தொகுப்பு

Archive for the ‘498a’ Category

இதோ இன்னொரு 498-A கேசு!

Sec 498A of IPCவரதட்சணை கேட்டு இளம்பெண் சித்திரவதை: மாப்பிள்ளை வீட்டார் கைது

திங்கள்கிழமை, மே 23, 2011, செய்தி: தட்ஸ்தமிழ்

கோவை: வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்திரவதை செய்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரை போலீசார் கைது செய்தனர்.

திருமணம்

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த சந்தியாவிற்கும், செளரிபாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரனுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாஸ்கரன் செளரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராகப் பணியாற்றி வருகிறார்.

திருமணத்தின் போதே 25 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் மணமகனுக்கு பைக் ஆகியன சந்தியாவின் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது.

கருவை அழி

திருமணம் ஆன சில நாட்களிலேயே பாஸ்கரனின் தாயும், தந்தையும் மருமகள் சந்தியாவை கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இந்நிலையில் சந்தியா கர்ப்பம் தரித்தார்.

அவரது கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை தான் என்பதை அறிந்து கொண்ட இருவரும் கருவைக் கலைக்கச் சொல்லி தொடர்ந்து இம்சை செய்துள்ளனர். இதனால் கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தார் சந்தியா. அங்கேயே தங்கி பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.

குடும்பத்தோடு கைது

இந்நிலையில் கணவரோடு சேர்ந்து வாழ சந்தியா கூடுதலாக ரூ. 2 லட்சம் வரதட்சணை தரவேண்டும் என பாஸ்கரனின் வீட்டிலிருந்து தொடர்ந்து துன்புறுத்தல்கள் வந்து கொண்டிருந்ததால், சந்தியா கோவை மாநகர போலீசில் புகார் செய்தார். இதனை அடுத்து பாஸ்கரன், அவரது பெற்றோர் மற்றும் தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

———–

498ஏ கேசுகளின் பேரில் கைது நடவடிக்கை கூடாது என்று உயர்நீதிமன்றமும், டிஜிபியும் அறிவுறுத்திய பிறகும் கூட இது போன்ற கைதுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கூடிய சீக்கிறம் நம் நாட்டில் திருமணம் ஆகிய அனத்து ஆண்களும் 498ஏ கேசில் உள்ளே போகும் நிலை கட்டாயம் வரும்!

Advertisements

போடுங்கம்மா கேசு, 498A சட்டத்தைப் பார்த்து!

விருதுநகர், அய்யனார் நகரை சேர்ந்தவர் தங்கவேல் மகள் காளீஸ்வரி(22). இவருக்கும் சிவகாசி, ஆறுமுகம் காலனி, ரிசர்வ் லைனை சேர்ந்த கருப்பையா மகன் மணிகண்டனுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

வரதட்சணையாக 10 பவுன் மற்றும் 30 ஆயிரம் தரப்பட்டது.

மூன்று மாதத்திற்கு பின் மேலும் 15 பவுன் மற்றும் 2 லட்ச ரூபாய் கேட்டு கணவர் மணிகண்டன், மாமியார் சீதாலட்சுமி, செல்வி, மகேஸ்வரி, ஆறுமுகம், ஈஸ்வரன் ஆகியோர் கொடுமைபடுத்துவதாக விருதுநகர் ஜே.எம். கோர்டில் காளீஸ்வரி மனு தாக்கல் செய்தார்.

கோர்ட் உத்தரவு படி, ஆறு பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

செய்தி: தினமலர். மார்ச் 17,2011

கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு 498A புகார்

போட்டாய்ங்கய்யா, போட்டாங்கய்யா, 498ஏ கேசு போட்டாங்கய்யா!

இதுபோல் பெரிய மனுஷயங்கய்ய ரொம்பபேர் போட்டாத்தான், இந்த சட்டத்தோட முழு மகத்துவமும் மக்களுக்கும், ஆள்பவர்களுக்கும் புரியும்.

ஆனால் இது போதாது – அரசியர் பிரமுகர்கள், போலீஸ் உயரதிகாரிகள், பிரபல வக்கீல்கள், தீர்ப்பளிப்பவர்கள் – இவர்களையெல்லாம் இது போன்ற 498ஏ கேசுகள் பெருமளவில் என்று தீண்டுகிறதோ, அப்போதுதான் இதற்கு ஒரு விமோசனம் கிட்டும்.

அந்த நன்னாளுக்காக காத்திருப்போமாக!!

இப்போது செய்தி: (தினமலர்: மார்ச் 16,2011)

சிரஞ்சீவியின் மகள் போட்ட 498ஏ கேசுவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, போலீசில் புகார் செய்துள்ளார். மாமனார் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, ஐதராபாத் நகரைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஸ்ரீஜா தெரிவித்தார். பின்னர், ஐதராபாத் பஷீர்பாக் பகுதி மகளிர் காவல் நிலையத்திற்கு ரகசியமாக வந்த சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா, தன் புகாரை மகளிர் போலீஸ் நிலைய ஆய்வாளரிடம் வழங்கினார்.

இதையடுத்து, ஸ்ரீஜாவின் கணவர் ஷிரிஸ் பரத்வாஜ், அவரது தாய், தந்தையை, போலீசார், 14ம் தேதி இரவு கைது செய்தனர். (அதானே பார்த்தேன், 498ஏ போடறதெ இந்த பட்டாபிஷேகத்திற்காகத்தானே!)

காதல் திருமணம்:

சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் ஷிரிஸ் பரத்வாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியின் கடும் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜா, பரத்வாஜ் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீஜாவிற்கு குழந்தை பிறந்த பின், சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி – ஷிரிஸ் பரத்வாஜ் ஆகிய இரு குடும்பத்தினரிடையே பேசியதால் எதிர்ப்பை கை விட்ட சிரஞ்சீவி, மகள் ஸ்ரீஜாவை தன் குடும்பத்தில் இணைத்து கொண்டார்.
(படம் நன்றி – தட்ஸ்தமிழ்)

முந்தைய செய்திகள்:

1. தட்ஸ்தமிழ்:

ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா(21) தனது காதல் கணவர் ஸ்ரீரீஷ் பரத்வாஜ் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீஜா கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எனக்கும், பரத்வாஜூக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். தற்போது எங்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாகவே எனது கணவர் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துகிறார்.

திருமணத்தின்போதும், அதன் பிறகும் என இந்நாள் வரை பல கோடி ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளோம். அதெல்லாம் போதாது என்று தற்போது ரூ. 1.5 கோடி வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்துகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அவரது புகாரின்பேரில் ஸ்ரீஸ் பரத்வாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (ஐபி.சி 498 ஏ) பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
========

2. தினமலர்:

காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார்

மார்ச் 15,2011

ஐதராபாத்: ரூ.1.5 ‌கோடி கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக நடிகர் சிரஞ்சீவியின் மகள் தனது கணவர் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.. ஆந்திராவில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.இவரது இளைய மகள் ஸ்ரீஜா(21) , நேற்று மத்திய குற்றப்பிரிவு மகளிர் போலீசில் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றினை அளித்தார். தனக்கும் (ஸ்ரீஜா) கணவர் ஸ்ரீஸ்பரத்வாஜூக்கும், கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எ‌ன்னை ( கணவர் ஸ்ரீஸ்பரத்வாஜ்) குடித்து விட்டு அடித்து சித்ரவதை செய்கிறார். ஏற்கனவே திருமணத்தின் போதும், பிறகும் என இதுவரை ரூ. பல கோடி வரதட்சணையாக கொடுத்தும் போதாது என்றும், கூடுதலாக ரூ. 1.5 கோடி வரதட்சணை வேண்டு்ம் எனக் கோரியும் அடித்து துன்புறுத்தினார். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீஸ்பரத்வாஜ், மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (ஐபி.சி 498-ஏ) பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆண் பாவம் பொல்லாதுங்கோ!

False complaints fo sexual harassment of women“பகுத்தறிவு” பதிவில் கண்ட இன்றைய ஆண்களின் பரிதாப நிலையை விவரிக்கும் ஒரு சிறந்த கட்டுரையின் ஒரு பகுதி:-

ஆனால் இன்றைய மொத்தப் பெண்களும் தங்களுக்குத் தேவையான ஆண் எத்தகையவன் என்று தெரிவு செய்ய அவர்கள் வைத்திருக்கும் அளவு கோல் எது என்பது தான் மிகுந்த உறுத்தலுக்கு உள்ளாகும் விஷயமாக இருக்கிறது. அதாவது இவர்களின் மொத்த அளவுகோலும் பணம் மட்டுமே என்றாகி இருக்கிறது. பணம் பணம் பணம் மட்டுமே அளவு கோல், வேறெதுவும் இல்லை.

நல்ல குடும்பம், படிப்பு, குடும்பத்தைக் காப்பாற்றக் கூடிய நாகரீகமான சம்பளம், அழகு என்று இருந்தாலும் தற்கால பெண்கள் ஆண்களை எக்ஸ்ட்ரா பேக்கேஜுகளுடன் எதிர் பார்க்கிறார்கள். ஆடம்பர வாழ்வை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்பதே அதிகம் உறுத்தலான விஷயமாக இருக்கிறது எனலாம். அடிப்படை வசதிகள் இருந்தாலும் அது போதாது ஆடம்பர வசதிகளுடன் இருப்பவன் தான் வேண்டும் என்ற பேராசை பெண்களிடம் அதிகரித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இளம் பெண் ஒருவர் இப்படித் தெரிவிக்கிறார் “நான் விதவிதமாக ஆடை அணிவேன். ஆடைக்குத்தகுந்த காலனியும் விதவிதமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகும் அப்படி எனக்கு வேண்டியதை எல்லாம் வாங்கித்தரும் ஆண்மகன் தான் வேண்டும்” என்கிறாள். “ஒரு வேளை திருமனத்திற்குப் பின் அப்படி கணவன் வாங்கித்தரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு அவள் சொன்ன பதில் “டைவேர்ஸ் பன்னிடுவேன்.” தற்காலப் பெண்களில் பலருக்கு ஆண்மகன் என்றால் நடமாடும் ஏடிஎம் மிஷின், கேட்டதை வாங்கித்தரும் ஜீ பூம் பா பூதம். தாங்கள் நினைத்துப் பார்த்திராத ராஜ போகத்தைக் கொடுக்கப்போகும் ‘சிண்ட்ரெல்லா’ இளவரசன்.

ஒரு டிவி சீரியலில் வரும் காட்சி, ஒரு ஆண் தன் காதலியிடம் காதலைத் தெரிவிக்கிறான்.அந்தப் எண்ணோ “உன்னிடம் காசிருந்தா சொல்லு கட்டிக்கிறேன், இல்லேன்னா வேறாளப்பாரு” என்று பேசுகிறாள். இவையெல்லாம் தற்கால பெண்களின் மனோநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாகவே இருக்கின்றன.

சில பெண்களுக்கு வெளிநாட்டு மாப்பிளை என்றால் மோகம். இந்த ஆண்மகன் கஷ்டப்பட்டு படிப்பான். அவனது பெற்றோர்கள் வங்கிக்கடனை வாங்கி, வெளிக்கடனும் வாங்கி கஷ்டப்பட்டுப் படிக்க வைப்பார்கள். பின் கண்ட கண்ட கான்ஸ்லேட் வாசலில் நின்று விசா பெற்று, தட்டித் தடுமாறி ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, அங்கே சென்று அறிமுகம் இல்லாத நபர்கள், புரியாத பாஷை என்று எல்லாவற்றையும் கற்று, கையைக் காலைச் சுட்டு சமைத்துச் சாப்பிட்டு, ஊர் ஊராகச் சுற்றி – வாழும் இடத்தைத் தெரிந்து வைத்து ‘அப்பாடா’ என்று இருக்கும் போது, வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேண்டும் என்று மோகம் கொண்ட பெண் நோகாமல் கல்யானம் என்ற பெயரில் இவனைக் கட்டிக் கொண்டு அவனோடு போய் செட்டிலாகி விடுவாள். அவனும் இவளுக்கு டூரிஸ்ட் கைடு போல ஊரெல்லாம் சுற்றிக் காண்பித்து மகிழ்விப்பான்.

இவனைப் பெற்ற அப்பாவி அம்மா அப்பாக்கள் கடைசி வரை தன் பிள்ளை குடியிருக்கும் நாட்டை கம்பியூட்டர் போட்டோக்களில் பார்ப்பது தான் மிச்சமாகியிருக்கும். அனுபவிப்பள் என்னவோ கல்யானம் என்ற வியாபாரத்தில் அமெரிக்க மாப்பிள்ளையை வென்றவளாகத்தான் தான் என்றாகியிருக்கும்.

ஆனால் இதெல்லாம் பேசினால் ஆண்கள் வரதட்சனை வாங்கவில்லையா, நகை கேட்கவில்லையா என்ற முப்பது வருட பழம்பஞ்சாங்கத்தை உடனே கையிலெடுத்துப் படிக்கத்துவங்கி விடுவார்கள். அதையும் பார்ப்போம்.

ஒரு காலத்தில் ஆண்கள் வரதட்சினை கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டானது. அதற்கெதிராக கடுமையான பிரசாரங்களும் வரதட்சினைக் கொடுமைக்கெதிரான சட்டங்களும் உண்டானது. (இப்போது கணவனைப் பழிவாங்க பெண்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல ஆயுதமாக அது உபயோகப்படுகிறது). ஆனால் அத்தகைய காலத்தில் கூட நயா பைசா வரதட்சனை வாங்காமல் ஏழைப் பெண்களை திருமனம் செய்துகொண்ட ஆண்கள் நிறையபேர் இருந்ததுண்டு. அப்படிப் பட்ட ஆண்களை மிக நல்ல குடிமகனாகக் காட்டி திரைப்படங்களும் வந்தன என்றால் மறுக்கமுடியாது.

ஆனால் இன்றைய கல்விகற்ற நாகரீகப் பெண்கள் செய்யும் காரியம் ஆண்கள் செய்த கொடுமைகளைத் திரும்பச் செய்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. பெண் சமூகத்தின் பழிவாங்கும் படலமாக சில பெண்களாலேயே சொல்லப்படுகிறது. அதிக பணம் கொடுப்பவனையே மணமுடிப்பேன் என்று தனக்குத்தானே விலை வைத்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த விதத்திலும் குற்ற உணர்ச்சி என்பதே இல்லை எனலாம். இதெல்லாம் எங்கள் சுதந்திரம் என்ற ரீதியில் செயல்படுவது ஆண்களால் உண்டான சமூக பாதிப்பை விட அதிக தாக்கத்தை உண்டாக்குகிறது என்றே என்பதே நிதர்சனம். பெண்கள் இப்படி தனக்குத் தானே விலை பேசி அதற்குத் திருமணம் என்று பெயர் சூட்டிக் கொள்வதை பெண்களின் முன்னேற்றமாகப் பார்க்கும் நிலையில் தான் இன்னும் பெண்ணிய ஆர்வலர்கள் இருக்கிறார்கள். இன்னும் பேசினால் “ஆம்பளைங்க மட்டும் அந்தக்காலத்தில் செய்யவில்லையா?” என்று கேட்பார்கள்.

ஒரு விஷயத்தை இதில் குறிப்பிட வேண்டும். அந்த காலத்தில் வரதட்சனை வாங்கி திருமணம் செய்யும் ஆண்களை விலைக்கு விற்கப்படும் மாடுகள் என்றும், காசு வாங்கி பிள்ளையைக் கொடுக்கும் ஆண்களின் பெற்றோர்களை, பிள்ளைகளை விற்கும் வியாபாரிகள் என்றும் பெண்கள் அழைத்தனர். பல சினிமாக்கள், டிவி நாடகங்கள் எல்லாம் ஆண்களையும் அவர்தம் பெற்றோர்களையும் இப்படி ஏசித்தான் ஒரு குற்ற உணர்ச்சியை உண்டாக்கினார்கள்.

சரி அப்படியென்றால் இந்தக்காலத்தில் அதிக மாதச்சம்பளம் கொடுக்கும் ஆணுக்குத் தான் என்னைத் தருவேன் என்றும், சொந்த வீடும் சொகுசு வாழ்க்கையும் கொடுக்கும் ஆண் யாரோ அவனுக்குத் தான் என்னைத் தருவேன் என்று கூறும் பெண்ணையும் கன்னித்தன்மை வியாபாரிகள் என்று ஏன் சொல்லக்கூடாது? மாதம் இவ்வளவு பணம் தர முடிந்தால் தான் என்னைத் தருவேன் என்று கூறும் பெண்களை வாடகை மனைவிகள் என்று ஏன் அழைக்கக்கூடாது? கல்யானம் என்ற பெயரில் கன்னித் தன்மை வியாபாரம் செய்யத்தான் பெண்கள் கல்விகற்றார்களா? என்ற கேள்வி எழுகிறது. சொகுசான சுகபோகம் கொடுக்கும் பணம் வாய்த்தவனுக்கே என்னைத் தருவேன் என்று கூறும் குடும்பப் பெண்ணுக்கும், பணம் கொடுத்தால் என்னைத் தருகிறேன் என்று கூறும் வேசிப்பெண்ணுக்கும் வித்தியாசம் என்ன இருக்க முடியும்?. ஒரே ஒரு வித்தியாசம் தான். முன்னவளுக்கு ‘மன்த்லி பேமென்ட்’, பின்னவளுக்கு ‘ஒன் டைம் பேமென்ட்’. காசில்லாதவனுக்கு ரெண்டுமே கிடைக்காது. அது தானே நிதர்சனம். காசில்லாமல் கூப்பிட்டால் வேசியும் கிடைக்கமாட்டாள், பெண்டாட்டியும் கிடைக்கமாட்டாள் என்றால் இருவகைப் பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என்று விளங்கவில்லை.

ஆனால் இன்றைய கல்யாணச்சந்தை இது தான். அது தான் நிதர்சனம். இன்றைய கல்யாணங்கள் பெண்களாலேயே நிச்சயிக்கப்படுகிறது. ஆம், கல்யாணம் என்ற பெயரில் கன்னித்தன்மை வியாபாரம் நடக்கிறது. பணமிருப்பவன் வாங்குவான். பணமில்லாதவன்….???

இதில் பரிதாபம் என்னவென்றால், வரதட்சனைக் கொடுமைக்காக பேசுவதற்கு ஊடகங்கள், சினிமாக்கள், மாதர் சங்கங்கள், அரசியல் தலைவர்கள் என்று அனைவரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் இன்றைய பெண்கள் கல்யாணம் என்ற பெயரில் நடத்தும் கன்னித்தன்மை வியாபாரத்தை விமர்சித்து எழுதவோ, பேசவோ எந்த ஊடகங்களோ, அரசியல் தலைவர்களோ சமூக ஆர்வலர்களோ இல்லை. தாய்குலத்திற்காக பேசினால் ஓட்டு கிடைக்கும், படம் எடுத்தால் ஓடும். ஆனால் ஆண்களுக்காக பேசினால் காசு பேராது. தேங்காய் மூடி கேஸாகிவிடும். போதாக்குறைக்கு மாதர்குல திலகங்களின் எதிர்ப்புகளையும் வாங்க வேண்டியிருக்குமே! அதனால் அமைதி காக்கின்றனர் போலும்.

ஆண்கள் கூட பெரும்பாலும் இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச வெட்கப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. வெளிப்படையாக தாங்கள் திருமணம் செய்ய கஷ்டப்படுகிறோம் என்று கூறிவிட்டால் பெண்களிடம் தோற்றுப்போய் விட்டோம் என்ற தோற்றம் உண்டாகிவிடுமே என்ற ஈகோ தடுக்கலாம்! அதனாலேயே நிறைய ஆண்கள் இது விஷயமாக வெளிப்படையாக வாய்திறப்பதில்லை.

அப்படியென்றால் பணம் குறைவாக இருக்கும் ஆண்கள் யாருக்கும் திருமணம் நடப்பதே இல்லையா! நல்ல பெண்களே கிடையாதா என்று கோபப்பட்டு கும்மியடிக்க கிளம்பி விடாதீர்கள். மேலே சொல்லப்பட்டவை எல்லாம் இன்றைய கல்யாணச் சந்தையின் பொது விதிகள். தங்களிடமே குறை இருக்கும் பெண்கள் சில சமரசங்களுடன் சில ஆண்களை ஏற்றுக்கொள்கிறார்கள். மனப்பூர்வமாக வாழ்கிறார்களா என்பது பெண்களுக்கே வெளிச்சம்! இல்லையென்றால் முருங்கை மரம் தான்! ஒரு சில விதி விலக்குகளும் அவரவர் நிறை குறைகளுக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து கட்டிக்கொள்வதும் ஆங்காங்கே சமூகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் பொதுவான சமூகத்தின் நிலையென கொள்ள முடியாது.

இங்கே சொல்லப்பட்டவை எல்லாம் இன்றைய சமூகத்தில் நடுத்தர குடும்பங்களின் ஆண் பிள்ளைகளும் அவர்தம் குடும்பங்களும் எதிர் கொள்ளும் சங்கடங்களைப் பற்றிய ஒரு அலசலே!

இந்தப்பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு திருமணம் என்பதன் செலவைக் குறைக்க மொத்த சமூகமும் முடிவு செய்ய வேண்டும். திருமணம் என்பது வீட்டு விசேஷம் என்ற நிலை வரவேண்டும். அவரவர் வீட்டுப் பூஜை அரையில் பெற்றோர், அவர் உடன் பிறந்தோர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் என்ற சிரிய வட்டதின் முன்பாக ஒரு மாலையை மாற்றினோமா அவரவர் விருப்பப்படி தாலி கட்டுவதோ, மோதிரம் போடுவதோ செய்துகொண்டு அப்படியே வீட்டிலேயே சப்பிட்டு அடுத்த நாள் காரியத்தைப் பார்த்தோமா என்று இருக்கத் துவங்கினால் திருமணம் என்பது எல்லோருக்கும் எளிதாக நடக்கும். ஆனால் திருமணம் என்பது ஒரு சமூக நிகழ்வாகவும், கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டு விட்டதால் அந்நிகழ்வு அதிக செலவு பிடிக்கும் காரியமாகிவிட்டது.

சில லட்சங்கள் செலவு செய்து திருமணம் செய்ய வேண்டி இருப்பதால் தங்கள் குடும்பத்திற்கு வரப்போகும் வரன் அந்த அளவிற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு உண்டாகிறது. இதுவே பின்னால் ஒரு வரன் தேடும் குறியீடாக மாறி சமூகத்தைப் பாதிக்கிறது. செலவில்லாத் திருமணமே இப்பிரச்சனைக்கு ஒருவகையில் தீர்வாக அமையக்கூடும். பஞ்சாபில் சீக்கிய குருமார்கள் ஒரு சட்டத்தைப் பிறப்பித்தார்கள். அதாவது அதிக செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்வது தடை செய்யப்படுகிறது என்றும், திருமணம் மிக எளிமையாகவே நடக்க வேண்டும். மீறுவோர் தமது மதக்கோட்பாடுகளை மீறுவதாக விலக்கி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தனர். காரணம் கல்யாணம் காஸ்ட்லியாகி விட்டால் காசில்லாதவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதே!

எது எப்படியோ…! கணவன் மனைவி என்ற தாம்பத்திய உறவை முடிவு செய்ய பணம் மட்டுமே அளவுகோலாக பார்க்கப்படக் கூடாது என்பதை இருபாலரும் உணர்ந்தாலொழிய இதற்குத் தீர்வு கிடைப்பது கஷ்டமே!

ஆண் பாவம் கூட பொல்லாததுங்கோ!

நன்றி: பகுத்தறிவு பதிவு.

வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் துஷ்பிரயோகம்-மறு பரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

False dowry harassment casesடெல்லி: வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதால், அதுகுறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் அளித்த உத்தரவில்:

அண்மைக்காலமாக வரதட்சணை கொடுமை வழக்குகள் மிகவும் அதிகரித்து விட்டன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இவற்றில் பல வழக்குகள் உண்மைக்கு புறம்பானதாகவும், தவறான நோக்கத்துக்காகவும் தொடரப்படுகின்றன.

இது போன்ற வழக்குகளை கீழ் கோர்ட்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஒரு சில வழக்குகளில் வெளிநாட்டில் இருக்கும் கணவரது உறவினர்கள் மீதும், வீட்டுக்கு எப்போதாவது வரும் உறவினர்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.

குற்ற விசாரணை கள் சம்பந்தப்பட்ட அனைவர் மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தி விடுகின்றன. நிரபராதிகள் என தீர்ப்பு வந்தாலும் வடுக்கள் மறைய வாய்ப்பில்லை.

கூறப்படும் குற்றச்சாட்டுகள் நடைமுறைக்கு சாத்தியமா என்பதை கோர்ட்கள் ஆராய வேண்டும். பல வழக்குகளில் கணவன் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் சுமத்தப்படும் புகார்கள் மிகைப்படுத்தி கூறப்படுகின்றன. உண்மை எது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.

சில சந்தர்ப்பங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறிய பின்னரும், உண்மை இதுதான் என தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது. மக்களின் கருத்தைக் கேட்டு இந்த சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இதற்கான நடவடிக்கைகளை தொடங்க இந்த தீர்ப்பின் நகலை மத்திய சட்ட அமைச்சருக்கு அனுப்பி வைக்க உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தனர்.

இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆண்கள் அமைப்புகளை எதிர்த்து போராடி வருகின்றனர். சமீபத்தில் கூட இந்த சட்டத்தைக் கண்டித்து ஏற்காட்டில் நடந்த ஆண்கள் அமைப்பின் கூட்டத்தில் பேசப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

புதன்கிழமை, ஆகஸ்ட் 18, 2010: News: Thatstamil.com

Comments to the original news item:

“ AS PER OFFICIAL RECORDS (AS OF NOW) 98 % COMPLAINTS FILED UNDER ‘ DOMESTIC VIOLENCE ACT-2005’ ARE BASELESS , FALSE, AND IT IS REVENGEFUL /EGOISTIC, SADISTIC TOWARDS HUSBANDS. ALSO THE FACT IS AUTHORITIES HANDS ARE TIED “ SO THEY HAVE TO OBEY THE COMPLAINT AND CHARGE (ARREST )EVERY BODY MENTIONED IN THE COMPLAINT GIVEN BY THE SO CALLE D WIFE , IRRESPECTIVE OF HER MENTAL STATE , CHARACTER , BACKGROUND . This is what happening now .THE SO CALLED WIFE HAS FULL POWER UNDER THIS ACT…,

Couple of months back in the FIR of a dowry case they have included a 2 month old baby also.

அப்பாடா எங்க வயித்துல பால வார்தீங்கட எசமானே ..கோடி புண்ணியமா போகும் எதாச்சும் பண்ணுங்க. பொண்ணுங்க பொய்யா செத்து போன பாட்டி பெற கூட வழகில சேர்த்து டார்ச்சர் பண்றன்கப்பா.

இது போன்ற பொய்க்கேசுகள் ஒவ்வொரு குடும்பத்திலும் நுழையப்போவது நிச்சயம்!

சேலை கட்டச் சொல்வது கொடுமைப்படுத்துவதாகுமா? பெண்ணிடம் ஐகோர்ட் கேள்வி

செய்தி: தினமலர், மே 20,2010.

மும்பை: விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த மனைவியிடம்,’சேலை கட்டும் படி கூறுவதைக் கூட கொடுமை செய்வதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது’ என்று ஐகோர்ட் கூறியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த அல்கா-ஆனந்த் தம்பதியருக்கு, 2003ல் திருமணம் ஆனது. கணவரின் கூட்டுக் குடும்பத்துடன், அல்காவால், மனமொத்து வாழ முடியவில்லை. இதனால் அல்கா, குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், கணவர், அவரது தாய், கணவரின் இரு சகோதரிகள் ஆகியோர், வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவதாகவும், கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இவை தவிர நாத்தனார்கள் தன்னை சேலை கட்டச் சொல்லிக் கொடுமைப்படுத்துகின்றனர் எனவும், ஒரு நாத்தனார் தன்னைத் தாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட், அல்காவின் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது.

அல்கா, ஐகோர்ட்டில் மேல் அப்பீல் செய்தார். அவரது மனுவை விசாரித்த ஐகோர்ட் கூறுகையில்,

‘கொடுமை செய்யும் உள்நோக்கத்துடன்தான் நாத்தனார் சேலை கட்டும் படி கூறுகிறார் என்பதை, விவாகரத்துக்கான காரணமாக ஏற்க முடியாது. தன்னைத் தாக்கியதாக இவர் கூறும் நாத்தனார் ஒரு மாற்றுத் திறனாளி. அதனால் அந்தக் குற்றச்சாட்டும் தவறு’ என்று தெரிவித்து, வரதட்சணை பற்றிய விசாரணையை வேறொரு தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.

498A பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை
ஏப்ரல் 22,2010.

மும்பை : மும்பையில் இளம் பெண் ஒருவர், கறுப்பு நிறமாக இருந்த காரணத்துக்காக, அவரது கணவரால் நள்ளிரவில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் சிசிர் சிர்கே; இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவ துறையில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. பவித்ரா, சற்றே கறுப்பு நிறம் உடையவர். திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே, இது தொடர்பாக பவித்ராவை அவரது கணவர் வீட்டார் கேலியும், கிண்டலும் செய்யத் துவங்கி விட்டனர். ஒரு சில நாட்களில் கிண்டல் அதிகரித்து பவித்ராவை கடுமையான வார்த்தைகளில் திட்டினர். கறுப்பு நிறமாக இருப்பதால், தினமும் 10லிருந்து 12 முறை முகம் கழுவும்படி பவித்ராவை கட்டாயப்படுத்தினார். அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு, பவித்ரா பொறுமையாக இருந்தார்.

சில நாட்களிலேயே, இந்த கொடுமைகள் வேறு வடிவம் எடுத்தன. பெற்றோர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி, தொடர்ந்து தொந்தரவு செய்தனர். ஆனால், பவித்ரா,’நான் சம்பாதிக்கிறேன். நல்ல வருமானம் வருகிறது. நீங்கள் கேட்கும் தொகையை நானே தந்து விடுகிறேன்’என்றார். கணவர் வீட்டார் இதை ஏற்கவில்லை. பெற்றோரிடம் தான் வாங்கி வர வேண்டும் என, கண்டிப்பாக கூறி விட்டனர். இந்த விவகாரத்தில், சிசிர் சிர்கேவும் தலையிடத் துவங்கினார். ஒரு நாள் நள்ளிரவில் பவித்ராவுக்கும், சிசிர் சிர்கேவுக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிசிர்,’நீ கறுப்பாக இருக்கிறாய். பார்ப்பதற்கே கேவலமாக உள்ளது. வீட்டை விட்டு வெளியில் போ’என, துரத்தினார். பவித்ரா கெஞ்சிப் பார்த்தும் பயன் இல்லை. வீட்டுக்கு வெளியில் அவரை தள்ளி விட்டு, கதவை அடைத்து விட்டனர்.

இந்த முறை பவித்ரா தைரியமாக முடிவு எடுத்தார். நள்ளிரவில் நேராக அவர் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்லவில்லை. அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது புகார் செய்தார். போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கைது செய்வதற்காக சிசிர் வீட்டுக்கு சென்றபோது, அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அடுத்த சில நாட்களில் மும்பை ஐகோர்ட்டில் அவர்கள் சார்பில், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில்,’அடுத்த கட்டமாக கோர்ட் என்ன உத்தரவிடுகிறதோ, அதன்படி நடவடிக்கை எடுப்போம்’என்றனர். இந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது