தொகுப்பு

Archive for the ‘தீர்ப்புகள்’ Category

நீதிமன்றங்கள் நிரபராதிகளை பாதுகாக்குமா?

Stop husband suicideஇந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம். செய்தி மடல். 5 (மே, 2011)

“வரதட்சணை வழக்குகளைப் பொறுத்தவரை, புகார் பதிவு செய்யப்பட்டவுடன் எவ்வித புலன் விசாரணையும் செய்யாமல், கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகாரை அப்படியே நகலாக்கி, அதனையே இறுதி அறிக்கையாக (குற்றப் பத்திரிக்கையாக) நீதி மன்றங்களுக்கு அனுப்பிவிடும் வழக்கம் பல காலமாக காவல் துறையில் இருந்து வருகிறது.

இதுபோல் புலன் விசாரணை என்னும் நடைமுறையே இல்லாமல், வெறும் புகாரின் அடிப்படையிலேயே பல அப்பாவி ஆண்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவதால், ‘பொய் வரதட்சணை வழக்குகள் குப்பையைப் போல காவல் துறையால் தினம் தினம் நீதி மன்றங்களில் கொட்டப்படுகின்றன’ என்று டில்லி உயர்நீதி மன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது.

மேலும் வாசிக்க:

குடும்பப் பாதுகாப்பு இயக்க செய்தி மடல் எண் – 5

கணவன் சொல் இங்கே எடுபடாதய்யா!

இதையே அந்தப் பெண்மணி கண்ணீர் மல்க சொல்லியிருந்தால்…?

இதுதான் நிதர்சன உலகம். புரிந்துகொள்ளுங்கள் இன்னாட்டு ஆண்களே!

உங்கள் தாயாரையும் மூத்த சகோதரிகளையும் பார்த்து அதுபோல்தான் இருப்பார்கள் அனைத்துப் பெண்களும் என்னும் மாயையில் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். சமூகக் கட்டுப்பாடு, பண்பாடு, நாகரிகம், கற்பு என்னும் சிறைகளிலிருந்து நம் நாட்டுப் பெண்கள் முழுதும் விடுதலை பெற்றுவிட்டார்கள். இன்றைய நுகர்வு நாகரிகத்தின் உச்சியில் உள்ளனர் இந்தப் புதுமைப் பெண்கள். கணவன் தன் பெற்றோரிடம பேசினால்கூட 498A கேசு போடத் தயங்கமாட்டார்கள். திருமணமாகி 15 ஆண்டுகள், இரண்டு குழந்தைகள் ஆன‌ பிறகும் கூட அவனது பெற்றோர்கள் உடன் வசிக்கப் போகிறார்கள் என்ற செய்தி கேட்டவுடனேயே வரதட்சணை வழக்கு, குடும்ப வன்முறை வழக்கு என்று அனைத்து 40 வழக்குகளையும் போட்டு கணவனை நாற அடித்த கேசுகள் ஏராளம்.

புத்திசாலித்தனமாகப் பிழைத்துக் கொள்ளுங்கள்!

இப்போது இந்த சோகக் கதையை கேளுங்கள்:‍

மாமியார் – மருமகள் சண்டையை காட்டி மனைவியிடம் விவாகரத்து கேட்க முடியாது: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

மே 07,2010. செய்தி: தினமலர்

மும்பை: ‘தனது தாயாருக்கு, மரியாதை தரவில்லை என்ற காரணத்தை கூறி, மனைவியிடமிருந்து கணவர் விவாகரத்து கேட்க முடியாது’ என, மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

மும்பை அந்தேரியைச் சேர்ந்த அமர் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எனக்கும், நேகா என்ற பெண்ணுக்கும் 1996ல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, என் பெற்றோரை நேகாவுக்கு பிடிக்கவில்லை. அவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். குறிப்பாக, என் தாயாருடன் தொடர்ந்து சண்டையிட்டார்.

தரக் குறைவான வார்த்தைகளில் அவரை திட்டினார். குடும் பத்துடன் சுமுகமாக வாழ்வதற்கு நேகாவுக்கு பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அடிக்கடி மிரட்டினார். எனக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தார். எனவே, விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். என் மனுவை குடும்ப நல கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. எனவே, நேகாவிடம் இருந்து எனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதற்கு நேகா அளித்த பதில் மனுவில்,

‘என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை. அமரின் தாயார் என்னிடம் அடிக்கடி சண்டையிட்டார். இதன் காரணமாக, என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். தாயாரின் தூண்டுதல் காரணமாக அமரும் என்னுடன் அடிக்கடி சண்டையிட்டார். சில நேரங்களில் தாக்குதலுக்கும் ஆளாக நேரிட்டது’என, கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் தேஷ் பாண்டே, சுந்தூர்பல்டோட்டா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

தனது பெற்றோருக்கு மரியாதை தரவில்லை என்ற காரணத்தை கூறி, மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்க முடியாது. அமரின் குற்றச்சாட்டுகள் முழுமையானதாக இல்லை. அவர் நேகா மீது கூறிய குற்றச்சாட்டுகள், ஒவ்வொரு குடும்பத்திலும் வழக்கமாக நடப்பது தான். மாமியார்-மருமகள் சண்டை அனைத்து குடும்பத்திலும் நடப்பது தான். அமருக்கு, அவரது தாயார் மீது அதிக பாசம் உள்ளது. இதனால், மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அவர் நேகா மீது கூறிய குற்றச் சாட்டுகள், அவருடன் தொடர்ந்து வாழ்வதற்கு எந்த அளவும் பாதிப்பை ஏற்படுத்தப் போவது இல்லை. எனவே,விவாகரத்து அளிக்க முடியாது.

இவ்வாறு கூறிய நீதிபதிகள், அமரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.