தொகுப்பு

Archive for ஜனவரி, 2011

அவள் இருந்தாலும் சிறை, இறந்தாலும் சிறை – அவனுக்கு!

இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளித்து பெரம்பலூர் முதன்மை அமர்வு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் செந்தூரைச் சேர்ந்தவர் வெள்ளமுத்து. இவரது பேத்தி வேம்பு. இதே பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சிலம்பரசன். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

ஆனால் திடீர் என்று சிலம்பரசன் வேம்புவை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த வேம்பு கடந்த 11.06.2006 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் பெரம்பலூர் முதன்மை அமர்வு கோர்ட் தீர்ப்பளித்தது. சிலம்பரசனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் அளித்து நீதிபதி தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.

செய்தி: தினமலர் : ஜனவரி 19,2011

ஆனால், இதே போல் அந்த ஆண் தற்கொலை செய்து கொண்டிருந்தால்? ஒன்றும் ஆகியிருக்காது; அது செய்திப் பத்திரிக்கையில் கூட இடம் பெற்றிருக்காது. ஏனெனில் இன்றைய சமுதாயத்தில் ஆணினம் தேவையற்றது, காயடிக்கப்பட்ட காளைமாடுகள் போல்!!

Advertisements

சேச்சே, ஆம்புளை தாங்க செக்ஸுக்கு அலைவான்!

Sex maniac woman“செக்ஸ் உறவுக்கு அடிக்கடி அழைக்கும் மனைவி-போலீஸ் உதவியை நாடிய கணவர்”

செக்ஸ் உறவு போதாது, போதாது என்று என்று கூறி அடிக்கடி என்னை எனது மனைவி செக்ஸ் உறவுக்கு அழைத்து பெரும் தொல்லை கொடுக்கிறார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கோரி ஒரு கணவர் போலீஸ் உதவியை நாடியுள்ளார். இது நடந்துள்ளது ஜெர்மனியில்.

அந்த அப்பாவிக் கணவர் துருக்கியைச் சேர்ந்தவர். ஜெர்மனியில் பெர்லின் நகரில் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை நாடினார். அவர்களிடம், எனது மனைவி என்னை தினசரி செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கூறி அனத்துகிறார். நான் எவ்வளவுதான் உறவு வைத்துக் கொண்டாலும் திருப்தி அடைய மாட்டேன் என்கிறார்.

எங்களுக்கு கல்யாணமாகி 18 வருடங்களாகி விட்டது. 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக எனது மனைவியின் செக்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் நான் படுக்கை அறைக்குள் போக முடியவில்லை. உள்ளே போனாலே செக்ஸ் உறவுக்கு அழைக்க ஆரம்பித்து விடுகிறார். இதனால் நான் வீட்டு சோபாவில்தான் தினசரி தூங்க நேரிடுகிறது.

அப்படியும் கூட அவர் விடுவதாக இல்லை. எங்கு இருந்தால் என்ன, என்னை திருப்திப்படுத்து என்று கூறி தொல்லை செய்கிறார். கோப்படுகிறார். என்னை எனது மனைவியின் தொல்லையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீஸார் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் சற்று அமைதி அடைந்த அவர், தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக கூறி விட்டுச் சென்றார்.

விவாகரத்து நடவடிக்கைகள் முடியும் வரை அவரை அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவரது மனைவியிடம் அறிவுரை கூற போலீஸார் தீர்மானித்துள்ளனராம்.

செய்தி: “தட்ஸ்தமிழ்” : ஜனவரி 27, 2011.

ஆண் பாவம் பொல்லாதுங்கோ!

False complaints fo sexual harassment of women“பகுத்தறிவு” பதிவில் கண்ட இன்றைய ஆண்களின் பரிதாப நிலையை விவரிக்கும் ஒரு சிறந்த கட்டுரையின் ஒரு பகுதி:-

ஆனால் இன்றைய மொத்தப் பெண்களும் தங்களுக்குத் தேவையான ஆண் எத்தகையவன் என்று தெரிவு செய்ய அவர்கள் வைத்திருக்கும் அளவு கோல் எது என்பது தான் மிகுந்த உறுத்தலுக்கு உள்ளாகும் விஷயமாக இருக்கிறது. அதாவது இவர்களின் மொத்த அளவுகோலும் பணம் மட்டுமே என்றாகி இருக்கிறது. பணம் பணம் பணம் மட்டுமே அளவு கோல், வேறெதுவும் இல்லை.

நல்ல குடும்பம், படிப்பு, குடும்பத்தைக் காப்பாற்றக் கூடிய நாகரீகமான சம்பளம், அழகு என்று இருந்தாலும் தற்கால பெண்கள் ஆண்களை எக்ஸ்ட்ரா பேக்கேஜுகளுடன் எதிர் பார்க்கிறார்கள். ஆடம்பர வாழ்வை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்பதே அதிகம் உறுத்தலான விஷயமாக இருக்கிறது எனலாம். அடிப்படை வசதிகள் இருந்தாலும் அது போதாது ஆடம்பர வசதிகளுடன் இருப்பவன் தான் வேண்டும் என்ற பேராசை பெண்களிடம் அதிகரித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இளம் பெண் ஒருவர் இப்படித் தெரிவிக்கிறார் “நான் விதவிதமாக ஆடை அணிவேன். ஆடைக்குத்தகுந்த காலனியும் விதவிதமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகும் அப்படி எனக்கு வேண்டியதை எல்லாம் வாங்கித்தரும் ஆண்மகன் தான் வேண்டும்” என்கிறாள். “ஒரு வேளை திருமனத்திற்குப் பின் அப்படி கணவன் வாங்கித்தரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு அவள் சொன்ன பதில் “டைவேர்ஸ் பன்னிடுவேன்.” தற்காலப் பெண்களில் பலருக்கு ஆண்மகன் என்றால் நடமாடும் ஏடிஎம் மிஷின், கேட்டதை வாங்கித்தரும் ஜீ பூம் பா பூதம். தாங்கள் நினைத்துப் பார்த்திராத ராஜ போகத்தைக் கொடுக்கப்போகும் ‘சிண்ட்ரெல்லா’ இளவரசன்.

ஒரு டிவி சீரியலில் வரும் காட்சி, ஒரு ஆண் தன் காதலியிடம் காதலைத் தெரிவிக்கிறான்.அந்தப் எண்ணோ “உன்னிடம் காசிருந்தா சொல்லு கட்டிக்கிறேன், இல்லேன்னா வேறாளப்பாரு” என்று பேசுகிறாள். இவையெல்லாம் தற்கால பெண்களின் மனோநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாகவே இருக்கின்றன.

சில பெண்களுக்கு வெளிநாட்டு மாப்பிளை என்றால் மோகம். இந்த ஆண்மகன் கஷ்டப்பட்டு படிப்பான். அவனது பெற்றோர்கள் வங்கிக்கடனை வாங்கி, வெளிக்கடனும் வாங்கி கஷ்டப்பட்டுப் படிக்க வைப்பார்கள். பின் கண்ட கண்ட கான்ஸ்லேட் வாசலில் நின்று விசா பெற்று, தட்டித் தடுமாறி ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, அங்கே சென்று அறிமுகம் இல்லாத நபர்கள், புரியாத பாஷை என்று எல்லாவற்றையும் கற்று, கையைக் காலைச் சுட்டு சமைத்துச் சாப்பிட்டு, ஊர் ஊராகச் சுற்றி – வாழும் இடத்தைத் தெரிந்து வைத்து ‘அப்பாடா’ என்று இருக்கும் போது, வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேண்டும் என்று மோகம் கொண்ட பெண் நோகாமல் கல்யானம் என்ற பெயரில் இவனைக் கட்டிக் கொண்டு அவனோடு போய் செட்டிலாகி விடுவாள். அவனும் இவளுக்கு டூரிஸ்ட் கைடு போல ஊரெல்லாம் சுற்றிக் காண்பித்து மகிழ்விப்பான்.

இவனைப் பெற்ற அப்பாவி அம்மா அப்பாக்கள் கடைசி வரை தன் பிள்ளை குடியிருக்கும் நாட்டை கம்பியூட்டர் போட்டோக்களில் பார்ப்பது தான் மிச்சமாகியிருக்கும். அனுபவிப்பள் என்னவோ கல்யானம் என்ற வியாபாரத்தில் அமெரிக்க மாப்பிள்ளையை வென்றவளாகத்தான் தான் என்றாகியிருக்கும்.

ஆனால் இதெல்லாம் பேசினால் ஆண்கள் வரதட்சனை வாங்கவில்லையா, நகை கேட்கவில்லையா என்ற முப்பது வருட பழம்பஞ்சாங்கத்தை உடனே கையிலெடுத்துப் படிக்கத்துவங்கி விடுவார்கள். அதையும் பார்ப்போம்.

ஒரு காலத்தில் ஆண்கள் வரதட்சினை கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டானது. அதற்கெதிராக கடுமையான பிரசாரங்களும் வரதட்சினைக் கொடுமைக்கெதிரான சட்டங்களும் உண்டானது. (இப்போது கணவனைப் பழிவாங்க பெண்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல ஆயுதமாக அது உபயோகப்படுகிறது). ஆனால் அத்தகைய காலத்தில் கூட நயா பைசா வரதட்சனை வாங்காமல் ஏழைப் பெண்களை திருமனம் செய்துகொண்ட ஆண்கள் நிறையபேர் இருந்ததுண்டு. அப்படிப் பட்ட ஆண்களை மிக நல்ல குடிமகனாகக் காட்டி திரைப்படங்களும் வந்தன என்றால் மறுக்கமுடியாது.

ஆனால் இன்றைய கல்விகற்ற நாகரீகப் பெண்கள் செய்யும் காரியம் ஆண்கள் செய்த கொடுமைகளைத் திரும்பச் செய்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. பெண் சமூகத்தின் பழிவாங்கும் படலமாக சில பெண்களாலேயே சொல்லப்படுகிறது. அதிக பணம் கொடுப்பவனையே மணமுடிப்பேன் என்று தனக்குத்தானே விலை வைத்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த விதத்திலும் குற்ற உணர்ச்சி என்பதே இல்லை எனலாம். இதெல்லாம் எங்கள் சுதந்திரம் என்ற ரீதியில் செயல்படுவது ஆண்களால் உண்டான சமூக பாதிப்பை விட அதிக தாக்கத்தை உண்டாக்குகிறது என்றே என்பதே நிதர்சனம். பெண்கள் இப்படி தனக்குத் தானே விலை பேசி அதற்குத் திருமணம் என்று பெயர் சூட்டிக் கொள்வதை பெண்களின் முன்னேற்றமாகப் பார்க்கும் நிலையில் தான் இன்னும் பெண்ணிய ஆர்வலர்கள் இருக்கிறார்கள். இன்னும் பேசினால் “ஆம்பளைங்க மட்டும் அந்தக்காலத்தில் செய்யவில்லையா?” என்று கேட்பார்கள்.

ஒரு விஷயத்தை இதில் குறிப்பிட வேண்டும். அந்த காலத்தில் வரதட்சனை வாங்கி திருமணம் செய்யும் ஆண்களை விலைக்கு விற்கப்படும் மாடுகள் என்றும், காசு வாங்கி பிள்ளையைக் கொடுக்கும் ஆண்களின் பெற்றோர்களை, பிள்ளைகளை விற்கும் வியாபாரிகள் என்றும் பெண்கள் அழைத்தனர். பல சினிமாக்கள், டிவி நாடகங்கள் எல்லாம் ஆண்களையும் அவர்தம் பெற்றோர்களையும் இப்படி ஏசித்தான் ஒரு குற்ற உணர்ச்சியை உண்டாக்கினார்கள்.

சரி அப்படியென்றால் இந்தக்காலத்தில் அதிக மாதச்சம்பளம் கொடுக்கும் ஆணுக்குத் தான் என்னைத் தருவேன் என்றும், சொந்த வீடும் சொகுசு வாழ்க்கையும் கொடுக்கும் ஆண் யாரோ அவனுக்குத் தான் என்னைத் தருவேன் என்று கூறும் பெண்ணையும் கன்னித்தன்மை வியாபாரிகள் என்று ஏன் சொல்லக்கூடாது? மாதம் இவ்வளவு பணம் தர முடிந்தால் தான் என்னைத் தருவேன் என்று கூறும் பெண்களை வாடகை மனைவிகள் என்று ஏன் அழைக்கக்கூடாது? கல்யானம் என்ற பெயரில் கன்னித் தன்மை வியாபாரம் செய்யத்தான் பெண்கள் கல்விகற்றார்களா? என்ற கேள்வி எழுகிறது. சொகுசான சுகபோகம் கொடுக்கும் பணம் வாய்த்தவனுக்கே என்னைத் தருவேன் என்று கூறும் குடும்பப் பெண்ணுக்கும், பணம் கொடுத்தால் என்னைத் தருகிறேன் என்று கூறும் வேசிப்பெண்ணுக்கும் வித்தியாசம் என்ன இருக்க முடியும்?. ஒரே ஒரு வித்தியாசம் தான். முன்னவளுக்கு ‘மன்த்லி பேமென்ட்’, பின்னவளுக்கு ‘ஒன் டைம் பேமென்ட்’. காசில்லாதவனுக்கு ரெண்டுமே கிடைக்காது. அது தானே நிதர்சனம். காசில்லாமல் கூப்பிட்டால் வேசியும் கிடைக்கமாட்டாள், பெண்டாட்டியும் கிடைக்கமாட்டாள் என்றால் இருவகைப் பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என்று விளங்கவில்லை.

ஆனால் இன்றைய கல்யாணச்சந்தை இது தான். அது தான் நிதர்சனம். இன்றைய கல்யாணங்கள் பெண்களாலேயே நிச்சயிக்கப்படுகிறது. ஆம், கல்யாணம் என்ற பெயரில் கன்னித்தன்மை வியாபாரம் நடக்கிறது. பணமிருப்பவன் வாங்குவான். பணமில்லாதவன்….???

இதில் பரிதாபம் என்னவென்றால், வரதட்சனைக் கொடுமைக்காக பேசுவதற்கு ஊடகங்கள், சினிமாக்கள், மாதர் சங்கங்கள், அரசியல் தலைவர்கள் என்று அனைவரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் இன்றைய பெண்கள் கல்யாணம் என்ற பெயரில் நடத்தும் கன்னித்தன்மை வியாபாரத்தை விமர்சித்து எழுதவோ, பேசவோ எந்த ஊடகங்களோ, அரசியல் தலைவர்களோ சமூக ஆர்வலர்களோ இல்லை. தாய்குலத்திற்காக பேசினால் ஓட்டு கிடைக்கும், படம் எடுத்தால் ஓடும். ஆனால் ஆண்களுக்காக பேசினால் காசு பேராது. தேங்காய் மூடி கேஸாகிவிடும். போதாக்குறைக்கு மாதர்குல திலகங்களின் எதிர்ப்புகளையும் வாங்க வேண்டியிருக்குமே! அதனால் அமைதி காக்கின்றனர் போலும்.

ஆண்கள் கூட பெரும்பாலும் இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச வெட்கப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. வெளிப்படையாக தாங்கள் திருமணம் செய்ய கஷ்டப்படுகிறோம் என்று கூறிவிட்டால் பெண்களிடம் தோற்றுப்போய் விட்டோம் என்ற தோற்றம் உண்டாகிவிடுமே என்ற ஈகோ தடுக்கலாம்! அதனாலேயே நிறைய ஆண்கள் இது விஷயமாக வெளிப்படையாக வாய்திறப்பதில்லை.

அப்படியென்றால் பணம் குறைவாக இருக்கும் ஆண்கள் யாருக்கும் திருமணம் நடப்பதே இல்லையா! நல்ல பெண்களே கிடையாதா என்று கோபப்பட்டு கும்மியடிக்க கிளம்பி விடாதீர்கள். மேலே சொல்லப்பட்டவை எல்லாம் இன்றைய கல்யாணச் சந்தையின் பொது விதிகள். தங்களிடமே குறை இருக்கும் பெண்கள் சில சமரசங்களுடன் சில ஆண்களை ஏற்றுக்கொள்கிறார்கள். மனப்பூர்வமாக வாழ்கிறார்களா என்பது பெண்களுக்கே வெளிச்சம்! இல்லையென்றால் முருங்கை மரம் தான்! ஒரு சில விதி விலக்குகளும் அவரவர் நிறை குறைகளுக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து கட்டிக்கொள்வதும் ஆங்காங்கே சமூகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் பொதுவான சமூகத்தின் நிலையென கொள்ள முடியாது.

இங்கே சொல்லப்பட்டவை எல்லாம் இன்றைய சமூகத்தில் நடுத்தர குடும்பங்களின் ஆண் பிள்ளைகளும் அவர்தம் குடும்பங்களும் எதிர் கொள்ளும் சங்கடங்களைப் பற்றிய ஒரு அலசலே!

இந்தப்பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு திருமணம் என்பதன் செலவைக் குறைக்க மொத்த சமூகமும் முடிவு செய்ய வேண்டும். திருமணம் என்பது வீட்டு விசேஷம் என்ற நிலை வரவேண்டும். அவரவர் வீட்டுப் பூஜை அரையில் பெற்றோர், அவர் உடன் பிறந்தோர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் என்ற சிரிய வட்டதின் முன்பாக ஒரு மாலையை மாற்றினோமா அவரவர் விருப்பப்படி தாலி கட்டுவதோ, மோதிரம் போடுவதோ செய்துகொண்டு அப்படியே வீட்டிலேயே சப்பிட்டு அடுத்த நாள் காரியத்தைப் பார்த்தோமா என்று இருக்கத் துவங்கினால் திருமணம் என்பது எல்லோருக்கும் எளிதாக நடக்கும். ஆனால் திருமணம் என்பது ஒரு சமூக நிகழ்வாகவும், கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டு விட்டதால் அந்நிகழ்வு அதிக செலவு பிடிக்கும் காரியமாகிவிட்டது.

சில லட்சங்கள் செலவு செய்து திருமணம் செய்ய வேண்டி இருப்பதால் தங்கள் குடும்பத்திற்கு வரப்போகும் வரன் அந்த அளவிற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு உண்டாகிறது. இதுவே பின்னால் ஒரு வரன் தேடும் குறியீடாக மாறி சமூகத்தைப் பாதிக்கிறது. செலவில்லாத் திருமணமே இப்பிரச்சனைக்கு ஒருவகையில் தீர்வாக அமையக்கூடும். பஞ்சாபில் சீக்கிய குருமார்கள் ஒரு சட்டத்தைப் பிறப்பித்தார்கள். அதாவது அதிக செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்வது தடை செய்யப்படுகிறது என்றும், திருமணம் மிக எளிமையாகவே நடக்க வேண்டும். மீறுவோர் தமது மதக்கோட்பாடுகளை மீறுவதாக விலக்கி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தனர். காரணம் கல்யாணம் காஸ்ட்லியாகி விட்டால் காசில்லாதவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதே!

எது எப்படியோ…! கணவன் மனைவி என்ற தாம்பத்திய உறவை முடிவு செய்ய பணம் மட்டுமே அளவுகோலாக பார்க்கப்படக் கூடாது என்பதை இருபாலரும் உணர்ந்தாலொழிய இதற்குத் தீர்வு கிடைப்பது கஷ்டமே!

ஆண் பாவம் கூட பொல்லாததுங்கோ!

நன்றி: பகுத்தறிவு பதிவு.

வனிதாவுடன் செல்ல மகன் மறுப்பு

Vanith and SriHariநடிகை வனிதாவின் முன்னாள் கணவர் ஆகாஷ். இவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் மகன் விஜய்ஸ்ரீஹரி, மகள் ஜோவிகா ஆகியோர் தன்னிடம் இருக்க வேண்டும் என்று மனுவில் கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப் பிரமணியன் இடைக்கால உத்தரவு ஒன்றை நேற்று முன்தினம் பிறப்பித்தார். நடிகர் ஆகாஷ் விஜய்ஸ்ரீஹரியை வனிதா வக்கீல் முன்னிலையில் வனிதாவிடம் இன்று காலை 11.30 மணிக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் 28-ந்தேதி வழக்கு விசாரணை வரும் போது வனிதா விஜய் ஸ்ரீ ஹரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி விஜய் ஸ்ரீ ஹரியை ஒப்படைப்பதற்காக ஆகாஷ் வனிதாவின் வக்கீல் அலுவலகத்துக்கு இன்று வந்தார். அப்போது வனிதாவும் வந்திருந்தார். ஆனால் விஜய்ஸ்ரீஹரி வனிதாவிடம் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்து காரிலேயே இருந்து கொண்டான். இதை கேட்ட வனிதா வேறு வழி தெரியாமல் திரும்பி சென்றார்.

இது குறித்து வனிதா கூறும் போது விஜய் ஸ்ரீஹரி என்னுடன் வர மறுத்து விட்டதாகவும். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் ஆகாஷ் கூறினார். 28-ந்தேதி வழக்கு விசாரணை வரும் போது பார்த்துக் கொள்வேன் என்றார்.

http://www.maalaimalar.com/2011/01/23150830/actress-vanitha-son-coming-den.html

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைகொல்ல முயன்ற பெண் கைது

தூத்துக்குடி:தூத்துக்குடியில், கள்ளக்காதலனோடு சேர்ந்து, கணவர் முகத்தை தலையணையால் அழுத்தி, கொல்ல முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி, தாளமுத்துநகரை அடுத்த அய்யர்விளையைச் சேர்ந்தவர் நடராஜன்(49); மளிகை கடை வியாபாரி. இவரது மனைவி பால்கனி(40). இவர்களுக்கு குழந்தையில்லை. இந்நிலையில், பால்கனிக்கும், உறவினர் பழனிக்கும்(43), கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதை, நடராஜன் கண்டித்தார்.நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில், பால்கனி வீட்டிற்கு வந்த பழனி, அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, தூக்கத்தில் இருந்து திடீரென கண் விழித்த நடராஜன், அதை பார்த்து விட்டார். அதனால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.உடனே பால்கனியும், பழனியும் சேர்ந்து, தலையணையை எடுத்து, நடராஜன் முகத்தில் அழுத்தினர். அதில், அவர் மூச்சுத்திணறி இறந்தது போல நடித்ததால், அவர் இறந்துவிட்டதாக கருதி, இருவரும் வீட்டை விட்டுவெளியேறினர்.சிறிது நேரம் கழித்து எழுந்த நடராஜன், நடந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அவரை கொலை செய்ய முயன்ற மனைவி பால்கனி, கள்ளக்காதலன் பழனியை போலீசார் கைது செய்தனர்.

ஜனவரி 07,2011

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=160998

அய்யோ பாவம், அபலைப் பெண்கள்!

ஒரு பாவமும் அறியாத பேதைகள் நம் நாட்டுப் பெண்கள். அவர்கள் வன்முறை என்பதையே லவலேசமும் அறியாதவர்கள். ஆண்தான் வன்முறையில் ஈடுபடுவான்; காமாந்தகாரன்; கண்டவுடன் கற்பழிப்பான். அதனால்தான் இந்திய கோர்ட்டுகள், ஒரு பெண் தான் ஒருவனால் கற்பழிக்கப்பட்டதாக புகார் கொடுத்தாலே போதும், அந்த ஆண்மகனைத் தண்டிக்க; வேறு சாட்சியமே தேவையில்லை என்று தீர்ப்பளிக்கின்றன.

ஆண், பெண் இருவரும் கூடிக் குலாவி இன்ப சுகம் வேண்டிய அளவு அனுபவித்த பிறகு, சாவகாசமாக அந்தப் பெண் “ஐயோ, என்னை அவன் கற்பழித்துவிட்டானே!” என்று புகார் அளித்தாலே போதும், அந்த பலான ஆண் உடனே கைது செய்யப்படுவான். அஜ்மல் கசாப் கூட அடுத்தபடிதான்!

இதோ இந்த அபலைப் பெண்ணின் சாத்வீகமான அணுகு முறையை கண்குளிரக் காணுங்கள்!

ரயிலில் “ஓசி” பயணம் செய்து பிடிபட்டு டிஸ்மிஸ் ஆன பெண் நீதிபதி!

இவர்களை “மை லார்ட்” என்றும் “யுவர் ஆனர்” என்றும் தான் அழைக்க வேண்டும் – அதுவும் கூனிக் குறுகி நின்று கொண்டு!

இவரைப் போன்றவர்கள்தான் பிற குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பவர்கள். இவர்கள் வாயிலிருந்து உதிரும் முத்துக்கள்தான் முடிவு செய்கின்றன ஒருவன் குற்றவாளியா, இல்லையா, அவன் “உள்ளே” போவானா, வெளியே இருப்பானா; கணவன், மனைவி பிரியலாமா, கூடாதா – இவை போன்றவையெல்லாம்!!

இப்போது இந்த புனிதத்தைப் பற்றிய செய்தியை படியுங்கள்:-

“ரயிலில் மூன்று முறை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பெண் நீதிபதியை, பதவி நீக்கம் செய்தது சரியே” என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் உள்ள பெருநகர நீதிமன்றத்தில், நீதிபதியாக பணியாற்றியவர் அருந்ததி அசோக் வாலாவல்கர். இவர், மும்பை புறநகர் ரயிலில், 1997ம் ஆண்டில் மூன்று முறை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தார். ஒரு முறை தன் அடையாள அட்டையை காண்பித்து தப்பித்தார். மற்றொரு முறை ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் தகராறில் ஈடுபட்டார். மூன்றாவது முறை அவருக்காக மற்றொரு நீதிபதி அபராதம் கட்டியுள்ளார். இவரின் நடவடிக்கை பற்றி ரயில்வே அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். உடன் விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. விசாரணையில் பெண் நீதிபதி அருந்ததி அசோக் வாலாவல்கர், டிக்கெட் இல்லாமல் மூன்று முறை பயணம் செய்தது தெரிந்தது. இதையடுத்து, 2000ம் ஆண்டில் அவருக்கு கட்டாய ஓய்வளித்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து வாலாவல்கர், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் முகுந்தகம் சர்மா மற்றும் தவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

நீதிபதிகள் எல்லாம் யாரும் கேள்வி கேட்க முடியாத வகையிலான நேர்மையை கொண்டிருக்க வேண்டும். சமூகத்திற்கு ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் நம்பும் ஒரு பதவியை வகிப்பதால், நீதிபதிகள் உயரிய தரத்தை பின்பற்ற வேண்டும். எந்த வகையிலும் சட்டத்தை மீறும் வகையில், அவர்கள் நடந்து கொள்ளக் கூடாது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில், பெண் நீதிபதியானவர் டிக்கெட் இல்லாமல் மூன்று முறை ரயிலில் பயணம் செய்ததோடு, ரயில்வே அதிகாரிகளையும் மிரட்டியுள்ளார். அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளார். அதனால், வாலாவல்கருக்கு மும்பை ஐகோர்ட் கட்டாய ஓய்வளித்தது சரியே. அந்த உத்தரவில் குறுக்கிட எந்த முகாந்திரமும் இல்லை. சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில், நீதிபதிகள் உட்பட யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அதனால், நீதிபதியாக இருப்பவர்கள் தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கவுரவத்தை பேணிக்காக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறினர்.

செய்தி: தினமலர் : ஜனவரி 16,2011

Read this news in Times of India.