தொகுப்பு

Archive for the ‘கள்ள உறவு’ Category

கொலையில் முடிந்த “மிஸ்டு கால்” கள்ளக்காதல்

வடமதுரை அருகே பெண் இன்சூரன்ஸ் ஏஜன்ட் கொலையில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

செய்தி: தினமலர் (சுட்டி). நாள்: பிப்ரவரி 24,2011

மிஸ்டு கால் கள்ளக்காதல்திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கொம்பேறிபட்டியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் முருகேசன் மனைவி தனலட்சுமி(33). எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் ஏஜன்ட். கடந்த மாதம் 4ம் தேதி காந்திகிராமம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் அய்யலூர் தீத்தாகிழவனூர் பாலத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை காணவில்லை. வாகனத்தில் கொண்டு வந்த பிணத்தை உருட்டிவிட்டதற்கான அடையாளம் சம்பவ இடத்தில் இருந்தது. தேர்தலுக்கான போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதால் எரியோடு இன்ஸ்பெக்டர் முத்துபாண்டியிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

அவரது தலைமையிலான தனிப்படையினர் விசாரணையில், நான்கு மாதங்களுக்கு முன் தனலட்சுமியின் தவறுதலான “மிஸ்டு கால்’ மூலம் அறிமுகமானவர் திண்டுக்கல் மாலைப்பட்டி ரோட்டைச் சேர்ந்த குமரேசன்(26). இவரது தந்தை மாரியப்பன் திண்டுக்கல் தாட்கோ அலுவலக உதவியாளர். 9ம் வகுப்பு வரை படித்த குமரேசன், தனது தந்தை வேலை செய்யும் அலுவலகம் அருகில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

தனலட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பினால், அவரது மனைவி பாத்திமா, இரண்டு குழந்தைகளும் குமரேசனிடம் கோபித்து கொண்டு சென்று விட்டனர். சம்பவத்தன்று குமரேசனுடன் தனலட்சுமி காரில் சுற்றி வரும் போது, தனலட்சுமி மொபைலுக்கு வேறொரு ஆண் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த குமரேசன், தனலட்சுமியின் மொபைலை பறிக்க முயற்சிக்க, அவர் தரமறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன் தனலட்சுமியை காரினுள் வைத்து கொலை செய்து, அவரது நகைகளை எடுத்து கொண்டு அய்யலூர் பாலத்தில் பிணத்தை தள்ளிவிட்டு சென்றது தெரிந்தது.

இதனையடுத்து குமரேசனை கைது செய்த போலீசார் தனலட்சுமியின் நகைகளை மீட்டு, கொலைக்கு பயன்படுத்திய இண்டிகா காரையும் பறிமுதல் செய்தனர்.

Advertisements

கள்ளக்காதலியுடன் உல்லாசம் வாலிபர் கொலை: காதலன் கைது

கொலையானதும் வாலிபன்; கைதானதும் வலிபன். உல்லாசம் யாருக்கு!!

1. இப்போது செய்திகள் (தினமலர்): நவம்பர் 28,2010.

குறிஞ்சிப்பாடி : கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை அடித்து கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

வடலூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் மனைவி அம்சவள்ளி (24). சசிகுமார் கடந்த ஆறு மாதத்துக்கு முன் இறந்தார்.அம்சவள்ளிக்கும் இறந்த கணவர் சசிகுமார் நண்பர் வானதிராயபுரத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் வேதநாயகத்திற்கும் (28) தொடர்பு ஏற்பட்டது.இந்நிலையில் அம்சவள்ளி நெய்வேலியில் உள்ள இருசக்கர வாகனம் விற்பனை கடையில் வேலைக்கு சேர்ந்தார்.அங்கு மேலாளராக உள்ள மும்முடிசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் மகன் பழனிவேல் (30) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பழனிவேல் அடிக்கடி அம்சவள்ளி வீட்டிற்கு சென்று வந்தார். இதனை அறிந்த வேதநாயகம், பழனிவேலை பலமுறை கண்டித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வேதநாயகம், அம்சவள்ளி வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு பழனிவேலுவை பார்த்ததும் ஆத்திரம் அடைந்து கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். அதில் பழனிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.கொலையை மறைக்க வேதநாயகமும், அம்சவள்ளியும் முடிவு செய்தனர். அதன்படி அம்சவள்ளி வடலூர் போலீசில் பழனிவேல் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியதில் வேதநாயகம் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த கிரிக்கெட் மட்டையை கைப்பற்றினர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து வேதநாயகத்தை கைது செய்தனர்.

2. அது கிடக்கட்டும். தினமலரில் இன்று வெளியான இந்த செய்தியின்கீழ் நம் மக்கள் சிந்தியுள்ள அறிவார்ந்த கருத்துக்களை (காமெண்ட்ஸ்) காணுங்கள் முதலில்:

rajkumar – sharjah,ஐக்கிய அரபு நாடுகள் 2010-11-30 04:15:15 IST

கள்ளக்காதலுக்கு துணை புரிந்த அம்சவல்லியும் தண்டிக்கப்பட வேண்டும். ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழய முடியும். இவள் போன்ற பெண்ணால்தான் சில ஆண்கள் தவறான வழிக்கு செல்கிறார்கள். கலி காலம் எப்போதுதான் மாறுமோ!!!…
—————
சிலம்பரசன் – சென்னை.,இந்தியா 2010-11-30 00:32:56 IST

ஏன்டா வேதநாயகம் அம்சவல்லி என்ன உன்னுடைய பெண்டாட்டியா? கள்ளக்காதலிதானே, ஆற்று தண்ணீர் என்றால் நாலு பேர் குடிக்கத்தான் செய்வான். நீ என்னவோ உன் வீட்டுக்கிணற்றில் தண்ணீர் எடுத்து குடிததுபோல பழனிவேல கொலை செய்துவிட்டாய்?…
—————-
ஆனந்த்ரூபன் கேரளா – mumbai,இந்தியா 2010-11-29 12:49:31 IST

வேதநாயகம் ஏன் அம்சவள்ளியை கல்யாணம் செய்து குடும்பம் நடத்த பயப்படுகிறாரோ? அல்லது Part Time Job போதும் என்று நினைகிரானா? என்ன கொடுமைடா சாமி…….
—————-
ஜோஜோ – சென்னை,இந்தியா 2010-11-29 11:41:16 IST

நாய் ஜென்மங்கள் !!!!!…
—————-
ஹபிப் – dubai,இந்தியா 2010-11-29 10:39:32 IST

ஏன் இந்த வேலை. உங்களுக்கு உப்பு தின்னா தண்ணி குடிக்கணும். அதை போல தப்பு செஞ்சால் தண்டனை அனுபவிக்கனும். கவலை வேண்டாம். ஜெயில் உள்ள பொய் அனுபவிக்கலாம். தண்டனையை சொன்னேன்…
——————
சரவணன் – சிங்கபூர்,இந்தியா 2010-11-29 05:42:27 IST

நாடு எங்கயோ போகுது இவர்கள் மட்டும் என் இப்படி இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த வரை தவறான வழியில் உறவு வைத்துக்கொள்ளும் ஆண் மற்றும் பெண் இருவரையும் சுட்டுக்கொல்ல வேண்டும். அப்பதான் நாடு உருப்புடும். மனிதர்களே முன்னேற பாருங்கள். முட்டாளாக இருக்காதீங்க….
——————
நல்லவன் – ஜெத்தாஹ்,சவுதி அரேபியா 2010-11-29 01:26:23 IST

கள்ளக்காதலால் பல குடும்பங்கள் அழிந்துள்ளன…
——————-

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி!

1. வேதாரண்யம்: காதலித்த பெண்ணை திருமணம் செய்த மறுத்த காதலன் கைது செய்யப்பட்டார்.

2. காதலனை மறக்க முடியாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; மணமேடையில் தாலியை தட்டிவிட்டார். (அவர் கைது ஆக மாட்டார். எனெனில் அவர் பெண் என்பதால். ஆண்தான் கிரிமினல்)

3. தாலி கட்ட வேண்டிய கடைசி நிமிடத்தில் “மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என மணமகள் எழுந்து நின்றதால், திருமணம் தடைபட்டு மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

4. உடுமலை : பல ஆண்டுகள் காதலித்து, கல்யாணம் செய்யாமலேயே குடும்பம் நடத்திய காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்ததை தடுத்த காதலி, போலீசார் உதவியுடன் நிச்சயிக்கப்பட்ட நேரத்திலேயே காதலனை கரம் பிடித்தார்.

========================

இனி செய்தி விவரங்கள்:-

========================

வேதாரண்யம் அடுத்த பண்ணால் மேற்கு ஞானபிரகாசம் மகள் பிரபா (25). இவருக்கும் தென்னாடார் மேற்கு அய்யாத்துறை மகன் ராஜா (31). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்யும் படி ராஜாவிடம், பிரபா வற்புறுத்தினார். அதற்கு ராஜா மறுத்து விட்டார். இது குறித்து பிரபா வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். எஸ்.ஐ., அமுதா வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார். மருத்துவ பரிசோதனைக்காக பிரபா நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

செப்டம்பர் 12,2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=82977

———–

காதலனை மறக்க முடியாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; மணமேடையில் தாலியை தட்டிவிட்டார்

பூந்தமல்லி, செப்.12-

போரூர் மதனந்தபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தாம்பரம் மணிமங்கலத்தை சேர்ந்தவர் நதியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரும் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

சுபாசுக்கும், நதியாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இன்று காலை இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது.
நேற்று மாலை காரம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள சமுதாய கூடத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலை திருமணத்துக்கான சடங்கு நிகழ்ச்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. மணமகன் சுபாஷ் தாலி கட்டும் நிகழ்ச்சிக்காக மணமேடையில் அமர்ந்திருந்தார். மணப்பெண் நதியாவை தோழிகள் அழைத்து வந்து மணமகன் அருகில் அமர வைத்தனர்.

தாம்பூல தட்டில் வைக்கப்பட்டிருந்த தாலியை பெரியவர்கள் மற்றும் பெண்கள் தொட்டு வணங்கினார் கள். புரோகிதர் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் சுபாஷ், மணமகள் நதியா கழுத்தில் கட்ட தயாரானார்.

அப்போது நதியா திடீரென ஆவேசமாக தாலியை தட்டிவிட்டு மணமேடையில் இருந்து எழுந்தார். கழுத்தில் போடப்பட்டிருந்த மாலைகளையும் கழற்றி வீசினார். எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மணமேடையிலேயே அறிவித்தார்.

இதை கேட்டு மண மகன், உறவினர்கள் மற்றும் திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோர்களும், உறவினர்களும் நதியாவை சமரசப்படுத்தினார்கள். ஆனால் அவர் திருமணத்துக்கு பிடிவாதமாக மறுத்து விட்டார். காதலனைத்தான் திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த சம்பவங்களை பார்த்து மணமகன் சுபாஷ் கண்ணீர் விட்டு அழுதார். திருமணத்திற்காக செலவு செய்த பணத்தை மாப்பிள்ளையின் பெற்றோர், பெண் வீட்டாரிடம் கேட்டனர். அந்த பணத்தை 2 மாதத்தில் தருவதாக மணப்பெண்ணின் பெற்றோர் ஒத்துக் கொண்டனர். இதையடுத்து மணப் பெண்ணும், அவரது உறவினர்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

நேற்று மாலை முதல் ஆரவாரமாக இருந்த திருமண மண்டபம் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால் இன்று காலை களை இழந்து காணப்பட்டது.

http://www.maalaimalar.com/2010/09/12141629/bride-marriage-stop.html

================
மாலையை உதறிய மணமகள்

காரம்பாக்கம் : தாலி கட்ட வேண்டிய கடைசி நிமிடத்தில் “மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என மணமகள் எழுந்து நின்றதால், திருமணம் தடைபட்டு மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போரூரை அடுத்து மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்(45). இவரது மகன் சந்தோஷ்(26). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தாம்பரம் பகுதியை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்த அலமேலு மகள் பிரியா(24) உடன், கடந்த மாதம் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.

வளசரவாக்கத்தை அடுத்த காரம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் எதிரேயுள்ள சமுதாயக் கூடத்தில் நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை திருமணம் நிகழ்ச்சிகள் நடந்தன. முகூர்த்த நேரம் நெருங்கியதும் அர்ச்சகர் தாலி எடுத்துக் கொடுத்தவுடன், தாலி கட்ட மாப்பிள்ளை சந்தோஷ் தயாரானார். அப்போது மணமகள் பிரியா திடீரென எழுந்து நின்றார்.

“தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்வேன்’ என பிரியா கூற, மண்டபத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இருதரப்பினரும் பிரியாவிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கணபதியும் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். எதற்கும் பிரியா ஒத்துக் கொள்ளாமல் போகவே, திருமணம் நிறுத்தப்பட்டது.

திருமண ஏற்பாடுகளை செய்த மாப்பிள்ளை வீட்டாருக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூற, இறுதியில் பெண் வீடு தரப்பில் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வழங்க உறுதியளித்தனர். பிரியா அணிந்திந்த நான்கு சவரன் செயினை மாப்பிள்ளை வீட்டார் பெற்றுக் கொண்டனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83181

=================

காதலித்து ஏமாற்ற முயன்ற காதலனை போலீஸ் உதவியுடன் கரம் பிடித்த காதலி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83200

செப்டம்பர் 12,2010

உடுமலை : பல ஆண்டுகள் காதலித்து, கல்யாணம் செய்யாமலேயே குடும்பம் நடத்திய காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்ததை தடுத்த காதலி, போலீசார் உதவியுடன் நிச்சயிக்கப்பட்ட நேரத்திலேயே காதலனை கரம் பிடித்தார்.

பொள்ளாச்சி அருகேயுள்ள ஏரிப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர்(31). டிப்ளமோ முடித்தவுடன், புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அங்கு வேலை பார்த்து வந்த புதுச்சேரி சிந்தாமணியும்(24), சுதாகரும் காதலித்துள்ளனர்.

மும்பையிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்ற சுதாகர், கடந்த மே மாதம், திருமணம் செய்து கொள்வதாக சொல்லி சிந்தாமணியை அழைத்துச் சென்றுள்ளார். திருமணம் செய்யாமலேயே இருவரும் மும்பையில் ஒரே அறையில் குடும்பம் நடத்தியதில், சிந்தாமணி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், சுதாகருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், சிந்தாமணியை கழட்டி விட்டுவிட்டு தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார். இதற்காக கடந்த வாரம் சிந்தாமணியை மும்பையிலிருந்து அழைத்து வந்து பொள்ளாச்சியில் தங்க வைத்துள்ளார்.

பின், தனது திருமண வேலைகளில் மும்முரமான சுதாகர், சிந்தாமணியை தொடர்பு கொள்ளவில்லை. சந்தேகமடைந்த சிந்தாமணி, ஏரிப்பட்டிக்கு சென்று விசாரித்துள்ளார். இதில், சுதாகருக்கு வேறோரு பெண்ணுடன் நிச்சயம் ஆனதும், செப்., 13ம் தேதி (இன்று) திருமணம் என்பதும் தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் அறைக்கு சென்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் அவரை கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து உடுமலை அருகே வரதராஜபுரத்தில் பணியாற்றி வந்த சிந்தாமணியின் அண்ணன் நாகராஜூக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் சிந்தாமணியை அழைத்து வந்து நாகராஜ் புகார் அளித்தார்.

மகளிர் காவல் நிலைய போலீசார், சுதாகரை அழைத்து வந்து விசாரித்ததில், சிந்தாமணியுடன் பழகியதை தெரிவித்து, அவரையே திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டார். இன்று காலை வேறோரு பெண்ணை திருமணம் செய்ய கனவு கண்டிருந்த சுதாகரின் கனவு சிந்தாமணியின் போராட்டத்தால் வீணானது.

ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த அதே தேதி மற்றும் அதே நேரத்தில் சுதாகர் தனது காதலி சிந்தாமணியை போலீசார் முன்னிலையில் உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் முன்பு திருமணம் செய்து கொண்டார்.

தாலி கட்டிய மறுநாளே கணவருக்கு “அல்வா’ : கள்ளக்காதலனுடன் “ஜூட்’

கடலூர் : செப்டம்பர் 01,2010: செய்தி – தினமலர்

Marriage is a farse in Indiaதிருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, கள்ளக்காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை சினிமாவிற்கு அழைத்துச் சென்றால் மனம் விட்டு பேசுவாள் என, கூறினார். அதன்படி ரமேஷ், புவனேஸ்வரியுடன் கடலூர் வேல்முருகன் தியேட்டரில் , “வம்சம்’ படம் பார்க்கச் சென்றார்.

காலைக் காட்சி முடிந்து வெளியே வந்ததும் புவனேஸ்வரி, தியேட்டர் முன் பைக்குடன் நின்றிருந்த இருவரைக் காண்பித்து, “எனது நெருங்கிய உறவினர்கள்’ என, ரமேஷிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரும் இருவரிடமும் நலம் விசாரித்தார். பின் புவனேஸ்வரி, “நான் உறவினருடன் பைக்கில் பேசிக் கொண்டே வருகிறேன். நீங்கள் அந்த பைக்கில் வாருங்கள்’ எனக் கூறி மற்றொரு பைக்கை காண்பித்தார். அதனை நம்பிய ரமேஷ் ஒரு பைக்கிலும், புவனேஸ்வரி மற்றொரு பைக்கிலும் வீட்டிற்கு புறப்பட்டனர். புவனேஸ்வரியை ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற பைக் சிறிது தூரத்தில் ரமேஷின் பார்வையிலிருந்து மறைந்தது.

ரமேஷை ஏற்றிச் சென்றவர் திடீரென பைக்கை நிறுத்தி, “இங்கேயே நில்லுங்கள். இதோ வந்து விடுகிறேன்’ எனக் கூறிவிட்டு மாயமானார். வெகு நேரம் காத்திருந்த மாப்பிள்ளைக்கு சந்தேகம் வரவே, தனது மொபைல் போனில் வீட்டிற்கு பேசலாம் என பார்த்தபோது, யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அனைத்து எண்களும் அழிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் சாலக்கரையில் வீட்டிற்குச் சென்று பார்த்த போது தான், தன் மனைவி சினிமா தியேட்டரில் தனது மொபைல் போனை வாங்கி அனைத்து எண்களையும் திட்டமிட்டு அழித்தது தெரிந்தது. உறவினர் எனக்கூறி பைக்கில் வந்தவரை அறிமுகம் செய்து வைத்தது அவரின் காதலன் என்ற தகவலை அறிந்த ரமேஷ் நிலைகுலைந்தார். பெண்ணின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரியைத் தேடி வருகின்றனர்.

கணவன் வேண்டாம், கொண்டா காதலனை!

கணவனை வேண்டாம் என்று விலக்கிவிட்டு காதலருடன் சேர்ந்து வாழ ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோட முயன்ற புது மணப் பெண்ணை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையே அந்தக் கணவன் செய்திருந்தால அவனைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். பிறகு அந்த மனைவி கண்வன் மீது வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை போன்ற ஆணழிப்பு, ஒருதலைப் பட்ச சட்டங்களை ஏவி விட்டு அவனை சின்னாபின்னமாக்கி யிருப்பாள். இதுதான் இந்த நாட்டில் சட்டங்கள் செயல்படும் நிலைமை.

செய்தி: தினமலர் மே 12,2010

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் செல்வலட்சுமி(19). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வேளச்சேரியிலுள்ள அவரது உறவினர் சீனி ராஜா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது அதே பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வரும் கணேஷ் என்பவரு டன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் செல்வலட்சுமியின் காதல் விவரம் தெரிந்த அவரது பெற்றோர், சென்னை யில் மளிகை கடை நடத்தி வரும் உறவினரான செல்வராஜ் (25) என்பவருக்கு கடந்த மாதம் 25ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். செல்வலட்சுமிக்கு கணவர் செல்வராஜியுடன் சேர்ந்த வாழ விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார்.

இதனை அறிந்த செல்வராஜ் தங்களது உறவினர்களின் துணையுடன் செல்வலட்சுமியை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்து, நேற்றிரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து தூத்துகுடிக்கு அழைத்து சென்றனர்.விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது திடீரென செல்வலட்சுமி கதவை திறந்து கொண்டு ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் குதித்தார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு ராஜமோகன், பெண் போலீசார் அம்பிகா ஆகியோர் செல்வலட்சுமியை மீட்டனர். பின்னர் விசாரணை செய்து அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். நள்ளிரவில் ஓடும் ரயிலிலிருந்து பெண் ஒருவர் குதித்த சம்பவம் விழுப்புரம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெற்ற தாய்மாரே பச்சிளம் குழந்தைகளை வீசி எறியும் அவல நிலை – கள்ளக்காதல் காரணமா?

கடலூர், டிச.11 – 2009. செய்தி: தினத்தந்தி. (சுட்டி)

கடலூரில் பெற்ற தாய்மாரே, பச்சிளம் குழந்தைகளை வீசி எறியும் அவல நிலை தொடருகிறது. இச்சம்பவங்களுக்கு பின்னணியில் கள்ளக்காதல் காரணமாக இருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

தெருவில் வீசியெறியப்படும் குழந்தைகள்

நாய்க்குட்டிகளை தூக்கி தெருவில் வீசி எறிவது போல, பச்சிளம் பெண்குழந்தைகளை தெருவில் வீசியெறியும் சம்பவங்கள் கடலூரில் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இந்த சம்பவங்களை பார்க்கும் போது இனிவரும் காலங்களில் பெண்குழந்தைகளின் உயிருக்கு மதிப்பில்லையோ? என்று எண்ணத்தோன்றுகிறது.

கடந்த 15 நாட்களில் மட்டும் 3 பெண்குழந்தைகள் கடலூர் நகரின் தெருக்களிலும், முட்புதர்களிலும் வீசியெறியப்பட்டு உள்ளன. இதில் முதலாவதாக கடந்த மாதம் 25-ந்தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள முட்புதருக்குள் பச்சிளம் பெண் குழந்தை வீசி எறியப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் நடந்த அதேநாளில் குறைபிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே பெற்றோர்கள் விட்டுச்சென்ற அவலம் நேர்ந்தது. 3-வதாக கடந்த 7-ந்தேதி இரவில் கொட்டும் பனியில் நனைந்த படி ஒரு பெண் குழந்தை கடலூர் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் அனாதையாக கிடந்தது.

இந்த சம்பவங்களின் நினைவுகளெல்லாம் கண்முன் இருந்து அகலுவதற்கு முன்பாக நேற்று ஒரு பச்சிளம் பெண் குழந்தை கடலூர் கெடிலம் ஆற்றில் வீசியெறியப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

கெடிலம் ஆற்றுக்குள் பிணம்

கடலூரில் ஓடும் கெடிலம் ஆற்றின் குறுக்கே அண்ணா பாலத்தின் கீழே ஆற்று மணல் பரப்பில் ஒரு பச்சிளம் குழந்தை பிணமாக கிடந்தது. அந்த குழந்தையை பெற்றெடுத்த உடனே ரத்தம் சொட்ட, சொட்ட தூக்கிக்கொண்டு வந்து ஆற்றுக்குள் வீசியிருக்கின்றனர். இதில் குழந்தை பரிதாபமாக செத்தது.

நேற்று காலையில் அண்ணாபாலம் வழியாக நடந்து வந்தவர்கள், ஆற்றுக்குள் குழந்தை பிணம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்தவர்களில் பலர் பாலத்தின் ஓரமாக வாகனங்களை நிறுத்திவிட்டு பாலத்தில் நின்று குழந்தை பிணத்தை பார்த்தனர். இதனால் அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டதால் அண்ணாபாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி, புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் ஆகியோர் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர்.

மீட்பு

பின்னர் போலீசார் ஏற்பாட்டின் படி துப்புரவு பணியாளர் ஒருவர் ஆற்றுக்குள் இறங்கி குழந்தை பிணத்தை தூக்கிக்கொண்டு ரோட்டுக்கு வந்தார். இதன்பிறகு அந்த குழந்தையை அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதலில் ஈடுபட்ட யாரோ ஒருத்தி அந்த குழந்தையை பெற்றெடுத்து ஆற்றில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கடலூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்னே ஒரு அமர காதல் காவியம்!

இரண்டு பெண் குழந்தைகளின் தாய் இந்த 40 வயது முதிய தாய்க்குலம். இவருக்கு (ஒரு மரியாதை வேண்டாம்!) தன் கணவருடனுடனும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழும்போதே, ஒரு 20 வயது இளைஞனின் கலவைச் சுகம் தேவைப்பட்டது. இதை “கள்ளக்காதல்” என்றோ “கள்ள உறவு” என்றோ அழைக்கக் கூடாதாம்! பின்னே எப்படி அழைப்பது? தொடுப்பு என்கலாமா? அந்தக் காலமாக இருந்தால் “அவிசாரி” என்று சொல்லிவிடுவார்கள். இப்போது அதுபோல் சொன்னால் பெண்ணியவாதிகள் கோபப்படுவார்கள். எந்த எழவோ, போங்கள்!

லைலா – மஜ்னு, அம்பிகாபதி – அமராவதி போன்ற அமரக் காதல் காவியங்களின் வரிசையின் முன்னணியில் வைத்துப் போற்றப்படத்தக்க இந்த தெய்வீகக் காதல் கதையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!

உசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது பெண் சாவு; வாலிபர் கவலைக்கிடம்

எழுமலை, நவ.27 – 2009. செய்தி – தினத்தந்தி

உசிலம்பட்டி அருகே 40 வயது பெண், 21 வயது ஆண் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தனர். இதில் காதலி மரணமடைந்தார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை மில்லில் காதல்

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னன் மகன் திருமலை(வயது 21). இவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்தார். அதே மில்லில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி விஜயாவும் (40) வேலை பார்த்தார்.

செல்வராஜ்-விஜயா தம்பதிக்கு பிளஸ்-2, 9-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமலைக்கும், விஜயாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

சொந்த ஊருக்கு வந்தனர்

இவர்களின் தொடர்பு தெரிய வந்ததும், செல்வராஜ் தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும் அவர் கேட்கவில்லை. திருமலையுடன் உள்ள தொடர்பை துண்டிக்கவில்லை. இதனால் அங்கு பிரச்சினை அதிகரித்தது.

இதையடுத்து, திருமலையும், விஜயாவும் கோவையில் இருந்து கிருஷ்ணாபுரம் வந்தனர். இங்கு வசிக்க திட்டமிட்டனர். ஆனால் இங்கும் குடும்பத்தினரும், உறவினர்களும் அவர்களை ஏற்க மறுத்தனர். அவர்களது காதல் பற்றி சுற்றுப்பகுதியினர் கேலியாக பேசினர்.

விஷம் குடித்தனர்

இதனால் கள்ளக்காதல் ஜோடி மனம் உடைந்தது. மீண்டும் கோவைக்கும் செல்ல முடியாது. இங்கும் வாழ முடியாது. இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த காதல்ஜோடி இறுதியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது.

அதன்படி நேற்று அருகே உள்ள மொட்டமலைக்கு திருமலையும் விஜயாவும் சென்றனர். அங்கு விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தனர்.

நேற்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் இதைப்பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயா உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து எம்.கல்லுப்பட்டி போலீசில் கணவர் செல்வராஜ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ரமாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சுட்டி