தொகுப்பு

Archive for ஏப்ரல், 2010

498A பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்

மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை
ஏப்ரல் 22,2010.

மும்பை : மும்பையில் இளம் பெண் ஒருவர், கறுப்பு நிறமாக இருந்த காரணத்துக்காக, அவரது கணவரால் நள்ளிரவில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் சிசிர் சிர்கே; இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவ துறையில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. பவித்ரா, சற்றே கறுப்பு நிறம் உடையவர். திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே, இது தொடர்பாக பவித்ராவை அவரது கணவர் வீட்டார் கேலியும், கிண்டலும் செய்யத் துவங்கி விட்டனர். ஒரு சில நாட்களில் கிண்டல் அதிகரித்து பவித்ராவை கடுமையான வார்த்தைகளில் திட்டினர். கறுப்பு நிறமாக இருப்பதால், தினமும் 10லிருந்து 12 முறை முகம் கழுவும்படி பவித்ராவை கட்டாயப்படுத்தினார். அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு, பவித்ரா பொறுமையாக இருந்தார்.

சில நாட்களிலேயே, இந்த கொடுமைகள் வேறு வடிவம் எடுத்தன. பெற்றோர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி, தொடர்ந்து தொந்தரவு செய்தனர். ஆனால், பவித்ரா,’நான் சம்பாதிக்கிறேன். நல்ல வருமானம் வருகிறது. நீங்கள் கேட்கும் தொகையை நானே தந்து விடுகிறேன்’என்றார். கணவர் வீட்டார் இதை ஏற்கவில்லை. பெற்றோரிடம் தான் வாங்கி வர வேண்டும் என, கண்டிப்பாக கூறி விட்டனர். இந்த விவகாரத்தில், சிசிர் சிர்கேவும் தலையிடத் துவங்கினார். ஒரு நாள் நள்ளிரவில் பவித்ராவுக்கும், சிசிர் சிர்கேவுக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிசிர்,’நீ கறுப்பாக இருக்கிறாய். பார்ப்பதற்கே கேவலமாக உள்ளது. வீட்டை விட்டு வெளியில் போ’என, துரத்தினார். பவித்ரா கெஞ்சிப் பார்த்தும் பயன் இல்லை. வீட்டுக்கு வெளியில் அவரை தள்ளி விட்டு, கதவை அடைத்து விட்டனர்.

இந்த முறை பவித்ரா தைரியமாக முடிவு எடுத்தார். நள்ளிரவில் நேராக அவர் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்லவில்லை. அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது புகார் செய்தார். போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கைது செய்வதற்காக சிசிர் வீட்டுக்கு சென்றபோது, அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அடுத்த சில நாட்களில் மும்பை ஐகோர்ட்டில் அவர்கள் சார்பில், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில்,’அடுத்த கட்டமாக கோர்ட் என்ன உத்தரவிடுகிறதோ, அதன்படி நடவடிக்கை எடுப்போம்’என்றனர். இந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisements

ம்ஹூம், பெண்கள் கொடுமையே இழைக்க மாட்டார்கள்!

Child abandoned by motherதாயால் தவிக்க விடப்பட்ட பெண் குழந்தை மீட்பு

ஏப்ரல் 18,2010. தினமலர்

தாம்பரம்: தாயால் விட்டு சென்ற, பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தையை போலீசார் மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

தாம்பரத்தை சேர்ந்த கணேசன் மனைவி ஆனந்தி (40). இவர், தாம்பரம் பஸ் ஸ்டாண்ட், தபால் நிலையம் நுழைவாயில் அருகே பழம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை 11 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பிறந்து 25 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆனந்தி கடை அருகே வந்தார்.

சிறிது நேரம் கழித்து, ஆனந்தியிடம் அந்த பெண் ‘குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள், பாத்ரூம் சென்று வருகிறேன்’ என்று கூறி சென்றார்.

பாத்ரூம் சென்ற பெண் நீண்ட நேரமாகியதால், சந்தேகமடைந்த ஆனந்தி அருகேயுள்ள கழிவறைக்கு சென்று தேடினார். ஆனால், அங்கு அந்த பெண் இல்லை.
இதையடுத்து, தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் குழந்தையை மீட்டு, மேற்கு தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

குழந்தையை விட்டு சென்ற பெண் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்த மருமகள்

செய்தி – தினமலர் – ஏப்ரல் 15, 2010.

ஐயோ பாவம், அந்தப் பேதை மருமகள்!

கணவன் மீதும் அவனது பெற்றோர் உறவினர் மீதும் பொய்க்கேசு போட்டு சிறையிலடைத்து காசு பிடுங்கும் முழு உரிமையையும் இந்தியப் பெண்களுக்கு அளித்திருப்பதுபோல், கள்ளக்காதல் செய்வதற்கும் உரிமையை மனைவிமார்களுக்கு சட்ட ரீதியாக அளித்திருந்தால் இதுபோல் மாமனாரை திட்டம் போட்டுக் கொலை செய்து கொலைகாரி என்ற பட்டத்தை அந்த அப்பாவிப் பெண்கள் பெற்றிருக்கமாட்டார்கள் அல்லவா?

இந்த சிந்தனை ஏன் இன்னமும் இந்த சமுதாயத்திற்கும் வரவில்லை? AIDWA போன்று பெண்களின் உரிமைக்காகவும், அவர்களை கற்பு, குடும்பம், கடமை, பண்பாடு போன்ற தளைகளிருந்து விடுதலை பெற்றுத்தருவதற்காகவும் அல்லும் பகலும் பாடுபடும் இயக்கங்களும், மற்றைய பெண்ணியவாதிகளும் இத்தகைய உரிமைக்காக குரல் எழுப்ப வேண்டாமா?

சரி, இப்போது இந்த அபலைப் பெண்ணின் கைவரிசையைப் பற்றி வாசிப்போம்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார் ரைஸ் மில் அதிபர் அடித்துக் கொலை : மருமகள் உட்பட மூவர் கைது

ஏப்ரல் 15,2010. தினமலர்

கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மூவரை தேடி வருகின்றனர்.

மருமகளால் கொலை செய்யப்பட்ட மாமனார்கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயவேல்ரெட்டி(68). அதே பகுதியில் இயங்கி வரும் ரைஸ்மில் மற்றும் பல வணிக வளாகங்களின் உரிமையாளராக இருந்தவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.கடந்த 6ம் தேதி இரவு, ஆரம்பாக்கம் பஜாரில் இருந்து நாயுடுகுப்பம் சாலையில் உள்ள ரைஸ்மில்லுக்கு நடந்து சென்றார். அப்போது மர்மநபர்கள் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.மறுநாள் காலை சாலையோர முட்புதரில், அவரது உடலை கண்ட அப்பகுதி மக்கள் ஆரம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வனிதா, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., நாகஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர்.வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் இன்ஸ்பெக்டர் அகமது அப்துல்காதர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையில்,ஜெயவேல் ரெட்டியின் மூத்த மகன் பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி(37). ஆரம்பாக்கம் அருகே உள்ள எடகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(37).சொந்தமாக விவசாய டிராக்டர் வைத்துள்ளார். வேலை காரணமாக ஜெயவேல் ரெட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து போன சீனிவாசனுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே கள்ள காதல் உருவானது. இதை அறிந்த ஜெயவேல் ரெட்டி இருவரையும் கண்டித்துள்ளார்.இந்நிலையில், ஜெயவேல் ரெட்டி, தனது சொத்துகளில் பாகம் பிரித்த போது, மகன்களை விட, மகள்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். இதனால், கள்ள காதல் தொடர்பாக கோபமாக இருந்த புவனேஸ்வரி மேலும் ஆத்திரமடைந்தார்.

இதை காரணம் காட்டி, சொத்துகளை பெற்று தனி குடித்தனம் செல்ல புவனேஸ்வரி முயன்றார். இதற்கும் ஜெயவேல் ரெட்டி தடையாக இருந்துள்ளார். இதையடுத்து, சீனிவாசன் உதவியுடன் ஜெயவேல் ரெட்டியை கொலை செய்ய, புவனேஸ்வரி திட்டம் தீட்டினார். இதன்படி, சீனிவாசன் நண்பரான எடகண்டிகை ஸ்ரீதர் உதவியுடன், திருவொற்றியூர் ஷேக் பாரி(35) என்பவரை அணுகினர்.அவர், கொலை திட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பேசி முடித்து, முன்பணமாக, 46 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார். இதன்படி, ஷேக் பாரி கூட்டாளிகளான பிரபாகரன்(30), பாலாஜி(25) ஆகியோருடன் சேர்ந்து ஜெயவேல் ரெட்டியை கொடூரமாக கொலை செய்தனர், என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து புவனேஸ்வரி, சீனிவாசன், அவரது நண்பர் ஸ்ரீதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஷேக் பாரி, பிரபாகரன்,பாலாஜி ஆகியேரை தேடி வருகின்றனர்.

4 கோடி கொடுத்தால் அத்தனை புகாரும் வாபஸ்!

ஷோயப் வரதட்சணை கொடுமை செய்தாராம்!

498A சட்டம் இருப்பதே பணம் பிடுங்கத்தானே!

அதிலும் பசையுள்ள புள்ளிகள் வசமாக சிக்கும்போது விடுவார்களா?

இதோ படியுங்கள் பெண்குலத் திலகங்களே! புகார் கொடுத்தவர்களின் திருவிளையாடல்களை!

சோயப் நான்கு கோடி ரூபாயைத் தந்தால், ஆயிஷா தலையீடு செய்ய மாட்டார்”

சோயப் மீதான ஆயிஷா ‘திடுக்’ புகார்கள் மீது விசாரணை தீவிரம் : திருமணத்தில் சிக்கல் வராதிருக்க மும்முரம்

ஏப்ரல் 07,2010. செய்தி: தினமலர். சுட்டி: http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17614

ஐதராபாத்:பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டது தொடர்பாக ஆந்திர குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து போலீஸ் குழு விசாரணை நடத்தி வருகின்றன. அதே சமயம், சோயப் நான்கு கோடி ரூபாயைத் தந்தால், ஆயிஷா தலையீடு செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு தடையாக வந்த இச்சிக்கல்களைக் களைவதில் சோயப் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், வரும் 15ம் தேதி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இதற்கிடையே ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண், சோயப் மாலிக் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், அவர் மூலம் தான் கர்ப்பம் அடைந்து கருச்சிதைவு செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சோயப் மாலிக்குடன் திருமணம் நடந்ததற்கான சான்றிதழையும் ஆயிஷா வெளியிட்டுள்ளார். சோயப்புடன் ஓட்டலில் தங்கியிருந்ததற்கான ஆதாரங்களையும் அவர் போலீசிடம் ஒப்படைத்துள்ளார்.இதையடுத்து, சோயப் மீது வரதட்சணை கொடுமை, மோசடி, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயிஷா கொடுத்த ஆதாரங்கள் உண்மையானவையா என்பது குறித்து, ஆந்திர குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

அதில், ஆயிஷா கூறிய டெலிபோன் மூலம் நடந்த திருமணம், ஆயிஷாவுடன் சோயப் தங்கியிருந்தது, அதன் பின் ஆயிஷாவுக்கு ஏற்பட்ட கருச்சிதைவு உட்பட பல்வேறு அம்சங்களை விசாரிக்கின்றனர். போலீசார் நடத்தும் விசாரணையுடன் முஸ்லிம் மதக்குருக்கள் சிலரும் ஆலோசனை நடத்துவர் என்று கூறப்பட்டது.

தவிரவும், தான் இதுவரை பட்ட மன உளைச்சலுக்கு நான்கு கோடி ரூபாய் நஷ்ட ஈடாகத் தந்தால், இப்பிரச்னையில் இருந்து ஆயிஷா விலகுவார் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டிருக்கிறது. சோயப்பிடம் ஏகப்பட்ட செல்வம் இருப்பதால், இத்தொகை அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் பேசப்படுகிறது.

மைத்துனர் வருகை: இரண்டு நாட்களுக்கு முன் சோயப்பிடம் ஐதராபாத் போலீசார் இரண்டு மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். சோயப் மீது மூன்று பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது பாஸ்போர்ட்டையும், மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர் வாகா எல்லை வழியாக சென்று விடாதபடி குடியேற்றத்துறை அதிகாரிகளையும் போலீசார் உஷார்படுத்தியுள்ளனர்.

தன் மீதான விசாரணை முடியும் வரை ஐதராபாத்தில் தங்கியிருப்பதாக சோயப் மாலிக் உறுதியளித்துள்ளார்.சோயப் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டால், அவரை ஜாமீனில் விடுவிக்க ஏற்பாடு செய்வதற்காக சோயப்பின் மைத்துனர், டில்லி வந்துள்ளார். ரமேஷ் குப்தா என்ற வக்கீல் மூலம் சோயப்பை சட்டச் சிக்கலில் இருந்து மீட்க அவர் ஆலோசித்து வருகிறார்.

அதே சமயம், சோயப் மீதான முதல் தகவல் அறிக்கையை தரும்படி இந்திய அரசை, தனது தூதரகம் மூலம் பாகிஸ்தான் அரசும் கேட்டுக் கொண்டிருக்கிறது.இப்போது, பாகிஸ்தானில் பல்வேறு விளையாட்டுத் துறையினரும் சோயப்- சானியா திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.பாகிஸ்தான் வீரர், இந்திய பெண்ணான சானியாவை மணப்பதை பத்திரிகைகளும், ‘டிவி’க்களும் விரும்பவில்லை. உண்மை என்னவென தெரியாமல் அவை செய்தி வெளியிடுகின்றன என, பாகிஸ்தான் ஹாக்கி வீரர் ரேகன்பட் தெரிவித்துள்ளார்.

இவர் அவர் அல்ல:பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் போட்டோவில் பார்த்தது வேறு ஆயிஷா. தற்போது இவர் மீது புகார் கூறும் ஆயிஷா அவர் அல்ல என, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார்.இது குறித்து ரஷீத் லத்தீப், கராச்சி நகரில் குறிப்பிடுகையில், ‘சோயப் என்னுடைய லேப்-டாப்பை வாங்கி, ‘சாட்’ செய்து கொண்டிருந்தார். அதில் ஒரு பெண்ணை காட்டி, இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறினார்.

ஆயிஷா என்ற அந்த பெண்ணின் படத்தை நானும் இன்டர்நெட்டில் பார்த்துள்ளேன். ஆனால், தற்போது ‘டிவி’யில் காட்டப்படும் ஆயிஷா, இன்டர்நெட்டில் பார்த்த ஆயிஷாவை போல இல்லை. இவர் வேறானவர். இதை நான் எங்கு வேண்டுமானாலும் கூற தாயாராக இருக்கிறேன்’ என்றார்.

Khaleej Times reports:

“Two of the sections applied are non-cognizable offences which empower us to effect arrests. They are also non-bailable,” a police official said.

In a dramatic script in the First Information Report she makes the following allegations:

· Shoaib has hitmen ready to kill her and her family members.

· He has tortured her on several occasions.

· She expressed the hope he would turn a new leaf and repent and come home to her and being a good wife she waited.

· Even if he marries Sania she can only be the second wife.

She implores the police to have him arrested under section 498 for acts of cruelty, domestic violence and defamation.

The sub-inspector of police who took down the details for the FIR is N. Ravinder who is the most sought after man in Hyderabad today.

போட்டூட்டாய்ங்கய்யா 498A ஷோயப் மாலிக் மேல!

Shoab Malik facing 498a

(செய்தி, படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா)

போயும் போயும் ஷோயப் மாலிக் இந்தியப் பெண் கிட்டயா ஃபோன்ல பேசித் தொலைக்கணும்!

இப்பனாய்ச்சும் 498A பத்திப் புரிஞ்சுக்குவாய்ங்களா?

ஏற்கனவெ மனோஜ் பிரபாகர் மேல 498A போட்டு கணிசமா கறந்துட்டாய்ங்க.

இப்போ 498A கேசு போட்டாச்சு. ஷோயப் மாலிக் பாஸ்போர்ட்டை பிடுங்கியாச்சு. அவர் கிட்டேயிருந்து கொள்ளையா கறக்கப் போறாய்ங்க! பின்னே 498A எதுக்கு இருக்கு, பணம் கொள்ளையடிக்கத்தானே!

Sec. 498A of IPC is the chief tool for extortion of money from males by Indian women, their cronies and collaborators!

Shoab Malik 498a

ஆனால் அதற்கப்புறமும் சச்சின் தென்துல்கர் “ஐயகோ, இந்தியாவில பெண்களையெல்லாம் வரதட்சணை கொடுமை பண்ணி எறிச்சுக் கொல்றாங்களே”-ன்னு ஒப்பாரி வைக்கப்போகிறாரா? அவரைத்தான் இப்போ ஷோயப் மாலிக் கேக்கணும், “இப்ப, இந்த பொய்க்கேசுக்கு என்னய்யா உன்னோட பதில்?”-ன்னு!

இந்தக் கொடுமை இனிமெல் எவருக்கும் வரவேண்டாம் என்றால் இந்தியப் பெண்களிடம் எந்த ஆணும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. இந்தியாவில் இதுபோல் 40-க்கும் அதிகமான ஒருதலைப் பட்சமான ஆணழிப்புச் சட்டங்கள் உள்ளன!