தொகுப்பு

Archive for திசெம்பர், 2008

எதிரியை அழிக்க கற்பழிப்பு வழக்கு

டில்லியில் காவல்துறையினரும் உளவியல் நிபுணர்களும் இணைந்து நிகழ்த்திய ஒரு கருத்தாய்வின்படி, டில்லியில் பதியப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு கேசுகள் பொய்யாக சித்தரிக்கப்பட்டவை என்று கண்டறிந்திருக்கிறார்கள். தங்கள் எதிரிகளை பழிதீர்க்க இத்தகைய கற்பழிப்பு வழக்குகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது. சில கேசுகளில் குடும்ப சச்சரவுகளில்கூட வேண்டாதவர்களை துன்புறுத்த ஒரு இளம் பெண்ணை “ஐயோ, கற்பழித்து விட்டானே!” என்று கூச்சலிடச் செய்த நிகழ்வுகளைக் கண்டிருக்கிறார்கள் இந்தக் குழுவினர்.

இன்னும் 15% வழக்குகளில் சில இளம் பெண்கள் தன் இச்சைப்பட்டு செக்ஸில் ஈடுபட்டபின், அதன் பின் விளைவுகளை நினைத்து பயப்பட்டு, சம்பத்தப்பட்ட ஆண்கள்மேல் கற்பழிப்பு புகார்களை அளித்துள்ளார்கள் என்பதும் வெளிவந்துள்ளது.

ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

நீங்கள் நினைக்கலாம், அவர்கள் வேறு வகை வழக்குகளை பதிவு செய்து எதிரிகளோடு சண்டையிட்டிருக்கலாமே, ஏன் கற்பழிப்பு வழக்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், என்று.

இங்குதான் நம் சட்டமியற்றுபவர்களின் முட்டாள்தனம் தெளிவாகிறது. எந்தவித சாட்சியமும் தேவையில்லை, சாட்சியச் சட்டம் (Evidence act) இதில் அமுல் செய்யப்படமாட்டாது. ஒரு பெண்ணோ அவருடைய பெற்றோரோ புகார் கொடுத்தால் போதும், முழுமையாக கூற்றம் நிரூபிக்கப்படக்கூட அவசியமில்லை, குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு (கவனியுங்கள், ஆணுக்கு மட்டும்!) தணடனை என்று சட்டமியற்றினால் அது துர்பிரயோகம் (தவறான பயன்பாடு) செய்யப்படாமல் இருக்குமா?

கற்பழிப்பு, வரதட்சணை சாவு, வரதட்சணை கேட்டு துன்புறுத்தல், மனைவியை தற்கொலைக்குத் தூண்டுதல் (கனவனை மனைவி தூண்டினால் இந்தச் சட்டம் பாயாது) இதுபோன்ற சட்டங்கள் இத்தகைய வகையைச் சார்ந்தவை. இவை அநேகமாக பொய் வழக்குகள்தான். இத்தகைய வழக்கு நடைமுறையில் நிறைய பணம் விளையாடுகிறது.

அசத்தியமேவ ஜயதே!

Advertisements

கள்ளத் தொடர்புச் சட்டம்: திருத்த ஆண்கள் கோரிக்கை

சென்னை: “இந்தியாவில் கள்ளத் தொடர்புகளின் பாதிப்பு பெருகிவிட்டது. இது தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்” என, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமீப காலமாக இந்தியாவில் கள்ளத் தொடர்புகளும், அதன் காரணமாக கொலைகளும் அரங்கேறி வருகின்றன.

இந்தச் சமூக அவலத்தில் தவறு செய்யும் கணவன்,மனைவி மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. அவர்களது குழந்தைகள் அனாதைகளாகி விடுகின்றனர். இது இந்திய கலாசாரத்திற்கு முற்றிலும் விரோதமானது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இப்பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள மத்திய அரசு இந்தியத் தண்டனைச் சட்டம் 497ல் சில திருத்தம் கொண்டுவர முடிவு செய்து, மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுள்ளது.
இதுவரை இந்திய தண்டனைச் சட்டம் 497ல், கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்கள் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். பெண்களுக்கு விதி விலக்களித்து, பாதிக்கப்பட்டவராக பாவித்து விடுவித்ததன் விளைவாக, இன்று இந்தியாவில் கள்ளத் தொடர்புகளின் பாதிப்பு பெருகிவிட்டது. “சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்களை குறைக்க முடியும்’ என்பதை கருத்தில் கொண்டும் இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கவும், கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண் – பெண் இருவரும் தண்டனைக்கு உட்பட்டவர்கள் தான் என்கிற வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசும், மத்திய அரசும் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
செய்தி: தினமலர்

ஒரு பொய் வழக்கின் பாதிப்பு

இபிகோ 498A பிரிவின்கீழ் போடப்படும் பொய் வழக்குகளில் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாகச் சேர்த்துவிடலாம். கணவன், அவனுடைய வயதான பெற்றோர்கள், அவனுடைய உடன்பிறந்த பெண்கள், அவர்களுடைய 2, 3 வயதுக் குழந்தைகள், அண்டை வீட்டுக்காரர்கள், அவர்களுடைய நண்பர்கள், மேலும் (கற்பனையில் ஜோடிக்கப்பட்ட) வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்திய நிகழ்வின்போது, உடனிருந்து அதற்குத் துணை போனதாக தங்களுக்கு வேண்டாதவர்கள் பெயர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தச் சட்டத்திற்குத்தான் விசாரணையே கிடையாதே! புகார் கொடுத்தவுடனேயே, அந்தப் புகாரில் பட்டியலிடப்பட்ட அனைவரையும் – அது 85 வயது மூதாட்டியாக இருந்தாலும் சரி, 3 வயது குழந்தையாக இருந்தாலும் சரி – கைது செய்து லாக்கப்பில் போட்டு விடுவார்கள். அதுவும் வெள்ளியன்று இரவு. அவர்கள் திங்கட்கிழமை கோர்ட்டு திறந்த பிறகுதான் ஜாமீனுக்கு மனு கொடுக்கமுடியும். அங்கும் சென்று அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று கடுமையாக வாதிடுவார்கள்.

இந்த 498A வழக்குகளின் பரிமாணத்தை ஒரு கற்பனை உதாரணத்தின் மூலம் விளக்க முற்படுகிறேன்.

இதுபோல் 498A வழக்குப் போடும் ஒரு மனைவி எல்லா தமிழ் வலைப் பதிவுகளையும் விடாமல் படிப்பவர். “கோண்டு மாமா” என்னும் வலைப்பதிவர் ’தன் “கார்”தான் ஒசத்திக் கார்’ என்று கூவிக் கொண்டிருக்கிறார் என்பதால் அவர்மேல் மிகுந்த கோபம். அவர்மேல் பழி வாங்க இதுதான் தக்க தருணம் என்று முடிவு செய்து அந்தப் பெண்குலத் திலகம், தன் புகாரில் ’பலான “கோண்டு” என்பவர் தன் கணவனின் நண்பர். அவரும் சேர்ந்துதான் என்னைக் கொடுமைப் படுத்தினார்’ என்று சேர்த்து விட்டார்.

அவ்வளவுதான். அவரும் கைது செய்யப்பட்டார். பாவம், அப்போதுதான் அவர் ஒரு வலைப்பதிவர் சந்திப்பில், மைசூர் போண்டாவைப் பிய்த்து சாம்பாரில் தோய்த்து வாயில் போட்டுக்கொண்டு, போண்டாவுக்கு ஸ்காண்டினேவியா மொழியில் என்ன பெயர் என்று விளக்கிக் கொண்டிருந்தார்!

அவரைக் கைது செய்யப் போவதாகக் கூறியவுடன் பாவம் கோண்டு மாமா திகைத்துப் போய்விட்டார். ஆனாலும் சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு, “கைது செய்வதுதான் செய்கிறீர்கள். எப்படியும் நான் சீக்கிறமே ஜாமீன் வாங்கிவிடுவேன். ஆனால் என் வலைப்பதிவுக்குச் சென்று இரண்டு பின்னூட்டம் போட்டு விட்டுச் செல்லுங்கள்” என்று அந்த காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டதாக ஒரு செய்திச் சிதறல்!

(மேலே குறிப்பிடப்பட்ட கதை முழுதும் கற்பனையே)

பிரிவுகள்:498a குறிச்சொற்கள்:, , , , , , , ,

ஐ.பி.எஸ். அதிகாரிக்கு 83 வயதில் விவாகரத்து

டிசம்பர் 28,2008 – நன்றி: தினமலர்

புதுடில்லி: மனைவியை விட்டு பிரிந்து 40 ஆண்டாக தனியாக வாழும் ஐ.பி.எஸ்.,அதிகாரிக்கு 83 வயதில் இப்போது விவாகரத்து கிடைத்துள்ளது.

டில்லியில் வசிப்பவர் கிஷன் பலானி; ஐ.பி.எஸ்., அதிகாரி. இவர் மனைவி விமலா; கருத்துவேறுபாடு காரணமாக நாற்பதாண்டாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்தாண்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு செய்தார் கிஷன்.

இதை விசாரித்த கோர்ட்,”இருவரும் பல ஆண்டாக பிரிந்து வாழ்வதால், இவர்கள் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை’ என்று முடிவுக்கு வந்து, ஆதாரங்கள் அடிப்படையில் கிஷனுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் விமலா அப்பீல் செய்தார். இதன் மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, “எனக்கு மார்பக புற்றுநோய் உள்ளது. இதற்கு என் கணவர், கருத்து வேறுபாடு காரணமாக, மருத்துவ சிகிச்சை அளிக்காமல் மறுத்து வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

மத்திய அரசின் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படி கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், விமலா காலம் தாழ்த்தி, தொடர்ந்து கணவர் மீது புகார் கூறி வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஐகோர்ட்டில் அப்பீல் மீதான இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின், கிஷனுக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து அளித்த குடும்ப நல கோர்ட் உத்தரவை உறுதி செய்தது.

நீதிபதி குப்தா தன் தீர்ப்பில்,”நாற்பதாண்டாக கணவன் – மனைவி என்று எந்த வகையிலும் இருவரும் சேர்ந்திருக்கவில்லை. இந்த நிலையில், உடல் நிலை சரியில்லாத போது, அவருக்கு சிகிச்சை அளிக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், கணவன் மீது தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டிருப்பது சரியல்ல. நாற்பதாண்டாக, தனிமையில் தவிப்பதையும், மன வேதனை அடைந்திருப்பதையும் கணவன் சொல்வதை கோர்ட் ஏற்றுக்கொள்கிறது. அவருக்கு விவாகரத்து அளிப்பது சரிதான் என்றும் முடிவு செய்கிறது’ என்று தெரிவித்தார்.
———————-
நம் நாட்டில் திருமண சட்டங்கள் எவ்வளவு அறிவுக்கு ஒவ்வாததாக அமைந்திருக்கின்றன தெரியுமா!

கணவனைத் தற்கொலைக்குத் தள்ளிய காரிகை

”மனைவியின் பொய்ப்பேச்சை மட்டும் கேட்டு கணவனுக்கு எதிராக காவல்துறை கடுமையாகச் செயல்படும்போது கணவனைக் காப்பாற்றுவது யார்? அந்த ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்!” என்று கூறியபடியே தன் தலையில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு
முயன்றான் ஒரு அப்பாவிக் கணவன்.

இது 2008 டிசம்பர் 24-ம் நாள் சென்னை நீலாங்கரை காவல்நிலையம் முன்பு நிகழ்ந்தது. அந்த கணவனின் பெயர் மோஹன். வயது 38. வெட்டுவான்கனியைச் சேர்ந்தவர்.

ஆனால் அவr தன்மேல் தீயைப் பற்Raவைத்துக்கொள்ளுமுன் ஒரு போலீஸ்காரரால் தடுக்கப்பட்டார். அதன்பின் அந்தக் கணவன் தற்கொலைக்கு முயற்சித்ததற்காக கைது செய்யப்பட்டான்.

அவன் ஏன் தற்கொலைக்குத் துணிந்தான்?

அவனுடைய மனைவி, கணவன் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக அவன்மேல் ஒரு பொய்ப் புகார் அளித்துள்ளாள். அந்தப் புகார் உண்மையானதுதானா என்பதை விசாரிக்காமல் போலீசார் இந்தக் கணவனை கைது செய்ய அவனுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

”நான் தினக்கூலிக்காரன். என் சொல்ப ஊதியத்தில்தான் என் குடும்பம் நடக்கிறது. அன்றாட வாழ்க்கைக்கான தேவைகளுக்கே என் ஊதியம் போதாமல் கஷ்டப்படும் நிலை. ஆனால் திடீரென்று என் மனைவி ரூ.5000 கொடுத்து ஒரு செல்ஃபோன் வாங்கியிருக்கிறாள். அந்தப் பணம் அவளுக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்டதற்காக நான் அவளைக் கொடுமை
செய்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறாள். இந்த நாட்டில் ஒரு பெண் என்ன சொல்கிற்றாளோ, அதுதான் உண்மையாக ஏற்கப்படுகிறது. ஆண்கள் என்றாலே அவர்கள் எல்லோரும் கயவர்கள், கிரிமினல்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். இந்த நிலையைக் கண்டு வெறுத்துப் போய்த்தான் நான்
தற்கொலைக்கு முயற்சித்தேன்” என்கிறார் அந்த மோகன்.

அது சரி, ஒரு மனைவி தற்கொலைக்கு முயற்சித்தால் என்றால்உடனே அவளுடைய கணவனை வளுடைய தற்கொலைக்குத் தூண்டினான் என்று கூறி கைத்து செய்துவிடுகிறார்களே. ஏன் அந்த மனைவியை இந்தக் கேசில் கைது செய்யவில்லை?

நல்ல மனம் படைத்த நண்பர்களே, நீங்கள் அனைவரும் சென்னை போலீஸ் கமிஷன்ருக்கு, போன் மூலமாகவோ, ஈமெயில் மூலமாகவோ, உடனே அந்தப் பெண்ணை கைது செய்யும்படி கோருங்கள்!

சென்னை போலீஸ் கமிஷனர் ஃபோன் நம்பர்: 044-044 – 28511003
ஈமெயில் : cop(@)vsnl.net

சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் : 044 – 23452549
ஈமெயில் : copmount(@)hotmail.com

J2
அடையாறு 044-24913552

செய்தி – மைநேஷன்

மூலம்: டெக்கன் கிராணிகிள்

மகன் செத்தாலும் பரவாயில்லை, புருஷன் மேல் போட்ட வழக்குதான் முக்கியம்!

சென்னை: மூளை செயலிழந்த சேலம் சிறுவனின் உடலுறுப்புகளை தானம் கொடுப்பதில் தந்தை கையெழுத்திட மறுத்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கீதா. இவரது மகன் நாஞ்சில் வளவன் (8). கடந்த திங்கள் கிழமை பள்ளிக்குச் சென்றபோது மயங்கி விழுந்துவிட்டதாக கீதாவிற்கு தகவல் வந்தது. நாஞ்சில் வளவனின் மூளை செயலிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாஞ்சில் வளவனின் உடலுறுப்புகளை தானம் செய்வதாக கீதா கூறினார். சிறுவன், நேற்று அதிகாலை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டான்.
டாக்டர்கள் செய்தது என்ன? : பரிசோதித்த டாக்டர்கள், நாஞ்சில் வளவனின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம் என்றும், சிறுநீரகத்தை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 15 வயது பெண்ணுக்கு பொருத்தலாம் என்றும் தெரிவித்தனர்.

உடலுறுப்பு தானம் பெறுவதற்கு முன், சம்பந்தப்பட்டவரின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்குவது வழக்கம். அது போல் நாஞ்சில் வளவனின் பெற்றோரிடம் கையெழுத்தை டாக்டர்கள் கேட்டனர். தாய் கீதா மட்டும் கையெழுத்து போட்டார். தந்தை வரவில்லை எனக் கூறினர்.டாக்டர்கள், “தந்தையின் ஒப்புதல் கையெழுத்து இருந்தால் தான் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும்; அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இல்லையேல் சட்டசிக்கல் ஏற்படும்’ என்று கூறினர்.

மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள், நாஞ்சில் வளவனின் தந்தை இளங்கோவிடம் டெலிபோனில் பேசினர்.இளங்கோ, தனது மகனின் உடலுறுப்புகளை தானம் செய்ய பேச்சளவில் சம்மதம் தெரிவித்தார். எழுத்துப் பூர்வமாக கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், நாஞ்சில் வளவனின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதை நிறுத்தி வைத்துள்ளது.

இரண்டு ஆண்டு சிறை எதற்கு?

இளங்கோவிற்கும், கீதாவிற்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் இளங்கோ, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கீதா, போலீசில் புகார் செய்துள்ளார். இதன் பிறகு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.வரதட்சணை கொடுமை சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்கில் இளங்கோவிற்கு இரண்டு ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இளங்கோ இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்துள்ளதாக தெரிகிறது. கீதாவும் இளங்கோவிற்கு தண்டனையை அதிகரிக்கக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளாராம்.தன் மீது உள்ள வழக்குகளை வாபஸ் வாங்கினால் வந்து கையெழுத்திடுவதாக இளங்கோ கூறியுள்ளார்.

அதைக் கேட்ட கீதாவும், உறவினர்களும், “நாஞ்சில் வளவன் செத்தாலும் பரவாயில்லை; வழக்கை வாபஸ் வாங்க முடியாது” என்று மருத்துவமனையில் கூச்சலிட்டனர்.மேலும், “மருத்துவமனை நிர்வாகம், நாஞ்சில் வளவன் உடலுறுப்புகளை தானம் பெற்றே தீரவேண்டும்’ எனக் கூறி கீதா, மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து கூச்சலிட்டு, அழுது புரண்டார். அப்போது போலீசார் வந்து கீதாவை சமாதானப்படுத்தி, அப்புறப்படுத்தினர்.
மறுபடியும் டாக்டர்கள் மற்றும் போலீசார், இளங்கோவிடம் பேசினர். அவர்கள், இளங்கோவை அழைத்து வர சேலம் போலீசார் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர்.இளங்கோ வருவாரா வரமாட்டாரா என புரியாத நிலையில், உறுப்பு தானம் பெற ஓர் உயிரும், தானம் அளிக்க போராடிவரும் ஓர் உயிரும் காத்துக் கொண்டிருக்கின்றன.

பிரிவுகள்:498a குறிச்சொற்கள்:, , , , , , , ,

கணவன்-மனைவி பிரச்னை – லஞ்ச பெண் எஸ்.ஐ. கைது

அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் “கட்டப் பஞ்சாயத்து” நிலையங்களாக மாறிவருகின்றன. இதற்கு முன்பே ஒரு இன்ஸ்பெக்டர் லஞ்ச ஊழலில் கைதானார்.

முழுதும் தவறான பயன்படுத்தலுக்காகவே ஒரு சட்டத்தை (Sec 498A of IPC) இயற்றிவிட்டு, அதை அமுல்படுத்தும் துறையினர் யோக்கியர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலுமா?

மிரட்டி காசு பிடுங்கும் கூட்டுக் களவாணித்தனத்திற்காகவே இந்தச் சட்டம் பயன்படுகிறது.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

டிசம்பர் 24,2008 – தினமலர்

சென்னை: கணவன், மனைவி பிரச்னையில் வழக்குப் பதிவு செய்ய 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அனிதா; போலீசாக இருந்தவர், 2004ம் ஆண்டு போலீஸ் இட ஒதுக்கீட்டில் எஸ்.ஐ.,யாக தேர்வானார்.மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அபர்ணா, அழகு கலை நிபுணராக உள்ளார். இவரது கணவர் சதீஷ், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனியாக வாழ்ந்து வந்த அபர்ணாவுக்கு, தொல்லைகள் கொடுத்தார் சதீஷ். “பிரிந்து வாழும் கணவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மயிலாப்பூர் போலீசில் அபர்ணா புகார் கொடுத்தார். எஸ்.ஐ., அனிதா விசாரணை நடத்தினார். மனைவி அபர்ணா மீது, மயிலாப்பூர் போலீசில் சதீஷ் புகார் கொடுத்தார். அப்புகாரை பதிவு செய்த எஸ்.ஐ., புகார் மனு ரசீது கொடுத்தார். அபர்ணா கொடுத்த புகாரை கிடப்பில் போட்டார். இவரது புகாரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்தொகையாக 500 ரூபாய் கொடுத்த அபர்ணா, மீதித் தொகையை பிறகு தருவதாக கூறிச் சென்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ரசாயன கலவை பூசப்பட்ட 500 ரூபாய் லஞ்ச பணத்தை எஸ்.ஐ.,யிடம் அபர்ணா கொடுத்தார். அதை வாங்கிய எஸ்.ஐ., அனிதாவை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் வாடகை வீட்டில் எஸ்.ஐ., வசித்து வந்தார். தனிப்படை போலீசார், எஸ்.ஐ.,யின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
———-

தொடர்பான பதிவுகள்:-

1. கட்டப்பஞ்சாயத்து போலீஸ்
2. பெண் போலீஸாருக்கு ஐகோர்ட்டு சாட்டையடி!
3. வாலிபரின் கையை உடைத்த பெண் போலீஸ்