தொகுப்பு

Posts Tagged ‘divorce’

கள்ளக்காதலுக்காக தன் குழந்தையையே கொன்ற தாய்

mother-kills-her-child-for-being-a-hindrance-to-adulteryசிவகாசி: ஜூன் 16,2011,23. செய்தை: தினமலர்.

தொட்டிலில் தூங்கிய குழந்தையை, கள்ளக் காதல் மோகத்தால்,கொலை செய்த தாய், கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மதுரை பாண்டிக்கும், அனுப்பங்குளம் நயினார் மகள் துர்காதேவிக்கும், இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. துர்காதேவி கர்ப்பிணியான நான்கு மாதத்தில், கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்து கோரி, கணவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு சம்மதிக்காத துர்காதேவி, சேர்ந்து வாழ்வதாக கூறி, பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், துர்காதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பேச்சு வார்த்தைக்கு பின், 9 மாத குழந்தை முகேஷ் பாண்டியுடன், துர்காதேவி, கணவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். மாலையில் வீடு திரும்பிய கணவர், தொட்டிலில் தூங்கிய மகனை தூக்கினார்.பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை பார்த்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.பரிசோதித்த டாக்டர்,”குழந்தை இறந்துவிட்டது’ என்றார். சந்தேகம் அடைந்த மதுரை பாண்டி, சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார், துர்காதேவியிடம் விசாரித்தனர்.

விசாரணையில், திருமணத்திற்கு முன் அனுப்பங்குளத்தை சேர்ந்த குமாருடன் துர்காதேவிக்கு ஏற்பட்ட பழக்கம், திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்தது தெரிய வந்தது.மேலும், கணவருடன் வாழப் பிடிக்காமல், தந்தையுடன் வசித்த துர்காதேவியை, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ, குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்; “குழந்தை உயிருடன் இருப்பதால் தானே, கணவருடன் சேர்ந்து வாழ வலியுறுத்துகின்றனர்…’ என நினைத்த துர்காதேவி, தொட்டிலில் தூங்கிய குழந்தையை, மூச்சு திணறடித்து கொலை செய்தார் என்றும் தெரிந்தது.இதையடுத்து, துர்காதேவியை போலீசார் கைது செய்தனர்.

ஜோதிடம் மீது பழி போட்ட தாய்:

பெற்ற மகனை கொலை செய்த தாய், மகன் இறந்ததை நினைத்து அழுவது போல் நடித்தார். அப்போது,”அப்பாவிற்கும், மகனுக்கும் ஜாதகம் சரியில்லை; அப்பாவும், மகனும் நேருக்கு நேர் பார்த்தால் யாராவது ஒருவர் உயிருடன் இருக்க மாட்டார் என, ஜோதிடர் கூறியது, பலித்து விட்டதே’ எனக் கூறி, அழுது புலம்பினார்.

ஆனால், பச்சிளம் குழந்தையை கொலை செய்த அவர், சிறைக்கு போகும் முன், போலீசார் வாங்கி கொடுத்த மதிய உணவை ருசித்து சாப்பிட்டபடி, எந்தவித பதட்டமும் இல்லாமல் காணப்பட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=258917

Advertisements

புது மாப்பிள்ளைகள் தற்கொலை

 1. காரமடை : திருமணம் நடந்து மூன்று நாட்களே ஆன புது மாப்பிள்ளை, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  காரமடை அடுத்த கெம்பனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(32), தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மலர்மணி(29). இவர்கள் இருவருக்கும் கடந்த 6ம் தேதி, குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி மலைக்கோவிலில் திருமணம் நடந்தது. மார்ச் 8ம் தேதி திருமண வரவேற்பு நடந்தது. இதன் பின், 9ம் தேதி இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணகுமார் வீடு திரும்பவில்லை. இவரை காணாமல் தேடிய போது, வீட்டின் அருகேவுள்ள வேலியோரம் இறந்து கிடந்தார். “எனக்கு தாங்க முடியாத அளவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், பூச்சி மருந்து குடித்து விட்டேன்; யாரும் வருத்தப்பட வேண்டாம்,’ என அவர் கடிதம் எழுதி வைத்திருந்ததையும் உறவினர்கள் கைப்பற்றியுள்ளனர். திருமணம் முடிந்த மூன்று நாட்கள் ஆன புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=203366

 2. ================

 3. ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து புது மாப்பிள்ளை தற்கொலை

  திருமங்கலம்: திருமங்கலம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து புது மாப்பிள்ளைதற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் மேலஉரப்பனூரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி (24). இவருக்கும் தேவிகா என்பவருக்கும் கடந்த 15ம் தேதி திருமங்கலத்தில் திருமணம் நடந்தது.

  நேற்று முன்தினம் இரவு கண்மாய்கரை வரை சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றவர் நேற்று வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரயிலில் மோதி தலை துண்டாகி இறந்த வாலிபர் உடல் திருமங்கலம்-மதுரை ரயில்வே தண்டவாளத்தில் கப்பலூர் அருகே கிடப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் இறந்தது சுந்தரபாண்டி என்பது தெரியவந்தது. இது குறித்து மதுரை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=87041

நீதிமன்றங்கள் நிரபராதிகளை பாதுகாக்குமா?

Stop husband suicideஇந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம். செய்தி மடல். 5 (மே, 2011)

“வரதட்சணை வழக்குகளைப் பொறுத்தவரை, புகார் பதிவு செய்யப்பட்டவுடன் எவ்வித புலன் விசாரணையும் செய்யாமல், கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகாரை அப்படியே நகலாக்கி, அதனையே இறுதி அறிக்கையாக (குற்றப் பத்திரிக்கையாக) நீதி மன்றங்களுக்கு அனுப்பிவிடும் வழக்கம் பல காலமாக காவல் துறையில் இருந்து வருகிறது.

இதுபோல் புலன் விசாரணை என்னும் நடைமுறையே இல்லாமல், வெறும் புகாரின் அடிப்படையிலேயே பல அப்பாவி ஆண்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவதால், ‘பொய் வரதட்சணை வழக்குகள் குப்பையைப் போல காவல் துறையால் தினம் தினம் நீதி மன்றங்களில் கொட்டப்படுகின்றன’ என்று டில்லி உயர்நீதி மன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது.

மேலும் வாசிக்க:

குடும்பப் பாதுகாப்பு இயக்க செய்தி மடல் எண் – 5

ஆண்கள் நலம் காக்க முற்படுவீர் அரசியல் கட்சிகளே!

Aimwa Logoஅகில இந்திய ஆண்கள் நல இயக்கம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கைகள் அடங்கிய வேண்டுகோளை இங்கு காணலாம்:

அரசியல் கட்சிகளுக்கு AIMWA முன்வைத்துள்ள கோரிக்கைகள்

AIMWA கோரிக்கைகள் - பக்கம்-2

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பிடிஎஃப் வடிவத்தில் பெற (to download the above letter in PDF format) இங்கே கிளிக் செய்யவும்.

போடுங்கம்மா கேசு, 498A சட்டத்தைப் பார்த்து!

விருதுநகர், அய்யனார் நகரை சேர்ந்தவர் தங்கவேல் மகள் காளீஸ்வரி(22). இவருக்கும் சிவகாசி, ஆறுமுகம் காலனி, ரிசர்வ் லைனை சேர்ந்த கருப்பையா மகன் மணிகண்டனுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

வரதட்சணையாக 10 பவுன் மற்றும் 30 ஆயிரம் தரப்பட்டது.

மூன்று மாதத்திற்கு பின் மேலும் 15 பவுன் மற்றும் 2 லட்ச ரூபாய் கேட்டு கணவர் மணிகண்டன், மாமியார் சீதாலட்சுமி, செல்வி, மகேஸ்வரி, ஆறுமுகம், ஈஸ்வரன் ஆகியோர் கொடுமைபடுத்துவதாக விருதுநகர் ஜே.எம். கோர்டில் காளீஸ்வரி மனு தாக்கல் செய்தார்.

கோர்ட் உத்தரவு படி, ஆறு பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

செய்தி: தினமலர். மார்ச் 17,2011

தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்; பிளஸ்-2 மாணவி தூக்கு போட்டு சாவு

Girl commits suicide because of mother's adulteryகடலூர், மார்ச். 12, 2011செய்தி: மாலைமலர்

பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் அஞ்சாபுலி(வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி(34). இவர்களது மகள் ஆனந்தி (17). இவர் பேர்பெரியான்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இதற்கிடையே செல்விக்கு வேறு ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செல்வி கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை செல்வி முத்தாண்டிக் குப்பத்துக்கு வந்தார். அப்போது செல்வியை மீண்டும் வீட்டை விட்டு செல்ல வேண்டாம் என ஆனந்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் அதனை மீறி செல்வி கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தி நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிபோதையில் தகராறு செய்த பெண் போலீஸ் கைது!

ஐயோ பாவம், இந்த அபலைப் பெண்கள்!

ஆண்கள்தான் அத்துணை அக்கிரமங்களும் செய்பவர்கள். அதனால்தன் ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே ஆண்களைக் கைது செய்து சிறையிலடைத்து, தண்டனையும் கொடுத்து விடுகிறார்கள். இந்தியாவில் ஒரு ஆண் தான் பிறந்த கணத்திலேயே ஒரு கிருமினல் ஆகிறான்!

இதோ பாருங்கள் இந்த அபலைப் பெண்ணின் கதையை!!

தினமலர் செய்தி:

“சரக்கு’ போதையில் ஆட்டம் போட்ட பெண் போலீஸ் : ஓசி, “சைடு டிஷ்’க்கு சண்டையிட்டதால், “சஸ்பெண்ட்”

சென்னை : குடி போதையில் ரகளை செய்து, ஓசி, “சைடு டிஷ்’க்கு கடை ஊழியரை தாக்கிய பெண் போலீஸ்,”சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

சென்னை, மயிலாப்பூர் எலைட் குடியிருப்பில் வசித்து வருபவர் ராணி(32); திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் கான்ஸ்டபிளாக உள்ளார். திருமணமாகாத நிலையில் இவர், குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினசரி குடித்துவிட்டு, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையில் உள்ள மிக்சர் கடையில், “இலவச சைடு டிஷ்’ வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இது போல், நேற்று முன்தினம் மாலை, அளவுக்கதிகமாக மது அருந்திய ராணி, ஒரு ஆட்டோ பிடித்து, லாயிட்ஸ் சாலை சென்றார். அங்குள்ள மிக்சர் கடையில், வழக்கமான, “சைடு டிஷ்’ கேட்டார். கடை ஊழியர் நடேசன் தர மறுக்கவே, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, நடேசனின் கையை முறுக்கிய ராணி, போலீஸ் பாணியில் ஒரு உதை கொடுத்தார். இதில், நடேசன் கீழே விழுந்த போது, கையில் கிடைத்த சிப்ஸ் மற்றும் காரத்தை அள்ளி, ஆட்டோவில் போட்டுக் கொண்டு புறப்பட்டார். அப்போது, நடேசன் சத்தம் போட்டதால், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, ஆட்டோவை நிறுத்தி, ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையம் கொண்டு சென்று, அங்கிருந்த போலீசாரிடம், போலீஸ் உடையில் இருந்த ராணியை ஒப்படைத்தனர்.

போலீசார், உடனடியாக ராணியை, ராயப்பேட்டை மருத்துவமனை சென்று, மது அருந்தியதற்கான சான்றிதழ் பெற்று, அவர் மீது வழக்கு பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

பெண் போலீஸ் ஒருவர், போலீஸ் உடையில் இருக்கும் போதே, மது அருந்தி கலாட்டா செய்த விவகாரம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. ராணி மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்,” சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

கடந்த 1997ம் ஆண்டு போலீசில் சேர்ந்த ராணி, திருச்சியில் பணியாற்றி வந்தார். அங்கும், பணியின் போது மது அருந்தியதால், கோவைக்கு மாற்றப்பட்டார். கோவையிலும் அதே நிலை தொடர, அங்கிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

==========================

சென்னை: சென்னையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். (செய்தி: தட்ஸ்தமிழ்)

திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ராணி (38). திருமணமாகாத இவர், மைலாப்பூர் அப்பு தெருவில் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறார்.

நேற்று முன்தினம் தலைமைச் செயலக காவல் பணியில் இருந்த ராணி மாலை 3 மணியளவில் பணி முடிந்து விடுதிக்குச் சென்றார். மாலை 6 மணிக்கு மீண்டும் இரவு பணிக்காக புறப்பட்டு வந்தவர் ஐஸ் ஹவுஸ் மார்க்கெட்டில் உள்ள `காமாட்சி ஹாட் சிப்ஸ்’ என்ற பேக்கரிக்குச் சென்றார்.

பிஸ்கட், கேக், சிப்ஸ் என வேண்டியதை வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றார். இதையடுத்து அவரைத் தடுத்த கடை ஊழியரான தமிழரசன் என்பவரை ராணி தாக்கினார்.

இதையடுத்து அக்கம் பக்கம் உள்ள கடைக்காரர்கள் ராணியைப் பிடித்து ஐஸ் ஹவுஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

அப்போது ராணி குடிபோதையில் இருந்தது தெரிய வந்ததால் உடனடியாக இது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணி மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். ராணியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மது அருந்தியதற்கான சான்றிதழை போலீசார் வாங்கினர்.

பின்னர் ராணி மீது குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ராணியின் செயல் குறித்து விசாரணை நடத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ராணி போதையில் ரகளை செய்வது இது புதிதல்ல. அவர் ஏற்கனவே கரூரில் வேலை பார்க்கும் போதும், அதன் பிறகு கோவையில் வேலை பார்க்கும் போதும் போதை புகாரில் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பணி மாறுதலாகி அவர் சென்னை வந்தார். சென்னையிலும் அவரது பழைய போதை பழக்க வழக்கம் தொடர்ந்தது.

மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த அவர், சமீபத்தில் தான் மீண்டும் பணியில் வந்து சேர்ந்தார் என்றார்.