தொகுப்பு

Archive for பிப்ரவரி, 2010

அபலை அமலாவின் கைவண்ணம்

இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்த அபலை அமலா!

பிப்ரவரி 15,2010. தினமலர்

இரு சிசுக்களை கொலை செய்த அமலாநாமக்கல் : தன் குழந்தைகள் மீது கணவர் பாசத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு பிறந்த ஒரு குழந்தை, தத்தெடுத்த குழந்தை என இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

நாமக்கல் எஸ்.பி.எம்., பங்களாவில் வசித்து வருபவர் நேரு (43); தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், சரஸ்வதி என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், திருச்சியில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்து சக்திவேல் (8) என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்நிலையில், சரஸ்வதிக்கு ஷாலினி என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில ஆண்டில் சரஸ்வதி இறந்தார். அதை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாவட்டம் எம்.களத்தூரை சேர்ந்த அமலா (23) என்ற பெண்ணை, நேரு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ராகவி (3), கவின் (2) என இரண்டு குழந்தைகள் பிறந்தன.

கணவர் நேரு தனது முதல் மனைவியின் குழந்தையிடமும், தத்தெடுத்த மகனிடமும் அதிக அளவில் பாசம் வைத்திருந்தார். மேலும், அவர்கள் பெயரில் கணிசமான அளவு பணமும் டிபாசிட் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அமலா, “குழந்தைகளை கொன்று விட்டால் தனது கணவர் தனது குழந்தைகளிடம் பாசம் காட்டுவார்’ என எண்ணி அதை செயல்படுத்த முடிவு செய்தார்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு நேரு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல், ஷாலினி ஆகியோரை ஒன்றன்பின் ஒன்றாக, வீட்டுக்குள் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து அமலா கொலை செய்தார். “யாருக்கும் தன்மேல் சந்தேகம் வரக்கூடாது’ என்பதற்காக தனது குழந்தை கவினை தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்வதாக கூறிச் சென்றுவிட்டார்.

காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்த அமலா, வீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் தொட்டியில் குழந்தை இறந்து கிடப்பதாக தனது கணவர் நேருவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதற்குள் செய்தி பரவியதை அடுத்து அக்கம் பக்கத்தில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த தாசில்தார் குப்புசாமி, எஸ்.ஐ.,க்கள் சுப்ரமணி, லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அமலா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது.

அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மேற்கண்ட உண்மை வெளியானது. அதை தொடர்ந்து அமலாவை, போலீசார் கைது செய்தனர். சித்தி, இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

இளம் ஆண்பிள்ளைகளை கற்பழிக்கும் வெறி பிடித்த பெண்மணிகள்

Sexual harassment of men at workplaceஒரு காமுகன் இளம் பெண்ணின் கையைத் தொட்டுப் பேசினான் – அவன் கையை வெட்டு!

இன்னொரு காமாந்தகாரன் சொல்லால் சீண்டி பலாத்காரம் செய்தான் – தூக்கில் போடு அவனை!

பல மாதங்கள் கண்டவனுடன் சுற்றி உல்லாசம் அனுபவித்த பெண்ணை பல லாட்ஜ்களில் அந்தப் பெண் அவனைத் தேடிச் சென்றபோதெல்லாம் மீண்டும் மீண்டும் அவன் கற்பழித்தான் – கைது செய்து சிறையிலடை அவனை!

காஞ்சீபுரம் தேவனாதனைத் தேடிச் சென்ற பெண்களையெல்லாம் சீரழித்தான் சண்டாளன். அவன் அப்பெண்களின் நாக்கிலும் மூக்கிலும் ஏதோ தடவி திரும்பத் திரும்ப கற்பழித்தான் ஒரு பாவமும் அறியாத அந்த அப்பாவி அபலைப் பெண்களை. அவர்களுக்கு இப்போதுதான், அதாவது சிடிக்கள் வெளிவந்த பிறகுதான், நினைவுக்கு வந்தது அந்தத் தடவல்களெல்லாம் – அவன் கண்ணில் படும்போதெல்லாம் கையில் கிடைத்ததைக் கொண்டு அடி!

இப்படித்தான் மக்களின் உணர்ச்சிகள் கிளர்ந்தெழுகின்றன. அவை சொற்களாலும் செயல்களாலும் வெளிப்படுகின்றன.

சரி. தங்கள் வாழ்வுக்கு வழிதேடி செக்யூரிடி வேலையில் சேரும் ஏழை இளம் ஆண்களை தங்கள் வெறிக்குத் தீனியாகப் பயன்படுத்தி கசக்கி உமிழும் இந்த மேட்டுக் குடிப் பெண்குலத் திலகங்களை என்ன செய்வது? எந்தவித தண்டனைகளை இவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நீங்களே சொல்லுங்கள். நீங்கள் எல்லோரும் நடுநிலையாளர்கள் அல்லவா!

செய்தி: நன்றி – குமுதம் ரிப்போர்ட்டர் 11-02-2010 இதழ்.

Rape of young boys by rich women

Hot rich women seducing and raping young boys

இளைஞர்களைக் கசக்கி கற்பழிக்கும் வெறி பிடித்த மேட்டுக்குடிப் பெண்மணிகள்

ஆதலினால் காதல் செய்வீர், ஆண்களே!

Farse called loveகாதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: கோர்ட்டு வளாகத்தில் கடத்தப்பட்ட புதுப்பெண்ணை போலீஸ் மீட்டது
மனைவி தன் பெற்றோருடன் வாழப்போவதாக கூறியதால் கணவர் கண்ணீர் விட்டு கதறல்

புதுச்சேரி, பிப்.11 – 2010. செய்தி – தினத்தந்தி

புதுச்சேரி அருகேயுள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தனஞ்செயம், டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருடைய தூரத்து உறவினர் சிவகாமி. இவர் புதுச்சேரி கவுண்டன்பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் தவசெல்வி (வயது 20).

உறவினர் என்பதால் தனஞ்செயம், தவசெல்வி இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதனால் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி காதல் பறவைகள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பதிக்கு சென்றனர். அங்கு தனஞ்செயம்-தவசெல்வி திருமணம் செய்து கொண்டனர்.

கோர்ட்டில் ஆஜர்

பின்னர் அவர்கள் கடலூர் வந்து பதிவு திருமணம் செய்தனர். இந்த நிலையில் மகளை காணவில்லை என்று சிவகாமி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தேடுவதை அறிந்த காதல் ஜோடியினர் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி கோர்ட்டுக்கு சென்றனர்.

2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோகுலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர் ஆனார்கள். அப்போது தாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதனை கோர்ட்டில் சரி பார்த்தனர். அந்த வேளையில் தவசெல்வி தனது காதல் கணவர் தனஞ்செயத்துடன் கோர்ட்டு வராண்டாவில் நின்று கொண்டு இருந்தார்.

பரபரப்பு

இந்த நேரத்தில் தவசெல்வியின் சித்தப்பா கோவிந்தன் தலைமையிலான கும்பல் அங்கு வந்தது. அவர்கள் தவசெல்வியை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது. இதனை தடுக்க முயன்ற தனஞ்செயன் உறவினர்களை அந்த கும்பல் தாக்கியது. பின்னர் கோர்ட்டுக்கு வெளியே வந்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தவசெல்வியை கடத்தி சென்றது.

இந்த சம்பவத்தால் கோர்ட்டு வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

தனிப்படை

இந்த நிலையில் கடத்தல் கும்பல் திருசிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

உடனே தனிப்படை போலீசார் நேற்று காலை அங்கு விரைந்து சென்று கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து புதுப்பெண் தவசெல்வியை போலீசார் மீட்டனர். இதைத்தொடர்ந்து கோவிந்தன், ஜீவா, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்பு புதுப்பெண் தவசெல்வி மற்றும் கைதான 3 பேரும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

15 நாள் காவல்

தவசெல்வியிடம் விசாரணை நடத்திய போது, தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை. தனது சித்தப்பா அழைத்ததால் சென்றதாக கூறினார். இதை தொடர்ந்து கோவிந்தன், ஜீவா, மணிகண்டன் ஆகியோரை புதுச்சேரி இரண்டாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

கைதான 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு கோகுலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதன் பேரில் அவர்கள் காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

புதுப்பெண் பல்டி

இதையடுத்து புதுப்பெண் தவசெல்வி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது தாய் மற்றும் அவரது குடும்பத்தினர், தனஞ்செயம் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு நின்று கொண்டு இருந்தனர். பின்பு மாஜிஸ்திரேட்டு கோகுலகிருஷ்ணன், தவசெல்வியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை. குடும்பத்தினரை பார்க்க சித்தப்பாவுடன் சென்றேன். தாயுடன் வாழ விரும்புகிறேன் என்று தவசெல்வி கூறினார்.

இதை கேட்ட தனஞ்செயம் (கணவன்) கதறி அழுதார். பின்பு சிறிது நேரம் கழித்து அவர் தனியாக வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். (வேறென்ன வழி அவனுக்கு? இதையே அந்தக் கணவன் செய்திருந்தால் அவனைக் கைது செய்து சிறையிலடைத்திருப்பார்கள்!)
—–

வெட்கமில்லாமல் இந்த ஆண்கள் இன்னமும் காதல் கத்தரிக்காய் என்று அலைகிறார்களே, அவர்களுக்கு புத்தி வர இன்னும் பல நிகழ்வுகள் இதுபோல் தொடர்ந்து நடக்கவேண்டும்!

ஆணெதிர்ப்பு மனப்பான்மை பெண்களையும் பாதிக்கும்

நம் சமுதாயத்தில் ஆண் என்றாலே ஒரு அயோக்கியன், காமுகன், கண்ட பெண்களையெல்லாம் கற்பழிப்பவன், மனைவியைக் கொடுமைப் படுத்துபவன், வரதட்சணைக்காக கட்டிய மனைவியைக் கொடுமை செய்து உயிரோடு எரித்து படுகொலை செய்பவன், ஆனால் அனைத்துப் பெண்களும் ஒழுக்க சீலர்கள், அபலைகள், ஒரு பாவமும் அறியாதவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரே நேர்கோட்டில் அமைந்த மனப்பாங்கு வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சட்டங்கள் இற்றைப்படுத்தப்பட்டு, அவற்றின் செயல்பாடுகளால் இன்றையதினம் ஆணாகப் பிறப்பதே கொடுமை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பிறவியிலேயே ஆண் என்பவன் ஒரு கிரிமினல் என்னும் கருத்தியல் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஊடகங்களால் சித்தரிக்கப்படுகின்றன.

ஒரு பெண் ஒரு ஆணுடன் பல நாட்கள் ஊர் ஊராக, லாட்ஜ் லாட்ஜாக சுற்றி “உல்லாசம்” அனுபவித்துவிட்டு, அதனால் ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொண்டாலோ, அல்லது அவனிடமிருந்து பணம் கறக்கவோ “அவன் என்னை கற்பழித்துவிட்டான்” என்று புகார் கொடுத்தால், ஒருவித விசாரணையோ முகாந்திரமோ இல்லாமல் அந்த ஆணை கைது செய்து சிறையிலடைத்துவிடுகிறார்கள். Consensual sex is converted into a charge of rape at the sole whim of the woman partner of cohabitation.அதோடு மடுட்மல்லாமல் அத்தகைய வழக்குகள் விசாரணைக்கு வரும்போது நீதிமன்றங்கள் அந்தப் பெண்ணின் கூற்றே போதும், வேறு எந்தவித சாட்சியங்களே தேவையில்லை என்று அறுதியிட்டுக் கூறி அந்த ஆண்மகனுக்கு தண்டனை அளித்துவிடுகிறார்கள்.

பொய் வரதட்சணை புகார்கள், பொய் குடும்ப வன்முறைப் புகார்கள், பொய் கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்காரப் புகார்கள் போன்றவற்றால் இன்றைய நிலையில் நம் சமூகத்தில் ஒரு பெண்ணிடம் ஊடாடுதல், பழகுதல் என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் ஒரு பாம்புப் புற்றில் கைவிடுவதற்குச் சமம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஆண் மகனைப் பெற்ற பெற்றோர்கள அனைவரும் தங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.

இந்த நிலை நீடித்தால், நம் நாட்டில் ஒரு ஆணுக்கு திருமணம் செய்விப்பதற்கு முன் அந்த ஆணும் அவனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் அனைவரும் கட்டாயம் முன் ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் நிலையும், அதன் நீட்சியாக ஆண்சிசுக் கொலைகளும் பரவலாக நிகழும் நாள் சீக்கிறமே தோன்றும் என்பது திண்ணம்!

சரி, இத்தகைய ஆண்களை வதைப் படுத்தும் போக்கால் அந்தப் பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன?

இதோ இந்தக் கதையைப் படியுங்கள். நேரடித் தொடர்பு இல்லையென்றாலும் அத்தகைய மனப்பான்மையின்பால் விளைந்த பாதிப்புகளை நீங்கள் அவதானிக்கலாம்.

“மன அழுத்தம் காரணமாக பொய் சொல்கிறார். நடிகை கனகாவுக்கு திருமணமே நடக்கவில்லை”
தந்தை தேவதாஸ் பேட்டி

சென்னை, பிப்.9 – 09-02-2010. தினத்தந்தி

நடிகை கனகாவுக்கு திருமணமே ஆகவில்லை. மன அழுத்தம் காரணமாக, அவர் பொய் சொல்கிறார் என்று அவருடைய தந்தை தேவதாஸ் கூறினார்.

திடீர் பேட்டி

நடிகை கனகா, லாஸ் ஏஞ்சல்சில் மெக்கானிகல் என்ஜினீயராக இருந்த முத்துக்குமார் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணம் ஆன 15-வது நாள் அவர் காணாமல் போய்விட்டதாகவும் திடீர் பேட்டி அளித்தார்.

தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதாகவும், தன் கணவர் காணாமல் போனதில் ஆவி அமுதாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

தந்தை பேட்டி

இதுபற்றி கனகாவின் தந்தை தேவதாசை நிருபர்கள் சந்தித்து கேட்டபோது, அவர் மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது:-

“கனகாவுக்கு பதிமூன்று வயதாகும்போது, நான் அவளுடைய தாயார் தேவிகாவை விட்டு பிரிந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவர்களை நான் பார்க்கவே இல்லை. 18 வருடங்கள் கழித்து கனகாவை சந்தித்து பேசினேன்.

“உனக்கு திருமண வயதாகி விட்டது. திருமணம் செய்துகொள்” என்று கூறினேன். ஒரு பெண் தாய்மை அடைந்தால்தான் அவள் வாழ்க்கை முழுமை அடையும். நீ தாயானால்தான் நான் தாத்தா ஆக முடியும் என்றெல்லாம் பேசியபின், திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதித்தாள். நீங்களே மாப்பிள்ளை பாருங்கள் என்றாள்.

மன அழுத்தம்

இது, நடந்தது 2008-ம் ஆண்டு. ஆனால், 2007-ம் ஆண்டு தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக இப்போது கூறுகிறாள். திருமண ஆல்பம் எங்கே? என்று கேட்டால், இதுதான் என்று ஒரு கிழிந்த பேப்பரை காட்டுகிறாள். அதில், உருவமே தெரியவில்லை.

கனகா, மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறாள். ஒரு தந்தை என்ற முறையில் அவள் மீது அனுதாபப்பட்டு, “நீ என்னுடன் வந்துவிடு. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். உடனே, “எங்க அம்மா மரணத்துக்கு நீதான் காரணம்” என்று வெறிபிடித்தவள் போல் பேசுகிறாள். என்னை அவள் பேசவே விடவில்லை. அவள் பேசியதை எல்லாம் `டேப்’ செய்து வைத்திருக்கிறேன்.

ஆதாரம் இல்லை

2007-ம் ஆண்டு திருமணம் நடந்திருப்பதாக கனகா கூறுகிறாள். அதில் ஒருவேளை உண்மை இருக்குமோ என்று ஒவ்வொரு திருமண பதிவு அலுவலகமாக சென்று ஆதாரங்களை தேடினேன்.

எந்த பதிவு அலுவலகத்திலும் கனகா திருமணம் செய்துகொண்டதற்கான ஆதாரம் இல்லை. கற்பனையாக ஒரு கணவரை உருவாக்கிக்கொண்டு, மன அழுத்தம் காரணமாக கனகா பொய் சொல்கிறாள். என் மகளுக்கு என்ன ஆகுமோ என்று நினைக்கும்போது பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது.

தேவிகாவுடன்தான் எனக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை. என் மகளையாவது அழைத்து வந்து வாழ வைக்கலாம் என்று நினைத்தால், கனகா என் வீட்டுக்கு வர மறுக்கிறாள்.”

இவ்வாறு தேவதாஸ் கூறினார்.

அநியாயத்தை எதிர்த்து ஒரு மாபெரும் பேரணி

பொய் வழக்குகள் மற்றும் ஆண்களுக்கு எதிரான அநியாயங்களை எதிர்த்து 3101-2010 அன்று நாக்பூரில் நடந்த பேரணி காட்சிகள்.

KPICASA_GALLERY(username:rajeshvakharia40, NagpurMarathon2010)

போதையில் கார் ஓட்டி போலீஸ்காரரைக் கொன்றாள் பெண்

நம் நாட்டின் பெண்ணியவாதிகள் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஒரு போலீஸ் அதிகாரியை ஒரு பெண் போட்ட 498A கேசு தொடர்பாக ஆள் மாறாட்டத்தில் வெட்டித் தள்ளினார்கள். இப்போது ஒரு பெண்மணி குடிபோதையில் காரை ஓட்டி ஒரு போலீஸ் அதிகாரி உட்பட இரண்டு பேரை போட்டுத் தள்ளியிருக்கிறார்.

இதே போல் ஒரு ஆண் குடி போதையில் காரை ஓட்டி இடித்ததில் ஒரு பெண்ணின் சுண்டு விரலில் அடிபட்டிருந்தால் கூட குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்து அந்த ஆணை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்கள்!

இதுதான் உலகம்!

ஜனவரி 31,2010. செய்தி : தினமலர்

மும்பை: மது அருந்திய பெண், தான் ஓட்டி வந்த காரை, போலீஸ் ஜீப் மற்றும் பைக் ஒன்றின் மீது மோதிய விபத்தில், உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் உயிரிழந்தனர். காவலர்கள் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போக்குவரத்து துறை ஏ.சி.பி., அனில் தகால்கர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் மும்பையின் தென் பகுதியை சேர்ந்த அழகுக் கலை நிபுணரான நூரியா ஹவேலிவாலா (27), மது அருந்திய நிலையில் காரை ஓட்டி வந்தார். கட்டுப்பாட்டை இழந்த அவரது கார், போலீஸ் ஜீப் மற்றும் பைக்கின் மீது மோதியது. இதில், போக்குவரத்து துறை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தீனாநாத் ஷிண்டே மற்றும் பைக்கில் வந்த அப்சல் கனோஜியா ஆகிய இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நான்கு காவலர்களும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நூரியா ஹவேலிவாலாவை போலீசார் கைது செய்தனர். மருத்துவ சோதனையில், அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அனில் தகால்கர் கூறினார்.