தொகுப்பு

Archive for ஜனவரி, 2009

‘தேவதையை கண்டேன்’ சினிமா பாணியில்

“வேறொருவரை மணப்பதாக கூறும் காதலி மீது நடவடிக்கை எடுங்கள்”

– புறநகர் கமிஷனரிடம் வாலிபர் புகார்

ஆலந்தூர், ஜன. 28: ‘தேவதையை கண்டேன்’ என்ற படத்தில் வருவது போன்ற சம்பவம், சென்னையில் நடந்துள்ளது.

தன்னை 4 ஆண்டுகளாக காதலித்துவிட்டு, இப்போது வேறு நபரை திருமணம் செய்யப்போவதாக கூறும் காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் காதலன் புகார் கொடுத்துள்ளார்.

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் ஐசக் சுஜின் (25), இன்ஜினியர். இவர், சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நந்தம்பாக்கம் கணபதி காலனியைச் சேர்ந்த ஷாலினி (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு நண்பர் மூலம் எனக்கு பழக்கமானார். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். சென்னையில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் ஷாலினி படித்தார். அவருக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்துவது, நகை வாங்கிக் கொடுப்பது என தாராளமாக செலவு செய்தேன். எனது வீட்டுக்கும் ஷாலினியை அழைத்துச் செல்வேன். அப்போது மருமகள் போலவே அவரை எனது பெற்றோர் நடத்தினர்.

இந்நிலையில், கடந்த மாதம் வேறு நபருடன் தனக்கு திருமணம் நடக்கப்போகிறது. இனி என்னுடன் பேசாதீர்கள் என்று ஷாலினி கூறிவிட்டார். என்னால் ஷாலினியை மறக்க முடியவில்லை. அதனால் அவரது வீட்டுக்கு போய் பார்த்தேன். அப்போது ஷாலினியின் தந்தை, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். 4 ஆண்டுகளாக என்னைக் காதலித்துவிட்டு வேறு நபரை மணக்கப் போதவதாகக் கூறும் ஷாலினி மீதும் கொலை மிரட்டல் விடுத்த அவரது தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜசக் சுஜின் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க பரங்கிமலை இன்ஸ்பெக்டருக்கு, கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.

————‘

இது வித்தியாசமான புகார். ஆனால் தினமும் நாம் பார்க்கும் செய்தி, பல பெண்கள் தன் காதலனுடன் வருடக்கணக்கில் சுற்றி விட்டு, ”என்னை மணப்பதாக வாக்களித்து ஜாலியாக இருந்துவிட்டு (என்னவோ இவளுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அவன் மட்டும் தனக்குத்தானே ஜாலியாக இருந்தான் போல!) என்னை கைவிட்டுவிட்டான்” என்று பெண்கள் புகார் கொடுப்பதும் உடனே அந்த ஆண்களை கற்பழிப்பு கேசில் புக் செய்து கைது செய்வதும்தான் நடைமுறை.

Advertisements

வன்கொடுமை சட்டத்தில் மாப்பிள்ளை கைது

இந்தக் குற்றச்சாட்டு ஏதேனும் நம்பத்தகுந்ததாக உள்ளதா என்று பாருங்கள். அந்தப் பெண் சொன்னால் போதும், “சூ, சூ, பிடிடா, விடாதே” என்று போலீஸ் செயல்படுவதுதான் ஆண்களுக்கும் அவர்களைப் பெற்றவர்களுக்கும் இந்த சமூதாயத்தில் அமைந்த சாபக்கேடு!

—————-

(செய்தி – தினத்தந்தி)

நாகர்கோவில்: திருமணமான ஐந்து மாதத்தில் மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப் படுத்திய புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (31). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த முத்துசெல்வி (26)க்கும், கடந்த ஆகஸ்டு 20ம் தேதி திருமணம் நடைபெற்றது. 15 ஆயிரம் ரூபாய் மற்றும் பத்து சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

திருமணம் முடிந்து 40 நாட்களி லேயே மாப்பிள்ளை வீட்டில், வரதட்சணை கேட்டுத் தொல்லை கொடுக்கத் துவங்கினர். முருகனும் பண ஆசையில் முத்து செல்வியிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதுதொடர்பாக முத்துசெல்வி கோட்டார் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து முதலில் தனித்தனியாகவும், பின் சேர்த்தும் கவுன்சிலிங் நடத்தி சேர்த்து வைத்தனர்.பின் வீடு திரும்பினர்.அடுத்த அரை மணி நேரத்தில், முத்துசெல்வி அடித்து உதைத்து, ரோட்டுக்கு அனுப்பப்பட்டார்.
முத்துசெல்வி போலீசில் மீண்டும் புகார் செய்தார்.இது தொடர்பாக, முருகன்,மாமியார் செந்தில்வேலம்மாள் உட்பட எட்டு பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முருகன் மற்றும் உறவினர் சேகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆட்டோக்காரர் உயிர் அரைக்காசுகூட பேறாதா?

ஒரு மணமான பெண் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு அவளுடைய கணவன்தான் காரணமானவன் என்று உடனே முடிவு செய்து அவனை அவனுடைய பெற்றோரோடு சேர்த்து கைது செய்யவேண்டும் என்று ஒரு சிறப்புச் சட்டம் இந்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது.

கணவனை, மனைவியின் தற்கொலைக்குத் தூண்டினான் (abetting the suicide) என்று ஒரு செக்‌ஷனிலும், வரதட்சணைக் கொடுமை செய்து தற்கொலைக்குத் தள்ளினான் (sec 498A) என்று இன்னொரு செக்‌ஷனிலும் கேசு போட்டு கைது செய்து ஜாமீன் கொடுக்காமல் சிறையிலடைத்து விடுவார்கள். வெறும் அனுமானம் மட்டுமே போதும், குற்றத்தை நிரூபிக்கத் தேவையில்லை என்று சட்டத்தில் மாற்றம் செய்து ஆண்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் இந்நாட்டின் இரண்டாம்தரக் குடிமக்களாக தரமிறக்கி நாயினும் கேடாக அவர்களை நடத்துகிறார்கள். அப்படியும் அது போன்ற மொத்த வழக்குகளில் 1% கூட நிரூபிக்கமுடியாத அளவுக்கு பொய் வழக்குகள் என்பது சமீபத்திய அரசு ஆய்வில் வெளியாகியிருக்கிறது. ஆனால் அந்தக் கணவன்மார்களும் அவர்களுடைய வயதான தாய் தந்தையினரும் பட்ட பாட்டிற்கு பதில் சொல்வோர் யார்?

இதோ கீழ்க்கண்ட நிகழ்வினைப் பாருங்கள் இந்த ஆட்டோக்காரரை தற்கொலைக்குத் தூண்டியது யார்?

இதே பெண்ணாக இருந்தால் இந்நேரம் கணவன் கைதாகி ஒரு மாமாங்கம் கழிந்திருக்கும்.

இந்நாட்டில் பெண்ணுக்கு மட்டும்தான் நீதியா? ஆண் உயிர் என்ன செல்லாக்காசா?

கேட்பாரில்லையா?

மீண்டும் சொல்கிறேன். இன்னிலை நீடித்தால் ஆண் சிசுக்கள் கர்ப்பத்திலேயே கொல்லப்படும் நாள் தொலைவில் இல்லை!

இப்போது செய்தி:-

தேனி அல்லிநகரத்தில் மனைவி பிரிந்து வாழ்வதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

அல்லிநகரம்,ஜன.30- 2009

தேனி அல்லிநகரத்தில் மனைவி பிரிந்து வாழ்வதால் மனம் உடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- ஆட்டோ டிரைவர் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்தவர் தங்கசெல்வம் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பெயர் சந்திரா. இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. ரஞ்சனி(4) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் தங்கசெல்வம் ஆட்டோ செலவிற்காக ரூ.2 ஆயிரம் பணத்தை வீட்டில் வைத்திருந்தார். இந்த பணத்தை எடுத்து அவரது மனைவி சந்திரா செலவு செய்து விட்டார். இதுகுறித்து தங்கசெல்வம், மனைவியிடம் கேட்டுள்ளார். இதில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து கணவருடன் கோபித்து கொண்டு சந்திரா அவரது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த தங்கசெல்வம் சம்பவத்தன்று ரத்தினம் நகர் சாலை பகுதியில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் தங்கசெல்வத்தை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி யிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்

காரணம் தெரியாத கணவன் தற்கொலை

மனித உயிரில் ஏற்றத்தாழ்வு உண்டா?

உண்டு அய்யா! மனைவியின் உயிர்தான் பெரியது. அது வேளியே போனால் கணவனும் அவனுடைய பெற்றோர் மற்றும் உடன் பிறப்புக்கள் உடனே “உள்ளே” போகணும்!

சகல சக்தி வாய்ந்த வரதட்சணைச் சட்டம் இருக்கும் வரை ஆண்மகனைப் பெற்ற அனைத்துப் பெற்றோர்களுக்கும் அவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது சிறைவாசம் நிச்சயம்!!

1. கணவன் தற்கொலை – காரணம் தெரியாது.
——————————————————

விருதுநகரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

விருதுநகர், ஜன. 28- 2009. செய்தி: தினத்தந்தி

விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனியைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவரது கணவர் முத்துப்பாண்டி. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முத்துப்பாண்டி மேட்டுப்பாளையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இதனிடையே 3 மாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவியை பார்க்க முத்துப்பாண்டி ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது பற்றி விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

————–

2. மனைவி தற்கொலை – காரணம்: சந்தேகமின்றி வரதட்சணை கொடுமை.
கணவர்-தம்பி கைது.

அம்பத்தூர், ஜன.21- 2009 – தினத்தந்தி.

தூத்துக்குடி பிரைன் நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 27) இவரும் தூத்துக்குடி மாவட்டம் இட்டமொழியை சேர்ந்த பிச்சை பண்டாரம் என்பவரின் மகள் சந்தரசெல்வி (22) என்பவரும் காதலித்தனர் இவர்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாதால் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் காமராஜர் தெருவில் வசிக்கும் பாண்டியராஜனின் அண்ணன் பிச்சைகனி வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். அங்கு தங்கியிருந்த போது கணவன், மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி வீட்டில் சந்திரசெல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், வரதட்சணை கொடுமை உள்ளதா என்று ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். விசாரணையின் முன்பு ஆஜரான சந்திரசெல்வியின் தந்தை பிச்சைபண்டாரம், “எனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள்” என்று வாக்குமூலம் அளித்தார்.

கடந்த 2 வருடமாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், சந்திரசெல்வியின் தற்கொலைக்கு காதல் கணவர் பாண்டியராஜன், அவருடைய தம்பி பாலமுருகன் ஆகியோர் காரணம் என்றும், இதனால் 2 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அம்பத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத்ஜமால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பாண்டியராஜன், பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம்தான் மனைவிகள் தஞ்சமடைகின்றனர்!

மது குடித்து விட்டு கலாட்டா செய்த பெண் போலீஸ் அதிரடி சஸ்பெண்ட்

ஜனவரி 26,2009, தினமலர்

திருவனந்தபுரம்: கேரளாவில், மது குடித்து விட்டு போதையில் கலாட்டா செய்த பெண் போலீஸ் சஸ் பெண்ட் செய்யப்பட்டார்.

கேரளா, வயநாடு மாவட்டம் கல்பேட்டாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் வினயா. இதே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய மற்றொரு தலைமைக் காவலருக்கு பதவி உயர்வு கிடைத்தது. இதையடுத்து, அவர் சக போலீசாருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.இதில், வினயா உள் ளிட்ட 19 போலீசார் கலந்து கொண்டனர். விருந்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் மது குடித்தனர். வினயா கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே குடித்தார். ஒரு வழியாக விருந்து முடிந்தது.

போதையில் மிதந்த அனைவரையும் பாதுகாப்பாக அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல, கார் ரெடியாக இருந்தது. ஆனால், வினயா அந்த காரில் ஏற மறுத்து அடம் பிடித்தார். சக போலீசாருடன் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டார். அந்த வழியாகச் சென்ற பஸ் சில் ஓடிச் சென்று ஏறினார். இந்த விவகாரம் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரியவந்தது. விசாரணைக்குபின் வினயா சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.

விருந்தில் பங்கேற்ற மற்ற போலீசாருக்கு எதிராக துறை ரீதியிலான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. விருந்துக்கு ஏற்பாடு செய்த தலைமைக் காவலருக்கு எதிராகவும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரிவுகள்:பொய் வழக்கு குறிச்சொற்கள்:, , ,

கள்ள உறவில் நல்லதா விளையும்!

பெண்கள் அனைவருமே கற்பைப் போற்றி, “கணவனையன்றி மாற்றானைக் கண்ணெடுத்தும் பார்ப்பேனோ” என்று விரதம் காப்பவர்கள் போலவும், ஆண்கள் அனைவருமே செக்ஸ் வெறி பிடித்து அலையும் கயவர்கள் போலவும் இந்த சமுதாயத்தில் பெண்ணியவாதிகளும், ஜொள்ளுவிடும் கிழங்களும், பத்திரிக்கைகளும், ஊடகங்களும் உண்மையை அப்பட்டமாக மறைத்து ஒருதலைப் பட்சமாக சித்தரிப்பது இப்போது ஃபேஷனாகப் போய்விட்டது. கற்பு என்னும் சொல்லே இக்காலப் பெண்கள் மனத்தளவில் ஒரு கெட்ட வார்த்தையாக மாறிப்போய்விட்ட காலகட்டத்தில் இப்படி ஆண்களை மட்டமாகச் சித்தரிப்பதை அனைத்து ஆண்களும் ஏன் வாய்மூடி மௌனியாக சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள “ஆண்கள் எல்லோரும் ஏன் மனைவியை ஏமாற்றுகிறார்கள்?” என்ற தலைப்பிட்ட கட்டுரையைப் பாருங்கள். ஏன், பெண்கள் கணவனை ஏமாற்றி கள்ளக்காதலில் ஈடுபடுவதேயில்லையா? ஏனிந்த விஷமத்தனமான சித்தரிப்பு?

ஏன் உண்மையை மறைக்கிறார்கள்? பென்ணியவாதிகளுக்குப் பயந்தா? அல்லது, பெண்கள் அனைவரும் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று தொடர்ந்து சித்தரிப்பதால் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டுகிறதா?

இன்றைய பெண்களின் கற்பு நெறிக்கு இதோ சில சாம்பிள்கள்:-

1. பெண் கொலை வழக்கில் மருமகள்- கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை ஈரோடு விரைவு நீதிமன்றம் தீர்ப்பு – ஈரோடு, ஜன.22- 2009

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள எஸ்.பெரியபாளையம் வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது 63). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மகன் அய்யாசாமி, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி (37).

அய்யாசாமி வேலை பார்த்த கம்பெனியிலேயே வெள்ளியம்பாளையம் கே.டி.கே.தங்கமணி நகரை சேர்ந்த சிவராமன் (28) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி அய்யாசாமி வீட்டுக்கு வந்து சென்றதால் ஜோதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. யாருக்கும் தெரியாமல் இருவரும் தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.

அய்யம்மாளின் சகோதரர்கள் தங்களின் பூர்வீக சொத்தில் 5 சென்ட் நிலத்தை அய்யமாளுக்கு கொடுத்தனர். அதை அவர் தனது மகள் கோவிந்தம்மாளுக்கு மட்டும் கொடுக்க இருந்தார். இதனால் அய்யம்மாள் மீது மருமகள் ஜோதிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதற்கிடையில் ஜோதி-சிவராமன் இருவரின் கள்ளத்தொடர்பு அய்யம்மாளுக்கு தெரியவந்தது. அவர் ஜோதியை கண்டித்தார். எனவே அய்யம்மாளை கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த 2-8-2007 அன்று மாலை அய்யம்மாள் வெளியே சென்றிருந்த போது சிவராமன் வீட்டுக்கு வந்து ஜோதியுடன் உல்லாசமாக இருந்தார். அப்போது திடீரென்று வந்த அய்யம்மாள் அவர்களை பார்த்து விட்டு கண்டித்தார். பின்னர் மாட்டை கொண்டு வர நல்லாறு ஓடை பக்கம் சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஜோதி, சிவராமன் ஆகியோர் அய்யம்மாளை கழுத்தை நெரித்தும், கல்லால் முகத்தில் தாக்கியும் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் சிவராமன், ஜோதிக்கு ஆயுள் தண்டனையும், கொலையை மறைக்க முயன்ற சிவராமனுக்கு மேலும் 3 ஆண்டுகள் ஜெயில்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

2. வாணியம்பாடி அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண் படுகொலை. கள்ளக்காதலன் கைது – ஆம்பூர்,ஜன.22-2009

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள மிட்டானங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அம்சா (வயது 45). இவர்களுக்கு மோகன் என்ற மகன் உள்ளார். அம்சா கூலி வேலைக்கு சென்றபோது பத்தாப்பேட்டையை சேர்ந்த குமரவேல் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி கோவிந்தனுக்கு தெரிந்ததும் அவர் மனைவியை கண்டித்தார். இதனால் அம்சா கணவனை விட்டு பிரிந்து சென்று பத்தாப்பேட்டையில் கள்ளக்காதலன் குமரவேலுவுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

குமரவேல் பீடி தொழில் செய்து வந்தார். அவருக்கு போதுமான வருமானம் இல்லாததால் அம்சாவிடம் பணம் கேட்டார். அம்சா தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை குமாரவேலுவிடம் கொடுத்தார். இதை குமரவேலு குடித்து அழித்துவிட்டார்.

இதனால் குமரவேலுவுக்கும், அம்சாவுக்கும் தகராறு ஏற்பட்டது. தினமும் அம்சா பணத்தை கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் அம்சா மீது குமரவேலுவுக்கு வெறுப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு அம்சாவும், குமரவேலும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அம்சா மறுபடியும் பணத்தை கேட்க ஆரம்பித்தார். இதனால் ஆவேசம் அடைந்த குமரவேலு அருகில் இருந்த பலகையை எடுத்து அம்சாவின் தலையில் தாக்கினார். இதில் அவர் கீழே விழுந்தார். மேலும் ஆத்திரம் அடங்காத குமரவேலு அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து அம்சாவின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்து அம்சா ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

3. அடகு வைத்த தங்க நகைகளை திருப்பிக் கேட்டதால் கழுத்தை அறுத்து கொன்றேன். கள்ளக்காதலியை கொலை செய்த புதுமாப்பிள்ளை வாக்கு மூலம்

தேனி மாவட்டம், ஆண்டிப் பட்டி அருகே உள்ள வைகை அணைப் பூங்கா அருகே கடந்த 15-ந் தேதி ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் தேனியைச் சேர்ந்த வேலையா என்பவரின் மனைவி கலாவதி (வயது32) என்று தெரிய வந்தது. கொலை செய்தது யார்? என்ன காரணம் என்பது தெரியாமல் இருந்தது.

இதற்கிடையே தேனி சிவராம் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(26), அல்லி நகரம் கிராம நிர்வாக அதிகாரி வனக்காமு மூலம் ஆண்டிப்பட்டி போலீசில் சரண் அடைந்தார். போலீ சாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-

நான் தேனியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தேன். எனக்கும் கலாவதிக்கும் 3 வருடத்துக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த தங்க நகைகளை வாங்கி அடகு வைத்தேன்.

இந்நிலையில் 4 மாதங் களுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. இதனால் கலாவதியுடன் அதிகமாக தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதற்கிடையே அவரை சந்தித்த போது உனக்கு திருமணம் ஆகி விட்டது. எனது தங்க நகைகளை மீட்டு என்னிடம் கொடுத்து விடு என்று என்னை வற்புறுத்தி வந்தார்.

அவளுடைய தொல்லை தாங்காமல் சம்பவத்தன்று அவளை வைகை அணைப் பூங்காவிற்கு மொபட்டில் அழைத்து வந்தேன். வரும் போது கத்தியை எடுத்து வந்தேன். பூங்காவில் மறை வான பகுதிக்கு அழைத்துச் சென்று அவளிடம் பேசினேன். அப்போது கழுத்தை அறுத்து கொலை செய்தேன். அவள் அணிந்து இருந்த தங்க சங்கிலி, அவளிடம் இருந்து செல் போன், கால் கொழுசு, கைக்கடிகாரம் ஆகிய வற்றை யும் எடுத்துச் சென்று விட்டேன். போலீஸ் என்னை தேடுவதை அறிந்ததும் நான் போலீசில் சரண் அடைந்தேன்.

4. ஏற்காடு ஓட்டலில் விஷம் குடித்தார் – 3 பேரை திருமணம் செய்த பெண் தற்கொலை – கள்ளக்காதலனுக்கு தீவிர சிகிச்சை

சேலம் வி.எம்.ஆர். தியேட்டர் அருகில் வசித்து வந்தவர் சங்கீதா (வயது 33). இவருக்கு சுனில் (4) என்ற மகனும், சிபானா (3) என்ற மகளும் உள்ளனர். சங்கீதா (சங்கீதா – என்ற பெயர் நினைவிருக்கிறதா!) 3 பேரை திருமணம் செய்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அவர்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (27). இவர் சேலம் சொர்ணபுரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அரிகிருஷ்ணனுக்கும், சங்கீதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகினர். இதனால் சங்கீதா வீட்டிலேயே அரிகிருஷ்ணன் இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் ஏற்காட்டிற்கு வந்தனர். அங்குள்ள இயற்கை எழில்மிகு நிறைந்த இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று காலை அவர்கள் இருவரும் அறையிலேயே விஷம் குடித்து விட்டதாக தெரிகிறது. இதில் வாயிலில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர்.

இதை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், சங்கீதா வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அரிகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சங்கீதாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், எதற்காக அவர்கள் விஷம் குடித்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப நடந்த மனைவி வர மறுத்ததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்கில் தொங்கினார்

ஒரு மணமான பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே சப்-கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். அடுத்தபடி அந்தப் பெண்ணின் பெற்றோர் அல்லது உறவினர் ஒருவர் ”அந்தப் பெண்ணின் தற்கொலைக்கு அவளுடைய கணவனும் மாமியாரும்தான் காரணம், அவர்கள் வரதட்சணை கேட்டுக் கொடுமைப் படுத்தினார்கள்” என்று புகார் கொடுத்து விடுவார்கள் உடனே அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் படுகிறார்கள். இது 100% கேசுகளில் அன்றாடம் நடப்பது.

ஆனால் மனைவி செய்யும் கொடுமையால் கணவன் தற்கொலை செய்துகொண்டால் கேட்பார் கிடையாது. ஒரு சலனமும் இருக்காது. ஒரு மூலையில் செய்தி வெளியிட்டுவிட்டு கப்சிப் ஆகிவிடுவார்கள் அந்த மனைவி மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது.

ஏனெனில் இந்த நாட்டில் கணவனுடைய உயிர் செல்லாகாசு. பெண்களைப் பார்த்து ஜொள்ளுவிடும் ஆண்களே இப்படித்தான் எண்ணுகிறார்கள்.

ஆண்கள் மேம்பாட்டிற்காக ஒரு அமைச்சகம் உண்டா?
பத்திரிக்கைகள் உண்டா?
வளர்ச்சிப் பணிகள் உண்டா?
ஆண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உட்பட்டால் மேல் நடவடிக்கை உண்டா?
ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உண்டா?
பெண்களுக்கு உள்ளதுபோல் ஆண்கள் நலனுக்காக வாரியங்கள், என்.ஜி.ஓ-க்கள் உண்டா?

ம்ஹூம். ஒன்றும் கிடையாது. ஏனெனில் இந்த நாட்டில் ஆண்கள் அனைவருமே மனைவிகளின் “கருமேனியை சிவப்பாக்கும் கிரீம்” வாங்குவதற்காக பணம் கொட்டி அழும் இலவச ஏ.டி.எம் கார்டுகள். அவர்களுக்கென்று தனிப்பட்ட உரிமைகள் ஏதும் கிடையாது.

உரிமைகள் பெண்களுக்கே!

கடமைகள் ஆண்களூக்கே!!

சீக்கிரமே ஆண்சிசுக்கள் கர்ப்பத்திலேயே அழிக்கப்படும் காலம் வரப்போகிறது!

இப்போது செய்தியை வாசியுங்கள்:-

தஞ்சாவூர்,ஜன.21- 2009. குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணம் சன்னா குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மகன் சசிகுமார்(வயது37). இவருக்கும் தஞ்சை கீழவஸ்தாசாவடி அம்மாக்குளம் பகுதியைச் சேர்ந்த முத்தரசிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் தனக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் மனைவியுடன் தினந்தோறும் சசிகுமார் தகராறு செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கமும் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு வந்து முத்தரசியிடம் சண்டை போட்டதால் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தஞ்சையில் உள்ள தாய் வீட்டிற்கு முத்தரசி வந்துவிட்டார்.

அங்கு கடந்த சில மாதங்களாக தாய் வீட்டில் தான் முத்தரசி வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சசிகுமார், மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்துவதற்கு முடிவு செய்தார். அதன்படி நேற்றுமுன்தினம் தஞ்சையில் உள்ள மாமியார் வீட்டிற்கு சசிகுமார் வந்தார்.

அங்கிருந்த மனைவி முத்தரசியை தன்னுடன் வருமாறு அழைத்தார்.

ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் அவர் களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சசிகுமார், வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.

தனது மாமியார் வீட்டிற்கு அருகில் உள்ள பால்வாடியின் பின்புறம் மரம் ஒன்று உள்ளது. உடனே அங்கு சென்ற சசிகுமார், தான் உடுத்தி இருந்த வேட்டியை அவிழ்த்து மரத்தின் ஒரு கிளையில் கட்டி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவலை அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், ஏட்டு வேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.