தொகுப்பு

Archive for the ‘தாய்மை’ Category

அன்னையர் தினம் ஸ்பெஷல்!

சொல் பேச்சை கேட்காததால் தலையில் கல்லை போட்டு மாணவியை கொலை செய்த தாய் கைது

துடியலூர், மே. 6- 2011. செய்தி: தட்ஸ்தமிழ் [சுட்டி]

கோவை அருகே உள்ள கூடலூர் பேரூராட்சி செல்வபுரம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. வீரபாண்டி பிரிவில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு ஷீலா (வயது 14) என்ற மகள் இருந்தார். இவர் ஜோதி புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8 – ம் வகுப்பு படித்து விட்டு விடுமுறையில் இருந்தார்.

தாய் – மகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. காளியம்மாளின் சொல் பேச்சை ஷீலா கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மகள் மீது ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மாலை ஷீலா வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

அப்போது அவரது தாய் காளியம்மாள் அருகில் இருந்த கல்லை எடுத்து ஷீலாவின் தலையில் போட்டார். இதில் ஷீலா சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. மாடசாமி, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

ஷீலாவின் பிணததை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகளை கொன்ற காளியம்மாளை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் தனது சொல் பேச்சை கேட்காததால் மகளை கொன்றதாக தெரிவித்துள்ளார். பெற்ற தாயே மகளை கொன்ற சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

விமானத்தில் குழந்தை பெற்று கழிவறை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற பெண்

Gulf Air babyமணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு வந்த கல்ப் ஏர் வி்மானத்தில் பயணித்த ஒரு பெண், விமான கழிப்பறையில் வைத்து குழந்தை பெற்று, அதை காகிதத்தில் சுற்றி கழிவறை குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


(ஆனால் நம் நாட்டில் கோர்ட்டுகள் அனைத்திலும் பெண்கள் வசம் தான் குழந்தைகளின் கஸ்டடியை கொடுப்பார்கள். ஏனெனில் ஆண்கள் குழந்தைப் பாசமே இல்லாதவர்களாம்; பெண்கள் மட்டும்தான் குழந்தைகளை ஒன்றுமே செய்யமாட்டார்களாம்! என்ன கஒடுமையடா இது!!)

விமானத்தை சுத்தம் செய்ய வந்த பணியாளர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஈவு இரக்கமற்ற அந்தப் பெண்ணைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அந்த விமானம் சவூதி அரேபியாவிலிருந்து மணிலாவுக்கு வந்தது. விமானம் வந்து சேர்ந்து அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் விமான துப்புறவாளர்கள் உள்ளே சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அந்த விமானம் பஹ்ரைன் செல்லத் தயாரானது. அப்போதுதான் விமானக் கழிப்பறையில் குழந்தை காகிதத்தால் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அதை மீட்டனர்.

பின்னர் விமான நிலைய டாக்டர்கள் விரைந்து வந்து குழந்தையை சோதித்துப் பார்த்தனர். அது நல்ல நிலையில் இருப்பதாக அறிவித்தனர். இதையடுத்து கல்ப் ஏர் நிறுவனத்தினர் கூடி அக்குழந்தைக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் என பெயரிட்டனர். பின்னர் நினோய் அகினோ மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அக்குழந்தையின் தாயார் யார், எந்த நாட்டவர் என்பது தெரியவில்லை. அவரைப் பிடிக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அந்தப் பெண் எப்படி கழிப்பறைக்குப் போய் குழந்தை பெற்றார், எந்தவித சுவடும் இல்லாமல் எப்படி வந்து இருக்கையில் அமர்ந்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் குழந்தை பெற்றபோது எந்தவித சப்தத்தையும் சக பயணிகள் கேட்கவில்லையாம்.

இக்குழந்தை குறித்து டாக்டர் மரியா தெரசா அகோரஸ் கூறுகையில், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன், சரியான எடையுடன் உள்ளது என்பது மகிழ்ச்சியாக உள்ளது. விமான நிலைய ஊழியர்களே சேர்ந்து பெயரும் சூட்டியுள்ளனர் என்றார் புன்னகையுடன். அக்குழந்தைக்கு விமான நிலைய ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு புத்தாடைகளையும் வாங்கிக் குவித்து விட்டனர். மேலும் கிலுகிலுப்பை உள்ளிட்ட பொம்மைகளும் வாங்கி குழந்தையை கண்டு களித்து வருகின்றனராம்.

கடந்த ஜூலை மாதம் இதேபோல இந்தியப் பெண் ஒருவர் விமானத்தில் குழந்தை பெற்று அதை விமான டாய்லெட்டில் போட்டு கொல்ல முயற்சித்துப் பிடிபட்டார் என்பது நினைவிருக்கலாம்.

செய்தி; தட்ஸ் தமிழ்

மேல் விவரங்களுக்கு:

1. http://www.abs-cbnnews.com/lifestyle/09/14/10/netizens-mad-want-adopt-gulf-air-baby
2. Indian woman tries to flush newborn down plane toilet. Infant found stuck in the toilet after the plane landed in Amritsar, northern India, and was rushed to hospital.

வாசகர் கருத்துக்கள்:

#
20 October 2010 17:18
This is repulsive. How can people do that? This woman deserves to be flushed down the toilet of an airplane and then free-fall her way to an ocean… and splat. Perhaps then she can have an idea of what she tried to do
#
Ipstac 13 September 2010 10:04
Strange! Thought that airlines would not allow women more than seven months pregnant to fly. Wonder how did this woman manage to get on board.

ஜன்னல் வழியே பெற்ற குழந்தையை தூக்கி எறி்ந்த தாய் : மும்பையில் கொடூரம்

எத்தகைய கொலைகாரிகளாக இருந்தாலும் தாயார் வசம்தான் இந்தியாவில் குழந்தைகளை ஒப்படைப்பார்கள். ஏனெனில் அனைத்து தந்தைமார்களும் குழந்தைகளை கொடுமை செய்வார்களாம்!!
(காண்க: Children’s Rights Initiative for Shared Parenting)
—————————–

மும்பையில் மருத்துவமனையில் இருந்த ஜன்னல் வழியாக பெண் சிசுவை தூக்கி எறிந்த தாயின் கொடூர செய்கை சி.சி.டி.வியில் வெளியாகியுள்ளது.

மும்பையில் மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் நலப்பிரிவில் தீபிகா என்ற பெண் ஒன்றரை மாதமே ஆன தனது இரட்டைக் குழுந்தைகளை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். இந்நிலையில் தீபிகா திடீரென தனது பெண் குழந்தையை காணவில்லை என புகார் கூறினார். திகைத்துப் போன மருத்துவமனை நிர்வாகம் சி.சி.டி. வி கேமரா பதிவை பார்த்துள்ளது.

அப்போது தீபிகா வார்டில் இருந்து தனது பெண் குழந்தையை டவலில் சுற்றி எடுத்துக் கொண்டு கழிப்பறைக்குள் நுழைவது பதிவாயியிருந்தது. ஆனால் வெளியில் வரும் போது தீபிகா கையில் குழந்தை இல்லை.

சுதாரித்துக் கொண்ட நிர்வாகம் தீபிகாவி‌டம் தீவிரமாக விசாரிக்க பெண் குழந்தையை தான் ஜன்னல் வழியாக ‌வெளியே தூக்கி எறிந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீபிகாவின் மற்றொரு குழந்தை சிகிச்சை பெற்று வருவதால், சிகிச்சை முடிந்ததும் தீபிகா கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்க்குலம்

ஆனால் நம் நாட்டு நீதிபதிகள் அனைவரும் குழந்தைகளின் காப்புரிமையை (custody) மனைவி வசமே அனைத்து வழக்குகளிலும் ஒப்படைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் கணிப்பில் அனைத்து கணவன்மார்களும் கொடுமைக்கார அயோக்கியர்களாம்; பெண்கள் அனைவருமே தாய்ப்பாசம் மிக்க அன்பு பெருகி வழியும் மெல்லியலாளர்களாம்!

இத்தகைய பொதுமைப்படுத்தும் ஒரே நேர்க்கோட்டு அணுகுமுறையால் அந்த நீதிபதிகள் வருங்கால சந்ததியார்களுக்கு கடும் தீங்கு இழைத்து வருகிறார்கள் என்பதை உணந்தார்கள் இல்லை!

இப்போது செய்தி (நன்றி; தினமலர்);

தூத்துக்குடி : கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த பெண், பின்னர் தானும் அதை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதில், ஒருவயது குழந்தை இறந்தது.

கோவில்பட்டி, கயத்தாறு அடுத்த ஆத்திகுளம் விவசாயி காளிராஜ். இவரது மனைவி அந்தோணியம்மாள்(28). இவர்களுக்கு எழிலரசி(8) உஷாராணி(1) ஆகிய இரு பெண்குழந்தைகள் இருந்தனர். அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் எழிலரசி, சமீபத்திய தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றார். அதற்காக காளிராஜ், அவரை கண்டித்தார். அப்போது காளிராஜிற்கும், அந்தோணியம்மாளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் உறவினர்கள் காளிராஜிற்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

அதனால், மனமுடைந்த அந்தோணியம்மாள், நேற்று முன்தினம் மாலை அங்குள்ள தோட்டத்திற்கு கூட்டிச்சென்று இரு குழந்தைகளுக்கும் பூச்சிமருந்து கொடுத்தார். உஷாராணி அதை முழுவதும் குடித்தார். எழிலரசி குடிக்கும்போது பாதியில் தட்டிவிட்டுவிட்டார். பின்னர், அந்த பூச்சிமருந்தை அந்தோணியம்மாளும் குடித்தார். அங்கு மயங்கிக்கிடந்த மூவரையும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களில், ஒருவயது குழந்தை உஷாராணி நேற்று இறந்தது. அந்தோணியம்மாள், எழிலரசி தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்றுவருகின்றனர். கயத்தாறு போலீசார் விசாரித்தனர்.

ம்ஹூம், பெண்கள் கொடுமையே இழைக்க மாட்டார்கள்!

Child abandoned by motherதாயால் தவிக்க விடப்பட்ட பெண் குழந்தை மீட்பு

ஏப்ரல் 18,2010. தினமலர்

தாம்பரம்: தாயால் விட்டு சென்ற, பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தையை போலீசார் மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

தாம்பரத்தை சேர்ந்த கணேசன் மனைவி ஆனந்தி (40). இவர், தாம்பரம் பஸ் ஸ்டாண்ட், தபால் நிலையம் நுழைவாயில் அருகே பழம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை 11 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பிறந்து 25 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆனந்தி கடை அருகே வந்தார்.

சிறிது நேரம் கழித்து, ஆனந்தியிடம் அந்த பெண் ‘குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள், பாத்ரூம் சென்று வருகிறேன்’ என்று கூறி சென்றார்.

பாத்ரூம் சென்ற பெண் நீண்ட நேரமாகியதால், சந்தேகமடைந்த ஆனந்தி அருகேயுள்ள கழிவறைக்கு சென்று தேடினார். ஆனால், அங்கு அந்த பெண் இல்லை.
இதையடுத்து, தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் குழந்தையை மீட்டு, மேற்கு தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

குழந்தையை விட்டு சென்ற பெண் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன் பெண்ணைக் கொடுமைப் படுத்தும் தாய்

கட்டாய திருமணம் செய்து வைக்க பெண் எஸ்.ஐ. (பெண்ணின் தாய்) முயற்சி : மதுரை துணை கமிஷனரிடம் கல்லூரி மாணவி புகார்

மார்ச் 30,2010, தினமலர்

மதுரை : மதுரையில் 19 வயது கல்லூரி மாணவிக்கு, 39 வயதுக்காரருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க, அப்பெண்ணின் தாயான பெண் எஸ்.ஐ., முயற்சி செய்வதாக போலீஸ் துணை கமிஷனரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் சந்திரா(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெண்கள் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு ஆங்கிலம் படிக்கிறார். இவரது தாய் பரமேஸ்வரி; குற்றப்பிரிவு எஸ்.ஐ.,யாக உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், செங்கப்படையைச் சேர்ந்த கணேசன்(39) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க தாய் முயற்சி செய்வதாக, துணை கமிஷனர் தேன்மொழியிடம் சந்திரா புகார் அளித்தார்.

அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

திருமணத்திற்கு நான் மறுக்கவே, தனி அறையில் அடைத்து வைத்து என் தாய், லத்தியால் அடித்து உதைத்தார். தொடர்ந்து உடல் ரீதியாகவும், வார்த்தை ரீதியாகவும் சித்திரவதை செய்தார். மார்ச் 23ல் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். தற்போது சென்னையில் விடுதி ஒன்றில் தங்கி, சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிகிறேன். எனது உயிருக்கு, தாயால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. நான் மதுரையில் இருந்தால், நிச்சயம் கணேசனுக்கு திருமணம் செய்து வைப்பார். தாய் தூண்டுதல் பேரில், எனது நண்பர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துகின்றனர். எனது விருப்பத்திற்கு மாறாக, கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரிக்க, தல்லாகுளம் போலீசாருக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

நிருபர்களிடம் சந்திரா, ”கணேசன் கால் ஊனமானவர்; ஏற்கனவே திருமணம் ஆனவர். என்னை தொடர்ந்து தாய் சந்தேகித்து, துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறினேன். கல்லூரிக்கும் செல்ல முடியவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் தங்கையையும், தாய் கொடுமைப்படுத்துகிறார்,” என்றார். சந்திராவின் வக்கீல்கள் ராஜ்குமார், பாஸ்கர் மதுரம் கூறுகையில், ‘மதுரை விடுதியில் தங்கி, கல்லூரி படிப்பை தொடர, தகுந்த பாதுகாப்பு அளிப்பதாக துணை கமிஷனர் தெரிவித்தார்’ என்றனர்.