தொகுப்பு

Archive for the ‘பெண் பாவம்’ Category

ஆணை அடிமையாக்க அடாவடி நாடகம்

“குழந்தையைக் கடத்தி காதல் நாடகம் நடத்திய பெண்”

இன்னொருவர் குழந்தையை கடத்தி அது தனக்குப் பிறந்ததாகக் கூறி, தன்னுடன் இணைந்து வாழும்படி தனது முன்னாள் காதலரை நிர்ப்பந்திக்க கபட நாடகம் ஒன்றை அரங்கேற்றினார் ஒரு பெண்குலத் திலகம்

(பாவம், பேதைப் பெண்! பணத்திற்காக என்னென்ன ஃப்ராடெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது, இப்பாரில்! படாடோப வாழ்க்கைக்கோ பணம் தேவைபடுகிறது. அதை அள்ளிக் கொடுத்து அழுவதற்கோ ஒரு அபலை ஆண் தேவைபடுகிறான். பாவம் அந்தப் பெண்கள்!)

இப்போது செய்தி:-

Michelle Gopaulக்றைக்லிஸ்ட்[1] இணையதளத்தில் ஒரு பாலிவுட் இயக்குநர் கொடுத்த விளம்பரத்தில் – ஒரு இந்திய பெண் குழந்தை ஒன்று விளம்பரத்தில் நடிக்க தேவைப்படுகின்றது எனவும், ஒரு நாள் மட்டுமே நடித்தால் போதுமானது எனவும், 15, 000 டாலர் சம்பளம் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரு மாத வயதான ரோமா பட்டேலை அவர்களின் பெற்றோர் நடிப்பதற்கு சம்மதித்து வந்திருந்தனர்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன தெரியுமா, இந்த விளம்பரத்தைக் கொடுத்த பெண் – இந்தக் குழந்தையை எடுத்துச் சென்று தனது முன்னாள் காதலரிடம் இது அவர்களுக்கு பிறந்தது எனக் கூறி, அந்தக் குழந்தைக்கு முன்னாள் காதலர் தான் தந்தை எனக் கூறி அவருடன் இணைய முயற்சித்துள்ளார்.

ஆம் 25 வயதான் நியுயோர்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணும், மாடலும் ஆன மிச்சேல் கோபால் தான் இப்படி ரோமா பட்டேல் என்னும் அக்குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார். அந்தக் குழந்தையை தனக்குப் பிறந்ததாகக் கூறி தன்னுடன் இணைந்து வாழும்படி தனது முன்னாள் காதலரை நிர்பந்திக்க அவர் போட்ட ஒரு நாடகம் வினையில் முடிந்தது.

சம்பவம் நடந்த அன்று இணையதள விளம்பரத்தைக் கண்ட ரோமா பட்டேலின் பெற்றோர் டொரோண்டோ நகரின் எட்டோபிக்கோ பகுதியில் இருக்கும் மிச்சேல் கோபாலின் அலுவலகத்துக்கு சென்றிருந்தனர். அங்கு அவர்களைப் போல மேலும் மூன்று தம்பதிகளும் தமதுக் குழந்தைகளோடு வந்திருந்தனர். அவற்றில் ரோமா பட்டேல் தான் நடிப்பதற்கு சிறந்த குழந்தை என தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். பிறகு சில பல விண்ணப்பங்களை எழுதி தரும்படி அவர் கூறவே அக்குழந்தையை மிச்சேல் கோபால் பெற்றுக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தார்.

விண்ணப்பங்களை நிரப்பி விட்டு குழந்தையை தேடிய பெற்றோர்கள், அந்த அறைக்குள் நுழைந்துப் பார்த்தப் போது குழந்தையையும், மிச்சேல் கோபாலையும் காணாமல் திகைத்தனர். உடனடியாக காவலரிடம் புகார் கொடுத்தனர் அவர்கள்.

இதற்கிடையில் மிச்சேல் கோபால் அக்குழந்தையை ஒரு டாக்சியில் எடுத்துக் கொண்டு ஸ்காபுறோ பகுதியில் இருக்கும் அவரது காதலர் வீட்டுக்கு வந்தார். அங்குள்ளவர்களிடம் இந்தக் குழந்தை தனக்கும், அவரது காதலருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் பிறந்தது எனக் கூறி நாடகம் ஆடியுள்ளார். இதற்கு முன்னரே அவர் கர்ப்பமாக இருப்பதாக அனைவரிடம் கூறியும், பேஸ்புக்கில் பதிவிட்டும் வந்திருந்ததும் தெரியவந்துள்ளது.

காதலர் வீட்டில் இந்தக் குழந்தையைக் கவனித்த காதலனின் சகோதரிகள் மிச்சேல் கோபால் பொய் கூறுகின்றாரோ என சந்தேகம் கொண்டனர். இதற்கிடையில் செய்திகளில் குழந்தைக் காணமல் போனது அறிவிக்கப்பட்டு இருந்ததால், சகோதரிகள் காவல்துறைக்கு உடனே தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் மிச்சேல் கோபாலைக் கையும் களவுமாக கைது செய்தனர்.

குழந்தைக் கிடைத்தும் ரோமா பட்டேலின் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்தனர். நல்ல குடும்பத்து பெண்ணாகவும், எந்த வித குற்றப் பின்னணியும் இல்லாத மிச்சேல் கோபாலின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவருக்கு நீதிமன்றம் 2 1/2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டது.

இந்த சம்பவம் டொரோண்டோ நகரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நன்றி: தமிழ்ச்சரம்.

————-

[1] “கிரைக்லிஸ்ட்” (www.craiglist.com) என்னும் வலைத்தளம் பலான விளம்பரங்களுக்கு பெயர் போனது! அங்கு சென்று சிறிது எட்டிப் பாருங்கள் – நம் பண்பாடு மிக்க பெண்குலத் திலகங்களின் வண்டவாளங்களை! குடும்பப் பெண்கள் பலர் – ஆண், பெண் இருவர் இணைந்த (டகால்டி) உறவுகள் தேவை – என்றெல்லாம் விளம்பரம் கொடுத்திருப்பார்கள்! என்னமா அலையறங்க தெரியுமா, தவறான (வரைட்டியான) செக்ஸுக்கு!

ஆனால் நம் பெண்ணியவாதிகளும், அரசும், தீர்ப்பளிப்பவர்களும் அது போன்ற மேட்டுக்குடிப் பெண்களுக்கு சாதகமாகவும், அவர்களின் கணவர்களுக்கு எதிராகவும் தான் நடந்துகொண்டு வருகிறது.

இந்தப் போக்கு தொடருமானால் நம் கம்யூனிஸ்டுகள் ஓயாமல் கோஷமிட்டுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டம் எதிர்காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்தான் நிகழப் போகிறதோ என்று அச்சமாக இருக்கிறது! இப்பவே திருமணம், குடும்ப வாழ்வு போன்ற்வற்றை செல்லாக்காசாக்கி விட்டார்கள்!

Advertisements

கணவர் மீது சிரஞ்சீவி மகள் பரபரப்பு 498A புகார்

போட்டாய்ங்கய்யா, போட்டாங்கய்யா, 498ஏ கேசு போட்டாங்கய்யா!

இதுபோல் பெரிய மனுஷயங்கய்ய ரொம்பபேர் போட்டாத்தான், இந்த சட்டத்தோட முழு மகத்துவமும் மக்களுக்கும், ஆள்பவர்களுக்கும் புரியும்.

ஆனால் இது போதாது – அரசியர் பிரமுகர்கள், போலீஸ் உயரதிகாரிகள், பிரபல வக்கீல்கள், தீர்ப்பளிப்பவர்கள் – இவர்களையெல்லாம் இது போன்ற 498ஏ கேசுகள் பெருமளவில் என்று தீண்டுகிறதோ, அப்போதுதான் இதற்கு ஒரு விமோசனம் கிட்டும்.

அந்த நன்னாளுக்காக காத்திருப்போமாக!!

இப்போது செய்தி: (தினமலர்: மார்ச் 16,2011)

சிரஞ்சீவியின் மகள் போட்ட 498ஏ கேசுவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, போலீசில் புகார் செய்துள்ளார். மாமனார் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, ஐதராபாத் நகரைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஸ்ரீஜா தெரிவித்தார். பின்னர், ஐதராபாத் பஷீர்பாக் பகுதி மகளிர் காவல் நிலையத்திற்கு ரகசியமாக வந்த சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா, தன் புகாரை மகளிர் போலீஸ் நிலைய ஆய்வாளரிடம் வழங்கினார்.

இதையடுத்து, ஸ்ரீஜாவின் கணவர் ஷிரிஸ் பரத்வாஜ், அவரது தாய், தந்தையை, போலீசார், 14ம் தேதி இரவு கைது செய்தனர். (அதானே பார்த்தேன், 498ஏ போடறதெ இந்த பட்டாபிஷேகத்திற்காகத்தானே!)

காதல் திருமணம்:

சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் ஷிரிஸ் பரத்வாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியின் கடும் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜா, பரத்வாஜ் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீஜாவிற்கு குழந்தை பிறந்த பின், சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி – ஷிரிஸ் பரத்வாஜ் ஆகிய இரு குடும்பத்தினரிடையே பேசியதால் எதிர்ப்பை கை விட்ட சிரஞ்சீவி, மகள் ஸ்ரீஜாவை தன் குடும்பத்தில் இணைத்து கொண்டார்.
(படம் நன்றி – தட்ஸ்தமிழ்)

முந்தைய செய்திகள்:

1. தட்ஸ்தமிழ்:

ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா(21) தனது காதல் கணவர் ஸ்ரீரீஷ் பரத்வாஜ் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீஜா கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எனக்கும், பரத்வாஜூக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். தற்போது எங்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாகவே எனது கணவர் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துகிறார்.

திருமணத்தின்போதும், அதன் பிறகும் என இந்நாள் வரை பல கோடி ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளோம். அதெல்லாம் போதாது என்று தற்போது ரூ. 1.5 கோடி வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்துகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அவரது புகாரின்பேரில் ஸ்ரீஸ் பரத்வாஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (ஐபி.சி 498 ஏ) பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
========

2. தினமலர்:

காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார்

மார்ச் 15,2011

ஐதராபாத்: ரூ.1.5 ‌கோடி கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக நடிகர் சிரஞ்சீவியின் மகள் தனது கணவர் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.. ஆந்திராவில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.இவரது இளைய மகள் ஸ்ரீஜா(21) , நேற்று மத்திய குற்றப்பிரிவு மகளிர் போலீசில் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றினை அளித்தார். தனக்கும் (ஸ்ரீஜா) கணவர் ஸ்ரீஸ்பரத்வாஜூக்கும், கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எ‌ன்னை ( கணவர் ஸ்ரீஸ்பரத்வாஜ்) குடித்து விட்டு அடித்து சித்ரவதை செய்கிறார். ஏற்கனவே திருமணத்தின் போதும், பிறகும் என இதுவரை ரூ. பல கோடி வரதட்சணையாக கொடுத்தும் போதாது என்றும், கூடுதலாக ரூ. 1.5 கோடி வரதட்சணை வேண்டு்ம் எனக் கோரியும் அடித்து துன்புறுத்தினார். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீஸ்பரத்வாஜ், மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (ஐபி.சி 498-ஏ) பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடிபோதையில் தகராறு செய்த பெண் போலீஸ் கைது!

ஐயோ பாவம், இந்த அபலைப் பெண்கள்!

ஆண்கள்தான் அத்துணை அக்கிரமங்களும் செய்பவர்கள். அதனால்தன் ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே ஆண்களைக் கைது செய்து சிறையிலடைத்து, தண்டனையும் கொடுத்து விடுகிறார்கள். இந்தியாவில் ஒரு ஆண் தான் பிறந்த கணத்திலேயே ஒரு கிருமினல் ஆகிறான்!

இதோ பாருங்கள் இந்த அபலைப் பெண்ணின் கதையை!!

தினமலர் செய்தி:

“சரக்கு’ போதையில் ஆட்டம் போட்ட பெண் போலீஸ் : ஓசி, “சைடு டிஷ்’க்கு சண்டையிட்டதால், “சஸ்பெண்ட்”

சென்னை : குடி போதையில் ரகளை செய்து, ஓசி, “சைடு டிஷ்’க்கு கடை ஊழியரை தாக்கிய பெண் போலீஸ்,”சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

சென்னை, மயிலாப்பூர் எலைட் குடியிருப்பில் வசித்து வருபவர் ராணி(32); திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் கான்ஸ்டபிளாக உள்ளார். திருமணமாகாத நிலையில் இவர், குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினசரி குடித்துவிட்டு, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையில் உள்ள மிக்சர் கடையில், “இலவச சைடு டிஷ்’ வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இது போல், நேற்று முன்தினம் மாலை, அளவுக்கதிகமாக மது அருந்திய ராணி, ஒரு ஆட்டோ பிடித்து, லாயிட்ஸ் சாலை சென்றார். அங்குள்ள மிக்சர் கடையில், வழக்கமான, “சைடு டிஷ்’ கேட்டார். கடை ஊழியர் நடேசன் தர மறுக்கவே, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, நடேசனின் கையை முறுக்கிய ராணி, போலீஸ் பாணியில் ஒரு உதை கொடுத்தார். இதில், நடேசன் கீழே விழுந்த போது, கையில் கிடைத்த சிப்ஸ் மற்றும் காரத்தை அள்ளி, ஆட்டோவில் போட்டுக் கொண்டு புறப்பட்டார். அப்போது, நடேசன் சத்தம் போட்டதால், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, ஆட்டோவை நிறுத்தி, ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையம் கொண்டு சென்று, அங்கிருந்த போலீசாரிடம், போலீஸ் உடையில் இருந்த ராணியை ஒப்படைத்தனர்.

போலீசார், உடனடியாக ராணியை, ராயப்பேட்டை மருத்துவமனை சென்று, மது அருந்தியதற்கான சான்றிதழ் பெற்று, அவர் மீது வழக்கு பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

பெண் போலீஸ் ஒருவர், போலீஸ் உடையில் இருக்கும் போதே, மது அருந்தி கலாட்டா செய்த விவகாரம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. ராணி மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்,” சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

கடந்த 1997ம் ஆண்டு போலீசில் சேர்ந்த ராணி, திருச்சியில் பணியாற்றி வந்தார். அங்கும், பணியின் போது மது அருந்தியதால், கோவைக்கு மாற்றப்பட்டார். கோவையிலும் அதே நிலை தொடர, அங்கிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

==========================

சென்னை: சென்னையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். (செய்தி: தட்ஸ்தமிழ்)

திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ராணி (38). திருமணமாகாத இவர், மைலாப்பூர் அப்பு தெருவில் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறார்.

நேற்று முன்தினம் தலைமைச் செயலக காவல் பணியில் இருந்த ராணி மாலை 3 மணியளவில் பணி முடிந்து விடுதிக்குச் சென்றார். மாலை 6 மணிக்கு மீண்டும் இரவு பணிக்காக புறப்பட்டு வந்தவர் ஐஸ் ஹவுஸ் மார்க்கெட்டில் உள்ள `காமாட்சி ஹாட் சிப்ஸ்’ என்ற பேக்கரிக்குச் சென்றார்.

பிஸ்கட், கேக், சிப்ஸ் என வேண்டியதை வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றார். இதையடுத்து அவரைத் தடுத்த கடை ஊழியரான தமிழரசன் என்பவரை ராணி தாக்கினார்.

இதையடுத்து அக்கம் பக்கம் உள்ள கடைக்காரர்கள் ராணியைப் பிடித்து ஐஸ் ஹவுஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

அப்போது ராணி குடிபோதையில் இருந்தது தெரிய வந்ததால் உடனடியாக இது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணி மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். ராணியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மது அருந்தியதற்கான சான்றிதழை போலீசார் வாங்கினர்.

பின்னர் ராணி மீது குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ராணியின் செயல் குறித்து விசாரணை நடத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ராணி போதையில் ரகளை செய்வது இது புதிதல்ல. அவர் ஏற்கனவே கரூரில் வேலை பார்க்கும் போதும், அதன் பிறகு கோவையில் வேலை பார்க்கும் போதும் போதை புகாரில் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பணி மாறுதலாகி அவர் சென்னை வந்தார். சென்னையிலும் அவரது பழைய போதை பழக்க வழக்கம் தொடர்ந்தது.

மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த அவர், சமீபத்தில் தான் மீண்டும் பணியில் வந்து சேர்ந்தார் என்றார்.

கர்ப்பிணி டாக்டரை சித்திரவதை செய்த போலீஸ், பெண்கள் நல வாரியம் மௌனம் சாதிப்பது ஏன்?

எந்த ஒரு வழக்கிலும், ஒருவரை கைது செய்யும் போது, எந்த மாதிரியான நடைமுறைகளை போலீசார் பின்பற்ற வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எனினும், ஆந்திராவில் இருந்து கோவை வந்த தனிப்படை போலீசார், பெண் டாக்டரை கைது செய்து, அவரை சட்ட ரீதியான உதவிகளை பெற முடியாத அளவுக்கு துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மனிதாபிமான அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குடும்பத் தகராறு வழக்கில், கோவை பெண் டாக்டரை கைது செய்த, ஆந்திர மாநில தனிப்படை போலீசார், ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றனர். கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, வழியிலேயே, “அபார்ஷன்’ ஆகி, ரத்தப்போக்கு ஏற்பட்ட போதிலும், கட்டாயப்படுத்தி ரயிலில் ஏற்றினர். தமிழக போலீசாரின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து, பாதி வழியிலேயே, பெண் டாக்டர் இறக்கி விடப்பட்டார்.

ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவ்ஜன்யா(35). திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கோவையை பூர்வீகமாகக் கொண்டு, லண்டனில் டாக்டராக பணியாற்றும் லட்சுமணன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அடுத்த சில நாட்களில், கணவன் – மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். கணவர், தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக, கம்மம் போலீசில், சவ்ஜன்யா புகார் அளித்தார் (Sec. 498A of IPC). எப்.ஐ.ஆர்., பதிவு செய்து போலீசார் விசாரிக்க துவங்கியதும், இவ்வழக்கில் லட்சுமணன் முன்ஜாமீன் பெற்றார்.

இதையடுத்து, சவ்ஜன்யா, மற்றொரு புகாரை, அதே போலீஸ் ஸ்டேஷனில் அளித்தார். அதில்,

“என் கணவரின் அண்ணனும், மனைவியும் கோவையில் வசிக்கின்றனர். குடும்ப பிரச்னை தொடர்பாக, சமீபத்தில் நாங்கள் சந்தித்த போது, அவர்கள் என்னை கையால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்தனர்”

– என, தெரிவித்திருந்தார். லட்சுமணனின் அண்ணனும், அண்ணியும் கோவை, சிங்காநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மீது, வழிமறித்தல், கையால் அடித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கம்மம் தனிப்படை போலீசார், கோவை வந்தனர். சிங்காநல்லூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று, லட்சுமணனின் அண்ணன், அவரது மனைவியை தேடினர். பணியில் இருந்த பெண் டாக்டரை பிடித்த போலீசார், சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவரை ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.

இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த பெண் டாக்டர், கணவருடன் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்; உடனிருந்த போலீசார் மொபைல் போனை பறித்துக் கொண்டனர்.

ஈரோடு வரை ஜீப்பில் அழைத்துச் சென்றபோது, அதிர்ச்சி காரணமாக, பெண் டாக்டருக்கு, “அபார்ஷன்’ ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. தன் நிலையை போலீசாரிடம் தெரிவித்த பெண் டாக்டர், கடையில் “நாப்கின்’ வாங்கி கொள்ள அனுமதிக்குமாறு மன்றாடியும், போலீசார் மனம் இரங்கவில்லை.

ஈரோட்டில் இருந்து, ரிசர்வ் செய்யப்படாத ரயில் பெட்டியில் இவரை ஏற்றிய போலீசார், அமர்ந்து செல்ல இருக்கை வசதி கூட செய்து தராமல், அலட்சியம் காட்டினர். வயிற்று வலியால் மிகவும் துடித்த இவர், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

நிலைமை மோசமாவதை அறிந்த ஆந்திர போலீசார், அவரிடம் மொபைல் போனை கொடுத்து கணவரிடம் பேச அனுமதித்தனர். தகவலறிந்த கணவர், மனைவியின் உடல் நிலை மோசமாவது குறித்து, தமிழக போலீஸ் உயரதிகாரிகளிடம் முறையிட்டு உதவி கோரினார். விவரங்களை சேகரித்த போலீஸ் அதிகாரிகள், ஆந்திர மாநில போலீஸ் உயரதிகாரிகளை, போனில் தொடர்பு கொண்டனர். “பெண் டாக்டர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள், கைது செய்ததும் ஜாமீனில் விடக்கூடியதாக உள்ளன. அவ்வாறிருந்தும், கர்ப்பிணி பெண் டாக்டரை கைது செய்து போலீசார் துன்புறுத்துகின்றனர் என, அதிருப்தி வெளியிட்டனர். இதையடுத்து, தனிப்படை போலீசாரை தொடர்பு கொண்ட ஆந்திர போலீஸ் உயரதிகாரிகள், பெண் டாக்டரை வழியில் ஏதாவது ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். இதன்படி, தங்களது கஸ்டடியில் இருந்த பெண் டாக்டரை, ஜோலார்பேட்டையில் இறக்கி, அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த ஆந்திர போலீசார், அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“எந்த ஒரு வழக்கிலும், ஒருவரை கைது செய்யும் போது, எந்த மாதிரியான நடைமுறைகளை போலீசார் பின்பற்ற வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. எனினும், ஆந்திராவில் இருந்து கோவை வந்த தனிப்படை போலீசார், பெண் டாக்டரை கைது செய்து, அவரை சட்ட ரீதியான உதவிகளை பெற முடியாத அளவுக்கு துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மனிதாபிமான அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதிகாரி கூறினார்.”

செய்தி: தினமலர். பிப்ரவரி 23, 2011.

மேலதிக விரங்களுக்கு இந்த வலைப்பதிவிற்குச் செல்க.
———

மேட்டுக்குடி இளம் பெண்கள் குடித்து கும்மாளம் போட அனுமதி வேண்டும் ஏன்று வரிந்து கட்டி களத்தில் இறங்கிய “தேசிய பெண்கள் நல வாரியம்” (National Commission for Women (NCW) and State Commission for Women) இந்த பெண் டாகடருக்கு நிகழ்ந்த கொடுமை பற்றி வாய் திறக்காதது ஏன்? 498ஏ சட்டத்தின் துஷ்பிரயோகம் (தவறான பயன்படுத்தல்) பற்றிய விவரம் வெளிவந்துவிடுமோ என்ற பயமா?

சேச்சே, ஆம்புளை தாங்க செக்ஸுக்கு அலைவான்!

Sex maniac woman“செக்ஸ் உறவுக்கு அடிக்கடி அழைக்கும் மனைவி-போலீஸ் உதவியை நாடிய கணவர்”

செக்ஸ் உறவு போதாது, போதாது என்று என்று கூறி அடிக்கடி என்னை எனது மனைவி செக்ஸ் உறவுக்கு அழைத்து பெரும் தொல்லை கொடுக்கிறார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கோரி ஒரு கணவர் போலீஸ் உதவியை நாடியுள்ளார். இது நடந்துள்ளது ஜெர்மனியில்.

அந்த அப்பாவிக் கணவர் துருக்கியைச் சேர்ந்தவர். ஜெர்மனியில் பெர்லின் நகரில் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை நாடினார். அவர்களிடம், எனது மனைவி என்னை தினசரி செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கூறி அனத்துகிறார். நான் எவ்வளவுதான் உறவு வைத்துக் கொண்டாலும் திருப்தி அடைய மாட்டேன் என்கிறார்.

எங்களுக்கு கல்யாணமாகி 18 வருடங்களாகி விட்டது. 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக எனது மனைவியின் செக்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் நான் படுக்கை அறைக்குள் போக முடியவில்லை. உள்ளே போனாலே செக்ஸ் உறவுக்கு அழைக்க ஆரம்பித்து விடுகிறார். இதனால் நான் வீட்டு சோபாவில்தான் தினசரி தூங்க நேரிடுகிறது.

அப்படியும் கூட அவர் விடுவதாக இல்லை. எங்கு இருந்தால் என்ன, என்னை திருப்திப்படுத்து என்று கூறி தொல்லை செய்கிறார். கோப்படுகிறார். என்னை எனது மனைவியின் தொல்லையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீஸார் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் சற்று அமைதி அடைந்த அவர், தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக கூறி விட்டுச் சென்றார்.

விவாகரத்து நடவடிக்கைகள் முடியும் வரை அவரை அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவரது மனைவியிடம் அறிவுரை கூற போலீஸார் தீர்மானித்துள்ளனராம்.

செய்தி: “தட்ஸ்தமிழ்” : ஜனவரி 27, 2011.

அய்யோ பாவம், அபலைப் பெண்கள்!

ஒரு பாவமும் அறியாத பேதைகள் நம் நாட்டுப் பெண்கள். அவர்கள் வன்முறை என்பதையே லவலேசமும் அறியாதவர்கள். ஆண்தான் வன்முறையில் ஈடுபடுவான்; காமாந்தகாரன்; கண்டவுடன் கற்பழிப்பான். அதனால்தான் இந்திய கோர்ட்டுகள், ஒரு பெண் தான் ஒருவனால் கற்பழிக்கப்பட்டதாக புகார் கொடுத்தாலே போதும், அந்த ஆண்மகனைத் தண்டிக்க; வேறு சாட்சியமே தேவையில்லை என்று தீர்ப்பளிக்கின்றன.

ஆண், பெண் இருவரும் கூடிக் குலாவி இன்ப சுகம் வேண்டிய அளவு அனுபவித்த பிறகு, சாவகாசமாக அந்தப் பெண் “ஐயோ, என்னை அவன் கற்பழித்துவிட்டானே!” என்று புகார் அளித்தாலே போதும், அந்த பலான ஆண் உடனே கைது செய்யப்படுவான். அஜ்மல் கசாப் கூட அடுத்தபடிதான்!

இதோ இந்த அபலைப் பெண்ணின் சாத்வீகமான அணுகு முறையை கண்குளிரக் காணுங்கள்!

கேரள இளம்பெண்ணை காப்பாற்றிய ஆந்திர கல்லூரி மாணவருக்கு சிறை

கொல்லத்தில் இருந்து மாயமான இளம்பெண்ணை ரயிலில் இருந்து காப்பாற்றி, அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்த ஆந்திர வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கேரளா, கொல்லம் இரவிபுரம் அடுத்த மையநாடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா ராணி (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மே மாதம் 23ம் தேதி, பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் எங்கே போவது என்பது தெரியாமல், ஏதோ ஒரு ரயிலில் ஏறினார். ரயில் ஆந்திர மாநிலத்தில் செல்லும் போது, டிக்கெட் இல்லாததால், பரிசோதகரிடம் சிக்கினார். அவர் அழுவதை பார்த்த, ரயிலில் இருந்த மாணவர்கள், அவருக்கு உதவ முன் வந்தனர். தங்களிடம் இருந்த பணத்தை பரிசோதகரிடம் கொடுத்து, அப்பெண்ணை காப்பாற்றினர். அதில் ஆதிராம் என்ற இளைஞனும் ஒருவர். அவர் அப்பெண்ணிடம், யார், எந்த ஊர் போன்ற விவரங்களை கேட்டார். அதற்கு அப்பெண், தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.

பெண்ணின் பரிதாப நிலையை கண்ட இளைஞர், அவரை விசாகப்பட்டினத்தில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவரது பெற்றோர், கூலி வேலை செய்து வருகின்றனர்; அப்பெண்ணை வீட்டில் தங்க அனுமதிக்க மறுத்தனர். இருந்தாலும் இளைஞர் விடவில்லை. அப்பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தை கொண்டு, அப்பெண்ணை மகளிர் விடுதியில் சேர்த்தார். பின், நடந்த சம்பவங்கள் குறித்து கொல்லத்தில் உள்ள அப்பெண்ணின் பெற்றோருக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தார். போலீசாரின் அறிவுரைப்படி, அப்பெண்ணை அழைத்து கொண்டு ஆதிராம், கொல்லம் வந்தார். ரயிலை விட்டு இறங்கியதும் அங்கு காத்திருந்த போலீசார், அவரை கைது செய்தனர். அவர் மீது 366, 367 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அப்பெண் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டார். பரிசோதனைக்கு பின் கிடைத்த அறிக்கையில், அவர் கற்பழிக்கப்படவில்லை என்பது தெரிந்தது. எனினும், பலாத்காரம் செய்து இளம்பெண்ணை கடத்தியதாக, ஆதிராம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் பெற்றோர் எவ்வளவு எடுத்து சொல்லியும், போலீசார் ஆதிராமை விடவில்லை. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருவனந்தபுரம் பூஜப்புரா சிறையில் அடைத்து விட்டனர். இது நடந்து 45 நாட்களாகி விட்டன. ஆதிராமின் பெற்றோர் தங்களது மகனை சிறையில் இருந்து விடுவிக்க பல தடவை கொல்லத்திற்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.