தொகுப்பு

Posts Tagged ‘வரதட்சணை’

புது மாப்பிள்ளைகள் தற்கொலை

 1. காரமடை : திருமணம் நடந்து மூன்று நாட்களே ஆன புது மாப்பிள்ளை, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  காரமடை அடுத்த கெம்பனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(32), தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மலர்மணி(29). இவர்கள் இருவருக்கும் கடந்த 6ம் தேதி, குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி மலைக்கோவிலில் திருமணம் நடந்தது. மார்ச் 8ம் தேதி திருமண வரவேற்பு நடந்தது. இதன் பின், 9ம் தேதி இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணகுமார் வீடு திரும்பவில்லை. இவரை காணாமல் தேடிய போது, வீட்டின் அருகேவுள்ள வேலியோரம் இறந்து கிடந்தார். “எனக்கு தாங்க முடியாத அளவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், பூச்சி மருந்து குடித்து விட்டேன்; யாரும் வருத்தப்பட வேண்டாம்,’ என அவர் கடிதம் எழுதி வைத்திருந்ததையும் உறவினர்கள் கைப்பற்றியுள்ளனர். திருமணம் முடிந்த மூன்று நாட்கள் ஆன புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=203366

 2. ================

 3. ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து புது மாப்பிள்ளை தற்கொலை

  திருமங்கலம்: திருமங்கலம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து புது மாப்பிள்ளைதற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் மேலஉரப்பனூரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி (24). இவருக்கும் தேவிகா என்பவருக்கும் கடந்த 15ம் தேதி திருமங்கலத்தில் திருமணம் நடந்தது.

  நேற்று முன்தினம் இரவு கண்மாய்கரை வரை சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றவர் நேற்று வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரயிலில் மோதி தலை துண்டாகி இறந்த வாலிபர் உடல் திருமங்கலம்-மதுரை ரயில்வே தண்டவாளத்தில் கப்பலூர் அருகே கிடப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் இறந்தது சுந்தரபாண்டி என்பது தெரியவந்தது. இது குறித்து மதுரை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=87041

Advertisements

நீதிமன்றங்கள் நிரபராதிகளை பாதுகாக்குமா?

Stop husband suicideஇந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம். செய்தி மடல். 5 (மே, 2011)

“வரதட்சணை வழக்குகளைப் பொறுத்தவரை, புகார் பதிவு செய்யப்பட்டவுடன் எவ்வித புலன் விசாரணையும் செய்யாமல், கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகாரை அப்படியே நகலாக்கி, அதனையே இறுதி அறிக்கையாக (குற்றப் பத்திரிக்கையாக) நீதி மன்றங்களுக்கு அனுப்பிவிடும் வழக்கம் பல காலமாக காவல் துறையில் இருந்து வருகிறது.

இதுபோல் புலன் விசாரணை என்னும் நடைமுறையே இல்லாமல், வெறும் புகாரின் அடிப்படையிலேயே பல அப்பாவி ஆண்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவதால், ‘பொய் வரதட்சணை வழக்குகள் குப்பையைப் போல காவல் துறையால் தினம் தினம் நீதி மன்றங்களில் கொட்டப்படுகின்றன’ என்று டில்லி உயர்நீதி மன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது.

மேலும் வாசிக்க:

குடும்பப் பாதுகாப்பு இயக்க செய்தி மடல் எண் – 5

ஆண்கள் நலம் காக்க முற்படுவீர் அரசியல் கட்சிகளே!

Aimwa Logoஅகில இந்திய ஆண்கள் நல இயக்கம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கைகள் அடங்கிய வேண்டுகோளை இங்கு காணலாம்:

அரசியல் கட்சிகளுக்கு AIMWA முன்வைத்துள்ள கோரிக்கைகள்

AIMWA கோரிக்கைகள் - பக்கம்-2

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பிடிஎஃப் வடிவத்தில் பெற (to download the above letter in PDF format) இங்கே கிளிக் செய்யவும்.

போடுங்கம்மா கேசு, 498A சட்டத்தைப் பார்த்து!

விருதுநகர், அய்யனார் நகரை சேர்ந்தவர் தங்கவேல் மகள் காளீஸ்வரி(22). இவருக்கும் சிவகாசி, ஆறுமுகம் காலனி, ரிசர்வ் லைனை சேர்ந்த கருப்பையா மகன் மணிகண்டனுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

வரதட்சணையாக 10 பவுன் மற்றும் 30 ஆயிரம் தரப்பட்டது.

மூன்று மாதத்திற்கு பின் மேலும் 15 பவுன் மற்றும் 2 லட்ச ரூபாய் கேட்டு கணவர் மணிகண்டன், மாமியார் சீதாலட்சுமி, செல்வி, மகேஸ்வரி, ஆறுமுகம், ஈஸ்வரன் ஆகியோர் கொடுமைபடுத்துவதாக விருதுநகர் ஜே.எம். கோர்டில் காளீஸ்வரி மனு தாக்கல் செய்தார்.

கோர்ட் உத்தரவு படி, ஆறு பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

செய்தி: தினமலர். மார்ச் 17,2011

கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு 498A புகார்

போட்டாய்ங்கய்யா, போட்டாங்கய்யா, 498ஏ கேசு போட்டாங்கய்யா!

இதுபோல் பெரிய மனுஷயங்கய்ய ரொம்பபேர் போட்டாத்தான், இந்த சட்டத்தோட முழு மகத்துவமும் மக்களுக்கும், ஆள்பவர்களுக்கும் புரியும்.

ஆனால் இது போதாது – அரசியர் பிரமுகர்கள், போலீஸ் உயரதிகாரிகள், பிரபல வக்கீல்கள், தீர்ப்பளிப்பவர்கள் – இவர்களையெல்லாம் இது போன்ற 498ஏ கேசுகள் பெருமளவில் என்று தீண்டுகிறதோ, அப்போதுதான் இதற்கு ஒரு விமோசனம் கிட்டும்.

அந்த நன்னாளுக்காக காத்திருப்போமாக!!

இப்போது செய்தி: (தினமலர்: மார்ச் 16,2011)

சிரஞ்சீவியின் மகள் போட்ட 498ஏ கேசுவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, போலீசில் புகார் செய்துள்ளார். மாமனார் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, ஐதராபாத் நகரைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஸ்ரீஜா தெரிவித்தார். பின்னர், ஐதராபாத் பஷீர்பாக் பகுதி மகளிர் காவல் நிலையத்திற்கு ரகசியமாக வந்த சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா, தன் புகாரை மகளிர் போலீஸ் நிலைய ஆய்வாளரிடம் வழங்கினார்.

இதையடுத்து, ஸ்ரீஜாவின் கணவர் ஷிரிஸ் பரத்வாஜ், அவரது தாய், தந்தையை, போலீசார், 14ம் தேதி இரவு கைது செய்தனர். (அதானே பார்த்தேன், 498ஏ போடறதெ இந்த பட்டாபிஷேகத்திற்காகத்தானே!)

காதல் திருமணம்:

சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் ஷிரிஸ் பரத்வாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியின் கடும் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜா, பரத்வாஜ் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீஜாவிற்கு குழந்தை பிறந்த பின், சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி – ஷிரிஸ் பரத்வாஜ் ஆகிய இரு குடும்பத்தினரிடையே பேசியதால் எதிர்ப்பை கை விட்ட சிரஞ்சீவி, மகள் ஸ்ரீஜாவை தன் குடும்பத்தில் இணைத்து கொண்டார்.
(படம் நன்றி – தட்ஸ்தமிழ்)

முந்தைய செய்திகள்:

1. தட்ஸ்தமிழ்:

ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா(21) தனது காதல் கணவர் ஸ்ரீரீஷ் பரத்வாஜ் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீஜா கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எனக்கும், பரத்வாஜூக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். தற்போது எங்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாகவே எனது கணவர் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துகிறார்.

திருமணத்தின்போதும், அதன் பிறகும் என இந்நாள் வரை பல கோடி ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளோம். அதெல்லாம் போதாது என்று தற்போது ரூ. 1.5 கோடி வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்துகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அவரது புகாரின்பேரில் ஸ்ரீஸ் பரத்வாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (ஐபி.சி 498 ஏ) பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
========

2. தினமலர்:

காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார்

மார்ச் 15,2011

ஐதராபாத்: ரூ.1.5 ‌கோடி கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக நடிகர் சிரஞ்சீவியின் மகள் தனது கணவர் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.. ஆந்திராவில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.இவரது இளைய மகள் ஸ்ரீஜா(21) , நேற்று மத்திய குற்றப்பிரிவு மகளிர் போலீசில் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றினை அளித்தார். தனக்கும் (ஸ்ரீஜா) கணவர் ஸ்ரீஸ்பரத்வாஜூக்கும், கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எ‌ன்னை ( கணவர் ஸ்ரீஸ்பரத்வாஜ்) குடித்து விட்டு அடித்து சித்ரவதை செய்கிறார். ஏற்கனவே திருமணத்தின் போதும், பிறகும் என இதுவரை ரூ. பல கோடி வரதட்சணையாக கொடுத்தும் போதாது என்றும், கூடுதலாக ரூ. 1.5 கோடி வரதட்சணை வேண்டு்ம் எனக் கோரியும் அடித்து துன்புறுத்தினார். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீஸ்பரத்வாஜ், மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (ஐபி.சி 498-ஏ) பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவள் இருந்தாலும் சிறை, இறந்தாலும் சிறை – அவனுக்கு!

இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளித்து பெரம்பலூர் முதன்மை அமர்வு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் செந்தூரைச் சேர்ந்தவர் வெள்ளமுத்து. இவரது பேத்தி வேம்பு. இதே பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சிலம்பரசன். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

ஆனால் திடீர் என்று சிலம்பரசன் வேம்புவை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த வேம்பு கடந்த 11.06.2006 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் பெரம்பலூர் முதன்மை அமர்வு கோர்ட் தீர்ப்பளித்தது. சிலம்பரசனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் அளித்து நீதிபதி தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.

செய்தி: தினமலர் : ஜனவரி 19,2011

ஆனால், இதே போல் அந்த ஆண் தற்கொலை செய்து கொண்டிருந்தால்? ஒன்றும் ஆகியிருக்காது; அது செய்திப் பத்திரிக்கையில் கூட இடம் பெற்றிருக்காது. ஏனெனில் இன்றைய சமுதாயத்தில் ஆணினம் தேவையற்றது, காயடிக்கப்பட்ட காளைமாடுகள் போல்!!

ஆண் பாவம் பொல்லாதுங்கோ!

False complaints fo sexual harassment of women“பகுத்தறிவு” பதிவில் கண்ட இன்றைய ஆண்களின் பரிதாப நிலையை விவரிக்கும் ஒரு சிறந்த கட்டுரையின் ஒரு பகுதி:-

ஆனால் இன்றைய மொத்தப் பெண்களும் தங்களுக்குத் தேவையான ஆண் எத்தகையவன் என்று தெரிவு செய்ய அவர்கள் வைத்திருக்கும் அளவு கோல் எது என்பது தான் மிகுந்த உறுத்தலுக்கு உள்ளாகும் விஷயமாக இருக்கிறது. அதாவது இவர்களின் மொத்த அளவுகோலும் பணம் மட்டுமே என்றாகி இருக்கிறது. பணம் பணம் பணம் மட்டுமே அளவு கோல், வேறெதுவும் இல்லை.

நல்ல குடும்பம், படிப்பு, குடும்பத்தைக் காப்பாற்றக் கூடிய நாகரீகமான சம்பளம், அழகு என்று இருந்தாலும் தற்கால பெண்கள் ஆண்களை எக்ஸ்ட்ரா பேக்கேஜுகளுடன் எதிர் பார்க்கிறார்கள். ஆடம்பர வாழ்வை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்பதே அதிகம் உறுத்தலான விஷயமாக இருக்கிறது எனலாம். அடிப்படை வசதிகள் இருந்தாலும் அது போதாது ஆடம்பர வசதிகளுடன் இருப்பவன் தான் வேண்டும் என்ற பேராசை பெண்களிடம் அதிகரித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இளம் பெண் ஒருவர் இப்படித் தெரிவிக்கிறார் “நான் விதவிதமாக ஆடை அணிவேன். ஆடைக்குத்தகுந்த காலனியும் விதவிதமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகும் அப்படி எனக்கு வேண்டியதை எல்லாம் வாங்கித்தரும் ஆண்மகன் தான் வேண்டும்” என்கிறாள். “ஒரு வேளை திருமனத்திற்குப் பின் அப்படி கணவன் வாங்கித்தரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு அவள் சொன்ன பதில் “டைவேர்ஸ் பன்னிடுவேன்.” தற்காலப் பெண்களில் பலருக்கு ஆண்மகன் என்றால் நடமாடும் ஏடிஎம் மிஷின், கேட்டதை வாங்கித்தரும் ஜீ பூம் பா பூதம். தாங்கள் நினைத்துப் பார்த்திராத ராஜ போகத்தைக் கொடுக்கப்போகும் ‘சிண்ட்ரெல்லா’ இளவரசன்.

ஒரு டிவி சீரியலில் வரும் காட்சி, ஒரு ஆண் தன் காதலியிடம் காதலைத் தெரிவிக்கிறான்.அந்தப் எண்ணோ “உன்னிடம் காசிருந்தா சொல்லு கட்டிக்கிறேன், இல்லேன்னா வேறாளப்பாரு” என்று பேசுகிறாள். இவையெல்லாம் தற்கால பெண்களின் மனோநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாகவே இருக்கின்றன.

சில பெண்களுக்கு வெளிநாட்டு மாப்பிளை என்றால் மோகம். இந்த ஆண்மகன் கஷ்டப்பட்டு படிப்பான். அவனது பெற்றோர்கள் வங்கிக்கடனை வாங்கி, வெளிக்கடனும் வாங்கி கஷ்டப்பட்டுப் படிக்க வைப்பார்கள். பின் கண்ட கண்ட கான்ஸ்லேட் வாசலில் நின்று விசா பெற்று, தட்டித் தடுமாறி ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, அங்கே சென்று அறிமுகம் இல்லாத நபர்கள், புரியாத பாஷை என்று எல்லாவற்றையும் கற்று, கையைக் காலைச் சுட்டு சமைத்துச் சாப்பிட்டு, ஊர் ஊராகச் சுற்றி – வாழும் இடத்தைத் தெரிந்து வைத்து ‘அப்பாடா’ என்று இருக்கும் போது, வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேண்டும் என்று மோகம் கொண்ட பெண் நோகாமல் கல்யானம் என்ற பெயரில் இவனைக் கட்டிக் கொண்டு அவனோடு போய் செட்டிலாகி விடுவாள். அவனும் இவளுக்கு டூரிஸ்ட் கைடு போல ஊரெல்லாம் சுற்றிக் காண்பித்து மகிழ்விப்பான்.

இவனைப் பெற்ற அப்பாவி அம்மா அப்பாக்கள் கடைசி வரை தன் பிள்ளை குடியிருக்கும் நாட்டை கம்பியூட்டர் போட்டோக்களில் பார்ப்பது தான் மிச்சமாகியிருக்கும். அனுபவிப்பள் என்னவோ கல்யானம் என்ற வியாபாரத்தில் அமெரிக்க மாப்பிள்ளையை வென்றவளாகத்தான் தான் என்றாகியிருக்கும்.

ஆனால் இதெல்லாம் பேசினால் ஆண்கள் வரதட்சனை வாங்கவில்லையா, நகை கேட்கவில்லையா என்ற முப்பது வருட பழம்பஞ்சாங்கத்தை உடனே கையிலெடுத்துப் படிக்கத்துவங்கி விடுவார்கள். அதையும் பார்ப்போம்.

ஒரு காலத்தில் ஆண்கள் வரதட்சினை கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டானது. அதற்கெதிராக கடுமையான பிரசாரங்களும் வரதட்சினைக் கொடுமைக்கெதிரான சட்டங்களும் உண்டானது. (இப்போது கணவனைப் பழிவாங்க பெண்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல ஆயுதமாக அது உபயோகப்படுகிறது). ஆனால் அத்தகைய காலத்தில் கூட நயா பைசா வரதட்சனை வாங்காமல் ஏழைப் பெண்களை திருமனம் செய்துகொண்ட ஆண்கள் நிறையபேர் இருந்ததுண்டு. அப்படிப் பட்ட ஆண்களை மிக நல்ல குடிமகனாகக் காட்டி திரைப்படங்களும் வந்தன என்றால் மறுக்கமுடியாது.

ஆனால் இன்றைய கல்விகற்ற நாகரீகப் பெண்கள் செய்யும் காரியம் ஆண்கள் செய்த கொடுமைகளைத் திரும்பச் செய்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. பெண் சமூகத்தின் பழிவாங்கும் படலமாக சில பெண்களாலேயே சொல்லப்படுகிறது. அதிக பணம் கொடுப்பவனையே மணமுடிப்பேன் என்று தனக்குத்தானே விலை வைத்துக் கொள்வதில் பெண்களுக்கு எந்த விதத்திலும் குற்ற உணர்ச்சி என்பதே இல்லை எனலாம். இதெல்லாம் எங்கள் சுதந்திரம் என்ற ரீதியில் செயல்படுவது ஆண்களால் உண்டான சமூக பாதிப்பை விட அதிக தாக்கத்தை உண்டாக்குகிறது என்றே என்பதே நிதர்சனம். பெண்கள் இப்படி தனக்குத் தானே விலை பேசி அதற்குத் திருமணம் என்று பெயர் சூட்டிக் கொள்வதை பெண்களின் முன்னேற்றமாகப் பார்க்கும் நிலையில் தான் இன்னும் பெண்ணிய ஆர்வலர்கள் இருக்கிறார்கள். இன்னும் பேசினால் “ஆம்பளைங்க மட்டும் அந்தக்காலத்தில் செய்யவில்லையா?” என்று கேட்பார்கள்.

ஒரு விஷயத்தை இதில் குறிப்பிட வேண்டும். அந்த காலத்தில் வரதட்சனை வாங்கி திருமணம் செய்யும் ஆண்களை விலைக்கு விற்கப்படும் மாடுகள் என்றும், காசு வாங்கி பிள்ளையைக் கொடுக்கும் ஆண்களின் பெற்றோர்களை, பிள்ளைகளை விற்கும் வியாபாரிகள் என்றும் பெண்கள் அழைத்தனர். பல சினிமாக்கள், டிவி நாடகங்கள் எல்லாம் ஆண்களையும் அவர்தம் பெற்றோர்களையும் இப்படி ஏசித்தான் ஒரு குற்ற உணர்ச்சியை உண்டாக்கினார்கள்.

சரி அப்படியென்றால் இந்தக்காலத்தில் அதிக மாதச்சம்பளம் கொடுக்கும் ஆணுக்குத் தான் என்னைத் தருவேன் என்றும், சொந்த வீடும் சொகுசு வாழ்க்கையும் கொடுக்கும் ஆண் யாரோ அவனுக்குத் தான் என்னைத் தருவேன் என்று கூறும் பெண்ணையும் கன்னித்தன்மை வியாபாரிகள் என்று ஏன் சொல்லக்கூடாது? மாதம் இவ்வளவு பணம் தர முடிந்தால் தான் என்னைத் தருவேன் என்று கூறும் பெண்களை வாடகை மனைவிகள் என்று ஏன் அழைக்கக்கூடாது? கல்யானம் என்ற பெயரில் கன்னித் தன்மை வியாபாரம் செய்யத்தான் பெண்கள் கல்விகற்றார்களா? என்ற கேள்வி எழுகிறது. சொகுசான சுகபோகம் கொடுக்கும் பணம் வாய்த்தவனுக்கே என்னைத் தருவேன் என்று கூறும் குடும்பப் பெண்ணுக்கும், பணம் கொடுத்தால் என்னைத் தருகிறேன் என்று கூறும் வேசிப்பெண்ணுக்கும் வித்தியாசம் என்ன இருக்க முடியும்?. ஒரே ஒரு வித்தியாசம் தான். முன்னவளுக்கு ‘மன்த்லி பேமென்ட்’, பின்னவளுக்கு ‘ஒன் டைம் பேமென்ட்’. காசில்லாதவனுக்கு ரெண்டுமே கிடைக்காது. அது தானே நிதர்சனம். காசில்லாமல் கூப்பிட்டால் வேசியும் கிடைக்கமாட்டாள், பெண்டாட்டியும் கிடைக்கமாட்டாள் என்றால் இருவகைப் பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என்று விளங்கவில்லை.

ஆனால் இன்றைய கல்யாணச்சந்தை இது தான். அது தான் நிதர்சனம். இன்றைய கல்யாணங்கள் பெண்களாலேயே நிச்சயிக்கப்படுகிறது. ஆம், கல்யாணம் என்ற பெயரில் கன்னித்தன்மை வியாபாரம் நடக்கிறது. பணமிருப்பவன் வாங்குவான். பணமில்லாதவன்….???

இதில் பரிதாபம் என்னவென்றால், வரதட்சனைக் கொடுமைக்காக பேசுவதற்கு ஊடகங்கள், சினிமாக்கள், மாதர் சங்கங்கள், அரசியல் தலைவர்கள் என்று அனைவரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் இன்றைய பெண்கள் கல்யாணம் என்ற பெயரில் நடத்தும் கன்னித்தன்மை வியாபாரத்தை விமர்சித்து எழுதவோ, பேசவோ எந்த ஊடகங்களோ, அரசியல் தலைவர்களோ சமூக ஆர்வலர்களோ இல்லை. தாய்குலத்திற்காக பேசினால் ஓட்டு கிடைக்கும், படம் எடுத்தால் ஓடும். ஆனால் ஆண்களுக்காக பேசினால் காசு பேராது. தேங்காய் மூடி கேஸாகிவிடும். போதாக்குறைக்கு மாதர்குல திலகங்களின் எதிர்ப்புகளையும் வாங்க வேண்டியிருக்குமே! அதனால் அமைதி காக்கின்றனர் போலும்.

ஆண்கள் கூட பெரும்பாலும் இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச வெட்கப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. வெளிப்படையாக தாங்கள் திருமணம் செய்ய கஷ்டப்படுகிறோம் என்று கூறிவிட்டால் பெண்களிடம் தோற்றுப்போய் விட்டோம் என்ற தோற்றம் உண்டாகிவிடுமே என்ற ஈகோ தடுக்கலாம்! அதனாலேயே நிறைய ஆண்கள் இது விஷயமாக வெளிப்படையாக வாய்திறப்பதில்லை.

அப்படியென்றால் பணம் குறைவாக இருக்கும் ஆண்கள் யாருக்கும் திருமணம் நடப்பதே இல்லையா! நல்ல பெண்களே கிடையாதா என்று கோபப்பட்டு கும்மியடிக்க கிளம்பி விடாதீர்கள். மேலே சொல்லப்பட்டவை எல்லாம் இன்றைய கல்யாணச் சந்தையின் பொது விதிகள். தங்களிடமே குறை இருக்கும் பெண்கள் சில சமரசங்களுடன் சில ஆண்களை ஏற்றுக்கொள்கிறார்கள். மனப்பூர்வமாக வாழ்கிறார்களா என்பது பெண்களுக்கே வெளிச்சம்! இல்லையென்றால் முருங்கை மரம் தான்! ஒரு சில விதி விலக்குகளும் அவரவர் நிறை குறைகளுக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து கட்டிக்கொள்வதும் ஆங்காங்கே சமூகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் பொதுவான சமூகத்தின் நிலையென கொள்ள முடியாது.

இங்கே சொல்லப்பட்டவை எல்லாம் இன்றைய சமூகத்தில் நடுத்தர குடும்பங்களின் ஆண் பிள்ளைகளும் அவர்தம் குடும்பங்களும் எதிர் கொள்ளும் சங்கடங்களைப் பற்றிய ஒரு அலசலே!

இந்தப்பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு திருமணம் என்பதன் செலவைக் குறைக்க மொத்த சமூகமும் முடிவு செய்ய வேண்டும். திருமணம் என்பது வீட்டு விசேஷம் என்ற நிலை வரவேண்டும். அவரவர் வீட்டுப் பூஜை அரையில் பெற்றோர், அவர் உடன் பிறந்தோர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் என்ற சிரிய வட்டதின் முன்பாக ஒரு மாலையை மாற்றினோமா அவரவர் விருப்பப்படி தாலி கட்டுவதோ, மோதிரம் போடுவதோ செய்துகொண்டு அப்படியே வீட்டிலேயே சப்பிட்டு அடுத்த நாள் காரியத்தைப் பார்த்தோமா என்று இருக்கத் துவங்கினால் திருமணம் என்பது எல்லோருக்கும் எளிதாக நடக்கும். ஆனால் திருமணம் என்பது ஒரு சமூக நிகழ்வாகவும், கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டு விட்டதால் அந்நிகழ்வு அதிக செலவு பிடிக்கும் காரியமாகிவிட்டது.

சில லட்சங்கள் செலவு செய்து திருமணம் செய்ய வேண்டி இருப்பதால் தங்கள் குடும்பத்திற்கு வரப்போகும் வரன் அந்த அளவிற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு உண்டாகிறது. இதுவே பின்னால் ஒரு வரன் தேடும் குறியீடாக மாறி சமூகத்தைப் பாதிக்கிறது. செலவில்லாத் திருமணமே இப்பிரச்சனைக்கு ஒருவகையில் தீர்வாக அமையக்கூடும். பஞ்சாபில் சீக்கிய குருமார்கள் ஒரு சட்டத்தைப் பிறப்பித்தார்கள். அதாவது அதிக செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்வது தடை செய்யப்படுகிறது என்றும், திருமணம் மிக எளிமையாகவே நடக்க வேண்டும். மீறுவோர் தமது மதக்கோட்பாடுகளை மீறுவதாக விலக்கி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தனர். காரணம் கல்யாணம் காஸ்ட்லியாகி விட்டால் காசில்லாதவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதே!

எது எப்படியோ…! கணவன் மனைவி என்ற தாம்பத்திய உறவை முடிவு செய்ய பணம் மட்டுமே அளவுகோலாக பார்க்கப்படக் கூடாது என்பதை இருபாலரும் உணர்ந்தாலொழிய இதற்குத் தீர்வு கிடைப்பது கஷ்டமே!

ஆண் பாவம் கூட பொல்லாததுங்கோ!

நன்றி: பகுத்தறிவு பதிவு.