தொகுப்பு

Posts Tagged ‘adultery’

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற கர்ப்பிணி மனைவி பிரவசத்திற்குப்பின் கைது

திருநெல்வேலி : தினமலர் – செப்டம்பர் 10, 2011 :: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=310751

நெல்லை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி இரு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

நெல்லை அருகே குறிச்சிக்குளம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாபு(35). டயர் கம்பெனியில் பணியாற்றினார். இவர் மனைவி உச்சிமாகாளி என்ற உமா(28). கடந்த ஜூலையில் பாபு வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தினர். பாபு சாவில் மர்மம் இருப்பதாக அவர் உறவினர்கள் கூறினர். பாபு உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. மூச்சு திணறி பாபு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் பாபுவின் மனைவி உமாவிற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உமாவிற்கும், தாழையூத்து ராஜவல்லிபுரத்தை சேர்ந்த லாரிஷெட் உரிமையாளர் நல்லசாமிக்கும் இடையே “கள்ளத்தொடர்பு’ இருந்துள்ளது. பாபு ஊரில் இல்லாத நாட்களில் இருவரும் ஜாலியாக இருந்தனர். இதை பாபு கண்டித்தார். இதுதொடர்பான தகராறில் சம்பவத்தன்று பாபுவின் முகத்தில் தலையணையை அமுக்கி நல்லசாமியும், உமாவும் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் நல்லசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். கணவன் உடலை படுக்கையில் போட்டு விட்டு எதுவும் தெரியாதது போல உமா கதறி நாடகமாடியுள்ளார்.

இச்சம்பவத்தின் போது உமா கர்ப்பிணியாக இருந்தார். சில நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து தாழையூத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை போலீசார் உமாவை கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் உமா கொக்கிரக்குளம் பெண்கள் சிறையில் தன் குழந்தையுடன் அடைக்கப்பட்டார். நல்லசாமியை போலீசார் தேடி வருகின்றனர். உமாவிற்கு சொந்த ஊர் மானூர்.

Advertisements

கள்ளக்காதலுக்காக தன் குழந்தையையே கொன்ற தாய்

mother-kills-her-child-for-being-a-hindrance-to-adulteryசிவகாசி: ஜூன் 16,2011,23. செய்தை: தினமலர்.

தொட்டிலில் தூங்கிய குழந்தையை, கள்ளக் காதல் மோகத்தால்,கொலை செய்த தாய், கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மதுரை பாண்டிக்கும், அனுப்பங்குளம் நயினார் மகள் துர்காதேவிக்கும், இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. துர்காதேவி கர்ப்பிணியான நான்கு மாதத்தில், கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்து கோரி, கணவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு சம்மதிக்காத துர்காதேவி, சேர்ந்து வாழ்வதாக கூறி, பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், துர்காதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பேச்சு வார்த்தைக்கு பின், 9 மாத குழந்தை முகேஷ் பாண்டியுடன், துர்காதேவி, கணவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். மாலையில் வீடு திரும்பிய கணவர், தொட்டிலில் தூங்கிய மகனை தூக்கினார்.பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை பார்த்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.பரிசோதித்த டாக்டர்,”குழந்தை இறந்துவிட்டது’ என்றார். சந்தேகம் அடைந்த மதுரை பாண்டி, சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார், துர்காதேவியிடம் விசாரித்தனர்.

விசாரணையில், திருமணத்திற்கு முன் அனுப்பங்குளத்தை சேர்ந்த குமாருடன் துர்காதேவிக்கு ஏற்பட்ட பழக்கம், திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்தது தெரிய வந்தது.மேலும், கணவருடன் வாழப் பிடிக்காமல், தந்தையுடன் வசித்த துர்காதேவியை, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ, குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்; “குழந்தை உயிருடன் இருப்பதால் தானே, கணவருடன் சேர்ந்து வாழ வலியுறுத்துகின்றனர்…’ என நினைத்த துர்காதேவி, தொட்டிலில் தூங்கிய குழந்தையை, மூச்சு திணறடித்து கொலை செய்தார் என்றும் தெரிந்தது.இதையடுத்து, துர்காதேவியை போலீசார் கைது செய்தனர்.

ஜோதிடம் மீது பழி போட்ட தாய்:

பெற்ற மகனை கொலை செய்த தாய், மகன் இறந்ததை நினைத்து அழுவது போல் நடித்தார். அப்போது,”அப்பாவிற்கும், மகனுக்கும் ஜாதகம் சரியில்லை; அப்பாவும், மகனும் நேருக்கு நேர் பார்த்தால் யாராவது ஒருவர் உயிருடன் இருக்க மாட்டார் என, ஜோதிடர் கூறியது, பலித்து விட்டதே’ எனக் கூறி, அழுது புலம்பினார்.

ஆனால், பச்சிளம் குழந்தையை கொலை செய்த அவர், சிறைக்கு போகும் முன், போலீசார் வாங்கி கொடுத்த மதிய உணவை ருசித்து சாப்பிட்டபடி, எந்தவித பதட்டமும் இல்லாமல் காணப்பட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=258917

கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவர் கொலை :கூலிப்படையினருடன் மனைவியும் கைது

இப்போதெல்லாம் நம் நாட்டில் கள்ளக்காதல் குடிசைத் தொழில் அன்றாடம் ஜாம்ஜாமென்று நடந்தேறுகிறது. இதே ரீதியில் போனால் அனைத்து நாளிதழ்களும் “கள்ளக்காதல் சிறப்பு இதழ்கள்” தினந்தோறும் வெளியிடும் நிலை சீக்கிறமே வரலாம்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை போட்டுத் தள்ளும் கலையில் நம் பெண்குலத் திலகங்கள் முழுத் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம். மேலும் நம் பெண்ணியவாதிகள் இதை ஒரு மாபெரும் வெற்றியாகக் கூட கொண்டாடலாம்!

இதோ ஒரு லேட்டஸ்ட் செய்தி (நன்றி: தினமலர் – ஏப்ரல் 29, 2011 – சுட்டி):

wife kills husband for obstructing illicit relationshipதிருவள்ளூர்:கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கழுத்தறுத்துக் கொலை செய்த பாசக்கார மனைவியை, கூலிப் படையினருடன் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார்(45); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி(38). இவர்களுக்கு திருமணமாகி அபிலாஷ்(15), அஜீத்(12) என இரண்டு மகன்களும், பிரீத்தா(10) என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலை செல்வகுமார் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஜோதி செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை திருவள்ளூர் எஸ்.பி., வனிதா அமைத்தார். விசாரணையில், செல்வகுமாரின் சொந்த ஊரான பெரம்பூர் அகரம் பகுதியை சேர்ந்த தைரியநாதன், அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றதும், செல்வகுமாரின் இறுதிச்சடங்கில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, அடக்கம் செய்யும் வரை இருந்துவிட்டுச் சென்றதும் தெரிந்தது.

மேலும்,தைரியநாதன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை செல்வகுமாருக்கு கடன் கொடுத்திருந்ததும், அதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்ததும், இங்கு வந்து செல்லும்போது செல்வகுமார் மனைவி ஜோதியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும் தெரிந்தது.செல்வகுமார் மனைவி ஜோதியை கைது செய்து விசாரித்தபோது, தைரியநாதனுடன் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாலும், கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், தைரியநாதன் உதவியோடு கணவரை கொலை செய்ய முடிவு செய்ததாக, அவர் போலீசாரிடம் கூறினார்மேலும் செல்வகுமாரை கொலை செய்வதற்காக தைரியநாதன், புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினரிடம் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி, ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, செல்வகுமார் மனைவி ஜோதி ஒத்துழைப்போடு 20ம் தேதி இரவு வேப்பம்பட்டு அம்பேத்கர் நகர் வந்தனர்.
அன்று இரவு செல்வகுமார் கீழ் தளத்தில் படுத்துறங்கியதும், வீட்டின் தெரு கதவை திறந்து வைத்துவிட்டு, பிள்ளைகளுடன் மாடியில் படுத்துக் கொண்ட ஜோதி, தைரியநாதனுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அங்கு கூலிப்படையுடன் வந்த தைரியநாதன், தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தியால் கழுத்தை அறுத்தும், முதுகு, வயிற்றுப் பகுதியில் அறுத்தும் கொலை செய்ததாக தைரியநாதன் போலீசாரிடம் கூறினார்.இதையடுத்து தைரியநாதன் அடையாளம் காட்ட, சென்னையில் பதுங்கியிருந்த கூலிப்படையினரான அகரம் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(24), கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(24), ஜானகிராமன்(24) ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேலு, தங்கமணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலை நேரில் பார்த்த கல்லூரி மாணவியை எரித்துக் கொலை செய்த தாய்

Mother murders daughterகடையநல்லூர்: தாயின் கள்ளக் காதலை கண்டித்த கல்லூரி மாணவியை தாயாரும், அவரது கள்ளக் காதலனும் சேர்ந்து எரித்துக் கொலை செய்துள்ளனர்.

கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன் இவரது மனைவி செண்பகவல்லி இவர்களது மகள் பத்மினி (18).என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார் கடந்த மாதம் 23ம் தேதி பத்மினி மர்மமான முறையில் உடல் கருகி இறந்தார்.

இது தொடர்பாக அவரது தாயார் செண்பகவல்லியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கள்ளக்காதலனான கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்த சுந்தரையா என்பவருடன் சேர்ந்து பத்மினியை தீவைத்து எரித்துக் கொன்றது தெரியவந்தது.

சுந்தரையா செண்பகவல்லியின் உறவினரும் ஆவார். செண்பகவல்லியின் கணவர் இல்லாத சமயத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை பத்மினி நேரில் பார்த்து பலமுறை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கடந்த மாதம் 23ம் தேதி பத்மினியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொன்று பின்னர் அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர்.

போலீசாரிடம் பத்மினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினர். போலீசார் விசாரணையில் இருவரும் சிக்கிக் கொண்டனர்.

சுந்தரையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

செய்தி: தட்ஸ்தமிழ்.

English summary
Mother and her lover were arrested for murdering daughter for opposing their illicit relationship in Kadayanallur town

கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது

சாணார்பட்டி – ஏப்ரல் 02,2011 : கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமேடையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(40).விவசாயக்கூலி. இவரது மனைவி வெள்ளையம்மாள்(40).இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். வெள்ளையம்மாளுக்கும், இதே ஊரைச்சேர்ந்த ஆரோக்கியசாமிக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்தது. வெள்ளைச்சாமி கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்ற வெள்ளைச்சாமியை, வெள்ளையம்மாளும் கள்ளக்காதலன் ஆரோக்கியச்சாமியும் சேர்ந்து கொலை செய்து, உடலை சிறுமலை அடிவாரம் பகுதியில் ஒரு பள்ளத்தில் மூடி, விட்டனர். பின், வெள்ளையம்மாளே சாணார்பட்டி போலீசில் தனது கணவர் வெள்ளைச்சாமி காணவில்லை என புகார் செய்தார்.போலீசாருக்கு வெள்ளையம்மாள் மீது சந்தேகம் ஏற்பட்டது. வெள்ளையம்மாளை விசாரித்ததில், அவர், “நானும் எனது கள்ளக்காதலன் ஆரோக்கியசாமியும் சேர்ந்து வெள்ளைச்சாமியை கொன்றோம்,” என ஒப்புக்கொண்டார்.

இறந்த வெள்ளைச்சாமி உடல் மதுரைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. போலீசார் வெள்ளையம்மாள், ஆரோக்கியசாமியை கைது செய்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=217101

ஆணை அடிமையாக்க அடாவடி நாடகம்

“குழந்தையைக் கடத்தி காதல் நாடகம் நடத்திய பெண்”

இன்னொருவர் குழந்தையை கடத்தி அது தனக்குப் பிறந்ததாகக் கூறி, தன்னுடன் இணைந்து வாழும்படி தனது முன்னாள் காதலரை நிர்ப்பந்திக்க கபட நாடகம் ஒன்றை அரங்கேற்றினார் ஒரு பெண்குலத் திலகம்

(பாவம், பேதைப் பெண்! பணத்திற்காக என்னென்ன ஃப்ராடெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது, இப்பாரில்! படாடோப வாழ்க்கைக்கோ பணம் தேவைபடுகிறது. அதை அள்ளிக் கொடுத்து அழுவதற்கோ ஒரு அபலை ஆண் தேவைபடுகிறான். பாவம் அந்தப் பெண்கள்!)

இப்போது செய்தி:-

Michelle Gopaulக்றைக்லிஸ்ட்[1] இணையதளத்தில் ஒரு பாலிவுட் இயக்குநர் கொடுத்த விளம்பரத்தில் – ஒரு இந்திய பெண் குழந்தை ஒன்று விளம்பரத்தில் நடிக்க தேவைப்படுகின்றது எனவும், ஒரு நாள் மட்டுமே நடித்தால் போதுமானது எனவும், 15, 000 டாலர் சம்பளம் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரு மாத வயதான ரோமா பட்டேலை அவர்களின் பெற்றோர் நடிப்பதற்கு சம்மதித்து வந்திருந்தனர்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன தெரியுமா, இந்த விளம்பரத்தைக் கொடுத்த பெண் – இந்தக் குழந்தையை எடுத்துச் சென்று தனது முன்னாள் காதலரிடம் இது அவர்களுக்கு பிறந்தது எனக் கூறி, அந்தக் குழந்தைக்கு முன்னாள் காதலர் தான் தந்தை எனக் கூறி அவருடன் இணைய முயற்சித்துள்ளார்.

ஆம் 25 வயதான் நியுயோர்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணும், மாடலும் ஆன மிச்சேல் கோபால் தான் இப்படி ரோமா பட்டேல் என்னும் அக்குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார். அந்தக் குழந்தையை தனக்குப் பிறந்ததாகக் கூறி தன்னுடன் இணைந்து வாழும்படி தனது முன்னாள் காதலரை நிர்பந்திக்க அவர் போட்ட ஒரு நாடகம் வினையில் முடிந்தது.

சம்பவம் நடந்த அன்று இணையதள விளம்பரத்தைக் கண்ட ரோமா பட்டேலின் பெற்றோர் டொரோண்டோ நகரின் எட்டோபிக்கோ பகுதியில் இருக்கும் மிச்சேல் கோபாலின் அலுவலகத்துக்கு சென்றிருந்தனர். அங்கு அவர்களைப் போல மேலும் மூன்று தம்பதிகளும் தமதுக் குழந்தைகளோடு வந்திருந்தனர். அவற்றில் ரோமா பட்டேல் தான் நடிப்பதற்கு சிறந்த குழந்தை என தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். பிறகு சில பல விண்ணப்பங்களை எழுதி தரும்படி அவர் கூறவே அக்குழந்தையை மிச்சேல் கோபால் பெற்றுக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தார்.

விண்ணப்பங்களை நிரப்பி விட்டு குழந்தையை தேடிய பெற்றோர்கள், அந்த அறைக்குள் நுழைந்துப் பார்த்தப் போது குழந்தையையும், மிச்சேல் கோபாலையும் காணாமல் திகைத்தனர். உடனடியாக காவலரிடம் புகார் கொடுத்தனர் அவர்கள்.

இதற்கிடையில் மிச்சேல் கோபால் அக்குழந்தையை ஒரு டாக்சியில் எடுத்துக் கொண்டு ஸ்காபுறோ பகுதியில் இருக்கும் அவரது காதலர் வீட்டுக்கு வந்தார். அங்குள்ளவர்களிடம் இந்தக் குழந்தை தனக்கும், அவரது காதலருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் பிறந்தது எனக் கூறி நாடகம் ஆடியுள்ளார். இதற்கு முன்னரே அவர் கர்ப்பமாக இருப்பதாக அனைவரிடம் கூறியும், பேஸ்புக்கில் பதிவிட்டும் வந்திருந்ததும் தெரியவந்துள்ளது.

காதலர் வீட்டில் இந்தக் குழந்தையைக் கவனித்த காதலனின் சகோதரிகள் மிச்சேல் கோபால் பொய் கூறுகின்றாரோ என சந்தேகம் கொண்டனர். இதற்கிடையில் செய்திகளில் குழந்தைக் காணமல் போனது அறிவிக்கப்பட்டு இருந்ததால், சகோதரிகள் காவல்துறைக்கு உடனே தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் மிச்சேல் கோபாலைக் கையும் களவுமாக கைது செய்தனர்.

குழந்தைக் கிடைத்தும் ரோமா பட்டேலின் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்தனர். நல்ல குடும்பத்து பெண்ணாகவும், எந்த வித குற்றப் பின்னணியும் இல்லாத மிச்சேல் கோபாலின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவருக்கு நீதிமன்றம் 2 1/2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டது.

இந்த சம்பவம் டொரோண்டோ நகரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நன்றி: தமிழ்ச்சரம்.

————-

[1] “கிரைக்லிஸ்ட்” (www.craiglist.com) என்னும் வலைத்தளம் பலான விளம்பரங்களுக்கு பெயர் போனது! அங்கு சென்று சிறிது எட்டிப் பாருங்கள் – நம் பண்பாடு மிக்க பெண்குலத் திலகங்களின் வண்டவாளங்களை! குடும்பப் பெண்கள் பலர் – ஆண், பெண் இருவர் இணைந்த (டகால்டி) உறவுகள் தேவை – என்றெல்லாம் விளம்பரம் கொடுத்திருப்பார்கள்! என்னமா அலையறங்க தெரியுமா, தவறான (வரைட்டியான) செக்ஸுக்கு!

ஆனால் நம் பெண்ணியவாதிகளும், அரசும், தீர்ப்பளிப்பவர்களும் அது போன்ற மேட்டுக்குடிப் பெண்களுக்கு சாதகமாகவும், அவர்களின் கணவர்களுக்கு எதிராகவும் தான் நடந்துகொண்டு வருகிறது.

இந்தப் போக்கு தொடருமானால் நம் கம்யூனிஸ்டுகள் ஓயாமல் கோஷமிட்டுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டம் எதிர்காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்தான் நிகழப் போகிறதோ என்று அச்சமாக இருக்கிறது! இப்பவே திருமணம், குடும்ப வாழ்வு போன்ற்வற்றை செல்லாக்காசாக்கி விட்டார்கள்!

ஆண்கள் நலம் காக்க முற்படுவீர் அரசியல் கட்சிகளே!

Aimwa Logoஅகில இந்திய ஆண்கள் நல இயக்கம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கைகள் அடங்கிய வேண்டுகோளை இங்கு காணலாம்:

அரசியல் கட்சிகளுக்கு AIMWA முன்வைத்துள்ள கோரிக்கைகள்

AIMWA கோரிக்கைகள் - பக்கம்-2

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பிடிஎஃப் வடிவத்தில் பெற (to download the above letter in PDF format) இங்கே கிளிக் செய்யவும்.