தொகுப்பு

Archive for the ‘பொய் வழக்கு’ Category

ஆண் உயிரின் விலை என்ன?

நம் நாட்டில் திருமணமான ஆண்களின் தற்கொலை, பெண்கள் தற்கொலை எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு என்று அரசின் தரவுகளே (தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau)) தெரிவிக்கின்றன. (சுட்டி) ஆனாலும் மணமான பெண்கள்தான் பெருமளவு தற்கொலை செய்து கொள்வது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை சில பெண்ணியவாதிகளும், அவர்கள் சார்ந்த சில என்.ஜி.ஓ இயக்கங்களும் தங்கள் சுயநலத்திற்காகப் பரப்பி வருகின்றன. இந்த மாயத் தோற்றம் ஊடங்கள் மூலமும் திட்டமிட்டுப் பரப்பப்படுவதால் இதை (தமிழக சுகாதார அமைச்சர் உட்பட) பலர் அப்படியே நம்பி விடுகிறார்கள்.

மேலும் ஊடகங்களுக்கும் இது உதவியாக இருக்கிறது. ஏனெனில், “இளம் பெண் தற்கொலை”, “அழகி தற்கொலை”, “மாமியார் கொடுமையால் இளம் மனைவி தற்கொலை” – இப்படியெல்லாம் வெளிவந்தால்தான் அது பரபரப்பான நியூஸ்! “ஆண் தற்கொலை”, “கணவன் மாண்டான்” என்று எழுதினால் ம்ஹூங், அதை யாரும் சீந்த மாட்டார்கள். சாதாரணமாகவே செய்தித்தாள்களில் செய்தி வெளியாவதில் ஒரு அமைப்புமுறை (pattern) இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஒரு சம்பவத்தில் 10 பேர் மாண்டால், “3 இளம் பெண்கள் உட்பட 10 பேர் பலி” என்றுதான் எழுதுவார்கள்!

இத்தகைய பொய்மை பரவுவதால் பலர் ஆதாயம் அடைகின்றனர். “ஐயகோ, இந்த நாட்டில் இன்னமும் ஆயிரக் கணக்கான பெண்கள் ஆண்களின் கைகளில் சிக்கி கொடுமைப் படுவதால் தற்கொலை செய்துகொண்டு மடிகிறார்களே” என்னும் கூப்பாட்டை அணையாமல் ஊதிக் கொண்டிருந்தால்தான் ஐ.நாவைச் சார்ந்த UNIFEM மற்றும் மக்கள் வரிப்பணத்திலிருந்து கணிசமான துகை இந்த நபர்கள் கையில் சிக்கும்! அதை வைத்து பெண்களின் துயர் துடைப்பதாகச் சொல்லிக்கொண்டு, சில மேட்டுக்குடிப் பெண்கள் “பப்”பிற்குச் சென்று தண்ணி போடும் உரிமைக்காகவும், ஏர் ஹோஸ்டஸ்கள் பொய் வழக்கு போடும் உரிமைக்காகவும், குடும்பப் பெண்களை தங்கள் வாழ்வைச் சிதைத்துக் கொண்டு கோர்ட்டு வராண்டாவில் லோலோவென்று அலைய வைக்கவும் போராடுகிறோம் என்று சிலவுக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கலாம்!!

ஆணின் உயிரின் மதிப்பை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்:

(நன்றி: “பெண்கள் நாட்டின் கண்கள்“)

சரி. இப்போது இந்த அப்பாவி ஆணின் தற்கொலைக் கதையை வாசியுங்கள்:

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தபின் புதுமாப்பிள்ளை `திடீர்’ தற்கொலை

தாயாருக்கு உருக்கமான `எஸ்.எம்.எஸ்.’

தாம்பரம், அக்.31- 2009. செய்தி – தினத்தந்தி

சென்னையை அடுத்த குரோம்பேட்டை சாஸ்திரி காலனியை சேர்ந்தவர் யோமஹாசன் (வயது 27). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு சமீபத்தில் உறவினர் பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் இரவு வந்த யோமஹாசன் வீட்டில் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் படுக்கையறையில் தூங்க சென்றவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

யோமஹாசன், இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் தாயாருக்கு எஸ்.எம்.எஸ். டைப் செய்து வைத்திருந்தார். அதில் `எனது சாவுக்கு யாரும் காரணமல்ல, எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுங்கள்’ என்று அதில் இருந்தது.

யோமஹாசன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisements

ஆண்களை அழிக்க இன்னொரு ஆயுதம்!

தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் எந்தக் குற்றத்தைப் புரிந்ததாக அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள் தெரியுமா? “தமிழ்நாடு பெண்களை செக்ஸ் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 1998” (Tamil Nadu Prohibition of Harassment of Women Act, 1998). நீங்களே சொல்லுங்கள், அவர் எந்தப் பெண்ணை செக்ஸ் கொடுமை செய்தார்?

இதில் நகைமுறண் என்ன தெரியுமா? இந்தச் சட்டம் போடப்பட்டது சரிகா ஷா என்னும் எதிராஜ் கல்லூரி மாணவி 1998-ல் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்து போனதன் பிறகு. அது போன்ற வெளிப்படையான தாக்குதல்கள் பெண்களுக்கு பொது இடங்களில் நடக்கக் கூடாது என்பதற்காகப் போடப்பட்ட கடுமையான சட்டம் அது. ஆனால் அன்று நிகழ்ந்தது போல் ஈவ்டீசிங் தாக்குதல்களுக்கு உண்மையிலேயே உட்படுத்தப்பட்ட அப்பாவிப் பெண்களுக்கு இந்தச் சட்டம் உதவுகிறதோ இல்லையோ, அரசியல் காரணங்களுக்காக சிலரைக் கைது செய்யவும், சில பெண்கள் ஆண்களைப் பழி வாங்குவதற்கு ஏதுவாகவும் தான் இது பயன்படுத்தப் படுகிறது.

ஏற்கனவே பெண்களுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளைத் தண்டிப்பதற்கு இ.பி.கோ 354, 509, 294 என்னும் சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளைக் கொண்டு இத்தகைய குற்றங்களைப் புரிவோர்களைக் கடுமையாகத் தண்டிக்க இயலும். ஆனால் நம் நாட்டில் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கையிலெடுத்தால் போதும். உடனே அரசியல்வாதிகளும், பெண்ணியவாதிகளும், வக்கீல்களும், நீதிபதிகளும் சேர்ந்து “சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்” என்று கூக்குரலிடுவார்கள். ஒரே இறைச்சலாக இருக்கும். உடனே ஒரு knee- jerk reaction கொடுத்து, ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கடுக்காக ஒரே வித குற்றங்கள் பெயரைச் சொல்லி மேன்மேலும் கடுமையாக்கப்பட்ட பல சட்டங்களை இயற்றி விடுவார்கள். இதுதான் நம் நாட்டில் இருக்கும் நடைமுறை. இதுபோன்ற ஆக்டபஸ் சட்டங்கள்தான், கெடுமதிப் பெண்களுக்கும், அவர்களை வழி நடத்தும் வக்கீல்களுக்கும் நல்ல அறுவடைக் களமாக அமைகிறது. இந்தச் சட்டத்தின் உட்கூறுகளைக் கவனியுங்கள்:

The Tamil Nadu Prohibition of Harassment of Women Act defines public sexual harassment as harassment by a man, including any indecent conduct, which could cause or causes intimidation, shame, fear or embarrassment, including the threat or actual use of force.

இச்சட்டத்தின் இன்னொரு கொடுங்கோன்மைப் பகுதி என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டவன் தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவுடனேயே (அதாவது ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே) அந்த ஆண் குற்றம் புரிந்தவனாகக் கருதப்படுவான். பிராசிக்யூஷன் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் அவன் அக்குற்றத்தை தான் செய்யவில்லை என்று அவன்தான் சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும் (the onus of proving innocence lies on those accused). இதுதான் ஆண்களுக்கு எதிரான பலவிதச் சட்டங்களின் அடிப்படைக் கட்டமைப்பு!

இப்போது இந்த தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமைச் சட்டத்தின் நடைமுறைப் பயன்பாட்டுக்கு வருவோம். இன்றைக்கு பொது இடங்களில் ஆண்களும் பெண்களும் கலந்துதான் நடமாட வேண்டியிருக்கிறது. லிஃப்ட், துணிக்கடை, சினிமா தியேட்டர், நடைபாதை, ஷாப்பிங் மால், மற்றும் அரசு அலுவலங்கள் இவற்றிலெல்லாம் அன்றாடம் ஆண்களும் பெண்களும் குறுகிய இடங்களில் செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது ஆணின் கை அருகிலிருக்கும் பெண்ணின் மேல் படும். உடனே அவள் அந்த ஆணின்மீது இந்த செக்ஸ் குற்றத்தை சுமத்தலாம். “அப்படியெல்லாம் பெண்கள் துணிந்து செக்ஸ் புகார் கொடுக்கத் தயங்கமட்டார்களா” என்று நீங்கள் ஐயப்பட்டால் உங்களுக்கு இந்தக் காலப் பெண்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று பொருள். அவர்கள் இன்றைக்கு எந்தவித பொய்ப் புகார் கொடுக்கவும் ரெடி. ஏனென்றால் அவர்களுக்கு அதனால் முன்காலம் போல் சமூகத்தில் கெட்ட பெயரோ அவமானமோ ஏற்படுவது இல்லை. மேலும் இக்காலப் பெண்கள் பெரிசுகளின் அயிப்பிராயங்களைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. அதுபோல் புகார் கொடுக்கும் பெண் ஒரு ஹீரோயினாக, ஆண்களை எதிர்த்துப் போராடத் துணிந்த வீராங்கனையாக கொண்டாடப் படுவார்!

சில நாட்களுக்கு முன் ஒரு இசையரங்கில் இரு நிகழ்ச்சிகளுக்குமிடையே எல்லோரும் கேண்டீனுக்கு எழுந்து செல்லும் போது, ஒரு கிழவனார் தட்டுத்தடுமாறி இரு பக்க இருக்கைகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார். எதிலோ கால் இடறித் தத்தளித்து தன் முன்னால் சென்று கொண்டிருந்த பெண்மணியின் (இவரும் நடுத்தர வயதுதான்) தோளில் கைவைத்து தாங்கி நின்று விட்டார். அவ்வளவுதான். அந்த பாப் தலைப் பெண்மணி திரும்பி அந்த கிழவனைப் பார்த்து கண்டபடி ஆங்கிலத்தில் உரத்த குரலில் ஏசத் தொடக்கி விட்டார். “உன்னை ஏழு சட்டப் பிரிவுகளில் உள்ளே தள்ளிவிடுவேன்” என்று மிரட்டவும் செய்தார். இதனால் அரண்டு போன கிழவர், “அம்மணீ, எனக்கு முடக்கு வாதம் உள்ளது. கீழே விழ இருந்தேன். என்னையறியாமல் உங்கள் மேல் கைவைத்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று கம்மிய குரலில் கெஞ்சுகிறார். ஊஹுங், அந்த மேட்டுக்குடிப் பெண்மணி விடுவதாக இல்லை. சுற்றிலும் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இருந்தனர். அனைவரும் நமக்கெதுக்கு வம்பு என்று கம்மென்றிருந்தனர். அந்தக் கிழவனார் கூனிக் குறுகி தட்டுத் தடுமாறி வெளியே சென்றார். ஒருவர் கூட உதவவில்லை. இந்த நிலை உங்கள் ஒவ்வொருவருக்கும் நேரலாம். லிஃப்டில் அடைத்துக் கொண்டு செல்லும் நேரத்தில் ஒரு மூலையில் இருக்கும் தளத்தெரிவு பட்டனை அழுத்துவதற்காக நீங்கள் அவசரமாக கைநீட்டும் போது அங்கு நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மீது உங்கள் கரம் பட்டுவிடலாம். உடனே அவர் உங்கள் மீது இந்தச் சட்டத்தை எவிவிடும் சாத்தியம் உள்ளது. டேஞ்சர் ஐயா! ஆதலால் பொது இடங்களில் பெண்களைக் கண்டால் குறைந்த பட்சம் 10 அடியாவது இடைவெளி விட்டு நில்லுங்கள். உருப்படியாக வீடு வந்து சேரலாம்!

இப்போது நேற்றைய நிகழ்வுக்கு வருவோம். எப்படியெல்லாம் இந்தச் சட்டம் ஆண்களுக்கு எதிராக எய்யப்பட்டு ஆண்களை முழுதாக காயடித்து சமூகத்தில் இரண்டாம் தரப் பிரஜையாக மாற்றப் பயன் படுகிறது என்று பாருங்கள். திருமண நாளன்று இன்னொருவனுடன் ஓடும் புதுமைப் பெண்களைத் தண்டிக்க ஒரு சட்டமும் இல்லை. அந்த கணவனாகப் போகிறவன் மாலையும் கையுமாக “பே பே” என்று விழித்துக் கொண்டு நிற்கிறான். மணப்பெண்ணோ இன்னொருவனுடன் அன்று விடியற்காலையே “ட்ரியோ” என்று ஓடிவிட்டாள். போலீசார் பிடித்து வந்தால், “எனக்கு இவனுடன் போவதுதான் இஷ்டம்” என்கிறாள். அவளை விட்டு விடுகிறார்கள். அந்த ஆண் பட்ட அவமானம், தலை குனிவு இதெல்லாம் பற்றி சமூகத்திற்குக் கவலையில்லை. சட்டத்திலும் நிவாரணமில்லை. அத்துணை கேவலமான நிலைமை!

இந்த நாட்டில் ஒரு ஆண் பிறந்தவுடனேயே ஒரு கிரிமினல் குற்றவாளியாகிறான். அவனைப் பெற்றெடுத்த குற்றத்தை அவனுடைய பெற்றோர்களும் புரிகிறார்கள். அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு. It is only a question of time. சம்பிரதாயமான முறையில் குற்றம் பதிவு செய்யப்பட சில ஆண்டுகள் பிடிக்கலாம். அவ்வளவே!

இனி செய்தி:

சென்னை, அக்.28- 2009. தினத்தந்தி

நள்ளிரவில் ஜி.ஆர்.டி. நட்சத்திர ஓட்டல் அருகே நடுரோட்டில் காதலர்கள் இருவர் கடும் சண்டை போட்டபடி இருந்தனர். காதலர் காதலியை சரமாரியாக அடித்து உதைத்தார். காதலி கதறி அழுதார். இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டனர்.

போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும், எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அசோக்நகரில் வசிப்பதாகவும் கூறினார். அவருடன் வந்த வாலிபரின் பெயர் கார்த்தீஸ் (32) என்பதாகும். என்ஜினீயரிங் பட்டதாரியான கார்த்தீஸ் தியாகராயநகரில் கால்சென்டர் நடத்தி வருகிறார்.

கார்த்தீசும், கலாவும் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளனர். `அலைபாயுதே’ சினிமா பாணியில் இருவரும் முதலில் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்து கலாவின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். கார்த்தீசின் தாயார் இதை கடுமையாக எதிர்த்தார். பின்னர் அவரும் திருமணத்துக்கு சம்மதித்தார். இருவரும் வெவ்வேறு சாதி என்றாலும் காதலில் இணைந்து ஊரறிய திருமணத்துக்கு தயாரானார்கள்.

இந்த நிலையில், கலாவை ஊரறிய திருமணம் செய்துகொள்ள கார்த்தீஸ் திடீரென்று மறுத்தார். இதற்கு நியாயம் கேட்க சென்றபோதுதான், கலாவுக்கும், கார்த்தீசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்தீஸ் கலாவை அடித்து உதைத்தது தெரியவந்தது. போலீசார் கார்த்தீசிடமும், கலாவிடமும் கவுன்சிலிங் மூலம் பேசினார்கள். கார்த்தீஸ் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கலா சொன்னார்.

ஆனால் கார்த்தீஸோ, படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி போல கலாதான் என்னை விரட்டி, விரட்டி காதலித்து ரகசிய திருமணத்தையும் என்னோடு நடத்திக்கொண்டார். நீலாம்பரி போன்ற குணம் கொண்ட அவரோடு நான் வாழமாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார். அப்படியானால் ஜெயிலுக்கு போகவேண்டும் என்று போலீசார் கூறினார்கள். ஜெயிலுக்கு போகவும் தயார், ஆனால் கலாவோடு வாழமாட்டேன் என்று கார்த்தீஸ் கூறினார்.

இதனால் போலீசார் வேறு வழியில்லாமல் கலாவிடம் புகார் வாங்கி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கார்த்தீசை நேற்று கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தும்வரை போலீசார் சமாதானம் பேசி பார்த்தனர்.

கலாவும், “கார்த்தீசை ஜெயிலுக்கு அனுப்புவது எனது நோக்கமல்ல என்றும், அவர்மீது அளவில்லாத காதல் கொண்டுள்ளேன், அவர்தான் என்றைக்கும் எனது கணவர், அவர் ஜெயிலுக்கு போய் திருந்தி வந்தால் நல்லபடியாக அவரோடு வாழ தயார்” என்றும் போலீசாரிடம் கூறினார்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல் கார்த்தீஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். கார்த்தீஸ் மீது போட்டுள்ள வழக்கு தற்செயலாக நடந்துவிட்டது என்றும், அது நிரந்தரம் அல்ல என்றும், கண்டிப்பாக அவரோடு வாழ்ந்தே தீருவேன் என்றும் கலா போலீசாரிடம் உறுதிபட கூறினார்.

=============

இப்போதெல்லாம் பல ஆண்கள் இதுபோன்ற பெண்களுடன் வாழ்வதைவிட சிறைவாசமே மேல் என்னும் முடிவை எடுக்கின்றனர். இதேபோல் தன்னுடன் வாழாத முன்னாள் மனைவிக்கு அநியாயமாக பணம் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தும் நீதிமன்ற ஆணைகளுக்கும் பணியாமல் சிறை செல்லவும் இக்காலக் கணவர்கள் தயாராக இருக்கின்றனர்!

பெண் குழந்தைகளை 39 முறை கத்தியால் குத்திப் படுகொலை செய்த தாய்!

இந்தியாவின் நீதிமன்றங்களில் வரும் பெரும்பான்மையான விவாகரத்து வழக்குகளில் குழந்தைகளின் காப்புப் பொறுப்பு தாயின் வசம்தான் முழுமையாக ஒப்படைக்கப்படுகிறது. எவ்வளவுதான் தந்தை தன் குழந்தைகளின் மீது பாசம் வைத்திருந்தாலும், அவர்களின் நல்வாழ்வுக்காக எத்தகைய தியாகமும் செய்பவனாக இருந்தாலும், அதே நேரத்தில் அந்தத் தாய் குழந்தைகள் மீது சிறிதளவும் பாசம் இல்லாதவளாக, “தான், தன் சுகம்” என்று இருப்பவளாக இருந்தாலும், இந்திய நீதிமன்றங்கள் குழந்தைகளை தந்தைகள் வசம் ஒப்படைப்பதில்லை.

தந்தை என்பவர் வெறும் “விசிட்டர்” என்பது நீதிமன்றங்களின் முடிபு. ஆனால் நடைமுறையில் அந்த “விசிட்டுகள்” கூட அந்தத் தந்தைகளுக்குக் கிட்டுவதில்லை. ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி தந்தையர்களிடம் குழந்தைகளைக் காண்பிக்காமல் ஏமாற்றும் தாய்க்குலங்கள் அநேகம். அந்தக் கணவன் பிறகு கோர்ட்டுக்கு நடையாய் நடந்து “எனக்கு குழந்தையைக் காண்பியுங்கள்” என்று போராட வேண்டும்!

ஆனால் இதில் முரண்நகை என்னவென்றால், குழந்தைகளைக் கண்னால் காண்பதற்குக் கூட வாய்ப்புக் கிட்டுகிறதோ இல்லையோ, அந்த மாஜி மனைவியின் சிலவுக்கும் குழந்தைகளின் பராமரிப்புச் சிலவுக்கும் மாதா மாதம் அந்த கணவன் தான் பணம் கொடுத்து அழவேண்டும்! இல்லாவிட்டால் சிறை தண்டனை!!

இத்தகைய ஒருதலைச் சார்பான, ஆணுக்கு எதிரான, சட்டங்கள், தீர்ப்புகள் மலிந்தது இந்த நாடு.

சரி, இந்த நாட்டில் பிறந்த ஒரு தாயார் தன் குழந்தைகளை என்ன செய்தார், விவாக ரத்து பெற்ற தன் கணவன் மீது கொண்ட வெறுப்பால் தன் குழந்தைகள அவள் எப்படிக் கொன்றாள் என்பதை வாசியுங்கள்:-

2 மகள்களை கொன்ற இந்திய பெண். 33 ஆண்டு சிறைத் தண்டனை.

லண்டன், செப்.23- 2009

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷைர் நகரில் வசிக்கும் இந்தியப்பெண் ரேகா குமாரி பேக்கர். 41 வயதான இவர் அங்கு உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார். அவருக்கு டவீனா பேக்கர், ஜாஸ்மின் பேக்கர் என்று 2 மகள்கள் இருந்தனர். டவீனாவுக்கு வயது 16. இளையவளுக்கு வயது 13. இருவரையும் கடந்த 2007-ம் ஆண்டு ஜுன் மாதம் 13-ந்தேதி அவர்களது தாயார் கத்தியால் குத்தி கொன்றார். 39 முறை கத்தியால் குத்தினார்.

இரு பெண் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் உயிர் பிரிந்த பின்னும் மேன்மேலும் கத்தியால் குத்திக் கொண்டெ இருந்திருக்கிறார்.
மகள்களை யார் கவனித்துக்கொள்வது என்பது தொடர்பாக அவருக்கும், அவரது முன்னாள் கணவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தான் அவர் கொலை செய்தார்.

Indian Express reports:

Kumari-Baker’s ex-husband, businessman David Baker, said “not a day passes” when he does not think of Davina and Jasmine. “I was robbed of my daughters by an act of calculated viciousness,” he said.

Times Of India reports:

The elder daughter Davina Baker, 16, was stabbed 39 times while her sister Jasmine Baker, 13, was attacked 29 times with a kitchen knife in a frenzied attack by their mother in 2007.

அந்த ரேகா குமாரி என்னும் பெண் பேயின் திருமுகத்தைக் கண்டு “ஆகா, இவளல்லவா, பெண்குலத்திலகம்” என்று துதிபாடத் துடிப்போருக்காக அந்தப் பெண்ணின் படத்தை இந்த வலைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

மனோரமா ஆச்சி, எங்கே இருக்கீங்க? அந்த புதுமைத் தாய் தன் இளம் பெண் குழந்தைகளை 39 முறை கத்தியால் குத்தியதற்கும் அவளுடைய கணவனின் ஆண்மையின்மை தான் காரணமா? “தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் கொல்ல உரிமை வேண்டும்” என்பதற்காக எப்போது போராட்டம் தொடங்கப் போகிறீர்கள்?

வயதானவர்கள் கதி அதோகதிதான்

பெற்றோர்களின் கதி வருங்காலத்தில் இப்படித்தான் இருக்கும். இப்போதே முதியோர் இல்லங்கள் பெருமளவில் தொடங்கப்பட்டு விட்டன. வசதியுள்ளோர் அத்தகைய இல்லங்களில் தங்குகின்றனர். ஏழை முதியோர்கள் பாடு?

————————————-
கோவை, செப்.18- 2009 . செய்தி – தினத்தந்தி

மகன்கள் மற்றும் மருமகள்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு 73 வயது மூதாட்டி கோவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு இந்திராநகரை சேர்ந்தவர் ராஜம்மாள்(வயது 73). இவரது கணவர் வடிவேலு இறந்து விட்டார். கணவர் இறந்த பிறகு கூலி வேலை செய்து சொந்தமாக வீடு கட்டினார்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனது மகன்களான ஞானவேல்(42) மற்றும் செல்லத்துரை (40) ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் 2 மகன்களும் தங்களின் வயதான அம்மாவுக்கு வீட்டின் ஒரு ஓரத்தில் சிறு அறையை மட்டும் ஒதுக்கி விட்டு, வீட்டின் முழு பகுதியையும் ஆக்கிரமித்து கொண்டனர்.

அது மட்டுமல்லாமல் தாய்க்கு உணவு வழங்குவதையும் நிறுத்திக்கொண்டனர். செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. தள்ளாத வயதிலும், கூலி வேலை, வீட்டு வேலை செய்து ராஜம்மாள் பிழைப்பை நடத்தி வருகிறார். இதனால் இவரை மகன்களும், மருமகள்களும் மிரட்டி வருகின்றனர்.

தனது பெயரில் உள்ள வீட்டை ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல், தன்னை வெளியேற்ற சதி நடப்பதை அறிந்த, ராஜம்மாள், கோவை 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வடவள்ளி வக்கீல் வெண்ணிலா மூலம் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.

எனவே தனது 2 மகன்கள் மற்றும் மருமகள்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்றும், தன்னை அவமரியாதை செய்யக்கூடாது என்றும், தனது பெயரில் உள்ள வீட்டை ஆக்கிரமித்து உள்ள மகன்களை காலிசெய்து கொடுத்தால், அதை வாடகைக்கு கொடுத்து, பிழைப்பு தேடிக்கொள்வேன் என்றும், அல்லது மாத வாடகையாக தலா ரூ.750 வழங்க வேண்டும் என்றும், மேலும் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கில் கூறியிருந்தார்.

பாதுகாப்பு அளிக்க உத்தரவு

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஜோதி, வடவள்ளி போலீசாரை அழைத்து, வயதான ராஜம்மாளுக்கு, மகன்கள் மற்றும் மருமகள்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டர்.

ஜீவனாம்சம் ,வீட்டை காலி செய்வது மற்றும் வாடகை குறித்த புகார்கள் மீதான விசாரணைக்காக வழக்கு வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வன்முறையில் ஈடுபட்ட மனைவி மீது வழக்கு

புதுடில்லி : கண்டபடி திட்டினாள் மனைவி; பொறுத்துப் பார்த்த கணவன், கோர்ட்டுக்குப் போய் விட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி; பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் சிறிய அளவில் அவ்வப்போது மோதல் வரும். ஆனால், அப்போதே சரியாகிவிடும். சில சமயம், பெரிதாக வெடித்துவிடும். இப்படித்தான் கடந்தாண்டு ஒரு நாள் சாதாரண விஷயம், பெரிதாகி இவர்களிடையே மோதலை அதிகப்படுத்தியது.

“பள்ளிக்கு நேரமாகி விட்டது; காரில் இறக்கி விடுங்கள்’ என்று மனைவி கூறியிருக்கிறாள். ஆனால், “எனக்கும் வேலை இருக்கிறது; என்னால் முடியாது’ என்று கணவன் கூறி விட்டார். இது தான் நடந்தது. ஆனால், இது பெரிதாகி இருவரிடையே மோதல் வெடித்தது. “சரி, என் தந்தை உன்னைக் காரில் போய் இறக்கி விடுவார்’ என்று கணவர் சொல்ல, “என்னை இறக்கி விட உங்களால் முடிந்தால் சரி; மாமனார் உதவியை நான் கேட்கவில்லை’ என்று கணவனைக் கண்டபடி திட்டியிருக்கிறாள் மனைவி.

இது மட்டுமின்றி, தன் குடும்பத்தினரை அழைத்துச்சென்று, கணவரையும், அவர் தந்தையையும் தாக்க முயற்சி செய்துள்ளார் மனைவி. அறையில் அடைத்து சில ரவுடிகளை வைத்தும் தாக்க முயற்சி நடந்துள்ளது. மாமனாருக்கு சில அடிகளும் விழுந்துள்ளது. இதனால், வெறுத்துப்போன அவரது கணவர், கோர்ட்டில் மனைவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். “ஸ்ருதி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது. அதனால், அவர் மீது விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்’ என்று மாஜிஸ்திரேட் ரவீந்தர் சிங் தெரிவித்தார்.

செய்தி – தினமலர் – 20.08.2009

பிரிவுகள்:பொய் வழக்கு குறிச்சொற்கள்:, , , ,

ஆணின் உயிர் ஒரு செல்லாக்காசு!

ஒரு பெண் புகார் கொடுக்கிறார் என்றால் அதை உடனே கவனிக்கவேண்டியது நம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் விதிக்கப்பட்ட கடமையல்லவா!

அதுவும் தன் கணவன்மேல் புகார் கொடுத்தால் அதை தலைபோகிற அவசரமாகக் கருதி அந்தப் பெண்பாவையின் துயர் துடைக்க காவல்துறை அதிவேகமாக – அது இரவு நேரமாக இருந்தாலும் சரி – விரைந்து சென்று அந்த குற்றவாளியை (அதுதான் கணவன் – சட்டத்தின் கண்முன் ஒவ்வொரு மணமான ஆணும் குற்றவாளிதானே!) கைது செய்து அவனைச் செவ்வனே “விசாரணை” செய்து அந்தப் பெண்ணுலத் திலகத்தின் மனத்தில் மகிழ்ச்சியூட்ட வேண்டாமா! இதுதானே நம் சமூகத்தின் கடமை. அதற்காகத்தானே அடுக்குமேல் அடுக்காக பல ஆணழிப்புச் சட்டங்களை உருவாக்கி பழி வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது செய்தி:

முதலில் இன்றைய (ஆகஸ்டு 19, 2009) தினமலரில் வெளிவந்தது:

நீலாங்கரை: மனைவி கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நீலாங்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யார் அடுத்த பாலூரை சேர்ந்த நந்தன் என்பவரின் மகன் ரமேஷ் (34). இவரின் மனைவி உஷாராணி (32).கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் இறால் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, உடன் வேலை பார்த்த உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின், கொட்டிவாக்கம், வெங்கடேசபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, பிரியதர்ஷினி (12) என்ற மகளும், கீர்த்திவாசன் (9) என்ற மகனும் உள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.

ரமேஷ் நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, உஷாவுடன் தகராறு ஏற்பட்டது.இதில், மனைவியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 108 எண்ணுக்கு போன் செய்த உஷா, தன்னை கணவர் கொலை செய்ய முயற்சிப்ப தாக புகார் செய்தார்.இது தொடர்பாக, நீலாங் கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இரவுப் பணி பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் மூன்று போலீசார், வெங்கடேசபுரம் சென்று தகராறில் ஈடுபட்ட ரமேஷை நீலாங்கரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.பின், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரை விசாரித்தனர்.

விசாரணை முடிந்ததும் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கி, வீட்டிற்கு அனுப் பினர். போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறிய ரமேஷ், திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென் றனர். அங்கு மருத்துவர்கள் கை விரித்து விட்டதால், அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு ரமேஷை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரமேஷ் இறந்த தகவலறிந்து அவரின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களை போலீசார் சமாதானப் படுத்தினர். பின், ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இச்சம்பவம் குறித்து ரமேஷின் உறவினர்கள் கூறுகையில்,”நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவு உஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வந்தனர்.

வீட்டிற்கு அருகிலேயே ரமேஷை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றனர். அங்கும் ரமேஷை போலீசார் தாக்கினர்.போலீசார் அடித்ததால் தான் அவர் இறந்தார். எனவே, ரமேஷை கண்மூடித்தனமாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அவரின் உடலை பெற்றுக் கொள்வோம்,’ என்றனர்.இது குறித்து, துரைப்பாக்கம் உதவிக் கமிஷனர் முரளி கூறுகையில்,அவரின் உடலில் எந்தவித காயமும் இல்லை. இதயகோளாறு காரணமாக அவர் இறந்ததாக கூறப் படுகிறது.இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்,’ என்றார். ரமேஷ் மரணம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
————————————-
Times of India Reports:

Ramesh’s relatives had a different version about the whole incident. According to them he had been staying away from his wife and was living with his sister. He was caught by a vehicle checking team when he was riding a two-wheeler and his bike was seized as he had no documents to support them. He had told the police that he would produce the papers for the two-wheeler and had gone to the house in Kottivakkam only to pick up the vehicle documents. His wife Usha thought that he had come to torture her and called the police, his relatives alleged. They said Ramesh had no history of any illness.

Ramesh had married Usha after a brief courtship, around
16 years ago. Police said the couple used to have regular fights and that they had been staying separately for a few months.

———————————

அடுத்து தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தி:-

ஆலந்தூர், ஆக.19-

குடும்ப தகராறில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காதல் திருமணம்

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவரது சொந்த ஊர் செய்யூர் அருகே உள்ள பாலூர் கிராமம் ஆகும்.

இவருடைய மனைவி உஷாராணி (32). இவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ரமேஷ்-உஷாராணி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தகராறு

உள்ளகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ரமேஷ் வேலை பார்த்து வந்தார். ரமேஷ் மது அருந்தி விட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் கடந்த ஒரு வாரமாக ரமேஷ் வீட்டிற்கு வராமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. உடனே இது பற்றி உஷாராணி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

உடனே நீலாங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், 4 போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

சாவு

குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்த ரமேசை போலீசார் வீட்டின் முன் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மயங்கி விழுந்தார்.

உடனே போலீசார் ரமேசை தூக்கிக் கொண்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.

இதையடுத்து போலீசார் தங்கள் காரில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.

மறுப்பு

இது பற்றிய தகவல் கொட்டிவாக்கம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. ரமேசின் உறவினர்கள் அடையாறில் உள்ள மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து விட்டதாக கூறி உடலை வாங்க மறுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அடையாறு துணைக்கமிஷனர் திருஞானம், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று சமரசம் பேசினார்கள். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து இருப்பதால் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நீண்ட நேரத்திற்கு பின் தனியார் மருத்துவமனையில் இருந்த ரமேஷ் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

நடவடிக்கை

இது பற்றி போலீசார் கூறுகையில், “குடிபோதையில் ரமேஷ் இருந்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். சிறு வழக்கு போட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறினோம். ஆனால் ரமேஷ் போலீஸ் நிலைய வாசலில் மயங்கி விழுந்தார். உடனே போலீசார் ரமேசை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டதால் ரமேஷ் இறந்து இருக்கலாம்” என்று தெரிவித்தனர்.

ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ரமேசின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த நிலையில் ரமேசின் மர்ம சாவு பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்திட சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ. விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை முடிவின் அறிக்கை பெற்றபிறகு தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் கொட்டிவாக்கம், நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பரந்த மனப்பான்மையுடன் மாப்பிள்ளை தேவை!

இதை வாசிப்பவர்களில் யாரேனும் அதுபோல் “பரந்த மனப்பான்மை” கொண்டவர் மட்டுமின்றி, “மனைவி என்பவருக்கு எந்தக் கடமையும் கிடையாது; அவரிடமிருந்து எந்தவித “எதிர்பார்ப்பும்” இல்லை” என்ற கொள்கையும் உடையவர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாமே!

ஆனால் இதுவரை நிகழ்ந்துள்ள மண முறிவுகளைக் காணும் போது, சினிமா நட்சத்திரங்களின் திருமணங்கள் பொதுவாக விரைவில் “அழுகும் பொருட்கள்” (They have a very low shelf life!) வகையைச் சார்ந்தவை ஆயிற்றே!

சரி. இப்போது செய்தியைப் பார்ப்போம்!

“‘பரந்த மனப்பான்மையுடன்’ எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மணமகன் வேண்டும்” – நடிகை சங்கவி பேட்டி

‘அமராவதி’ படத்தில், அஜீத் ஜோடியாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், சங்கவி. `பொற்காலம்,’ `ரசிகன்,’ `கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து சங்கவி 100 படங்களை தாண்டி விட்டார். இவருக்கு, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதுபற்றி நிருபரிடம் சங்கவி கூறியதாவது:-

“சினிமாவில் எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். மீனா, ஸ்ரீதேவி, மகேஸ்வரி, விந்தியா, ரம்பா, சினேகா, சங்கீதா, சந்தியா ஆகிய அனைவரும் என்னிடம் நட்புடன் பழகி வருகிறார்கள். இவர்களில் ரம்பா, சினேகா, சந்தியா ஆகிய மூன்று பேர்களை தவிர, மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அதனால் எங்க வீட்டில், எனக்கும் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.

எனக்கு வரப்போகிறவர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருக்க வேண்டும். நல்லவராக, என்னை நன்றாக பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும். “நான் ஒரு நடிகை” என்று குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்காமல், பரந்த மனப்பான்மை உடையவராக இருந்தால் நல்லது.
அதோடு நிறைய படித்தவராக இருந்தால் ரொம்ப நல்லது. சினிமா உலகை சேர்ந்தவராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் என்னை சார்ந்து இருப்பவராக இருக்கக்கூடாது.

இவ்வாறு சங்கவி கூறினார்.
செய்தி: தட்ஸ்தமிழ்.
பிரிவுகள்:பொய் வழக்கு குறிச்சொற்கள்:, ,