அறிமுகம்

இ.பி.கோ 498A. India

வரதட்சிணை கேட்டுக் கொடுமைப் படுத்துவோரை தண்டிக்கும் சட்டத்தைப் (Sec 498A of IPC) பயன்படுத்தி அப்பாவி வயதான மாமியார், மாமனார்களையும், சிறு பெண்களையும், 5 வயதுகூட நிரம்பாத குழந்தைகளையும் கைது செய்து சித்திரவதை செய்யும் அராஜகத்தை எதிர்த்து நடக்கும் அறப்போர்! உங்கள் கருத்துக்களை tamil498a at gmail dot com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

நன்றி!

Advertisements
 1. kannan
  7:19 முப இல் 2009-12-17

  good

 2. kannan
  12:57 முப இல் 2009-12-20

  kannan mobile no 9380190310

 3. Hari
  7:13 பிப இல் 2009-12-30

  It is a well known fact that Ladies are very good at unleashing verbal violence example being the fights among ladies in common place like water tank etc. So men who happen to hear that should call the police and file cases under DV Act.

  Recently in Sun News ‘Nijam’ episode, a neighborhood lady took law into her hands and behaved violently with a Samiyar in Asthampatti, Salem. She slapped a boy who was around. She must be booked in DV act.

 4. kannan
  7:15 பிப இல் 2010-01-07

  அந்துமணி பா.கே.ப.,
  ஜனவரி 02,2010,13:10 IST

  “வரதட்சணையா? கேட்பவனைக் கட்டி வைத்து உதைப்பேன்… கேட்ட நாக்கை வெட்டிப் போடுவேன்… அவர்கள் குடும்பத்தையே கதி கலங்க வைப்பேன்…’ எனக் கூறும் கன்னிப் பெண்கள் தமிழ்நாட்டில் 100க்கு 90 பேர் உண்டு.
  பள்ளி, கல்லூரி நாட்களில், வரதட்சணை எதிர்ப்பு பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு, வரதட்சணைக் கொடுமை, இழிவு பற்றி ஓங்கிய குரலில் பேசும் துணிச்சலான இளம் பெண்கள் அனேகம் பேர் இருக்கின்றனர்.
  எழுத்து வன்மையுடைய இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி ஆண்டு மலர்கள் மற்றும் வார, மாத இதழ்களில், வரதட்சணைக்கு எதிரான கவிதைகள், கதைகள், கட்டுரைகளும் எழுதுகின்றனர்.
  வரதட்சணைக்கு எதிரான கருத்துடைய ஏராளமான வாசகியர் எனக்கு அவ்வப்போது எழுதி, தமது கருத்துக்களை வலியுறுத்துவது உண்டு. அப்படிப்பட்ட வாசகியருள், தமிழகத்திலேயே கல்வி அறிவு அதிகம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட வாசகி ஒருவரும் அடக்கம்! அவரது படிப்பு கொஞ்சமா? லேசில், “சீட்’ கிடைக்காத, மிக அரிதான, “கோர்ஸ்’ ஒன்றில் பட்ட மேற்படிப்பு முடித்து, அதற்கு மேலும் படித்துக் கொண்டுள்ளார்.
  படிப்பை கணக்கில் கொண்டு வாசகிக்கு எக்கச்சக்க வயது இருக்கும் எனத் தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். மிஞ்சிப் போனால், 23–24 தான் இருக்கும்.
  அவர் கடந்த வாரம் எழுதிய கடிதத்தை தருகிறேன்:
  … உங்களுக்கு ஒரு, “லெட்டர்’ போட்டு ரொம்ப நாளாச்சே என்று நினைத்தேன். அவ்வளவுதான்! எழுத உட்கார்ந்திட்டேன். (பை தி பை என்னை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஐ யம் யுவர், “பென்’ பிரெண்ட்…)
  மணி, இப்ப வீட்ல உட்கார்ந்து …க்கு ரெக்கார்ட், “பினிஷ்’ பண்றதும், எக்சாமுக்கு படிப்பதும் தான் வேலை. இன்னும் சிவில் எக்சாம், எல்.ஐ.சி., டெஸ்ட், பாரஸ்ட் டிபார்ட்மெண்ட்ல ஒரு டெஸ்ட் எல்லாத்துக்கும் பிரிப்பேர் பண்றேன். “பாஸ்’ பண்றேனோ… இல்லையோ, தெரியாத மேட்டர்ஸ் தெரிஞ்சிட்டுப் போறேன்.
  வீட்டில் வரன் தேடும் படலம். வரதட்சணை சுழலில் சிக்கி, மூச்சுத் திணறி நிற்கிறேன். வரதட்சணைக் கொடுமை என்றால் என்ன? அதனால், ஒரு பெண்ணின், “மனஸ்’ என்ன பாடுபடும்? எல்லாம், “பிராக்டிகல்’லா அனுபவிச்சிட்டு இருக்கேன். ஸ்கூல்ல, “ஈவில்ஸ் ஆப் டவுரி சிஸ்டம்’ன்னு படிச்சப்பவோ, காலேஜ்ல வரதட்சணையை எதிர்த்து கவிதைகள் எழுதிய போதோ அதன், “பவர்’ பற்றி சுத்தமா எனக்குத் தெரியாது. அனுபவத்தில், “தாங்க முடியலே’ன்னு சொல்ற அளவுக்கு வரல… முதிர் கன்னிகளை நினைத்து மனம் வெம்புகிறது.
  மணி, “ஜோக்’ என்ன தெரியுமா? அந்த, “பையன்’களுக்கு பொண்ணு கட்டணும்ன்னு விருப்பம் இருக்கு. அப்பா அல்லது அம்மாதான், “இவ்வளவு லட்சம் தேவை’ என்கின்றனர். என்ன மணி, பையன் தானே பெண்ணைக் கட்டப் போறான்? அவன் வாயில்லா ஜீவனாய், முதுகெலும்பில்லாத மனுஷனாய் இவங்க பின்னால் நடக்கிறான். சிரிப்பா இருக்கிறது. உண்மையிலேயே பையன்களுக்கு முதுகெலும்பில்லையா? இல்லை, நடிக்கிறாங்களா? திடீர் பணக்காரனாகும் விருப்பம் யாருக்குத் தான் வராது. எப்படியும் ஒரு பொண்ணு பிறந்ததுன்னா, எவனுக்கோ லாட்டரி அடிச்சதுன்னு அர்த்தம்.
  “…’ கிளாசிலே ஒரு சார் சொன்னார் 353:1 என்ற விகிதத்தில் இப்ப டைவோர்ஸ் நடக்குதாம். சீரியஸ் மேட்டர் தானே. லட்சங்களுக்கு தாலி கட்ட நினைப்பது தான் காரணம்ன்னு நான் நினைக்கிறேன். எப்படி மனக் கசப்பு வராமல் போகும்?
  என் பிரெண்ட் கூறினாள்: ஒரு பையனின் (டாக்டர்) அம்மா அவன் முன்னிலையில் கேட்டார்களாம்… “வீடு, கார், சில லட்சங்கள், 13 சவரன் தாலி செய்ய பணம், புடவை எடுக்க 10,000…!’ அவள், என்னிடம் கேட்டாள், “இவ்வளவையும் கொடுத்திட்டு அவனை எப்படி ஹஸ்பண்ட்ன்னு சொல்ல முடியும்? தாலி கூட என்னுடைய பணம். இத விட நாமே நமக்கு தாலி செஞ்சு போட்டுட்டு நடக்கலாம்ல?’ சரி தானே மணி (தளர்வாய் தான் கேட்கிறேன்.)
  எங்கள் வீட்டில் ஒரு பையனின் அப்பா வந்து கேட்கிறார், அவர் பொண்ணைக் கட்டிக் கொடுத்ததில் உள்ள கடன் சில லட்சங்கள் இருக்காம். அதனாலே நாங்க பணம் கொடுக்கணுமாம்! எப்படி மணி நாவு கூசாமக் கேக்கத் தோணுது?
  பையனின் படிப்புக்குத் தான் மதிப்பு உண்டா மணி? பெண்ணின் படிப்புக்கு மதிப்பு இல்லையா? அவங்க பி.ஈ., எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்சி., எம்.பில்.,ன்னா, “ரேட்’ ரொம்பக் கூடுது!
  சில வேளைகளில் நினைப்பேன்… “பெண்ணா பிறந்திருக்கக் கூடாது…’ மற்ற சில வேளைகளில், “ஊகூம்… நிறைய காரியங்களில் ஆணை விட உயர்ந்தவள் பெண். பெண்ணாய் பிறந்ததில் தப்பில்லை…’ அப்படியும் நினைப்பேன்.
  நான், என் தம்பியிடம் கூறி விட்டேன், “டியூஷன் எடுத்தாவது மாசா மாசம் ஒரு சிறு தொகைய சேமிக்கத் தொடங்கி விடு. நீ கட்டப் போகும் பெண்ணுக்கு தாலி, மோதிரம், புடவை உன் சொந்தக் காசில் அமைய வேண்டும்!’ என்று! மணி, என் உயிர் இருந்தால் இச்செயலை அமலுக்குக் கொண்டு வருவேன்.
  ஒரு வேளை, ஒரு சிங்கிள் பைசா கூட என்னுடைய அப்பா தராம, மேரேஜ் பண்ணிக் கொடுத்தாலும் நான் உழைத்து சம்பாதிக்க முடியும் என்கிற தெம்பு எனக்கு இருக்கு; இந்த ஆம்பிளைங்களுக்கு அந்த தெம்பு இல்லையா மணி? ஒரு பெண் நினைத்தால் லட்சம் ரூபாய்களை உருவாக்கவும், அதே சமயம், அதை அழிக்கவும் முடியும் என்கிறது இவர்களுக்கு தெரியாதா மணி?
  ஒண்ணு நிச்சயம்… வாழ்க்கை கவிதையா அமையணும்ன்னா, வரதட்சணை வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது. மெல்லிய பனி விழும் பசும்புல் நிறைந்த அந்தப் பள்ளத்தாக்கில் மூங்கிலால் செய்த ஒரு சிறிய வீடு. அதன் முற்றத்தில் எப்போதும் பூ சொறியும் ஒரு செண்பக மரம். அதனுள்ளே, அன்பினால் (கவனிக்கவும், “பணத்தினால்’ அல்ல) இணைக்கப்பட்ட இரு இதயங்கள். அன்பு இருந்தா, வேற என்னங்க வேணும்?
  லட்சங்களோடு வரும் பெண் சொல்வாள்… “சும்மா இருய்யா… வசனம் பேசாதே… இத்தனை லட்சங்களும் எங்க அப்பா தரலேன்னா, கட்டிப்பீங்களா என்னை…?’ அட, போங்கய்யா… வரதட்சணை பிச்சை வாங்க கூசாத பொல்லாத ஆண்மை வீறு கொண்டு எழும்பிடும்… பிறகென்ன? ஒரு ஆள் விட்டு கொடுக்கலேன்னா… வக்கீல் நோட்டீஸ்…!
  மணி, இந்தியர்களிலேயே ஒரு குட் இந்தியன் என்றைக்காவது வருவார் என்கிற, நம்பிக்கை எனக்கு இருக்கு. “வரலேன்னாலும் பரவாயில்லை…’ ன்னு மம்மி கிட்ட சொன்னா, அடி விழும். பாவம், பெற்றோர், யாராவது தூர வந்தால் போதும்… இவுங்க, “டேட்’ பிக்ஸ் பண்ணிடுவாங்க! நான் சொல்லுவேன், “அவசரப்படாதீங்க, அவங்க, “பாயிண்டு’க்கு இன்னும் வரல… வரதட்சணையில போய்டுவாங்க!’ என்று. எனக்கு இருக்கிற உறுதி, பாவம், அவங்களுக்கு இல்லை!
  ஓ.கே., மணி, பேசி, பேசி நீ…ளமா பேசிட்டேன். எனிவே… ஒரு பிரெண்டிடம் பேசி என்னமோ பெரிய பாரங்களை இறக்கி வைத்த மாதிரி, “மனஸ்’ லேசா இருக்கு. ஒரு வேண்டுகோள் மணி, உங்களுக்கு நிறைய வாசகர்(ன்)கள் இருப்பாங்களே, அவங்களுக்கு நீங்க ஒரு, “அட்வைஸ்’ கொடுக்கக் கூடாதா? ஒருவர் திருந்தினாலும், ஆத்ம திருப்தியும், கோடி புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும்.
  என் அறுவைகளை எல்லாம் சகித்தமைக்கு நன்றி மணி. (கிவ் மை லவ் ரிகார்ட்ஸ் டு லென்ஸ் அங்கிள் அண்ட் ஹோப் யூ வில் ரைட் சம் லைன்ஸ், ரெஸ்ட் இன் நெக்ஸ்ட்!)
  — இப்படி எழுதியுள்ளார் வாசகி!
  திருமணமாகாத இளம் வாசகியரே… கடிதம் எழுதியுள்ள வாசகி எழுப்பியுள்ள கேள்விகள், கருத்துகளுக்கு உங்கள் பதில் என்ன?
  தெரிந்து கொள்ளலாமா நான்?
  ***

 5. kannan
  4:34 பிப இல் 2010-01-09

  நீதிபதியை வேறு கோர்ட்டுக்கு மாற்றபெண் வக்கீல்கள் முறையீடு
  ஜனவரி 09,2010,00:00 IST

  சென்னை:சென்னை குடும்ப நல கோர்ட் நீதிபதி முகமது இஷாத் அலியை, வேறு கோர்ட்டுக்கு மாற்றக் கோரி, தலைமை நீதிபதியிடம் பெண் வக்கீல்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.திருநெல்வேலியில், கூடுதல் சப் – ஜட்ஜ் ஆக நீதிபதி முகமது இஷாத் அலி பணியாற்றிய போது, விரைவு கோர்ட்டில் பணியாற்றும் பெண் ஊழியருடன் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. இந்தப் புகார் குறித்து, நீதிபதி இஷாத் அலியிடம், ஐகோர்ட் பதிவுத் துறை விளக்கம் கோரியது. இதை எதிர்த்து, நீதிபதி இஷாத் அலி தாக்கல் செய்த மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

  ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, பெண் வக்கீல்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம், அதன் தலைவர் பிரசன்னா தலைமையில் நேற்று கூடியது. செயலர் நளினி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலேவிடம் அளித்த மனுவில், “குடும்ப நல கோர்ட் முதன்மை நீதிபதி முகமது இஷாத் அலியை, வேறு கோர்ட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இவர் மீது துறை நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அவரை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்’ என கூறியுள்ளனர்.

 6. KK
  7:23 முப இல் 2010-04-22

  Anger is a great poison of life,
  A brave man controls his anger,
  In every walk of life it brings us danger,
  Even though it divorces husband and wife,
  Angry men or women lose their consciousness,
  They fight and fight without thinking,
  Good hearts are disturbed in deep sinking,
  It makes them to argue in unconsciousness,
  In anger a son tears the shirt of his father,
  And his father angrily runs to the police-station,
  To see this incident many people gather,
  They laugh and say, what an insulting situation!
  Grandmother shouts, anger is a hot weather,
  Anger, Anger, Anger, my son stop your destruction.

  Mazid S Kazi , INDIA

 7. K. Saravanan
  2:34 பிப இல் 2010-12-19

  There are many male suffered by indian marriage law. Your web site is so good. And it is need for now . Thank you.

 8. 3:33 பிப இல் 2011-08-19

  good

 9. balaji
  3:54 பிப இல் 2013-05-23

  There are many male suffered by indian marriage law. Your web site is so good. And it is need for now . Thank you.

 10. Siva
  2:21 பிப இல் 2014-11-21

  Good.. 100% valid statements. Pls continue…

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: