தொகுப்பு

Archive for ஜூலை, 2010

கள்ளக்காதலில் வெல்ல கணவனைக் கொல்

ஜூ.வியில் ​​வெளியான கட்டு​ரை…

Kallak kadal Kavitha‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்பதற்கு, ‘கணவனைக் காப்பாற்ற, பதிவிரதையான மனைவி கொலையும் செய்வாள்’ என்று அர்த்தம் சொல்வார்கள். இப்போதெல்லாம் கள்ளக்காதலனுக்காக, கணவனைக் கொல்லும் மனைவிகளைப்பற்றிய செய்திகள் வருகின்றன. கோவையிலும் அப்படி ஒரு சம்பவம்!

புதுச்சேரி மாநிலம் கள்ளியாங்குப்பத்தைச் சேர்ந்தவர், 28 வயது இளைஞர் பன்னீர்செல்வம். கோவையில் ஒரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் திட்டப் பொறியாளராக வேலை பார்க்கிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கவிதாவுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ஏற்கெனவே கவிதா, வேறு ஒரு கல்லூரி மாணவரைக் காதலித்த விஷயத்தை மறைத்து, அவசரமாகத் திருமணம் நடத்தப்பட்டது. பழைய‌ காதலனை மறக்க முடியாத கவிதா, திட்டம் போட்டுத் தன் கணவனைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்து இருக்கிறாள்!

இந்தக் கொலை முயற்சி வழக்கை விசாரணை செய்த கோவை, சரவணம்பட்டி போலீஸாரிடம் பேசினோம்.

”விழுப்புரத்தில் இருக்கும் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. படிச்சிட்டு இருந்த பொண்ணு கவிதா. காலேஜுக்கு போய் வரும் பஸ்ஸில் பாலிடெக்னிக் படிக்கிற இளங்கோவும் வருவான். இந்தக் காதல் விவகாரம் கவிதா வீட்டுக்குத் தெரிய வந்ததும், பதறிப்போனாங்க. ‘குடும்ப மானம் கப்பல் ஏறிடும்’னு நினைச்ச கவிதா வோட அப்பா விஸ்வநாதன், தன் மகளுக்கு கல்யாணம் செஞ்சுவைக்க முடிவு செஞ்சிருக்கார். தூரத்துச் சொந்தமானபன்னீர்செல்வத்தைப் பேசி முடிச்சு கல்யாணம் நடந்தது.

‘ஒரு பக்கம் கள்ளக்காதலன்; இன்னொரு பக்கம் கணவன்’னு தவிச்ச கவிதா, பல காரணங்களைச் சொல்லி முதலிரவு சடங்கைத் தள்ளிப் போட்டுட்டே இருத்திருக்கு. ஆனா, கணவர் வேலைக்குப் போகும் சமயத்தில், காதலன் இளங்கோவை கோவைக்கு வரவெச்சு, சந்திச்சிருக்கு அந்தப் பொண்ணு.

இது எதுவும் தெரியாத பன்னீர்செல்வம், முதலிரவு நடக்காத விஷயத்தை ஒரு கட்டத்தில் மனைவி வீட்டுக்குச் சொல்லி இருக்கார். அதனால், உண்மை வெளியே தெரிஞ்சுருமேன்னு பயந்த கவிதா, ‘எனக்கு உடம்பு சரியில்லை. எங்க வீட்டுக்குக் கொண்டுபோய் விடுங்க’ன்னு சொல்லி இருக்கு. அதை நம்பின பன்னீர்செல்வம், மனைவியை ஜூன் 12-ம் தேதி விழுப்புரத்தில் இருக்கும் மாமனார் வீட்டில் வீட்டுவிட்டு வந்தார். அங்கே, அந்தப் பொண்ணு தன் காதலன் இளங்கோவைச் சந்திச்சுப் பேசி இருக்கு. ரெண்டு பேரும் சேர்ந்து, பன்னீர்செல்வத்தைக் கொல்ல திட்டம் போட்டிருக்காங்க.

ஜூன் 20-ம் தேதி, விழுப்புரத்தில் இருந்து கோவைக்குத் தன்னை அழைச்சுட்டுப் போகச் சொல்லி கணவனுக்கு போன் பண்ணி இருக்கு கவிதா. அவரும் அன்னிக்கேபோய், மறுநாள் மனைவியைக் கோவைக்குக் கூட்டிட்டு வந்துட்டார். அன்னிக்கு ராத்திரி, ரெண்டு பசங்க அவர் வீட்டுக்கு வந்திருக்காங்க. ‘இவங்க ரெண்டு பேரும் என் தம்பிங்க. தூரத்துச் சொந்தம். செம்மொழி மாநாடு பார்க்க வந்திருக்காங்க. தங்க இடம் இல்லாததால, நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க’ன்னு கவிதா சொல்ல… பன்னீர்செல்வம் நம்பிட்டார்.

திடீர்னு அன்னிக்கு ராத்திரி 11.30 மணிக்கு பன்னீர்செல்வத்தின் தலையில பெரிய கல் விழுந்திருக்கு. வலியில் துடிச்சவரை, அந்த ரெண்டு பசங்களும் தாக்கி இருக்காங்க. ‘அடிச்சுக் கொல்லுங்க’ன்னு பக்கத்தில் இருந்தே கவிதா உத்தரவு போட… பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி. வலி தாங்காமல் அவர் பெரும் கூச்சல் போட, அக்கம் பக்கம் திரண்டு வந்து மூணு பேரையும் வளைச்சுப் பிடிச்சு எங்ககிட்ட ஒப்படைச்சாங்க.

கவிதாவிடம் விசாரிச்சப்போ, ‘அவங்க ரெண்டு பேரும் என் தம்பிகள் இல்லை. என் காதலன் இளங்கோவின் நண்பர்கள். கணவரைத் தீர்த்துக்கட்டத்தான் அவங்களை இங்கே வரவழைச்சேன்’ன்னு சொன்னது. மேற்கொண்டும் விசாரிச்சபோதுதான், மொத்தக் கதையும் தெரிய வந்தது. அவங்க மூணு பேர் மீதும் வழக்கு பதிவு செஞ்சு, சிறையில் அடைச்சிருக்கோம். காதலன் இளங்கோவைத் தேடிட்டு இருக்கோம்…” என்றனர் போலீஸார்.

மனைவியின் கொலை முயற்சியில் இருந்து தப்பிய பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபின், சொந்த ஊரில் இருக்கிறார். அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். ”அந்த சம்பவத்தை துக்க நிகழ்ச்சியா நினைச்சு மறக்க நினைக்கிறேன். தயவுசெஞ்சு அதை மறுபடியும் கிளறாதீங்க…” என்று மட்டும் சொன்னார்.

யாரைத்தான் நம்புவதோ ஒரு கணவனின் நெஞ்சம்?
==============================================

இது ஒரு முந்தைய செய்தி
————————–

ஜூன் 12,2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17836

பெரம்பலூர் : கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தையடுத்த அத்தியூர் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (40). இவரது மனைவி பெரியம்மாள் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராஜூ வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பெரியம்மாளுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்குமிடையே கள்ளக்காதல் உருவானது. சமீபத்தில் ஊர் திரும்பிய ராஜூ, இதையறிந்து பெரியம்மாளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்தரமடைந்த பெரியம்மாள், ஏற்கனவே திட்டமிட்டபடி, கணவரை அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த சுரேஷ் மற்றும் பெரியம்மாள் இணைந்து இரும்பு கம்பியால் ராஜூவை அடித்து கொன்று, அருகிலிருந்த குப்பை மேட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர். ராஜூ காணாமல் போனதையறிந்த உறவினர்கள் அவரை தேட, பிணமாக ராஜூ மீட்கப்பட்டார். மங்கலமேடு போலீசார் நடத்திய விசாரணையில், பெரியம்மாள் சுரேஷூடன் இணைந்து ராஜூவை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பெரியம்மாளை போலீசார் கைது செய்தனர்.

Advertisements