தொகுப்பு

Archive for ஒக்ரோபர், 2009

தோண்டித் துருவி விசாரிக்காமல் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்கள்

ஏனெனில் இப்போதெல்லாம் பல பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. பள்ளி செல்லும் நாட்களிலேயே காமக் களியாட்டங்கள் கோலாகலமாக நடக்கின்றன. இவைகளுக்குப் பெயர் காதலாம். இத்தகைய கலாசாரச் சீரழிவை சினிமாவும் ஊடகங்களும் திட்டம் போட்டுப் பரப்பி வருகின்றன. ஸ்கூல் யூனிஃபார்மிலேயே நடக்கும் கண்றாவிகளை ஊருக்கு ஒதுப்புறமான இடங்களிலும், வள்ளுவர் கோட்டம் போன்ற பொது அரங்குகளிலும், பார்க்குகளிலும் தினமும் பார்க்க முடிகிறது.

தங்கள் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களையும் செக்ஸ் சார்ந்த நடவடிக்கைகளையும் பற்றி பெற்றோர்களுக்கு அறவே தெரியாது. அவர்கள் ஒரு கற்பனை உலகில் இருப்பார்கள். ஆகையால் அவர்கள் கொடுக்கும் உருவகத்தை வைத்துக் கொண்டு முடிவெடுக்காதீர்கள். “ரோஜா” படத்தில் வருவதுபோல் வெகு சிலர்தான் தகுந்த நேரத்தில் வெளியில் சொல்வார்கள். பல பெண்கள் கல்யாணம் ஒரு பக்கம், கள்ளக்காதல் ஒரு பக்கம் என்று இருந்து விடலாம் என்று திட்டமிட்டு கமுக்கமாக இருப்பார்கள். இன்னும் சில கேசுகளில் பெற்றோருக்கு இத்தகைய பொருந்தாக் காதல்கள் தெரியவந்தபின் கூட கல்யாணம் ஆகிவிட்டால் சரியாகப் போய்விடும் என்று முடிவெடுத்து, மொத்தத்தையும் மறைத்து ஒரு ஆண்மகனைப் பலிகடா ஆக்குவார்கள்.

ஆகையால் ஆண்களும் அவர்களுடைய பெற்றோர்களும் திருமணம் பற்றிய முக்கிய முடிவெடுக்குமுன் உஷாராக நன்கு தீவிரமாக விசாரித்தபின் முடிவெடுக்க வேண்டும். ஜோசியக்காரர்களை நம்பாதீர்கள். ஜோசியம், ஜாதகம் என்பதெல்லாம் வெறும் புரட்டு. அதை வைத்து மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறது ஒரு கும்பல். அவர்களால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம்.

இனி இந்தக் காதல் காவியத்தைப் படியுங்கள்:-

நாளை திருமணம் நடைபெற இருந்த இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்.

2 மாதமாக தாலியை மறைத்து வைத்து பெற்றோருடன் வசித்தார்

கோபிசெட்டிபாளையம், அக். 31 – 2009 – தினத்தந்தி

நாளை திருமணம் நடைபெற இருந்த இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். இவர் 2 மாதங்களாக தாலியை மறைத்து வைத்து பெற்றோருடன் வசித்து வந்து உள்ளார்.

இளம்பெண்

கோபியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். அவருடைய மகள் லட்சுமி (27) (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) 10-ம் வகுப்பு வரை படித்து உள்ள இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

லட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவருடைய பெற்றோர், பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை தேடினார்கள்.

அப்போது பவானியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும், லட்சுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. லட்சுமி-குமாரின் திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை லட்சுமியின் பெற்றோர்கள் தீவிரமாக செய்து வந்தனர். உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அழைப்பிதழும் கொடுக்கப்பட்டு வந்தது.

மாயம்

இந்த நிலையில் வேலைக்கு சென்ற லட்சுமி கடந்த 26-ந் தேதி இரவு வீட்டிற்கு வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை.

எனவே லட்சுமியின் பெற்றோர் இது குறித்து கோபி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் லட்சுமியை தேடி வந்தனர். லட்சுமி வீட்டை விட்டு திடீரென்று மாயமான தகவல் மாப்பிள்ளையின் வீட்டாருக்கு கிடைத்ததால், அவர்கள் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

காதலனுடன் தஞ்சம்

இந்த நிலையில் லட்சுமி நேற்று மாலை கோபி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருடன் வந்தவரை, தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். இது தொடர்பாக லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை குறித்து போலீசார் கூறும் போது,

லட்சுமி வேலை செய்து வரும் பனியன் கம்பெனியில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவரும், லட்சுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் லட்சுமிக்கு, அவருடைய பெற்றோர்கள் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியதால், லட்சுமியும், முத்துப்பாண்டியும் கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் தாங்கள் திருமணம் செய்து கொண்டதை வக்கீலின் மூலம் திருமண ஒப்பந்தம் செய்து உள்ளனர்.

தாலி மறைப்பு

லட்சுமி, தான் காதல் திருமணம் செய்து கொண்டது, பெற்றோருக்கு தெரியக் கூடாது என்பதற்காக வீட்டிற்கு வரும் போது தாலியை கழற்றி மறைத்து வைத்து உள்ளார். இதனால், அவருடைய காதல் திருமணம் பெற்றோருக்கு தெரியவில்லை என்று போலீசார் கூறினர்.

மகள் திருமணம் செய்தது கூட தெரியாமல், அவளுக்கு மாப்பிள்ளை தேடி நிச்சயம் செய்த பெற்றோர், மாயமான மகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து இருப்பது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது லட்சுமி பெற்றோரை பார்க்காமல் முகத்தை திருப்பி வைத்து கொண்டார். இதை பார்த்த அவருடைய பெற்றோர்கள், “உன்னை நம்பி கல்யாண ஏற்பாடு செய்தோம். இப்படி தலை குனிய வைத்து விட்டாயே!” என்று கூறி கதறி அழுதனர்.

காதலனுடன் சென்றார்

காதல் திருமணம் செய்து கொண்ட லட்சுமி தன்னுடைய காதல் கணவன் முத்துப்பாண்டியுடன் வாழப் போவதாக உறுதிப்பட தெரிவித்ததால், போலீசார் முத்துப்பாண்டியுடன் லட்சுமியை அனுப்பி வைத்தனர். (சரி, நிச்சயதார்த்தம் செய்த ஆண் மற்றும் அவனுடைய பெற்றோர் அடைந்த அவமானத்திற்கும், மனச் சஞ்சலத்திற்கும் யார் பதில் சொல்வது? இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனைக் கைது செய்திருப்பார்கள்!)

ஆண் உயிரின் விலை என்ன?

நம் நாட்டில் திருமணமான ஆண்களின் தற்கொலை, பெண்கள் தற்கொலை எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு என்று அரசின் தரவுகளே (தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau)) தெரிவிக்கின்றன. (சுட்டி) ஆனாலும் மணமான பெண்கள்தான் பெருமளவு தற்கொலை செய்து கொள்வது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை சில பெண்ணியவாதிகளும், அவர்கள் சார்ந்த சில என்.ஜி.ஓ இயக்கங்களும் தங்கள் சுயநலத்திற்காகப் பரப்பி வருகின்றன. இந்த மாயத் தோற்றம் ஊடங்கள் மூலமும் திட்டமிட்டுப் பரப்பப்படுவதால் இதை (தமிழக சுகாதார அமைச்சர் உட்பட) பலர் அப்படியே நம்பி விடுகிறார்கள்.

மேலும் ஊடகங்களுக்கும் இது உதவியாக இருக்கிறது. ஏனெனில், “இளம் பெண் தற்கொலை”, “அழகி தற்கொலை”, “மாமியார் கொடுமையால் இளம் மனைவி தற்கொலை” – இப்படியெல்லாம் வெளிவந்தால்தான் அது பரபரப்பான நியூஸ்! “ஆண் தற்கொலை”, “கணவன் மாண்டான்” என்று எழுதினால் ம்ஹூங், அதை யாரும் சீந்த மாட்டார்கள். சாதாரணமாகவே செய்தித்தாள்களில் செய்தி வெளியாவதில் ஒரு அமைப்புமுறை (pattern) இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஒரு சம்பவத்தில் 10 பேர் மாண்டால், “3 இளம் பெண்கள் உட்பட 10 பேர் பலி” என்றுதான் எழுதுவார்கள்!

இத்தகைய பொய்மை பரவுவதால் பலர் ஆதாயம் அடைகின்றனர். “ஐயகோ, இந்த நாட்டில் இன்னமும் ஆயிரக் கணக்கான பெண்கள் ஆண்களின் கைகளில் சிக்கி கொடுமைப் படுவதால் தற்கொலை செய்துகொண்டு மடிகிறார்களே” என்னும் கூப்பாட்டை அணையாமல் ஊதிக் கொண்டிருந்தால்தான் ஐ.நாவைச் சார்ந்த UNIFEM மற்றும் மக்கள் வரிப்பணத்திலிருந்து கணிசமான துகை இந்த நபர்கள் கையில் சிக்கும்! அதை வைத்து பெண்களின் துயர் துடைப்பதாகச் சொல்லிக்கொண்டு, சில மேட்டுக்குடிப் பெண்கள் “பப்”பிற்குச் சென்று தண்ணி போடும் உரிமைக்காகவும், ஏர் ஹோஸ்டஸ்கள் பொய் வழக்கு போடும் உரிமைக்காகவும், குடும்பப் பெண்களை தங்கள் வாழ்வைச் சிதைத்துக் கொண்டு கோர்ட்டு வராண்டாவில் லோலோவென்று அலைய வைக்கவும் போராடுகிறோம் என்று சிலவுக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கலாம்!!

ஆணின் உயிரின் மதிப்பை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்:

(நன்றி: “பெண்கள் நாட்டின் கண்கள்“)

சரி. இப்போது இந்த அப்பாவி ஆணின் தற்கொலைக் கதையை வாசியுங்கள்:

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தபின் புதுமாப்பிள்ளை `திடீர்’ தற்கொலை

தாயாருக்கு உருக்கமான `எஸ்.எம்.எஸ்.’

தாம்பரம், அக்.31- 2009. செய்தி – தினத்தந்தி

சென்னையை அடுத்த குரோம்பேட்டை சாஸ்திரி காலனியை சேர்ந்தவர் யோமஹாசன் (வயது 27). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு சமீபத்தில் உறவினர் பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் இரவு வந்த யோமஹாசன் வீட்டில் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் படுக்கையறையில் தூங்க சென்றவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

யோமஹாசன், இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் தாயாருக்கு எஸ்.எம்.எஸ். டைப் செய்து வைத்திருந்தார். அதில் `எனது சாவுக்கு யாரும் காரணமல்ல, எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுங்கள்’ என்று அதில் இருந்தது.

யோமஹாசன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்காதலனை எரித்துக்கொன்ற அபலைப்பெண்

துறையூர். தினமலர் – 30-10-2009

துறையூர் அருகே கள்ளத்தொடர்பை துண்டித்துக்கொள்வதாக கூறிய கள்ளக்காதலனை எரித்துக்கொன்ற காதலியை போலீஸார் கைது செய்தனர்.

துறையூர் அருகே கண்ணனூரை சேர்ந்த லாரி டிரைவர் சேகர்(35). இவர் கடந்த 27ம் தேதி கண்ணனூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் குழந்தை என்பவரின் சோளைக்காட்டில் எரிந்து கருகிய நிலையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். சேகரின் மர்ம மரணம் குறித்து புலிவலம் போலீஸார் விசாரித்து வந்தனர்.

போலீஸ் விசாரணையில், சேகருக்கும் அதே ஊரை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு தனியே வசித்த தனலட்சுமி(55)க்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிந்தது. இருவருக்கும் கடந்த 15 ஆண்டாக தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் சேகர் மூன்று ஆண்டுக்கு முன் வளர்மதி(30)யை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின்பும் சேகரை தன்னுடன் இருக்குமாறு தனலட்சுமி வற்புறுத்தி வந்ததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

கடந்த 26ம் தேதி இரவு எப்போதும் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் சோளக்காட்டிற்கு சேகரை வருமாறு தனலட்சுமி வற்புறுத்தியுள்ளார். தனலட்சுமி தொல்லை பொறுக்காத சேகர், தனலட்சுமியை கொல்வது அல்லது இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுடன் ஒரு கேனில் மண்ணெண்ணெயுடன் சென்றுள்ளார்.

இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ தங்களுக்குத் தானே தீ வைத்துக்கொள்வது என முடிவு செய்துள்ளனர். அதன்படி, ஒருவர் மீது ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி முதலில் சேகர் மீது தனலட்சுமி நெருப்பு பற்ற வைத்துள்ளார். நிர்வாணமான சேகரின் உடலில் “தீ’ மளமளவென பரவி எரிந்தபோது வலி தாங்காமல் கத்தி அங்குமிங்கும் ஓடியுள்ளார். எங்கே தன்னையும் கட்டிப் பிடிப்பானோ என பயந்த தனலட்சுமி சேகரின் உடைகளை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

சேகரின் மரணம் குறித்து புலிவலம் போலீஸார் நடத்தி விசாரணையில், தனலட்சுமி சேகரை எரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டு வாக்கு மூலமளித்தார். புலிவலம் போலீஸார், தனலட்சுமியை கைது செய்து துறையூர் கோர்ட்டில் நீதிபதி தோத்திரமேரி முன் நேற்று ஆஜர்படுத்தினர். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடப்பட்டதை அடுத்து திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

===========

அன்புள்ள வாசகர்களே,

498A பற்றி பதிவு எழுதத் தொடங்கி விட்டு, கள்ளக்காதல் நிகழ்வுகளைப் பற்றியும் அதனால் விளையும் கொலைகளைப் பற்றியும் விவரிக்கும் காரணம் என்ன என்னும் வினா உங்கள் மனத்தில் தோன்றினால் அதை மறுமொழியில் கேளுங்கள். தகுந்த விடையளிப்பது என் கடமை!

மனைவி ஓடலாம், ஆனால் கணவன் ஓடினால் கைது ஆவான்

காதல் திருமணம் செய்த 3 நாளில் மனைவியை பிரிந்து சென்ற கணவன் கைது

புவனகிரி,அக்.30- 2009. தினத்தந்தி

கடலூர் மாவட்டம் புவன கிரி அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைப் பிள்ளை. இவரது மகள் ஜெயந்தி (வயது 21).இவர் புவனகிரி யூனியன் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார்.

தற்போது கீரப்பாளையம் மேட்டுத்தெருவில் குடியிருந்து வருகிறார்.அப்போது அதே தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன்(21) என்பவருக்கும் ,ஜெயந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.அதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளி யேறி அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

கைது

அதன் பிறகு 3 நாட்கள் ஜெயந்தியோடு குடும்பம் நடத்திய சரவணன் பெருமாத்தூரில் உள்ள அவரது சித்தி வீட்டில் விட்டு சென்றார்.போகும் போது தாலியையும் கழற்றி வாங்கி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.அதை தொடர்ந்து சரவணன் அங்கு செல்லவில்லை. இதனால் தான் ஏமாற்றப் பட்டதை அறிந்த ஜெயந்தி இது பற்றி புவனகிரி போலீசில் புகார் செய்தார்.அதில், தன்னுடைய கணவனை சேர்த்து வைக்குமாறு புகார் கூறினார்.அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் சரவணனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் சரவணன் ஜெயந்தியோடு வாழ மறுத்துவிட்டார். அதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர்.
==================

திருமணம் செய்து கொண்டால் கட்டாயம் மனைவியின் புகாரின் பேரில் எல்லா கணவன்மார்களும் ஒரு நாள் கைது ஆகப் போவது நிச்சயம். சிலருக்கு உடனே சிறப்பு நடக்கும், பலருக்கு 14 ஆண்டுகள் கழித்து நிகழும். ஐயமிருந்தால் “என் வயதான பெற்றோர் நம் வீட்டில் நம்முடன் சேர்ந்து வாழப் போகிறார்கள்” என்று உங்கள் ஆசை மனைவியிடம் சொல்லிப் பாருங்களேன்!

பிரிவுகள்:498a குறிச்சொற்கள்:, , , ,

பிறந்த ஆண் குழந்தையை உதறி விட்டு ஓடிய தாய்!

இனிமேல் இப்படித்தான் நடக்கும். ஆண் குழந்தையைப் பெற்றால் அந்தத் தாய் படப்போகும் துயரங்களை அவர்கள் உணரத் தொடங்கி விட்டனர். இனி ஆண் சிசுக் கொலை பரவலாகும் நிலை நிச்சயம் ஏற்படப்போகிறது. அந்த ஆண் வளர்ந்து பெரியவனாகி அவன் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தபின், மருமகள் போடப்போகும் 498A வழக்குகளில் சிக்கி சிறைக்குப் போகும் அவலத்தையும், கள்ளக்காதல் கொலையையும், அதற்கு அந்த ஆணையே காரணமாக்கும் மனோரமாவின் இயக்க நடவடிக்கைகளையும் தவிர்ப்பது எப்படி என்று தாய்மார்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர்!

இப்போது செய்தியை வாசியுங்கள்:-

தூத்துக்குடி, அக்.30- 2009. செய்தி – தினத்தந்தி

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தாய் உதறிவிட்டு சென்ற ஆண் குழந்தை சமூகநலத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

ஆண் குழந்தை

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி மாலை 61/4 மணிக்கு ஒரு இளம் கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அப்போது அவர் முத்தையாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சகுந்தலா(24) என்ற முகவரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சகுந்தலாவுக்கு மறுநாள் அதிகாலை 21/4 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தாய் ஓட்டம்

இந்தநிலையில் குழந்தையை உதறிவிட்டு சகுந்தலா ஆஸ்பத்திரியில் இருந்து ஓடிவிட்டார். இதனால் தவித்து கொண்டு இருந்த குழந்தையை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தனியாக வைத்து பாதுகாத்து வந்தனர்.

இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை போட்டுவிட்டு ஓடிய தாயை தேடிவந்தனர். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.

ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த ஆண் குழந்தை நேற்று காலை சமூகநலத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிசங்கர் குழந்தையை சமூகநலத்துறை அலுவலர் முத்துநாயகத்திடம் ஒப்படைத்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் விசுவநாதன் உடன் இருந்தார்

ஆகா, இவளல்லவோ தெய்வீகப் பெண்!

நிச்சயமாக இந்தப் புதுமைப் பெண்ணுக்கு கோயில் எழுப்ப வேண்டும். ஏனெனில் நம் நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களின் உன்னத நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டிய கைங்கரியத்தை இவர் செய்துள்ளார். இவளை திருமண சீர்திருத்த இயக்கத்தின் தலைவியாக அமர்த்த நாம் பரிந்துரை செய்யலாம்!

தினமும் நாம் (குறைந்தது அரை டசன் கேசுகளாவது) செய்தித்தாள்களில் வாசிக்கும் செய்தி இதுபோல்தான் இருக்கும். அதாவது – ஒரு அப்பாவிப் பெண்ணைக் காதலித்து கைவிட்டு விட்டான் ஒரு போக்கிரி ஆண். அந்த அபலை காவல் நிலையத்தில் கண்ணீரும் கம்பலையுமாக புகார் கொடுத்தாள். அவளுக்கு ஆதரவாக பெண்கள் இயக்கத் தலைவியும் சென்றார். உடனே அந்த ஆணைக் கைது செய்து சிறையிலடைத்தார்கள்.

அந்தப் பெண் தன் பேட்டியில், “நான் ஒரு உன்னத தமிழ்ப்பெண். என்னைக் காதலித்த அந்த ஆணுடன்தான் நான் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவேன். அவனுடன் திருமணம் நடக்க அவனுடைய பெற்றோர்கள்தான் தடையாக உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் காதலர் நான் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கிறார். அந்த நபர் என் நண்பர்தான். அவருடன் இரவில் நெடுநேரம் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருப்பேன். அதைப்போய் ஒரு குற்றமாகக் கருதி என் காதலர் என்னுடன் சண்டை போட்டார். அதனால்தான் புகார் கொடுத்தேன்” என்றார்.
– இப்படித்தான் இதுபோன்ற காமக் கதைகள் ஓடும். உடனே நம் பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும், “ஐயகோ, அந்தப் பெண்னை கைவிட்டுவிட்டானே காமாந்தகாரன், சண்டாளன், இவனை என்ன செய்தாலும் தகும்” என்று கும்மியடித்து கோலாட்டம் போடுவார்கள்.

சரி அந்த முட்டாள் ஆணின் மீது கேசு போட்டு கைது செய்கிறார்களே, அது எந்தக் குற்றப் பிரிவின் கீழ் என்று விசாரித்தால், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஏமாற்றல், கற்பழிப்பு, பெண்களை பொது இடத்தில் மானபங்கம் செய்தல் இதுபோன்று ஆண்களை ஆண்களாக அவர்கள் பிறந்தத்தற்காகவே குற்றவாளியாக்குவதற்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் 40-க்கும் அதிகமான சட்டங்களில் சிலவற்றைப் போட்டு ஊத்தி மூடி விடுவார்கள்.

ஆனால், அதேபோல் ஒரு பெண் ஒருவனைக் காதல் செய்து விட்டு இன்னொருவனோடு ஓடினால், அதுவும் ஒருவனோடு திருமணம் நிச்சயம் ஆனபிறகு அந்தத் திருமண நாளன்றும், அல்லது திருமணம் முடிந்த பின்பும் இன்னொருவனோடு ஓடினால் அந்தப் பெண்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

ஒரு புண்ணாக்கும் முடியாது. அந்தக் கணவன் வாயில் விரல் போட்டு சப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!

சந்தேகமிருந்தால் “தேவதையைக் கண்டேன்” என்னும் திரைப் படத்தில் தனுஷ் பேசுவதை இந்த வலைப்பதிவில் பாருங்கள்.

ஆகையால் இளைஞர்களே, நீங்கள் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளுங்கள், இதோ இந்த உன்னதப் பெண்ணின் பண்பாடு செறிந்த நடவடிக்கையைக் கண்ட பெருமிதத்துடன்!!

செய்தி – தினமலர். அக்டோபர் 29,2009.

கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்.

திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். (திருமணத்துக்கு முன்பே ஒருவனைக் காதலித்தவள் இன்னொருவனுடன் திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்க்கையை ஏன் கெடுக்கிறாள்? இதற்கு எல்லாம் தெரிந்த “டோண்டு” தான் பதில் சொல்ல வேண்டும்)

இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார்.

கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. “”அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்” என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார்.

“உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார்.” அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.

உஷாவிடம் கேட்ட போது, “என் கணவர் என்னிடம் பணம் கேட்டு அடித்து தகராறு செய்ததால் நான் வெறுத்துப்போய் தாய் வீட்டிற்கு செல்கிறேன். (அட்ரா சக்கை! இதைச் சொன்னால்தானே கேள்வி கேட்கும் கணவனை 498A போட்டு பயமுறுத்தி, அடக்கி வைத்து கள்ளக் காதலுக்கும் சேர்த்து அவனிடமிருந்து மிரட்டிப் பணம் பறிக்க முடியும்! கணவனிடம் சேர்ந்து குடும்பம் நடத்த ஒப்பாமல் ஓடிப்போகும் மனைவிகள், கணவர்களிடமிருந்து பணம் பறிக்க 40+ வித சட்டங்கள் உள்ளன. நீதிபதிகளும், அவள் அதற்கு சட்டடப்படி தகுதியுள்ளவளா என்றெல்லாம் ஆராய்வதற்கு முன்னமையே, “முதலில் மனைவி கேட்ட பணத்தைக் கொடு” என்று தீர்ப்பு அளித்து வருகிறார்கள். பிறகென்ன, கொண்டாட்டம்தான்! கள்ளக் காதல் மனைவிகளுக்கு சட்டங்கள், போலீஸ், பெண்ணியவாதிகள், நீதிபதிகள் போன்றோர் உபயத்தினால் கணவன் காசில் தினந்தோறும் தீபாவளிதான்!. கேடுகெட்ட சமுதாயமய்யா இது!!) எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே காதலன் இருப்பது என் குடும்பத்தாருக்கும்,கணவன் குடும்பத்தாருக்கும் தெரியும். தற்போது காதலன் வேறு பெண்ணை மணந்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், அவருடன் செல்ல வாய்ப்பு இல்லை. நான் என் தாய் வீட்டில் தங்கப்போகிறேன்,” என்றார். (ஆகா, இவளல்லவா, பாரதி கண்ட புதுமைப் பெண்! வாழ்க மனோரமாவின் இயக்கம்!)

=========================

“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, பெண்கள் ஆனந்த முழுச் சுதந்திரம் அடைந்து விட்டார்கள் என்று …”

ஐயோ பாவம் செம்மலை!

1.
அதிமுக மாஜி அமைச்சர் மனைவி-மருமகள் அடிதடி
சனிக்கிழமை, டிசம்பர் 15, 2007

சேலம்: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை குடும்பத்தில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே நடந்த சண்டை வீதிக்கு வந்து கைகலப்பில் முடிந்தது.

சேலத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை. இவர் மனைவி புஷ்பா. இவர்களது மகன் எழில் அமுதனுக்கும், மேட்டூரைச் சேர்ந்த டிஎஸ்பி முத்துசாமி மகள் வாணி பிரீதாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தனது மாமியார் புஷ்பாவும், கணவரும் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் வாணி பிரீதா புகார் செய்தார். அந்த வழக்கு சூரமங்கலத்திற்கு மாற்றப்பட்டது.

அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த வழக்கு ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் எழில்அமுதன்-வாணி பிரீதா இருவரும் விவகாரத்து கேட்டு தொடர்ந்த வழக்கு சேலம் குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக இருதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அப்போது வாணி பிரீதாவுக்கும், அவரது மாமியார் புஷ்பாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் அடிதடியில் முடிந்தது.

இதில் மாமியாரும்-மருமகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் உடன் வந்திருந்த உறவினர்கள் அவர்களை சமாதனப்படுத்தி அழைத்து சென்றனர்.

இதனால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2007/12/01/tn-minister-wife-and-daughter-inlaw-exchange-blows.html

2.
வரதட்சணை கொடுமை வழக்கு: அ.தி.மு.க. எம்.பி. குடும்பத்துடன் ஆஜர்

வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக சேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, தனது மனைவி மற்றும் மகனுடன் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜரானார்.

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் தொகுதி எம்.பி.யுமான செம்மலையின் 2 வது மகன் எழில் அமுதன். இவருக்கும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டிழூரை சேர்ந்த முத்துசாமியின் மகள் வாணி பிரிதாவுக்கும் கடந்த 2004 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் வாணி பிரிதா, தன்னுடைய கணவர் எழில் அமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் மீது மேட்டூர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார்.

புகார் அடிப்படையில் செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் மீது சேலம் அனைத்து மகளிர் கோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபால் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.

அப்போது செம்மலை எம்.பி. இந்த வழக்கு பொய்யான வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்றும் பதில் அளித்தார். இந்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் இந்த வழக்கு விசாரணை 14 ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைக்கப்பட்டது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18458

3.

சேலம், அக் 23-

சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் செம்மலை எம்.பி. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான இவர் மீதும், இவரது மனைவி புஷ்பா, கணவர் எழில்அமுதன் மீதும் அவரது மருமகள் வாணிபிரித்தா வரதட்சணை புகார் கூறி இருந்தார்.

இந்த மனு மீது முதலில் மேட்டூர் போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு ஈரோட்டுக்கு மாற்றப்பட்டது.

பிறகு சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது.

இதனால் இன்று கோர்ட்டுக்கு செம்மலை எம்.பி, மற்றும் மனைவி குடும்பத்தினர் வந்து இருந்தனர். இதை நீதிபதி கோபால் விசாரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் செம்மலை எம்.பி. உள்பட அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.

இதை கேட்ட செம்மலை எம்.பி மற்றும் அவரது வீட்டார் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் செம்மலை எம்.பி கூறியதாவது:-

இந்த தீர்ப்பு குடும்ப கவுரவத்திற்கு கிடைத்த நல்ல அத்தாட்சி. எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி இருந்ததை மக்களும் நம்ப வில்லை, நீதிமன்றமும் நம்பவில்லை. எங்களுக்கு ஏற்பட்ட மன உளச்சலுக்கு இந்த தீர்ப்பு நல்ல மருந்து.

இவ்வாறு அவர் கூறினார்.

மருமகள் வாணிப்பிரித்தா கூறும்போது, மன வேறுபாடு காரணமாக அப்போது பிரச்சினை ஏற்பட்டது. கெட்ட நேரத்தில் நடந்த சம்பவம். இப்போது மன வேறுபாடுகளை நீங்கி கணவருடன் சேர்ந்து வாழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

(அடுத்த முறை 498A வழக்கு போடும்போது “டைட்”டாகப் போடுவார்!)
http://www.maalaimalar.com/2009/10/23164357/SLM05231009.html

பிரிவுகள்:498a குறிச்சொற்கள்:, , , , , ,