தொகுப்பு

Archive for நவம்பர், 2008

வழக்கறிஞர் மற்றும் போலீசார் கருத்து

கணவர்களையும் அவர்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்த பெண்களையும் பொய் வழக்கு போட்டு கொடுமைப் படுத்தும் மனைவிகளைப் பற்றி வழக்கறிஞரும் காவல் துறையினரும் உண்மையை உடைத்துச் சொல்கிறார்கள் பாருங்கள்.

நன்றி: அவள் விகடன் (ஒரு பெண்களுக்கான வார இதழ்) – படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கி வாசியுங்கள்.

Advertisements
பிரிவுகள்:498a குறிச்சொற்கள்:, , , , , , , , ,

பாழ்பட்ட சமூகம்

பெண்களுக்காகவே நடத்தப்படும் “அவள் விகடன்” இதழில் வெளிவந்துள்ள கடிதங்கள் மூலம் இன்றைய நாட்களில் ஆண்களைப் பெற்று அவர்களுக்கு திருமணம் செய்விக்கும் பெற்றோரின் அவல நிலையை சிலர் சோகத்துடன் விவரிப்பதைக் காண்போம்:- (கிளிக் செய்து பெரிதாக்குங்கள்)


இதுபற்றி சட்ட நிபுணர்களின் கருத்து என்ன என்பதை அடுத்த இடுகையில் காண்போம்!

கள்ளத் தொடர்பினால் பிறந்த குழந்தையைக் கொலை செய்த தாய்

ஏழு நாள் குழந்தையை கொலை செய்த இருவருக்கு ஐகோர்ட் ஜாமீன் மறுப்பு

நவம்பர் 25,2008. செய்தி: தினமலர்

மதுரை : தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கள்ளத் தொடர்பினால் பிறந்த ஏழு நாளான பெண் குழந்தையை கொலை செய்த தாய்க்கும், கள்ளக்காதலருக்கும் ஜாமீன் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை மறுத்து விட்டது.

வீரபாண்டி அருகே பாலார்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(46). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த சின்னன் மகள் ஒச்சம்மாள்(37). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணவரை பிரிந்த ஒச்சம்மாள், ஜெயராஜின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

அப்போது, இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதில் கர்ப்பமுற்ற ஒச்சம்மாளுக்கு, டொம்புசேரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் செப்., 20-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.இது ஊருக்கு தெரிந்தால் அசிங்கம் எனக் கருதிய ஜெயராஜ், செப்., 26ம் தேதி பெண் குழந்தையை கொலை செய்தார். பிறகு, மஞ்சள் பையில் வைத்து பைக்கில் எடுத்துச் சென்று முல்லையாற்றில் வீசினார். வீரபாண்டி போலீசார் விசாரித்து ஜெயராஜையும், ஒச்சம்மாளையும் கைது செய்தனர்.இருவரும் ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். அவர்களை ஜாமீனில் விட அரசு கூடுதல் வக்கீல் சிவ.அய்யப்பன் ஆட்சேபம் தெரிவித்தார். அதை ஏற்று ஜாமீன் மனுவை நீதிபதி கே.என்.பாஷா தள்ளுபடி செய்தார்.

பிரிவுகள்:கொலை குறிச்சொற்கள்:, , , , ,

நல்ல பிசினஸ்

நகரி: பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இருவரை திருமணம் செய்து தலைமறைவாகி விட்டு, மூன்றாவதாக இன்னொருவரை மணக்க நிச்சயதார்த்தம் முடித்துள்ள இளம்பெண்ணை திருப்பதி போலீசார் கைது செய்தனர்.

ஆண்கள் மட்டுமே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதாக அனைவரும் கூக்குரலிடுகின்றனர். இதற்கு நேர்மாறாக, ஆந்திர மாநிலம் குண்டூர் நகரை அடுத்த, பிராடிபேட்டையைச் சேர்ந்த வெங்கடேஸ்வரராவ் பூர்ணவல்லி தம்பதியரின் மகளான தீப்தி(24)யும் செயல்பட்டுள்ளார்.

பிளஸ் 2 வரை படித்துள்ள இவருக்கு, சத்யதீப்தி, சாய்தீப்தி என்ற பெயர்களும் உண்டு. இவரது தந்தை ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தாய், மகள் இருவருமாக தனியாக வசித்து வந்தனர். மகளுக்கு நல்லமுறையில் திருமணம் செய்து வைக்க, பூர்ணவல்லிக்கு வசதி இல்லாததால், பெரிய அளவில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டினர். இதற்கு பொறியியல் படித்த சாப்ட்வேர் இன்ஜினியர்களை திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண போர்வையில் அவர்களை பிளாக்மெயில் செய்ய திட்டமிட்டனர். இதன்படி, திருப்பதி மாதவநகரைச் சேர்ந்த கோதண்டராம நாயுடுவின் மகன் பாலசுப்பிரமணியம்(30) என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை தேர்ந்தெடுத்து, 2004ம் ஆண்டு இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருப்பதியில் தனியார் ஓட்டல் ஒன்றில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணமான மூன்று தினங்களுக்கு பின் பிறந்த வீடான குண்டூருக்கு சென்று வருவதாக, கணவரிடம் கூறிச்சென்ற தீப்தி, மீண்டும் கணவரின் திருப்பதி வீட்டிற்கு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியம் மனைவியை தேடிச் சென்று குண்டூரில் விசாரித்ததில், அவர் எங்கு உள்ளார் என்ற விவரம் கிடைக்காமல் திருப்பதிக்கு திரும்பி விட்டார். சில மாதங்கள் கழிந்தபின், பாலசுப்பிரமணியத்திற்கு போன் செய்து பேசிய தீப்தி, “என்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி போலீசில் புகார் செய்து கோர்ட்டுக்கு போவேன்’ என, போன் மூலம் மிரட்டினார். அதன்பின், பாலசுப்பிரமணியத்திடம் ஒரு தொகையை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.

பின்னர், தீப்தி என்ற பெயரில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான தனசேகர ரெட்டியை, இன்டர்நெட்டில் சாட்டிங் செய்து காதலில் விழ வைத்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரான பாலசுப்பிரமணியத்தை மிரட்டி பணம் பறித்தது போலவே, தனசேகரிடமும் பணம் பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, திருமணம் நடந்த 2006ம் ஆண்டு குண்டூர் போலீசில் தனசேகர் புகார் செய்ததின் பேரில் தாய், மகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

அதன்பின்னும் மோசடியை தொடர முடிவு செய்த இந்த இளம்பெண், மீண்டும் தன் பெயரை சாய்தீப்தியாக மாற்றிக்கொண்டு மற்றொரு இளைஞரை தேடிப்பிடித்து அவரை திருமணம் செய்துகொள்ள நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்து கொண்ட திருப்பதியைச் சேர்ந்த முதல் கணவரான பாலசுப்பிரமணியம், கடந்த மாதம் திருப்பதி பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட தாய், மகள் இருவரின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், சொந்த வேலை காரணமாக திருப்பதிக்கு வந்து கொண்டிருந்த பூர்ணவல்லி, அவரது மகள் தீப்தி இருவரையும் திருப்பதி போலீசார் கைது செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன், ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தினமலர் செய்தி.

ஆனால் என்ன? அவர்களுக்கு ஒரு பிரச்னையுமில்லை.இந்தப் பெண் பொலபொலவென்று கண்ணீர் சிந்தினால் போதும். உடனே என்.ஜி.ஓக்களும், ரேணுகாக்களும், ஊடகங்களும், பெண்ணியலாளர்களும், மேலும் இளம் பெண்களைக் கண்டாலே ஒரு டிரம் ஜொள்ளு விடும் சில கிழட்டுகளும் சேர்ந்து “ஐயகோ! இந்த ஆணாதிக்க நாட்டில் பெண்களின் நிலையைப் பார்த்தாயா! ஒரு இளம் பெண் தன் தொழிலை தடையின்றி நடத்த வழியில்லையே” என்று ஓலமிடுவார்கள். அவர்களும் ஒரு குறையுமின்றி வெளிவந்து விடுவார்கள். தொழிலும் ஜாம்ஜாமென்று நடக்கும்.

அடுத்த பலியாடு ஆக நீங்கள் தயாரா?

குடும்ப வன்முறை புகாரில் மாமியாருக்கு விலக்கு

மும்பை: குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், குடும்பத்தில் உள்ள கணவன் மற்றும் ஆண் உறவினர் மீது தான் வழக்கு போட முடியும். மாமியார், நாத்தனார் போன்றவர்கள் மீது வழக்கு தொடர முடியாது!

மும்பையில் ஒரு வழக்கில் முலந்த் பெருநகர கோர்ட் அளித்த தீர்ப்பால் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக இப்படி ஒரு தீர்ப்பை இந்த கோர்ட் அளித்துள்ளது.

இனி வரும் வழக்குகளில் இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்.

மும்பை முலந்த் பகுதியை சேர்ந்தவர் விஷால்; அவர் மனைவி பிரியங்கா. 2005ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு இவர்களுக்கு இடையே மோதல் ஆரம்பித்தது. “என்னை என் கணவரும், அவரின் அம்மா ஷீலாவும் உடல், மனரீதியாக கொடுமைப்படுத்துகின்றனர்” என்று புகார் கூறி, பெருநகர கோர்ட்டில் வழக்கு போட்டார் பிரியங்கா. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் தேஷ்பாண்டே அதிரடி தீர்ப்பை அளித்தார்.

“குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் படி, கணவன் மற்றும் ஆண் உறவினர் மீது தான் வழக்கு போட முடியும். மாமியார், நாத்தனார் போன்ற பெண்கள் மீது இந்த சட்டத்தில் வழக்கு போட வழியில்லை” என்று கூறி, மாமியார் மீதான புகாரை நிராகரிக்க உத்தரவிட்டார். குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது. குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே பிரச்னை ஏற்படும் போது, மனைவிக்கு பாதுகாப்பு அளிக்க இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தில் திருமணத்தின் மூலம் கணவனாக இருக்கும் ஆணோ, ஒன்றாக சேர்ந்து வாழும் “லிவ் இன் பார்ட்னரோ” வன்முறையில் ஈடுபட்டால், அந்த ஆண்கள் மீது வழக்கு போடலாம்” என்று தான் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதைச்சுட்டிக்காட்டிய மாஜிஸ்திரேட்,”பெண்கள் மீது இந்த சட்டத்தில் வழக்கு போட வழியில்லை என்பதால், விஷால் மீதான குற்றச்சாட்டு குறித்து மட்டும் வழக்கு விசாரணை நடக்கும்” என்று அறிவித்தார்.

இதுகுறித்து வக்கீல்கள் தரப்பில் கூறும்போது, “குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ், மாமியார், நாத்தனார்கள் ஆகிய குடும்பத்தில் உள்ள பெண்கள் மீது புகார் தாங்கிய மனுக்கள் குவிந்துள்ளன. இந்த தீர்ப்பால், இந்த பெண்கள், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவர்” என்று தெரிவித்தனர்.

————–

”மனரீதியான கொடுமை” – இதை மனைவி செய்வதில்லையா? கணவன் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றாலே அது ஒரு மனரீதியான கொடுமை என்று இந்த சட்டத்தில் கேசு போடுகிறார்கள். மனைவி கணவனை எவ்வளவு கொடுமை செய்தாலும் அவள்மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாது.

இதுபோன்ற ஒருதலைப் பட்சமான, மோசமான, முட்டாள்தனமான சட்டம் வேறொன்று இருக்கமுடியுமா?

பிரிவுகள்:பொய் வழக்கு குறிச்சொற்கள்:, , , , , ,

பெற்றோரைப் படுகொலை செய்த பேதைப்பெண்

”நான் உங்கள் முன் “மிஸ் மீரட்” என்ற பட்டத்துடன் நிற்பதற்குக் காரணம் என் தாய்தான்” என்று குதூகலத்துடன் ஆர்ப்பரித்தாள் பிரியங்கா 2005-ல், உ.பியிலுள்ள மீரட் நகரத்தில்.

அதே பிரியங்கா நவம்பர் 11 அன்று தன் தந்தையையும் தாயையும் தன் பிரியமான தோழி(!)யுடன் சேர்ந்து கொடூரமான முறையில் படுகொலை செய்துவிட்டு அதைப்பற்றி சிறிதும் விசனமில்லாமல் டிவி கேமரா முன் “ஆம், என் பெற்றோர்களை நான்தான் கொன்னேன்” என்று ஆரவாரமாக பேட்டியளிக்கிறாள்.

போலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்தபோது அவர்களிடமிருந்து பிரியங்காவின் சகோதரர் கௌரவின் பெயரில் அவருடைய தந்தை சேமித்திருந்த ரூ.6 லட்சத்திற்கான வைப்புநிதி பத்திரம், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், அந்த சகோதரன் கௌரவ் பெயரில் அவள் தந்தை எழுதி வைத்திருந்த உயில், தாயினுடைய நகைகள், மேலும் தந்தையினுடைய சேவிங்க்ஸ் கணக்கு மற்றும் செக் புத்தகங்கள், 7 லட்சத்திற்கான நிரந்தர வைப்புப் பத்திரங்கள், அவருடைய செல்ஃபோன், அந்த வயதான பெற்றோரின் வீட்டுப் பத்திரங்கள் போன்றவற்றையும் கைப்பற்றினர்.

மீரட்டின் போலீஸ் கண்காளிப்பாளர் தன் பேட்டியில் கூறியது:

பிரியங்கா அவளுடைய தோழி அஞ்சுவுடன் தன் தாயாரிடம் சென்று பணம் கேட்டு தகராறு செய்திருக்கிறாள். அவர் கொடுக்க மறுத்ததால் வெறி கொண்டு அவரை நெஞ்சை நெறித்துக் கொன்றாள்.
அந்த தாயாரின் ஓலத்தைக் கேட்டு அந்த நேரத்தில் அங்கு வந்த தன் தந்தையின் கழுத்தை ஒரு கத்தியால் அறுத்துக் கொன்றுவிட்டு தன் தோழியுடன் பணம், பத்திரங்கள், நகைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள் அந்த பிரியங்கா.

போலீசார் அவளைப் பிடித்து கைது செய்தபின் பல டிவி சேனல்களில் அவளைப் பேட்டி கண்டார்கள். அப்போது அவள் தன் பெற்றோர் இருவரையும் கொன்றதற்கான சிறிதளவு வருத்தமோ குற்ற உணர்வோ இல்லாமல் புதிதாக பல கற்பனைக் கதைகளைக் கூறத் தொடங்கிவிட்டாள். அதாவது தான் பெண் என்பதால் சிறுவயதில் கொடுமைப் படுத்தப்பட்டதாகவும் ஆதலால் தன் பெற்றோரைக் கொன்றது சரியே என்று வாதாடினாள்.

அவளுடைய கூற்றுக்கள்:

1. அவளுடைய தந்தை அவளை மிகவும் கொடுமைப் படுத்தினார். அவளை ஒரு தவறான முறையில் பிறந்தவளாகக் குறிப்பிட்டு (illegitimate child) சிறுமைப் படுத்துவார்.
2. அவளுடைய சகோதரன் கௌரவ் அவளை அடித்துத் துன்புறுத்துவான்
3. பெற்றோர் அவளை ஃபேஷன் டிசைன் துறையில் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கவிலை. அதனால் அவள் தன் தோழியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்து வீட்டை விட்டு ஓடிவிட்டாள்.
4. அப்போது அந்த தோழி அஞ்சுவின் உறவினன் அஜேந்திரா என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டது. அபவளுடைய தந்தை அந்த அஜேந்திராதான் தன் மகளைக் கடத்தியிருப்பதாக போலிஸில் புகார் கொடுத்தார்
5. அந்த அஜேந்திராவும் அவனுடைய மாமாவும் பிரியங்காவை மானபங்கப் படுத்தியதாக அவள் தேசிய மகளிர் வாரியத்தில் புகார் கொடுத்தாள்
6. பிறகு அவள் நோய்டா, சஹாரன்பூர் போன்ற இடங்களில் ஃபேஷன் டிசைன் வேலைக்காக அலைந்திருக்கிறாள். அங்கும் தருண் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டு அவனும் இவளை ஏமாற்றினான்.

இப்படி பலவாரியாக பேட்டி கொடுத்த வண்னம் இருந்தாள். CNN-IBN, NDTV போன்ற சேனல்களில் தேடினீர்களானால் அவளுடைய கம்பீரமான (!) பேட்டிகள் கிடைக்கும்.

அதுசரி, தந்தை கொடுமைப் படுத்தியதாக இப்போது கண்ணீர் விடும் பெண் ஏன் தாயைக் கொல்லவேண்டும்? அதுவும் தன்னை மிஸ்.மீரட்டாகப் பெருமை பெறவைத்த தாயை?

பெற்றோர் சொல்லைக் கேட்காமல் தன் தோழியுடன் (அது என்ன தோழியோ) சுற்றி சீரழிந்துவிட்டு, தன் சகோதரனுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காகவே தன் பெற்றோரைப் படுகொலை செய்திருக்கிறாள் இந்த 26 வயது பேய்ப்பெண்!

ஆனால் நம் நாட்டில் ஆண்கள் மட்டுமே குற்றம் இழைப்பவர்கள் எனவும், பெண்கள் என்ன குற்றம் செய்தாலும் தண்டனையே கிடையாது எனவும் பெண்கள் அனைவரும் அன்பும், பண்பும், இரக்கமும் பொங்கி வழியும் குணம் உள்ளவர்களாகவும், சட்டங்களும், அமைச்சுகளும், கோர்ட்டுகளும் அறுதியிட்டுக் கூறுகின்றன. பெற்றோர்கள் பிரியும்போது குழந்தைகள் தாயிடம்தான் ஒப்படைக்கப்படுகின்றன.

என்ன உலகமடா இது!
இந்திய ஆண்களே, திருமணம் என்னும் படுகுழியில் விழுந்து உங்கள் வாழ்வையும் உங்கள் பெற்றோர் வாழ்வையும் சீரழித்துக்கொள்ளாதீர்கள்

போலி வரதட்சணை புகார்களை கண்டித்து டிசம்பர் 6-ந் தேதி ஆண்கள் பாதுகாப்பு சங்கம் போராட்டம்

போலியாக வரதட்சணை புகார்களை பதிவு செய்யக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் டிச.6-ல் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இது பற்றி ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அருள்துமிலன், துணைத் தலைவர் லிங்கம் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

பொய்யான புகார்கள்

போலீஸ் நிலையங்களில், ஆண்களுக்கு எதிராக கொடுக்கப்படும் வரதட்சணை புகார்களில் பெரும்பாலானவை பொய்யானவையாக உள்ளது. வரதட்சணை கொடுமை ஒருபுறம் இருந்தாலும், வரதட்சணை புகார்கள், ஆண்களை பழிவாங்கவே பயன்படுத்தப்படுகிறது. அதற்காகத்தான் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தை தொடங்கியிருக்கிறோம். இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, விவாகரத்து பெற்ற ஆண்கள் பலரும் இதற்கு ஆதரவு தரமுன்வந்துள்ளனர்.

தற்போது இங்கு ஆண்களுக்கு, ஒருநாள் இலவச சட்ட முகாம் நடத்துகிறோம். இதில், போலியான வரதட்சணை வழக்குகள் எப்படி எதிர்கொள்வது என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை தருகிறோம்.

ஆண்கள் ஆணையம் வேண்டும்

போலீஸ் நிலையங்களில் போலியாக வரதட்சணை புகார்களை பதிவு செய்யக்கூடாது, போலியான புகார் என்று தெரிந்தால் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்; குடும்ப வன்முறை சட்டத்தில் திருத்தம் செய்யும்போது, ஆண்கள் ஆணையத்தை கலந்தாலோசிக்க வேண்டும்; சுயஉதவிக்குழுக்களில் உள்ள சிலர், குடும்ப ஆண்களுக்கு எதிராக குழு பெண்களுக்கு தவறான ஆலோசனை வழங்குகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் டிச.6-ந் தேதி 2008 அன்று எங்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.

செய்தி: தினத்தந்தி