தொகுப்பு

Archive for செப்ரெம்பர், 2010

“உல்லாசத்திற்கு” இடையூறாக இருந்த குழந்தை கொலை – நாடகமாடிய தாய், கள்ளக் காதலனுடன் கைது

சிதம்பரம்: சிதம்பரம் அருகே, உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்து நாடகமாடிய தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். (செய்தி; தினமலர். செப்டம்பர் 16,2010)

(ஆனால் நம் நாட்டில் கோர்ட்டுகள் அனைத்திலும் பெண்கள் வசம் தான் குழந்தைகளின் கஸ்டடியை கொடுப்பார்கள். ஏனெனில் ஆண்கள் குழந்தைப் பாசமே இல்லாதவர்களாம்; குழந்தைகளை கொடுமைப் படுத்துவார்களாம்; ஆனால் பெண்கள் மட்டும்தான் குழந்தைகளை பாசத்துடன் வளர்ப்பார்களாம்! ஆண்களாகிய நீங்களே சொல்லுங்கள், உங்களுக்கு குழந்தைப் பாசமே கிடையாதா? ஏன் நம் நாட்டு கோர்ட்டுகள் இப்படி ஒருதலைப் பட்சமான தீர்ப்புகளையே வழங்கி ஆணினத்தை வஞ்சித்து வருகின்றன? இதைக் கேட்பாரே இல்லயா?!)

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த அரியூரைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி இன்பநிலா (28). இருவரும் சென்னையில் கட்டட வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு வயதில் தமிழ்ச்செல்வன் என்ற குழந்தை இருந்தது. கடந்த 10 மாதத்திற்கு முன், பாபு இறந்து விட்டார். தனது இரண்டு வயது குழந்தையுடன் சென்னையில் தங்கி, சித்தாள் வேலை செய்து வந்தார் இன்பநிலா. அப்போது, உடன் வேலை செய்த சிதம்பரம் அடுத்த கீழகுண்டலபாடி சந்துரு (எ) பாலச்சந்துருவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். கடந்த மாதம் பாலச்சந்துரு, இன்பநிலாவிடம் அரை சவரன் நகையை வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு வந்தவர், சென்னைக்கு செல்லவில்லை.

நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தனது குழந்தையுடன் இன்பநிலா சிதம்பரம் வந்து பாலச்சந்துருவை சந்தித்து பேசினார். அப்போது பாலச்சந்துரு அரை சவரன் நகையை கொடுத்து பண்ருட்டியில் தங்கச் சொல்லி பஸ் ஏற்றி விட்டு தான் சொந்த ஊருக்கு சென்றார். இன்பநிலா, பண்ருட்டிக்கு செல்லாமல் சிதம்பரம் கஞ்சித்தொட்டி பஸ் நிலையத்தில் இறங்கி மீண்டும் பாலச்சந்துருவை தேடி வேளக்குடிக்கு சென்றார்.

பின், இருவரும் மது அருந்திவிட்டு கொள்ளிடக்கரை ஆற்றில் உல்லாசமாக இருந்தபோது, குழந்தை அழுதுள்ளது. ஆத்திரத்தில் குழந்தையை எட்டி உதைத்ததும், குழந்தை மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்துள்ளது. பின், பாலச்சந்துரு, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இன்பநிலா நடந்த சம்பவத்தை மறைத்து நாடகமாடி மருத்துவமனையில் சேர்த்தார். அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து இன்பநிலா, அவரது கள்ளக்காதலன் பாலச்சந்துரு ஆகிய இருவரையும் கைது செய்தனர். நாடகமாடிய கல்நெஞ்சக்காரி தனது இன்பத்திற்கு இடையூறாக இருந்த குழந்தையை கல்நெஞ்சத்தோடு கொலை செய்துவிட்டு இன்பநிலா நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

போலீசாரிடம் இன்பநிலா கூறுகையில், “கணவரிடம் ஏற்பட்ட தகராறில் பெங்களூரில் இருந்து கோபத்தோடு புறப்பட்டு, என்னோடு வேலை பார்த்த வல்லம்படுகை வசந்தியை பார்க்க குழந்தையோடு வந்தேன். வழி தெரியாமல் வேளக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், வழி காட்டுவதாகக் கூறி என்னை அழைத்துச் சென்றனர். ஆள் அரவமற்ற புதர் மறைவில் சென்றபோது, என்னை இறக்கிவிடுமாறு கூச்சலிட்டேன். என்னை கற்பழிக்க முயன்றனர். அப்போது குழந்தை அழுததால் கால்களை பிடித்து தரையில் அடித்து கொன்று, என்னை கற்பழிக்க முயன்றனர்’ என்றார். போலீசாரின் முறையான விசாரணையில் பெற்ற மகனையே கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. கல்நெஞ்சம் படைத்த இன்பநிலா, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

Advertisements

கணவன் கொலை : மனைவி உட்பட 5 பேருக்கு ஆயுள்

திருப்பூர் : கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்த மனைவி உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் விரைவு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் தொட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கவிதா. செல்வராஜ், முத்துக்குமார் என்பவருடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கவிதாவுக்கும் முத்துக்குமாருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் இணைந்து கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி செல்வராஜை கொலை செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் விரைவு கோர்ட் எண் 5 ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், கொலையில் தொடர்புடைய கவிதா, முத்துக்குமார், ராஜா, சிவா மற்றும் முருகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72275

காதலர்களை மாற்றினார் மகள் : விஷ ஊசியால் கொன்றார் தந்தை

Girl who shuffled lovers killed by fatherமதுரை : மகள் அடிக்கடி காதலர்களை மாற்றியதால், குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என கருதிய தந்தை, விஷ ஊசி போட்டும், மருந்து கொடுத்தும் 18 வயது மகளை கொலை செய்தார். இதற்கு உடந்தையாக இருந்ததாக, அரசு மருத்துவமனை ஊழியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை எஸ்.எஸ்.காலனி, ராமநாதன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி(47). பை-பாஸ் ரோட்டில் டிராக்டர் ஒர்க்ஷாப் நடத்துகிறார். இவருக்கு மனைவி லட்சுமி, இரு மகன்கள், மகள் மாரிச்செல்வி(18) உள்ளனர். மகள் பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.நேற்று முன்தினம் மதியம், மாரிச்செல்வி விஷம் குடித்ததாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தார். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரித்தனர். அப்போது, தாயார் லட்சுமி, “எங்களது ஒர்க்ஷாப்பில் வேலை செய்த அலங்காநல்லூர் கோட்டைமேட்டைச் சேர்ந்த மூர்த்தியுடன்(24) வந்த இரண்டு பேர், காலில் விஷ ஊசி போட்டதாகவும், காதில் மருந்து ஊற்றியதாகவும் என் மகள் தெரிவித்தாள். மூர்த்தியிடம் விசாரித்தால் உண்மை தெரியவரும்’ என்றார்.மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, மாரிச்செல்வி கொலையில், தந்தை ரங்கசாமிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கொலைக்கான பின்னணி:

சில ஆண்டுகளாகவே மாரிச்செல்வி ஒருவரை காதலிப்பதும், பின் வேறு ஒருவரை காதலிப்பதுமாக இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்புகூட, ஒரு காதலர் மாரிச்செல்வி வீட்டிற்கே வந்து, திருமணம் செய்து வைக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். எஸ்.எஸ்.காலனி போலீசார் தலையிட்டு, அந்த நபர் மீது, “பெட்டி கேஸ்’ போட்டு அனுப்பினர். உடனடியாக மாரிச்செல்விக்கும், தாய்மாமன் மோகனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே மோகன், கம்பி கட்டும் தொழிலுக்காக சிங்கப்பூர் சென்றார். அதுவரை சென்னை வடபழநியில் உள்ள சகோதரர் மாரிமுத்து வீட்டிற்கு, மாரிச்செல்வியை, ரங்கசாமி அனுப்பி வைத்தார். அங்கும் ஒருவரை காதலித்த மாரிச்செல்வி, மொபைல் போன் ஒன்றை காதலனுக்கு பரிசாக அளித்தார். இதையறிந்த மாரிமுத்து கண்டித்ததால், மாரிச்செல்வி மாயமானார். வடபழநி போலீசில் புகார் செய்யப்பட்டது.அவர், கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவரை அழைத்துக் கொண்டு கடந்த 15ல் பெற்றோர் மதுரை திரும்பினர்.

மாரிச்செல்விக்கும், மோகனுக்கும், நாளை நெல்லை மாவட்டம் தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கிடையே, மோகனின் செயல்பாடுகள், ரங்கசாமிக்கு திருப்தி அளிக்கவில்லை. அவருக்கு திருமணம் செய்து வைத்தாலும், மகளின் காதல் தொடரும் எனக்கருதி, அவரை கொலை செய்ய முடிவு செய்தார். ஒர்க்ஷாப்பில் பணிபுரியும் மூர்த்தியின் உதவியை நாடினார். அவர், தனது நண்பர்களான பரவையில் உள்ள குளிர்பான நிறுவனத்தில் பணிபுரியும் வேல்முருகன்(35), அரசு மருத்துவமனை கம்பவுண்டர் பாலமுருகனை(41), ரங்கசாமிக்கு அறிமுகம் செய்து வைத்தார். நால்வரும் அடிக்கடி சந்தித்து, எப்படி கொலை செய்வது என ஆலோசித்தனர்.

கொலை நடந்தது எப்படி? கடந்த 23ம் தேதி, விஷ ஊசி போட்டு, கொலை செய்ய முடிவு செய்தனர். திருமண செலவிற்காக வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வரும்படி மனைவி லட்சுமி, மகன் சண்முகராஜாவை, ரங்கசாமி அனுப்பினார். பின், வேல்முருகன், பாலமுருகனை “ஏசி’ மெக்கானிக் என்று கூறி வீட்டுக்கு அழைத்து வந்தார். மூர்த்தியும் உடன் இருந்தார். கொலை செய்ய ஆயத்தமாவதற்குள், லட்சுமி, சண்முகராஜாவும் வீடு திரும்பியதால், கொலையாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தற்கொலை “நாடகம்:நேற்று முன்தினம் மீண்டும் வங்கிக்கு மனைவி, மகனை அனுப்பிய ரங்கசாமி, மாரிச்செல்வியிடம் “வீட்டை முன்பக்கம் பூட்டிக்கொள். பின்பக்கம் திறந்து வைத்திரு. “ஏசி’ மெக்கானிக் வருவர்’ எனக் கூறி, வெளியே கிளம்பினார். சிறிது நேரத்தில், மூர்த்தி உட்பட மூன்று பேர் வந்தனர். “ஏசி’யை சரிசெய்வது போல் நடித்த அவர்கள், மாரிச்செல்வி வாயை பொத்தி, படுக்க வைத்தனர். காலில் விஷ ஊசி போட்டனர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, வாய், காதில் பூச்சிமருந்து ஊற்றினர். சிறிது நேரத்தில் மாரிச்செல்வி மயக்கமடைந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி, மூவரும் வெளியேறினர்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த மாரிச்செல்வி சத்தம் போட, அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். ஒன்றும் அறியாதது போல் ரங்கசாமியும் ஓடி வந்தார். அந்த நேரத்தில் வங்கியிலிருந்து மனைவியும், மகனும் வர, மூர்த்தி உட்பட மூன்று பேர் விஷ ஊசி போட்ட விவரத்தை கூறி மாரிச்செல்வி மயக்கமடைந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதும் ரங்கசாமி உடனிருந்தார். அங்கு மாரிச்செல்வி இறந்தார். இக்கொலை வழக்கில் மாரிச்செல்வி தந்தை ரங்கசாமி,மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

செய்தி – தினமலர் ; 07-09-2010.

பெரியகுளம் : கணவனை கள்ளக்காதலன் உதவியுடன் கொலை செய்த மனைவி உட்பட ஐந்து பேருக்கு, பெரியகுளம் விரைவு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த தோப்பு காவலாளி முத்து(35). இவரது மனைவி செல்வி(32), கூலி வேலை செய்து வந்தார். இவருடன் வேலை செய்யும் முருகேந்திரனுடன்(35), செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. முத்து கண்டித்தும், கள்ளக்காதல் தொடர்ந்தது. இதற்கு இடையூறாக இருக்கும் முத்துவை கொலை செய்ய திட்டம் தீட்டினர். செல்வி ஆலோசனையின் பேரில், 2007 நவ., 9ல் முருகேந்திரன், இவரது நண்பர்கள் வீரணன்(35) ரஞ்சித் (30) செந்தில் (27) ஆகியோர் முத்துவை, சமரசம் பேசுவதற்கு சுருளிப்பட்டி அருகே சிறுகுளம் கண்மாய்க்கு அழைத்துச் சென்றனர். அங்கு அனைவரும் மது குடித்தனர். போதையில் இருந்த முத்துவை, நான்கு பேரும் சேர்ந்து குளத்தில் கிடந்த தண்ணீரில் அமுக்கி கொலை செய்தனர். கம்பம் தெற்கு போலீசார் ஐந்து பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பெரியகுளம் விரைவு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்துவந்தது. நேற்று விரைவு கோர்ட் நீதிபதி ராஜசேகர் தீர்ப்பு வழங்கினார். இதில், முருகேந்திரன், வீரணன், ரஞ்சித், செந்தில், செல்வி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல்கள் குணசேகரன், சுரேஷ்குமார் அஜராகினர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வாலிபர் கொலை: நான்கு பேர் கைது

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வாலிபரை கொலை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபாளையத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் வெங்கடேசன்(28). இவரது மனைவி சுந்தரி(25). இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. வெளிநாட்டில் பணிபுரிந்த வெங்டேசன், கடந்த ஜனவரி மாதம் ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 6ம் தேதி காலை மாதவச்சேரி அருகே ஒரு வயலில் கழுத்தில் ரத்த தழும்புடன் வெங்கடேசன் இறந்து கிடந்தார். வெங்கடேசன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சுந்தரி கொடுத்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று காலை வடக்கனந்தல் வி.ஏ.ஓ., தங்கவேல் முன்னிலையில் இவ்வழக்கு தொடர்பாக வெங்கட்டாம்பேட்டை செம்மலை(27) பெருமாள்(38) முத்து(55) ஏர்வாய்பட்டினம் சிவராம்(40) ஆகிய நான்கு பேரும் சரணடைந்தனர். பின், கச்சிராயபாளையம் போலீசில் இவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில், செம்மலைக்கும், வெங்கடேசன் மனைவி சுந்தரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த வெங்கடேசன், மனைவி சுந்தரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், கள்ளக்காதலை துண்டித்துக் கொள்ளுமாறு செம்மலையிடம் சுந்தரி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த செம்மலை கடந்த 5ம் தேதி இரவு தனது கூட்டாளிகள் பெருமாள், முத்து, சிவராம் ஆகியோருடன் சேர்ந்து வெங்கடேசனை மது அருந்த அழைத்துச் சென்றார். பின், அவரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து, வயல்வெளியில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, கச்சிராயபாளையம் போலீசார், வழக்கில் தொடர்புடைய செம்மலை, பெருமாள், முத்து, சிவராம் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

கொலை கேசுகளில் செல்ஃபோன் மூலம் கிட்டுவது கள்ளக்காதல் ஆங்கிள்!

kallak kadal kolaiதிருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் – கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் அன்பு தண்டபாணி, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால், சீதாலட்சுமி, 5ம் தேதியே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்து விசாரணையை துவக்கினர்.

அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடினர். கொலையுண்ட சீதாலட்சுமியின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை துவங்கியது. ஆரம்பத்தில் குழம்பிய போலீசாருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த விவரங்கள் விசாரணையை வேகப்படுத்தியது. சீதாலட்சுமி போனுக்கு, ஆக., 5ம் தேதி காலை முதல் மாலை 6.00 மணி வரை ஒரே எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்துள்ளது; அந்த எண்ணுக்குரிய நபரின் முகவரி குறித்து விசாரித்தனர். அந்த எண், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரமேஷ் என்பது தெரிந்தது. போலீசார், ரமேஷ் வீட்டுக்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதே, ஆகஸ்ட் 5ம் இரவு 10.00 மணிக்கு தன் நண்பர் மாதேஷ் உடன் பைக்கில் சென்ற ரமேஷ், அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. அவினாசி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர். விபத்தில் பலியான ரமேஷுக்கும், கொலையான சீதாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை துவங்கியது.

விபத்தில் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதேஷிடம், போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஆனால், விசாரணையில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க முடியாதவாறு மாதேஷ், கோமா நிலைக்கு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார், சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில் விசாரித்தனர். அதில், பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகின.

கள்ளத்தொடர்பு அம்பலம்: கொலையான சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில், லேபர் கான்ட்ராக்டராக ரமேஷ் பணியாற்றியுள்ளான். ஓராண்டாக காதலித்த இருவரும், ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றியுள்ளனர். ரமேஷை தன் கணவனாகவே பாவித்த சீதாலட்சுமி, அவனின் தங்கை திருமணத்துக்கு பணமும், செலவுக்கு தன் நகைகளையும் கொடுத்துள்ளார். ரமேஷ் வீட்டில், அவனுக்கு பெண் பார்க்கத்துவங்கியதும் சீதாலட்சுமியை கழற்றி விட திட்டமிட்டான். பல நேரத்தில் இதுகுறித்து ரமேஷ் பேசியபோது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சீதாலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்ட ரமேஷ், ஆகஸ்ட் 5ம் தேதி அவளை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி, பொங்குபாளையம் – கணக்கம்பாளையம் ரோட்டுக்கு அழைத்துச் சென்றான். பொங்குபாளையம் – கணக்கம்பாளையத்தில் உள்ள பழனிசாமி தோட்டம் பகுதிக்கு அழைத்து வந்தான். அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கத்தியால், அன்று இரவு 7.45 மணிக்கு அவளது வயிறு மற்றும் கழுத்தில் குத்தியுள்ளான். அவள் இறந்ததை உறுதிப்படுத்தி விட்டு, அங்கிருந்து வீட்டுக்குச் சென்றான். கொலை செய்தபோது அணிந்திருந்த சட்டையை கழற்றி, பைக்கில் வைத்து விட்டு, வேறு சட்டையை அணிந்து புறப்பட்டான். அவினாசி ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் ரத்தக்கறை படிந்த சட்டையை போட்டான். பின், நண்பர்கள் ஜெயராஜ், செல்வமணி, மாதேஷ் ஆகியோருடன் மதுக்கடைக்குச் சென்று மது குடித்துள்ளான். அங்கிருந்து மாதேஷை மட்டும் ஏற்றிக் கொண்டு, தெக்கலூர் சென்றபோது, அவினாசி – ஆட்டையாம் பாளையம் அருகே லாரி மோதி இறந்தான்.

இவ்வழக்கு குறித்து அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி கூறியதாவது: ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த இருவரும் பழகி, பல ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவ்வப்போது சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்ற ரமேஷ், நகைகளை வாங்கி அடமானம் வைத்து செலவு செய்துள்ளான். கொலை நடந்த அன்று காலை கூட, திருப்பூரில் உள்ள பிரபல வங்கிக்குச் சென்று பணம் எடுத்துள்ளான். இதை வங்கியில் உள்ள கேமரா மூலம் உறுதிப்படுத்தினோம். அவன் அணிந்திருந்த சட்டையை ரத்தக்கறையுடன் குப்பை தொட்டியில் இருந்து கைப்பற்றினோம். கொலை நடந்த ஆகஸ்ட் 5ம் தேதியும், அதற்கு முந்தைய ஒரு வாரத்திலும் சீதாலட்சுமி தன் மொபைல் போனில் இருந்து ரமேஷ் எண்ணை தவிர வேறு யாருக்கும் போன் செய்யவில்லை. ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் இருந்து மாலை வரை இருவரும் 900 வினாடி, 1,500 வினாடி, 700 வினாடி என்று இடைவிடாமல் பேசி உள்ளதும் தெரிந்தது. ரமேஷை கணவன் போல் எண்ணி வாழ்ந்த சீதாலட்சுமிக்கு, அவன் திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லை. கூடுமானவரைக்கும் சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷûக்கு, அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்த வெறுப்பு கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.

கொலை நடந்த இரவு 7.02 மணி முதல் 8.00 மணி வரை ரமேஷûக்கு, அவனது நண்பர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. இரவு 8.15 மணிக்கு, “மிஸ்டு காலில்’ இருந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு ரமேஷ் பேசியுள்ளான். அதன் பிறகே நண்பர்களுடன் குடித்து விட்டு, பைக்கில் சென்று லாரியில் மோதி இறந்தான். கள்ளக்காதலி சீதாலட்சுமியை கொலை செய்த ரமேஷ், அடுத்த இரண்டரை மணி நேரத்தில் விபத்தில் இறந்தது ஆச்சரியமாகவே உள்ளது. இவ்வாறு டி.எஸ்.பி., பழனிசாமி கூறினார்.

அன்றே கொன்ற தெய்வம்: “அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்’ என்பது பழமொழி. ஆனால், ரமேஷ் – சீதாலட்சுமி விஷயத்தில், இது மாறி விட்டது. கணவனுக்கு துரோகம் இழைத்த சீதாலட்சுமி கொலையான இரண்டரை மணி நேரத்தில் நடந்த விபத்தில் ரமேஷ் உடல் நசுங்கி இறந்துள்ளான். கள்ளக்காதலுக்கு உதவிய ரமேஷின் நண்பன் மாதேஷ், சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி இறந்து விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி; தினமலர்

தாலி கட்டிய மறுநாளே கணவருக்கு “அல்வா’ : கள்ளக்காதலனுடன் “ஜூட்’

கடலூர் : செப்டம்பர் 01,2010: செய்தி – தினமலர்

Marriage is a farse in Indiaதிருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, கள்ளக்காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை சினிமாவிற்கு அழைத்துச் சென்றால் மனம் விட்டு பேசுவாள் என, கூறினார். அதன்படி ரமேஷ், புவனேஸ்வரியுடன் கடலூர் வேல்முருகன் தியேட்டரில் , “வம்சம்’ படம் பார்க்கச் சென்றார்.

காலைக் காட்சி முடிந்து வெளியே வந்ததும் புவனேஸ்வரி, தியேட்டர் முன் பைக்குடன் நின்றிருந்த இருவரைக் காண்பித்து, “எனது நெருங்கிய உறவினர்கள்’ என, ரமேஷிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரும் இருவரிடமும் நலம் விசாரித்தார். பின் புவனேஸ்வரி, “நான் உறவினருடன் பைக்கில் பேசிக் கொண்டே வருகிறேன். நீங்கள் அந்த பைக்கில் வாருங்கள்’ எனக் கூறி மற்றொரு பைக்கை காண்பித்தார். அதனை நம்பிய ரமேஷ் ஒரு பைக்கிலும், புவனேஸ்வரி மற்றொரு பைக்கிலும் வீட்டிற்கு புறப்பட்டனர். புவனேஸ்வரியை ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற பைக் சிறிது தூரத்தில் ரமேஷின் பார்வையிலிருந்து மறைந்தது.

ரமேஷை ஏற்றிச் சென்றவர் திடீரென பைக்கை நிறுத்தி, “இங்கேயே நில்லுங்கள். இதோ வந்து விடுகிறேன்’ எனக் கூறிவிட்டு மாயமானார். வெகு நேரம் காத்திருந்த மாப்பிள்ளைக்கு சந்தேகம் வரவே, தனது மொபைல் போனில் வீட்டிற்கு பேசலாம் என பார்த்தபோது, யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அனைத்து எண்களும் அழிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் சாலக்கரையில் வீட்டிற்குச் சென்று பார்த்த போது தான், தன் மனைவி சினிமா தியேட்டரில் தனது மொபைல் போனை வாங்கி அனைத்து எண்களையும் திட்டமிட்டு அழித்தது தெரிந்தது. உறவினர் எனக்கூறி பைக்கில் வந்தவரை அறிமுகம் செய்து வைத்தது அவரின் காதலன் என்ற தகவலை அறிந்த ரமேஷ் நிலைகுலைந்தார். பெண்ணின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரியைத் தேடி வருகின்றனர்.