தொகுப்பு

Posts Tagged ‘அராஜகம்’

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற கர்ப்பிணி மனைவி பிரவசத்திற்குப்பின் கைது

திருநெல்வேலி : தினமலர் – செப்டம்பர் 10, 2011 :: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=310751

நெல்லை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி இரு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

நெல்லை அருகே குறிச்சிக்குளம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாபு(35). டயர் கம்பெனியில் பணியாற்றினார். இவர் மனைவி உச்சிமாகாளி என்ற உமா(28). கடந்த ஜூலையில் பாபு வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தினர். பாபு சாவில் மர்மம் இருப்பதாக அவர் உறவினர்கள் கூறினர். பாபு உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. மூச்சு திணறி பாபு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் பாபுவின் மனைவி உமாவிற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உமாவிற்கும், தாழையூத்து ராஜவல்லிபுரத்தை சேர்ந்த லாரிஷெட் உரிமையாளர் நல்லசாமிக்கும் இடையே “கள்ளத்தொடர்பு’ இருந்துள்ளது. பாபு ஊரில் இல்லாத நாட்களில் இருவரும் ஜாலியாக இருந்தனர். இதை பாபு கண்டித்தார். இதுதொடர்பான தகராறில் சம்பவத்தன்று பாபுவின் முகத்தில் தலையணையை அமுக்கி நல்லசாமியும், உமாவும் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் நல்லசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். கணவன் உடலை படுக்கையில் போட்டு விட்டு எதுவும் தெரியாதது போல உமா கதறி நாடகமாடியுள்ளார்.

இச்சம்பவத்தின் போது உமா கர்ப்பிணியாக இருந்தார். சில நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து தாழையூத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை போலீசார் உமாவை கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் உமா கொக்கிரக்குளம் பெண்கள் சிறையில் தன் குழந்தையுடன் அடைக்கப்பட்டார். நல்லசாமியை போலீசார் தேடி வருகின்றனர். உமாவிற்கு சொந்த ஊர் மானூர்.

Advertisements

நீதிமன்றங்கள் நிரபராதிகளை பாதுகாக்குமா?

Stop husband suicideஇந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம். செய்தி மடல். 5 (மே, 2011)

“வரதட்சணை வழக்குகளைப் பொறுத்தவரை, புகார் பதிவு செய்யப்பட்டவுடன் எவ்வித புலன் விசாரணையும் செய்யாமல், கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகாரை அப்படியே நகலாக்கி, அதனையே இறுதி அறிக்கையாக (குற்றப் பத்திரிக்கையாக) நீதி மன்றங்களுக்கு அனுப்பிவிடும் வழக்கம் பல காலமாக காவல் துறையில் இருந்து வருகிறது.

இதுபோல் புலன் விசாரணை என்னும் நடைமுறையே இல்லாமல், வெறும் புகாரின் அடிப்படையிலேயே பல அப்பாவி ஆண்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவதால், ‘பொய் வரதட்சணை வழக்குகள் குப்பையைப் போல காவல் துறையால் தினம் தினம் நீதி மன்றங்களில் கொட்டப்படுகின்றன’ என்று டில்லி உயர்நீதி மன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது.

மேலும் வாசிக்க:

குடும்பப் பாதுகாப்பு இயக்க செய்தி மடல் எண் – 5

கணவனுக்கு கொலை மிரட்டல் மனைவி, கள்ளக்காதலன் கைது

செஞ்சி : கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி, கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், முட்டத்தூரை சேர்ந்தவர் முத்து (27). இவரது மனைவி நித்யா (20). இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார். இவர்கள், கடந்த மாதம் திருப்பூர் அருகே உள்ள தாராபுரத்திற்கு, செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர். அங்கு முட்டத்தூரை சேர்ந்த எட்டியான் மகன் ராமராஜ் (22) என்பவருடன், நித்யாவிற்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இதனால் தலைமறைவான இருவரையும் தேடி, முத்து, முட்டத்தூர் வந்தார். ஊர் பெரியவர்கள் நித்யாவை மீண்டும் முத்துவுடன் சேர்த்து வைத்தனர். அடுத்த சில நாட்களில், நித்யா மீண்டும் ராமராஜனுடன் தலைமறைவானார். கடந்த 9ம் தேதி இரவு 7 மணிக்கு இவர்கள், அனந்தபுரம் கூட்ரோட்டில் நின்றிருந்தனர். இதை பார்த்த முத்து, நித்யாவை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். ஆத்திரமடைந்த ராமராஜனும், நித்யாவும் சேர்ந்து, முத்துவை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப் பதிந்து ராமராஜ், நித்யா இருவரையும் கைது செய்தனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=203364

தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்; பிளஸ்-2 மாணவி தூக்கு போட்டு சாவு

Girl commits suicide because of mother's adulteryகடலூர், மார்ச். 12, 2011செய்தி: மாலைமலர்

பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் அஞ்சாபுலி(வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி(34). இவர்களது மகள் ஆனந்தி (17). இவர் பேர்பெரியான்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இதற்கிடையே செல்விக்கு வேறு ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செல்வி கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை செல்வி முத்தாண்டிக் குப்பத்துக்கு வந்தார். அப்போது செல்வியை மீண்டும் வீட்டை விட்டு செல்ல வேண்டாம் என ஆனந்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் அதனை மீறி செல்வி கள்ளக்காதலனுடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தி நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையில் முடிந்த “மிஸ்டு கால்” கள்ளக்காதல்

வடமதுரை அருகே பெண் இன்சூரன்ஸ் ஏஜன்ட் கொலையில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

செய்தி: தினமலர் (சுட்டி). நாள்: பிப்ரவரி 24,2011

மிஸ்டு கால் கள்ளக்காதல்திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கொம்பேறிபட்டியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் முருகேசன் மனைவி தனலட்சுமி(33). எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் ஏஜன்ட். கடந்த மாதம் 4ம் தேதி காந்திகிராமம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் அய்யலூர் தீத்தாகிழவனூர் பாலத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை காணவில்லை. வாகனத்தில் கொண்டு வந்த பிணத்தை உருட்டிவிட்டதற்கான அடையாளம் சம்பவ இடத்தில் இருந்தது. தேர்தலுக்கான போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதால் எரியோடு இன்ஸ்பெக்டர் முத்துபாண்டியிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

அவரது தலைமையிலான தனிப்படையினர் விசாரணையில், நான்கு மாதங்களுக்கு முன் தனலட்சுமியின் தவறுதலான “மிஸ்டு கால்’ மூலம் அறிமுகமானவர் திண்டுக்கல் மாலைப்பட்டி ரோட்டைச் சேர்ந்த குமரேசன்(26). இவரது தந்தை மாரியப்பன் திண்டுக்கல் தாட்கோ அலுவலக உதவியாளர். 9ம் வகுப்பு வரை படித்த குமரேசன், தனது தந்தை வேலை செய்யும் அலுவலகம் அருகில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

தனலட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பினால், அவரது மனைவி பாத்திமா, இரண்டு குழந்தைகளும் குமரேசனிடம் கோபித்து கொண்டு சென்று விட்டனர். சம்பவத்தன்று குமரேசனுடன் தனலட்சுமி காரில் சுற்றி வரும் போது, தனலட்சுமி மொபைலுக்கு வேறொரு ஆண் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த குமரேசன், தனலட்சுமியின் மொபைலை பறிக்க முயற்சிக்க, அவர் தரமறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன் தனலட்சுமியை காரினுள் வைத்து கொலை செய்து, அவரது நகைகளை எடுத்து கொண்டு அய்யலூர் பாலத்தில் பிணத்தை தள்ளிவிட்டு சென்றது தெரிந்தது.

இதனையடுத்து குமரேசனை கைது செய்த போலீசார் தனலட்சுமியின் நகைகளை மீட்டு, கொலைக்கு பயன்படுத்திய இண்டிகா காரையும் பறிமுதல் செய்தனர்.

கர்ப்பிணி டாக்டரை சித்திரவதை செய்த போலீஸ், பெண்கள் நல வாரியம் மௌனம் சாதிப்பது ஏன்?

எந்த ஒரு வழக்கிலும், ஒருவரை கைது செய்யும் போது, எந்த மாதிரியான நடைமுறைகளை போலீசார் பின்பற்ற வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எனினும், ஆந்திராவில் இருந்து கோவை வந்த தனிப்படை போலீசார், பெண் டாக்டரை கைது செய்து, அவரை சட்ட ரீதியான உதவிகளை பெற முடியாத அளவுக்கு துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மனிதாபிமான அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குடும்பத் தகராறு வழக்கில், கோவை பெண் டாக்டரை கைது செய்த, ஆந்திர மாநில தனிப்படை போலீசார், ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றனர். கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, வழியிலேயே, “அபார்ஷன்’ ஆகி, ரத்தப்போக்கு ஏற்பட்ட போதிலும், கட்டாயப்படுத்தி ரயிலில் ஏற்றினர். தமிழக போலீசாரின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து, பாதி வழியிலேயே, பெண் டாக்டர் இறக்கி விடப்பட்டார்.

ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவ்ஜன்யா(35). திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கோவையை பூர்வீகமாகக் கொண்டு, லண்டனில் டாக்டராக பணியாற்றும் லட்சுமணன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அடுத்த சில நாட்களில், கணவன் – மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். கணவர், தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக, கம்மம் போலீசில், சவ்ஜன்யா புகார் அளித்தார் (Sec. 498A of IPC). எப்.ஐ.ஆர்., பதிவு செய்து போலீசார் விசாரிக்க துவங்கியதும், இவ்வழக்கில் லட்சுமணன் முன்ஜாமீன் பெற்றார்.

இதையடுத்து, சவ்ஜன்யா, மற்றொரு புகாரை, அதே போலீஸ் ஸ்டேஷனில் அளித்தார். அதில்,

“என் கணவரின் அண்ணனும், மனைவியும் கோவையில் வசிக்கின்றனர். குடும்ப பிரச்னை தொடர்பாக, சமீபத்தில் நாங்கள் சந்தித்த போது, அவர்கள் என்னை கையால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்தனர்”

– என, தெரிவித்திருந்தார். லட்சுமணனின் அண்ணனும், அண்ணியும் கோவை, சிங்காநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மீது, வழிமறித்தல், கையால் அடித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கம்மம் தனிப்படை போலீசார், கோவை வந்தனர். சிங்காநல்லூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று, லட்சுமணனின் அண்ணன், அவரது மனைவியை தேடினர். பணியில் இருந்த பெண் டாக்டரை பிடித்த போலீசார், சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவரை ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.

இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த பெண் டாக்டர், கணவருடன் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்; உடனிருந்த போலீசார் மொபைல் போனை பறித்துக் கொண்டனர்.

ஈரோடு வரை ஜீப்பில் அழைத்துச் சென்றபோது, அதிர்ச்சி காரணமாக, பெண் டாக்டருக்கு, “அபார்ஷன்’ ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. தன் நிலையை போலீசாரிடம் தெரிவித்த பெண் டாக்டர், கடையில் “நாப்கின்’ வாங்கி கொள்ள அனுமதிக்குமாறு மன்றாடியும், போலீசார் மனம் இரங்கவில்லை.

ஈரோட்டில் இருந்து, ரிசர்வ் செய்யப்படாத ரயில் பெட்டியில் இவரை ஏற்றிய போலீசார், அமர்ந்து செல்ல இருக்கை வசதி கூட செய்து தராமல், அலட்சியம் காட்டினர். வயிற்று வலியால் மிகவும் துடித்த இவர், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

நிலைமை மோசமாவதை அறிந்த ஆந்திர போலீசார், அவரிடம் மொபைல் போனை கொடுத்து கணவரிடம் பேச அனுமதித்தனர். தகவலறிந்த கணவர், மனைவியின் உடல் நிலை மோசமாவது குறித்து, தமிழக போலீஸ் உயரதிகாரிகளிடம் முறையிட்டு உதவி கோரினார். விவரங்களை சேகரித்த போலீஸ் அதிகாரிகள், ஆந்திர மாநில போலீஸ் உயரதிகாரிகளை, போனில் தொடர்பு கொண்டனர். “பெண் டாக்டர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள், கைது செய்ததும் ஜாமீனில் விடக்கூடியதாக உள்ளன. அவ்வாறிருந்தும், கர்ப்பிணி பெண் டாக்டரை கைது செய்து போலீசார் துன்புறுத்துகின்றனர் என, அதிருப்தி வெளியிட்டனர். இதையடுத்து, தனிப்படை போலீசாரை தொடர்பு கொண்ட ஆந்திர போலீஸ் உயரதிகாரிகள், பெண் டாக்டரை வழியில் ஏதாவது ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். இதன்படி, தங்களது கஸ்டடியில் இருந்த பெண் டாக்டரை, ஜோலார்பேட்டையில் இறக்கி, அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த ஆந்திர போலீசார், அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“எந்த ஒரு வழக்கிலும், ஒருவரை கைது செய்யும் போது, எந்த மாதிரியான நடைமுறைகளை போலீசார் பின்பற்ற வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எனினும், ஆந்திராவில் இருந்து கோவை வந்த தனிப்படை போலீசார், பெண் டாக்டரை கைது செய்து, அவரை சட்ட ரீதியான உதவிகளை பெற முடியாத அளவுக்கு துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மனிதாபிமான அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதிகாரி கூறினார்.”

செய்தி: தினமலர். பிப்ரவரி 23, 2011.

மேலதிக விரங்களுக்கு இந்த வலைப்பதிவிற்குச் செல்க.
———

மேட்டுக்குடி இளம் பெண்கள் குடித்து கும்மாளம் போட அனுமதி வேண்டும் ஏன்று வரிந்து கட்டி களத்தில் இறங்கிய “தேசிய பெண்கள் நல வாரியம்” (National Commission for Women (NCW) and State Commission for Women) இந்த பெண் டாகடருக்கு நிகழ்ந்த கொடுமை பற்றி வாய் திறக்காதது ஏன்? 498ஏ சட்டத்தின் துஷ்பிரயோகம் (தவறான பயன்படுத்தல்) பற்றிய விவரம் வெளிவந்துவிடுமோ என்ற பயமா?

சீதைக்கும் முருகனுக்கும் கள்ளக்காதல், முடிவு என்ன?

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கள்ளக்காதலியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலகுமிழங்குளத்தை சேர்ந்தவர் நாகேஷ் (41). இவரது மனைவி சீதை (32). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன்(28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதில் இருவரும் வெளியூருக்கு ஓடி விட்டனர்.

சில மாதங்களில் சீதை ஊர் திரும்பினார். முருகனும் ஊர் திரும்பி, வேறு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2007 ஜூன் 6ம் தேதி முருகனை சீதை சந்தித்தார். முருகன், “எனக்கு திருமணம் ஆகி விட்டது, நீ மருந்து குடித்து செத்து தொலை” எனக் கூறினார்.

வீடு திரும்பிய சீதை, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வழக்கில் முருகனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து அருப்புக்கோட்டை சப் கோர்ட் நீதிபதி ஜெசிந்தா மார்டின் தீர்ப்பளித்தார்.

செய்தி: தினமலர்
: பிப்ரவரி 10,2011