தொகுப்பு

Archive for the ‘கொலை’ Category

சமுதாய மறுமலர்ச்சி!

தாயாரின் கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்து புதைத்த சிறுவன் கைது.

செய்தி – தினமலர் – ஜூன் 02,2010.

kallak-kadhal-kolai-paiyanவிருதுநகர்: விருதுநகர் அருகே, தாயாரின் கள்ளக்காதலனின், இரண்டு வயது குழந்தையை கொலை செய்து, கழிப்பறையில் புதைத்த, சிறுவன் சந்திவீரனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகேயுள்ள, குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (35). ஆடு மேய்க்கும், வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு ஜோதிசங்கர் (2) என்ற குழந்தை இருந்தது. இவர்களது, பக்கத்து வீட்டில் வசிப்பவர் மருதன். இவரது மகன் சந்திவீரன் (15), கடந்த ஆண்டு, பள்ளியில் படித்த, சகமாணவர் சதீஷ்குமார் என்பவரை, கடந்த ஆண்டு கொலை செய்த வழக்கில், சிறுவர் சீர்திருத்த பள்ளியில், அடைக்கப்பட்டிருந்தார். இவர் சமீபத்தில், வீட்டுக்கு வந்திருந்தார் . நேற்று முன்தினம், அழகம்மாள், ஆட்டுக்கு குலை பறிக்க செல்லும் போது, அவரது குழந்தையை பார்த்து கொள்ளுமாறு, சந்திவீரனிடம் (15) கூறி சென்றார்.

திரும்பி வந்த போது, குழந்தையை காணவில்லை. பல இடங்களில் தேடியும், பலனில்லாததால் ஆமத்தூர் போலீசில், கணேசன் புகார் செய்தார். போலீசார், சந்திவீரனிடம் விசாரித்தனர். அப்போது அழகம்மாள், வீட்டு வாசல்படியில் ஒரு கடிதம் இருந்தது. அதில், குழந்தை வேண்டுமென்றால், 30 லட்ச ரூபாயை, திருமங்கலத்தில் வந்து கொடுத்துவிட்டு, குழந்தையை கன்னியாகுமரிக்கு வந்து, பெற்று கொள்ளவுமென எழுதப்பட்டிருந்தது. போலீசார் சந்தேகப்பட்டு, சந்திவீரனை எழுத சொல்லி பார்த்தபோது, அவரது கையெழுத்தும், கடிதத்திலிருந்த கையெழுத்தும் ஒன்றாக இருந்தது. அவனிடம் விசாரித்தபோது, குழந்தையை கொலை செய்து, தனது வீட்டு கழிப்பறையில், புதைத்திருப்பதை ஒப்பு கொண்டான். போலீசார், கழிப்பறையை தோண்டி பார்த்த போது, குழந்தை ஒரு சாக்குப்பையில் கட்டப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது. குழந்தையின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக, விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சந்திவீரன் கூறியிருப்பதாவது:

என் தாயார் ராமலட்சுமிக்கும், கணேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை பார்த்து விட்டேன். இதை அழகம்மாளிடம் தெரிவித்து, கணவரை கண்டிக்குமாறு கூறியும், அவர் கண்டு கொள்ளவில்லை. அதனால் கணேசனை, கொலை செய்ய திட்டமிட்டேன். மே 25ம் தேதி, அரளி விதை சாறு தயார் செய்து, ஒரு பாட்டிலில் எடுத்துக் கொண்டு, கணேசன் வீட்டிற்கு சென்றேன். கணேசனுக்கு, சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு, அழகம்மாள் வெளியே சென்றார். நான் சைக்கிளில், காற்று அடிக்க பம்பு எடுக்கும் சாக்கில், அந்த வீட்டிற்குள் சென்று, அவருக்காக வைத்திருந்த சாப்பாட்டில், அரளி விதை சாறை ஊற்றிவிட்டு, ஓடி வந்து விட்டேன். பின்னர் கணவன், மனைவிக்கு வாய்தகராறு ஏற்பட்டதில், கணேசன் கோபத்தில், சாப்பிடாமல் வெளியே சென்றுவிட்டதால், எனது திட்டம் நிறைவேறவில்லை. இதில் இருந்தே, கணேசனை பழி வாங்குவதற்காக, அவரது மகனை, கொலை செய்ய திட்டம் தீட்டினேன். அப்போது தான், குழந்தையை பார்த்து கொள்ளுமாறு, அழகம்மாள் கூறியதையடுத்து, கொலையை அன்றே செய்ய முடிவு செய்தேன். எனது வீட்டு “செப்டிக் டேங்க்’ இருந்த இடத்தில், குழியை ஆழப்படுத்தினேன்.

ஒரு கடையில், வெள்ளைத்தாள் வாங்கி, முதலில் மிரட்டல் கடிதம் எழுதினேன். இது திருப்தி அளிக்காததால், மீண்டும் எழுதிய கடிதத்திலேயே, குழந்தை வேண்டுமென்றால், 30 லட்ச ரூபாயை திருமங்கலத்தில் வந்து கொடுத்து விட்டு, குழந்தையை கன்னியாகுமரியில், பெற்று கொள்ளவுமென குறிப்பிட்டு, அவரது வீட்டு படியில், கடிதத்தை போட்டேன். விளையாடி கொண்டிருந்த, ஜோதி சங்கரனின் கழுத்தை இறுக்கி, கொலை செய்து, பிணத்தை உரச்சாக்கில் போட்டேன். சாக்குடன் குழந்தையை, எனது வீட்டு “செப்டிக் டேங்க்’ குழியில், போட்டு மூடினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இக்கொலையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாமென, நேற்று முன்தினம் இரவு, குமாரலிங்கபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட, அதே ஊரை சேர்ந்த, 50 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisements

33 என்ன, முழுதுமாகவே கொன்றுவிட்டாள் கணவனை!

இன்னும் என்ன உரிமை வேண்டும்?

கணவரை கார் ஏற்றி கொலை செய்த மனைவி கூலிப்படையினருடன் கைது

மார்ச் 29,2010. செய்தி: தினமலர்

சாணார்பட்டி:கூலிப்படை உதவியுடன் கணவனை, கார் ஏற்றி கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேரை, சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், அதிகாரிப்பட்டி மெயின் ரோட்டில் மார்ச் 23ல் அடையாளம் தெரியாத ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். சிலுவத்தூர் வி.ஏ.ஓ., தந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். இறந்தவர் தாராபுரம் விஜயகுமார் என தெரிய வந்தது.

அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கூறியதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.இறந்த விஜயகுமார், தாராபுரம் மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கும், மனைவி ஜோஸ் மேரிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. விஜயகுமார் சில ஆண்டுகளாக பழநி அருகே கீரனூரில் வசித்து வந்துள்ளார். இங்கு எலக்ட்ரிக் கடையும் வைத்துள்ளார்.

இவருக்கு தாராபுரம், உடுமலைப்பேட்டையில் சொந்தமாக வீடுகள் உள்ளன.தாராபுரத்தில் வசித்து வந்த மனைவி ஜோஸ் மேரி(43), பிரிந்து வாழும் கணவர் விஜயகுமாரிடம் ஜீவனாம்சம் கேட்டு, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆத்திரமடைந்த விஜயகுமார் கடந்த வாரம் தாராபுரம் சென்று, ஜோஸ் மேரி வசிக்கும் வீட்டை காலி செய்யுமாறு தகராறு செய்துள்ளார். தாராபுரத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் இவர்களை சமாதானம் செய்துள்ளார்.

பஞ்சாயத்து பேச வந்த ஹரிதாசிடமே, தனது கணவர் விஜயகுமாரை கொலை செய்தால் பணம் தருவதாக ஜோஸ் மேரி பேரம் பேசியுள்ளார். பணத்திற்கு ஆசைப்பட்ட ஹரிதாஸ், தனது நண்பரான திண்டுக்கல் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியைச் சேர்ந்த நடராஜன் உதவியுடன், விஜயகுமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.விஜயகுமாரிடம், திண்டுக்கலில் வைத்து பேசி முடித்துக் கொள்ளலாம் என கூறிய ஹரிதாஸ், அவரையும், ஜோஸ் மேரியையும் தனது காரில் அழைத்து வந்துள்ளார்.

திண்டுக்கலில் சிறிது நேரம் பேசிய பின், சாணார்பட்டியில் பேசலாம் என நடராஜன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில், அதிகாரிப்பட்டியில் விஜயகுமார் சிறுநீர் கழிக்க இறங்கியுள்ளார். அங்கேயே அவர் மீது காரை ஏற்றி கொலை செய்து விட்டனர். சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிந்து ஜோஸ் மேரி, ஹரிதாஸ், நடராஜன் ஆகியோரை கைது செய்தனர்.

என்று தணியும் பெண்ணியவாதிகளின் ரத்த வெறி!

Slain sub-inspector Vetrivelபட்டப் பகலில் துடிக்கத் துடிக்க சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் வெற்றிவேல். அவர் யார்? அவர் சீருடையில் டூட்டியில் இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்!

அவர் இப்படி காட்டுமிராண்டித்தனமாக வெட்டிச் சாய்க்கப்பட்டதின் அடிப்படைக் காரணம் என்ன?

ஆம்! இபிகோ செக்‌ஷன் 498A தான்!

நம் நாட்டிலிருக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்காக, பல பெண்ணியவாதிகள் போராடிப் பெற்றுத் தந்திருப்பதாக பறை சாற்றிக் கொண்டிருக்கும் அந்தக் கொடுங்கோன்மை பொல்லாங்குச் சட்டமான 498a சட்டத்தின் நீட்சியாகத்தான் ஒரு பாவமும் அறியாத சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை செய்யப்பட்டிருக்கிறார்!

கடையம் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தை கொலை செய்வதாக நினைத்துக் கொண்டு ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ வெற்றிவேலை வெட்டிச் சாய்த்துவிட்டனர்.

இந்தக் கொலையை செய்தது யார்? சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தின் மனைவி சிவகாமி!

ஆம், ஒரு பெண் பேதைதான் கொலைகாரி! பாவம், அவள்தான் என்ன செய்வாள்! கணவனைக் கொலை செய்யமுயன்றது ஒரு தவறா? சரிய்யா, ஆள் மாறாட்டத்தால் இன்னொரு சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டார். அதனால் என்ன? அவரும் ஒரு ஆண்மகன் தானே? இதற்கு ஏன் இந்தப் பாடு படுத்துகிறீர்கள்? ஆஃப்டர் ஆல் ஒரு ஆண் கொலை செய்யப்பட்டார். அவ்வளவுதானே! அதுவா இப்போது முக்கியம்? 20 ஆண்டுகள் முன்னர் ஒரு பெண்ணின் கையை ஒரு ஆண் பிடித்துவிட்டானே, அதுதானே ஐயா பெரிய குற்றம்? நம் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நேபாள பெண் ஒருவளை திருப்பி அனுப்பி அவளது பெற்றோர் வசம் அனுப்பி விட்டார்களே – அந்த அநியாயத்தை எதிர்த்துப் போராடுவதுதானே ஐயா இதைவிட முக்கியம்? பிரதம மந்திரி, உள்துறை மந்திரி ஆகியோர் அதைத்தானே முக்கியமாக கையிலெடுத்து அந்தப் பெண் மனம் கோணாமல் நடந்து கொள்கிறார்கள்! அதுதானே நம் நாட்டில் தலையாய பிரச்னை? அதை விடுத்து ஏதோ ஒரு சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டதைப்போய் – அதுவும் ஒரு பெண்ணால் – பெரிசு படுத்துகிறீர்களே! அகில இந்திய ஜனநாயக மாதர் கழகத்தினர் (AIDWA – All India Democratic Women Association) இந்தப் போக்கை வன்மையாக கண்டிக்கின்றனர்!

சரி. சிவசுப்பிரமணியத்தைப் போல் தோற்றம் கொண்டிருந்த பாவத்திற்காக, நடு ரோட்டில் யூனிஃபார்மோடு சேர்த்து கசாப்புக் கடையில் கொத்துக்கறி வெட்டுவதுபோல் சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டார்! உயிர் தப்பிய அந்த சிவசுப்பிரமணியம் என்ன சொகிறார்?

”எனக்கும் சிவகாமிக்கும் திருமணம் முடிந்த 3வது நாளிலேயே மனக்கசப்பு ஏற்பட்டது.

மனைவி பட்டப்படிப்பு படித்திருப்பதாக சொன்னார்கள். அவரிடம் கேட்டபோது பிளஸ்-2 பெயில் என்றார். சான்றிதழை வாங்கிப்பார்த்த போது 4 வயதை குறைத்துச் சொல்லி என்னை ஏமாற்றியது தெரிய வந்தது. அன்று முதல் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

மனைவி மீதுள்ள வெறுப்பில் வீட்டுக்கு செல்லாமல் நண்பர்களின் அறைகளில் தங்கினேன். என்னை கேட்காமலேயே கர்ப்பத்தை கலைத்தாள். இதனால் நான் கடும் வெறுப்படைந்தேன்.

அதன்பிறகு என்னைவிட்டு பிரிந்து பிறந்த வீட்டுக்கு போய்விட்டாள். அவளது உறவினர் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்தின் திட்டப்படி என்மீது வரதட்சணை புகார் கொடுத்தாள் (Sec 498A IPC). துப்பாகியை காட்டி நான் கர்ப்பத்தை கலைக்க சொன்னதாக புகார் செய்யவே, நான் சஸ்பெண்ட் ஆனேன்.

பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் வேலையில் சேர்ந்தேன். இநி நிலையில் என்னைக் கொலை செய்ய சதி போட்டனர்.

2 முறை என்னை கொல்ல சதி நடந்தது. இரண்டு முறையும் தப்பிவிட்டேன். இப்போது 3வது முறையாக தப்பியிருக்கிறேன். சம்பவத்தன்று நான் ரகசியமாக விடுமுறை எடுத்து கோவிலுக்கு சென்றதால் உயிர் பிழைத்தேன்.”

இதுநாள்வரை கணவன்மார்களுக்குத்தான் மனைவிகள் மூலம் ஆபத்து வரும் என்னும் நிலை இருந்தது. இனிமேல் கணவர்கள் போல் தோற்றமளிக்கும் அனைத்து ஆண்கள் உயிருக்கும் பாதுகாப்பில்லை என்ற பயங்கரமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மக்களைக் காக்கும் கடமையைக் கொண்டிருக்கும் ஒரு காவல் துறை அதிகாரியே இப்படிக் கொடூரமான முறையில் பட்டப் பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்டிருப்பாரேயானால் சாதாரண மக்கள் கதி என்ன?

சரி. இத்தகைய பொய்க் கேசுகளும், கணவர்கள் மற்றும் கணவரைப் போன்றவர்கள் கொலை செய்யப்படும் நிலையும் சமுதாயத்தில் தோன்றியமைக்குக் காரணமானவர்கள் யார்?

இதோ பதில்:

பாவம், பெண்கள். இன்னமும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைப் படுகொலை செய்த பாதகி

தூக்க மாத்திரை கொடுத்து கணவன் படு கொலை: நாடகம் ஆடிய மனைவி,கள்ளக்காதலனுடன் கைது
ஜனவரி 04,2010, தினமலர்
==================

”இளைஞர்களே, விதவைகளைத் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு புது வாழ்வு கொடுங்கள்” என்று பல பெண்ணிய வாதிகளும் வேறுபல “தலைவர்”களும் உங்களுக்கு அறைகூவல் விடுப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கோ, தம் பிள்ளைகளுக்கோ திருமணம் செய்யும் போது மட்டும் குலம், கோத்திரம் பார்த்து படே படே ஜோசியர்களை வெளி மாநிலங்களிலிருந்தெல்லாம் தருவித்து ஜாதகம் பார்த்து, சொத்து பார்த்து திருமணம் செய்வார்கள். ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வார்கள். அத்தகைய மயக்கும் பேச்சால் கவரப்பட்டு சில அசட்டு ஜன்மங்கள் விதவைகளுக்கு வாழ்வு கொடுக்கிறேன் என்று கிளம்பி ஏதும் சரியாக விசாரிக்காமல் முடிவெடுத்து முடிச்சுப் போட்டு பின் வாழ்க்கையைத் துலைத்து நிற்பவர்கள் ஏறாளம்.

ஐயா, விதவைகள் விஷயத்தை தீவிரமாக விசாரியுங்கள். அவர்கள் சொல்வதையோ, அவர்களை உங்கள் முன் பரிந்துரைப்பவர்கள் கூற்றையோ நம்பாமல் தீர விசாரியுங்கள். அவர்கள் முக்கிய உண்மைகளை மறைத்திருக்கக்கூடும். வாழ்க்கை உங்களுடையது. உங்களைக் காப்பாற்றிக் கொள்வது உங்கள் கடமை. நாசூக்கு பார்க்காதீர்கள். முக்கியமாக கணவன் எப்படி இறந்தான், அதற்கான ஆவணம் என்ன, எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான் போன்ற விவரங்களை அக்கு வேறு ஆணி வேறாக தூண்டித் துருவி விசாரியுங்கள். மேலும் மாஜிஸ்டிரேட் கோர்ட்டுகளுக்குச் சென்று இந்த நபர் இறப்பில் ஏதும் வில்லங்கம் இருந்ததா என்பதை சல்லடை போட்டுச் சலியுங்கள். இறப்பு நடந்தாக சொல்லப்பட்ட தினத்தை அடுத்து வெளிவந்த நாளிதழ்களில் இது பற்றி செய்திகள் ஏதெனும் இருந்ததா என்பதையும் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றித் தேடிப்பாருங்கள்.

இல்லையெனில் இதன் கீழ் வரும் செய்தியில் காணப்படும் “ரேகா ஸ்வீட்டி” போன்ற கொலைகாரிகளிடம் சிக்கி, நீங்கள் இன்னொரு “அஷோக் குமார்” ஆகிவிடக்கூடாது அல்லவா!

இதோ படியுங்கள் கள்ளக் காதலனுடன் கூட்டுச் சேர்ந்து சேர்ந்து மனைவியால் கொல்லப்பட்ட அந்தப் பரிதாப அசோக் குமார் கொலையைப் பற்றி.

Ashok Kumar murdered by wife Rekhaஅம்பத்தூர்: ஆவடியில், கள்ளக்காதல் மோகத்தில், கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .சென்னை ஆவடி, பஜார் நகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார்(24). அமைந்தகரையில் உள்ள சைக்கிள் கடையில் பணியாற்றி வந்தார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரேகா சுவீட்டி(20) என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரலில் திருமணம் முடிந்தது, இருவரும் ஆவடியில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் குடியேறினர்.இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி, தனது சகோதரர் திருமணத்திற்கு சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு ரேகா சென்றார்.

இந்நிலையில், வருவதாக கூறிய தனது கணவர் வரவில்லை என, ஆவடியில் இருந்த அசோக்குமாரின் பெரியப்பா ரத்னா லாலுக்கு தொலைபேசியில் ரேகா தெரிவித்தார். இதையடுத்து, ரத்னா லால் அசோக்குமாரை தேடினார். அசோக்குமாரின் மொபைல் போனை தொடர்பு கொண்டபோது அதுவும், “சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, ஆவடி போலீசில், கடந்த டிசம்பர் 2ம் தேதி, ரத்னா லால் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், அம்பத்தூர் துணை கமிஷனர் வரதராஜு (பொறுப்பு) கண்காணிப்பில், ஆவடி உதவிக் கமிஷனர் அழகர் ராஜா, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், எஸ்.ஐ., பெரியபாண்டி மற்றும் போலீசாரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

தனிப்படை போலீசார், ரேகாவை மீண்டும் அழைத்து நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து, ரேகா மீதான போலீசின் பிடி இறுகவே, கணவனை, கள்ளக்காதனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.இதுகுறித்த விசாரணையில், ரேகா திருமணத்திற்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தார். அங்கு, ஆற்காட்டைச் சேர்ந்த சையது ஆசிம் (25) என்பவர் தனது சித்தப்பாவின் பேன்சி கடையில் பணியாற்றி வந்தார். அடிக்கடி பேன்சி கடைக்கு ரேகா சென்றதால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து, ஜாலியாக இருந்துள்ளனர். இந்நிலையில், குடும்ப கவுரவம் கருதி, அசோக்குமாருடனான திருமணத்திற்கு ரேகா ஒப்புக் கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்து, ஆவடி வந்த பின்பும், தனது காதலனுடனான தொடர்பை, ரேகா விடவில்லை. ஆசிம் அடிக்கடி ஆவடி வந்து, காதலியைச் சந்தித்து, தனது கள்ளக்காதலை வளர்த்துள்ளார்.ரேகாவுக்கு, ஆசிமை பிரிய மனமில்லாத நிலையில், இருவரும் சேர்ந்து, தங்களுக்கு தடையாக இருக்கும் அசோக்குமாரை கொல்ல திட்டமிட்டுள்ளனர். ஆசிம் தனது நண்பரான, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (19) மூலம், நவம்பர் 26ம் தேதி, 30 தூக்க மாத்திரைகளை ரேகாவிடம் கொடுத்துள்ளார். அன்று இரவு, பாலில் அனைத்து மாத்திரைகளையும் கலந்த ரேகா, கணவனை குடிக்கச் செய்தார். அசோக்குமாரும் மனைவியை நம்பி குடித்ததும், மயங்கினார். கணவன் இறந்து விட்டதாக நினைத்த ரேகா, ஆசிமிற்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆசிம், தனது நண்பர் வினோத் மற்றும் ஆற்காட்டைச் சேர்ந்த, கால் டாக்சி வைத்திருக்கும் மற்றொரு நண்பரான தாலிப் பாட்சா(21) ஆகியோருடன் ஆவடி வந்தார்.வீட்டில் இருந்து காரில் அசோக்குமாரை ஏற்றும் போது, அவருக்கு உயிர் இருப்பது தெரிந்து, ரேகா மற்றும் ஆசிமின் நண்பர்கள் பிடித்துக் கொள்ள, ஆசிம் கழுத்தை நெரித்து, அசோக்குமாரை கொன்றுள்ளார். காரில் ஏற்றி மூவரும் ஆற்காடு சென்று அங்கிருந்து ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஜி.டி., நகர் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில், வாகனம் ஒன்றில் ஆட்கள் வரவே, அப்படியே பிணத்தை போட்டுவிட்டு, தப்பியுள்ளனர். ஜி.டி., நகர் காட்டுப்பகுதியில், துர்நாற்றம் வீசுவதாக தகவல் வரவே, அப்பகுதி போலீசார் பிணத்தை கைப்பற்றி, அடையாளம் தெரியாதவர் என்ற பெயரில் அடக்கம் செய்துவிட்டனர்.இதற்கிடையில், கணவனை கொலை செய்த ரேகா ஒன்றும் அறியாதவர் போன்று ராஜஸ்தான் சென்று பின், அங்கிருந்து கணவன் அங்கு வரவில்லை என்று அவரது பெரியப்பாவிற்கு போன் செய்துள்ளார். இவ்வாறு, விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, ரேகா சுவீட்டி, கள்ளக்காதலன் ஆசிம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் வினோத், தாலிப் பாட்சா ஆகியோரை ஆவடி தனிப்படை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். சமயோஜிதமாக செயல்பட்டு, கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார்.

“எனக்கு கணவரே தேவையில்லை, தீர்த்துக் கட்டிவிடு”

கள்ளக்காதல் கொலைகள் நிகழும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் அனைத்து நாளிதழ் மற்றும் வேறுபல ஊடங்களிலும் கள்ளக்காதல் மற்றும் அதனால் நிகழும் கொலைகள் பற்றிய செய்திகள்தான் நிரம்பி இருக்கும் போலிருக்கிறது!

ஆமாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமும், அரசு வரிப்பணத்தில் அரசியல்வாதிகளாலும் பணக்காரப் பெண்மணிகளாலும் நிரப்பப்பட்டுள்ள “தேசிய பெண்கள் வாரியமும்” (National Commission for Women) என்ன செய்கின்றன? இந்த “கள்ளக்காதல்” (Adultery) சீக்கு பன்றிக்காய்ச்சலை விட வேகமாகப் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதே. இதைத் தடுக்க ஏதேனும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டாமா?

இந்தக் கள்ளக்காதல் சோரம் போகும் அவலத்திற்கு ஆகும் முதல் நரபலி அந்தப் பெண்குலத் திலகத்தின் கணவன் தான்! அவன் தப்பித்தால், சில கேசுகளில் எக்குத்தப்பாக அந்தக் கள்ளக்காதலிகளும் பரிதாபமாக பலியாகிறார்கள்.

ஆனால், இந்த கள்ளக்காதல் கேவலங்களினால் நிகழும் மிகவும் பரிதாபத்திற்குறிய இழப்பு, இடையில் சிக்கி பலியாகும் குழந்தைகள்தான்! இதைப்பற்றி எவரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அனைத்து இயக்கங்களும், பெண்கள் அமைப்புக்களும், பெண்கள் வாரியங்களும் அந்தக் கள்ளக்காதல் மனைவிகளின் உரிமைகளைப் பற்றித்தான் கவலைப் படுகிறார்கள், கடமைகளைப் பற்றியல்ல. அவர்கள்தம் செக்ஸ் தேடுதலில் முழுத் திருப்தி அடைவதுதான் சமூகத்தின் முக்கியத் தேவை என்பது போல மனோரமா போன்ற திடீர் சமூக சேவகிகளும் பேசி வருகிறார்களேயன்றி ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகளின் நிலையைப் பற்றி யாரும் சிறிதளவேனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கணவன்மார்களின் “ஆண்மைக் குறைபாடு” பற்றி இயக்கம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கும் மனோரமா அம்மையார் ஏனிந்தக் குழந்தைகளின் நிலையைப் பற்றிக் கவலைப்படக் கூடாது?

இந்த நிலைக்கு முக்கிய காரணம் கள்ளக் காதல் (Adultery) தொடர்பான சட்டங்கள் ஒரு தலைப் பட்சமாக அமைந்திருப்பதுதான். கள்ளக்காதல் செய்யும் பெண்கள் மீது ஒருவித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்பதுதான் இப்போதிருக்கும் சட்டம். ஏனெனில் பெண்கள் அப்பாவிகள், ஒரு பாவமும் அறியாத அபலைகள். அவர்கள் வலைதான் விரிப்பார்கள்; ஆண்மகன் தான் காமாந்தகாரன், சண்டாளன், வெறி பிடித்தலைபவன்; அவன் வந்து சிக்கினால் அது அவன் குற்றம். இதுதான் இத்தகைய சட்டங்களின் அடிப்படை கருத்தாக்கம்!

Sec. 497 of Indian Penal Code:-

“Adultery”

Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offense of rape, is guilty of the offense of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

இதுதான் கள்ளக்காதல் தொடர்பான சட்டம். இது ஒருதலை சார்பாக உள்ளது எனவும் இதைத் திருத்தம் செய்து, தவறு செய்யும் ஆண், பெண் இருவருக்கும் சமமாகப் பொருந்தும்படியாக மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிபதி மலிமத் கமிட்டி மற்றும் சட்டக் கமிஷன் பரிந்துரை அளித்த பின்னும் தேசிய பெண்கள் வாரியமும் பல வலிமை வாய்ந்த இயக்கங்களும் சேர்ந்து எதிர்ப்பதால் அது இன்னமும் திருத்தப் படாமல் இருக்கிறது! (சுட்டி).

சரி. உங்களுக்கு இன்றைய கள்ளக்காதல் கோட்டா இதோ:-

மயிலாடுதுறை அருகே பயங்கரம்:

பரோலில் வந்த ஆயுள் கைதி கள்ளக்காதல் தகராறில் படுகொலை
மனைவி உள்பட 6 பேர் கைது

நாகப்பட்டினம், நவ.12 – 2009. செய்தி – தினத்தந்தி. (சுட்டி இதோ)

கள்ளக்காதல் தகராறில் பரோலில் வெளியே வந்த ஆயுள் சிறைக் கைதி கொலை செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே கழுக்காணிமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 42). இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்தார்.

சமீபத்தில் பரோலில் வந்த ராஜ்மோகன் பரோல் காலம் முடிந்து மீண்டும் ஜெயிலுக்கு செல்லவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மணல்மேடு அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலையா ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தென்னரசுவிடம் நேரில் ஆஜராகி ராஜ்மோகனை கொலை செய்து அவரது பிணத்தை ஒரு வயலில் புதைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர், பாலையாவை மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலையாவை கைது செய்தனர். அப்போது பாலையா போலீசாரிடம் கூறியதாவது:-

கள்ளக்காதல்

நானும், ராஜ்மோகனும் திருச்சி மத்திய சிறையில் இருந்த போது நண்பர்களானோம். அந்த நேரத்தில் பரோலில் நான் வெளிவந்த போது ராஜ்மோகன் வீட்டிற்கு சென்று அவரது மனைவி இந்துமதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.

அதில் இந்துமதியுடன் எனக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் ராஜ்மோகனுக்கு தெரிந்து இந்துமதியை துன்புறுத்தினார்.

இதனை தொடர்ந்து இந்துமதி எனக்கு கணவரே தேவையில்லை, அதனால் ராஜ்மோகனை தீர்த்து கட்டிவிடு என்று என்னிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் ராஜ்மோகனை தற்செயலாக நான் சந்தித்தேன். அப்போது ராஜ்மோகன் தனக்கு பணம் தேவை என்று என்னிடம் தெரிவித்தார்.

உடனே நான் ஆத்தூர் கிராமத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கி செல்லும்படி ராஜ்மோகனிடம் கூறினேன். அதன்படி ராஜ்மோகன் எனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் நானும், எனது நண்பர்களும், ராஜ்மோகனுடன் சேர்ந்து மது அருந்தினோம்.

அப்போது ராஜ்மோகனுக்கு அதிகமாக மதுவை, ஊற்றி கொடுத்தோம். இதில் நிலைதடுமாறி மயக்க நிலையில் இருந்த ராஜ்மோகனை நானும், எனது நண்பர்களும் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினோம். இதில் நிலைக்குலைந்த ராஜ்மோகன் சம்பவ இடத்திலேயே செத்தார்.

இதனையடுத்து ராஜ்மோகன் உடலை ஆத்தூரில் உள்ள ஒரு வயலில் குழித்தோண்டி எனது நண்பர்கள் உதவியுடன் புதைத்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கொலை செய்து புதைக்கப்பட்ட ராஜ்மோகன் பிணத்தை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று மதியம் புதைக்கப்பட்ட இடத்தை பாலையன் அடையாளம் காட்டினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வர் தயாள், தாசில்தார் ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. ராஜ்மோகன் பிணத்தை குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.

6 பேர் கைது

ராஜ்மோகன் கொலைச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலையா, அவரது நண்பர்கள் சிவராஜன், ராமலிங்கம், செல்வராஜ், உத்திரங்குடி கலியமூர்த்தி மற்றும் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகனின் மனைவி இந்துமதி ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

துப்புத் துலக்கும் செல்ஃபோன்கள்

உங்கள் எல்லோருக்கும் தெரியும் “தி ஹிந்து” ஒரு தீவிர பெண்ணியவாதம் பேசும் (Ultra-feminist) நாளிதழ் என்பது. இதுபோன்ற பெண்ணியவாத ஊடகங்கள் பெரும்பாலும், “மனைவி கணவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்தாள்” என்ற செய்தியைக்கூட “மனைவி தன் கையில் கத்தியுடன் இருக்கும்போது அந்த கொடுமைகாரக் கணவன், தன் மனைவிமீது கொலைப்பழி விழவேண்டும் என்னும் தீய எண்ணத்தில் அந்தக் கத்திமீது தன் கழுத்து சரியாகப் பாயும் வகையில் விழுந்து மாண்டான்” என்றுதான் எழுதுவார்கள்!

அத்தகைய செய்தி வெளியாகும்போது, இன்னொரு பக்கத்தில் ஒரு ஆஸ்தான பெண்ணிய எழுத்தாளர் பெயரில் ஒரு பாஷ்யக் கட்டுரை வெளியாகும். அது “இதுபோல் தன்னை மனைவி கையால் மாய்த்துக் கொண்டு பெண்ணினத்திற்கு மாசு கற்பிக்கும் போக்கு ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்தும் ஆணாதிக்க ம்னப்பான்மையின் வெளிப்பாடு. நம்நாட்டுப் பெண்கள் விழிப்படைந்து தங்கள் உரிமைகளை உணர்ந்து, முழுமையான விடுதலையை இன்னமும் பெறவில்லை என்பதையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுகின்றன” என்ற ரீதியில் இருக்கும். இதற்கு பின்பாட்டு பாடுவதற்கென்று மறுநாள் அரை டஜன் பெயர்களில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பிரசுரமாகும். இதுதான் நாம் அன்றாடம் காணும் வாடிக்கை.

அதே நேரத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லிகொண்டு அதையே முழுநேரத் தொழிலாகச் செய்யும் இன்னும் சில “சமூக ஆர்வலர்கள்” இந்த “கேப்”பில் புகுந்து “கள்ளக்காதலை ‘கள்ளக்காதல்’ என்று அழைக்கக் கூடாது” என்பதுபோல் அறிக்கை விடுவார்கள். உடனே அரசியலில் துண்டு போட இடம் தேடிக்கொண்டிருக்கும் சில முன்னாள் நடிகர்கள் “மனைவி கள்ளக்காதல் செய்வதற்கு கணவன்தான் காரணம். ஆகையால் மனைவி கணவனைக் கொன்றால் மற்ற சட்டங்களில் உள்ளதுபோல அதற்கு கணவனையே பொறுப்பாளி என்று தீர்மானித்து, அவன் தப்பித்தவறிப் பிழைத்தால் அவனைக் கைது செய்து சிறையிலடைக்கவேண்டும்; அவன் செத்தால் அவனுடைய பெற்றோரைச் சிறையிலடைக்க வேண்டும். மேலும் அவர்களுடய சொத்தையும் பிடுங்க வேண்டும் (இதுதான் முக்கியமான கூறு!!) – இப்படி அறிக்கை விட்டு விளம்பரம் தேடிக்கொள்வார்கள்!

ஆனால், இன்றைய “தி ஹிந்து” இதழில் கள்ளக்காதலனுடன் கூட்டுச் சேர்ந்து கணவனைக் கொலை செய்த செய்தி பெரிய எழுத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. பூசி மெழுகாமல் “உள்ளது உள்ளபடி” இத்தகைய செய்திகளை அந்த நாளிதழ் வெளியிடத் தொடங்கியிருப்பது ஒரு காலத்தின் கட்டாயம் எனலாம். எனெனில் தற்காலத்தில் பல பத்தினிகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வதை ஓவர்டைம் போட்டுச் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். மேலும் கள்ளக்காதல் என்பது இருமுனையிலும் கூறான கத்தி என்பதை அது அந்தக் கள்ளக்காதலியையும் பதம் பார்க்கும் காட்சிகள் மூலம் காணமுடிகிறது.

சரி, இப்போது இன்றைய சூடான “க.கா.கொ”-விற்கு வருவோம்:-

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி
தற்கொலை என்று நாடகமாடியவர்கள் கைது

அம்பத்தூர், நவ.10 – 2009. செய்தி: தினத்தந்தி. (சுட்டி)

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகமாடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீசுக்கு போன்

ஆவடி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வசித்து வந்தவர், சுதாகர் (வயது 38) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி ஷீலா (32) இவர்களுக்கு நிவேதிதா (8) என்ற மகளும், விஜய் (2) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த மாதம் 26-ந் தேதி சுதாகர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஷீலா ஆவடி போலீஸ் நிலையத்திற்கு அதிகாலை 3 மணிக்கு போன் செய்து எனது கணவர் சுதாகரை யாரோ மர்ம ஆசாமிகள் கொலை செய்து விட்டு போகும் போது வீட்டின் கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றதாக கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையிலான போலீசார் சுதாகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

ரகசிய கண்காணிப்பு

பிரேத பரிசோதனையில் சுதாகர் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

பிணத்தை மனைவியிடம் ஒப்படைத்த போலீசார் இறுதிச் சடங்கு முடியும் வரை மவுனம் காத்தனர். எனினும், சுதாகரின் மனைவியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது ஷீலா அதிகநேரம் செல் போனில் யாரோ ஒருவருடன் பேசுவது தெரியவந்தது. உஷாரான போலீசார் ஷீலா உபயோகப்படுத்தும் செல்போனின் விவரங்களை சேகரித்தனர்.

அதில், தினமும் இரவில் மணிக்கணக்கில் ராஜேஷ் (24) என்பவருடன் அவர் பேசியது தெரியவந்தது.

திட்டமிட்ட கொலை

ராஜேஷை பற்றி விசாரித்த போது, அவர் சுதாகரின் அக்காள் மகன் என்பதும் அவனுக்கு சுதாகர் கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்ததும் தெரிய வந்தது. பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சிணை காரணமாக காரை திரும்ப வாங்கிக் கொண்டு சுதாகர் அவனை துரத்தியதும் விசாரணையில் தெரிந்தது.

இதன்காரணமாக சுதாகரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம். அதில் இருவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

இருவரிடமும் துருவி, துருவி போலீசார் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

ஷீலா போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலம் வருமாறு :-

உல்லாசமில்லை

எனது கணவர் சுதாகர் எனக்கு மாமன் முறை ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் கைநிறைய சம்பாதித்தார். உடல் பருமன் ஆகி குண்டாக இருப்பார். இதனால், வெளியில் அவருடன் செல்வதற்கு எனக்கு அசிங்கமாக இருக்கும். மேலும் உடல் பருமனாக இருப்பதால் அவரால் என்னுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை. (இது கள்ளக்காதலை jutify செய்வதற்கு இவர்கள் கண்டுபிடித்துள்ள லேட்டஸ்ட் அஜால்குஜால் சாக்கு. உணமையில் இத்தகைய பெண்குலத் திலகங்கள் கள்ளக்காதலுக்கு அலைவதே வரையிட்டியான உல்லாசத்திற்காகத்தான். ஒருவனிடம் மட்டும் சுகம் கிடைத்தால் அடங்குமா அந்த வெறி! ஆண்குழந்தைகளைப் பெற்றவர்கள் ராத்தூக்கம் இல்லாமல் அலைவதுதான் அவர்களுடைய விதி!)

அவரது அக்கா மகன் ராஜேஷிற்கு கார் ஓட்ட தெரியும் என்பதால் அவனுக்கு வங்கியில் கடன் பெற்று ஒரு கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்தார்.

ஒருநாள் கடைக்கு செல்லவேண்டும் என்று என் கணவரிடம் கூறினேன். அவரோ ராஜேஷுடன் காரில் அனுப்பி வைத்தார். அவனும் என்னை `மாமி மாமி’ என்று பாசமாக அழைத்தான். அவனது அன்பில் நான் மயங்கினேன்.

கணவர் கண்டிப்பு

என்னை விட 8 வயது குறைந்த ராஜேஷுடன் உல்லாசமாக இருக்க முடிவு செய்தேன். ஒருநாள் தலைவலிக்கிறது என்று பாசாங்கு செய்தேன். அவனும் தைலம் தேய்த்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று அவனை இழுத்து அணைத்துக் கொண்டேன். இருவரும் உல்லாசமாக இருந்தோம் அன்று தொடங்கி தினமும் உல்லாசமாக இருந்து வந்தோம். கள்ள உறவு என் கணவருக்கு தெரிந்து விட்டது. அவர் இருவரையும் கண்டித்தார். இதைத் தொடர்ந்து தினமும் எனக்கும் அவருக்கும் சண்டை வந்தது. என்னால் ராஜேஷை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

திட்டம் தீட்டினோம்

ஒருநாள் நான் உணர்ச்சி வசப்பட்டு பேச்சு வாக்கில், “இனி என் கணவன் உயிருடன் இருந்தால் நாம் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பில்லை” என்று கண்ணீர் மல்க கூறினேன். இதைக் கேட்டு மனமுடைந்த ராஜேஷ் விரைவில் சுதாகருக்கு முடிவு கட்டிவிட்டு உன்னுடன் காலமெல்லாம் வாழ்வேன் என்று கூறினான்.

சம்பவத்தன்று நாங்கள் எதிர்பார்த்தது போல் வீட்டிற்கு வந்த சுதாகர் உடனடியாக அசந்து தூங்கி விட்டார். இந்த தகவலை செல்போன் மூலம் ராஜேஷிற்கு நான் கூறினேன்.

அதன்படி ராஜேஷ் நைலான் கயிற்றுடன் எங்கள் வீட்டிற்கு வந்தான். பின்னர் இருவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுதாகரின் காலை டவலால் கட்டிபோட்டோம். ராஜேஷ் நைலான் கயிற்றால் இறுக்க நான் கணவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பிடித்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் எனது கணவர் துடித்து, துடித்து செத்தார்.

பிணத்தின் அருகில் உல்லாசம்

பின்னர் சுதாகர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நாங்கள் இருவரும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்தோம். பின்னர், வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாததுபோல் ராஜேஷ் அவனது வீட்டிற்கு சென்றுபடுத்துவிட்டான்.

மறுநாள் சுதாகரை எழுப்புவது போல் நடித்தேன். அவர் பிணமாக இருந்தார். அழுது புலம்பி ஊரை கூட்டினோம். எல்லோரும் நம்பினார்கள். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்ப வைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கண்காணித்து பிடித்துவிட்டனர்.

இவ்வாறு ஷீலா கூறினார்.

சிறையில் அடைப்பு

ஷீலா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து ஷீலாவையும், ராஜேஷையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விபரீத கள்ளக்தாதல்!

வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு ஓடிய கதையைப் படித்தோம்.

இப்போது பெண் போலீஸ் ஆயுள் தண்டனைக் கைதியுடன் கொண்ட கள்ளக்காதலின் விளைவாக கொலையுண்டிருக்கிறார்.

பின்னே, கள்ளக்காதலில் நல்லதா விளையும்!

இந்தச் செய்திதான் இன்றைய செய்தித்தாள்களில் தலைப்பு நியூஸ். தினத்தந்தி இதன் விவரங்களை மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளது. அவற்றை உள்ளது உள்ளபடி இங்கு வெளியிட்டு அதை கள்ளக்காதலுக்குக் காரணம் ஆண்களே என்று வலியுறுத்துவதற்காக இயக்கம் துவங்க இருக்கும் ஆச்சி மனோரமாவுக்கு சமர்ப்பிக்கிறேன்!

தினத்தந்தி. நாள் நவ.5 – 2009

பகுதி – 1

சேலம் பெண்கள் சிறை காவலராக இருந்தவர் மாயம்:
பெண் போலீஸ் கற்பழித்து கொலை
ஜெயிலில், கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் விபரீதம்

சேலம் சிறை காவலாக பணிபுரிந்த பெண் போலீஸ் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். ஜெயிலில், ஆயுள்தண்டனை கைதியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.

காயத்ரி மாலா

சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் முதல் நிலை காவலராக (போலீஸ்) பணியாற்றி வந்தவர், எஸ்.காயத்ரி மாலா (வயது 33). கோவையை சேர்ந்தவர். காயத்ரி மாலாவுக்கும், மதுரை மத்திய சிறையில் சப்-ஜெயிலராக பணியாற்றி வரும் தமிழ்ச் செல்வன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ்ச்செல்வன், காயத்ரி மாலா இருவருமே ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்கள். கடந்த 2002-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக வேலைக்கு சேர்ந்த காயத்ரி மாலா, பதவி உயர்வு பெற்று, 8 மாதங்களுக்கு முன்பு கோவையில் இருந்து சேலத்திற்கு வந்தார். சேலத்தில் அய்யந்திரு மாளிகை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் காயத்ரி மாலா வசித்து வந்தார்.

திடீர் மாயம்

கோவை வரதராஜபுரம் ஆர்.வி.எல். நகரில் காயத்ரி மாலாவுக்கு சொந்தமாக வீடு உள்ளது. காயத்ரி மாலாவுக்கும், அவரது 2-வது கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் பிறந்த 4 வயது மகள் லட்சுமி பிரபா கோவையில் பெற்றோர் வீட்டில் இருப்பதால் வாரம் ஒரு முறை காயத்ரி மாலா கோவைக்கு சென்று தனது மகளை பார்த்து வருவது வழக்கம்.

கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த காயத்ரி மாலா, அங்கிருந்து கோவைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கோவைக்கு செல்லவில்லை. திடீரென்று மாயமான அவருடைய செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

ஏரிக்கரையில் பிணம்

இது குறித்து, சேலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரையில் ரெயில் பாதைக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் பிணம் தலைகுப்புற கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பெண் அணிந்து இருந்த சுடிதார் விலக்கப்பட்டு, சுடிதாரின் டாப்சும் கழற்றப்பட்ட நிலையில் அந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் கிடந்தார். மேலும் அந்த பெண்ணின் தலையில் சுமார் 25 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல்லும் வைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அடையாளம் தெரிந்தது

சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் முகத்தில் பெரிய கல் வைக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு இருந்ததால் பிணமாக கிடந்தவர் யார் என்று அடையாளம் உடனடியாக தெரியவில்லை. இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில் இறந்து கிடந்தது மாயமான காயத்ரி மாலாவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து காயத்ரி மாலாவின் பெற்றோருக்கும், கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காயத்ரி மாலாவின் தந்தை, தம்பி, அவரது மனைவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்த்து இறந்து கிடப்பது காயத்ரி மாலாதான் என்று அடையாளம் காட்டினார்கள். காயத்ரி மாலாவின் கணவர் தமிழ்செல்வனும் சம்பவ இடத்திற்கு வந்து காயத்ரி மாலாவை அடையாளம் காட்டினார். பின்னர் காயத்ரி மாலாவின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கற்பழித்து கொலையா?

காயத்ரி மாலா கோவைக்கு சென்றபோது அவருடன் யாராவது சென்றார்களா? அவர் கொண்டு சென்ற பை, அவரது செல்போன் போன்றவை என்ன ஆனது? போன்ற விவரங்கள் தெரிய வில்லை. அவரது ஆடைகள் அகற்றப்பட்டு கிடந்ததால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்தது.

அவரை கொலை செய்தது யார்? ஒருவரா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

ஆயுள் தண்டனை கைதி

விசாரணையில், கோவையை சேர்ந்த சரவணன் என்ற சரவணகுமார் (32) என்ற ஆயுள் தண்டனை கைதி, காயத்ரி மாலாவை கொலை செய்ததும், அவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்த திடுக்கிடும் தகவலும் அம்பலம் ஆனது.

காயத்ரி மாலா, கடந்த 2002-ம் ஆண்டில் கோவை மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வந்தார். அப்போது திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணகுமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்காதல்

அப்போது காவலர் காயத்ரி மாலாவுக்கும், சரவணகுமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதன்பிறகு தனது முதல் கணவரை காயத்ரி மாலா விவாகரத்து செய்தார். இதற்கிடையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சிக்காக வேலூர் சிறைக்கு சென்ற காயத்ரி மாலாவுக்கும், அங்கு பயிற்சியாளராக வந்த மதுரை சப்-ஜெயிலர் தமிழ்ச்செல்வனுக்கும் காதல் ஏற்பட்டு, காயத்ரிமாலா கர்ப்பம் ஆனார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடைய 4 வயது மகள் பிரபா லட்சுமி, கோவையில் உள்ள காயத்ரி மாலாவின் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதி சரவணகுமாருடன் இருந்த கள்ளக்காதலையும் காயத்ரிமாலா கைவிடவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக அவர்களுடைய தொடர்பு நீடித்து வந்தது.

தலைமறைவு சந்திப்பு

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கோவை சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சரவணகுமார், மீண்டும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகிவிட்டார். சேலம் மாவட்டம், ஓமலூரில் அவர் தங்கி இருந்தார். காயத்ரிமாலாவும் சேலம் சிறையில் பணிபுரிந்து வந்ததால், இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று கோவை சென்று பெற்றோரையும் மகளையும் பார்த்துவர காயத்ரிமாலா விரும்பினார். அப்போது சரவணகுமார் தனது செல்போனில் தொடர்பு கொண்டு தான் சங்ககிரியில் இருப்பதாகவும் எனவே சங்ககிரியில் இறங்கி தன்னை சந்திக்கும்படியும் காயத்ரிமாலாவிடம் தெரிவித்தார்.

கல்லால் தாக்கி கொலை

அதன்படி, கோவை செல்லும் வழியில் காயத்ரி மாலா சங்ககிரியில் இறங்கி சரவணகுமாரை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரைக்குச் சென்று இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சரவணகுமார், பெரிய பாறாங்கல்லை தலையில் தூக்கிப்போட்டு காயத்ரி மாலாவை கொலை செய்ததாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

செல்போன் மூலம் துப்பு

சரவணகுமார் எடுத்துச்சென்ற காயத்ரிமாலாவின் செல்போன், தாலி செயின், கைக்கெடிகாரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த செல்போன் மூலம் இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கி கொலையாளியை பிடித்து உள்ளனர்.

இந்த வழக்கில் 48 மணி நேரத்தில் துப்பு துலக்கிய சேலம் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான தனி போலீஸ் படையினரை போலீஸ் கமிஷனர் சுனில்குமார்சிங் பாராட்டினார்.

=========

பகுதி – 2

ஜெயிலில் பெண் போலீசுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?
கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

“பெண் போலீஸ் காயத்ரி மாலாவுடன் ஜெயிலில் தொடர்பு ஏற்பட்டது எப்படி?” என்று, கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம் பெண்கள் கிளைசிறை காவலர் காயத்ரிமாலா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சரவண குமார், சேலம் பள்ளப்பட்டி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கர்ப்பிணி மனைவி

“எனது பெயர் சரவணன் என்கிற சரவணகுமார் (வயது 32). ஓமலூரை அடுத்த செங்கரடில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி வெள்ளையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது எனது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

கடந்த 1997-ம் ஆண்டு திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலைய எல்லையில் ரிக் வாகன உரிமையாளர் செங்கோட கவுண்டர் என்பவரை கொலை செய்த வழக்கில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நான் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.

சாப்பாடு வண்டியை தள்ளி செல்வேன்

அங்கு எனது நன்னடத்தை காரணமாக எனக்கு சாப்பாடு வண்டியை தள்ளி செல்லும் வேலை தரப்பட்டது. நான் கோவை பெண்கள் சிறைக்கு சாப்பாடு வண்டியை தினமும் தள்ளி செல்வேன். அப்போது எனக்கும் பெண்கள் சிறையில் பணிபுரிந்து வந்த காயத்ரிமாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. கோவை மத்திய சிறையில் இருந்த நான் அவ்வப்போது நான் பரோலில் வீட்டுக்கு சென்று வந்தேன். ஆரம்பத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நான் சென்று வந்தேன். பின்னர் எனது நன்னடத்தை காரணமாக நான் தனியாகவே பரோலில் சென்று வீட்டில் உள்ளவர்களை பார்த்து விட்டு மீண்டும் சிறைக்கு வர அனுமதித்தார்கள்.

பரோலில் வந்து தலைமறைவு

இந்த கால கட்டத்தில் நான் காயத்ரி மாலாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 15.2.2009 அன்று பரோலில் வீட்டுக்கு வந்த நான் மீண்டும் கோவை சிறைக்கு செல்லவில்லை. இதனால் 24-ந் தேதி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன் பிறகும் நான் காயத்ரி மாலாவுடன் உல்லாச வாழக்கையை தொடர்ந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அவர் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். தான் கோவைக்கு செல்வதாக தனது கணவரிடம் கூறி விட்டதாகவும், நீ சங்ககிரிக்கு வா என்று கூறினார். அதன்படி நானும் சங்ககிரி பஸ் நிலையத்திற்கு முன்னதாகவே சென்று காயத்ரிமாலா வருகைக்காக காத்திருந்தேன்.

உல்லாசமாக இருக்க வற்புறுத்தினார்

பஸ்சில் அவர் வந்த நேரத்தில் நான் அவரிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினேன். அதே போல அவரும் என்னிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினார். சங்ககிரி பஸ் நிலையத்தில் காயத்ரிமாலா வந்து இறங்கியதும் 2 பேரும் சங்ககிரியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ரெயில்வே பாதை அருகில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கு சென்றோம்.

அங்குதான் நாங்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருப்பது வழக்கம். அதே போல 31-ந் தேதியும் நாங்கள் அங்கு உல்லாசமாக இருந்தோம். அப்போது நான் காயத்ரிமாலாவிடம் ரூ.5 ஆயிரம் கேட்டேன். அதற்கு அவர், `ரூ.5 ஆயிரம் தருகிறேன். ஆனால் நீ வாரம் ஒரு முறை என்னை சந்தித்து உல்லாசமாக இருக்க வேண்டும்’ என்று நிர்பந்தித்தார்.

மிரட்டியதால் கொன்றேன்

அதற்கு நான், `எனது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். என்னால் வாரம் ஒரு முறை வர முடியாது’ என்று கூறினேன். அதை கேட்ட காயத்ரிமாலா, `நீ கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவன். இப்போது பரோலில் வெளியே வந்து விட்டு தலைமறைவாக இருக்கிறாய். நான் நினைத்தால் உன்னை போலீசில் மாட்டி விட்டு மீண்டும் சிறையில் அடைத்து விடுவேன். ஒழுங்காக நான் சொல்வதை கேள்’ என்று மிரட்டினார்.

இவ்வாறு அவர் கூறியதும் எனக்கு ஆத்திரம் வந்தது. எங்கே நான் தலைமறைவாக இருப்பதை காயத்ரிமாலா சொல்லி விடுவாரோ என நினைத்தேன். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி காயத்ரிமாலாவின் தலையில் கல்லை தூக்கிப்போட்டேன்.

செல்போன் காட்டி கொடுத்தது

இதில் அவர் மயங்கினார். அதன் பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், தோடு, கைகெடிகாரம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடினேன். பின்னர் அங்குள்ள புதரில் காயத்ரிமாலாவின் உடலை இழுத்துப்போட்டு அவரின் தலையில் பெரிய கல்லை போட்டு விட்டு ஓடி விட்டேன்.

காயத்ரிமாலாவை கொன்று விட்டு நான் கருப்பூர் அருகே செங்கரடில் உள்ள எனது வீட்டிற்கு சென்று விட்டேன். இந்த நிலையில் காயத்ரிமாலா காணாமல் போனது பற்றி அவரின் தந்தை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் காயத்ரிமாலாவின் செல்போன் எண்ணை கொண்டு யாருக்கெல்லாம் பேசினார்? என விசாரித்தார்கள். அதில் நான் அவரிடம் பேசி இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர் போலீசார் என்னை பிடித்து விசாரித்தனர். இதனால் வேறு வழியின்றி நான் காயத்ரிமாலாவை கொன்றதை ஒப்புக் கொண்டேன்.”

இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

==========

பகுதி – 3

கொலை செய்யப்பட்ட பெண் காவலர் காயத்ரி மாலா, விவாகரத்து பெற்று மறுமணம் செய்தவர்

கொலை செய்யப்பட்ட பெண் காவலர் காயத்ரி மாலா, துணை ஜெயிலர் தமிழ்ச் செல்வனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே திருமணம் ஆனவர். முதல் கணவரை விவாகரத்து செய்தபின் தமிழ்ச்செல்வனை மறுமணம் செய்து கொண்டார். முதல் கணவர் மூலம் காயத்ரிமாலாவுக்கு பிறந்த 12 வயது மகள், கோவையில் படித்து வருகிறாள்.

இதேபோல், தமிழ்ச் செல்வனும் கோமளா என்ற பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் 10-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

இதற்கிடையில், 2-வது மனைவி காயத்ரி மாலா மூலம் தமிழ்ச்செல்வனுக்குப் பிறந்த 4 வயது மகள், கோவையில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் இருக்கிறாள். சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த காயத்ரி மாலா, வெளியே வக்கீல் ஒருவருடனும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.