தொகுப்பு

Archive for the ‘குழந்தை நலன்’ Category

மகனைக் கடத்திச் சென்று கண்ணாமூச்சி விளையாடும் தாய்

Rescue Aditya and hand him over to his fatherஇரு நாட்டு உச்ச நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் மகனுடன் மனைவி தலைமறைவு

சென்னை, டிச. 22: 2009. செய்தி – தினகரன்

அமெரிக்க நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் திடீர் திருப்பமாக மகனை கண்டுபிடித்து தரும்படி சென்னை போலீசில் டாக்டர் புகார் செய்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் டாக்டர் ரவிச்சந்திரன் (54). இவர், சென்னை பாண்டிபஜார் போலீசில் நேற்று அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

எனக்கும் பாண்டிபஜார் பகுதியில் வசிக்கும் விஜயஸ்ரீ ஊரான் (45) என்பவருக்கும் திருமணம் நடந்தது. நான் அமெரிக்காவில் மருந்துக் கம்பெனி பிரதிநிதியாக பணியாற்றி வருகிறேன்.
என் மனைவி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எங்களுக்கு ஆதித்யா (7) என்ற மகன் உள்ளான். இந்தநிலையில், எனக்கும் விஜயஸ்ரீக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டோம்.

நாங்கள் இருவரும் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், அங்கு உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் குழந்தை என்னுடைய வீட்டில் 15 நாட்களும், அவருடைய வீட்டில் 15 நாட்களும் இருக்க வேண்டும் என்று என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதனால் விஜயஸ்ரீ, அமெரிக்காவில் இருந்து குழந்தையுடன் இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார்.
இதனால் இந்தியாவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதில், அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விஜயஸ்ரீ ஆஜராக வேண்டும். அங்கு உள்ள வழக்கை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இப்போது திடீரென்று குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார். அமெரிக்க மற்றும் நமது நாட்டின் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குழந்தையை இப்போது என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அந்தப் புகாரில் டாக்டர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

இரு நாட்டின் உச்சநீதிமன்றங்கள் உத்தர விட்டுள்ள நிலையில், சென்னையில் குழந்தையை காணவில்லை என்று டாக்டர் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை யுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.
=============

அனைத்து கோர்ட்டு தீர்ப்புகளுக்கும் பெப்பே காண்பிக்கும் பெண்ணை ஆதரிக்கும் போக்கு நம் நாட்டில் அனைத்து மட்டத்திலும் நிறைந்திருக்கிறது. அதனால் தந்தைக்கும் குழந்தையின் நலனுக்கும் ஏற்படும் தீங்குகளைப் பற்றி கவலைப் படுவோர் இங்கு யாருமில்லை.

சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்காமல், கணவனை வஞ்சிக்கவேண்டும் என்ற ஒரே வெறியில் குழந்தையை இழுத்துக் கொண்டு ஊர்ஊராக மறைந்து திரியும் மனைவியிடமிருந்து குழந்தையை வாங்கி அந்தக் குழந்தைக்காக ஏங்கும் தந்தையிடம் அளிக்க எவருக்கும் மனமும் வரவில்லை.

இதுதான் இந்தியாவில் தந்தைகளில் நிலை. பாசம் வைத்தால் மோசம் போக வேண்டியதுதான்.

கனவனிடமிருந்து பிரிந்து வாழும் மனைவிகள் பலர் கணவனின் குழந்தைப் பாசத்தை வைத்து பிளாக் மெயில் செய்து பணம் பிடுங்கவும் செய்கிறார்கள். தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொள்ள குழந்தை ஒரு பகடைக்காய் அவ்வளவுதான். இத்தகைய போக்கிற்கு சமுதாயத்தில் அனைத்து அங்கங்களும் துணை போவதுதான் மிகப்பெரிய கொடுமை!

No trace of Aditya or Vijayasree in the addresses given by
Vijayasree to CBI! Willful flouting of SC order and no respect for
law. All registered documents sent to the two addresses in
Chennai were returned as Vijayasree was not found in those
locations! Bogus addresses were given to CBI!

As per supreme court order, Vijayasree is supposed to handover
Aditya to his father on December 17th. Now both are missing
again! Please call 97016 40009 if you know their whereabouts.

Agreeing with the New York Family Court, Supreme Court of India
(SC) declares all allegations of Vijayasree Voora against the father
are hollow and baseless. SC orders mother to go back to USA or
hand over Aditya to the father.

இவர் விவாகரத்து பெறுவதற்கு பல கோடி ரூபாய்களை ஜீவனாம்சமாக கொடுத்திருக்கிறார். மேலும் தான் பெற்ற குழந்தையின் 50% காப்புரிமையை (custody) நீதிமன்றத்தின் மூலம் பெற்றிருக்கிறார். ஆனால் அது ஏட்டளவிலேயே நிற்கிறது!

அந்தத்தந்தையின் மனக்குமுறலை இந்த வலைத்தளத்தில் காணுங்கள்.
http://www.rescueaditya.org/.

Advertisements

கொடுமைக்கார தாய், தகப்பனிடம் சென்ற சேய்

சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

Judge acknowledges shared parenting

நவம்பர் 23,2009. தினமலர்

கோல்கட்டா : வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த பத்து வயது சிறுமியை, நீதிபதியே, கடைக்கு அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் கோல்கட்டா கோர்ட்டில் நடந்தது. தனது தந்தையுடன் வசிக்க வேண்டும் என்ற, அந்த சிறுமியின் நீண்ட நாள் ஆசையையும் நீதிபதி நிறைவேற்றி வைத்தார்.

கோல்கட்டாவைச் சேர்ந்தவர் ராணா. இவரது மனைவி அனாமிகா. இவர்களுக்கு பத்து வயதில் பர்பி என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ராணாவும், அனாமிகாவும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தை பர்பி, அம்மாவுடன் தங்கி இருந்தாள். ஆனாலும், அப்பாவுடன் தங்கியிருக்க வேண்டும் என்பது தான், அவளது விருப்பம். குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்பதில் அனாமிகாவுக்கும், ராணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. வேறு வழியின்றி இருவரும் கோர்ட் படியேறினர். கோல்கட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையின்போது, பர்பியும் கோர்ட் டுக்கு அழைத்து வரப்பட்டாள். “தந்தையுடன் தான், வசிப்பேன்’ என, பர்பி உறுதியாக தெரிவித்தாள். இருந்தாலும், நீதிபதி முகோபாத்யாயா, இதில் அவசரப்பட்டு முடிவு எடுக்க விரும்பவில்லை. தந்தையின் மிரட்டல் காரணமாக, பயந்து போய் குழந்தை இவ்வாறு கூறுகிறதா என்பது உட்பட பல்வேறு சிந்தைனைகள் அவரது மனதில் ஓடின.நீதிபதி முகோபாத்யாயா, தனது இருக்கையை விட்டு எழுந்தார். நேராக சிறுமி பர்பி இருக்கும் இடத்துக்கு வந்தார். அடுத்ததாக கோர்ட்டில் நடந்த நிகழ்வு தான், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பர்பியின் கையை பிடித்து வெளியில் அழைத்துச் சென்றார், நீதிபதி. அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, சாக்லேட் வாங்கி கொடுத்தார். மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டாள், பர்பி. பின்னர், சிறுமிக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேச்சுக் கொடுத்தார்.”இங்கே பார். இப்போது இருந்து நான் உனக்கு நண்பன். எந்த பள்ளியில் படிக்கிறாய்? உனது பொழுது போக்கு என்ன? உன் நண்பர்கள் யார்?’ என, சிறுமியின் மனதுக்குள் இருப்பதை சிறிது, சிறிதாக கேட்டுத் தெரிந்து கொண்டார். நீதிபதியின் மென்மையான அணுகுமுறையால், அவர் மீது பர்பிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

மீண்டும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார். விசாரணை தொடர்ந்தது.”உனக்கு ஏன் அம்மாவிடம் இருக்க பிடிக்கவில்லை’ என, விஷயத்துக்கு வந்தார், நீதிபதி. இதற்கு சிறுமி பர்பி, கண்ணீர் மல்க கூறுகையில்,“அப்பாவை பார்க்க வேண்டும் என, கேட்கும்போதெல்லாம், அம்மா என்னை கடுமையாக அடித்து துன்புறுத்துவார். விடுமுறை நாட்களில் அம்மா என்னுடன் நேரத்தை செலவிட மாட்டார். அவரது தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக் கொண்டிருப்பார்” என்றார்.இவ்வாறு பர்பி கூறிக்கொண்டிருக்கும் போது, அவளது தாய் அனாமிகா வேகமாக வந்து, சமாதானப்படுத்த முயன்றார். இதைப் பார்த்த பர்பி, ஆவேசமாக,”என்னை தொடாதே. அந்த தகுதி உனக்கு இல்லை’ என, அழத் துவங்கினாள்.

பர்பியின் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி, தனது தீர்ப்பை வாசித்தார். “பர்பியை அவளது தந்தையுடன் தங்கியிருக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது’ என்றார். இதைக் கேட்ட பர்பி மகிழ்ச்சி அடைந்தாள். நேராக நீதிபதி இருக்கும் இடத்துக்கு சென்று,”நன்றி நீதிபதி அங்கிள்’ என, கூறி விட்டு, வேகமாக தனது தந்தையின் கையை பிடித்தபடி, கோர்ட்டை விட்டு வெளியேறத் துவங்கினாள். சென்று கொண்டிருக்கும்போதே, நீதிபதியை நோக்கி தனது தலையை திருப்பி, மெல்ல புன்னகைத்தாள். அங்கு கூடியிருந்தவர்களின் முகங்களிலும் புன்னகை அரும்பியது.