தொகுப்பு

Archive for பிப்ரவரி, 2009

ஒண்ணுந்தெரியாத பாப்பா

பிப்ரவரி 27,2009 – தினமலர்

திருவாடானை: “மிஸ்டு கால்’ மூலம் இளம்பெண்ணை ஏமாற்றி, குடும்பம் நடத்திய போலி இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் கனகவள்ளி (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஜனவரி முதல் தேதி இவருடைய மொபைலுக்கு மிஸ்டு கால் வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், ” சாரி ராங் நம்பர்’ என கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு பின், அதே எண்ணில் மிஸ்டு கால் வரவே மீண்டும் கனகவள்ளி பேசினார். தனது பெயர் ஜெயக்குமார்(32) என்றும், மதுரையில் இன்ஜினியராக பணிபுரிவதாகவும் கூறி போனை “கட்’ செய்துள்ளார்.

இதை தொடர்ந்து இருவரும் அவ்வப்போது போனில் பேசினர். நாளடைவில் முகம் பார்க்காமல் காதலை வளர்த்துக் கொண்டனர்.

கடந்த 22ம் தேதி நான்கு சவரன் தங்க நகை, 18 ஆயிரம் ரூபாயுடன் மதுரை சென்ற கனகவள்ளி, அங்கு தனி வீட்டில் ஜெயக்குமாருடன் குடும்பம் நடத்தினார்.

இவரை தேடிய பெற்றோர் போலீஸ் உதவியுடன் கனகவள்ளியை கண்டுபிடித்தனர். விசாரணையில், ஜெயக்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும், அங்குள்ள தனியார் கடையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. கனகவள்ளியை மீட்ட போலீசார், ஜெயக்குமாரை கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், ” இன்ஜினியர் மாப்பிள்ளை என்ற ஆசையில் கனகவள்ளி சென்றுள்ளார். அடையாளம் தெரியாத ஆண்களுடன் இளம்பெண்கள் போனில் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும்’ என்றனர்.

———–

அந்தப் போலீசாருக்கு புதுமைப் பெண்களின் வேட்கைகள் புரியவில்லை. சுத்த பத்தாம் பசலிகளாக இருக்கிறார்களே! Pub களுக்குப் போய் இஷ்டத்திற்கு குடித்து விட்டுக் கும்மாளம் போடுவதும், கண்டவனோடு ஜல்சா பண்ணுவதும்தான் இன்றைய நாகரிகம். பெற்றோர்களோ, போலீசாரோ கண்டுவிட்டால் இருக்கவே இருக்கிறது “இவன் என்னைக் கற்பழித்துவிட்டான்” என்னும் அஸ்திரம்!

“கற்பு” என்பதே கெட்ட வார்த்தை என்றும், கற்பு – கற்பு என்று சொல்லியே எங்களை ஆணாதிக்க சமுதாயம் அமுக்கி வைத்துவிட்டது என்றும் அறைகூவலிடுவோர், கற்பழிப்பு சட்டத்தையும் எடுக்கச் சொல்லிப் போராடுவதுதானே? இல்லாத ஒன்றை எப்படி அழிப்பது?

Advertisements
பிரிவுகள்:கள்ளக்காதல் குறிச்சொற்கள்:, , , , , , ,

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க மாணவி ஆர்த்தி ஆர்வம்

வாங்கம்மா, வாங்க! நீங்கதான் பாக்கி.

ரேணுகா சவுத்திரி, கிரிஜா வியாஸ் மற்றும் இங்க இருக்கிற AIDWA வக்கீல்கள் எல்லாரும் சேர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிச்சு, பல்லாயிரக்கணக்கான வயோதிகத் தாய்மார்களையும் கர்ப்பிணிப் பெண்களையும் பொய் வழக்குகளில் கைது செய்வித்து அதனால் பெரும் லாபமடைந்து பெண் குலத்திற்கு மாபெரும் தொண்டுகளை ஆற்றி வருகிறார்கள்.

வாங்கம்மா, நீங்களும் சேர்ந்து கும்மி அடியுங்க. இதில நல்ல வருமானம் இருக்கு!

————-

பெரியகுளம்: தினமலர் நடத்திய போட்டியில் பரிசு பெற்ற பெரியகுளம் கல்லூரி மாணவி ஆர்த்தி எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படித்து பெண் சிசுக்கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாடுபடுவேன் என தெரிவித்தார். பெரியகுளம் ஜெயராஜ் செல்லத்துரை கல்லூரி தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.,) முதலாமாண்டு மாணவி ஆர்த்தி (18). இவர் சென்னையில் 2008ம் ஆண்டு டிச., மாதம் தினமலர், தி ஹிந்து, ஏர் இந்தியா ஆகிய நிறுவனங் கள் இணைந்து வழங்கிய நேர்காணல் போட்டியில் கலந்து கொண்டார். ஆர்த்தி எழுதிய கட்டுரைகளுக்கு தேனி மாவட்ட அளவில் 2ம் இடம் கிடைத்தது. “விழிப்புணர்வு பற்றிய ஓட்டம்’ என்ற ரேங் அவார்டு (சீல்டு) வழங்கப் பட்டது.எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படித்து பெண் சிசுக்கொலை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாடுபடுவேன் என ஆர்த்தி தெரிவித்தார்.

பாவம் பெண், கொலைதானே செய்தாள்!

முன்குறிப்பு:

“குடும்ப வன்முறை என்பது ஆண்கள் மட்டும் செய்வது. பாதிக்கப்பட்டவ்ர் என்றால் மனைவிதான்”

– இந்திய குடும்ப வன்முறைச் சட்டம்.

”பெண்கள்மீது நடக்கும் குடும்ப வன்முறைகளை வெளியில் சொல்லக் கூட முடியாமல் ஒடுங்கி வெதும்பி பரிதாபமாகக் கிடக்கிறார்கள் மணமான பெண்கள். அவர்கள் அனைவருமே அதிர்ந்து பேசக்கூட முடியாத நிலைமையில் உள்ளார்கள்”

— பெண்கள் வாரியம் மற்றும் பெண்ணிய வாதிகள்.

இப்போது செய்தி:

கள்ளத் தொடர்பு கணவன் கொலை: மனைவி உட்பட மூவர் கைது

பிப்ரவரி 19,2009 – செய்தி – தினமலர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (48). இவர் மனைவி பேச்சியம்மாள் (41). இவருக்கும் ரைஸ் மில்லில் வேலைபார்த்த சுரேஷ்குமாருக்கும் (28) பழக்கம் ஏற்பட்டது. இது தெரிந்த பரமசிவம் மனைவியை கண்டித்தார். இதனால் கணவனை கொலை செய்ய வேண்டும் என காதலனிடம் பேச்சியம்மாள் கூறினார். நேற்று முன்தினம் இரவில் சுரேஷ்குமார் தன் உறவினர் முருகேசபாண்டியனுடன்(38) பேச்சியம்மாள் வீட்டின் மாடியில் ஒளிந்திருந்தார். இரவு வீட்டிற்கு வந்த பரமசிவம் மாடியில் மனைவி இருப்பதை பார்த்து அங்கு சென்றார்.

அங்கு சுரேஷ்குமார் இருப்பதை பார்த்ததும், இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டனர். இதில் சுரேஷ்குமார் பரமசிவத்தை கீழே தள்ளியதும், முருகேசபாண்டியன் பரமசிவத்தின் கால்களை பிடிக்க, பேச்சியம்மாள் கணவன் மார்பில் உட்கார்ந்தார். சுரேஷ்குமார் துணியால் பரமசிவத்தின் வாயையும், மூக்கையும் பொத்தினார். பரமசிவம் மூச்சு திணறி இறந்தார். போலீசார் பேச்சியம்மாளை சந்தேகப்பட்டு விசாரணை செய்ததில் மனைவி, கள்ளக் காதலன் மற்றும் அவரது உறவினர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மூவரையும் கைது செய்தார்.

ஆண் உயிரும் ஒரு மனித உயிர்தான்

மதுரை: தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே வாலிபரை தற்கொலை செய்ய மனைவி தூண்டிய புகார் குறித்து பதிலளிக்கும்படி எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை பசும்பொன்நகரை சேர்ந்த வேணி தாக்கல் செய்த மனு: என் மகன் பூவைராஜா(23) மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கும் தேனி மாவட்டம் சின்னமனூர் மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மகள் உமாமகேஸ்வரிக்கும் (31) காதல் ஏற்பட்டது.

உமாமகேஸ்வரி மதுரை கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ., படித்து வந்தார். அவர்கள் 2008 ஜூலை 21ல் திருமணம் செய்து கொண்டு சென்னை, திருப்பதி போன்ற இடங்களுக்கு சென்று வந்தனர். பிறகு உமாமகேஸ்வரி பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவரை தேடி சென்ற என் மகனை உமா மகேஸ்வரியின் தந்தை, தாய், சகோதரியின் கணவர் சிவக்குமார், மற்றும் சகோதரர் மிரட்டியுள்ளனர்.

ஜன., 8ம் தேதி உமாமகேஸ்வரியின் வீட்டிற்கு அருகில் என் மகன் விஷம் குடித்து இறந்தார். ஓடைப்பட்டி போலீசார் தற்கொலை பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை தற்கொலைசெய்ய தூண்டிதாக உமாமகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிய கோரி ஐ.ஜி., எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டது. சிவக்குமார் போலீஸ் துறையில் பணிபுரிவதால் நடவடிக்கை இல்லை.

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரினார். மனுதாரர் சார்பில் பாபுராஜேந்திரன் ஆஜரானார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார், “இதற்கு பதிலளிக்கும்படி தேனி எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப’ உத்தரவிட்டார்.

களவில் விளையும காதல்

கலாசாரக் கட்டுப் பெட்டிகளின் தாந்தோன்றித்தனத்தை முறியடித்து “விடுதலை பெற்ற” இளம் பெண்கள் தங்கள் பெண்ணுரிமையை நிலை நாட்டி காதலர் தினத்தன்று அடித்த கூத்துக்கள் இவை:-

1. இந்து முன்னணி, போலீசாரின் கெடுபிடி தாங்க முடியாமல் காதலர்கள் பெரும்பாலும் திண்டுக்கல் நகரில் உள்ள சினிமா தியேட்டருக்குள் தஞ்சம் புகுந்தனர். இதனால் தியேட்டர்களில் வழக்கத்துக்கு அதிகமாக கூட்டம் நிரம்பி வழிந்தது. தியேட்டரில் இருந்து சினிமா பார்த்து விட்டு ஜோடி, ஜோடியாக காதலர்கள் வெளியேறியதை நேற்று காணமுடிந்தது.

2. அப்போது அந்த பகுதியில் கண்ணில்பட்ட சில காதல் ஜோடிகளை போலீசார், எச்சரித்து அனுப்பி வைத்தனர். வேலூர் கோட்டை பகுதியில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருந்த காரணத்தால், காதல் ஜோடிகள், சினிமா தியேட்டர்கள், அமிர்தி வன உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.

3. ஒவ்வொரு ஜோடியும் காதலின் சின்னமான சிவப்பு ரோஜா மலர்களை கொடுத்து அன்பை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்டனர். காதல் ஜோடிகள் தங்களது அன்பை பகிர்ந்துகொள்ள அணைத்துக்கொண்டு மெய்மறந்து பரிமாறி கொண்டனர்.

—————————————–

”தெய்வீகமான காதல்” களியாட்டங்களை கட்டுப்பாடின்றி, சினிமா தியேட்டர் அரையிருட்டின் துணையுடன் வெறி கொண்டு நிகழ்த்திவிட்டு பிறகு இன்னொருவனைத் திருமணம் செய்துகொண்டால் அது இணக்கமான மணவாழ்க்கையாக இருக்க முடியுமா?

பிறகு நடப்பவை என்ன?

கீழ்க்கண்ட செய்திகளைப் படியுங்கள். இவை யாவும் காதலர் தினத்தன்று நிகழ்ந்தவைதான்!!

1. சூப்பர் மார்க்கெட்டில் பெண் விற்பனையாளர் கொலை : பட்டப் பகலில் வாலிபர் வெறிச்செயல். அந்த வாலிபர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஆனந்தியின் வலது நெஞ்சில் சராமரியாக குத்தி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் ஆனந்தி கீழே மயங்கி சாய்ந்தார்.

சில தினங்களுக்கு முன் ஆனந்தியை பெண் பார்க்க சிலர் வந்துவிட்டுச் சென்றனர். விசாரணையில் ஆனந்தி ஏற்கனவே வாலிபர் ஒருவரை காதலித்தது தெரியவந்தது. இந்த நிலையில் தாக்குதல் நடந்துள்ளதால் காதல் விவகாரத்தால் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

2. சென்னையில் புதுமணத்தம்பதிகள் பரிதாப சாவுமனைவியை எரித்துக் கொன்று விட்டு, தீக்காயத்தால் கணவனும் இறந்தார்சென்னையில் புது மணத்தம்பதிகள் பரிதாபமாக இறந்து போனார்கள். ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்பட்டதால் இருவர் உயிரையும் தீ குடித்து விட்டது.
—————

குழந்தையைக் கடத்திச் சென்ற மனைவி

சென்னை வேப்பேரியில் வசிப்பவர் பாலாஜி (வயது 30). அசோக் லைலேண்டு நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றுகிறார். இவரது மனைவி பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் இவர்கள், விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளனர்.

இந்த நிலையில், குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்ற பிரச்சினை ஏற்பட்டது. குழந்தை பாலாஜியிடம் இருக்க வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை குழந்தையை மனைவியிடம் கொடுக்க வேண்டும் என்றும் பாலாஜிக்கு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குழந்தையை பாலாஜியின் மனைவி வந்து பார்த்து செல்வார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பாலாஜி வேப்பேரி போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தையை பார்க்க அழைத்து சென்ற தனது மனைவி குழந்தையோடு காணாமல் போய்விட்டதாகவும், குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாகவும், குழந்தையை மீட்டுத் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனு மீது இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் எனும் மாயை!

சென்னை குடும்பநலக் கோர்ட்டுகளில் நேற்று ஒரே நாளில் 9 விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

காதலர் தினம் என்பது யாரிடமும் கேட்காமல் நாட்டுக்குள் நுழைந்துவிட்ட நவீன நாகரீகமாகும். காதலர்களுக்கு இந்த தினம் கொண்டாட்டமாக அமைந்தாலும், பெற்றோருக்கு இது கஷ்ட தினமாகத்தான் தோன்றும்.

காதல் பற்றிய தெளிவான கருத்து இதுவரை கூறப்படவில்லை என்பதால், அதுபற்றி எடுக்கும் சினிமா படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிடுகின்றன. பல உணர்ச்சிகளின் கலவையாக இருக்கும் காதல், அந்தந்த காலகட்டங்களில் அனைவரின் மனதிலும் புகுந்து குத்தாட்டம் போட்டுவிடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கேள்விப்பட்ட காதல், இன்று தெருவுக்கு தெரு மறைவில் நிற்கிறது.

மல்லுக்கட்டும் காதலர்கள்

பெரும்பாலான காதல், திருமணத்தில் முடிகின்றன. அப்படிப்பட்ட காதல் திருமணங்களும் பெரும்பாலும் கோர்ட்டுகளில் முடிந்து விடுகின்றன. தற்போது கோர்ட்டுகளில் குவியும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை, மிகுந்த ஆச்சரியத்தையும், அச்சத்தையும் எழுப்புகின்றன. இவைகளில் பெரும்பாலான வழக்குகளில், `முன்னாள்’ காதலர்கள்தான் மல்லுக்கட்டுகின்றனர் என்பது இன்னும் வியப்பு.

சென்னையில் விவாகரத்து வழக்குகளை விசாரிப்பதற்காக 3 குடும்ப நலக்கோர்ட்டுகள் உள்ளன. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கோர்ட்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அதிகபட்சமாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 3 ஆயிரமாக இருந்தது.

கடந்த ஆண்டில்…

ஆனால் கடந்த 2008-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 905 விவாகரத்து வழக்குகள் தாக்கலாகியுள்ளன. மாதமொன்றுக்கு அதிகபட்சம் 412 வழக்குகளும், குறைந்தபட்சம் 250 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு 350 வழக்குகளும், நாளொன்றுக்கு 17 வழக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 412 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் காதல் திருமணங்கள் ஏராளமாக உள்ளன.

5-வது நாளில் வந்த மனு

இந்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கு ஒன்று, கோர்ட்டு ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியது. சென்னையில் 23.1.09 அன்று (வெள்ளிக்கிழமை) நடந்த திருமணம் அது. 27-ந் தேதி காலையிலேயே மணமகன் தனது கையில் விவாகரத்து மனுவுடன் முதல் ஆளாக கோர்ட்டுக்கு வந்துள்ளார். மனுவைப் பார்த்த ஊழியருக்கு அதிர்ச்சி.

`திருமணம் ஆகி 5 நாள் கூட ஆகவில்லையே, இவ்வளவு சீக்கிரமாக விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு வந்து விட்டீர்களே’, என்று கேட்டு இருக்கிறார். அதற்கு மணமகன், `சீக்கிரமா? தாமதமாக கோர்ட்டுக்கு வந்ததாக நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். 24 (சனிக்கிழமை), 25 (ஞாயிற்றுக்கிழமை), 26 (குடியரசுத் தினம்) ஆகிய தேதிகளில் விடுமுறை வந்துவிட்டதால் இவ்வளவு பிந்தி வரவேண்டியதாகி விட்டது. இல்லாவிட்டால் திருமணமான மறுநாளே மனுவோடு வந்து இருப்பேன்’ என்று அந்த மணமகன் கூறி இருக்கிறார்.

மனைவிகளாகும் மாணவிகள்

மணமக்களின் மணமாலை கூட முழுவதுமாக வாடி முடிவதற்குள், இவர்களின் மணவாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. இதுபோல் பல கல்லூரி மாணவிகள் சிலர், `திடீர்’ மனைவிகளாகவும், முன்னாள் மனைவிகளாகவும் மாறிக் கொண்டு இருக்கின்றனர். குடும்பத்தையும், கடமையையும் மறந்து, அவர்களின் வயதையொத்த நண்பர்களின் ஆலோசனையின்படி, காதலனுடன் எங்காவது சென்று பதிவுத் திருமணம் செய்யும் மாணவிகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற திருட்டுத் தாலிகளை பெற்றோர் அல்லது உறவினர்கள் கண்டுபிடித்து விடுவதால் நெருக்கடி காரணமாக வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு வரும் மாணவி (மனைவி)களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. வரும்காலத்தில் பெற்றோருக்கு இது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

நடிகைகளும் விவாகரத்தும்

விவாகரத்துக்கு வயதும் ஒரு தடையல்ல. 50 வயதைத் தாண்டிய பிறகு விவாகரத்து செய்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இருக்கின்றனர். சென்னை கோர்ட்டில் தற்போது வீடியோ கான்பரன்சிங் என்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம், வெளிநாடுகளில் உள்ள மணமக்களுக்கு விவாகரத்து வழக்கில் தீர்ப்பளிக்கப்படுகிறது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட சினிமா நடிகர்களும் விவாகரத்துக்கு தப்பவில்லை. ராமராஜன்-நளினி, பார்த்திபன்-சீதா இவர்களும் அடக்கம். ஸ்ரீவித்யா-ஜார்ஜ், ஊர்வசி-மனோஜ், ஹீரா-புஸ்கர்நட், சொர்ணமால்யா-அர்ஜுன், வனிதா-ஆனந்த் ஆகியோரும் மணவாழ்க்கையை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். சுகன்யா-ஸ்ரீதர், பிரசாந்த்-கிரகலட்சுமி, சரிதா-முகேஷ், மீராவாசுதேவன்-விஷால் ஆகிய ஜோடிகள் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். காதல் பரிமாணத்தை வளர்க்கும் சினிமா, டி.வி. தொடர்களால், இளம் உள்ளங்கள் கெட்டு, இறுதியில் கோர்ட்டுக்கு கொண்டு வந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

காதலர் தினத்துக்கு அர்ப்பணம்

இந்த ஆண்டிலும் கடந்த ஆண்டைப் போலவே விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சென்னை குடும்பநல கோர்ட்டு வட்டாரம் தெரிவித்தது. நேற்று மட்டும் தாக்கல் செய்யப்பட்ட 9 வழக்குகளில் (வக்கீல் புறக்கணிப்புப் போராட்டம் இருந்தாலும்) பெரும்பாலான வழக்குகள், காதல் மணம்புரிந்தோரால் தாக்கல் செய்யப்பட்டன. காதலர் தினத்துக்காக இதை அர்ப்பணித்து இருப்பார்களோ, என்னவோ?

நன்றி – தினத்தந்தி 14-02-2009