தொகுப்பு

Archive for 2009-11-25

‘டிவி’ தொடர் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து: தீர்ப்பை எதிர்த்து கணவன் அப்பீல்

Wife threatens divorce for the sake of television serialமும்பை : “எனக்கு பிடித்த “டிவி’ தொடர்களை பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்; இதனால், எங்களுக்குள் தினமும் சண்டை ஏற்படுகிறது. இதை மனதில் வைத்து, பலவகையில் என்னை துன்புறுத்துகிறார்!’ – இப்படி சொல்லி, குடும்ப கோர்ட்டில் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார் மனைவி. “திருமணத்தை முறிக்க விரும்பவில்லை; நான் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்’ என்று கணவன் அப்பீல் செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக இருக்கிறார் ஹர்ஷத்(34); இவர் மனைவி சீமா (31). சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்; திருமணம் ஆகி எட்டாண்டு ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. “என் கணவர் என்னை பலவகையில் கொடுமைப்படுத்துகிறார். எனக்கு பிடித்தமான “டிவி’ தொடர்களை பார்க்க அனுமதிப்பதில்லை. இது தான் சண்டைகளுக்கு காரணம். அதனால், எனக்கு சரியான பாதுகாப்பு அளிப்பதில்லை. நள்ளிரவில் தனியாக ஆட்டோவில் பயணிக்க வைக்கிறார். இது போன்ற சித்ரவதைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்று குடும்ப நல கோர்ட்டில் மனு செய்தார் சீமா. வழக்கை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் கணவன் ஹர்ஷத் அப்பீல் செய்தார்.

“இந்திய சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம் திருமண பந்தம். அதை சாதாரணமாக முறிக்க முடியாது. “எந்த ஆதாரமும் இல்லாமல், என் மனைவி என் மீது சொன்னதை வைத்து விவாகரத்து கொடுத்திருப்பது சரியல்ல; திருமண முறிவு தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் பல முறை சுட்டிக்காட்டிய கருத்துக்களை குடும்ப நல கோர்ட் காற்றில் பறக்க விட்டு, இப்படி விவாகரத்து அளித்துள்ளது. “எனக்கு திருமண முறிவுவேண்டாம். அதில் விருப்பமில்லை. என் குழந்தையை நான் வளர்க்க அனுமதிக்க வேண்டும்’ என்று அப்பீல் மனுவில் அவர் கூறியுள்ளார்.

==================

நல்ல வேளை, இந்தப் பெண்மணி விவாகரத்தோடு நிறுத்தி விட்டார். வேறு சில பெண்குலத் திலகங்கள் இன்னேரம் சட்டப் புத்தகத்தின் இண்டு இடுக்குகளில் உள்ள அத்தனை சட்டப் பிரிவுகளையும் கையிலெடுத்து கேசு மேல் கேசாக கணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது போட்டு நடுத்தெருவில் நிறுத்தியிருப்பார்கள்.

சரி, நீதி(!)மன்றங்கள் அவற்றுக்குச் செவி சாய்க்குமா என்றுதானே கேட்கிறீர்கள். ஹும். உங்களுக்கு நாட்டு நடப்பே தெரியாது போலிருக்கிறது!!