தொகுப்பு

Archive for செப்ரெம்பர், 2007

பொய் வழக்குகளால் பாதிக்கப்படுவதை எதிர்த்து ஒரு வழக்கு!

பொய் வரதட்சிணைக் கொடுமை வழக்கில், அவசரப்பட்டு, விசாரணையின்றி நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா? உங்கள் உறிமைகள் பறிக்கபட்டனவா? உங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தோர், உறவினர் போன்றோர் கைது செய்ய்ப் பட்டனரா? பொய் டவுரி வழக்கில், விசாரணையின்றி, முன் மீன் எடுக்கவும் நேரமின்றி, வக்கீலை அணுகவும் நேரமின்றி, நீங்கள் கைது செய்யபட்டீர்களா? அரசியல் சட்டத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய உங்கள் அடிப்படை மனித உறிமைகள் மீறப்பட்டதாகக் கருதுகிறீர்களா?

இந்தியாவில் இதுபோல் பாதிக்கப் பட்டோர் நலனுக்காகவே தொடங்கப்பட்டுள்ள Save Indian Family Foundation – ன் அங்கத்தினர் ஒருவர் இத்தகைய அநியாயமான, விசாரணையில்லாக் கைதுகளை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்க இருக்கிறார். இந்த வழக்கில் அவர் முன்வைக்கும் கோரிக்கைகள்:-

  1. குற்றம் சாட்டப்பட்டவர், உண்மையில் குற்றவாளி தானா என சரியாக விசாரிக்கப் பட வேண்டும்
  2. குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றங்களை அணுக , நீதி உதவி கோர போதுமான நேரம் கொடுக்கப்ப்பட வேண்டும்

அவருடைய கோரிக்கைகளை வலுப்படுத்த ஆவலா?

ஆமெனில் உங்கள் விபரங்களை

ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு உடன் அனுப்பவும். அரசியல் சாசன சட்ப்படி (Constitution of India) தனி மனித சுதந்திரம் என்பது ஒவ்வோர் இந்தியனுக்கும் கொடுக்கபட்ட ஒரு இன்றியிமையாத சொத்து. நம் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்வது நம் கடமை.

உடன் செயல் படுவீர்!!

Advertisements

பொய் வரதட்சிணை வழக்குகளில் சிக்கித்தவிக்கும் இந்தியா

“ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இப்ப ஆளையே ….” என்று ஒரு செலவாடை உண்டு. அது போலவே சாமானிய மனிதர்களை விழுங்கிகொண்டிருக்கும் பொய் டவுரி வழக்குகள் இப்போது பிரபலங்களையும் மந்திரிகளையும் தாக்கத் தொடங்கியிருக்கின்றன.

இத்தகைய வழக்குகளின் பின்னணி:-

பெண்களை “டவுரி” கொடுமையிலிருந்து காக்க சுமார் 20 … 25 ஆண்டுகள் முன் உருவாக்கப்பட்ட சில சட்டங்கள் இன்று புதுமைப் பெண்கள் என்ற முக்காடில் ஒளிந்திருக்கும் சில விஷமிப்பெண்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. “..உன் மீதும், உன் வயோதிகத் தாய் மீதும், உன் வீட்டில் நல்ல வேலையில் இருப்போர் மீதும் போலீஸில் புகார் செய்வேன்..” என்று சில மனைவிகள் கணவன்மார்களை மிரட்டுவது சகஜமாகிவிட்டது. பழி தீர்க்க அலையும் சில பெண்களும், தவரான பாலியல் குற்றங்களில் பிடிபட்ட பெண்களும், முன்னமே திருமணம் ஆகி அதை மறைத்து மீண்டு மணமுடிக்கும் சில பெண்களும், குட்டு வெளிப்பட்டால், தான் தப்பித்துக்கொள்ளவும், ஆண்கள் மீது பழிபோடவும், பொய் டவுரி வழக்குகளை தாக்கல் செய்துவிடுகின்றனர். புதுமைப்பெண் என்ற பெயரில் பலர் இந்த மிரட்டலில் பணம் கரக்கின்றனர். பணம் கொடுக்க முன் வராத ஆண்கள், அப்பாவிகளாய் இருப்பவர் ஆகியோர் கைது செய்ப்பட்டு, அவர்களும் அவர்களது வீட்டாரும் அவமானத்துக்குள்ளாகுகின்றனர். இந்தப் போக்கை உச்ச நீதி மன்றமே, “legal terrorism”, அதாவது “சட்டத்த்தை வைத்தாடும் பயங்கரவாதம்” என்று கூறியிருக்கிறது – case of Sushil Kumr Sharma Vs Union of India – 2005.

பாதிக்கப்பட்ட பிரபலங்கள்:-

  • நடிகர் திரு பிரசாந்த் மீது டவுரி வழக்கு தொடர்ந்த அவரது மனைவி (என்று ஆஜரான) கிருகலக்ஷ்மிக்கு முன்னமே ஒரு திருமணம் ஆகியிருந்த குட்டு வெளிப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். முன் மணத்தை மறைத்து, தன்னை திருமணம் செய்து கொண்ட ஆதாரங்களை பிரசாந்த் இப்போது நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் டவுரி வழக்கு தொடரும் முன் பிரசாந்த் கிருகலக்ஷ்மியுடன் வாழத்தயார் என்று நீதிமன்றத்தில் பெட்டிஷன் கொடுத்திருந்தார் (இப்படியும் சில அப்பாவிகள்!)!. அதன் பின்பும் கிருகலஷ்மி, பிரசாந்தின் தாய் தந்தை என்று முதியவர்களையும் சேர்த்து டவுரி வழக்கு தொடுத்தார். எல்லோரையும் கைது செய்யும் பொருட்டு போடப்பட்ட இந்த திட்டம் இப்போது அம்பலமாகியுள்ளது!
  • அர்ஜுன் சிங் இந்த வரிசையில் சமீபத்தில் அகப்பட்டவர் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் சிங்கின் பேரனின் மனைவி ப்ரியங்கா, அர்ஜுன் சிங் மீது டவுரி வழக்குத் தொடுத்து இருக்கிறார். இது பொய்யா மெய்யா என்று நிரூபிக்கப் படவில்லை. இந்த வழக்கு டில்லியில் பெரும் பரபரப்பை ஏர்ப்படுத்தியுள்ளது. அர்ஜுன் சிங் பென்சு கார் ஆகியவை கேட்டு தன்னை வதைப்பதாய் குற்றம் சாட்டியுள்ளார் பேரனின் மனைவி ப்ரியங்கா. தனக்கும் இந்த திருமணத்துக்கும் தொடர்பில்லை என்று கூறி தப்பிக்கப்பார்கிறார் மந்திரி !! அர்ஜுன் சிங் ஒரு மந்திரி என்பதாலோ என்னவோ, அவர் இன்னமும் கைது செய்ப்பட்டவில்லை. சாதாரண மனிதராக இருந்தால் “இந்தா, சூ சூ” என்பதற்குள் கைதாகி விடுவார்கள். அத்தகைய விஷக் கொடுக்கு இந்தச் சட்டம்!

அர்ஜுன் சிங் பல ஆண்டுகள் மத்திய பிரதேச மாநிலத்தின் முதன் மந்திரியாக இருந்தவர். அதன் பின் கவர்னராகவும், மத்திய மந்திரி சபையில் முக்கியப் பொறுப்புகளில் கேபினெட் அந்தஸ்துள்ள அமைச்சராகவும் நீண்ட நெடுக பணியாற்றுபவர். அரசியலில் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இருந்த வருக்கு ஒரு பெண்ணிடமிருந்து வரதட்சிணை வாங்கவேண்டிய தேவை என்ன? இதிலிருந்தே தெரியவில்லையா, அந்தப் பெண் தான் பிரபலமாவதற்காகவும், பெரிய மனிதர்களை இதுபோல் பயமுறுத்தினால் கேட்டதை செய்வார்கள் என்பதாலும் இதுபோன்ற வழக்குகளை தொடுத்திருக்கிறார் என்பது?

நாடே கண்டு தவிக்கும் இந்த பொய் டவுரி வழக்குகள் எங்கு போய் முடியும்?

இத்தகைய வன்கொடுமைச் சட்டத்தினால் தீண்டப்பட்ட கணவர்கள், மர்றும் அவர்தம் குடும்பத்தினர்களின் கதி என்ன?

இறைவனே முடிவுசெய்யவேண்டும்!!

பொய் கற்பழிப்பு வழக்குகள் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

“பழிவாங்குவதற்காகவும், மிரட்டி பணம் பறிப்பதற்காகவும், சொத்துக்களை அபகரிப்பதற்காகவும் கூட பொய்யான கற்பழிப்பு வழக்குகள் தொடரப்படுகின்றன. இது போல பொய்யாக குற்றம் சாட்டப்படுவோர் தண்டிக்கப்படாத வகையில் கோர்ட்டுகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்” என்று சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.

ம.பி. மாநிலத்தை சேர்ந்தவர் ராது. கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, ராது தனது தாயின் உதவியுடன், 14 வயதான தனது முறைப்பெண் சுமன்பாய் என்பவரை கற்பழித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ம.பி., கோர்ட், ராதுவுக்கும் அவரது தாய்க்கும் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ம.பி., ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அப்பீல் வழக்கு விசாரணைக்கு இடையில் ராதுவின் தாய் இறந்து விட்டார். அப்பீல் வழக்கில், ராதுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ராது மற்றும் அவரது தாய் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமன்பாயின் தந்தை மாங்கிலால் என்பவர், ராதுவின் தந்தை நாதுவிடம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடன் தொகையை ரத்து செய்யும்படி வலியுறுத்தி வந்தார் மாங்கிலால். இதற்கு நாது சம்மதிக்காததால், பொய் புகார் கூறி, மாங்கிலால் பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாக ராகு தரப்பில் வாதிடப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ரெட்டி ஆகியோர் கொண்ட பெஞ்ச், ராதுவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

ராது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் எங்களுக்கு திருப்தி அளித்துள்ளது. ராது குற்றம் செய்ததை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. கீழ் கோர்ட்டும், ஐகோர்ட்டும் தவறை கண்டுபிடிப்பதில் தவறி விட்டன.எனவே, இந்த அப்பீல் மனுவை ஏற்று, கீழ் கோர்ட்டுகள் மற்றும் ம.பி., ஐகோர்ட் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்கும்போது, அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பழிவாங்குவதற்காகவும், மிரட்டி பணம் பறிப்பதற்காகவும், சொத்துக்களை அபகரிப்பதற்காகவும் கூட பொய்யான கற்பழிப்பு வழக்குகள் தொடரப்படுகின்றன. இதுபோல பொய்யாக குற்றம் சாட்டப்படுவோர் தண்டிக்கப்படாத வகையில் கோர்ட்டுகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

—————

செய்தி: “தினமலர்”

பிரிவுகள்:498a குறிச்சொற்கள்:, , , , , , ,

ஒரு முஸ்லிம் அன்பர் படும் பாடு!

முஸ்லிம்கள் பென்களை அடிமைப் படுத்துவதாக ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது. அது எவ்வளவு பொய் என்பதை சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சி மூலம் அறியலாம்!

————————-

மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி விவாகரத்து மற்றும் 15 லட்ச ரூபாய்க்கான காசோலையை பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் ஆம்பர்பேட் ஓமர் நகரைச் சேர்ந்தவர் ஹபீப் குரோஷி. இவரது மகன் காலித் குரோஷி (33). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் துபாயில் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். எனக்கும் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த நிகாத் சுல்தானா என்பவருக்கும் 2001-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஐதராபாத்தில் வசித்து வந்தோம். இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது. இரண்டு வாரங்கள் தங்குவதற்காக சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்கு வந்தேன். அங்கு கடந்த 15ம் தேதி இரவு பெண் போலீசார் வந்தனர். என்னையும் எனது பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு சென்ற பிறகு தான் என் மனைவி கொடுத்த புகாரின்பேரில் தான் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர் என்பது தெரிந்தது. அப்புகாரில் என் குடும்பத்தினர் மீது வரதட்சணை உட்பட பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். அப்புகார் மனு மீது இன்ஸ்பெக்டர் கல்யாணி விசாரித்தார். இஸ்லாம் வழக்கப்படி விவாகரத்து செய்வதற்காக, மூன்று முறை சொல்லும் “தலாக்” என்பதை சொல்லச் சொல்லி போலீசார் என்னை வற்புறுத்தினர். என்னிடம் இருந்து ரூ.15 லட்சம் காசோலைகளாக பெற்றுள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு காலித் குரோஷி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் ரவி உத்தரவிட்டார். அம்மனு திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

செய்தி: “தினமலர்”

பெருகிவரும் விவாகரத்துக்கள்

தினமலர் செய்தி:

*ஒத்துவரலையா வெட்டி விடு; அடுத்த கல்யாணம் பண்ணிக்கோ! *

* முதலிடத்துக்கு முந்துகிறது சென்னை *

“திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தால், விவாகரத்து பெறுங்கள்; மீண்டும் திருமணம் செய்யுங்கள்” – இது தான் இந்தியாவின் புதிய திருமண மந்திரம். அந்த அளவுக்கு விவாகரத்து வழக்குகளும் அதிகரித்துள்ளன. விவாகரத்து பெறுபவர்கள் மறுமணம் புரிய முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.

“விவாகரத்து” என்பது கடந்த காலங்களில் ஒரு சாபக்கேடாக இருந்து வந்தது. தற்போது, அந்த நிலை மாறி விட்டது. எனவே, விவாகரத்து பெற்றவர்களுக்காக, “செகண்ட்ஷாதி.காம்” என்ற இணைய தள முகவரி துவக்கப்பட்டுள்ளது. இதில், பதிவு செய்யபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. துவக்கப்பட்ட மூன்று மாதங்களில் 10 ஆயிரம் பேர், தங்கள் விவரங்களை இந்த இணையதள முகவரியில் பதிவு செய்து இரண்டாவது திருமணத்துக்கான வாய்ப்பை தேடி வருகின்றனர். மாதத்துக்கு ஐந்தாயிரம் பேர் என்ற அளவில் இந்த இணைய தள முகவரியில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு குறித்து இந்த இணைய தள முகவரி ஒரு ஆய்வை நடத்தியது. 1990ம் ஆண்டுகளில் டில்லியில் ஆண்டுக்கு ஆயிரம் விவாகரத்து வழக்குகள் என்ற நிலை காணப்பட்டது. தற்போது, இது ஆண்டுக்கு ஒன்பதாயிரம் வழக்குகள் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இதே போல, சென்னை மற்றும் கோல்கட்டா நகரங்களில் இது 200 சதவீதமாக அதிகரித்துள்ளது. மறுமணத்துக்காக, “செகண்ட்ஷாதி.காம்” இணைய தள முகவரியில் பதிவு செய்துள்ளவர்களில் 30 சதவீதம் பேர் பெண்கள். கடந்த காலங்களை போல அல்லாது மறுமணம் செய்வதில் இருந்த தயக்கம் பெண்களிடம் நீங்கி வருகிறது என்பதே இதன் உட்பொருளாக உள்ளது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. டில்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியர் அருணா புரூடா கூறுகையில், “சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியாக பெண்கள் வலிமை பெற்று வருகின்றனர். விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம். பெண்களின் நிலை மாறி விட்டது. உயர் கல்வி பெறும் வசதியை பெண்கள் பெற்றுள்ளனர். வெளியில் செல்வதும் சொந்த காலில் நிற்பதும் தற்போது சாத்தியமாகியுள்ளது. ஆண்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு தற்போது இல்லை. இதன் காரணமாக ஏற்படும் மோதல்களே விவாகரத்துக்கு காரணமாகி விடுகிறது” என்றார். இணைய தள முகவரியில் பதிவு செய்துள்ளவர்களில் 80 சதவீதம் பேர் 30 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் 30 சதவீதம் பேர் திருமணமாகாமல் முதிர்ந்த வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள். விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளதால், விவாகரத்துக்கு ஏற்றவாறு சட்டம் வளைந்து கொடுக்க தொடங்கி விட்டதா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து சுப்ரீம் கோர்ட் வக்கீல் அஜய் குப்தா கூறுகையில், “”பழைய சட்டம் தான் இன்னும் இருக்கிறது. மனம் ஒட்டாத கணவன், மனைவியை தொடர்ந்து சேர்த்து வைப்பதில் எந்த லாபமும் இல்லை என்பதை கோர்ட் புரிந்து கொண்டுள்ளது. எனவே, ஆறு மாத கவுன்சிலிங் காலத்திலேயே விவாகரத்து வழக்குகள் இப்போது முடிவுக்கு வந்து விடுகின்றன. கணவன், மனைவி இரண்டு பேரும் ஒப்புதல் அளித்தால், 15 நாட்களில் கூட விவாகரத்து வழங்கப்பட்டு விடுகிறது,” என்றார்.

இணைய தள முகவரியில் பதிவு செய்துள்ள சந்தீப் குமார் பாட்டியா என்பவர் கூறுகையில், “”எனக்கு 35 வயதாகிறது. விவாகரத்து பெற்றவன். வாழ்க்கையில் எனது உணர்வுகளை யாராவது புரிந்து கொள்ள மாட்டார்களா என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உறவுகள் தோல்வி அடைந்தால் ஏற்படும் மனவேதனையை நரகத்துக்கு செல்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு அது மிகவும் கொடுமையானது,” என்றார்.

====================

சில தாவரங்களில் உள்ளதுபோல் “தன் மகரந்தச் சேர்க்கை” சாத்தியமானால் இந்தப் பெண்கள் “ஆண்களே தேவையில்லை” என்று அறைகூவல் விடுவார்கள் போலிருக்கிறது!

அல்லது “என்ஞாய் பண்ணுவோம்; ஆனால் குழந்தை பெறமாட்டோம்” என்றும் சொல்லலாம்!

பிரிவுகள்:498a குறிச்சொற்கள்:, , , , , ,

பெண்கள் சொல்வதெல்லாம் வேதவாக்கா?

தினமலரில் சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி இது:

சென்னை சாலிகிராமம் ஆற்காடு சாலை பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் ஜூடி. இவரது கணவர் மனோஜ் டேவிட். இவர்களது மகன் ஜோஸ்வா மனோஜ்(8), மகள் ஷெரில் மனோஜ்(4). கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். மனோஜ் டேவிட் பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது சகோதரி, பெங்களூரு பனஸ்வாடி பகுதியில் உள்ள “ஸ்கொயர் அப்பார்ட்மென்ட்”டில் வசித்து வருகிறார். சகோதரியின் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் மனோஜ் டேவிட் வசித்து வருகிறார். ஒன்றரை ஆண்டாக குழந்தைகள் இருவரும் பெங்களூரில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

சென்னையில் வசித்து வரும் ஜூடி திடீரென்று ஒருநாள், “எனது குழந்தைகள் இருவரையும் என் கணவர் பெங்களூரு அழைத்து சென்று விட்டார். கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினர்” என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். பெங்களூரு சென்ற சென்னை போலீசார், “நாங்கள் சென்னையில் இருந்து வருகிறோம். குழந்தைகளை கட்டாயப்படுத்தி பெங்களூரில் தங்க வைத்திருப்பதாக, இவர்களது தாய் சென்னையில் புகார் கொடுத்தார்” என்று கூறி, குழந்தைகள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டனர். உண்மையான நிலை என்ன என்று ஏதும் விசாரணை நடத்தவில்லை.

இதன் பின்னர் சென்னை வந்த மனோஜ் டேவிட், போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் அளித்த புகாரில்,”எனது மனைவியின் தந்தை சேவியர் முத்து பாப்பா தமிழக அரசில் இணை செயலராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது ஈ.வெ.ரா., சம்பத் மாளிகையில் உள்ள தமிழ்நாடு உடற்பயிற்சி கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ஆலோசகராக உள்ளார். எனது குழந்தைகளை பல இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை. எனக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. குழந்தைகள் யாரிடம் வளர வேண்டும் என்பதை கோர்ட் தான் முடிவு செய்ய முடியும். பெங்களூரு வந்த சென்னை போலீசார் எனது குழந்தைகளை மிரட்டி சென்னை தூக்கி வந்து விட்டனர். குழந்தைகளை பெங்களூரிலிருந்து மிரட்டி அழைத்து வந்த விவகாரத்தில் சேவியர் முத்து பாப்பாவுக்கும் தொடர்பு இருக்கிறது. எனது குழந்தைகளை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அண்ணாநகர் உதவி கமிஷனர் ராமதாசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து தெளிவாகப் புரிவது என்னவென்றால் “ஒரு பெண் என்ன சொன்னாலும் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஆண்கள் எல்லோரும் வில்லன்கள்” என்னும் நிலைப்பாட்டை நம் சமூகம் கண்ணை மூடிக்கொண்டு எடுத்துக் கொள்கிறது என்பதுதான்.

ஏன், பெண்கள் பொய்யே சொல்லமாட்டார்களா? அவர்கள் அனைவரும் உன்னத குணமுடையவர்களா? ஆண்கள் அனைவரும் கொடுமைக் காரர்களா?

சரித்திரத்தைப் பிரட்டிப் பாருங்கள் எத்துணை சாம்ராஜ்யங்கள் பெண்களின் சாகசங்களின் காரணமாக மண்ணோடு மண்ணாகிப் போயினவென்று! இரரமாணயக் கதையின் மையக் கருவே ஒரு பெண்ணின் தான்தோன்றித்தனமான சுயநலம்தானே!

பிரிவுகள்:498a குறிச்சொற்கள்:, , , , , , , ,

அலறும் ஆண்கள்!

“ராணி” வார இதழ் (9-9-2007 தேதியிட்டது) 6-ம் பக்கத்தில் வெளிவந்துள்ள செய்திக் கட்டுரை இது:-

——————————

“ஆபத்தான ஆயுதம்”

வரதட்சிணை கொடுமையை ஒழிப்பதற்காக 23 ஆண்டுகளுக்கு முன் இந்திய தண்டனைச் சட்டம் ‘498-ஏ’ கொண்டுவரப்பட்டது. ஒருமுறை இந்தச் சட்டம் பற்றி உச்ச நீதிமன்றம், “இது சட்டபூர்வ பயங்கரவாதம்”, “கொலையாளிகளின் கை ஆயுதம்” என கடுமையாக விமர்சித்தது.

வரதட்சிணை கேட்டு கொடுமைப் படுத்தியதாகவும், மனைவியைச் சித்திரவதை செய்ததாகவும் ஆண்கள் கைது செய்யப்படுவது வாடிக்கை. ஆனால், இதற்குப் பின்னால் ஒளிந்துள்ள உண்மை சில நேரங்களில் வேறுமாதியாக இருக்கிறது.

ஆமாம்! வரதட்சிணை ஒழிப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாகவும், சில அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகிறன.

மனைவிமார்களால் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் அத்தகைய ஆண்கள் சிலரைச் சந்தித்தோம்.

கண்ணீர்

கோவையைச் சேர்ந்தவர் முகம்மது உசேன். அவர் தாரை தாரையாக வழியும் கண்ணீருடன் பேசினார்:

“நான் சவூதி அரேபியாவில் வேலை பார்த்தபோது கல்யாணத்திற்குப் பெண் பார்த்திருப்பதாக ஊருக்கு அழைத்தனர். கல்யாணக் கனவுகளோடு வந்தேன்.

திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தேன். ஆனால், முதலிரவே எனக்கு வேதனை இரவாக அமைந்துவிட்டது” என்றவர், சிறு அமைதிக்குப் பின் – ’20 ஆயிரம் ரூபாயும், காரும் தந்தால்தான் என்னைத் தொட அனுமதிப்பேன்’ என்றாள் என் மனைவி. எனக்கு பயங்கர அதிர்ச்சி!

‘நாட்கள் போனால் மனம் மாறிவிடுவாள்’ என நினைத்து மீண்டும் சவுதிக்குப் போய்விட்டேன். ஆனாலும் அவள் மாறவில்லை. ஊருக்கு வந்ததும், இஸ்லாமிய முறைப்படி அவளைப் பிரிந்தேன். அவளோ போலீஸில் புகார் செய்தாள்.

போலிசார் என்னைக் கைது செய்து, 15 நாட்கள் சிறையில் அடைத்தனர். வெளியில் வந்ததும், எங்கள் குடும்ப நிலத்தை எழுதித் தரும்படி கேட்டாள். நான் நிம்மதி இழந்து தற்கொலைக்கு முயன்றேன். சாவுகூட என்னைக் கைவிட்டுவிட்டது” என்றார் அவர்.

தண்டனை

அடுத்தவர் எதிராஜ்:-

“எனக்கு ஒரு பெண்ணோடு நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது என் அம்மா, ‘உங்களால் முடிந்த அளவுக்கு வரதட்சிணை செய்யுங்கள்’ என்று சாதரணமாகச் சொன்னார். உடனே வரதட்சிணை கேட்டதாக புகார் செய்தனர்.

நீதிமன்றம் எனக்கும், என் வயதான பெற்றோருக்கும் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டது. நான் வாழ்க்கையை இழந்துவிட்டேன். இதற்குக் காரணம் சட்டம்தான்”, என்கிறார் அவர்.

உள்நோக்கம்

இந்திய குடும்பப் பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பாளர் சுரேஷ் கூறும்போது, “பெரும்பாலான வரதட்சணை வழக்குகள் பொய்யானவை; பழிவாங்கும் நோக்கத்தோடும், பணம் பறிக்கும் நோக்கத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

வரதட்சணை புகாரை எந்த விசாரணையும் செய்யாமல், இந்திய தண்டனைச் சட்டம் ‘498-ஏ’ பிரிவில் வழக்குப் பதிவு செய்து விடுகிறார்கள். இதனால் தவறு செய்யாத அப்பாவி ஆண்கள் கூட பாதிக்கப்படுகிறார்கள். வயதான தாயும், சகோதரியும் கூட கைது செய்யப்படுகிறார்கள்” என்று கூறினார்.

வக்கீல் கருத்து:

வழக்கறிஞர் அருள் நிலவனிடம் கேட்டபோது, “பெண்களைப் பாதுகாப்பதற்குத்தான் இச்சட்டம் (498-ஏ) கொண்டுவரப்பட்டது. திருமணமான பெண்ணை மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ காயப்படுத்துவது கொடுமைப்படுத்துதல் ஆகும் என்றும், இது தண்டனைக்குறிய குற்றம் எனவும் இச்சட்டம் கருதுகிறது.

இதன்படி, பெண்ணைக் கொடுமைப் படுத்தும் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும். இந்தச் சட்டம் பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து காப்பாற்றும் நோக்கத்தின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டது.

பொய்ப் புகார் கொடுத்திருந்தாலும், புகார் கொடுத்தவர்மீது நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டத்தில் வழியில்லை!

எனவே, பொய்ப் புகார் கொடுத்திருப்பது நிரூபணமானால், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை செய்யவேண்டும். அப்படிச் செய்தாலே பொய் வழக்குகள் குறைந்துவிடும்.

அதுபோல், கணவர் மற்றும் அவருடைய குடுமப்த்தினரை மிரட்டுவதற்காக புகார் கொடுத்துவிட்டு, மீண்டும் கணவரோடு சேர்ந்துவிடலாம் என்று நினைத்தால், அதற்கு இதில் வழியில்லை. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் புகார் கொடுத்தால், அதை அடிப்படையாகக் கொண்டு விவாகரத்து பெற முடியும்” என்றார் அவர்.