தொகுப்பு

Archive for the ‘புதுமைப் பெண்’ Category

பெண்ணை கண்டித்த பெற்றோர் அவலம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை மாரியப்பன் மகள் கலைவாணி(16); ஒன்பதாம் வகுப்பு முடித்துள்ளார். அடிக்கடி மொபைல் போனில் யாருடனோ பேசியதால், இவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆத்திரமடைந்த கலைவாணி, நேற்று முன்தினம் நள்ளிரவு தந்தை மாரியப்பன், தாயார் ஜெயராணி தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தலைமறைவானார்.

நேற்று காலை அருகில் வசிப்போர் உதவியுடன் வீட்டுக் கதவை திறந்து, மாரியப்பன் வெளியே வந்தார். தலைமறைவான கலைவாணியை பசுவந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisements

கொலையானவள் மீண்டும் தோன்றினாள்; கைதாகி சீரழிந்தவனுக்கு யார் பதில் சொல்வது?

ஒன்பது ஆண்டிற்கு முன் கொலை செய்யப்பட்டதாககருத்தப்பட்ட பெண், கலெக்டர் அலுவலகத்தில் ஆஜர்

Woman who was considered killed and men arrested as killers surfaces after 9 yearsதூத்துக்குடி அருகே ஒன்பது ஆண்டிற்கு முன் கொல்லப்பட்டதாக கருதப்பட்டு உயிரோடு வந்த பெண், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆஜரானார். பொய் வழக்கு போட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.திருப்பூர், செல்லம் நகர், ஆனந்தன் மனைவி மேகலா (எ) மணிமேகலா(28). 2002 ஏப்ரலில், கணவரோடு ஏற்பட்ட தகராறு காரணமாக இவர், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், பேரூரில் பெரியப்பா சண்முகராஜ் வீட்டிற்கு வந்தார். நீண்ட நாட்களாகியும் அவர் திருப்பூர் திரும்பாததால், அவரை காணவில்லை என ஆனந்தன், ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தார். இதனிடையே, மேகலா தனதுபெரியப்பா வீட்டிலிருந்து மதுரைக்கு சென்று, பின், திருப்பூர் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2002 ஏப்., 5ம் தேதி, வல்லநாடு பகுதியில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுகிடந்தார். விசாரணை நடத்திய போலீசார், அது, மாயமான மேகலா உடல்தான் என முடிவு செய்தனர். சண்முகராஜனோடு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மேகலாவை கடத்தி எரித்துக் கொலை செய்ததாக அதே ஊரைச் சேர்ந்த கோயில்பிள்ளை(47) பாலசுப்பிரமணியன்(35) குருநாதன்(30) தாசன்(32) ஆகிய நால்வரை, முறப்பநாடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி விரைவு கோர்ட்டில் நடந்த அந்த கொலை வழக்கில் உரிய ஆதாரமில்லை எனக்கூறி, குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, அப்போது கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட மேகலா, தனது இரு குழந்தைகளுடன் பிப்., 8ம் தேதி ஸ்ரீவைகுண்டம், பேரூர், பெரியப்பா சண்முகராஜ் வீட்டிற்கு வந்தார். அவர் உயிருடன் இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்ட கிராமத்தினர், ஒன்பது ஆண்டிற்கு முன் கொலையுண்டதாக வெளியான தகவலை மேகலாவிடம் கூறினர். அதைக்கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் ஆஜர்:

இந்நிலையில், மேகலா நேற்று, குழந்தைகளுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஆஜரானார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வியை சந்தித்து, தான் உயிருடன் இருப்பதாகவும், திருப்பூரில் மாமியார், மாமனாருடன் வசித்து வருவதாகவும், கணவர் சவுதியில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை: இந்நிலையில், கொலையுண்டு கிடந்த ஏதோ ஒரு பெண் உடலை பார்த்து,முறையாக விசாரிக்காமல் அதுமேகலாதான் என, அவசரகதியில் முடிவுக்கு வந்து, அந்த பொய் கொலை வழக்கில் தங்களை கைது செய்த சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்போது கைது செய்யப்பட்ட கோயில் பிள்ளை உள்ளிட்ட நால்வர், தமிழ்செல்வியிடம் மனு அளித்தனர். மேலும், அந்த போலீசார் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, நிவாரணத்தொகை பெற்றுத்தர வலியுறுத்தினர்.

“நிருபர்களை குழப்பிய மேகலா”

கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய மேகலா, தனது கணவர் ஆனந்தன், திருப்பூரில் உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவரது மனுவில் ஆனந்தன், சவுதியில் வேலை செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டதற்கு, கணவர், குழந்தைகள் பற்றி கேட்காதீர்கள் என்றார். ஒன்பது ஆண்டில் ஒருமுறை கூடவா, பேரூருக்கு போன் செய்யவில்லை என கேட்டதற்கு, மொபைல் போன் எண் தெரியாது என மழுப்பலாக கூறினார். தாய், தந்தையரை பற்றி கேட்டதற்கும் முறையான பதில் கூறவில்லை. மேகலாவின் மகன் பெயர் சவுக்கத் அலி(5), மகள் பெயர் நவுசீன்(3) என, தெரிவிக்கப்பட்டது.

அவர்களுக்கு அப்பெயர்கள் சூட்டப்பட்டதற்கான கேள்விக்கும் பதில் இல்லை.கடந்த 2002ல், வீட்டை விட்டு வந்து பலநாட்கள் கழித்து மீண்டும் திருப்பூர் திரும்பியதால், நான் காணாமல் போனதாக ஆனந்தன், போலீசில் கொடுத்த புகாரில், மேல்நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தவில்லை, என்றார். இப்பிரச்னை குறித்து எஸ்.பி., கபில்குமார் சரட்கரிடம் கேட்டதற்கு, “சம்பந்தப்பட்டவர்கள் எங்களிடம் மனு அளித்தவுடன், இதில் உரியமுறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

செய்தி: தினமலர் : பிப்ரவரி 11,2011

மூவரை திருமணம் செய்து ஏமாற்றிய “கல்யாண ராணி”

செங்கன்னூர் : மூன்று இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து, பணம், நகைகளை மோசடி செய்த, “கல்யாண ராணி’யை போலீசார் கைது செய்தனர். அவரை காணவில்லை என, கணவர் கொடுத்த வழக்கில், கோர்ட் விடுவித்தது என்றாலும், ஒரு மணி நேரத்திற்கு பின், பணம், நகைகளை மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைதானார்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சடையமங்கலத்தைச் சேர்ந்தவர் ஷாலினி (28). இவர் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பிரமோத் (48) என்பவருடன் வாழ்ந்து வந்தார். தன்னுடன் வாழ்ந்து வந்த ஷாலினியை காணவில்லை என்றும், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் கோரி கேரள ஐகோர்ட்டில் அவர், “ஹேபியஸ் கார்ப்பஸ்’ மனு தாக்கல் செய்தார்.ஐகோர்ட் உத்தரவின்படி செங்கன்னூர் போலீசார், ஷாலினியை தேடி வந்தனர். பத்திரிகைகளில் ஷாலினியின் படத்தை பார்த்த பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தனது பகுதியில் அப்பெண் இருப்பதாக செங்கன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த அவர்களிடம், அப்பெண் இருக்கும் இடத்தை காண்பித்து அப்பெண்ணை பிடிக்க உதவினார்.

அப்பெண்ணுடன் இருந்த அவரது மகன் கண்ணன் (5) ஆகியோரை, போலீசார் செங்கன்னூர் கொண்டு சென்று, விசாரணை நடத்தினர். விசாரணையில் பல, “திடுக்’ தகவல்கள் தெரியவந்தன.வழக்கு குறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியை பார்த்த ஷாலினி, தன் குழந்தையுடன் தப்பியோட முயன்றபோது தான் போலீசாரின் பிடியில் சிக்கினார். இவர், 2010ம் ஆண்டு பத்திரிகையில் வெளிவந்த மறுமணத்திற்கு தயார் என்ற விளம்பரத்தை பார்த்து, பிரமோத் (48) என்பவரை தொடர்பு கொண்டார்.தான், ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர் வங்கியில் உதவி மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பின் இருவரும், எர்ணாகுளத்தில் வசித்து வந்தனர்.

அப்போது பக்கத்து வீட்டில் இருந்து நகைகள் மாயமான புகார் காரணமாக அங்கிருந்து இருவரும் செங்கன்னூரில் வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்தனர்.அங்கு பல மோசடி வழக்குகள் இருவர் மீதும் பதிவு செய்யப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். அப்போது, டிசம்பர் மாதம் 7ம் தேதி குழந்தையுடன் ஷாலினி மாயமாகி விட்டார். இதுகுறித்து தான் பிரமோத் வழக்கு தொடர்ந்தார். போலீசாரிடம் சிக்கிய ஷாலினி, மேலும் மூவரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.அவரை செங்கன்னூர் போலீசார் அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காணவில்லை என்று பிரமோத் கொடுத்த மனு மீது தான் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தியதால், கோர்ட் உடனடியாக விடுவித்தது. கோர்ட்டில் இருந்து அவர் விடுதலை பெற்றதும், வக்கீல் வீட்டுக்குச் சென்றார்.

இதைஅறிந்த பிரமோத், தனது மூன்று லட்ச ரூபாய், 25 சவரன் நகைகளை ஷாலினி எடுத்துச் சென்று விட்டார் என மீண்டும் ஒரு புகாரை செங்கன்னூர் போலீசில் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார், ஷாலினி சென்ற வக்கீல் வீட்டுக்குச் சென்று காத்திருந்தனர். அவர் வெளியே வந்ததும் போலீசார் அவரை கைது செய்தனர்.கைதாகி உள்ள பெண் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு, அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

செய்தி: தினமலர் : ஜனவரி 12,2011 :

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைகொல்ல முயன்ற பெண் கைது

தூத்துக்குடி:தூத்துக்குடியில், கள்ளக்காதலனோடு சேர்ந்து, கணவர் முகத்தை தலையணையால் அழுத்தி, கொல்ல முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி, தாளமுத்துநகரை அடுத்த அய்யர்விளையைச் சேர்ந்தவர் நடராஜன்(49); மளிகை கடை வியாபாரி. இவரது மனைவி பால்கனி(40). இவர்களுக்கு குழந்தையில்லை. இந்நிலையில், பால்கனிக்கும், உறவினர் பழனிக்கும்(43), கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதை, நடராஜன் கண்டித்தார்.நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில், பால்கனி வீட்டிற்கு வந்த பழனி, அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, தூக்கத்தில் இருந்து திடீரென கண் விழித்த நடராஜன், அதை பார்த்து விட்டார். அதனால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.உடனே பால்கனியும், பழனியும் சேர்ந்து, தலையணையை எடுத்து, நடராஜன் முகத்தில் அழுத்தினர். அதில், அவர் மூச்சுத்திணறி இறந்தது போல நடித்ததால், அவர் இறந்துவிட்டதாக கருதி, இருவரும் வீட்டை விட்டுவெளியேறினர்.சிறிது நேரம் கழித்து எழுந்த நடராஜன், நடந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அவரை கொலை செய்ய முயன்ற மனைவி பால்கனி, கள்ளக்காதலன் பழனியை போலீசார் கைது செய்தனர்.

ஜனவரி 07,2011

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=160998

ரயிலில் “ஓசி” பயணம் செய்து பிடிபட்டு டிஸ்மிஸ் ஆன பெண் நீதிபதி!

இவர்களை “மை லார்ட்” என்றும் “யுவர் ஆனர்” என்றும் தான் அழைக்க வேண்டும் – அதுவும் கூனிக் குறுகி நின்று கொண்டு!

இவரைப் போன்றவர்கள்தான் பிற குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பவர்கள். இவர்கள் வாயிலிருந்து உதிரும் முத்துக்கள்தான் முடிவு செய்கின்றன ஒருவன் குற்றவாளியா, இல்லையா, அவன் “உள்ளே” போவானா, வெளியே இருப்பானா; கணவன், மனைவி பிரியலாமா, கூடாதா – இவை போன்றவையெல்லாம்!!

இப்போது இந்த புனிதத்தைப் பற்றிய செய்தியை படியுங்கள்:-

“ரயிலில் மூன்று முறை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பெண் நீதிபதியை, பதவி நீக்கம் செய்தது சரியே” என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் உள்ள பெருநகர நீதிமன்றத்தில், நீதிபதியாக பணியாற்றியவர் அருந்ததி அசோக் வாலாவல்கர். இவர், மும்பை புறநகர் ரயிலில், 1997ம் ஆண்டில் மூன்று முறை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தார். ஒரு முறை தன் அடையாள அட்டையை காண்பித்து தப்பித்தார். மற்றொரு முறை ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் தகராறில் ஈடுபட்டார். மூன்றாவது முறை அவருக்காக மற்றொரு நீதிபதி அபராதம் கட்டியுள்ளார். இவரின் நடவடிக்கை பற்றி ரயில்வே அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். உடன் விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. விசாரணையில் பெண் நீதிபதி அருந்ததி அசோக் வாலாவல்கர், டிக்கெட் இல்லாமல் மூன்று முறை பயணம் செய்தது தெரிந்தது. இதையடுத்து, 2000ம் ஆண்டில் அவருக்கு கட்டாய ஓய்வளித்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து வாலாவல்கர், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் முகுந்தகம் சர்மா மற்றும் தவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

நீதிபதிகள் எல்லாம் யாரும் கேள்வி கேட்க முடியாத வகையிலான நேர்மையை கொண்டிருக்க வேண்டும். சமூகத்திற்கு ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் நம்பும் ஒரு பதவியை வகிப்பதால், நீதிபதிகள் உயரிய தரத்தை பின்பற்ற வேண்டும். எந்த வகையிலும் சட்டத்தை மீறும் வகையில், அவர்கள் நடந்து கொள்ளக் கூடாது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில், பெண் நீதிபதியானவர் டிக்கெட் இல்லாமல் மூன்று முறை ரயிலில் பயணம் செய்ததோடு, ரயில்வே அதிகாரிகளையும் மிரட்டியுள்ளார். அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளார். அதனால், வாலாவல்கருக்கு மும்பை ஐகோர்ட் கட்டாய ஓய்வளித்தது சரியே. அந்த உத்தரவில் குறுக்கிட எந்த முகாந்திரமும் இல்லை. சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில், நீதிபதிகள் உட்பட யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அதனால், நீதிபதியாக இருப்பவர்கள் தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கவுரவத்தை பேணிக்காக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறினர்.

செய்தி: தினமலர் : ஜனவரி 16,2011

Read this news in Times of India.

2 கணவர்களை விவாகரத்து செய்த அபலைப் பெண் 3-வது கணவரை கொன்று கால்வாயில் வீசினாள்

ஐயா, இந்தியப் பெண்களிடன் உஷாராக இருங்க; போட்டுத் தள்ளிடுவாங்க. பீகார் எம்.எல்.ஏ கதியை பார்த்திருப்பீங்க! அwத கொலைகார பொம்பளை படத்தை பாத்திருப்பீங்க; அன்த எம்.எல்.ஏ படத்தையும் பாத்திருப்பீங்க; அவிங்களை இவரு “கற்பழி’ச்சாராம்!

பயங்கரம். பேசாம ஆப்பிரிக்காவில போய் கல்யாணம் கட்டிக்கலாம்! அவிங்க பரவாயில்லை!!

சரி, இந்த புதுமைப் பெண் செய்தியை படிச்சு நொந்து போங்க!

———————
புதுடெல்லி, ஜன.9- 2011. செய்தி: மாலை மலர்

டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்த பெண் ஷேனாஸ் (வயது 35). இவர் திருமணமான சில வருடங்களிலேயே கணவரை விவாகரத்து செய்தாள்.

அதன்பறகு 2-வது திருமணம் செய்தாள். அவருடனும் சில வருடங்களே குடும்பம் நடத்தி அவரையும் விவாகரத்து செய்தாள். 2 கணவர்கள் மூலம் அவளுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகளுக்கு 14 வயதும், 3-வது மகளுக்கு 5 வயதும் ஆகிறது. இந்த நிலையில் 35 வயதான ஷேனாஸ் தன்னை விட 6 வயது குறைந்த 29 வயதான ராகேஷ்குப்தா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் கடந்த 3 வருடங்களாக கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர்.இதற்கிடையே ராகேஷ் குப்தாவை கடந்த அக்டோபர் மாதம் திடீர் என்று காணவில்லை. இதுபற்றி ஷேனாஸ் போலீசில் புகார் செய்தாள். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

ஷேனாசுக்கு சகீல், சாகித் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். எந்த துப்பும் கிடைக்கவில்லை. இவர்கள் ஷேனாஸ் குடியிருக்கும் பகுதியிலேயே வசித்து வந்தனர். சில மாதங்கள் கழித்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.

இதில் சாகித் பழைய குற்றவாளி என தெரியவந்தது. சந்தேகப்பட்டு அவனது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது சாகித்தின் வீட்டு “செப்டிக் டேங்கில் இருந்து துர்நாற்றம் அடித்தது. சந்தேகப்பட்டு பார்த்த போது அங்கே ஒரு பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அது காணாமல் போன ராகேஷ் குப்தா என தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ஷேனாசை பிடித்து விசாரித்தபோது அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சம்பவத்தன்று ராகேஷ் குப்தாவிடம் ஷேனாஸ் பணம் கேட்டாள். ஆனால் ராகேஷ் குப்தா டெய்லர் தொழில் பார்த்து வந்ததால் ஷேனாஸ் கேட்ட தொகையை கொடுக்க முடியவில்லை.

இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது கிரிக்கெட் மட்டையால் ஷேனாஸ், ராகேஷ்குப்தாவை தலையில் அடித்தாள். இதில் அவர் செத்துப் போனார். பிணத்தை 24 மணி நேரம் தனது வீட்டிலேயே வைத்து இருந்தாள். மறுநாள் சகோதரர்கள் மூலம் பிணத்தை அங்கிருந்து எடுத்துச் சென்று செப்டிக் டேங்குக்குள் போட்டு விட்டனர்.

கொலையை மூடி மறைக்க ராகேஷ்குப்தா காணாமல் போய்விட்டதாக ஷேனாஸ் போலீசில் புகார் செய்து நாடகமாடினாள். ஆனால் போலீசார் துப்பு துலக்கி ஷேனாசையும், அவளது சகோதரர் சகீல் ஆகியோரை கைது செய்தனர். சாகித் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.

———

இந்த செய்திக்கு வ்சகர்ர்கள் எழுதிய்யுள்ள கமெண்டுகளைப் பார்ப்போம்:

Sunday, January 09,2011 04:09 PM, இரா குமரன் said:

காந்தி கனவு கண்ட நாட்டில் இப்படியும் ஒரு பெண். பெண்களுக்கு 33 % வேண்டும் என்று சட்டம் வேறு இந்த நாட்டில் கேடின்றனர்.

Sunday, January 09,2011 03:58 PM, mysha said:

எப்படிதான் மனசு வந்துச்சோ இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் காலம் கலி காலம் ஆகிபோச்சுங்கோ

Sunday, January 09,2011 03:29 PM, நல்லவன் said:

அடங்காபிடறியே……….

Sunday, January 09,2011 02:54 PM, MANIKANDAN said:

அவல துக்குள போட வேண்டும்

Sunday, January 09,2011 01:51 PM, நாஞ்சில் நசீர் said:
இவளது வீட்டில் செப்டிக் டேங் கால்வாயாக ஓடுகிறது..! குளிப்பதற்கு இறங்கி இருப்பான்.. பாவம் கால் வழுக்கி விழுந்து விட்டான் என்று கதையை முடிக்க போகிறார்கள்..!

மூன்று திருமணங்கள் செய்த இளம்பெண் தற்கொலை, நாலாவது காதலன் கைது!

Stop husband suicideஎப்படி இருந்தாலும், ஒரு இந்திய ஆண் தன் வாழ்க்கையில் ஒருநாள் கைது ஆகப்போவது நிச்சயம்!

என்றைக்கு ஒரு இந்தியப் பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொண்டானோ – அது திருமணமோ, காதலோ, உடன் வேலை செய்வதோ, பள்ளியில் அல்லது கல்லூரியில் உடன் பயில்வதோ, லிஃப்டில் உடன் செல்வதோ, லாட்ஜில் ஒரு இரவை உடன் கழித்தலோ, அல்லது வெறுமனே கடலை வறுத்துக் கொண்டிருந்ததோ – எவ்வகையிலேனும் அவன் ஒருநாள் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் 40-க்கும் அதிகமான ஒருதலைப்பட்ச ஆணெதிர்ப்பு சட்டங்கள் எய்யப்பட்டு கைதாகப் போவது நிச்சயம்!

இதோ இந்த புதுமைப் பெண்ணின் கதையைக் கேட்டுவிட்டு, அந்த அசட்டு காதலனுக்காக சிறிது கண்ணீர் சிந்துங்கள்!

ஈஞ்சம்பாக்கம்:நான்காவது திருமணம் செய்யும் முயற்சியில், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, ஈஞ்சம்பாக்கத்தில் கேளிக்கை விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கில் காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தி: தினமலர் – நவம்பர் 25, 2010.

கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் கேளிக்கை அரங்க விடுதியில் ஒரு பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நீலாங்கரை இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த பெண் மயிலாப்பூர், விசாலாட்சிதோட்டத்தை சேர்ந்த கந்தசாமியின் மகள் விஜயலட்சுமி(25) என்பது தெரிந்தது.

போலீஸ் விசாரணையில் மேலும் கிடைத்த தகவல்கள்:

விஜயலட்சுமிக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு எட்டு வயது மகன் இருக்கிறான். விஜயலட்சுமிக்கு ஆண் நண்பர்கள் அதிகம். இதனால், கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் விஜயலட்சுமியிடம் இருந்து விவாகரத்து பெற்ற கணவன், மகனுடன் பிரிந்து சென்று விட்டார். கந்தசாமியும் மரணமடைந்துவிட்டதால் தனது தாய் ஜெயாவுடன் விஜயலட்சுமி வசித்து வந்தார். அப்போது, விஜயலட்சுமி அடுத்தடுத்து இருவரை காதலித்து திருமணம் செய்து கணவர்களை பிரிந்து விட்டார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஷெட் நடத்தி வரும் மதன்குமார்(25)என்பவருடன், கடந்த நான்கு மாதங்களுக்கு முன் விஜயலட்சுமிக்கு காதல் மலர்ந்தது.

இருவரும் கணவன்-மனைவிபோல பல இடங்களில் உல்லாசமாக சுற்றி திரிந்தனர். இவர்களின் காதல் விவகாரம் மதன்குமார் பெற்றோருக்கு தெரிந்தது. மகனை கண்டித்து, அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்தனர். இதனால்,மதன்குமாரும், விஜயலட்சுமியும் ரகசிய திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை அரங்க விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தனர்.

நேற்று முன்தினம் காலை மதன்குமாரின் தாய்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக மொபைல்போன் மூலம் தகவல் வந்தது. விஜயலட்சுமியை அறையிலேயே விட்டுவிட்டு மதன்குமார் மயிலாப்பூர் சென்றார். அங்கு மதன்குமாரிடம் அவரின் தாய் உருக்கமாக பேசி மனதை மாற்றினார். திருமண திட்டத்தை மதன்குமார் கைவிட்டார். அதை விஜயலட்மியிடம் மொபைல் போனில் தெரிவித்தார். இதனால், விரக்தியடைந்த விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். பயந்துபோன மதன்குமார் தனது மாமாவுடன் விடுதிக்கு விரைந்தார். அங்கு, விஜயலட்சுமி கூறியபடி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.விஜயலட்சுமியை தற்கொலை செய்ய தூண்டியதாக, மதன்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

=============

டேஞ்சர் அய்யா, டேஞ்சர்!

சினிமா, கவிதை, கதை இதையெல்லாம் கண்டு, கேட்டு காதல் என்பது ஏதோ தெய்வீகமானது, வாழ்க்கையின் அடிப்படையே காதல் செய்வதுதான் என்ற மாயையில் சிக்கி சீரழியும் ஆண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்!