தொகுப்பு

Posts Tagged ‘ராமாத்தாள்’

மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை

செய்தி: தினமலர் மே 18,2010.

சென்னை : மாமியார் கொலை வழக்கில், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தா (70). இவருக்கு நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரு மருமகள் லட்சுமி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர்களை சரிவர கவனிப்பதில்லை என, மருமகள் லட்சுமியை சாந்தா கண்டிப்பார். இதனால், மாமியார் சாந்தா மீது லட்சுமிக்கு கோபம் ஏற்பட்டது. பூஜை அறையில் சாமி கும்பிடும் போது, சாந்தாவை கத்தியால் லட்சுமி குத்தினார். படுகாயமடைந்த சாந்தா, அங்கேயே இறந்தார்.

2007ம் ஆண்டு மே மாதம் இச்சம்பவம் நடந்தது. லட்சுமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கை, சென்னை மகளிர் கோர்ட் நீதிபதி முகமது ஜபருல்லாகான் விசாரித்தார். லட்சுமி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி முகமது ஜபருல்லாகான் தீர்ப்பளித்தார்.

மயக்க ஊசி போட்டு டாக்டர் கணவனை சித்ரவதை செய்த மனைவிக்கு வலைவீச்சு

சேலம்: மே 17,2010 செய்தி: தினமலர்

சேலம் அருகே மயக்க ஊசி போட்டு கணவனை சித்ரவதைக்கு ஆளாக்கியதுடன், உறவினர்களுடன் சேர்ந்து வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய டாக்டரின் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

“குடும்பத்தில் வனமுறை செய்வது கணவன் மட்டுமே” என்கிறது “குடும்ப வன்முறைச் சட்டம்” (Domestic Violence Act).

அச்சட்டத்தின் அடிப்படையில் மனைவிதான் கணவன் மீதும் அவனது பெற்றோர் மீதும் கிரிமினல் புகார் கொடுத்து அவர்களை தங்கள் வீட்டிலிருந்தே வெளியேற்றி ஜீவனாம்சமும் கொடுக்கச் செய்யலாம். மனைவி எவ்வளவு கொடுமையும் சித்திரவதையும் செய்தாலும் கணவன் அவள்மீது புகார் கொடுத்து நிவாரணம் பெற இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் இடமில்லை!

எனெனில் இந்தியாவில் சமூகம், சட்ட மன்றங்கள், கோர்ட்டுகள் இவை அத்தனையின் பார்வையிலும் ஆண் என்பவன் கிரிமினல், கொடுமைக்காரன், அனைத்து கணவன்மார்களும் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து கொண்டு மனைவிகளை எரித்துக் கொன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனைவிகள் அனைவரும் அபலைப் பெண்கள். வாயில் விரல் வைத்தால்கூட கடிக்கத் தெரியாதவர்கள்!

இப்படித்தான் இருக்கின்றன இந்நாட்டில் சட்டங்களும் தீர்ப்புகளும்!

மயக்க ஊசி போட்டு கணவனை சித்திரவதை செய்த மனைவிசேலம் மாவட்டம் காகாபாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(41); லேப்ராஸ்கோபி டாக்டர். அவரது மனைவி சித்ரா(44); மகப்பேறு டாக்டர். இவர்களது மகன் நவீன்(16).

காகாபாளையத்தில் சி.கே., மருத்துவமனையை சித்ரா நடத்தி வந்தார். இடைப்பாடியில் நவீன் மருத்துவமனையை கண்ணன் பார்த்து வந்தார். பிரபல மருத்துவமனைகளில் ஆபரேஷன் பணிக்கும் அவர் சென்று வந்தார்.கடந்த 18 ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்த டாக்டர் தம்பதிகளிடையே கடந்த சில ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டது.

இது விவாகரத்து வரை சென்றது. பின் பெற்றோர், உறவினர்கள் தலையீட்டால் பிரித்து வாழ்ந்த தம்பதியர், இரண்டு மாதமாக சேர்ந்து வாழ்ந்தனர்.அவர்கள் வாழ்வில் சொத்துப் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்தது. கண்ணன் பெயரில் உள்ள சொத்துக்களை, தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என, சித்ரா பிரச்னை செய்துள்ளார்.

இதற்கு அவர்களது உறவினர்களும் ஆதரவாக இருந்துள்ளனர்.கடந்த 24ம் தேதி வீட்டுக்கு வந்த கண்ணனை, மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் தனி அறையில் கட்டி வைத்து மயக்க ஊசி போட்டு சித்ரவதை செய்து வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளனர். உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த கண்ணனை, அவரது மாமா மீட்டு சேலம் தரண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அதைத் தொடர்ந்து, மகுடஞ்சாவடி போலீசாரிடம் டாக்டர்கண்ணன் அளித்தபுகார் விவரம்: ஐந்து ஆண்டுகளாக நான் சம்பாதித்த சொத்து சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவிக்கும், எனக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று வாழப்பாடி சென்று விட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். சாப்பிட்ட பின், மனைவி அறைக்கு சென்றேன்.

அப்போது திடீரென லேப் டெக்னீஷியன் மகாதேவன், சித்ராவின் தம்பி கோபு, என் சகலை பாலசுப்பிரமணியம், சித்ராவின் அக்கா விஜயலட்சுமி, கோபுவின் மனைவி விமலா மற்றும் என்னுடைய மனைவி சித்ரா ஆகியோர் என்னை பிடித்து எலக்ட்ரிக் ஒயரால் கைகளையும், கால்களையும் கட்டி, அடித்து படுக்கையில் முகத்தை அமுக்கி, அதிகப்படியான மயக்க மருந்து மூலம் இடுப்பில் ஊசி போட்டனர்.

இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்களாக ஐந்து முறை மயக்க ஊசி போட்டனர். சித்ரா என்னிடம் வந்து, ‘எங்கப்பா பத்திரங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அதில் நான் கையெழுத்து போட்டு சொத்துக்களை அவர் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் ஊசி போட்டு கொலை செய்து விட்டு, நீயே தற்கொலை செய்து கொண்டதாக கூறி விடுவேன்’ என, மிரட்டினார்.உயிருக்கு பயந்து நானும் எழுதிய பத்திரம், எழுதாத பத்திரங்களில் கையெழுத்து போட்டேன்.

அதன் பிறகு மயக்க ஊசி போட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு அறையில் அடைத்து விட்டனர். மயக்கம் தெளிந்து, ‘காப்பாற்றுங்கள்’ என்று கத்தினேன். என் மாமா வந்து என்னை மீட்டு, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் என கூறினார். அதன்படி தரண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கூறுகையில், ”டாக்டர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் அவரது மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ளனர்; தேடி வருகிறோம். இன்று புகார் அளிப்பவர்கள், பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம் என்று வருவர். சித்ராவிடம் விசாரணை நடத்தினால், உண்மை நிலை தெரியவரும்,” என்றார்.

இந்த சம்பவத்துக்கு பின், சித்ரா மற்றும் அவருடன் இருந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர். சேலம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற அவர்கள் முயற்சித்ததாகவும், அந்த மனு தள்ளுபடியானதால், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டுமனு தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்த மருமகள்

செய்தி – தினமலர் – ஏப்ரல் 15, 2010.

ஐயோ பாவம், அந்தப் பேதை மருமகள்!

கணவன் மீதும் அவனது பெற்றோர் உறவினர் மீதும் பொய்க்கேசு போட்டு சிறையிலடைத்து காசு பிடுங்கும் முழு உரிமையையும் இந்தியப் பெண்களுக்கு அளித்திருப்பதுபோல், கள்ளக்காதல் செய்வதற்கும் உரிமையை மனைவிமார்களுக்கு சட்ட ரீதியாக அளித்திருந்தால் இதுபோல் மாமனாரை திட்டம் போட்டுக் கொலை செய்து கொலைகாரி என்ற பட்டத்தை அந்த அப்பாவிப் பெண்கள் பெற்றிருக்கமாட்டார்கள் அல்லவா?

இந்த சிந்தனை ஏன் இன்னமும் இந்த சமுதாயத்திற்கும் வரவில்லை? AIDWA போன்று பெண்களின் உரிமைக்காகவும், அவர்களை கற்பு, குடும்பம், கடமை, பண்பாடு போன்ற தளைகளிருந்து விடுதலை பெற்றுத்தருவதற்காகவும் அல்லும் பகலும் பாடுபடும் இயக்கங்களும், மற்றைய பெண்ணியவாதிகளும் இத்தகைய உரிமைக்காக குரல் எழுப்ப வேண்டாமா?

சரி, இப்போது இந்த அபலைப் பெண்ணின் கைவரிசையைப் பற்றி வாசிப்போம்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார் ரைஸ் மில் அதிபர் அடித்துக் கொலை : மருமகள் உட்பட மூவர் கைது

ஏப்ரல் 15,2010. தினமலர்

கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மூவரை தேடி வருகின்றனர்.

மருமகளால் கொலை செய்யப்பட்ட மாமனார்கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயவேல்ரெட்டி(68). அதே பகுதியில் இயங்கி வரும் ரைஸ்மில் மற்றும் பல வணிக வளாகங்களின் உரிமையாளராக இருந்தவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.கடந்த 6ம் தேதி இரவு, ஆரம்பாக்கம் பஜாரில் இருந்து நாயுடுகுப்பம் சாலையில் உள்ள ரைஸ்மில்லுக்கு நடந்து சென்றார். அப்போது மர்மநபர்கள் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.மறுநாள் காலை சாலையோர முட்புதரில், அவரது உடலை கண்ட அப்பகுதி மக்கள் ஆரம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வனிதா, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., நாகஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர்.வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் இன்ஸ்பெக்டர் அகமது அப்துல்காதர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையில்,ஜெயவேல் ரெட்டியின் மூத்த மகன் பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி(37). ஆரம்பாக்கம் அருகே உள்ள எடகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(37).சொந்தமாக விவசாய டிராக்டர் வைத்துள்ளார். வேலை காரணமாக ஜெயவேல் ரெட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து போன சீனிவாசனுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே கள்ள காதல் உருவானது. இதை அறிந்த ஜெயவேல் ரெட்டி இருவரையும் கண்டித்துள்ளார்.இந்நிலையில், ஜெயவேல் ரெட்டி, தனது சொத்துகளில் பாகம் பிரித்த போது, மகன்களை விட, மகள்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். இதனால், கள்ள காதல் தொடர்பாக கோபமாக இருந்த புவனேஸ்வரி மேலும் ஆத்திரமடைந்தார்.

இதை காரணம் காட்டி, சொத்துகளை பெற்று தனி குடித்தனம் செல்ல புவனேஸ்வரி முயன்றார். இதற்கும் ஜெயவேல் ரெட்டி தடையாக இருந்துள்ளார். இதையடுத்து, சீனிவாசன் உதவியுடன் ஜெயவேல் ரெட்டியை கொலை செய்ய, புவனேஸ்வரி திட்டம் தீட்டினார். இதன்படி, சீனிவாசன் நண்பரான எடகண்டிகை ஸ்ரீதர் உதவியுடன், திருவொற்றியூர் ஷேக் பாரி(35) என்பவரை அணுகினர்.அவர், கொலை திட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பேசி முடித்து, முன்பணமாக, 46 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார். இதன்படி, ஷேக் பாரி கூட்டாளிகளான பிரபாகரன்(30), பாலாஜி(25) ஆகியோருடன் சேர்ந்து ஜெயவேல் ரெட்டியை கொடூரமாக கொலை செய்தனர், என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து புவனேஸ்வரி, சீனிவாசன், அவரது நண்பர் ஸ்ரீதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஷேக் பாரி, பிரபாகரன்,பாலாஜி ஆகியேரை தேடி வருகின்றனர்.

தன் பெண்ணைக் கொடுமைப் படுத்தும் தாய்

கட்டாய திருமணம் செய்து வைக்க பெண் எஸ்.ஐ. (பெண்ணின் தாய்) முயற்சி : மதுரை துணை கமிஷனரிடம் கல்லூரி மாணவி புகார்

மார்ச் 30,2010, தினமலர்

மதுரை : மதுரையில் 19 வயது கல்லூரி மாணவிக்கு, 39 வயதுக்காரருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க, அப்பெண்ணின் தாயான பெண் எஸ்.ஐ., முயற்சி செய்வதாக போலீஸ் துணை கமிஷனரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் சந்திரா(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெண்கள் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு ஆங்கிலம் படிக்கிறார். இவரது தாய் பரமேஸ்வரி; குற்றப்பிரிவு எஸ்.ஐ.,யாக உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், செங்கப்படையைச் சேர்ந்த கணேசன்(39) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க தாய் முயற்சி செய்வதாக, துணை கமிஷனர் தேன்மொழியிடம் சந்திரா புகார் அளித்தார்.

அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

திருமணத்திற்கு நான் மறுக்கவே, தனி அறையில் அடைத்து வைத்து என் தாய், லத்தியால் அடித்து உதைத்தார். தொடர்ந்து உடல் ரீதியாகவும், வார்த்தை ரீதியாகவும் சித்திரவதை செய்தார். மார்ச் 23ல் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். தற்போது சென்னையில் விடுதி ஒன்றில் தங்கி, சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிகிறேன். எனது உயிருக்கு, தாயால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. நான் மதுரையில் இருந்தால், நிச்சயம் கணேசனுக்கு திருமணம் செய்து வைப்பார். தாய் தூண்டுதல் பேரில், எனது நண்பர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துகின்றனர். எனது விருப்பத்திற்கு மாறாக, கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரிக்க, தல்லாகுளம் போலீசாருக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

நிருபர்களிடம் சந்திரா, ”கணேசன் கால் ஊனமானவர்; ஏற்கனவே திருமணம் ஆனவர். என்னை தொடர்ந்து தாய் சந்தேகித்து, துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறினேன். கல்லூரிக்கும் செல்ல முடியவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் தங்கையையும், தாய் கொடுமைப்படுத்துகிறார்,” என்றார். சந்திராவின் வக்கீல்கள் ராஜ்குமார், பாஸ்கர் மதுரம் கூறுகையில், ‘மதுரை விடுதியில் தங்கி, கல்லூரி படிப்பை தொடர, தகுந்த பாதுகாப்பு அளிப்பதாக துணை கமிஷனர் தெரிவித்தார்’ என்றனர்.

அபலை அமலாவின் கைவண்ணம்

இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்த அபலை அமலா!

பிப்ரவரி 15,2010. தினமலர்

இரு சிசுக்களை கொலை செய்த அமலாநாமக்கல் : தன் குழந்தைகள் மீது கணவர் பாசத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு பிறந்த ஒரு குழந்தை, தத்தெடுத்த குழந்தை என இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

நாமக்கல் எஸ்.பி.எம்., பங்களாவில் வசித்து வருபவர் நேரு (43); தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், சரஸ்வதி என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், திருச்சியில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்து சக்திவேல் (8) என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்நிலையில், சரஸ்வதிக்கு ஷாலினி என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில ஆண்டில் சரஸ்வதி இறந்தார். அதை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாவட்டம் எம்.களத்தூரை சேர்ந்த அமலா (23) என்ற பெண்ணை, நேரு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ராகவி (3), கவின் (2) என இரண்டு குழந்தைகள் பிறந்தன.

கணவர் நேரு தனது முதல் மனைவியின் குழந்தையிடமும், தத்தெடுத்த மகனிடமும் அதிக அளவில் பாசம் வைத்திருந்தார். மேலும், அவர்கள் பெயரில் கணிசமான அளவு பணமும் டிபாசிட் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அமலா, “குழந்தைகளை கொன்று விட்டால் தனது கணவர் தனது குழந்தைகளிடம் பாசம் காட்டுவார்’ என எண்ணி அதை செயல்படுத்த முடிவு செய்தார்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு நேரு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல், ஷாலினி ஆகியோரை ஒன்றன்பின் ஒன்றாக, வீட்டுக்குள் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து அமலா கொலை செய்தார். “யாருக்கும் தன்மேல் சந்தேகம் வரக்கூடாது’ என்பதற்காக தனது குழந்தை கவினை தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்வதாக கூறிச் சென்றுவிட்டார்.

காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்த அமலா, வீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் தொட்டியில் குழந்தை இறந்து கிடப்பதாக தனது கணவர் நேருவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதற்குள் செய்தி பரவியதை அடுத்து அக்கம் பக்கத்தில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த தாசில்தார் குப்புசாமி, எஸ்.ஐ.,க்கள் சுப்ரமணி, லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அமலா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது.

அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மேற்கண்ட உண்மை வெளியானது. அதை தொடர்ந்து அமலாவை, போலீசார் கைது செய்தனர். சித்தி, இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்று தணியும் பெண்ணியவாதிகளின் ரத்த வெறி!

Slain sub-inspector Vetrivelபட்டப் பகலில் துடிக்கத் துடிக்க சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் வெற்றிவேல். அவர் யார்? அவர் சீருடையில் டூட்டியில் இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்!

அவர் இப்படி காட்டுமிராண்டித்தனமாக வெட்டிச் சாய்க்கப்பட்டதின் அடிப்படைக் காரணம் என்ன?

ஆம்! இபிகோ செக்‌ஷன் 498A தான்!

நம் நாட்டிலிருக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்காக, பல பெண்ணியவாதிகள் போராடிப் பெற்றுத் தந்திருப்பதாக பறை சாற்றிக் கொண்டிருக்கும் அந்தக் கொடுங்கோன்மை பொல்லாங்குச் சட்டமான 498a சட்டத்தின் நீட்சியாகத்தான் ஒரு பாவமும் அறியாத சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை செய்யப்பட்டிருக்கிறார்!

கடையம் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தை கொலை செய்வதாக நினைத்துக் கொண்டு ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ வெற்றிவேலை வெட்டிச் சாய்த்துவிட்டனர்.

இந்தக் கொலையை செய்தது யார்? சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தின் மனைவி சிவகாமி!

ஆம், ஒரு பெண் பேதைதான் கொலைகாரி! பாவம், அவள்தான் என்ன செய்வாள்! கணவனைக் கொலை செய்யமுயன்றது ஒரு தவறா? சரிய்யா, ஆள் மாறாட்டத்தால் இன்னொரு சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டார். அதனால் என்ன? அவரும் ஒரு ஆண்மகன் தானே? இதற்கு ஏன் இந்தப் பாடு படுத்துகிறீர்கள்? ஆஃப்டர் ஆல் ஒரு ஆண் கொலை செய்யப்பட்டார். அவ்வளவுதானே! அதுவா இப்போது முக்கியம்? 20 ஆண்டுகள் முன்னர் ஒரு பெண்ணின் கையை ஒரு ஆண் பிடித்துவிட்டானே, அதுதானே ஐயா பெரிய குற்றம்? நம் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நேபாள பெண் ஒருவளை திருப்பி அனுப்பி அவளது பெற்றோர் வசம் அனுப்பி விட்டார்களே – அந்த அநியாயத்தை எதிர்த்துப் போராடுவதுதானே ஐயா இதைவிட முக்கியம்? பிரதம மந்திரி, உள்துறை மந்திரி ஆகியோர் அதைத்தானே முக்கியமாக கையிலெடுத்து அந்தப் பெண் மனம் கோணாமல் நடந்து கொள்கிறார்கள்! அதுதானே நம் நாட்டில் தலையாய பிரச்னை? அதை விடுத்து ஏதோ ஒரு சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டதைப்போய் – அதுவும் ஒரு பெண்ணால் – பெரிசு படுத்துகிறீர்களே! அகில இந்திய ஜனநாயக மாதர் கழகத்தினர் (AIDWA – All India Democratic Women Association) இந்தப் போக்கை வன்மையாக கண்டிக்கின்றனர்!

சரி. சிவசுப்பிரமணியத்தைப் போல் தோற்றம் கொண்டிருந்த பாவத்திற்காக, நடு ரோட்டில் யூனிஃபார்மோடு சேர்த்து கசாப்புக் கடையில் கொத்துக்கறி வெட்டுவதுபோல் சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டார்! உயிர் தப்பிய அந்த சிவசுப்பிரமணியம் என்ன சொகிறார்?

”எனக்கும் சிவகாமிக்கும் திருமணம் முடிந்த 3வது நாளிலேயே மனக்கசப்பு ஏற்பட்டது.

மனைவி பட்டப்படிப்பு படித்திருப்பதாக சொன்னார்கள். அவரிடம் கேட்டபோது பிளஸ்-2 பெயில் என்றார். சான்றிதழை வாங்கிப்பார்த்த போது 4 வயதை குறைத்துச் சொல்லி என்னை ஏமாற்றியது தெரிய வந்தது. அன்று முதல் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

மனைவி மீதுள்ள வெறுப்பில் வீட்டுக்கு செல்லாமல் நண்பர்களின் அறைகளில் தங்கினேன். என்னை கேட்காமலேயே கர்ப்பத்தை கலைத்தாள். இதனால் நான் கடும் வெறுப்படைந்தேன்.

அதன்பிறகு என்னைவிட்டு பிரிந்து பிறந்த வீட்டுக்கு போய்விட்டாள். அவளது உறவினர் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்தின் திட்டப்படி என்மீது வரதட்சணை புகார் கொடுத்தாள் (Sec 498A IPC). துப்பாகியை காட்டி நான் கர்ப்பத்தை கலைக்க சொன்னதாக புகார் செய்யவே, நான் சஸ்பெண்ட் ஆனேன்.

பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் வேலையில் சேர்ந்தேன். இநி நிலையில் என்னைக் கொலை செய்ய சதி போட்டனர்.

2 முறை என்னை கொல்ல சதி நடந்தது. இரண்டு முறையும் தப்பிவிட்டேன். இப்போது 3வது முறையாக தப்பியிருக்கிறேன். சம்பவத்தன்று நான் ரகசியமாக விடுமுறை எடுத்து கோவிலுக்கு சென்றதால் உயிர் பிழைத்தேன்.”

இதுநாள்வரை கணவன்மார்களுக்குத்தான் மனைவிகள் மூலம் ஆபத்து வரும் என்னும் நிலை இருந்தது. இனிமேல் கணவர்கள் போல் தோற்றமளிக்கும் அனைத்து ஆண்கள் உயிருக்கும் பாதுகாப்பில்லை என்ற பயங்கரமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மக்களைக் காக்கும் கடமையைக் கொண்டிருக்கும் ஒரு காவல் துறை அதிகாரியே இப்படிக் கொடூரமான முறையில் பட்டப் பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்டிருப்பாரேயானால் சாதாரண மக்கள் கதி என்ன?

சரி. இத்தகைய பொய்க் கேசுகளும், கணவர்கள் மற்றும் கணவரைப் போன்றவர்கள் கொலை செய்யப்படும் நிலையும் சமுதாயத்தில் தோன்றியமைக்குக் காரணமானவர்கள் யார்?

இதோ பதில்:

பாவம், பெண்கள். இன்னமும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்

கள்ளக்காதலுக்கு வயது ஒரு தடையல்ல. ஆனால் அதைத் தடை செய்யும் கணவன் கொலையாவது நிச்சயம்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி
கள்ளக்காதலனுடன் கைது

ஊட்டி, ஜன.20 – 2009. செய்தி: தினத்தந்தி
http://www.dailythanthi.com/article.asp?NewsID=541418&disdate=1/20/2010&advt=2

ஊட்டி தடுப்பணையில் கிடந்த ஆண் பிணம், கொலை செய்யப்பட்டு வீசப்பட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி அருகே சுற்றுலா இடமான தொட்டபெட்டா பகுதி அமைந்து உள்ளது. அந்த வனப்பகுதியை அடுத்து அரசு ஆராய்ச்சி பண்ணை அமைந்துள்ளது. இந்த இடத் தில் இருந்து கார்டன்மந்து செல்லும் குறுக்கு பாதையில் தடுப்பணை கட்டப்பட்டு நீர் தேக்கம் செய்யப்படுகிறது.

இந்த நீர் தேக்கத்தில் கடந்த 7-ந் தேதி 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். அவர்கள் இது குறித்து ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத் துக்கு தகவல் கொடுக்கப்பட் டது. தகவலின் பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றினார்கள். தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கபில்குமார் சராட்கர் உத்தரவின் பேரில் ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக்குமார் மேற்பார்வையில் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலைய (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சத்தியசாதன், சப்-இன்ஸ் பெக்டர்கள் பிரவீனா, சிவசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இது தொடர்பாக கடந்த 9-ந் தேதி `தினத்தந்தி’ யில் இறந்தவரின் படம் மற்றும் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் காரணமாக இறந்தவர் பாலன் என்கிற பாலகிருஷ்ணன் (வயது 55) வெலிங்டன் லூர்துபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்கள்

இதை தொடர்ந்து போலீ சார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

பால கிருஷ்ணனுக்கு திருமணமாகி மல்லிகா (45) என்று மனைவியும், அம்மு (27) என்ற மகளும் உள்ளனர். மகள் அம்மு திருமணம் செய்து கொடுக்கப்பட்டு கார மடையில் கணவருடன் வசித்து வருகிறார். பால கிருஷ்ணன் மத்திய அரசுக்கு சொந்தமான சில்க் பண்ணையில் வேலை செய்து ஓய்வு பெற்று கொண்டு மகள் அம்மு வீட்டில் சிறிது காலம் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மல்லிகா (45 வயது) ஊட்டி காந்தல் குருசடி பகுதிக்கு வந்த போது, அவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த அந்தோணி சார்லஸ் என்கிற சந்திரன் (42) என்பவருக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் சுமார் 8 மாத கால மாக பழகி வந்துள்ளனர்.

உல்லாசம்

மல்லிகாவும் (45), அந்தோணி சார்லஸ் (42) பல இடங்களில் உல்லாசமாக இருந்து உள்ளனர். அடிக்கடி அந்தோணி சார்லஸ் லூர்துபுரம் மல்லிகா வீட்டிற்கு வந்து சென்று உள்ளார்.

இதை அறிந்த பால கிருஷ்ணன் தனது மனைவி மல்லிகாவை கண்டித்து உள்ளார். கள்ளக்காதலுக்கு தனது கணவர் பாலகிருஷ்ணன் இடயூறாக உள்ளார். எனவே கணவரை தீர்த்து கட்டி விட வேண்டும் என்று மல்லிகா முடிவு செய்துள்ளார்.

இதற்காக கள்ளக்காதலன் அந்தோணி சார்லசுடன் சதி திட்டம் தீட்டி கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். பால கிருஷ்ணன் காரமடையில் உள்ள தனது மகள் அம்மு வீட்டில் இருந்து தனது பென்சன் வாங்க கடந்த 6-ந் தேதி குன்னூர் இந்தியன் வங்கிக்கு வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட மல்லிகா தனது கள்ளக்காதலன் அந்தோணி சார்லசுக்கு தகவல் கொடுத் துள்ளார். அன்று அந்தோணி சார்லஸ் பாலகிருஷ்ணனை சந்தித்து பேசி, இருவரும் மது அருந்த லாம் என குன்னூரில் உள்ள ஒரு மதுக்கடைக்கு சென்றனர். அங்கு பாலகிருஷ்ணனை மது அருந்த வைத்தார். பின்னர் ஊட்டிக்கு போகலாம் என்று அழைத்து வந்துள்ளார்.

பின்னர் அந்தோணி சார்லஸ் ஊட்டியில் மேலும் ஒரு பாட்டில் மதுவை வாங்கி பால கிருஷ்ணனிடம் கொடுத்து, வனப்பகுதிக்கு சென்று ஜாலியாக குடித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறி, தொட்டபெட்டா வனப் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு அழைத்து வந்துள்ளார்.அங்கு பாலகிருஷ்ணனை மதுவை குடிக்க செய்துள்ளார்.

கொலை

தொடர்ந்து பாலகிருஷ்ணன் மது அதிகமாக குடித்ததால் நிதானம் இழக்க தொடங்கிய தும் கையில் இருந்த மிளகாய் பொடியை முகத்தில் வீசினார்.பின்னர் அருகில் இருந்த தடுப்பணையில் தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். மேற் கண்ட தகவல் போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தலை மறைவாக இருந்த அந்தோணி சார்லஸ் மற்றும் பாலகிருஷ்ணனின் மனைவி மல்லிகா ஆகிய 2 பேரையும் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீ சார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

பாராட்டு

துரிதமாக சந்தேக மரணம் அடைந்த பாலகிருஷ்ணன் குறித்து விசாரணை நடத்தி, கொலையாளிகளை கைது செய்த ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் மற்றும் போலீசாரை நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு கபில்குமார் சராட்கர் பாராட்டினார்.