தொகுப்பு

Archive for மே, 2009

போலீசாருக்கு இதுதான் வேலையா!

ஏற்கனவே அரசியல்வாதிகளுக்கு பாராஉஷார் செய்து நொந்து போயிருக்கும் போலீசாருக்கு இந்த சினிமாவைப் பார்த்து அதுபோல் காப்பி அடித்து காதல் பண்ணும் பெண்குலங்கள் கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியவில்லை.

தினசரி இதுபோல் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் “காதல் பன்ணிட்டேன், பெற்றோரை ஏமாற்றி சேர்த்து வையுங்கள்” என்று கிளம்புகிறார்கள். இல்லையெனில், “உல்லாசமாக” இன்னாருடன் இருந்தேன் (யாருடன் இருந்தாளோ!), அவனை கட்டாயப் படுத்தி கட்டி வையுங்கள் என்று ஒரு பெரிய கோஷ்டி பெண்கள்.

போலீசார் பாடு பாவம் அய்யா!

கீழ்க்காணும்ச் செய்தி இதுபோல் தினந்தோரும் வெளிவரும் டசன் கணக்கான செய்திகளில் ஒரு சாம்பிள்தான்!

திருமணத்துக்கு 2-நாட்களுக்கு முன்பு காதலன் மாயம் புறநகர் கமிஷனரிடம் காதலி புகார் ஆலந்தூர், மே. 29- 2009.

திருமணம் நடைபெற 2 நாட்கள் இருந்த நிலையில் காதலன் மாயமானதால் புறநகர் போலீஸ் கமிஷனரிடம் காதலி புகார் செய்தார். சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் ஒரு புகார் மனு தந்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

காதல் சென்னையில் உள்ள கால்சென்டரில் நான் பணிபுரிகிறேன். என்னுடன் ஒன்றாக பணிபுரியும் திருச்சியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். நாங்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் செந்தில்குமாரின் பெற்றோர் திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் செந்தில்குமார் சம்மதத்துடன் சென்னையில் 28-ந் தேதி (நேற்று) திருமணம் செய்ய முடிவு செய்து ஏற்பாடு செய்தோம். இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக செந்தில்குமார் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவர் தங்கியிருந்த விடுதியிலும் சென்று பார்த்தோம். செந்தில்குமார் திடீரென மாயமாகி விட்டார். திருமணத்திற்கு 2 தினங்களுக்கு முன்பு மாயமாகிவிட்ட செந்தில்குமாரை மீட்டு எங்கள் திருமணத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் ஜெயலட்சுமி கூறியிருந்தார்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மடிப்பாக்கம் போலீசாருக்கு புறநகர் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவிட்டார். மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சங்கரபாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கரிகாலன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் திருச்சிக்கு விரைந்தனர்.

அங்கு இருந்த செந்தில்குமாரின் தந்தையிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது செந்தில்குமார் திருச்சிக்கு வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து `திருமண ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு தலைமறைவான காதலனை திருமணம் செய்ய விருப்பம் இல்லை’ என புதுமணப்பெண் ஜெயலட்சுமி போலீசாரிடம் எழுதிக்கொடுத்து விட்டு சென்றார். காதலன் ஓடியதால் திருமணம் நின்று போனது.

Advertisements

குடுமப நல வழக்குகளில் வக்கீல் தேவையில்லை

விவாகரத்து கேட்கும் தம்பதிகள் வக்கீல் இல்லாமலே கோர்ட்டில் ஆஜராகி வாதிடலாம். தமிழிலும் மனு தாக்கல் செய்ய முடியும்.

சென்னை, மே.13- 2009. செய்தி – தினத்தந்தி

விவாகரத்து வழக்குகளில் வக்கீல் இல்லாமலே கோர்ட்டில் ஆஜராகி கணவன் அல்லது மனைவி வாதிடலாம்.

நாளொன்றுக்கு சென்னையில் விவாகரத்து கோரும் மனுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 30 முதல் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றில் 75 சதவீதம் வழக்குகள் விவாகரத்து கோரும் மனுக்களாகும். அதிகபட்சமாக ஒரே நாளில் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட வரலாறும் உண்டு.

சென்னையில் 3 குடும்பநலக் கோர்ட்டுகள் இயங்குகின்றன. ஒவ்வொரு கோர்ட்டும் 40-க்கு 25 அடி பரப்பளவில் உள்ளன. நாளொன்றுக்கு சுமார் 100 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நெரிசல் அதிகரிப்பு இந்த வழக்கு விசாரணைக்காக கணவன், மனைவி மட்டும் ஆஜரானாலே 200 பேருக்கு மேல் கோர்ட்டுக்குள் நிற்க வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது. ஆனால் இவர்கள் அனைவரும் உறவினர்களோடு வருகின்றனர். எனவே கோர்ட்டுக்குள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது.

காலையிலேயே கோர்ட்டு விசாரணை தொடங்கி விடுகிறது. எனவே வழக்கு விசாரணைக்காக அனைவரும் வெளியே செல்லாமல் கோர்ட்டுக்கு உள்ளேயே சில மணி நேரம் இருக்க வேண்டிய நிலை உள்ளது. வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் தவிர வக்கீல்களும் ஆஜராவதால் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. கூடுதல் கோர்ட்டு வருமா?

தற்போது 3 குடும்பநல கோர்ட்டுகளிலும் சேர்த்து 7 ஆயிரம் வழக்குக் கோப்புகள் நிலுவையில் உள்ளன. வழக்கின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. ஆனால் அந்தக் கோர்ட்டுகளுக்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.

எனவே, சென்னைக்கு கூடுதலாக ஒரு குடும்பநல கோர்ட்டு கேட்டு, குடும்பநல கோர்ட்டில் இருந்து ஐகோர்ட்டு மற்றும் தமிழக அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து பல விவரங்களைக் கேட்டு அரசு பதில் கடிதம் எழுதியது. ஆனால் சாதகமான நிலை ஏற்படவில்லை. மற்ற மாவட்டங்களில் இதுபோன்ற கோரிக்கை வரவில்லை என்பதால் சென்னைக்கு மட்டும் கூடுதல் கோர்ட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்ற கேள்வியோடு அரசு ஆலோசனை செய்து வருகிறது.

எனவே, கூடுதல் கோர்ட்டுக்கான அனுமதி வரும்வரை, சிட்டிசிவில் கோர்ட்டு கட்டிடத்தின் தரை தளத்துக்கு குடும்பநலக் கோர்ட்டுகளை மாற்ற வேண்டும் என்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க இதுதவிர வேறு வழியில்லை என்றும் கோர்ட்டு ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். அங்கு நீண்ட வராண்டா இருப்பதால் மக்கள் நடமாட்டத்துக்கு வசதியாக இருக்கும்.

வக்கீல் தேவையில்லை:

விவாகரத்து, ஜீவனாம்சம் பெற விரும்புகிறவர்கள் பெரும்பாலும் வக்கீல்களை நாடுவதைத் தவிர்க்கலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் குற்ற வழக்குகள் போல் விசாரணை நடத்தும் இடம் குடும்பநல கோர்ட்டு அல்ல.

கணவனோ மனைவியோ, விவாகரத்து கேட்பதற்கு முதலில் வக்கீல்களையே நாடுகின்றனர். இது தேவையற்ற ஒன்று. குடும்பப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆலோசனை (கவுன்சிலிங்) பெறும் இடத்தில் கணவன்-மனைவி, உறவினர்கள் தவிர வேறு யாரும் தேவையில்லை.

ஆயிரக் கணக்கில் குடும்பநல கோர்ட்டுகளில் வழக்கு தொடர்வதற்கு திருமண புகைப்படத்துடன் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இதற்கு சட்ட விதிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போது, எங்கு திருமணம் நடந்தது? எதற்காக விவாகரத்து கோரப்படுகிறது? என்பதை மட்டும் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தாலே போதும். எந்த சட்டவிதிகளின் கீழ் விவாகரத்து கோரப்படுகிறது என்பதையெல்லாம் கோர்ட்டு அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள்.

ஆனால் இந்த நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது. இப்போது ஒருவர் தரப்பில் ஆஜராவதற்காக `வக்கலாத்து’ தாக்கல் செய்வதற்கே வக்கீல்கள் ஆயிரக் கணக்கில் பணம் பெறுகின்றனர். இந்த ஆரம்பச் செலவுகளை கணவன்-மனைவி தவிர்க்கலாம்.

ஆங்கிலம் அவசியம் இல்லை

மேலும், கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தமிழில் மனு எழுதி கொடுத்தாலே போதும். இந்த நடைமுறைகள் அமலுக்கு வந்தால் கோர்ட்டில் கூட்டம் கூடுவதும் குறையும், வழக்குகளும் துரிதமாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பநல கோர்ட்டிலும் மாதத்துக்கு சராசரியாக 190 வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. முதன்மை குடும்பநல கோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 231. இதுதான் குடும்பநல கோர்ட்டு சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

———

குடுமப நல தீதிமன்றங்களில் சட்டப்படி வக்கீல்களை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தினர் (Save Indian Family foundation) அரசுக்கும் உயர்நீதிமன்றத்திற்கும் மனு கொடுத்துள்ளனர்.

வயது தெரிந்து லவ் பண்ணுங்கப்பா!

இதோ இன்னொரு பாரதி கண்ட புதுமைப்பெண்!

இப்போதெல்லாம் இளம் பெண்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வருவார்களா, அல்லது “உல்லாசமாக” யாருடனாவது கிளம்பி விடுவார்களா என்று கிலி பிடித்து அலைகின்றனர்!

ஆனால் மைனர் பெண்ணை இழுத்துக்கொண்டு போனான் என்று சட்டப்பிடியில் சிக்கி அந்தப் பையன் கைதாகி விடுவான். பெண் ஆசைப்பட்டு அந்த ஆணை இழுத்துக்கொண்டு ஓடினாலும், “மைனர் பெண்ண இழுத்துக்கொண்டு போய் கற்பழித்தான்” என்று பெற்றோர்கள் புகார் கொடுத்து அந்தப் பையனை உள்ளே தள்ள ஏற்பாடு செய்து விடுவார்கள். பிறகு சில ஆண்டுகள் கழித்து ஒன்றும் நடக்காததுபோல் இன்னொரு சோப்ளாங்கி ஆணைப் பிடித்து திருமணமும் நடத்தி விடுவார்கள். பிறகு விவரம் தெரிந்தபின் அந்த கணவன் “கிக்கிரி பிக்கிரி” என்றால் இருக்கவே இருக்கிறது “வரதட்சணை கேசு” (498A) என்னும் அஸ்திரம்!

நல்ல கொண்டாட்டமய்யா இந்த புதுமைப் பெண்களுக்கு! உல்லாசத்திற்கு உல்லாசமும் ஆயிற்று. வசதியான வாழ்க்கைக்கு கணவனும் ஆயிற்று!!

இப்போது செய்தியைப் படியுங்கள்:-

பள்ளி மாணவி காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

மீஞ்சூர்,மே.26- 2009 – செய்தி : தினத்தந்தி

மீஞ்சூர் அருகே உள்ளது செங்கழுனீர்மேடு கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் சரவணன் என்பவரின் மகள் சுகன்யா(வயது17) இவர் மணலி புதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம்வகுப்பு படித்து வந்தார். விடுமுறையில் வீட்டில் இருந்த சுகன்யாவை காணவில்லை என்று காட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து பொன்னேரி டி.எஸ்.பி. ரங்கராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சாமிமாணிக்கம் சப்-இன்ஸ்பெக்டர் முகமதுசெரிப், ராமச்சந்திரன், தமிழ்செல்வன் ஆகிய போலீசார் சுகன்யாவை தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று சுகன்யா காதல் கணவரான மீஞ்சூர் காலனியை சேர்ந்த பாலா என்கிற பாலசுப்பிரமணி(25) உடன் மீஞ்சூர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

அப்போது சுகன்யா பாலசுப்பிரமணியை காதலித்து வந்ததாகவும் தாங்கள் திருமணம் செய்துகொள்ள ஓடிவிட்டதாகவும் கூறினார். ஆனால் சுகன்யா மைனர் என்பதாலும் தந்தை சரவணன் கொடுத்த புகாரின்பேரில் பாலசுப்பிரமணி கைது செய்யப்பட்டார்.

சுகன்யா பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். பின்னர் சுகன்யாவையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரிவுகள்:கள்ளக்காதல் குறிச்சொற்கள்:, , , , , , , ,

பாவம் இந்தப் பெண்

நம் பாரம்பரிய மரபுகள் மீதும், நன்னடத்தை, பெற்றோர் மீது மதிப்பு போன்ற சிறப்பியல்புகள் மீதும் தற்காலப் பெண்களை நம்பிக்கை இழக்க வைத்து, மனம் போன போக்கில் வாழ்வதுதான் பெண்கள் முன்னேற்றம் என்று பெண்ணியவாதிகளும் ஊடகங்களும் ஓயாமல் செய்யும் மூளைச் சலவையால் நிகழ்ந்துள்ள அவலங்கள் ஏராளம். பாதிக்கப்பட்ட பெண்கள் அநேகம்.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்கள். சென்னை விமான பணிப்பெண் கொலையில் மர்மம் நீடிக்கிறது. காதலன்-தோழிகளிடம் விசாரிக்க முடிவு

சென்னை, மே.26- 2009. செய்தி – தினத்தந்தி

சென்னையில் நடந்த விமான பணிப்பெண் கொலை வழக்கில் கொலையாளி யார்? என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவரது காதலன் மற்றும் தோழிகளிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை ஜெ.ஜெ.நகர் கோல்டன் ஜார்ஜ் நகரில் வசித்த விமான பணிப்பெண் நிதின்குமாரி பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தார். அழுகிய நிலையில் இருந்த அவரது பிணம் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. நிதின்குமாரி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? கொலையாளி யார்? என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியாத மர்மமாக உள்ளது.

இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க தனி போலீஸ் படை அமைத்து கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் பாண்டியன், உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு மற்றும் இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் தனி போலீஸ் படையினர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் விடை தெரியாமல் இருக்கும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விமான பணிப்பெண் நிதின்குமாரி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதியாக நம்பும் வகையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. நிதின்குமாரியின் பிணம் தலைகுப்புற கட்டிலுக்கும், சுவருக்கும் இடையே கிடந்துள்ளது. பிணத்தை மறைக்கும் வகையில் 2 சூட்கேஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
நிதின்குமாரி தற்கொலை செய்திருந்தால் அவரது பிணம் கட்டிலுக்கும், சுவருக்கும் இடையே கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பிணத்தை சூட்கேஸ்களை வைத்து மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

எனவே, பிணம் கிடந்த நிலையை வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று னிகிக்கமுடிகிறது. அவரை கொலை செய்து பிணத்தை கட்டிலுக்கு அடியில் போட்டு சூட்கேஸ் பெட்டிகளால் கொலையாளி மறைத்துள்ளான். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது பிரேத பரிசோதனையில் தான் தெரிய வரும்.

பிரேத பரிசோதனையை டாக்டர் அன்புசெல்வம் நடத்தியுள்ளார். விமான பணிப் பெண்ணின் உடலில் பெரிய அளவில் காயங்கள் இல்லை. அவரது கழுத்து எழும்பும் முறியவில்லை. எனவே கழுத்தை நெறித்தோ, கொடூரமாக தாக்கியோ அவரை கொன்றதற்கான தடயங்கள் பிரேத பரிசோதனையில் கிடைக்கவில்லை.

நிதின்குமாரி இறந்து 76 மணி நேரம் கழித்துத்தான் பிணம் எடுக்கப்பட்டுள்ளது. பிணம் மிகவும் அழுகிவிட்டதால் மேலோட்டமாக உடலில் இருந்த தடயங்கள் மூலம் அவரது இறப்பு எப்படி நடந்தது என்று டாக்டரால் உறுதி செய்ய முடியவில்லை. நிதின்குமாரியின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் உறுதியான முடிவுக்கு வரமுடியும். தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

கொலையாளி யாராக இருக்கலாம் என்று விசாரிக்கும்போது ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளது. நிதின்குமாரியின் தனிப்பட்ட லேப்-டாப் கம்ப்னிட்டர் கருவி, அவரது 2 செல்போன்கள் போன்றவற்றை தீவிரமாக ஆய்வு செய்துள்ளோம். லேப்-டாப்பில் உள்ள படங்களில் நிதின்குமாரி குறிப்பிட்ட ஆண் ஒருவரோடு நெருக்கமாக உள்ள படங்கள் உள்ளன.

அந்த ஆண் யார்? என்று விசாரித்தபோது அவர் நிதின்குமாரியின் காதலர் என்று தெரிய வந்துள்ளது. காதலர் பெயர் ராஜாத்சிங் என்று தெரிய வந்துள்ளது. அவரும் நிதின்குமாரியின் சொந்த ஊரான பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ராஜாத்சிங் மும்பையில் `லிபர்ட்டி ஆயில் மில்’ என்ற பெயரில் மிகப்பெரிய ஆயில் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் பெரும் பணக்காரர் என்றும் தெரிய வந்துள்ளது. விமானத்தில் செல்லும்போது நிதின்குமாரியோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர்.

ராஜாத்சிங் கடந்த 10 மாதத்துக்கு முன்பு சென்னை வந்து நிதின்குமாரியோடு ஒரு வாரம் தங்கியிருந்து சென்றுள்ளார். ராஜாத்சிங்கை காதலிப்பதற்கு நிதின்குமாரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மும்பையில் இருக்கும் ராஜாத்சிங்கை சென்னை வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல, நிதின்குமாரியோடு ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் அவரது தோழிகளையும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

நிதின்குமாரி வசித்த வாடகை வீட்டின் உரிமையாளர் பாஸ்கர் ராவையும் தீவிரமாக விசாரித்துள்ளோம். அவர் தனது வீட்டுக்கு கீழே மருந்து குடோன் வைத்துள்ளார். அங்கு நிறையபேர் பணிபுரிகிறார்கள். அவர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.
நிதின்குமாரி பயந்த சுபாவம் உள்ளவர். `எனக்கு தனியாக படுக்க பயமாக உள்ளது என்றும், நள்ளிரவில் யாரோ கதவை தட்டுகிறார்கள்’ என்றும் வீட்டுக்காரர் பாஸ்கர் ராவிடம் நிதின்குமாரி கூறியுள்ளார்.

பல நாள் இரவில் பாஸ்கர் ராவ் வீட்டிலும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவரது வீட்டிலும் நிதின்குமாரி தூங்கியுள்ளார். அந்த பகுதியில் உள்ள சந்தேக நபர்கள் நிறையபேரை பிடித்து விசாரித்துவிட்டோம். நிதின்குமாரி பெரும்பாலும் பகலில் வீட்டில் இருப்பதில்லை. இரவில்தான் வீட்டுக்கு வருவார். வெளியிலும் அதிகமாக நடமாடமாட்டார். பெரும்பாலும் சாப்பாட்டை ஓட்டலிலேயே முடித்துவிடுவாராம். வீட்டில் நூடுல்ஸ் மட்டுமே சமைத்து சாப்பிடுவார் என்று சொல்லப்படுகிறது.

நிதின்குமாரியின் உடல் உறுப்புகளை ஆராய்ந்தபோது அவர் ஆண்களோடு செக்ஸ் உறவு வைத்ததற்கான தடயங்கள் உள்ளன. ஆனால் அவர் பலாத்காரமாக கற்பழிக்கப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் உடலில் இல்லை.

அவரது கர்ப்ப பையும் ஆராயப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் பெரும் பணக்காரர்கள் அவருக்கு அறிமுகமானவர்களாக இருக்கலாம். அந்த வகையில் யாருடனாவது நிதின்குமாரிக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி அவரது தோழிகளிடம் விசாரிக்க உள்ளோம்.

நிதின்குமாரி புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர். அவ்வப்போது மதுவும் அருந்துவார் என்று சொல்லப்படுகிறது. தவறான பழக்கவழக்கங்களால் அவருக்கு தவறான நபர்களோடு தொடர்பு இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் நிதின்குமாரி மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

நிதின்குமாரியின் தந்தை விஜயபிரசாத், தாயார் உஷா, தங்கை நிஸ்தா மற்றும் உறவினர்கள் சிலர் பீகாரிலிருந்து நேற்று சென்னை வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நிதின்குமாரி, ராஜாத்சிங்கை காதலித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

நிதின்குமாரியின் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். நேற்று மாலையில் பிணம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் நிதின்குமாரியின் பிணம் தகனம் செய்யப்பட்டது.

எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிதின்குமாரியின் பெற்றோர் தங்கியுள்ளனர். நிதின்குமாரியின் தந்தை சொந்த ஊரில் சிறிய கடை நடத்தி வருவதாகவும், பெரிய அளவில் வசதி படைத்தவர் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. நிதின்குமாரி பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். அழகாக இருந்ததால் அவருக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிப்பெண் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலை தற்காலிக வேலை என்றும் தெரிய வந்துள்ளது

பிரிவுகள்:கொலை குறிச்சொற்கள்:, , , , , ,

போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு

இது போதாது. போலீஸ் ஐ.ஜி, டிஜிபி, நீதிபதிகள், அமைச்சர்கள், பிரதம மந்திரி இப்படி அனைவர் மீதும் இந்த 498A கேசுகள் பதியப்பட வேண்டும். அப்போதுதான் ஆட்சியில் உள்ளவர்கள் இதன் தவற்றைப் புரிந்து கொள்வார்கள்.

நானி பால்கிவாலா ஒருமுறை சொன்னார்: “India has too many laws, but too little justice” – என்று. ஒன்றின்மெல் ஒன்றாக கடுமையான சட்டங்களை அடுக்கிக்கொண்டு போனால் நல்லது நடக்காது, பொய் வழக்குகள் பெருகி இடைத் தரகர்கள்தான் காசு பார்ப்பார்கள். வீட்டின் அடுக்களையிலும் படுக்கையறையிலும் நடக்கும் பிரச்னைகளுக்கு காக்கிச் சட்டையும் கருப்புக் கோட்டும் தீர்வுகாண முடியுமா?

இப்போது செய்தியை படியுங்கள்:-

ரூ.11/2 லட்சம் கேட்டதாக மனைவி புகார்:போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு

வாடிப்பட்டி, மே.23- 2009. செய்தி: தினத்தந்தி

மதுரையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வருவதாக மனைவி புகார் செய்ததின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை பல்கலை நகரைச்சேர்ந்தவர் ஆஷா அருள்மொழி (வயது 31). இவரது கணவர் பொன்ரகு (42). இவர் உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டை சேர்ந்தவர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது விழுப்புரம் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் பொன்ரகு இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில் சமயநல்லூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் ஆஷா அருள்மொழி ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில் ”திருமணமானதில் இருந்து தன்னிடம் வரதட்சணை கேட்டு பொன்ரகு கொடுமை செய்து வந்தார். அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அந்த பெண்ணையே மறுமணம் செய்யப்போவதாக என்னை மிரட்டினார்.

மேலும் பொன்ரகுவின் சகோதரிகள் ஞானம் (50), விஜயா (55) ஆகியோரை வீட்டுக்கு அடிக்கடி வரவழைத்து என்னை திட்டி சித்ரவதை செய்து வந்தார். மேலும் வரதட்சணையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொடுமைப்படுத்தினர். பொன்ரகுவின் தாயார் அன்னத்தாய் (84), தந்தை பொன்னையா (85) ஆகியோரும் இதற்கு உடந்தையாக இருந்து வந்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து வரதட்சணை புகார் கூறப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ரகு, அவரது சகோதரிகள் மற்றும் தாய், தந்தை உள்பட 5 பேர் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசின் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

(அவர்களை கைது செய்தார்களா என்று தெரியவில்லை. சாதாரண மனிதர்களாக இருந்தால் இத்தகைய செய்திகளில் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று முடியும். இந்த 498A சட்டத்தின்படி உடனே கைது செய்யலாம். ஜாமீன் கிடையாது. அதாவது புகாரில் பெயர் குறிப்பிட்டப்பட்டவர்கள் அனைவர் மேலும் விசாரணை ஏதுமின்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யலாம், செய்துகொண்டு வருகிறார்கள். சம்பத்தமே யில்லாமல் மன்மோஹன் சிங்கும் சேர்ந்துகொண்டு என்னை வரதட்சணைக் கொடுமை செய்தார்கள் என்று புகார் கொடுக்கலாம். வழக்குப் பதிவு செய்வார்கள் – அவரை கைது செய்வார்களா என்பது தெரியாது!!)

மனைவியின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து நட – உச்ச நீதிமன்றம் அறிவுரை

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் தீபக் வர்மா இருவரும், கடந்த 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஒரு ராணுவ லெஃப்டினண்ட் கர்னலுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையேயான விவாகரத்து வழக்கை விசாரிக்கும்போது உதிர்த்துள்ள முத்துக்கள் இவை:

1. மனைவி என்ன கூறினாலும் அதை அப்படியே கேட்கவேண்டும்.
2. மனைவியின் கூற்றை மறுத்தே பேசக்கூடாது
3. மனைவி ”இந்தப் பக்கம் பார்” என்று ஆணையிட்டால் உடனே கீழ்ப்படியவேண்டும்
4. அடுத்த நொடி “அந்தப் பக்கம் பார்” என்றால் உடனே அப்படியே செய்யவேண்டும்.

எவ்வளவுதான் முட்டாள்தனமாக இருந்தாலும் மனைவியின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லையென்றால் கணவர்கள் கடுமையான பின்விளைவுகளுக்கு ஆளாக நேரிடும். அப்படி மனைவி சொல்லுக்கு அடிமையாக இருந்தால்தான் மணவாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்றார்கள் அந்த நீதியரசர்கள்.

வழக்கின் விவரம்:

விவாகரத்துக்காக கணவன் 10 லட்ச ரூபாய் கொடுத்தால்போதும் என்று ஹைகோர்ட்டில் தீர்மானமனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் மனைவி. அவர் தன் கணவன்மேல் பற்பல கிரிமினல் கேசுகளைப் போட்டுத் தாக்கியுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக கணவர் அந்தக் கேசுகளை எதிர்த்துப் போராடி அத்துணை கேசுகளிலும் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறார். அந்தக் கேசுகளாலேயே ஓட்டாண்டியாகிவிட்ட கணவரை இன்னும் பல லட்சங்கள் கொடு என்று மேல்முறையீடு செய்திருக்கிறார் அந்தப் பெண்குலத் திலகம்.

செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இப்படித்தான் போடறாங்கய்யா 498A கேசு!

வந்தவாசியில் இளம்பெண்ணிடம் ரூ.5 லட்சம் கேட்டு வரதட்சணை கொடுமை கணவன் உள்பட 3 பேர் கைது வந்தவாசி, மே.21- 2007. செய்தி: தினத்தந்தி.

வந்தவாசியில் இளம் பெண்ணிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சீர்வரிசை பொருட்கள் திருவண்ணாமலை மாவட் டம் வந்தவாசி கே.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் ஜாபர்கனி (வயது 55). இவரது மகன் கமரூன்இஸ்லாம் (25). இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ரஷ்யாபேகம் (18) என்பவருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரஷ்யாபேகத்திற்கு 40 பவுன் நகையும், அவரது கணவருக்கு 8 பவுன் தங்க சங்கிலி, ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும், ரஷ்யா பேகத்தின் தந்தை வழங்கி னார். திருமணம் முடிந்து 4 மாதங்கள் கணவன்- மனைவி இருவரும் சென்னையில் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

பின்னர் கணவன்- மனைவி வந்தவாசிக்கு வந்து குடும்பம் நடத்தினர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கமரூன்இஸ்லாம், ரஷ்யா பேகத்திடம் கூடுதல் வரதட் சணை வாங்கி வரும்படி கூறி துன்புறுத்தியதாக கூறப்படு கிறது. ரூ.5 லட்சம் கேட்டு… இந்நிலையில் பாய் தொழில் செய்ய வேண்டும் என்று கூறி கமரூன் இஸ்லாம், ரஷ்யா பேகத்திடம் தாய் வீட்டிற்கு சென்று ரூ.5 லட்சம் வாங்கி வரும்படி கூறி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. கமரூனுடன் அவரது தந்தை ஜாபர்கனி, தாய் மஸ்தான் பீவி, தம்பி அக்பர் ஆகியோர்அதற்கு உடந்தை யாக இருந்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து ரஷ்யாபேகம் வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வந்த வாசி துணை போலீஸ் சூப்பி ரண்டு அசோக்குமார், இன்ஸ் பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, ஏட்டு சாந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதைத் தொடர்ந்து ரஷ்யா பேகத்தை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய தாக கமரூன்இஸ்லாம், ஜாபர் கனி, அக்பர் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய் தனர். பின்னர் அவர்களை வந்தவாசி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சங்கரன் உத்தரவிட்டார்.