தொகுப்பு

Archive for செப்ரெம்பர், 2009

பொங்கிப் பெருகுது 498A கேசுகள்!

தொடரட்டும் பொய் 498A கேசுகளின் அறுவடை!

கூடிய சீக்கிறமே இந்திய ஜனத்தொகையில் பாதி இத்தகைய கேசுகளில் சிக்கி அல்லாடும் காலம் வரும். அப்பொதுதான் இந்தியா முழு வளர்ச்சி அடைந்துவிட்டதாகக் கருத முடியும்!

================
1.

சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
சென்னை போலீஸ்காரர் மீது வழக்குபதிவு

உத்தமபாளையம்,செப்.29- 2009

சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக சென்னையில் பணிபுரியும் போலீஸ்காரர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலீஸ்காரர்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரத்தில் தெற்கு தெருவில் வசித்து வருபவர் தெய்வ கணேசன்(வயது 36). இவர் சென்னையில் போலீஸ் காரராக பணிபுரிந்து வருகி றார். இவருக்கும் வெள்ளை யம்மாள்புரம் தெற்கு தெரு வினை சேர்ந்த பிரியதர் சிணி(22) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது.

அப்போது 36 பவுன்தங்க நகையை வரதட்சணையாக பெண்வீட்டார் வழங்கி உள்ளனர். பின்னர் ஒரு ஆண்டு கூட்டுக்குடும்பமாக இருந்து விட்டு, அதன்பிறகு மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இருந்த போது, ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு ரூ.1 லட்சம் பணத்தை உனது பெற்றோரிடம் வாங்கிவா என்று தெய்வகணேசன் பிரியதர்சிணியிடம் கூறி அவரின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.

ஆனால் பிரியதர்சிணியின் பெற்றோர், திருமணத்திற்கு செலவு செய்து விட்டோம் பணம் இல்லை என்று சொன்னதால், திருமணத்தின் போது 100 பவுன் தங்க நகை பேசி போடவில்லை, 60 பவுன் நகையும், ரூ.40 ஆயிரம் பணமும் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று பிரியதர்சிணியை அவரது கணவர் தெய்வகணேசனும், மாமியார் லீலாவதி(55) ஆகியோர் தினமும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

வரதட்சணை கொடுமை புகார்

இதனை அடுத்து பிரியதர்சிணி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் தனது புகாரில், தனது கணவரும்,மாமியாரும் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைப்படுத்தியதாகவும், என் மீது அவர்கள் மண் எண்ணையை ஊற்றி தீவைக்க முயற்சித்த போது, தப்பி வந்து போலீசில் புகார் அளிப்ப தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வகணேசன் மற்றும் லீலாவதியை தேடி வருகின்றனர்.
===============================

2.

காதலியிடம் வரதட்சணை கேட்ட வாலிபர் கைது

காரைக்குடி,செப்.27- 2009

காதலியிடம் வரதட்சணை கேட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி அமரகாரத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டன் ஊருக்கு வந்தபோது, அவருக்கும் அதே தெருவை சேர்ந்த ரேகா (23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர். கடந்த ஜுன் மாதம் இருவரும் திருமயத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் அவரவர் வீட்டிலேயே வசித்து வந்தனர்.

தனது தங்கைக்கு திருமணம் ஆனவுடன் உன்னை என் வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று மணிகண்டன் கூறினாராம். இதற்கிடையில் ரேகா தன்னை அழைத்துச் செல்லும்படி மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதற்கு மணிகண்டன் 25பவுன்
தங்கநகை கொண்டு வந்தால்தான் அழைத்து செல்வேன் கூறியதாக தெரிகிறது.

இது குறித்து ரேகா காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.

===================

3.

காதலித்து திருமணம் செய்த 2 மாதத்தில் அழகு இல்லை எனக்கூறி, மனைவியிடம் வரதட்சணை கேட்ட கணவன் சித்ரவதை செய்ததாக கைது

கோவை,செப்.26- 2009

கோவையில் திருமணமான 2 மாதத்தில் அழகு இல்லை எனக்கூறி காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவனை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் தெற்கு உக்கடம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). பெயிண்டர். இவர் கோவை குனியமுத்தூர் பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டனை சேர்ந்த காவேரியை (19) காதலித்தார். அவர் ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இருவரும் கடந்த இரு மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் துகொண்டனர். இருவரது காதலை விக்னேஷின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து இருவரும் பிள்ளையார் புரத்தில் உள்ள காவேரியின் வீட்டில் அவரது தாய், தங்கையுடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் விக்னேஷ் திடீரென மனைவி காவேரியிடம் `நீ அழகாக இல்லை. உன்னை காதலித்து திருமணம் செய்ததால் எந்த பயனும் இல்லை. அதனால் உன் அம்மாவிடம் கூறி மோட்டார் சைக்கிளை வரதட்சணையாக வாங்கி வரவேண்டும்’
என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது. மேலும் காவேரியை அவர் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அவரது தொந்தரவு தாங்கமுடியாமல் காவேரி வீட்டில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.
================

4.

இன்னொரு வழக்கு

கேரள மாநிலம் கோவில்கடவு ஸ்ரீ ஜெயலட்சுமி ஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜ். இவரது மகள் ஸ்ரீ ஜெயா. இவருக்கும் கோவை சுந்தராபுரம் இடையர்பாளையத்தை சேர்ந்த மூக்காண்டி மகன் ராஜா (32)வுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்தது. அப்போது பெண்வீட்டார் தரப்பில் ராஜாவுக்கு 75 பவுன் நகையும், ரூ.1 லட்சம் ரொக்கப்பணமும் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ராஜா தனது மனைவியிடம் ரூ.4 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஸ்ரீ ஜெயாவின் கணவர் ராஜா, அவரது மாமியார் பிரமுயம்மாள், மைத்துணர் ராஜாரத்தினம், சுகுணா ஆகிய 4 பேர் மீது வரதட்சணை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
==============

5.

வரதட்சணைக் கொடுமை – மனைவியை துன்புறுத்தியதாக கன்னட பாடகர் கைது
திங்கள்கிழமை, செப்டம்பர் 28, 2009

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய பிரபல கன்னட பின்னணி பாடகர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.

இவருக்கும், பிரியதர்ஷினி என்பவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறி பிரிஷயதர்ஷினி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மேலும், கணவருடன், மாமியார், நாத்தனாரும் இவரை துன்புறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் பெங்களூர் பசவன்குடி மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் ஹேமந்தை கைது செய்தனர்.

Advertisements
பிரிவுகள்:498a குறிச்சொற்கள்:, , , , , , , ,

கள்ளக்காதலில் பிடிபட்டால் போடு 498A கேசு!

இது பிரமாதாதமான வழியாயிருக்கே! எந்தவிதக் கேள்வி முறையுமில்லாமல் பொய் வழக்கு போடுவதற்கென்றே கட்டமைக்கப்பட்டுள்ள செக்ஷன் 498A மூலம் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் மேல் தொடுக்க இயலும் ஆயுதம் கையில் இருக்கும்போது பகிரங்கமாக கள்ளக் காதலில் மணமான பெண்கள் ஈடுபடலாம். பிடிபட்டவுடன் கேள்வி கேட்டால் “இந்தா பிடி 498A கேசு” என்று கேள்வி கெட்டவங்களை உள்ளே பிடித்துப் போட்டுவிடலாம். இதற்கென்றே ஸ்பெஷலிஸ்டு வக்கீல்கள்தான் இருக்கின்றனரே!

போதாததற்கு “கள்ளக் காதல் காவலர்” மனோரமா வேறு தற்போது புதிதாகத் தோன்றியுள்ளார். தவிர விஜயகாந்த் வேறு களத்தில் இறங்கியிருக்கிறார்.

பிறகென்ன, பெருகி வளரட்டும் கள்ளக் காதல்கள், பொய் வழக்குகள்!

ஆண்கள் திருமணத்தை நம்புவதை விடுத்து தங்கள் திருக்கரத்தை நம்பலாம்!

இப்போது செய்தி (தினத்தந்தி 30-09-2009)

நடத்தையில் சந்தேகம்
கார், வீட்டுமனை கேட்டு இளம்பெண் சித்ரவதை
கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் கைது

போளூர், செப்.30-

சேத்துப்பட்டு அருகே கார் மற்றும் வீட்டுமனை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நடத்தையில் சந்தேகம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள மேலத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முரு கேசன் (வயது63) ஓய்வுபெற்ற தலையாரி. இவரது மகன் சசிகுமார். தனியார் கல்லூரி பேராசிரியர்.

இவருக்கும், ஸ்ரீமதி (23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீமதியின் நடத்தையில் சசிகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கார், வீட்டுமனை

இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று சசிகுமார் கூறியிருக்கிறார். இதனால் பஞ்சாயத்து பேசப் பட்டது. அப்போது குழந் தைக்கு மரபணு சோதனை நடத்தவேண்டும் என்று சசிகுமார் கூறியிருக்கிறார்.

பின்னர் ஸ்ரீமதியை அவரு டைய பெற்றோர் வீட்டுக்கு சென்று சென்னையில் ஒரு வீட்டுமனையும், ஒரு காரும் வாங்கி வரும்படி கூறி துன்புறுத்தி உள்ளார். அதற்கு அவருடைய தந்தை, தாய் மற்றும் சகோதரர்கள் துணையாக இருந்துள்ளனர்.

3 பேர் கைது

இது குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீமதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமார், அவருடைய தந்தை முருகேசன், தாய் ராதா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கேரளாவில் போலீசாக வேலைபார்க்கும் சசிகுமாரின் அண்ணன் ரவிந்சந்திரன், சென்னையில் ஆசிரியையாக பணிபுரியும்சகோதரி நளினி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கணவன் மனைவி பிரச்னையில் அயலாரைப் புகவிடாதே, பொய்க் கேசு போடாதே!


கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் நடுப்பிடாகையை சேர்ந்தவர் கண்ணன். இவர் ஒரு ஏழை கூலித் தொழிலாளியின் பெண் கோபிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆனவுடனேயே கண்னன் வீட்டார் அந்த கோபிகாவுக்கு சொத்து ஒன்றை எழுதி வைத்துள்ளனர்.

கர்ப்பமான கோபிகா 15 நாட்களிலேயே கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அதற்கு கண்ணனும் அவனுடைய பெற்றோரும் ஒப்புக் கொள்ளவில்லை.

அவர் காவல் நிலையத்திற்குச் சென்று தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் மீது புகார் கொடுத்தார் (அதுதான் 498A செக்ஷன்).

அதன்மேல் குடும்ப வன்முறைச் சட்டத்தின்படியும் ஒரு புகார் கொடுத்தார்.

இத்தனை கேசுகள் போட்டதால் கண்ணன் அவரை வீட்டில் சேர்க்கவில்லை.

உடனே அந்த கோபிகா மார்க்சிஸ்டு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, விஜயகாந்த் கட்சி போன்ற அரசியல் கட்சியினரைக் கூட்டு சேர்ந்துக் கொண்டு குழந்தையை கொளுத்தும் வெய்யிலில் போட்டு வாட்டி வதக்கி நடு ரோட்டில் போராட்டம் நடத்தினாள்.

கண்ணன் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருந்ததால் காவல் துறையினர் அவர்கள் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

உடனே கோபிகாவும் அவருக்கு ஆதரவாகத் திரண்டிருந்த அரசியவாதிகளும் பெரிய போராட்டத்தை அறிவித்து முதலமைச்சர் தலையிடவேண்டும் என்று கூக்குரலிட்டனர். காவல் துறை மீதும் புகார்களைக் கூறிவந்தனர். (ஆமாம் ஐயா, இத்தகைய அரசியவாதிகள் இளம் பெண்கள் பின்னால் போவார்கள், பணத்தின் பின்னே போவார்கள், ஓட்டின் பின்னே போவார்கள். பின்னே நியாயத்தின் பின்னேயா போவார்கள்?)

மேற்கணட விவரமெல்லாவற்றையும் அந்த கண்ணன் “கலைஞர் டிவி”யில் நேரிடையாக இரண்டு நாட்களுக்கு முன் கூறினார் – தன் மனைவி இன்னொருவனுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கும் சந்தேகம் உட்பட!

ஆனால் நேற்று காவல் துறை அதிகாரிகள் அந்த தம்பதிகள் இரண்டு பேரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சேர்ந்து வாழும்படி கூறி கண்ணனுடைய் பெற்றோரை விட்டுப் பிரிந்து தனிக் குடுத்தனம் போக அனுப்பியுள்ளனர்.

தினத்தந்தி செய்தியின்படி அந்த சேர்த்து வைக்கும் நடவடிக்கை குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “கோபிகாவும் கண்ணனும் சேர்ந்து வாழ்வதற்கு அவர்களது குடும்பத்தினர்தான் தடையாக இருந்தனர். இதனால் அவர்களை தனிக்குடித்தனமாக சேர்ந்து வாழ அனுப்பி வைத்துள்ளோம்” என்றார். (http://www.dailythanthi.com/article.asp?NewsID=517199&disdate=9/29/2009)

இதுபற்றி நேற்றைய (29-09-2009) தினகரன் செய்தி இது:

அதிகாரிகள் சமரச முயற்சி வெற்றி 20 நாள் போராட்டம் முடிந்தது கணவரோடு சேர்ந்தார் கோபிகா.

நாகர்கோவில், செப்.29: குமரி மாவட்டம் கருங்கல் அடுத்த பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (25). இவருக்கும் இரணியல் பகுதியை சேர்ந்த கோபிகாவுக்கும் (23) ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர். கணவரோடு தன்னை சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் கோபிகா பல போராட்டங்களை நடத்தினார்.

கடந்த 7ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை கணவர் வீட்டு முன் தொடங்கினார். பல்வேறு அரசியல் கட்சிகளும் அவருக்கு ஆதரவளித்தன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரு தரப்பையும் பேச்சு வார்த்தைக்கு வரும்படி எஸ்.பி. சண்முகவேல் அழைத்தார். அதன்படி கோபிகா மற்றும் கண்ணன் தங்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களோடு வந்தனர். குடும்ப பிரச்னை என்பதால் கோபிகா, கண்ணனை தவிர வேறு யாரும் உள்ளே வர வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டனர். சரியாக 11 மணி அளவில் எஸ்.பி. அலுவலகத்துக்குள் கண்ணனும், கோபிகாவும் சென்றனர். எஸ்.பி. சண்முகவேல், பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. முருகவேல் ஆகியோர் அவர்களிடம் பேசினர்.

இருவருமே ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தொடக்கத்தில் பேசினர். நேரம் செல்ல, செல்ல பேச்சு வார்த்தையில் மாறுதல் ஏற்பட்டது. கணவருக்காக கோபிகாவும், கோபிகாவுக்காக கண்ணனும் பரிந்து பேசும் அளவுக்கு நிலை வந்தது. 3 மணி நேர பேச்சுக்கு பிறகு இருவரும் சிரித்தபடியே வெளியே வந்தனர்.

இது தொடர்பாக எஸ்.பி. சண்முகவேல் கூறியது:

கோபிகா, கண்ணன் இருவரும் சேர்ந்து விட்டனர். குடும்ப விவகாரத்தை இப்படி பெரிதாக்க கூடாது. விட்டு கொடுத்து செல்ல வேண்டும். கணவன், மனைவிக்குள் ஈகோ பிரச்சினை கூடாது என்று பல அறிவுரைகளை கூறினோம். குழந்தையின் நலனையும் பார்க்க வேண்டும் என்றோம். இந்த பேச்சு வார்த்தையில் பலனாக இருவரும் தங்களது தவறை உணர்ந்தனர். அவர்கள் இனி தங்கள் குழந்தையோடு புது வாழ்க்கையை தொடங்க போகிறார்கள் என்றார்.

வெளியே வந்த கோபிகா, ‘கணவரோடு சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

கண்ணன் கூறுகையில், ‘ஒரு சிலரின் தூண்டுதல்தான் இந்த பிரச்னைக்கு காரணம்’ என்றார்.

லேட்டஸ்ட் கள்ளக்காதல் கொலை

அவனியாபுரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, பெருங்குடியைச் சேர்ந்தவர் முருகேசன்(45); தள்ளுவண்டியில் ஜூஸ் கடை நடத்தினார்.

மனைவி செல்வி (29). இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜெய்ஹிந்புரம் சத்துணவு மையத்தில், செல்வி சமையல் உதவியாளராக உள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் அவனியாபுரம் அருகே கரிசல்குளத்தில் குடியிருந்தபோது, செல்விக்கும், கொத்தனார் சக்திவேல் (20) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது தெரிந்ததால் பெருங்குடியில் குடும்பத்துடன் முருகேசன் குடியேறினார். ஆனாலும், செல்வியின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு முருகேசன் வீடு திரும்பினார். கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. சந்தேகப்பட்டு கதவின் மேல் இருந்த பெரிய துவாரம் வழியே வீட்டிற்குள் குதித்தார். அங்கு, செல்வியுடன் சக்திவேல் இருந்ததைக் கண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

“வெளியில் தெரிந்தால் அவமானம்’ எனக்கருதி அவரை கொலை செய்ய செல்வியும், சக்திவேலுவும் முடிவு செய்தனர். தான் கொண்டு வந்த பட்டாக்கத்தியால், முருகேசனை பல இடங்களில் சக்திவேல் வெட்டினார். பின் கழுத்தை அறுத்து கொன்றார்.

உடலை, ஜூஸ் கடை தள்ளுவண்டியில் வைத்து சுடுகாட்டிற்கு கடத்தினர். ஆள்நடமாட்டம் இருந்ததால் நடுரோட்டில் நிறுத்திவிட்டு இருவரும் தப்பினர். இதுகுறித்து முருகேசன் தந்தை காந்திக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து செல்வி கொலை செய்திருக்கலாம் என்று அவர், போலீசில் புகார் செய்தார்.பரம்புபட்டி ரோட்டில் பதுங்கியிருந்த அவர்களை, திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலத்தில், “கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை கொலை செய்ததாக’ செல்வி தெரிவித்துள்ளார். அதே போல சக்திவேலுவும் தெரிவித்துள்ளார்.

தொடரும் கள்ளக்காதல் கொலைகள்:

சமீபகாலமாக கள்ளக்காதல் தொடர்பாக கொலைகள் நடப்பது அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், விளாத்திக்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுருபர ராமநாதன் சகோதரர் ராஜராஜனை, கள்ளக்காதலன் ஷாஜகானுடன் சேர்ந்து மனைவி கிருஷ்ணகுமாரி கொலை செய்தார்.

கடந்த 4ம் தேதி மதுரை யாகப்பா நகரில் சந்தேகத்தின் பேரில் மனைவி தமிழச்செல்வியை, ரவுடி பாண்டி கொலை செய்தார். ஜூலை 29ல் பொன்மேனியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன் கிருஷ்ணமூர்த்தியை, காதலனுடன் சேர்ந்து தாயார் மேரி கூறு கூறாக வெட்டி கொலை செய்தார். இந்த பட்டியலில் தற்போது செல்வியும், சக்திவேலுவும் சேர்ந்துள்ளனர்.

==============

கள்ளக்காதல் கொலைக்கு வக்காலத்து வாங்கும் ஆச்சி மனோரமாவும், கள்ளக் காதல் தெரியவந்ததால் வெளியேற்றப்பட்டு பிறகு கணவன் மீது 498A, DVAct போன்ற வழக்குகளைப் போட்டு ரவுசு பண்ணும் பெண்ணைத் தூண்டி விட்டு பாலிடிக்ஸ் செய்யும் விஜயகாந்த் போன்றவர்களும் தங்கள் குறுகிய சுயநலனுக்காக முனைந்து நின்று நம் நாட்டில் திருமணம், குடும்ப வாழ்வு, குழந்தைகள் நலன், பண்பாடு போன்ற அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்க முற்படுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கள்ளக்காதல் கொலை ஸ்பெஷல்

வார இறுதியில் வலைப்பதிவு வாசகர்களாகிய உங்களுக்கும், அரசியல் குட்டையைக் குழப்பி அதிலிருந்து எப்படி மீன் பிடிப்பது என்று விளங்காமல் இன்னும் மேன்மேலும் குழம்பிக் கொண்டிருக்கும் “கேப்டன்” [*] மற்றும் இப்போது அந்தக் குட்டையில் இறங்கத் துடித்துக் கொண்டு வாயில் வந்ததை பினாத்திக் கொண்டிருக்கும் மனோரமா (“ஆச்சி” இல்லை, இல்லை “மறத்தி”!) போன்றோருக்கும் சில கள்ளக் காதல் + கொலை செய்திகளை சமர்ப்பிக்கிறோம்! (கொஞ்சம் பழசு, அட்ஜஸ்ட் பண்ணிக் கோங்க!)

[*](அதென்ன கேப்டன்? எந்த ராணுவத்தில் கேப்டனாக இருந்தார்? அல்லது எந்தக் கப்பலில்? அல்லது சின்ன வயதில் தீபாவளியன்று “கேப்” மட்டும் வெடிப்பதில் எக்ஸ்பர்ட் என்பதால் “கேப்டன்” என்ற பட்டம் கிட்டியிருக்குமோ? எப்படியோ போகட்டும்; நமக்கு வேலையிருக்கிறது. இதை எழுதி முடிப்பதற்குள் இன்னும் இரண்டு பெண்குலத் திலகங்கள் தங்கள் கள்ளக் காதலர்களுடன் கூட்டுச் சேர்ந்து தன் பெற்றோரையும் பெற்ற குழந்தைகளையும் கொலை செய்து ஏரக் கட்டியிருப்பார்கள்!)

க.கா+கொ – 1

மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த மகளைக் கொன்று விட்டு, அந்தப் பழியை கணவர் மீது போட்டு சிறையில் தள்ளி விட்டு, மருமகனுடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரையை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்த பரபரப்பு விவரம்…

மதுரை பைபாஸ் சாலை சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். 65 வயதாகும் இவரை பாம்பே பரமசிவம் என்றுதான் அழைப்பார்கள். மும்பையில் பல காலம் வசித்து வந்த பரமசிவம், மும்பை தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராகவும் இருந்துள்ளார்.

பின்னர் மதுரை திரும்பிய பரமசிவம் ஹோட்டல்களை வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சங்கம்மாள். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மகள் உள்ளார்.

முதல் மனைவி இறந்த பின்னர் மேலூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (50) என்ற பெண்ணை 2வது கல்யாணம் செய்து கொண்டார். பாக்கியலட்சுமி, பரமசிவத்திற்கு உறவுக்காரப் பெண் ஆவார்.

பாக்கியலட்சுமிக்கு வரலட்சுமி, மீனா என இரு மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர்.

வரலட்சுமியை, காண்டிராக்டரான ராஜமாணிக்கம் (இவருக்கு வயது 38) என்பவரைக் கல்யாணம் செய்து வைத்தனர். பிரசவத்தின்போது வரலட்சுமி எதிர்பாராதவிதமாக இறந்து போனார்.

இதனால் ராஜமாணிக்கம் மனைவியை இழந்து வாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டுக்குச் சென்று அவ்வப்போது ஆறுதல் கூறுவாராம் பாக்கியலட்சுமி. ஆறுதல் கூறப் போன அவருக்கும், மருமகனுக்கும் இடையே தகாத தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கள்ளக்காதலில் வீழ்ந்தனர்.

இந்த உறவு இருவருக்கும் பிடித்துப் போக இப்படியே இருந்து விடலாம் என தீர்மானித்தனர். இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டுமானால், அதற்கு நீங்கள் மறுபடியும் எனது வீட்டுக்கே மருமகனாக வர வேண்டும் என்று கூறிய பாக்கியலட்சுமி, தனது 2வது மகள் மீனாவை, கல்யாணம் செய்து வைப்பதாக ராஜமாணிக்கத்திற்கு உறுதியளித்தார்.

பின்னர் தனது கணவரிடம் பேசி அவரது சம்மதத்தைப் பெற்று மீனாவை, ராஜமாணிக்கத்திற்கு 2வது திருமணம் செய்து வைத்தார். இதன் மூலம் எந்தவிதத் தடையும் இல்லாமல் பாக்கியலட்சுமி, ராஜமாணிக்கம் கள்ளத் தொடர்பு தொடர்ந்தது.

தனது கணவருக்கு மும்பையில் உள்ள சொத்துக்களை அப்படியே அபகரிப்பதற்காக, அவரது முதல் தாரத்து மகளான ஜெயலட்சுமியை, தனது தம்பிக்கே கட்டி வைத்துள்ளார் பாக்கியலட்சுமி.

அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்துள்ளனர். மீனா மூலமாக தனது மாமியாருடன் நெருங்கி விட்ட ராஜமாணிக்கம், தங்கு தடையில்லாமல் இந்த முறையற்ற காம லீலையில் ஈடுபட்டு வந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருப்பார்களாம். அடிக்கடி கோவிலுக்குப் போவது, விசேஷங்களுக்குப் போவதாக கூறி விட்டு ஊர் ஊராக போய் ஜாலியாக இருந்துள்ளனர்.

ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ராஜமாணிக்கமும், பாக்கியலட்சுமியும் ஜாலியாக இருந்துள்ளனர். அப்போது மீனா அங்கு வந்து விட்டார். தனது தாயும், கணவரும் இருந்த கோலத்தைப் பார்த்து அவருக்கு இதயமே வெடித்து விட்டது போலாகி விட்டது.

இப்படி அசிங்கமாக நடந்து கொண்டு விட்டீர்களே என்று தாயிடமும், கணவரிடமும் கண்ணீர் வீட்டுக் கதறியுள்ளார். ஆனால் இருவருமே அதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளவில்லையாம்.

மகள் பார்த்து விட்டாளே என்று எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் மருமகனுடனான கள்ளத் தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார் பாக்கியலட்சுமி. ராஜமாணிக்கமும் மனைவியைக் கண்டுகொள்ளாமல் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் தாயுடனான கள்ளக் காதலை விடுமாறு கணவரிடம் வற்புறுத்தி வந்துள்ளார் மீனா. ஆனால் அவர் கேட்பதாக இல்லை. இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பரமசிவம் வீட்டின் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். பாக்கியலட்சுமி வெளியில் போயிருந்தார். மாமியாருடனான சந்தோஷ உறவுக்கு இடையூறாக இருக்கிறாளே என்று ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம், மீனாவின் கழுத்தை சேலையால் நெரித்துள்ளார்.

அந்த சமயத்தில் பாக்கியலட்சுமி வீட்டுக்கு வந்தார். மகளின் கழுத்தை மருமகன் நெரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர், மருமகனுடன் சேர்ந்து மகளைக் கொலை செய்தார். பின்னர் இருவரும் மீனாவை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது போல செட் செய்து விட்டு வீட்டுக் கதவை வெளியில் பூட்டினர்.

பிறகு வெளியிலிருந்து வீட்டுக்கு வந்தது போல காட்டிக் கொண்டு மகள் தற்கொலை செய்து விட்டதாக கூறி கதறி அழுது நாடகமாடினர். சப்தம் கேட்டு கீழே இறங்கி வந்த பரமசிவத்தைப் பார்த்து, மகளிடம் மோசமாக நடந்து கொள்ள� முயன்றார், ஆனால் மீனா மறுக்கவே அவளைக் கொலை செய்து விட்டதாக அசிங்கமான புகாரை தனது கணவர் மீது சுமத்தினார் பாக்கியலட்சுமி.

இதையடுத்து போலீஸார் அப்பாவியான பரமசிவத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைக்குப் போன பிறகுதான் தனது மனைவி மற்றும் மருமகனின் மோசமான நடத்தை பரமசிவத்திற்குத் தெரிய வந்தது.

மகளைக் கொன்று விட்டு, கணவரையும் சிறைக்கு அனுப்பி விட்ட சந்ேதாஷத்தில் இருந்த பாக்கியலட்சுமி, மருமகனுடன் முன்பை விட படு தீவிரமாக உல்லாசம் அனுபவித்தார். அது மட்டுமல்லாமல் அவருடன் ஜோடி போட்டுக் கொண்டு ஊர் ஊராக போய் ஜாலியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், தனது மனைவி மற்றும் மருமகனின் நடத்தை குறித்து போலீஸில் விரிவாக சொல்லி இருவரையும் கைது செய்ய வைக்க பரமசிவம் சிறையில் இருந்தபடியே நடவடிக்கை மேற்கொண்டார்.

இது ராஜமாணிக்கத்திற்குத் தெரிய வந்தது. இதையடுத்து வழக்கை திசை திருப்புதவற்காக மீனா வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார்.

அதன்படி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் ராஜமாணிக்கம், பாக்கியலட்சுமியின் குட்டு வெளிப்பட்டது. இருவரின் கள்ளக்காதலும் வெளி வந்தது.

இதையடுத்து வாடிப்பட்டியில் பாக்கியலட்சுமியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். ராஜமாணிக்கம் தலைமறைவாகி விட்டார்.

அவர் தற்போது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று நீதிபதி ராஜசூர்யா முன்பு விசாரணைக்கு வந்தது.

தனது மனுவில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நானும், எனது மாமியாரும் சேர்ந்து மீனாவைக் கொன்றதாக சிபிசிஐடி போலீஸார் செய்தி பரப்பியுள்ளனர். இது கிரிமினல் அவமதிப்புச் செயலாகும்.

எனவே சிபிசிஐடி போலீஸ் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த வாதத்தை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, சிபிசிஐடி மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கினார். மேலும், இந்த வழக்கு தொடரப்பட்டால், அன்றைய தினமே முன்ஜாமீன் மீதான மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.

செய்தி – தட்ஸ்தமிழ்.

—————

க.கா+கொ – 2

கணவனை கொலை செய்துவிட்டு கள்ளக் காதலனான தனது வீட்டு டிரைவருடன் தப்பியோடிய பெண் காதனுடன் தற்கொலை செய்து கொண்டார்.


குற்றாலம் வைரம் நகரில் உள்ள லாட்ஜில் நேற்று காலை கணவன்-மனைவி என்ற பெயரில் ஒரு தம்பதி அறை எடுத்தது. அவர்கள் தங்கியிருந்த கதவு இரவு 11 மணி வரை திறக்கப்படாததால் ஜன்னல் கதவை விடுதி ஊழியர்கள் திறந்து பார்த்தனர்.

அப்போது அந்த ஆணும் பெண்ணும் மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்டது திண்டிவனத்தைச் சேர்ந்த கள்ளக் காதல் ஜோடி தாமோதரன் என்ற சண்முகநாதன் (32) மற்றும் வைதேகி (35) என தெரியவந்தது.

இந்த வைதேகி பெண் போலீஸாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திண்டிவனத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான வழக்கறிஞர் நடராஜன் என்பவரது மனைவி ஆவார். இருவரும் காதல் திருமணம் முடித்தவர்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந் நிலையில் தான் தனது வீட்டு கார் டிரைவரான தாமோதரனுடன் வைதேகிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கள்ளக் காதலை நடராஜன் கண்டித்ததால் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந் நிலையில் போலீஸ் வேலையை வைதேகி ராஜினாமா செய்துள்ளார். தாமோதரனும் வேலையை விட்டு நீக்கப்பட்டார்.

ஆனாலும் நடராஜன் வெளியே சென்றுவிடும்போதெல்லாம் தாமோதரன் வைதேகி வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இதை அறிந்த நடராஜன் வைதேகியை கண்டிக்கவே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந் நிலையில் கடந்த 3ம் தேதி நடராஜன் தனது படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஆரம்பித்தனர். இதையடுத்து வைதேகியும், தாமோதரனும் தலைமறைவாயினர். இதனால் நடராஜனை மனைவியும் கள்ளக் காதலனும் தான் கொலை செய்திருக்க வேண்டும் எனக் கருதிய போலீசார் அவர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தான் இந்த கள்ளக் காதல் ஜோடி ஒவ்வொரு ஊராக சுற்றிவிட்டு கடைசியாக குற்றாலத்துக்கு வந்து லாட்ஜில் தங்கியுள்ளனர். எப்படியும் போலீசாரிடம் பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்கள் தூக்கு போட்டுக் கொண்ட அறையில் இருந்து வைதேகி எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில், எங்கள் தற்கொலைக்கு யார் தூண்டுதலும் காரணம் இல்லை. எங்கள் படத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தனது திண்டிவனம் வீட்டு போன் நம்பர் மற்றும் திண்டிவனம் காவல் நிலைய எண்ணையும் எழுதி வைத்துள்ளார்.

செய்தி – தட்ஸ்தமிழ்

திமுக முன்னாள் எம்.எல்.ஏயின் தம்பியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி கொலையில் மனைவி, கள்ளக்காதலன் கைது. பரபரப்பு வாக்குமூலம்

விளாத்திகுளம், செப்.25- 2009. செய்தி – தினத்தந்தி, தினமலர்

முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் சங்கரராமு மகன் குட்டி என்ற ராஜராஜன் (வயது 40). விவசாயி.

இவருக்கு கிருஷ்ணகுமாரி (36) என்ற மனைவியும், கோகுல் (13) என்ற மகனும், ரம்யா (8) என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமாரி சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.

ராஜராஜனின் அண்ணன் குமரகுருபர ராமநாதன் விளாத்திகுளம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவார். இவர் தற்போது ம.தி.மு.க. மாவட்ட பொருளாளராக உள்ளார். ராஜராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் ராஜராஜன் கொலை தொடர்பாக அதே ஊரை சேர்ந்த ஷாஜகான் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ஷாஜகான் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த ஊர் அரியநாயகிபுரம். எனக்கு திருமணம் ஆகவில்லை. 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எங்களது வீட்டின் பக்கத்திலேயே ராஜராஜனின் வீடு உள்ளது. எனவே அவரிடம் பழக்கம் இருந்ததால் அவரது வீட்டிற்கு சென்று அனைவரிடமும் அன்பாக பழகுவேன்.

கடந்த 2 மாதங்களாக ராஜராஜன் மனைவி கிருஷ்ணகுமாரிக்கும், எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஆனால் என்னை யாரும் சந்தேகப்படவில்லை. நான் சென்னையில் ஒரு பழைய இரும்புக்கடையில் வேலை செய்து வருகிறேன். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வேன்.

கடந்த மாதம் நான் சென்னையில் இருந்தபோது கிருஷ்ணகுமாரி, செல்போனில் என்னிடம், தனது கணவர் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார். இந்தநிலையில் கடந்த வாரம் நான் ரம்ஜான் கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்து இருந்தேன்.

அப்போது, தனது கணவரை கொலை செய்தால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்று கிருஷ்ணகுமாரி என்னிடம் கூறினார். இதனால் ரம்ஜான் பண்டிகை அன்று நான், ராஜராஜன் மற்றும் எனது நண்பர்கள் அலியாஸ், ராஜேந்திரன், காளிமுத்து, வேல்சாமி, முருகேசன் ஆகியோர் அரியநாயகிபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மது அருந்தினோம். பின்னர் அனைவரும் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தோம்.

அப்போது மற்றவர்களை அனுப்பிவிட்டு ராஜராஜனை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு வந்து மீண்டும் 2 பேரும் மது அருந்தினோம். இதனால் ராஜராஜன் அதிக போதையில் இருந்தார்.

அப்போது நான் அருகில் கிடந்த உருட்டைக்கட்டையால் ராஜராஜன் கழுத்தில் அடித்தேன். இதனால் படுகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே செத்தார்.

பின்னர் அவரிடம் இருந்த செல்போனை எடுத்து அதில் இருந்த சிம்கார்டை தனியாக கழற்றிக்கொண்டு வந்து கிருஷ்ணகுமாரியிடம், செல்போனையும், சிம்கார்டையும் கொடுத்துவிட்டு ராஜராஜனை கொலை செய்ததை கூறினேன். பிறகு கிருஷ்ணகுமாரியிடம் என்னுடைய ரத்தக்கறை படிந்த சட்டையை கொடுத்துவிட்டு வேறு சட்டை வாங்கி அணிந்து கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்ததில் ராஜராஜனை நான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.

இவ்வாறு ஷாஜகான் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

இதையொட்டி கிருஷ்ணகுமாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் ஷாஜகான் வீட்டில் இருந்த கிருஷ்ணகுமாரியின் தற்போதுள்ள போட்டோ மற்றும் சின்ன வயதில் எடுத்த போட்டோக்களையும் கைப்பற்றினர். கிருஷ்ணகுமாரியிடம் இருந்து ராஜராஜனின் செல்போன், சிம்கார்டை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

இவ்வாறு போலீசார் கூறினர். முதலில், கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என, கிருஷ்ணகுமாரி நாடகமாடினார். போலீசார், “உரிய முறையில்’ விசாரித்தபோது நடந்த சம்பவம் அனைத்தையும் விவரித்தார். கிருஷ்ணகுமாரி, அவரது கள்ளக்காதலன் ஷாஜகானை விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறையிலடைத்தனர்.
===========
மனோரமா, ஆச்சி,
உங்க இயக்கம் என்ன ஆச்சீ?

சினேகாவின் பொய்யால் அப்பாவிக்கு தர்ம அடி

திருச்சியில் மனைவியுடன் நகை வாங்க வந்த ஒரு ஆணை அவர் தன் இடுப்பைக கிள்ளியதாக பொய் சொல்லி சுட்டிக் காட்டினார் நடிகை சினேகா. நடிகை சொன்னால் போதாதா! உடனே அந்தக் கடைச் சிப்பந்திகள் அந்த ஆள்மீது கண்டபடி தர்ம அடி போட்டனர்.

Sharmila இது பற்றி அந்த நபரின் மனைவி ஷர்மிளா கோட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும், கணவரை கண்மூடித்தனமாக தாக்கிய கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கடை ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமாரின் மனைவி ஷர்மிளா கூறுகையில்,

நானும், என் கணவர் சுரேஷ்குமாரும் தீபாவளி பர்ச்சேசுக்காக சின்னக்கடைவீதி சென்றோம். அப்போது, நடிகை சினேகா பங்கேற்ற நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தோம்.

திடீரென, “புளூ கலர் சட்டை போட்டவர், என் இடுப்பைக் கிள்ளினார்” என, சினேகா கூறியதாகத் தெரிகிறது. விழா நடந்த இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் என்னுடன் நின்றிருந்த என் கணவர் சுரேஷ்குமாரை, கடை ஊழியர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில், என் கணவர் சட்டை கிழந்தது. “தவறு ஏதும் செய்யாத என் கணவரை அடிக்காதீர்கள்” என நான் அழுதும், கடை ஊழியர்கள் தொடர்ந்து தாக்கினர்.

“இதைப் பார்த்து ஏன் அடிக்கிறீர்கள்?’ என கேட்ட போலீசையும், கடை ஊழியர்கள் தள்ளி விட்டனர். என் கணவர் மீது பொய்யான புகார் கூறிய நடிகை சினேகா, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளேன்.

நடிகை சினேகா செல்லுமிடங்களில் எல்லாம் பப்ளிசிட்டிக்காக இதுபோன்று நடந்து கொள்கிறார், என்றார்.

இது பற்றி தினமலர் வெளியுட்டுள்ள செய்தியின் முந்தைய பகுதி இது:-

நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்த விவகாரத்தில் பரபரப்பான லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி சின்னக்கடைவீதியில் உள்ள நகைக்கடையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நடிகை சினேகா திருச்சி சென்றிருந்தார். நகைக்கடை விழாவில் கலந்து கொண்ட சினேகாவை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் நகைக் கடை முன் திரண்டிருந்தார்கள். விழா முடிந்ததும் கடை மேடையிலிருந்து, நடிகை சினேகா கீழே இறங்கினார். அப்போது, கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென சினேகாவின் இடுப்பை கிள்ளினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சினேகா, கடை உரிமையாளரிடம், இடுப்பை கிள்ளிய நபரை அடையாளம் காட்டி, கிளம்பிச் சென்றார். இதையடுத்து அங்கிருந்து தப்ப முயன்ற அந்த வாலிபரை கடை ஊழியர்கள் தர்ம அடி கொடுத்து கடைக்கு இழுத்து வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், “வாலிபரை எதற்கு அடிக்கிறீர்கள்?’ எனக் கேட்டனர். ஆனால் கடை ஊழியர்கள் போலீசாருக்கு பதிலளிக்காமல், போலீசாரை ஒருமையில் திட்டி, வாலிபரை இழுத்துச் சென்றனர். பின்னர் வெளியே வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அவர், திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த சுரேஷ்குமார் (34) என்பதும், சினேகாவின் இடுப்பை கிள்ளிய விவரமும் தெரிந்தது.

இதையடுத்து சுரேஷ்குமாரையும், தங்களை ஒருமையில் திட்டிய பாதுகாப்பு பணியாளர்களையும் போலீசார் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் கடை உரிமையாளர்கள் சமாதானப்படுத்தியதால் (அது எந்தவித “சமாதானமாக இருக்கும் என்பதை நீங்கள் சுலபமாக யூகித்துக் கொள்ளலாம்!) அவர்களை விட்டு விட்டு போலீசார் சென்று விட்டனர்.

இதே செய்தியை தினத்தந்தி சிறிது நடுநிலையாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

திருச்சி, செப்.25- 2009

திருச்சியில் நடிகை சினேகாவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை அடித்து உதைத்த நகைகடை காவலாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் உள்ள ஒரு நகைகடையில் நேற்று நடந்த விழாவில் பிரபல நடிகை சினேகா கலந்து கொண்டார். நடிகை சினேகா நகைக்கடைக்கு வந்தபோது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக முன்னோக்கி சென்றனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அப்போது நெரிசலில் அங்கிருந்த ஒரு வாலிபர் சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா இதுபற்றி அங்கிருந்த காவலாளிகளிடம் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை நீலநிற சட்டை போட்டவர் என்று அடையாளம் காட்டியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து நீலநிற சட்டை அணிந்திருந்த ஒரு வாலிபரை கண்டுபிடித்த காவலாளிகள் அவரை இழுத்து சென்று அடித்து உதைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபர் தாக்கப்படுவதை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கடை காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்பு தாக்கப்பட்ட வாலிபரையும், கடை காவலாளிகள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி காவேரி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) என்றும், அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.

இந்த நிலையில் சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

நான் எனது கணவருடன் 24-9-2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை தாக்கியதாக நகைக்கடை காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா நிருபர்களிடம் கூறியதாவது:-

இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு. என் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சினேகா மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன்.

==============================

சினிமா நடிகைகளுக்கு ஏன் இவ்வளவு மவுசு! அவர்கள் தளுக்கி, மினுக்கி, இல்லாததை இருப்பதாக பொய்த் தோற்றங்களைக் காட்டினால்தான் அவர்களின் பிழைப்பு ஓடும். அவர்களில் பலர் மேக்கப் இல்லாமல் பார்த்தால் பயங்கரமாக இருப்பார்கள்.

அது தவிர, ஒரு பெண் “ஐயோ, என்னைக் கிள்கிறானே”, “என் மேல் இடித்து விட்டானே” அல்லது “என்னைக் கையைப் பிடித்து இழுத்து விட்டானே” என்று பொது இடங்களில் கூச்சல் போட்டால் போதும், உடனே வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள் நம் ஜொள்ளு கேசுகள். என்ன ஏது என்று விசாரிக்காமல் தர்ம அடி கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஏன் தான் இப்படி அலைகிறார்களோ!

[படம்: நன்றி – தினத்தந்தி]