தொகுப்பு

Archive for the ‘பெண் விடுதலை’ Category

கூடு விட்டுக் கூடு பாயும் சுந்தரி!

இளஞ்செம்பூர் அருகே வீரம்பலில் முதல் கணவரை பிரிந்த நிலையில், இரண்டாவதாக மணமுடித்த கணவர் ஓட்டம் பிடித்ததால், கர்ப்பிணி மனைவி ஐகோர்ட் உத்தரவுபடி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இளஞ்செம்பூர் அருகே வீரம்பலை சேர்ந்த முத்துக்குமாரி (23) அதே ஊரை சேர்ந்த ஞானராஜ் என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். குழுந்தை ஒன்றும் பிறந்தது. வேலைக்காக ஞானராஜ் வெளிநாட்டுக்கு சென்ற நிலையில், முத்துகுமாரிக்கும் அதே ஊரை சேர்ந்த இருதயராஜுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இதற்கு முத்துக்குமாரி வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்காமல், இருவரையும் கணவன் மனைவியாக சேர்த்து, இருதயராஜிடம் 50 ரூபாய் பத்திரத்தில் , முத்துகுமாரியை பிரியமாட்டேன் என எழுதி வாங்கி கொண்டு, சென்னைக்கு அனுப்பி வைத்தனர். (அது சரி ஐயா, அந்த முதல் கணவன் கதி என்ன? சட்டப்படி விவாக ரத்து செய்யாமல் இன்னொருவனுடன் இவள் எப்படி இருக்கலாம்? இதையே அந்த முதல் கணவன் செய்திருந்தால் உடனே அவனை கைது செய்திருப்பார்களே! இப்போது தெரிகிறதா இந்திய சட்டங்களின் ஒருதலைப் பட்சம்!!!)

ஐந்து மாதங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த இருதயராஜ், முத்துக்குமாரியை கர்ப்பிணியாக்கி விட்டு தலைமறைவானார். தலைமறைவான இருதயராஜ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ,மதுரை ஐகோர்ட் கிளையில் முத்துக்குமாரியின் தந்தை ஞானஒளிவு மனு செய்தார். அதன்படி தலைமறைவான இருதயராஜ் மீது வழக்கு பதிவு செய்ய, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ,இளஞ்செம்பூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

செய்தி: தினமலர் : ஜனவரி 11,2011

Advertisements

மிடில் கிளாசுக்கும் வந்தாச்சு டைவர்ஸ் கலாசாரம்:கூட்டுக் குடும்பம் ஒழிந்ததால் ஏற்பட்ட விபரீதம்

Increasing divorces in Indiaமேல்தட்டு மக்களிடமே அதிகமாக காணப்பட்ட விவாகரத்து கலாசாரம், தற்போது நடுத்தர குடும்பங்களுக்கும் வந்து விட்டது.

நகர்புறங்களில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தினரிடையே, சமீபகாலமாக இந்த விவாகரத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் தவறான புரிந்து கொள்ளல், அவர்களின் பிரிவுக்கு வழிவகுத்து விடுகிறது.

வேகமாக மாறி வரும் இன்றைய கலாசாரத்தில், மேல்தட்டு மக்களிடமும், பிரபலங்களிடமும் இதுபோன்ற பிரிதல் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகிறது.இவர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், முதல் திருமணத்தை கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுகின்றனர். விவாகரத்து பெற்ற ஒரு சில மாதங்களிலேயே, இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர். சமீபகாலமாக, இந்த விவகாரத்து கலாசாரம் டில்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தினரிடையேயும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து உளவியல் நிபுணர்கள் கூறியதாவது:

நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு எளிதாக வேலை கிடைத்து விடுகிறது. மேலும், நட்பு வட்டாரமும் பரந்து விரிந்துள்ளது. எனவே, இவர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்வது என்பது பெரிய வேலையாக இல்லை. அதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. நகரங்களில் கூட்டு குடும்ப கலாசாரத்துக்கு பெரும்பாலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதனால், திருமணத்தின் மதிப்பு இவர்களுக்கு தெரிவது இல்லை.

மேலும், கணவன், மனைவி என, இருவருமே வேலைக்கு செல்வதால், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதற்கான நேரமும் மிகக்குறைவாக உள்ளது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் குறைந்து விட்டது. பெரும்பாலானோர் பிடிவாதமாக உள்ளனர். நகர்புறங்களில் விவாகரத்து அதிகரிப்பதற்கு இவையெல்லாம் முக்கிய காரணம்.இருந்தாலும், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போதும், நம் நாட்டில் விவாகரத்து மிகவும் குறைவாகவே நடக்கிறது. ஆனால், ஆண்டுக்கு ஆண்டு, அதன் அளவு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

நகர்புறங்களில் வசிப்போர், குடும்ப வேலைகளை, நுகர்வோர் மனப்பான்மையுடன் அணுகுகின்றனர். திருமணம் என்பதை, ஏதோ ஒரு பொருளை வாங்குவது போல் கருதுகின்றனர். அதில் தங்களுக்கு திருப்தி இல்லையென்றால், அந்த பொருளுக்கு பதிலாக வேறு ஒரு பொருளை வாங்குவது போல், விவாகரத்து வாங்கி விட்டு, இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர்.

இவ்வாறு உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

செய்தி: தினமலர் : ஜனவரி 16,2011.

ஆகையினால் திருமணம் செய்வீர் ஆண் மக்களே!

கணவனை உருட்டுகட்டையால் தாக்கி கொன்ற மனைவி கைது!

பல்லடம்: கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜன் (38); கூலி தொழிலாளி. இவரது மனைவி கருப்பாத்தாள் (35). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இருவருக்கும் இடையே குடும்ப தகராறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசம் அடைந்த கருப்பாத்தாள், அருகில் கிடந்த உருட்டு கட்டையால் கணவனை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த ராஜனுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது; மேல் சிகிச்சைக்காக நள்ளிரவு 12.00 மணிக்கு கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனை செல்லும் வழியில் ராஜன் உயிரிழந்தார். கருப்பாத்தாளை, பல்லடம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

செய்தி: தினமலர்

சித்தப்பாவை திருமணம் செய்த பெண்

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியில், முறைதவறி சித்தப்பாவை திருமணம் செய்த பெண், பெற்றோரை உதறி விட்டு சென்றார்.

தினமலர் செய்தி இது.

ஆனால் இந்தியாவில் சட்டமியற்றுபவர்களும், தீர்ப்பளிப்பவர்களும் தங்கள் மனத்தில் தீர்மானமாகக் கொண்டுள்ள கருத்தாக்கம் என்னவெனில், பெண்கள் செக்ஸ் மீது லவலேசமும் விருப்பமில்லாதவர்கள்; ஆணின் கட்டாயத்திற்காகவும், அவனது இச்சைக்கு உட்பட்டும்தான் ஒரு பெண் செக்ஸில் ஈடுபட வேண்டியிருக்கிறது – எனபதுதான். இந்த அடிப்படையில்தான் மெயின்டெனன்ஸ், ஜீவனாம்சம் போன்ற சட்டங்கள், தீர்ப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஒரு மனைவி கணவனைவிட அதிகம் சம்பாதித்தாலும், கணவன்தான் மெயின்டெனன்ஸ் கொடுக்கவேண்டும். குழன்தைகளை கண்ணால் காணக்கூட வாய்ப்புக் கிட்டவில்லையென்றாலும் அவர்களின் பராமறிப்புக்காக அவன்தான் பணம் கொடுத்து அழவேண்டும்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், மெயின்டெனன்ஸ் பற்றிய சட்டத்தின்படி (Sec. 125 CrPC) மனைவியை விவாகரத்து செய்தபின்னும்கூட பெயின்டெனன்ஸ் கப்பம் கட்டவேண்டும். (இந்த சட்டம் மட்டுமல்ல, ஒரு மனைவி இன்னும் பல சட்டப் பிரிவுகளின் கீழும் மேன்மேலும் மெயின்டெனன்ஸ் கேட்டுப் பெறலாம். Multiple instances of maintenance is possible, and are being obtained concurrently under different sections of Hindu Marriage Act, Hindu Marriage and Adoption Act, Sec 125 CrPC etc.)

இன்னொரு அவலம் கூட இருக்கிறது. அந்த சட்டத்தின் கீழ் கணவன் தன்னை கொடுமைபடுத்துகிறான் என்று ஒரு மனைவி வழக்கு தொடர்ந்தால், உண்மையில் அவன் கொடுமை செய்தானா என்பதை உறுதி செய்வதற்கு முன்னமையே கணவன் மெயின்டெனென்ஸ் கொடுக்க வேண்டும் என்று (interim maintenance) கோர்ட்டுகளால் கட்டாயப் படுத்தப் படுகிறான். இல்லாவிட்டால் சிறை வாசம்!

சரி, அப்படி மனைவியின் “கருமேனியை சிவப்பாக்கும் கிரீமுக்கு” கப்பம் கட்டி அழுகிறானே, அவனுக்கு மனைவியிடமிருந்து – தான் கொடுக்கும் காசுக்கு பிரதியாக – கிட்டுவது என்ன? ஒன்றும் கிடையாது! அவள் தன் பெற்றோருடனோ அல்லது வேறு எங்கேயோ, ஹாயாக கணவனை ஏ.டி.ம் மெஷினாக ஆக்கி பணம் கறந்து எஞ்சாய் பண்ணிக் கொண்டிருப்பாள்!

இதுதான் இன்றைய நிதர்சனம்.

ஆகையால் கட்டாயம் திருமணம் செய்துகொள்ளுங்கள் ஆண்மக்களே!!!

இப்போது இந்த கிளுகிளு செய்தியை வாசியுங்கள்:-

புத்தளம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (24); கட்டட தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் ரேவதி (21).ரேவதிக்கு பாலசுப்பிரமணியன் சித்தப்பா முறை. இவர்கள் இருவரும் பழகியதை யாரும் தவறாக எடுத்து கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் இவர்கள் வரம்பு மீறுவதை கண்ட ரேவதியின் பெற்றோர், அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். ரேவதி இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், தீபாவளி நாளில் வீட்டை விட்டு வெளியேறிய ரேவதியும், பாலசுப்பிரமணியனும் கோவிலில் திருமணம் செய்தனர். ரேவதியின் தந்தை சுயம்பு, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியனுடன் ஆஜரானார் ரேவதி. அவரை தங்களுடன் வந்து விடுமாறு பெற்றோர் கெஞ்சினர். ஆனால், ரேவதி, பாலசுப்பிரமணியனுடன் வாழ்வதில் உறுதியாக இருந்ததால், வீட்டில் இருந்து எடுத்த நகைகளை பெற்றோரிடம் கொடுத்து விட்டு, பாலசுப்பிரமணியனுடன் சென்றார்.

ஆதலினால் காதல் செய்வீர், ஆண்களே!

Farse called loveகாதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: கோர்ட்டு வளாகத்தில் கடத்தப்பட்ட புதுப்பெண்ணை போலீஸ் மீட்டது
மனைவி தன் பெற்றோருடன் வாழப்போவதாக கூறியதால் கணவர் கண்ணீர் விட்டு கதறல்

புதுச்சேரி, பிப்.11 – 2010. செய்தி – தினத்தந்தி

புதுச்சேரி அருகேயுள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தனஞ்செயம், டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருடைய தூரத்து உறவினர் சிவகாமி. இவர் புதுச்சேரி கவுண்டன்பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் தவசெல்வி (வயது 20).

உறவினர் என்பதால் தனஞ்செயம், தவசெல்வி இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதனால் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி காதல் பறவைகள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பதிக்கு சென்றனர். அங்கு தனஞ்செயம்-தவசெல்வி திருமணம் செய்து கொண்டனர்.

கோர்ட்டில் ஆஜர்

பின்னர் அவர்கள் கடலூர் வந்து பதிவு திருமணம் செய்தனர். இந்த நிலையில் மகளை காணவில்லை என்று சிவகாமி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தேடுவதை அறிந்த காதல் ஜோடியினர் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி கோர்ட்டுக்கு சென்றனர்.

2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோகுலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர் ஆனார்கள். அப்போது தாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதனை கோர்ட்டில் சரி பார்த்தனர். அந்த வேளையில் தவசெல்வி தனது காதல் கணவர் தனஞ்செயத்துடன் கோர்ட்டு வராண்டாவில் நின்று கொண்டு இருந்தார்.

பரபரப்பு

இந்த நேரத்தில் தவசெல்வியின் சித்தப்பா கோவிந்தன் தலைமையிலான கும்பல் அங்கு வந்தது. அவர்கள் தவசெல்வியை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது. இதனை தடுக்க முயன்ற தனஞ்செயன் உறவினர்களை அந்த கும்பல் தாக்கியது. பின்னர் கோர்ட்டுக்கு வெளியே வந்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தவசெல்வியை கடத்தி சென்றது.

இந்த சம்பவத்தால் கோர்ட்டு வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

தனிப்படை

இந்த நிலையில் கடத்தல் கும்பல் திருசிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

உடனே தனிப்படை போலீசார் நேற்று காலை அங்கு விரைந்து சென்று கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து புதுப்பெண் தவசெல்வியை போலீசார் மீட்டனர். இதைத்தொடர்ந்து கோவிந்தன், ஜீவா, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்பு புதுப்பெண் தவசெல்வி மற்றும் கைதான 3 பேரும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

15 நாள் காவல்

தவசெல்வியிடம் விசாரணை நடத்திய போது, தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை. தனது சித்தப்பா அழைத்ததால் சென்றதாக கூறினார். இதை தொடர்ந்து கோவிந்தன், ஜீவா, மணிகண்டன் ஆகியோரை புதுச்சேரி இரண்டாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

கைதான 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு கோகுலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதன் பேரில் அவர்கள் காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

புதுப்பெண் பல்டி

இதையடுத்து புதுப்பெண் தவசெல்வி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது தாய் மற்றும் அவரது குடும்பத்தினர், தனஞ்செயம் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு நின்று கொண்டு இருந்தனர். பின்பு மாஜிஸ்திரேட்டு கோகுலகிருஷ்ணன், தவசெல்வியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை. குடும்பத்தினரை பார்க்க சித்தப்பாவுடன் சென்றேன். தாயுடன் வாழ விரும்புகிறேன் என்று தவசெல்வி கூறினார்.

இதை கேட்ட தனஞ்செயம் (கணவன்) கதறி அழுதார். பின்பு சிறிது நேரம் கழித்து அவர் தனியாக வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். (வேறென்ன வழி அவனுக்கு? இதையே அந்தக் கணவன் செய்திருந்தால் அவனைக் கைது செய்து சிறையிலடைத்திருப்பார்கள்!)
—–

வெட்கமில்லாமல் இந்த ஆண்கள் இன்னமும் காதல் கத்தரிக்காய் என்று அலைகிறார்களே, அவர்களுக்கு புத்தி வர இன்னும் பல நிகழ்வுகள் இதுபோல் தொடர்ந்து நடக்கவேண்டும்!

பெத்தவங்க ஜெயிலுக்குப் போகணுமா? இந்தியப் பெண்களை கட்டிக்கோங்க!

இந்தியப் பெண்களின் மேம்பாட்டுக்காகவே (ரவிக், லிப்ஸ்டிக், பாப், ஏசி ரூம் சகிதம் கால்மேல் கால் போட்டு அமர்ந்து) அல்லும் பகலும் உழைத்து ஓடாகத் தேயும் மேட்டுக்குடிப் பெண்ணியவாதிகளும், டுபாக்கூர் என்.ஜி.ஓ-க்களும் ஒருசேரப் “போராடி”ப் பெற்றுக் கொடுத்திருக்கும் Sec 498A IPC மற்றும் D.V.Act போன்ற சட்டங்களைக் கையிலெடுத்து ஒரு ஆண்டுக்கு 75 ஆயிரத்துக்கு மேல் பொய் வழக்குகளைப் போட்டு, கணவனையும், அவனுடைய வயதான பெற்றோர்களையும், மற்றும் உடன் பிறப்புகளையும் கைது செய்து உள்ளே தள்ளும் போக்கு நீடிக்கும் வரை இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொள்வது கொடிய நச்சுப் பாம்பை இடுப்பில் கட்டிக் கொள்வது போலத்தான்!

விழிப்புடன் இருந்தால் பிழைப்பீர்கள்! ”இல்லை, நாங்கள் விட்டில் பூச்சிகளைப் போல் விழுந்து சாவோம்” என்றால் அது உங்கள் விதி!

இதோ, அண்மைய குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்துள்ள கட்டுரை:-

(பட்ங்கள் மேல் கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கலாம்)

இந்தியப் பெண்களா, ஐயையோ!

Your parents are sure to get arrested on false dowry charges if you marry an Indian Girl

Marrying Indian girls is dangerous

இந்தியப் பெண்கள் பொய்க் கேசு போட்டு உங்களை ஜெயிலுக்கு அனுப்புவார்கள்

498A case will haunt you if you marry an Indian girl

ம்ஹூம், பெண்கள் வன்முறையில் ஈடுபடவே மாட்டார்கள்!

கண்டக்டரை செருப்பால் அடித்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் குவிந்த பயணிகள்!

ஜனவரி 11,2010 – தினமலர்
=======================

இந்த செய்தியை நம்புகிறீர்களா, நீங்கள்?

பொது இடத்தில் நடந்த இத்தகைய வன்முறையை செய்தவர் நிச்சயம் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ஏன்? அப்படித்தானே ஐயா, இந்திய குடும்ப வன்முறைச் சட்டம் சொல்கிறது!

குடும்ப வன்முறையை ஆண் தான் செய்வான். பெண் தான் பாதிக்கப்பட்டவள் என்றும், ஆனால் கணவனின் தாய் பெண் கிடையாது என்றும் வரையறுத்திருக்கிறது இந்தச் சட்டம்.

ஆகையால் டிக்கெட் கேட்டதற்காக கண்டக்டரை கீழே தள்ளி செருப்பால் அடித்தவர் ஒரு பெண் வேஷம் போட்ட ஆணாகத்தான் இருக்கவேண்டும். பெண்ணியவாதிகளைக் கேட்டால் அப்படித்தான் சொல்வார்கள்.

அப்படி அது பெண்ணாகவே இருந்து விட்டால், தனக்கு அதுபோல் செருப்படி வாங்கும் பாக்கியம் கிட்டவில்லையே என்று ஏங்குவார்கள், சில கிழட்டு பெண்ணியவாத ஜொள்ளீஸ்வர போண்டா பதிவர்கள்!

இப்போது படியுங்கள் ஒரு அப்பாவி கண்டக்டரின் சோகக் கதையை!
========================

திருவொற்றியூர்:டிக்கெட் எடுக்கச் சொன்னதால், பஸ் கண்டக்டரை செருப்பால் அடித்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பயணிகள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவொற்றியூர் பஸ் நிலையத்திலிருந்து எழும்பூர் செல்லும் மாநகர பஸ் (தடம் எண்: 28) நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றது. பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ராணி (38) தனது இரு குழந்தைகளுடன் பஸ்சில் ஏறினார். ஒரு டிக்கெட் மட்டும் கேட்டார்.சிறுவர்கள் இருவருக்கும் மூன்று வயதுக்கும் மேல் ஆகிவிட்டதால், அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுங்கள் என கண்டக்டர் விக்ராந்த் (38) கூறினார்.

ராணியோ டிக்கெட் எடுக்க மறுத்தார். இதனால், “நீங்கள் டிக்கெட் எடுக்க வேண்டாம்; அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளுங்கள்’ என்றார் விக்ராந்த். “நான் தலைமைச் செயலகத்தில் வேலை செய்கிறேன். என்னையா இறங்கச் சொல்கிறாய்’ என கத்திய ராணி, திடீரென கண்டக்டரை பிடித்து கீழே தள்ளினார். நிலை தடுமாறி அவர் விழுந்ததும், அவரது செருப்பை எடுத்து கண்டக்டரை சரமாரியாக அடித்தார். இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் ராணியை மடக்கிப் பிடித்தனர்.

திருவொற்றியூர் காவல் நிலையம் வந்ததும், பயணிகளே ராணியை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஸ்சிலிருந்து பயணிகள் ஒட்டுமொத்தமாக காவல் நிலையம் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, விக்ராந்த் மட்டுமின்றி பயணிகளும் போலீசில் புகார் செய்தனர். பதிலுக்கு ராணியும் கண்டக்டர் தன்னை அடித்ததாக புகார் செய்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, ராணியை கைது செய்து, பின் ஜாமீனில் விடுவித்தனர். பெண் தாக்கியதில் காயமடைந்த விக்ராந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.