தொகுப்பு

Archive for ஜூலை, 2009

செழித்து வளரும் 498A

ஜெய பேரிகை கொட்டடா!

குடும்ப வாழ்க்கையை 498A கொண்டு சிதைத்து விட்டோம் என்று!

எங்கெங்கு நோக்கினும் 498A கேசுகள். பெற்றுவிட்டோமே பெண் விடுதலை!!
————————-
1.

ராயபுரம், ஜுலை.30- 2009

ராயபுரத்தில், கூடுதலாக 60 பவுன் நகை கேட்டு, மருமகளை கொடுமைப்படுத்தியதாக மாமியார்-நாத்தனார் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ராயபுரம் காசிமாநகரை சேர்ந்த மாசிலாமணியின் மகள் பொற்செல்விக்கும் (வயது 28), ராயபுரம் வெங்கடேசன் தெருவை சேர்ந்த ஜெலேந்திரனின் மகன் பரணி குமாருக்கும், கடந்த 13-7-2006-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண் வீட்டின் சார்பில், பொற்செல்விக்கு 40 பவுன் நகையும், ஒரு மோட்டார் சைக்கிளும், வீட்டு உபயோக பொருட்களும், மணமகன் வீட்டாருக்கு கொடுத்தனர்.

திருமணம் நடந்த 3 மாதத்தில், பரணி குமார் வேலைக்காக குவைத் சென்று விட்டார். அவர் அங்கு ஸ்டோர் கீப்பராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், வண்ணார பேட்டை துணை போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம், பொற்செல்வி ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், கூறப்பட்டு இருப்பதாவது:-

“எனக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் தான் எனது கணவர் ஊரில் இருந்தார். அந்த 3 மாதமும் அவரின் பெற்றோர்கள், எங்களை சந்தோஷமாக இருக்க விட வில்லை. எனது கணவரும், வேலைக்காக குவைத் சென்று விட்டார்.

தற்போது எனது மாமனாரும், மாமியாரும் என்னிடம், “நீ உன் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், மேலும் 60 பவுன் நகையை உங்கள் வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும்” என்று கூறி கொடுமைப்படுத்தினார்கள். மேலும், எனது கணவரின் சகோதரி இறந்ததற்கு நான்தான் காரணம் என்று கூறி அடிக்கடி என்னை, எனது கணவரும், நாத்தனார் ஜெயந்தியும் கடுமையாக திட்டினார்கள்.எனவே போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுத்து, என்னை எனது கணவருடன் சேர்ந்து வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.”

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மாமியார்-நாத்தனார் கைது

இதைத்தொடர்ந்து, பொற்செல்வியின் மாமனார் ஜெலேந்திரன், மாமியார் அமுதா, கணவர் பரணிக்குமார், நாத்தனார் ஜெயந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமுதா(52), ஜெயந்தி (30) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 2 பேரும் தேடப்பட்டு வருகிறார்கள்.

2.

ராமநாதபுரம், ஜுலை.30- 2009

ராமநாதபுரத்தில் கூடு தல் வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத் திய கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் கொத்த தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி வாசுகி(வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்களாகின்றன. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை கள் உள்ளனர். தியாகராஜன் வெளிநாடு சென்று விட்டு ஊருக்கு வந்து கட்டிட தொழி லாளியாக வேலை பார்த்து வருகிறார்.

திருமணத்தின் போது வாசுகிக்கு 35 பவுன் நகையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் சீர் வரிசையாக கொடுக்கப்பட் டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தியாகராஜன் தனது மனைவியிடம் மேலும் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகிய வற்றை வரதட்சணையாக வாங்கி வரும்படி கொடுமைப் படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதற்கு தியாகராஜனின் பெரியப்பா கருப்பையா (67) உடந்தையாக இருந்தாராம்.

இதுகுறித்து வாசுகி ராம நாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்கு பதிந்து தியாகராஜன், கருப்பையா ஆகி யோரை கைது செய்தார்.

3.

சேலம்,ஜுலை.30- 2009

சேலம் அருகே 2-ம் திருமணம் செய்து மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மாமியாரையும் போலீசார் கைது செய்தனர்.

சேலம் அருகே உள்ளது வீராணம். இங்குள்ள ஆச்சாங்குட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). கூலி தொழிலாளி. இவரதுமனைவி மகாலட்சுமி (26). கணவன் – மனைவி ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் மகாலட்சுமியின் வாழ்வில் வரதட்சணை என்னும் புயல் வீச தொடங்கியது.

அவரிடம் வரதட்சணை கேட்டு கணவன் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உறவு பெண்ணை 2-ம் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து மகாலட்சுமி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனிடம் புகார் செய்தார்.

அவர் இது குறித்து விசாரிக்க வீராணம் போலீசுக்கு உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் விசாரணை நடத்தி ஆறுமுகத்தையும், உடந்தையாக இருந்த தாய் செல்லம்மாளையும் (55) கைது செய்தனர். ஆறுமுகம் மீது வரதட்சணை கொடுமை, 2-ம் திருமணம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

4.

தேனி,ஜுலை.28- 2009

சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட் சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக அந்த பெண்ணின் கணவரை தேனி மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

தேனி மாவட்டம், சின்ன மனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா(வயது35). இவரது மனைவி பிச்சையம்மாள் (27). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கருப்பையா வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதாக கூறப் படுகிறது. மேலும் பிச்சையம்மாளிடம் ரூ.3 லட்சம் வரதட் சணை கொண்டு வந்தால்தான் குடும்பம் நடத்த முடியும் என கருப்பையாவும், அவரது உறவினர்கள் 5 பேரும் கூறி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த பிச்சையம்மாள் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்கணவரின் குடும்பத்தினர் மீது வரதட் சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக கருப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements
பிரிவுகள்:498a குறிச்சொற்கள்:, , , , , ,

மகனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய தாய் கள்ளக்காதலனுடன் கைது

நெஞ்சை உறைய வைக்கும் கொடூர சம்பவம்:

மகனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த தாய் கள்ளக்காதலனுடன் கைது

மதுரை, ஜுலை.30- 2009. செய்தி: தினத்தந்தி.

கள்ளக்காதலை கண்டித்த மகனை கொலை செய்து பிணத்தை துண்டு, துண்டாக அறுத்து பிரிட்ஜில் வைத்து வெளியே வீசிய, தாய் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டு அவருடைய பிணம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பல இடங்களில் வீசப்பட்டது. போலீசாருக்கு பெரும் சவாலாக விளங்கிய இந்த வழக்கில் சமீபத்தில் துப்பு துலங்கி கொலையாளி கைது செய்யப்பட்டான்.
சென்னை நகரையே உலுக்கிய இந்த கொடூர படுகொலை போல மதுரையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த தாய் தனது மகனை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்து ஒவ்வொரு பாகமாக வெளியே எறிந்துள்ளார்.
கேட்கும் போதே நெஞ்சை நடு, நடுங்க வைக்கும் இந்த பயங்கர கொலை தமிழகத்தையே அதிர்ச்சியில் மூழ்க வைத்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
மதுரை மீனாட்சி நகர் முதல் தெருவைச்சேர்ந்தவர் மேரி (வயது 47). இவருடைய கணவர் துரைராஜ் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் பார்த்து வந்த பினின் வேலை மேரிக்கு கிடைத்தது. பழங்காநத்தம் பகுதியில் உள்ள காதிகிராப்டில் மேரி பினினாக வேலை பார்த்து வந்தார்.
மேரிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்று விட்டனர். மேரியின் ஒரே மகன் கிருஷ்ண மூர்த்தி (வயது 24). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவனும் மனைவியும் சிவகாசியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். திருமணமான 2 மாதத்திலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மனைவி தீக்குளித்து இறந்து விட்டார். இதனால் கிருஷ்ண மூர்த்தி மதுரைக்கு திரும்பி வந்து தாய் மேரியுடன் வசிக்க ஆரம்பித்தார்.
மேரிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. மதுரை எஸ்.எஸ். காலனி பிள்ளையார் கோவில் தெருவில் எலக்ட்ரிக் கடை வைத்திருக்கும் பாட்சா (வயது 38) என்பவருடன் மேரிக்கு தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
மேரியின் வீட்டுக்கு பாட்சா அடிக்கடி வர ஆரம்பித்தார். இந்த விஷயம் கிருஷ்ணமூர்த்திக்கு தெரிய வந்தது. அவர் தாயை கண்டித்தார். “இந்த வயதில் இப்படி ஒரு அசிங்கம் தேவையா? அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேசுவதை கேட்டாலே அவமானமாக இருக்கிறது” என்று சத்தம் போட்டார்.
ஆனாலும் மேரியால் தனது கள்ளத்தொடர்பை கை விட முடிய வில்லை. மகன் மீண்டும் மீண்டும் கண்டித்ததால், `இவன் உயிரோடு இருப்பதால்தானே இடைனிறாக இருக்கிறது. இவனை தீர்த்துக்கட்டி விட்டால் என்ன’ என்று விபரீதமாக யோசிக்க ஆரம்பித்தார் மேரி. காதலர் பாட்சாவிடம் தனது திட்டத்தை கூறினார். அவரும் சம்மதம் தெரிவித்தார். சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருவரும் காத்திருந்தனர்.
தலையணையால் அமுக்கி கொலை
கடந்த சனிக்கிழமை இரவு கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு சாப்பிட வந்தார். உடனே மேரி செல்போனில் பாட்சாவுடன் தொடர்பு கொண்டு, “என் மகன், வீட்டுக்கு வந்திருக்கிறான். அவனை கொலை செய்ய இதுதான் நல்ல நேரம் உடனே புறப்பட்டு வாருங்கள்” என்று அழைத்தார். பாட்சாவும் மேரியின் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார்.
பாட்சாவை பார்த்ததும் கிருஷ்ண மூர்த்திக்கு கடும் கோபம் ஏற்பட்டது. “இங்கு வராதே என்று பல முறை சொல்லியும் ஏன் வந்தாய்” என்று சத்தம் போட்டார். தாயையும் கண்டித்தார்.
உடனே மேரியும் பாட்சாவும் சேர்ந்து கிருஷ்ண மூர்த்தியை தாக்கினார்கள். தலையணையால் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தில் வைத்து அமுக்கினார்கள். மூச்சு விட முடியாமல் துடிதுடித்த அவர் சிறிது நேரத்தில் உயிர் இழந்தார்.

கிருஷ்ண மூர்த்தியின் உடலை என்ன செய்வது என்று மேரியும் பாட்சாவும் யோசித்தனர். மூட்டையாக கட்டிவெளியே கொண்டு போனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகப்படுவார்களே என்று பயந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கிருஷ்ணமூர்த்தியின் உடல் வீட்டுக்குள்ளேயே இருந்தது. அன்று மாலை மேரியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து மேரியிடம் கேட்டனர். அதற்கு அவர் வீட்டில் எலி செத்துக்கிடக்கிறது, பூனை செத்துக்கிடக்கிறது என்று பொய் சொல்லி சமாளித்தார்.
திங்கட்கிழமை வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது துர்நாற்றம் அதிகமாகவே ஊதுபத்தி, சாம்பிராணி கொளுத்தி வைத்தார்.
உடலை துண்டு துண்டாக வெட்டினர்
இனிமேலும் துர்நாற்றத்தை மறைக்கமுடியாது என்பது தெரிய வந்ததும் அடுத்து என்ன செய்யலாம் என்று மேரியும் பாட்சாவும் யோசித்தனர்.
உலகத்தில் எந்த தாயும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒரு கொடூர எண்ணம் மேரியின் மனதில் உருவானது. மகனின் உடலை துண்டு துண்டாக வெட்டி யாருக்கும் தெரியாமல் பல இடங்களில் வீசி எறிந்து விடலாம் முடிவு செய்தார்.
திங்கட்கிழமை இரவு மேரியும் பாட்சாவும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் உடலை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டினார்கள். முதலில் கழுத்தை தனியாக அறுத்தனர். அதன்பிறகு 2 கைகளையும் வெட்டி எடுத்தார்கள். கால்களையும் தனித்தனியாக துண்டித்தனர்.
காய்கறிகளை தனித்தனி பிளாஸ்டிக் பைகளில் கட்டி வைப்பது போல 2 கைகளையும் தலையையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பார்சலாக கட்டினார்கள். கால்களை ஒரு சாக்கு பையில் போட்டு கட்டினார்கள்.
உடலை என்ன செய்வது என்று யோசித்த அவர்களுக்கு வீட்டில் இருந்த பிரிட்ஜை பார்த்ததும் புது யோசனை உதித்தது. உடலை எடுத்து பிரிட்ஜில் வைத்து மூடினார்கள்.
அதன் பிறகு மேரியும் பாட்சாவும் 2 பார்சல்களையும் எடுத்துக்கொண்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அவர்களுடன் பாட்சாவின் நண்பர் ஜோசப் ஆண்டனி என்பவரும் சேர்ந்து கொண்டார். பார்சல்களை வீசுவதற்கு சரியான இடத்தை தேடி அலைந்தனர்.
மதுரை எல்லீஸ் நகர் ஆக்கி மைதானம் அருகே உள்ள கிருதுமால் நதி ஓடையில் தலை, கைகள் இருந்த பார்சலை வீசினார்கள். அங்கிருந்து பொன்மேனி பஸ் டெப்போவுக்கு எதிரே உள்ள கால்வாய்க்கு சென்றனர். கால்கள் இருந்த பார்சலை அங்கு வீசி விட்டு வீட்டுக்கு திரும்பினார்கள்.
செவ்வாய்க்கிழமை மேரியின் வீட்டில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது. உடனே மேரி செண்ட் பாட்டில் வாங்கி வந்து வீடு முழுவதும் அடித்தார். அப்போதும் நாற்றம் போக வில்லை.
செவ்வாய்க்கிழமை இரவு கிருஷ்ணமூர்த்தியின் உடலை வெளியே வீச மேரியும் பாட்சாவும் முடிவு செய்தனர். உடலை பார்சலாக கட்டி எடுத்து சென்றால் குட்டு அம்பலமாகி விடும் என்பதால் பிரிட்ஜோடு தூக்கி செல்ல திட்டமிட்டனர். பாட்சா ஒரு டிரைசைக்கிளை எடுத்து வந்தார். பிரிட்ஜை ரிப்பேருக்கு எடுத்து செல்வதாக கூறிவிட்டு அதை டிரைசைக்கிளில் ஏற்றினார்கள். பிரிட்ஜில் கிருஷ்ணமூர்த்தியின் உடல் பாகம் இருந்ததால் அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை பக்கத்து வீட்டுக்காரர்கள் கவனித்தனர். ஆனாலும் அவர்களுக்கு உண்மை என்ன என்பது புரிய வில்லை.
கால்களை வீசிய அதே கால்வாய் பகுதிக்கு பிரிட்ஜை எடுத்து சென்ற இருவரும் உடலை வெளியே எடுத்து கால்வாய் ஒட்டி உள்ள செப்டிக் டாங்கில் போட்டனர். அதன்பிறகு மேரி தனது வீட்டுக்கு திரும்பி விட்டார். பாட்சா பிரிட்ஜை டிரைசைக்கிளில் எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு பிரிட்ஜை இறக்கி அதை தண்ணீர் விட்டு கழுவி எதிர் வீட்டு முன் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.
கிருஷ்ணமூர்த்தியின் உடலை அப்புறப்படுத்திய பிறகும் மேரியின் வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம் போகவில்லை. இதனால் சந்தேகம் வலுத்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து மேரியிடம் விசாரித்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தனர். முதலில் எதுவும் சொல்ல மறுத்த மேரி பின்னர் நடந்த விவரங்களை தெரிவித்தார். அவர் கூறிய தகவலால் உறைந்து போன போலீசார் மின்னல் வேகத்தில் நடவடிக்கையில் இறங்கினார்கள். முதலில் மேரியை கைது செய்தனர். அதன்பிறகு பாட்சாவை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த பிரிட்ஜ் கைப்பற்றப்பட்டது. அவருடைய நண்பர் ஜோசப் ஆண்டனியும் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணமூர்த்தியின் உடல் பாகங்கள் எங்கெங்கு வீசப்பட்டன என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டு அந்த இடங்களுக்கு சென்று உடல் பாகங்களை கைப்பற்றினார்கள்.

கிருஷ்ணமூர்த்தியின் உடல் இருந்த பிரிட்ஜை டிரைசைக்கிளில் ஏற்றிச்செல்வதற்கு ஒரு வாலிபர் உதவி செய்து இருப்பதாக தெரிய வந்தது அவரை தேடி வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
10 மாதம் சுமந்து பெற்ற மகனை கள்ளக்காதலுக்காக கொலை செய்ததோடு அவன் உடலை துண்டு துண்டாக வெட்டுவதற்கு ஒரு தாய்க்கு எப்படி மனது வந்தது என்று மதுரை நகர மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
மேரி வாக்குமூலம்
நடந்த சம்பவம் குறித்து மேரி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
“என் கணவர் துரைராஜ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 2 மகள்கள், ஒரு மகன். அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு, மதுரையில் தனியாக வசித்து வந்தேன். இந்த நிலையில் என் மகன் கிருஷ்ணமூர்த்தி கஞ்சா உள்பட போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆனான்.
இதனால் அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த மனவருத்தத்தில் எனது மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள். அதன்பிறகு என் மகன் என்னுடன் தான் வசித்து வந்தான். அவனுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளதால் தினமும் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வான். நானும் அவன் கேட்கும் பணத்தை கொடுத்துவந்தேன்.
இந்த நிலையில் எனக்கும், எல்லீஸ் நகர் பகுதியில் கோழிக் கடை மற்றும் எலக்ரானிக்ஸ் கடை வைத்திருக்கும் பாட்சா இடையே இருந்த தொடர்பு, எனது மகனுக்கு தெரியவந்தது. இதற்கு அவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து தினமும் என்னிடம் சண்டை போட்டான்.
மேலும் அவன் என்னிடம் தினமும் ரூ.300 பணம் கேட்டு வற்புறுத்தி வந்தான். பணம் தராவிட்டால் எனக்கும், பாட்சாவுக்கும் இடையே உள்ள கள்ளக்காதலை அம்பலப்படுத்தி விடுவதாக கூறி மிரட்டினான். தொடர்ந்து அவன் எனக்கும், பாட்சாவுக்கு கொடுத்த வந்த தொல்லையால், நாங்கள் இருவரும் சேர்ந்து அவனை கொலை செய்ய திட்டமிட்டோம்.
அதன்படி கடந்த 25-ந் தேதி இரவு வழக்கம் போல் கிருஷ்ணமூர்த்தி கஞ்சா அடித்து விட்டு போதையில் வீட்டிற்கு சாப்பிட வந்தான். இது தான் தக்க சமயம் என்று நினைத்து பாட்சாவிற்கு செல்போனில் தகவல் கொடுத்தேன்.
துண்டு துண்டாக வெட்டினோம்
அவர் வந்த பிறகு இருவரும் சேர்ந்து தலையணையால் அமுக்கி கிருஷ்ணமூர்த்தியை கொன்றோம். உடலை துண்டு துண்டாக வீசி, பார்சலாக வெளியே கொண்டு சென்று வீசினோம். உடல் பகுதியை மட்டும் பிரிட்ஜில் வைத்து இருந்து பிரிட்ஜோடு வெளியே கொண்டு சென்று உடலை வீசி எறிந்தோம்.
ஆனால் என் வீட்டில் அடித்த துர்நாற்றம், பிரிட்ஜை வெளியே கொண்டு சென்ற போது ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகப்பட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டனர். உடனே போலீசார் என் வீட்டிற்கு வந்து விசாரணை செய்து என்னையும், பாட்சாவையும் கைது செய்தனர்.”
இவ்வாறு மேரி வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
==============
“குடும்ப வன்முறைச் சட்டம்” மற்றும் 498A பிரிவு கொள்வது என்ன?
ஆண்கள் மட்டும்தான் வன்முறையைச் செய்வார்கள். ஒரு பெண் தன் கண்வனமீது எந்தப் புகார் கொடுத்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு கணவனையும் அவனது பெற்றோரையும் உடன்பிறப்புக்களையும் தண்டிக்கவேண்டும்!
தூக்குத் தூக்கி என்னும் படத்தில் வரும் வசனம் “கொலையும் செய்வாள் பத்தினி”. இன்னும் கொஞ்சம் நாட்களில் இதை “கொலை மட்டும் செய்வாள் பத்தினி” என்று மாற்றவேண்டிய கட்டாயம் வருமோ என்று பயமாக இருக்கிறது!

இரண்டு வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற தாய்

“குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்” (The Protection Of Women From Domestic Violence Act, 2005, or “DV Act”) வரையறைத்திருப்பது இவ்வாறு:

“குடும்ப வன்முறை” என்பது கணவன் அல்லது அவனது உறவினர்களால் அவனது மனைவியின்மேல் செய்யப்படுவது மட்டுமே. இந்தச் சட்டப்படி அந்த மனைவி தன் மீது உடலாலோ, உள்ளத்தாலோ, உளவியல் ரீதியாகவோ, செக்ஸ் தொடர்பாகவோ, பொருளாதார ரீதியாகவோ வன்முறை செய்யப்பட்டதாகக் கருதினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எவ்வாறு? முதலில் அவளுடைய கணவன் மற்றும் கணவனுடைய பெற்றோர் உறவினர் தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். யார் வீட்டை விட்டு? அவர்களுக்குச் சொந்தமான வீட்டைவிட்டு!அவர்கள் செய்த குற்றம்? இத்தகைய பெண்ணை மனைவியாக (மருமகளாக) அடைந்ததுதான்!

இந்த முழுமுட்டாள் தனமான சட்டத்தைப் பற்றி பிறிதொரு இடுகையில் விவரமாக எழுதுகிறேன். தற்பொது இந்த சுட்டிகளில் இதைப் பற்றி எழுதியுள்ளதைப் படியுங்கள்:

http://mynation.net/study-report-dvact.htm

http://www.498a.org/domesticViolence.htm

சரி. இப்போது “வன்முறையே செய்யத் தெரியாத” ஒரு மெல்லியலாளின் செயல்பாடு பற்றிய இன்றைய செய்தியை வாசியுங்கள்:-
——————

இரண்டு வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற பெண் கைது

ஜூலை 29,2009, செய்தி: தினமலர்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கூறி தனது இரண்டு வயது பெண் குழந்தையை அடித்துக்கொன்ற பெண், அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன்(40). அவர் மனைவி மாரீஸ்வரி(34), இரண்டு வயது பெண் குழந்தை புனிதாவுடன் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் வசித்து வந்தார். மாரீஸ்வரிக்கும், அதே ஊர் கட்டட தொழிலாளி காந்தாரிமுத்துவுக்கும்(43) கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அதனால் கடந்த மூன்று மாதத்திற்கு முன் மாரீஸ்வரியை பிரிந்து முருகன், அல்லம்பட்டி சென்றுவிட்டார்.

காந்தாரிமுத்துவுடன், மாரீஸ்வரி குழந்தையை வைத்துக் கொண்டு ஒரே வீட்டில் வசித்தார்.

அடித்துக் கொலை:

தங்களது (கள்ளக்காதல்) வாழ்க்கைக்கு குழந்தை புனிதா, இடையூறாக இருப்பதாக கருதிய இருவரும் கடந்த 26ம் தேதி மாலை வீட்டிலிருந்த புனிதாவை கையால் அடித்தனர். மயங்கி விழுந்த குழந்தை புனிதா, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அது எப்படி இறந்தது என தெரியாதென இருவரும் நாடகமாடினர்.

பிரேத பரிசோதனை முடிவில் குழந்தை அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. போலீசார் முறைப்படி விசாரித்ததில், குழந்தை புனிதாவை அடித்துக் கொன்றதை தாய் மாரீஸ்வரி, காந்தாரிமுத்து ஒப்புக்கொண்டனர். அதையடுத்து நேற்று கைது செய்யப்பட்ட இருவரும் விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
—————————–

வாழ்க தாய்க்குலம்! வெல்க கள்ளக் காதல்!!

(இதற்கும் 498A-க்கும் என்ன சம்பந்தம்? – Dr. டோண்டு)

முறை தவறிய காதலை மறைக்க மாணவி நடத்திய நாடகம்

ஜூலை 28,2009. செய்தி: தினமலர்

கோவை: பெரியப்பா மகனுடனான தவறான உறவை மறைக்க, பிளஸ் 2 மாணவி கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.

சேலம் மாவட்டம், மொரப்பூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியின் 17 வயது மகள், கோவை, காந்திபுரத்தில் உறவினர் வீட்டில் தங்கி, சாய் பாபா காலனியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி பள்ளிக்கு சென்ற இவர், தலைமை ஆசிரியரிடம் திடுக் புகார் தெரிவித்தார். “நான் பள்ளி அருகே நடந்து வந்த போது, காரில் வந்த நான்கு பேர் கடத்திச் சென்று மானபங்கம் செய்தனர். பின்னர், கையில் கடிதத்தை திணித்துவிட்டு, மீண்டும் பள்ளி அருகே தள்ளிவிட்டு தப்பிவிட்டனர்’ என தெரிவித்திருந்தார்.

அக்கடிதத்தில், ஆபாச வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்ததாகக் கூறப்பட்ட கடத்தல் சம்பவம், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

விசாரணையில் திருப்பம்:

சம்பவம் குறித்து அந்த மாணவி முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்ததால் போலீசார் குழப்பமடைந்தனர். உண்மை கண்டறிய மாநகர போலீஸ் துணைக் கமிஷனர் காமினி, இன்ஸ்பெக்டர் நேரு தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது.
சம்பவம் நடப்பதற்கு முன் மாணவியுடன் மொபைல் போனில் பேசியதாகக் கூறப்பட்ட, மேட்டூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அவருக்கு தொடர்பில்லை என தெரிந்ததும் விடுவிக்கப்பட்டார்.

மாணவி மீது சந்தேகமடைந்த போலீசார், அவரது பள்ளி நோட்டு புத்தகங்களை கைப்பற்றி பார்வையிட்டனர். அதில், பல்வேறு விதமான மிரட்டல் கடிதங்கள், மாணவியின் கைப்பட எழுதப்பட்டிருந்தன. இது குறித்து விசாரித்த போது, கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.

போலீசாரிடம் மாணவி அளித்த வாக்குமூலம்:

எனது பெற்றோர், குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்துவிட்டனர். படிக்க வசதியில்லாமல் அவதிப்பட்ட என்னை, காந்திபுரத்தில் வசிக்கும் பெரியப்பா அழைத்து வந்து படிக்க வைக்கிறார். அவ்வீட்டில் தங்கியிருந்த போது அவரது மகன் அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது; இருவரும் எல்லை மீறி நடந்து கொண்டோம். படிப்பில் ஆர்வம் குறைந்த நிலையில் தேர்வும் வந்தது. தேர்வில் பங்கேற்காமல் தவிர்க்க, நானும் அருண்குமாரும் கடத்தல் நாடகமாடினோம்.

போலீசாரையும், உறவினர்களையும் நம்ப வைக்க, கடத்தல்காரர்கள் எழுதியது போன்று போலி கடிதங்களையும் தயார் செய்து, அதில் ஒரு கடிதத்தை எடுத்துச் சென்றேன். நான் கடத்தப்பட்டு மானபங்கம் செய்யப்பட்டதாக, தலைமை ஆசிரியரிடம் கூறி அழுதேன். எனினும், போலீஸ் விசாரணையின் போது, பதிலளித்து தப்ப முடியாமல் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு மாணவி தெரிவித்தார்.

இதையடுத்து, அருண்குமார்(20) மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 (கற்பழிப்பு) வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர், டிப்ளமோ முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

வழக்கின் விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் நேரு கூறியதாவது: பிளஸ் 2 மாணவி, தவறான உறவை மறைக்கவும், தேர்வில் பங்கேற்காமல் தவிர்க்கவும் கடத்தல் நாடகமாடி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். சந்தேக நபர்களை ஒவ்வொருவராக அழைத்து காண்பித்த போதிலும், “இவன், அவனல்ல’ என்றே பதிலளித்தார். எங்களுக்கு சந்தேகம் வலுக்கவே, நோட்டு புத்தகங்களை பார்வையிட்டோம்; நாடகம் அம்பலமானது. இவ்வாறு நேரு தெரிவித்தார்.

========================

உங்கள் சிந்தனைக்கு:-

இந்த அநியாயத்தைப் பாருங்கள். நடத்தை கெட்டு அண்ணனுடன் ஜல்சா செய்தவள் பெண். கடத்தல் பொய் நாடகமாடியது பெண். ஆனால் கைது செய்யப்பட்டது மட்டும் ஆண்! வேலிமேல் வேட்டி விழுந்தலும் வேலி வேட்டி மேல் விழுந்தாலும் கிழிந்து கந்தலாவது வேட்டி மட்டும்தான். இதுதான் இந்த சமூகத்தின் ஆணெதிர்ப்புச் சட்டங்களின் நடைமுறை!

ஆமாம், “கற்பழிப்பு” என்றால் என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!!

தீவிரமாகும் விவாகரத்து நோய்

ஜூலை 27,2009: செய்தி – தினமலர்

பாரம்பரிய பெருமையும், கலாசார பின்னணியும் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும், 4,000த்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கலாகின்றன. இதில், ஆண்டுக்கு 20 சதவீத, “வளர்ச்சி’ இருப்பது, கூடுதல் வேதனை. .

குடும்பத்தில், கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை, உறவினர்களால் தீர்க்க முடியாதபட்சத்தில், போலீஸ் துறையை அணுகுகின்றனர். அங்கு சமரச முயற்சியில் ஈடுபடும் போலீசாரின் முயற்சிகளும் தோல்வியடைந்தால், பிரச்னை கோர்ட்டுக்குச் செல்கிறது.இப்படி குடும்பம், நண்பர்கள், சமூகம் என எல்லாராலும் தீர்க்க முடியாமல், குடும்ப நல கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய வரும் தம்பதியர்களுக்கு, கோர்ட்டில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. அந்த முயற்சியும் தோல்வியடையும்போது, வழக்கைச் சந்திக்கின்றனர்.சில வழக்குகளில், வக்கீல்கள் சொன்னபடி தம்பதியர்கள் சொல்வதாலும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளாலும், தங்களது குடும்ப விவகாரங்கள் அனைத்தையும் வெளியே சொல்ல வேண்டிய நிலைக்கு தம்பதிகள் ஆளாகின்றனர்; கூடவே வழக்கையும் சந்திக்கின்றனர்.சென்னை குடும்ப நல கோர்ட்டில், 2006ம் ஆண்டில் மட்டும் 3,374 வழக்குகள், 2007ம் ஆண்டின் முடிவில் 3,874 வழக்குகள், 2008ம் ஆண்டில் 4,125 வழக்குகள் என விவாகரத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரித்து கொண்டே போகின்றன. ஆண்டிற்கு 20 சதவீதம் அதிகரிக்கிறது.சென்னையில் மட்டும் திருமண முறிவு 5 சதவீதமாக இருந்த நிலை மாறி, சில ஆண்டுகளில் 12 முதல் 15 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த வழக்குகளில் நடிகர் பிரசாந்த் முதல் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர் மற்றும் நடிகைகளும் அடங்குவர். இப்படி ஏழை, பணக்காரன், கூட்டுக் குடும்பம், தனிக்குடித்தனம் என்று எல்லாரையும் எளிதில் தாக்கும் நோயாகி விட்டது, விவாகரத்து.

இது குறித்து, சீனியர் வக்கீல் ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் பெண்கள் அறியாமையால், கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது கூட தம்பதியருக்கிடையே விவாகரத்து பெரிதாக காணவில்லை. தற்போது பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ள இந்த காலகட்டத்தில் தான், விவாகரத்துகளும் பெருகியுள்ளன. பொருளாதார பாதிப்பும் சில விவாகரத்துகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது.கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தனம் அதிகமாகி இருப்பதும் ஒரு காரணம் என்று சொல்கிற போதே, சில பெற்றோர்களாலும் விவாகரத்துகள் வருகின்றன என்பதையும், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே, “தான்’ என்கிற எண்ணத்தைக் (ஈகோ) குறைத்தாலே பல விவாகரத்து வழக்குகளை தவிர்த்துவிடலாம். இதேபோல, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை, குழந்தைகளின் எதிர்காலம், திருமணம் என்ற பந்தத்திற்கு மரியாதை கொடுத்தல் போன்றவற்றை இருபாலரும் கடைபிடித்தால், விவாகரத்து பிரச்னையை குறைக்கலாம். முக்கியமாக கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

மொபைல் போன் பேச்சு: விவாகரத்து முடிச்சு!:

சமரச முயற்சிகள் தோல்வியடைவது பற்றியும், இந்திய திருமணச் சட்டங்கள் கூறுவது குறித்தும் ஸ்ரீரக்ஷா ஆலோசனை மற்றும் மத்தியஸ்த மையத்தின் கவுரவத் தலைவரும் வக்கீலுமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி கூறியதாவது:

குடும்பத்தில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை சரிசெய்ய முயற்சிப்பதே எங்கள் நிறுவனத்தின் பணி. குறிப்பாக, விவாகரத்து சம்பந்தப் பட்ட வழக்குகளில் கணவன் – மனைவி இடையே சமரச முயற்சியாக கவுன்சிலிங் கொடுக்கிறோம். அதன் பிறகும் எங்களுக்கு விவாகரத்து தான் வேண்டும் என்கிறபோது, அவர்கள் வழக்கைச் சந்திக்கின்றனர்.இந்திய திருமணச் சட்டங்களில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே சட்டங்கள் இயற்றியுள்ளனர். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

பிரிந்து வாழும் இருவரில், ஒருவர் சேர்ந்து வாழ விருப்பப்பட்டாலும், திருமண முறிவு என்றில்லாமல், சமுதாயத்தில் பிரிந்து மட்டும் வாழ விரும்புகிறோம் என்று விருப்பம் தெரிவித்தாலும், விவாகரத்து தேவை என்பவர்களுக்கும் சட்டங்களில் தனியே பிரிவுகள் உள்ளன.இன்றைய பரபரப்பான கால சூழ்நிலையில், குடும்பங்களில் கணவனோ, மனைவியோ தொடர்ந்து, “டிவி’ பார்த்துக்கொண்டும், பல மணி நேரம் மொபைல் போனில் பேசிக்கொண்டும் இருந்துவிட்டு, குடும்பத்தைக் கவனிக்க மறந்துவிடுகின்றனர். இங்கே ஆரம்பிக்கும் மனதளவிலான பிரச்னை, பின் விஸ்வரூபம் எடுத்து விவாகரத்தில் முடிகிறது.இவ்வாறு ஆதிலட்சுமி கூறினார்.
=====================================

என் கருத்து:-

இவர்கள் சொல்லாமல் விட்ட முக்கிய காரணி ஒன்று உள்ளது. அது என்ன என்பது உங்களுக்கு முழுமையகத் தெரிந்திருக்கும். அதை சுட்டிக் காண்பிக்க இன்னொரு செய்தியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:-

—————-

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் புத்தகப் பைகளுடன் கன்னியாகுமரியில் சுற்றும் காதல் ஜோடிகள் – போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்

கன்னியாகுமரி, ஜுலை.24- 2009. செய்தி: தினத்தந்தி

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மத்தியில் தற்போது காதல்ஜோடிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் பள்ளி-கல்லூரி காதல் ஜோடிகள்தான் அதிகம் என்பது அதிர்ச்சிதரும் தகவலாக உள்ளது.

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் புத்தக பைகளையும் சுமந்துகொண்டு கன்னியாகுமரியில் காதல்ஜோடியாக வலம் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்றால், மற்ற நாட்களில் மாணவ-மாணவிகள்தான் ஜோடியாக வலம் வருகின்றனர். அவர்கள் வீவ் டவர், காந்தி மண்டபம், சன்செட்பாய்ண்ட், ஆராட்டு மண்டபம் உள்ளிட்ட ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிகளில் ஒதுக்குப்புறமாக சென்று அமர்ந்துகொள்கின்றனர்.

நேரம் செல்லச் செல்ல காதல்ஜோடியினர் எல்லை மீறும் அவலமும் அரங்கேறி வருகிறது. எனவே, இதை பார்த்து ரசிப்பதற்காக சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பலரும் கன்னியாகுமரிக்கு வரும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, காதல்ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்க கன்னியாகுமரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் பள்ளி-கல்லூரி காதல்ஜோடியினரை பிடித்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இருப்பினும் காதல் ஜோடிகளின் வருகை குறைந்தபாடில்லை.

கள்ளக் காதலனுடன் தனிக் குடுத்தனம்!

கள்ளத்தொடர்பால் கணவனுடன் சேர்ந்து வாழ மறுப்பு. நண்பனுக்கு மனைவியை விட்டுக்கொடுத்த கணவன்!

ஈரோடு, ஜுலை 24- 2009

காதலித்து திருமணம் செய்த மனைவியை, அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனுக்கு கணவர் விட்டுக்கொடுத்தார். அவர்களுடன் தங்கள் இரு குழந்தைகளையும் அவர் அனுப்பி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், பெரியசேமூர் அருகே உள்ள கனிராவுத்தான் குளத்தைச் சேர்ந்தவர், கார்த்திக் (வயது 32). தறிப்பட்டறை தொழிலாளி. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர், பார்வதிபிரியா (27).

அவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரேவதி (8), ரஞ்சிதாதேவி (3) என்று 2 மகள்கள் உள்ளனர்.

கார்த்திக்கின் நண்பன் மணிவாசகம் (32). இவர் அடிக்கடி கார்த்திக்கின் வீட்டுக்கு வந்து செல்வார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. கார்த்திக் இல்லாத சமயத்தில் மணிவாசகம் அடிக்கடி வீட்டிற்கு வரத்தொடங்கினார்.

இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர். இந்த தொடர்பு 2 ஆண்டுகளாக நீடித்தது. இதை அக்கம்பக்கத்தினர் கார்த்திக்கிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மனைவியை கார்த்திக் கண்டித்தார். அதை மீறி அவர்கள் கள்ளத்தொடர்பு நீடித்ததால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், பார்வதிபிரியா மணிவாசகத்துடன் தனிமையில் இருந்ததை ஒரு நாள் கார்த்திக் பார்த்துவிட்டார். அதனால் மனைவியை கடுமையாக கண்டித்தார். ஆனால், பார்வதிபிரியாவுக்கு கள்ளக்காதலனை மறக்க முடியவில்லை. அதனால் பார்வதிபிரியா காதலனுடன் தனிக்குடித்தனம் போக முடிவு செய்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர் மணிவாசகத்துடன் வசித்து வந்தார். அதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் செய்தார்

இந்த புகாரின் பேரில் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. கார்த்திக் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவருடன் சேர்ந்து வாழ பார்வதிபிரியா மறுத்துவிட்டார். மணிவாசகத்துடன் தான் வாழ்வேன் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால், மனைவியை நண்பனுக்கு விட்டுக்கொடுக்க கார்த்திக் முடிவு செய்தார். அதன்படி, கணவன்-மனைவி இருவரும் மணமுறிவு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு பிரிந்து சென்றனர். குழந்தைகள் இருவரையும் பார்வதிபிரியாவுடன் அனுப்பி வைத்துவிட்டு வருத்தத்துடன் கார்த்திக் வீடு திரும்பினார்.

============

அப்பாடி, விட்டது சனி, கார்த்திக்குக்கு! இல்லாவிடில் அந்த பெண் குலத்திலகம் அவன்மேல் வரதட்சணை வழக்கு (Sec 498A of IPC) போட்டிருப்பாள். உடனே அவன், அவனது பெற்றோர், உறவினர் என்று ஒரு பட்டாளமே கைது ஆகியிருக்கும்!

இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நடக்கும். எனெனில் கிளர்ந்து எழும் செக்ஸ் உணர்வுகளை திருப்தி செய்து கொள்வதுதான் வாழ்வின் ஒரே மையக் குறிக்கோள் என்றும், குடும்ப வாழ்வு, குழந்தைகள் நலம், பெற்றோர் நலவாழ்வு, உன்னதக் கோட்பாடுகள் கொண்ட வாழ்வு முறை என்பதெல்லாம் வெறும் குப்பை என்ற தீர்மானமான கருத்துக்கு நம் பெண்குலத்தை இழுத்துச் சென்று விட்டனர். மேலும் அத்தகைய மனப்பான்மையையும் அதுசார்ந்த செயல்பாடுகளையும் நியாயப்படுத்தும் வகையில் சட்டங்களையும் இயற்றிவிட்டனர்.

ஒரு மனைவி சோரம் போனால் அவளைத் தண்டிக்க சட்டமேயில்லை. ஆனால் ஒரு கணவன் தவறாகப் போனான் என்று ஒரு மனைவி சொன்னால் போதும் – எத்தகைய நிரூபணமும் தேவையில்லை. அவள் சொல் ஒன்றே போதும் – அந்த கணவன் குற்றவாளியாக தீர்மானிக்கப்படுவான். இதுதான் இந்திய சட்டங்களின் கண்ணோட்டம்.

மேலும் ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குக் கொடுத்து ஏமாற்றி விட்டான் என்று ஒரு பெண் சொன்னால் போதும். உடனே அது உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த ஆணைக் குற்றவாளியாக பதிவு செய்து கைது செய்துவிடுவார்கள். வேறு எந்த சாட்சியமோ, நிரூபணமோ தேவையில்லை. அந்த ஆணின் கூற்று எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் இந்தியச் சட்டங்களின் பார்வையில் ஒரு ஆண்மகன் பிறந்தவுடனேயே குற்றவாளியாகி விடுகிறான்! அத்துடன் அவன் பிறந்த கணத்திலிருந்து அவனைப் பெற்றவர்களும் அவனது உடன் பிறப்புகளும் குற்றவாளியாகி விடுகின்றனர். எந்த நேரத்திலும் அவர்கள் கைது செய்யப்படலாம். எந்தக் குற்றமும் செய்யவேண்டியதில்லை. யாரோ ஒரு பெண் அவர்கள் மீது குற்றம் சுமத்தினால் போதுமானது.

நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள், இந்திய ஆண்கள் அனைவரும், “திருமணம்” என்று சொன்னாலேயே தெனலிராமன் வளர்த்த பூனையைப் போல் காத தூரம் ஓடும் நாள் வந்துவிடும்!

பிரிவுகள்:498a குறிச்சொற்கள்:, , , , , ,

பரந்த மனப்பான்மையுடன் மாப்பிள்ளை தேவை!

இதை வாசிப்பவர்களில் யாரேனும் அதுபோல் “பரந்த மனப்பான்மை” கொண்டவர் மட்டுமின்றி, “மனைவி என்பவருக்கு எந்தக் கடமையும் கிடையாது; அவரிடமிருந்து எந்தவித “எதிர்பார்ப்பும்” இல்லை” என்ற கொள்கையும் உடையவர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாமே!

ஆனால் இதுவரை நிகழ்ந்துள்ள மண முறிவுகளைக் காணும் போது, சினிமா நட்சத்திரங்களின் திருமணங்கள் பொதுவாக விரைவில் “அழுகும் பொருட்கள்” (They have a very low shelf life!) வகையைச் சார்ந்தவை ஆயிற்றே!

சரி. இப்போது செய்தியைப் பார்ப்போம்!

“‘பரந்த மனப்பான்மையுடன்’ எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மணமகன் வேண்டும்” – நடிகை சங்கவி பேட்டி

‘அமராவதி’ படத்தில், அஜீத் ஜோடியாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், சங்கவி. `பொற்காலம்,’ `ரசிகன்,’ `கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து சங்கவி 100 படங்களை தாண்டி விட்டார். இவருக்கு, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதுபற்றி நிருபரிடம் சங்கவி கூறியதாவது:-

“சினிமாவில் எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். மீனா, ஸ்ரீதேவி, மகேஸ்வரி, விந்தியா, ரம்பா, சினேகா, சங்கீதா, சந்தியா ஆகிய அனைவரும் என்னிடம் நட்புடன் பழகி வருகிறார்கள். இவர்களில் ரம்பா, சினேகா, சந்தியா ஆகிய மூன்று பேர்களை தவிர, மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அதனால் எங்க வீட்டில், எனக்கும் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.

எனக்கு வரப்போகிறவர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருக்க வேண்டும். நல்லவராக, என்னை நன்றாக பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும். “நான் ஒரு நடிகை” என்று குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்காமல், பரந்த மனப்பான்மை உடையவராக இருந்தால் நல்லது.
அதோடு நிறைய படித்தவராக இருந்தால் ரொம்ப நல்லது. சினிமா உலகை சேர்ந்தவராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் என்னை சார்ந்து இருப்பவராக இருக்கக்கூடாது.

இவ்வாறு சங்கவி கூறினார்.
செய்தி: தட்ஸ்தமிழ்.
பிரிவுகள்:பொய் வழக்கு குறிச்சொற்கள்:, ,