தொகுப்பு

Archive for மார்ச், 2009

பீரில் விஷம் கலந்து கொலை செய்த கள்ளக்காதலி

திருச்சி, மார்ச்.31- 2009
பீரில் விஷம் கலந்து ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளரை கொலை செய்த கள்ளக்காதலியையும், அவருக்கு விஷ மருந்து கொடுத்து உதவிய ஹோமியோபதி டாக்டரையும் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள செங்குறிச்சி – மேக்குடி கிராமத்திற்கு இடையில் உள்ள சிறிய பாலத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஆண் பிணம் கிடப்பதாக மணிகண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த இடத்தில் இருந்து பீர் பாட்டில், வாழைப்பழம், திராட்சை, தண்ணீர் பாட்டில் போன்றவைகளை போலீசார் கைப்பற்றினார்கள். பிரேத பரிசோதனையில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

இந்த விசாரணையில் தெரிந்த விபரங்கள் வருமாறு:-

திருச்சி கே.கே.நகர் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 65). இவர் மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு வீரம்மாள் (60) என்ற மனைவியும், இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

விராலிமலை கொடும்பாளூர் அருகே உள்ள ஊத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி (40). இவருடைய மனைவி சகுந்தலா (33). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சகுந்தலா தனது கணவர் திருப்பதியை பிரிந்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ். காலனியில் மகன்களுடன் வசித்து வருகிறார்.

சுந்தரமூர்த்திக்கும், சகுந்தலாவுக்கும் கடந்த 21/2 வருடமாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். சுந்தரமூர்த்தி தினமும் குடித்து விட்டு இரவு, பகல் என்று பாராமல் சகுந்தலாவிடம் செக்ஸ் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

சுந்தரமூர்த்தியின் செக்ஸ் சித்ரவதையை தாங்கி கொள்ள முடியாமல் இருந்த சகுந்தலா சுந்தரமூர்த்தியின் கை, கால்களை முடக்கி அவரிடம் இருந்து தப்பித்து விடலாம் என முடிவு செய்தார்.

அதன்படி சோமரசம்பேட்டை அருகே கோப்பு கிராமத்தில் உள்ள சித்த மருத்துவ டாக்டர் சந்திரசேகரிடம் சென்று விஷ மருந்து கேட்டார். அதற்கு அவர் வெள்ளைநிறம் உள்ள துத்தநாக மருந்தை கொடுத்துள்ளார்.

சுந்தரமூர்த்தி நேற்று முன்தினம் இரவு சகுந்தலாவின் வீட்டிற்கு வந்து இன்பமாக இருக்க அழைத்துள்ளார். சகுந்தலாவை தனியாக மோட்டார்சைக்கிளில் செங்குறிச்சி அருகே உள்ள சிறிய பாலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சுந்தரமூர்த்தி ஒரு கூடையில் பீர் பாட்டில், வாழைப்பழம், திராட்சை, தண்ணீர் பாட்டில் போன்றவைகள் வாங்கி கொண்டுவந்தார்.

அவர் வைத்திருந்த பீரை எடுத்து குடித்தார். அப்போது சகுந்தலா நைசாக பேச்சுக் கொடுத்து சுந்தரமூர்த்திக்கு தெரியாமல் பீரில் துத்தநாக பவுடரை கலந்து விட்டார். அதை குடித்த சுந்தரமூர்த்தி வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். சகுந்தலா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மேற்கண்டவை யாவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை குறித்து மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து சகுந்தலாவையும், அவருக்கு விஷ மருந்து கொடுத்து உதவிய ஹோமியோபதி டாக்டர் சந்திரசேகரையும் கைது செய்தார்.

Advertisements

ஒரு பொய் வழக்கு புனையப்படுகிறது!

கீழ்க்கண்ட செய்தியை கவனமாகப் படித்துப் பாருங்கள். 498A சட்டத்தில் இப்படித்தான் பொய் வழக்குகள் புனையப் படுகின்றன. இத்தகைய steriotype வழக்குகளில் சிக்காமல் தவிர்ப்பது எப்படி என்று அறிய மறுமொழியில் உங்கள் ஐயங்களையும் வினாக்களையும் எழுதுங்கள்

=================================

பரமக்குடி,மார்ச்.30- 2009

பரமக்குடியில் வரதட் சணை கேட்டு காதல் கணவர் தன்னை துன்பு றுத்தியதாக இளம் பெண் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பரமக்குடி சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் கார்த்திக் பாபு (வயது 25). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த போது இவருக்கும் அதே கல்லூரில் படித்த வட வள்ளி பகுதியை சேர்ந்த பத்மாஸ்ரீ என்பவருக்கும்(26) பழக்கம் ஏற்பட்டது. வயது வித்தியாசம் இருந்தாலும் நாளடையில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. பின்னர் இருவரது பெற்றோர் கள் சம்மதத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த 3 நாட்களிலேயே கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சமரச பேச்சு வார்த்தைக்கு பின் அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். பின்னர் மனைவியுடன் சென்னை சென்ற கார்த்திக் பாபு அங்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை பாத்து வந்தார். சில நாட்களிலேயே பணம், நகை போன்றவற்றை வரதட்சணையாக கேட்டு பத்மாஸ்ரீயை அவரது காதல் கணவர் கார்த்திக் பாபு துன் புறுத்தினாராம். இதையடுத்து பத்மாஸ்ரீ அங்குள்ள மகளிர் ஆணையத்திடம் புகார் செய்தார்.

அதன்பேரில் விசாரணை நடைபெற்ற சமயத்தில் கார்த்திக்பாபு ஜெர்மனி சென்று விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜெர்மனியில் இருந்து பரமக்குடிக்கு வந்துள்ளார். இது பற்றி அறிந்த பத்மாஸ்ரீ அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கணவன் கார்த்திக்பாபு, மாமனார் பிச்சை, மாமியார் பானுமதி, தம்பு ராஜ்குமார் ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் கார்த்திக் பாபு உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின் றனர்.

தந்தையைக் கொல்ல மகனை ஏவிய தாய்க்குலம்!

சரஞ்சீத் சிங் மல்ஹி என்பவர் பஞ்சாப் விவசாய பல்கலைக் கழக பேராசிரியர். லூதியானாவிலுள்ள அவருடைய வீட்டிற்குள் திடீரென்று புகுகின்றனர் சுமார் பதினெட்டு பிராயம் மதிகத்தக்க மூன்று பையன்கள். அவர்கள் மூவரும் அவர்மீது பாய்ந்து கத்திகளால் சரமாறியாகக் குத்திவிட்டு தாங்கள் வந்த மாருதி காரில் தப்பி விடுகின்றனர். சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் பிணமாகி விட்டார்.

அந்த பேராசிரியரைக் குத்தியது யார்? அவருடைய மகனேதான்! தன் நண்பர்களையும் துணை சேர்த்துக் கொண்டு இந்தக் கொடுமையை இழத்திருக்கிறான் அவன். அந்த இளம் பையனை தன் தந்தையையே கொலை செய்யுமளவுக்குத் தூண்டியது யார்? அவனுடைய தாயார்தான்! வாழ்க தாய்க்குலப் பெருமை!

பேராசிரியர் மல்ஹியும் அவருடைய மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர்.சிம்ரட் என்ற மகனையும் சிம்ரன் என்ற மகளையும் தன்னுடனேயே அழைத்துச் சென்றுவிடுகிறாள் மனைவி. பிறகு அந்த மகன் மனத்தில் தந்தைமேல் அதீத வெறுப்புணர்ச்சியை வளர்க்கிறாள். அந்த வெறுப்பியல் மனப்பான்மையின் மேலீட்டால் அந்த இளைஞன் போதைக்கு அடிமையாகி “டிரக் அடிக்ட்” ஆகிறான். அவன் பல முறை தன் தந்தையைக் கொலை செய்ய முயற்சிக்கிறான். கடைசியில் 2009 மார்ச் 26-ம் நாள் தீர்த்துவிடுகிறான். தற்போது அந்த கொலைகார சிம்ரட்டையும் அவனுக்குத் துணைபோனவர்களையும், கொலையைத் தூண்டிய மனைவி நிமஞ்சீத் கௌரையும் காவல் துறை கைது செய்திருக்கிறது.

இனிமேல் இதுபோல் நிறைய நடக்கும். அதற்காகத் தானே பாப் தலையும் லிப்ஸ்டிக்குமாக பெண்ணியவாதிகள் கொலை வெறியைப் பரப்பி வருகிறார்கள்!

செய்தி இங்கே: http://tinyurl.com/killer-motherhood

இது உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கப் போகிறது!

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? மணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதா? அல்லது சமீபத்தில்தான் திருமணம் நடந்ததா? எப்படியானாலும், எந்த நிலையிலும் மண வாழ்க்கை என்பது கருத்து வேறுபாடின்றி, மன மாச்சரியங்களின்றி நடைபெறாது. முன் காலங்களில் சண்டை சச்சரவுகளை குடும்பத்திலிருந்த பெரியவர்கள் அல்லது சமூகப் பெரியவர்கள் தலையீட்டால் சுமுகமாகத் தீர்த்துக் கொண்டனர். அல்லது தம்பதிகளே, தங்கள் நிம்மதியையும், முன்னேற்றத்தையும், குழந்தைகளின் நலனையும் கருத்தில் கொண்டு நாளடைவில் அவர்களே தீர்த்துக் கொண்டனர்.

ஆனால் இப்போது? புருஷன் “இம்” என்றவுடனே ஓடு போலீஸ் ஸ்டேஷனுக்கு, அல்லது வக்கீலிடம். போடு வரதட்சணை கொடுமை கேசு! இருக்கவே இருக்கிறது 498A!

”அவனையும் அவங்க அம்மாவையும் எப்படியாவது உள்ள தள்ளணும்” என்ற வெறியோடு, வேறெந்த விளைவைப் பற்றியும் கவலைப் படாமல் வெறி கொண்டலையும் பெண்கள் கையில் இந்த 498A ஆயுதத்தைக் கொடுத்து விட்டனர். அதை வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், அவர்கள் அப்போது நினைத்துப் பாராத உண்மை என்னவென்றால், இதுபோன்ற கேசுகளால் அவர்களும் பாதிக்கப்பட்டு நீரழிந்து போகப் போகிறார்கள் எனதுதான்!

தங்களது perverse satisfaction and urge to inflict torment on the husband and in-laws மட்டும்தான் அவர்கள் கண் முன் நிற்கிறது. பிறகு வக்கீலும் போலீசாரும் தங்களை எவ்விதம் நடத்தப் போகிறார்கள், எவ்வளவு ஆண்டுகள் இப்படியே அலையப் போகிறார்கள் என்பதையெல்லாம் அந்தப் பெண்கள் சிந்திப்பதில்லை.

இதோ பாருங்கள் இந்தச் செய்தியை. குடும்பத்தில் ஏதோ தகராறு. எடுத்தாள் ஒரு காகிதத்தை, எழுதினாள் வரதட்சணை கேட்டானென்று. செய்தார்கள் கைது புருஷனை!

இது உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் சீக்கிறமே நிகழப்போகிறது.

ஜாக்கிறதை!!

———————————————————————-

திருவள்ளூர், மார்ச். 29- 2009: திருவள்ளூர் பூங்கா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 33). ஆட்டோ டிரைவர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா (34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சொந்த ஆட்டோ வாங்குவதற்காக திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.51 ஆயிரம் பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு ஆட்டோ வாங்குவதற்கு பணம் போதவில்லை என்று கவிதா தன்னுடைய நகையை அடகு வைத்து ரூ.12 ஆயிரம் கொடுத்தார். இந்த நிலையில் ஆட்டோ வாங்குவதற்கு மேலும் பணம் தேவை என்று மனைவியிடம் பணம் கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.. இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கவிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கவிதா திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

ஆசிரியை அடித்ததில் பள்ளி மாணவி சாவு

ஜெயராகினி ஜெயராகினி என்னும் ஒரு பள்ளி ஆசிரியை ஒரு மாணவியை தலையில் அடித்து சாகடித்துவிட்டு, பின் பிணத்தை தண்ணிர்த் தொட்டியில் வீசி விட்டதாக இந்த செய்தி கூறுகிறது.

ஆனால், இதை எப்படி நம்புவது? நம் இந்திய நாட்டு சட்டங்களின் படி வன்முறை என்றால் அதை ஆண்தானே செய்வான். பெண்கள் எந்தவித வன்முறையும் செய்ய இயலாதவர்கள். ஆண்கள் மட்டுமே கிரிமினல்கள். இப்படித்தானே இந்திய குடும்ப வன்முறைச் சட்டம் அறுதியிட்டுக் கூறி வரையறுத்து, ஆண்களின் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறது!

இப்போது முழுச் செய்தியையும் படியுங்கள்:

திருச்சி: தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவி, ஆசிரியை அடித்ததில் இறந்தது தெரியவந்துள்ளது. ஆசிரியை மற்றும் அதை மறைக்க உதவிய பள்ளி அலுவலர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி., கலியமூர்த்தி கூறியதாவது:

மணப்பாறை புனித மரியன்னை துவக்கப்பள்ளியில், இரண்டு நாட்களுக்கு முன் பள்ளிக்கு வந்த மாணவி ஸ்ரீரோகிணி மர்மமான முறையில் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இறந்த மாணவியின் வகுப்பாசிரியை ஜெயராகினி (25) மேல் சந்தேகம் எழுந்தது. இறந்த மாணவி பள்ளிக்கே வரவில்லை என, அவர் கூறி வந்தது, எங்களுக்கு அவர் மேல் சந்தேகத்தை எழுப்பியது. மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மதிய உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தான் இறப்பு நிகழ்ந்துள்ளது; தண்ணீர் தொட்டியில் மூழ்கியதால் இறக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

ஆசிரியை ஜெயராகினியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. மாணவி விளையாடும் போது மற்றவர்களுடன் தகராறு செய்ததால், பிரம்பால் தலையில் அடித்ததாக கூறினார். அதில் ஸ்ரீரோகிணி மூர்ச்சையாகி இறந்துள்ளார். பின், வகுப்பறையிலேயே தூங்குவது போல் படுக்க வைத்து விட்டு, பள்ளி முடிந்த பின், அங்கு பணியாற்றும் அலுவலர்கள் ஆரோக்கியராஜ் மற்றும் சகாயராஜ் ஆகியோர் மூலம் மாணவியின் பிணத்தை, வேறு பள்ளிக்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டதாகவும் ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, மாணவி ஸ்ரீரோகிணியை கொலை செய்ததாக ஆசிரியை ஜெயராகினி, அவருக்கு உதவிய பள்ளி அலுவலர்கள் ஆரோக்கியராஜ், சகாயராஜ் ஆகியயோர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கலியமூர்த்தி கூறினார்.

(செய்தி: தினமலர். 28-03-2009)

நீதிபதிகள் மேல் செருப்பு வீசிய பெண்கள்

”குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2005” கூறுவது:

பகுதி 2:

வன்முறை செய்பவர்: ஆண்கள் மட்டும்

வன்முறைக்கு ஆளாவது: பெண்கள் மட்டும்

இந்த சட்டத்தின் அடிப்படை கருத்தாக்கம் என்னவென்றால், பெண்கள் மெல்லியர்கள், அவர்களுக்கு கோபமே கொள்ளத் தெரியாது, அவர்கள் மனத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ பிறர்மேல் வன்முறை பாராட்டவே இயலாதவர்கள் பாவம் அவர்கள். அத்துணை வன்முறையும் செய்பவர்கள் இந்த கிரிமினல் ஆண்கள்தான் என்பது.

==========================

இப்போது இன்றைய செய்தி:


நன்றி: தமிழ் ஓசை 21.03.2009

கொள்ளையும் கள்ளக் காதலும்

தூத்துக்குடி, மார்ச்.16- 2009.
ரூ.20 லட்சம் கொள்ளைபோனதாக நாடகமாடிய கூட்டுறவு வங்கி பெண் ஊழியர், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து ரூ.20 லட்சத்தை போலீசார் மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 42). இவருடைய மனைவி லீலா (35) விளாத்திகுளத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் அலுவலக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வங்கியின் வசூல் பணம் ரூ.20 லட்சத்தை விளாத்திகுளம் ஸ்டேட் வங்கியில் கட்டுவதற்கு சென்றதாகவும், அப்போது மர்ம ஆசாமி பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாகவும் லீலா விளாத்திகுளம் போலீசில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக போலீஸ் தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்து, லீலாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொள்ளை நடந்ததாக லீலா கூறியது பொய் என்பது தெரியவந்தது. பணத்தாசையில் அவரே பணத்தை மறைத்து வைத்துக்கொண்டு, கொள்ளைபோனதாக நாடகமாடியதுடன், பணத்தை கள்ளக்காதலனுக்கும் பங்கு போட்டு கொடுத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து லீலா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனக்கு 18 வயதில் திருமணம் நடந்தது. பிரவீன்குமார்(21), சந்திரமோகன்(20) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பாலிடெக்னிக்கில் படித்து வருகின்றனர். எனது கணவர் நீலமேகம் சிவகங்கையில் தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார்.

தூத்துக்குடியில் இருந்து தாப்பாத்திக்கு அரசு பஸ்சில் வரும்போது நடத்துனராக பணிபுரிந்த நெல்லையை சேர்ந்த முருகன்(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் உல்லாசமாக இருப்பதற்கு பணம் எப்படி சம்பாதிப்பது என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.

கடந்த 3 ஆண்டுகளாக விளாத்திகுளம் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகிறேன். வங்கியில் தினமும் வசூல் ஆகும் பணத்தை நானும் மற்றொரு பணியாளரும் சேர்ந்துதான் ஸ்டேட் வங்கியில் கட்டுவோம்.

சம்பவத்தன்று நான் தனியாக வங்கிக்கு ரூ.20 லட்சம் வசூல் பணத்தை கட்டுவதற்கு சென்றேன். அப்போது வங்கியின் வாசலில் பணப்பையை மர்ம ஆசாமி பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக கூச்சலிட்டேன். அதன்பின்பு விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் என்னிடம் விசாரணை செய்ததில் கொள்ளை நடந்ததாக நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் லீலா கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் லீலாவையும், அவரது கள்ளக்காதலன் கண்டக்டர் முருகனையும் கைது செய்தனர். லீலாவிடம் இருந்து ரூ.15 லட்சத்தையும், அவர் கள்ளக்காதலன் முருகனிடம் கொடுத்து இருந்த ரூ.5 லட்சத்தையும், பறிமுதல் செய்தனர். பின்பு 2 பேரையும் விளாத்திகுளம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு பாண்டியராஜ், 2 பேரையும் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

பிரிவுகள்:கள்ளக்காதல் குறிச்சொற்கள்:, , ,