒழிக்க வேண்டும்.

சமூக நலன் சார்ந்தவை:

 1. பெண்களுக்கு உள்ளதுபோல் “தேசிய ஆண்கள் வாரியம்” (National Commision for men) அமைக்கப்பட வேண்டும்.
 2. ஒருதலைப் பட்சமான தன்மை கொண்டதும், கோர்ட்டால் கட்டமைக்கப்பட்டதுமான “விஷாகா” சட்டத்தை நீக்கிவிட்டு இரு பாலருக்கும் பொதுவாக வேலை பார்க்கும் இடத்தில் நேரும் வனமுறை சம்பந்தமான சட்டம் இயற்றப்பட வேண்டும்
 3. ஆண்கள் நலனைப் பாதுகாக்க மத்தியில் ஆண்கள் நல அமைச்சகம் ஒன்று தேவை.
 4. ஆண், பெண் இருவருக்கும் பொதுவான வரிச் சட்டங்கள் தேவை. இதில் பாகுபாடு கூடாது
 5. நலத் திட்டங்கள் வகுக்கும் போது பெண்களுக்கென்று தனியாக கட்டமைக்காமல் அனைவருக்கும் பொதுவாக அவற்றின் பலன்கள் சென்றடைய வேண்டும்.
 6. ஆண்களைத் தவறாக சித்தரிக்கும் போக்கை மாற்றிட ஒரு மேல்முறையீட்டு அமைப்பு வேண்டும்
 7. ஆண்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க அனுமதித்து அவர்களை எப்பொதும் ஒரு சுமை தாங்கியாகக் கருதும் நிலை மாற வேண்டும்
 8. ஆண்களைத் தாக்கும் புரோஸ்டிரேட் கான்சர், மாரடைப்பு போன்ற வியாதிகளைக் களைய தக்க நிவாரணங்களை அளிக்க சிறப்பு நலத் திட்டங்கள் தேவை
 9. ஏழை மற்றும் தனித்து விடப்பட்ட ஆண்களுக்கும் காப்பிடங்கள் அமைக்கப்படல் வேண்டும்.

இப்படிக்கு

பிரான்ஸிஸ் அந்தோனி
(Ph:9962004649)

ஆசிஃப் அலீம்
<Ph:9840384114)

அமைப்பாளர்கள்,

அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற அமைப்பு (All India Men's Welfare Association – "AIMWA")

சென்னை கிளைசர்வதேச ஆண்கள் தினம்

விமானத்தில் குழந்தை பெற்று கழிவறை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற பெண்

Gulf Air babyமணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு வந்த கல்ப் ஏர் வி்மானத்தில் பயணித்த ஒரு பெண், விமான கழிப்பறையில் வைத்து குழந்தை பெற்று, அதை காகிதத்தில் சுற்றி கழிவறை குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


(ஆனால் நம் நாட்டில் கோர்ட்டுகள் அனைத்திலும் பெண்கள் வசம் தான் குழந்தைகளின் கஸ்டடியை கொடுப்பார்கள். ஏனெனில் ஆண்கள் குழந்தைப் பாசமே இல்லாதவர்களாம்; பெண்கள் மட்டும்தான் குழந்தைகளை ஒன்றுமே செய்யமாட்டார்களாம்! என்ன கஒடுமையடா இது!!)

விமானத்தை சுத்தம் செய்ய வந்த பணியாளர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஈவு இரக்கமற்ற அந்தப் பெண்ணைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அந்த விமானம் சவூதி அரேபியாவிலிருந்து மணிலாவுக்கு வந்தது. விமானம் வந்து சேர்ந்து அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் விமான துப்புறவாளர்கள் உள்ளே சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அந்த விமானம் பஹ்ரைன் செல்லத் தயாரானது. அப்போதுதான் விமானக் கழிப்பறையில் குழந்தை காகிதத்தால் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அதை மீட்டனர்.

பின்னர் விமான நிலைய டாக்டர்கள் விரைந்து வந்து குழந்தையை சோதித்துப் பார்த்தனர். அது நல்ல நிலையில் இருப்பதாக அறிவித்தனர். இதையடுத்து கல்ப் ஏர் நிறுவனத்தினர் கூடி அக்குழந்தைக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் என பெயரிட்டனர். பின்னர் நினோய் அகினோ மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அக்குழந்தையின் தாயார் யார், எந்த நாட்டவர் என்பது தெரியவில்லை. அவரைப் பிடிக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அந்தப் பெண் எப்படி கழிப்பறைக்குப் போய் குழந்தை பெற்றார், எந்தவித சுவடும் இல்லாமல் எப்படி வந்து இருக்கையில் அமர்ந்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் குழந்தை பெற்றபோது எந்தவித சப்தத்தையும் சக பயணிகள் கேட்கவில்லையாம்.

இக்குழந்தை குறித்து டாக்டர் மரியா தெரசா அகோரஸ் கூறுகையில், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன், சரியான எடையுடன் உள்ளது என்பது மகிழ்ச்சியாக உள்ளது. விமான நிலைய ஊழியர்களே சேர்ந்து பெயரும் சூட்டியுள்ளனர் என்றார் புன்னகையுடன். அக்குழந்தைக்கு விமான நிலைய ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு புத்தாடைகளையும் வாங்கிக் குவித்து விட்டனர். மேலும் கிலுகிலுப்பை உள்ளிட்ட பொம்மைகளும் வாங்கி குழந்தையை கண்டு களித்து வருகின்றனராம்.

கடந்த ஜூலை மாதம் இதேபோல இந்தியப் பெண் ஒருவர் விமானத்தில் குழந்தை பெற்று அதை விமான டாய்லெட்டில் போட்டு கொல்ல முயற்சித்துப் பிடிபட்டார் என்பது நினைவிருக்கலாம்.

செய்தி; தட்ஸ் தமிழ்

மேல் விவரங்களுக்கு:

1. http://www.abs-cbnnews.com/lifestyle/09/14/10/netizens-mad-want-adopt-gulf-air-baby
2. Indian woman tries to flush newborn down plane toilet. Infant found stuck in the toilet after the plane landed in Amritsar, northern India, and was rushed to hospital.

வாசகர் கருத்துக்கள்:

#
20 October 2010 17:18
This is repulsive. How can people do that? This woman deserves to be flushed down the toilet of an airplane and then free-fall her way to an ocean… and splat. Perhaps then she can have an idea of what she tried to do
#
Ipstac 13 September 2010 10:04
Strange! Thought that airlines would not allow women more than seven months pregnant to fly. Wonder how did this woman manage to get on board.

“பாதை மாறிய” மனைவி கொலை: கணவன் கைது

பெ.நா.பாளையம். செய்தி: தினமலர்.

கள்ளக்காதல் கொலை நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவியை தண்ணீர் தொட்டியில் தள்ளி கொலை செய்த கணவன், போலீசிடம் தப்பிக்க நாடகமாடினார். நடிப்பு பலிக்காமல் போனதால், கைது செய்யப்பட்டார்.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கடம்பன்; இவரது மகள் கவிதாபாரதி(23). இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த அருள்மொழி(30) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது; குழந்தை இல்லை. அருள்மொழி திருப்பூரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு சாமிசெட்டிபாளையத்திலுள்ள வீட்டு தண்ணீர் தொட்டியில் கவிதாபாரதி பிணமாக கிடந்தார். வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு கீழே கிடந்தது. கவிதாபாரதியின் கழுத்தில் இருந்த எட்டு சவரன் தங்கச்செயின் காணாமல் போயிருந்தது. துடியலூர் பெண் போலீசார் வழக்கு பதிவு செய்து, கணவர் அருள்மொழியை கைது செய்தனர். திருமணமாகி ஓராண்டுக்குள் கவிதாபாரதி மர்மமான முறையில் இறந்துள்ளதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அருள்மொழி, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

கவிதாபாரதியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது; ஆண் நண்பர்கள் அதிகளவில் இருந்தனர். தினமும் இரவு நேரத்தில் அவளுக்கு மொபைல் போனில் அழைப்புகள் வரும். நீண்ட நேரம் பேசுவாள். கேட்டால் எதையாவது சொல்லி மழுப்புவாள். கோவையில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். ஆனால், அடிக்கடி அங்கு போகாமல் ஆண் நண்பர்களுடன் பைக்கில் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாள். இதனால், அவளை கொலை செய்ய தீர்மானித்து கடந்த 4ம் தேதி இரவு சாமிசெட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் கழிவறைக்கு அழைத்து சென்றேன். அங்கிருந்த தரைமட்டத் தொட்டியில் தள்ளி கொலை செய்தேன். போலீசாரை திசை திருப்ப கவிதாபாரதியிடம் இருந்த எட்டு சவரன் தங்க செயின் எடுத்து வைத்துக் கொண்டேன். என்னுடைய பைக்கை சில அடிதூரம் திருடர்கள் இழுத்து சென்றதை போல செட்-அப் செய்து நாடகமாடினேன். இருந்தாலும், போலீசார் கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு அருள்மொழி கூறினார்.

வாசகர் கருத்துக்கள்:

ராஜ் – கோவை,இந்தியா
2010-11-08 02:06:42 IST
என்ன நடக்குது இந்த கோவை ஏரியால? குழந்தை கடத்தல், கள்ள காதல், போன் காதல், காதல் ஜோடிகள் கொலை, காதலிததனால் சொந்த மகள் கொலை, மகளின் காதலன் கொலை, சைபர் குற்றங்கள், ஓடிப்போன மனைவி, இளம் மனைவியை விட்டு தலை மறைவான கணவன்…. ஏனடா மனதிற்கும், அன்பிற்கும் முக்கியத்துவம் இல்லாமல் சந்தேகங்களுக்கும் அர்த்தமற்ற சாதிக்கும் அறிவில்லாமல் இறையாய் போனது என் கொங்கு நாடு? படிப்பரிவிருந்தும் எப்போதுதான் ஜாதி என்ற சனியனையும் சந்தேகம் என்ற பேயையும் விரட்டுவர்களோ இந்த (என்) இனத்தோர் (ஈனதோர்) . வெட்கப்படுகிறேன்….
லோகு – சென்னை,இந்தியா
2010-11-08 01:01:08 IST
மாமு..நீ செஞ்சது தப்பே இல்லைடா…..