தொகுப்பு

Archive for செப்ரெம்பர், 2008

என்ன தொடர்பு?

விதிஷா : சக மாணவிகளின் ஆத்திரத்தால், பள்ளி மாணவி கெரசின் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டாள்.

மத்தியப்பிரதேச மாநிலம் விதிஷா மாவட் டத்தில் உள்ள சத்வாடியா சராய் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந் துள்ளது.ஏழாவது படித்து வந்த மாணவி நிதி; பள்ளியில் சக மாணவிகள் இருவர் இந்த மாணவியுடன் சண்டை போட்டனர். சண்டை வலுத்தது. பள்ளியை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, சக மாணவிகள் இருவரும் பின்தொடர்ந்தனர். அவர்களுடன் இன்னொரு சீனியர் மாணவியும் உடன் சென்றார்.நிதியை வழிமறித்து மூவரும் சண்டை போட் டனர். ஒரு கட்டத்தில், நிதியை தாக்கினர். மாணவிகளில் ஒருவர் கையில் வைத்திருந்த மண்ணெண் ணெயை நிதி மீது ஊற்றினாள். இன்னொரு மாணவி, தீப்பெட்டியில் இருந்து குச்சியை உரசி, தீப்பற்ற வைத்தார். தீக்காயங்களுடன் இருந்த நிதியை அவளின் குடும்பத்தினர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிதி இறந்து விட்டார்.

——————–

செய்தியை வாசித்துவிட்டீர்களா. உடனே ஒருவர் கேட்பார், இந்த செய்திக்கும் உங்கள் பதிவுக்கும் என்ன தொடர்பென்று!

உங்களுக்குத் தெரியுமா “The Protection Of Women From Domestic Violence Act, 2005” என்ற பெயரில் ஒரு சட்டம் இருக்கிறது என்று? அதனைச் சுருக்கமாக “குடுமப வன்முறைச் சட்டம்” என்று அழைக்கிறார்கள். அந்த சட்டத்தின் அடிப்படை வரையறைகளின்படி “வன்முறை” என்பது மனைவிக்கு கணவனால் செய்யப்பட்டதாக மனைவி கருதுவது மட்டுமே! மனைவி கணவனுக்குச் செய்யும் எந்த வன்முறையையும் இந்தச் சட்டம் கண்டு கொள்ளாது. கணவன் பாடு அம்போதான்!

மேலும், இந்தச் சட்டத்தில் அடிப்படையில் “தீங்கிழைக்கப்பட்ட” அல்லது “பாதிக்கப்பட்ட நபர்” (Aggrieved Person) என்றால் “திருமணமான ஒரு பெண்” என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

” ‘aggrieved person’ means any woman who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;”

(http://www.vakilno1.com/bareacts/Domestic-Violence/s3.htm)

இந்த இடத்தில் “respondent” – அதாவது பிரதிவாதி என்பவன் கணவன். அவன் கஷ்டப்பட்டு வாதாடி தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிக்க முயலவேண்டும். ஆனல் அது மிகக்கடினம். ஏனெனில் சட்டம் முழுதும் அவனுக்கு எதிராகவே இயற்றப்பட்டிருக்கிறது.

“குடுமப வன்முறை” என்பதற்கான definition இந்தச் சட்டத்தில் எப்படி வரையறுத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்:

(a) harms or injures or endangers the health, safety, life, limb or well-being, whether mental or physical, of the aggrieved person or tends to do so and includes causing physical abuse, sexual abuse, verbal and emotional abuse and economic abuse; or
(b) harasses, harms, injures or endangers the aggrieved person with a view to coerce her or any other person related to her to meet any unlawful demand for any dowry or other property or valuable security; or
(c) has the effect of threatening the aggrieved person or any person related to her by any conduct mentioned in clause (a) or clause (b); or(d) otherwise injures or causes harm, whether physical or mental, to the aggrieved person.

http://www.vakilno1.com/bareacts/Domestic-Violence/s5.htm

இதற்கான விளக்கங்களைப் படித்தீர்களானால் இதன் பயங்கரம் விளங்கும். இந்த சட்டத்தின் அடிப்படையில் நிகழும் கொடுமைகளையும் இதன் விபரீதங்களையும் பற்றி உண்மைக் கதைகளுடன் பிரிதொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

சரி. மேற்கண்ட விதிஷா நிகழ்வைப்பற்றிய செய்தியின் மூலம் நீங்கள் அறிவது என்ன?

பெண் என்பவள் கொலை உட்பட எத்தகைய கொடுமையான செயலையும் செய்யத் தயங்குபவள் அல்ல. ஆகையால் வன்முறை என்பது ஆண்களால் பெண்களுக்குக் கெதிராக நடப்பவைதான் என்னும் அடிப்படை கருதுகோள் எத்துனை தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்பதை அடிக்கோடிட்டுக் காண்பிப்பதற்காகத்தான். இந்தப் புனைவுகோளின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்கள் ஆண்குலத்துக்கும், நாளடைவில் நம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எப்படிப்பட்ட கேடுகளை விளைவிக்கப் போகின்றன என்பதை நினைத்தால் பயங்கரமாக உள்ளது என்பதுதான் நிஜம்.

இதை பொதுமக்கள் மனத்தில் கொண்டு, இத்தகைய ஒருதலைச் சார்புள்ள சட்டங்கள் அறவே நீக்கப்பட்டு, குடும்ப வாழ்வு முறையை தக்கவைக்கும் நோக்கத்தில் இருபாலருக்கும் பொதுவான சட்டங்கள் இயற்றப்படவேண்டும் (gender-neutral laws) என்று ஒருமித்த குரல் எழுப்பவேண்டும். இது நம் கடமை. இல்லையேல் எதிர்காலத்தில் நம் நாட்டில் தகப்பன் பெயர் தெரியாத ஒரு சமுதாயம் கட்டாயம் உருவாகும்!

Advertisements

ஆண் உயிர் தாழ்ந்ததா!

நம் நாட்டின் சட்டங்களின்படி ஒரு மணமான பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே அதற்கு அவளுடைய கணவன்தான் காரணம் என்று முடிவு செய்து அவனையும் அவனுடைய பெற்றோரையும் கைது செய்து விடுவார்கள். ஆனால் அந்த கணவன் மனையின் நடத்தை காரணமாக தற்கொலை செய்துகொண்டால், மனைவிக்கு ஒரு கொசுகூட கடிக்காது. இது போன்று பல விசித்திரங்கள் கொண்ட நாடு நம்முடையது!

இதோ, இன்றைய செய்தியை படியுங்கள்:-

திருமணமான ஏழு மாதத்தில் சோகம் : மனைவி கண்டிப்பு, கணவன் தற்கொலை

மீஞ்சூர்: குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறி மனைவி கண்டித்ததால், மனமுடைந்த கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பிமகன் செந்தில்குமார் (24). கொத்தனார். இவர் வேலைக்குச் சென்று திரும்பும்போது, அன்றைய கூலி தொகையில் பெரும் பகுதியை மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். இதை அவரது மனைவி ஹேமாவதி கண்டித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், 27ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த செந்தில்குமாரை கண்டதும் அவரது மனைவி ஹேமாவதி கோபத்தில் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த செந்தில் குமார் வீட்டில் இருந்த மண்ணெண் ணெய் உடலில் ஊற்றிக் கொண்டு தன்னைத் தானே தீயிட்டு கொளுத்திக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர்சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏழு மாதத்திற்கு முன் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

தாலியே தேவை இல்லை – ஆனால் தம்பதிகள்

இந்த வாரக் குமுதம் இதழில் வெளிவந்துள்ள கவர் ஸ்டோரி இது:

சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. நாற்பதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம். ஃப்ரீயா இருக்கணும். முடிஞ்சவரை என்ஜாய் பண்ணணும். இரண்டு இளம்பெண்கள். கூடவே அலுவலக ஆண் நண்பர்கள். ஒன்றாகச் சேர்ந்து அபார்ட்மெண்ட்டில் `குடும்பம்’ அமைக்கிறார்கள்.

லிவிங் டூகெதர். ‘தாலியே தேவையில்ல… நீதான் எம் பொஞ்சாதி’னு ஒரு பாட்டு வருமே. அதே சங்கதிதான். எதையும் ருசி பார்க்கத் துடிக்கும் சாஃப்ட்வேர் ஊழியர்களின் இந்த ‘ஜஸ்ட் லைக் தட்’ செக்ஸ் வாழ்க்கைதான் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு.

“லேடீஸ் ஹாஸ்டல் செம போர். நமக்குன்னு டி.வி. வச்சுக்க முடியாது. சத்தமா பாட்டுக் கேட்க முடியாது. ‘லேப்டாப்’ மாதிரியான காஸ்ட்லி பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்ல. நைட்டுல சீக்கிரமா வந்துரணும், பாய் ஃப்ரெண்ட்ஸுங்க பார்க்க வரக்கூடாதுனு ஏகப்பட்ட கண்டிஷன். முப்பதாயிரம் சம்பளம் வாங்கி எதுக்காக இப்படி கஷ்டப்படணும்? ஸோ… அபார்ட்மெண்ட்தான் வசதி. இருபதாயிரம் வாடகை. நாலு லட்சம் அட்வான்ஸ். ஆபிஸ் நண்பர்களோட ஷேர் பண்ணிகிட்டு ஒண்ணா தங்குறோம். இதுல தப்பு என்ன இருக்கு?” என்கிறார் பூரணி. பிரபல ஐ.டி கம்பெனிகளின் சாஃப்ட்வேர் டெவலப்பர்.

வேளச்சேரியில் கொத்துக் கொத்தாய் நிறைய அடுக்குமாடிக் கட்டங்கள். அதிகபட்சமாய் பதினைந்து மாடிகள் கூட உண்டு. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்டில் சுகந்திக்கு துணி துவைப்பது, வீடு கழுவுவது என வீட்டு வேலை. “எல்லாமே பெரிய எடத்துப் புள்ளைங்க சார்… பொண்ணுங்க. பசங்கனு கும்பலா குடும்பம் நடத்திக் கிட்டிருக்காங்க” என்கிறார் அதிர்ச்சியாக.

இப்படிப் போகிறது கதை. ஆனால் ஆண்களே, நீங்க ஜாலியா இருந்திடலாம்னு நெனைக்காதீங்க! பெண்கள் எப்படி வேணா இருக்கலாம். ஆனால் ஆண்கள் பாடு ஆபத்து. ஏன்னா கேட்கறீங்க? இதோ இன்றைக்கு தினமலரில் வந்துள்ள செய்தியைப் படிங்க:

கால் சென்டர் பெண் ஊழியர் கற்பழிப்பு: காதலன் உட்பட இருவர் கைது

சென்னை: கால் சென்டரில் பணிபுரிந்தவரை ஆசை வார்த்தை கூறி கற்பழித்ததாக பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, பெரம்பூர் பந்தர் கார்டனைச் சேர்ந்தவர் உமா. இவரது மகள் சந்திரா(25). (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) வேளச்சேரியில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் மாம்பாக்கத்தைச் சேர்ந்த அகமது (28) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இரண்டு வருடமாக காதலித்து பல இடங்களுக்கும் சென்று வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திராவுக்கு பிறந்த நாள்.

அகமது தனது நண்பர் சுரேஷ் என்பவருடன் மடிப் பாக்கத்தில் உள்ள மற்றொரு நண்பரின் வீட்டிற்கு சந்திராவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மது விருந்துடன் கேக் வெட்டி கொண்டாடினர். அன்றிரவு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் வீடு திரும்பியதும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்திரா கூறியுள்ளார். ஆனால், திருமணம் செய்வதற்கு அகமது ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. இது குறித்து உமா செம்பியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கற்பழித்ததாக அகமதுவையும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சுரேஷையும் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எப்படி இருக்கிறது கதை. முழுதும் உடன்பட்டு உல்லாசமாக இருந்தாளாம். அது எப்படி கற்பழிப்பாகும் என்பது புரியவில்லை!

ஒரு ஆணை ஒரு பெண் தன்னுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தி அழைத்தால், “எந்தவித எதிர்பார்ப்புமின்றி முழு சம்மதத்துடன்தான் இன்னாருடன் கலவியில் ஈடுபடுகிறேன்” என்று சாட்சிகள் முன்னிலையில் எழுதி வாங்கிக் கொண்டு, ஆடியோ, வீடியோ ரெகார்டு செய்துகொண்ட பின்னர் மேல் நடவடிக்கைகளி ஈடுபட்டால்தான் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது போலிருக்கிறது! இல்லாவிடில் அனைத்து ஆணெதிர்ப்புச் சட்டங்களும் ஆணின்மேல் பாயும் அபாயம் இருக்கிறது.

கற்பழிப்புச் சட்டம் அடிப்படையில் இப்படிச் சொல்கிறது:

As per Section.375 of IPC a man is said to commit the offence of rape with a woman under the following six circumstances:

1. Sexual intercourse against the victims will,

2. Without the victims consent,

3. With her consent, when her consent has been obtained by putting her or any person that she may be interested in fear of death or hurt,

4. With her consent, when the man knows that he is not her husband,

5. With her consent, when at the time of giving such consent she was intoxicated, or is suffering from unsoundness of mind and does not understand the nature and consequences of that to which she gives consent,

6. With or without her consent when she is under sixteen years of age.

ஆனால் அதை எப்படி வேண்டுமானாலும் கோர்ட்டுக்கள் விளக்கம் கொடுக்கலாம். ஆனால் பொதுவாக எல்லாம் பெண்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். இங்கு சென்று பாருங்கள்:

http://www.legalserviceindia.com/articles/rape_laws.htm

ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

கள்ள தொடர்பை கைவிட மறுத்த தாய்

கள்ள தொடர்பை கைவிட மறுத்த தாய் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்ட வாலிபர் – போலீஸ் தேடுகிறது
செய்தி: தினமலர்

ராயபுரம், செப்.24-

கள்ள தொடர்பை கைவிட மறுத்த தாய் மீது அம்மிக்கல்லை தூக்கிப்போட்ட வாலிபரை போலீஸ் தேடுகிறது.

கள்ள தொடர்பு

சென்னை தண்டையார் பேட்டை திலகர் நகரில் வசித்து வருபவர், லட்சுமி (வயது 41). இவரது மகன் வெற்றி (22). லட்சுமியின் கணவர் ஸ்ரீதர், 15 ஆண்டுகளுக்கு முன் அவளை பிரிந்து சென்று விட்டார்.

அதன் பின் லட்சுமிக்கு அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொடர்பை விட்டு விடும் படி, லட்சுமியிடம், வெற்றி கூறினார். ஆனால் லட்சுமி மறுத்தார்.

இதனால் ஏற்பட்ட தகராறில், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி, லட்சுமியின் மீது வெற்றி போட்டார்.

இதனால் கால் முறிந்த லட்சுமி, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்ல முத்து வழக்கு பதிவு செய்து, வெற்றியை தேடி வருகிறார்.

மனைவியிடம் அறை வாங்கும் கணவன்!

விளம்பர வீடியோ படம் எடுப்பவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். நாட்டு நடப்புக்களை நன்கு அறிந்தவர்கள். இதன் கீழ் நீங்கள் காணும் “கிட்பிளை” பிளைவுட் விளம்பரத்தில் ஒரு அம்மாஞ்சி கணவனை புது மணப்பெண் முதலிரவின்போது “ஏன் கிட்பிளை வாங்கிப் பொருத்தவில்லை” என்று கோபமாகக் கேட்டு ஓங்கி ஒரு அறை வைக்கிறாள். இத்தோடு விட்டாளே! அடுத்த விளம்பரத்தில் அவள் தன் காலால் மிதிமிதியென்று மிதிப்பதுபோல் காண்பிக்ககூட செய்வார்கள்! எதிர்த்துப் பேசினால் 498A, குடும்ப வன்முறைச் சட்டம், வரதட்சிணை ஒழிப்புச் சட்டம் போன்ற ஆயுதங்களைக் கையிலெடுத்து புருஷணை அழித்து விடுவாளே!

ஆண்மைக் குறைவு என்னும் ஆயுதம்

ஒரு பெண் தன் கணவனைத் தாக்குவதற்கு எவ்வித ஆயுதம் கையில் கிடைத்தாலும் விடமாட்டாள். சமூகமும் சட்டங்களும் அவள் சொல்வதைத்தான் கேட்கும். “ஐயோ, பாவம், பெண்ணல்லவா” என்று உருகுவார்கள். அவர்கள் மனத்தை இளகச் செய்ய பெண்ணானவள் தன் கண்களிலிருந்து கண்ணீரை பொலபொலவென்று கேட்ட மாத்திரத்தில் கொட்டுவாள். போதாதற்கு பெண்கள் நலம் காக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு பல NGO இயக்கங்கள் கோஷ்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. அவை வெளி நாட்டிலிருந்து டாலர்களைப் பெற்றுக்கொண்டு நம் பாரம்பரிய குடும்ப முறையை ஒழிப்பதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றன.

செய்தித்தாள்களும் வெகுஜன ஊடகங்களும் கூட பெண்கள் கொடுக்கும் பொய்ப் புரட்டுப் புகார்களை மட்டும் விலாவாரியாக வெளியிடுகின்றனவேயன்றி ஆண்கள் பக்க நியாயத்தைப் பற்றி மூச்சு விடுவதில்லை. ஏனெனில் அது பரபரப்பாக இருக்காது.

இதன் கீழ் நீங்கள் காணும் செய்தி இன்றைய தினத்தந்தியில் வெளிவந்தது. அதை ஊன்றிப் படித்தீர்களானல் அந்தப் பெண்ணின் கூற்றினுள் புதைந்திருக்கும் முரண்பாடுகள் தெரியவரும். எப்படியிருந்தால் என்ன, மனைவி சொன்னால் கணவன் குற்றவாளிதானே. அவனை கைது செய்து சிறையில் அடைத்தாகி விட்டது.

இந்திய ஆண்களே, வேண்டாம் இந்த விபரீதத் திருமணம் என்னும் புதைகுழி. ஜாக்கிரதை!

————————————-
குழந்தை பிறக்காததால் குட்டு உடைந்தது. ஆண்மைக் குறைவை மறைப்பதற்காக மனைவியை சித்ரவதை செய்த கணவர் கைது. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்

தினத்தந்தி – சென்னை, செப்.18-9-2008

ஆண்மை குறைவை மறைப்பதற்காக மனைவியை சித்ரவதை செய்த கணவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை, விருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 35). பி.காம். பட்டதாரியான இவர், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பெயர் விஜயா (30). இவர், போரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக இனிய இல்லற வாழ்க்கை நடத்திய விஜயா-பார்த்தசாரதி தம்பதியிடையே திடீரென்று மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில், விஜயா, சென்னை தியாகராயநகர் துணை கமிஷனர் முத்துசாமியை சந்தித்து கணவர் பார்த்தசாரதி மீது பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆண்மை குறைவு

பார்த்தசாரதிக்கும், எனக்கும் ஊரறிய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது பெற்றோர் நல்லமுறையில் வரதட்சணை, சீர்வரிசை கொடுத்து திருமணத்தை நடத்தினார்கள். எங்கள் குடும்ப வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே நல்லபடியாக இல்லை.

என் கணவர் என்னோடு உறவு வைத்துக்கொள்வதற்கு தயங்கினார். 6 மாதம் வரையில் எங்களுக்கிடையே `செக்ஸ்’ உறவு சரியாக நடக்கவில்லை. நானும் அதை பெரிதுபடுத்தவில்லை. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் (அப்படிப் போடு!) என்ற பழமொழியை மனதில் வைத்து வாழ்ந்து வந்தேன். ஆனால், எனது கணவருக்கு ஆண்மை குறைவு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டேன். இருந்தாலும் அதுபற்றி அவரிடம் வெளிப்படையாக பேசமுடியவில்லை.

ஆனால், ஒரு நாள் என் கணவரே அவருக்கு ஆண்மை குறைவு இருப்பதை ஒப்புக்கொண்டார். விஷயத்தை வெளியில் சொல்லி அவமானப்படுத்த வேண்டாம் என்றும் அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

இதனால் விஷயத்தை வெளியில் சொல்லாமல் நான் அவரோடு கடந்த 2 ஆண்டுகளாக குடித்தனம் நடத்தி வந்தேன். ஆண்மை குறைவு இல்லாதது மட்டுமல்லாமல், அவரால் எனக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க முடியாது என்பதும் எனக்கு தெரிய வந்தது. ஆண்மை இல்லாததை மறைத்து அவர், என்னை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். டாக்டரிடம் சிகிச்சை பெற்று ஆண்மை குறைவை சரிசெய்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், டாக்டரிடம் சிகிச்சை பெறுவதற்கு எனது கணவர் தயங்கினார்.

சித்ரவதை

`டெஸ்ட் டினிப்’ முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அல்லது ஏதாவது குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று எனது கணவர் ஆலோசனை கூறினார். ஆனால், அவரது கருத்தை நான் ஏற்கவில்லை. `டெஸ்ட் டினிப்’ குழந்தையை எனது வயிற்றில் சுமக்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டேன். நாளடைவில் ஆண்மை இல்லாத பிரச்சினை வெளியில் தெரிந்துவிடுமோ என்று எனது கணவர் அச்சப்பட்டார்.

அந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக என்னிடம் குறை இருப்பதுபோல எனது கணவர் வெளியில் பேச ஆரம்பித்தார். என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்தார். நடத்தையிலும் சந்தேகப்பட்டார். இதனால் அவரோடு இனிமேல் சந்தோஷமாக வாழமுடியாது என்று முடிவு செய்து அவரை பிரிந்துவிட்டேன்.

நான் ஆசிரியை தொழில் செய்து சம்பாதித்த பணத்தில்தான் எனது கணவர் வீடு கட்டிய கடனை அடைத்தார். இனிமேல் அவரோடு வாழமுடியாது என்பதால் அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, என்னை ஏமாற்றி திருமணம் செய்ததற்காக தக்க தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

– இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்து.

கைதானார்

இந்த புகார் மனு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி வடபழனி அனைத்து மகளிர் போலீசாருக்கு, துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவிட்டார். உதவி கமிஷனர் மனோகரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் ரமாமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

பாவம், பேதைப் பெண்!

டில்லிக்கு அருகாமையிலுள்ள கூர்கான்வ் என்னுமிடத்தில் வசிக்கும் ஷில்பி என்னும் பெண் தன் மாமனார் மற்றும் மாமியாரைக் கொல்ல கொலையாட்களை ஏற்பாடு செய்தது தெரியவந்து அவள் தற்போது அந்தக் குற்றத்திற்குத் துணை போன தன் தாய் மற்றும் சகோதரர்களுடன் கம்பி எண்ணுகிறாள். அந்த ஷில்பி தன் கணவனின் பெற்றோரிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிட்டாள். மாமனாரின் பெயர் கர்னல் ராஜீவ் குமார் கோயல். ஷில்பா அந்தக் கொலைக்காக அவளுடைய கார் டிரைவரிடம் ரூ. 50 லட்சம் கூலியாகப் பேசி முன்பணமாக ரூ.15,000 கொடுத்திருக்கிறாள். இது எப்படியோ வெளியே தெரிந்துவிட்டது. தகுந்த சாட்சியங்களுடன் கேஸ் பதிவாகி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாட்டிக்கொண்ட ஷில்பி என்ன செய்திருக்கிறாள் தெரியுமா – தன் மாமனார், மாமியார் மேல் வரதட்சிணை கேசு போட்டிருக்கிறாள் (Sec 498A of IPC).

திருமணம் என்பது ஒரு “டிக் டிக்” என்று அடித்துக் கொண்டிருக்கும் டைம் பாம் – அது எந்த நேரமும் 498-A , குடும்ப வன்முறைச் சட்டம், வரத்ட்சிணை ஒழிப்புச் சட்டம் போன்ற வடிவில் மேலெழும்பி தங்களை தாக்கும் என்பதை இந்திய ஆண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்!