தொகுப்பு

Archive for the ‘ஒருதலைச் சார்பு’ Category

அவள் இருந்தாலும் சிறை, இறந்தாலும் சிறை – அவனுக்கு!

இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளித்து பெரம்பலூர் முதன்மை அமர்வு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் செந்தூரைச் சேர்ந்தவர் வெள்ளமுத்து. இவரது பேத்தி வேம்பு. இதே பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சிலம்பரசன். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

ஆனால் திடீர் என்று சிலம்பரசன் வேம்புவை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த வேம்பு கடந்த 11.06.2006 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் பெரம்பலூர் முதன்மை அமர்வு கோர்ட் தீர்ப்பளித்தது. சிலம்பரசனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் அளித்து நீதிபதி தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.

செய்தி: தினமலர் : ஜனவரி 19,2011

ஆனால், இதே போல் அந்த ஆண் தற்கொலை செய்து கொண்டிருந்தால்? ஒன்றும் ஆகியிருக்காது; அது செய்திப் பத்திரிக்கையில் கூட இடம் பெற்றிருக்காது. ஏனெனில் இன்றைய சமுதாயத்தில் ஆணினம் தேவையற்றது, காயடிக்கப்பட்ட காளைமாடுகள் போல்!!

Advertisements

வனிதாவுடன் செல்ல மகன் மறுப்பு

Vanith and SriHariநடிகை வனிதாவின் முன்னாள் கணவர் ஆகாஷ். இவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் மகன் விஜய்ஸ்ரீஹரி, மகள் ஜோவிகா ஆகியோர் தன்னிடம் இருக்க வேண்டும் என்று மனுவில் கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப் பிரமணியன் இடைக்கால உத்தரவு ஒன்றை நேற்று முன்தினம் பிறப்பித்தார். நடிகர் ஆகாஷ் விஜய்ஸ்ரீஹரியை வனிதா வக்கீல் முன்னிலையில் வனிதாவிடம் இன்று காலை 11.30 மணிக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் 28-ந்தேதி வழக்கு விசாரணை வரும் போது வனிதா விஜய் ஸ்ரீ ஹரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி விஜய் ஸ்ரீ ஹரியை ஒப்படைப்பதற்காக ஆகாஷ் வனிதாவின் வக்கீல் அலுவலகத்துக்கு இன்று வந்தார். அப்போது வனிதாவும் வந்திருந்தார். ஆனால் விஜய்ஸ்ரீஹரி வனிதாவிடம் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்து காரிலேயே இருந்து கொண்டான். இதை கேட்ட வனிதா வேறு வழி தெரியாமல் திரும்பி சென்றார்.

இது குறித்து வனிதா கூறும் போது விஜய் ஸ்ரீஹரி என்னுடன் வர மறுத்து விட்டதாகவும். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் ஆகாஷ் கூறினார். 28-ந்தேதி வழக்கு விசாரணை வரும் போது பார்த்துக் கொள்வேன் என்றார்.

http://www.maalaimalar.com/2011/01/23150830/actress-vanitha-son-coming-den.html

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி!

1. வேதாரண்யம்: காதலித்த பெண்ணை திருமணம் செய்த மறுத்த காதலன் கைது செய்யப்பட்டார்.

2. காதலனை மறக்க முடியாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; மணமேடையில் தாலியை தட்டிவிட்டார். (அவர் கைது ஆக மாட்டார். எனெனில் அவர் பெண் என்பதால். ஆண்தான் கிரிமினல்)

3. தாலி கட்ட வேண்டிய கடைசி நிமிடத்தில் “மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என மணமகள் எழுந்து நின்றதால், திருமணம் தடைபட்டு மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

4. உடுமலை : பல ஆண்டுகள் காதலித்து, கல்யாணம் செய்யாமலேயே குடும்பம் நடத்திய காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்ததை தடுத்த காதலி, போலீசார் உதவியுடன் நிச்சயிக்கப்பட்ட நேரத்திலேயே காதலனை கரம் பிடித்தார்.

========================

இனி செய்தி விவரங்கள்:-

========================

வேதாரண்யம் அடுத்த பண்ணால் மேற்கு ஞானபிரகாசம் மகள் பிரபா (25). இவருக்கும் தென்னாடார் மேற்கு அய்யாத்துறை மகன் ராஜா (31). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்யும் படி ராஜாவிடம், பிரபா வற்புறுத்தினார். அதற்கு ராஜா மறுத்து விட்டார். இது குறித்து பிரபா வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். எஸ்.ஐ., அமுதா வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார். மருத்துவ பரிசோதனைக்காக பிரபா நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

செப்டம்பர் 12,2010,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=82977

———–

காதலனை மறக்க முடியாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; மணமேடையில் தாலியை தட்டிவிட்டார்

பூந்தமல்லி, செப்.12-

போரூர் மதனந்தபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தாம்பரம் மணிமங்கலத்தை சேர்ந்தவர் நதியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரும் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

சுபாசுக்கும், நதியாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இன்று காலை இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது.
நேற்று மாலை காரம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள சமுதாய கூடத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலை திருமணத்துக்கான சடங்கு நிகழ்ச்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. மணமகன் சுபாஷ் தாலி கட்டும் நிகழ்ச்சிக்காக மணமேடையில் அமர்ந்திருந்தார். மணப்பெண் நதியாவை தோழிகள் அழைத்து வந்து மணமகன் அருகில் அமர வைத்தனர்.

தாம்பூல தட்டில் வைக்கப்பட்டிருந்த தாலியை பெரியவர்கள் மற்றும் பெண்கள் தொட்டு வணங்கினார் கள். புரோகிதர் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் சுபாஷ், மணமகள் நதியா கழுத்தில் கட்ட தயாரானார்.

அப்போது நதியா திடீரென ஆவேசமாக தாலியை தட்டிவிட்டு மணமேடையில் இருந்து எழுந்தார். கழுத்தில் போடப்பட்டிருந்த மாலைகளையும் கழற்றி வீசினார். எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மணமேடையிலேயே அறிவித்தார்.

இதை கேட்டு மண மகன், உறவினர்கள் மற்றும் திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோர்களும், உறவினர்களும் நதியாவை சமரசப்படுத்தினார்கள். ஆனால் அவர் திருமணத்துக்கு பிடிவாதமாக மறுத்து விட்டார். காதலனைத்தான் திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த சம்பவங்களை பார்த்து மணமகன் சுபாஷ் கண்ணீர் விட்டு அழுதார். திருமணத்திற்காக செலவு செய்த பணத்தை மாப்பிள்ளையின் பெற்றோர், பெண் வீட்டாரிடம் கேட்டனர். அந்த பணத்தை 2 மாதத்தில் தருவதாக மணப்பெண்ணின் பெற்றோர் ஒத்துக் கொண்டனர். இதையடுத்து மணப் பெண்ணும், அவரது உறவினர்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

நேற்று மாலை முதல் ஆரவாரமாக இருந்த திருமண மண்டபம் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால் இன்று காலை களை இழந்து காணப்பட்டது.

http://www.maalaimalar.com/2010/09/12141629/bride-marriage-stop.html

================
மாலையை உதறிய மணமகள்

காரம்பாக்கம் : தாலி கட்ட வேண்டிய கடைசி நிமிடத்தில் “மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என மணமகள் எழுந்து நின்றதால், திருமணம் தடைபட்டு மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போரூரை அடுத்து மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்(45). இவரது மகன் சந்தோஷ்(26). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தாம்பரம் பகுதியை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்த அலமேலு மகள் பிரியா(24) உடன், கடந்த மாதம் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.

வளசரவாக்கத்தை அடுத்த காரம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் எதிரேயுள்ள சமுதாயக் கூடத்தில் நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை திருமணம் நிகழ்ச்சிகள் நடந்தன. முகூர்த்த நேரம் நெருங்கியதும் அர்ச்சகர் தாலி எடுத்துக் கொடுத்தவுடன், தாலி கட்ட மாப்பிள்ளை சந்தோஷ் தயாரானார். அப்போது மணமகள் பிரியா திடீரென எழுந்து நின்றார்.

“தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்வேன்’ என பிரியா கூற, மண்டபத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இருதரப்பினரும் பிரியாவிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கணபதியும் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். எதற்கும் பிரியா ஒத்துக் கொள்ளாமல் போகவே, திருமணம் நிறுத்தப்பட்டது.

திருமண ஏற்பாடுகளை செய்த மாப்பிள்ளை வீட்டாருக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூற, இறுதியில் பெண் வீடு தரப்பில் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வழங்க உறுதியளித்தனர். பிரியா அணிந்திந்த நான்கு சவரன் செயினை மாப்பிள்ளை வீட்டார் பெற்றுக் கொண்டனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83181

=================

காதலித்து ஏமாற்ற முயன்ற காதலனை போலீஸ் உதவியுடன் கரம் பிடித்த காதலி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83200

செப்டம்பர் 12,2010

உடுமலை : பல ஆண்டுகள் காதலித்து, கல்யாணம் செய்யாமலேயே குடும்பம் நடத்திய காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்ததை தடுத்த காதலி, போலீசார் உதவியுடன் நிச்சயிக்கப்பட்ட நேரத்திலேயே காதலனை கரம் பிடித்தார்.

பொள்ளாச்சி அருகேயுள்ள ஏரிப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர்(31). டிப்ளமோ முடித்தவுடன், புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அங்கு வேலை பார்த்து வந்த புதுச்சேரி சிந்தாமணியும்(24), சுதாகரும் காதலித்துள்ளனர்.

மும்பையிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்ற சுதாகர், கடந்த மே மாதம், திருமணம் செய்து கொள்வதாக சொல்லி சிந்தாமணியை அழைத்துச் சென்றுள்ளார். திருமணம் செய்யாமலேயே இருவரும் மும்பையில் ஒரே அறையில் குடும்பம் நடத்தியதில், சிந்தாமணி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், சுதாகருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், சிந்தாமணியை கழட்டி விட்டுவிட்டு தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார். இதற்காக கடந்த வாரம் சிந்தாமணியை மும்பையிலிருந்து அழைத்து வந்து பொள்ளாச்சியில் தங்க வைத்துள்ளார்.

பின், தனது திருமண வேலைகளில் மும்முரமான சுதாகர், சிந்தாமணியை தொடர்பு கொள்ளவில்லை. சந்தேகமடைந்த சிந்தாமணி, ஏரிப்பட்டிக்கு சென்று விசாரித்துள்ளார். இதில், சுதாகருக்கு வேறோரு பெண்ணுடன் நிச்சயம் ஆனதும், செப்., 13ம் தேதி (இன்று) திருமணம் என்பதும் தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் அறைக்கு சென்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் அவரை கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து உடுமலை அருகே வரதராஜபுரத்தில் பணியாற்றி வந்த சிந்தாமணியின் அண்ணன் நாகராஜூக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் சிந்தாமணியை அழைத்து வந்து நாகராஜ் புகார் அளித்தார்.

மகளிர் காவல் நிலைய போலீசார், சுதாகரை அழைத்து வந்து விசாரித்ததில், சிந்தாமணியுடன் பழகியதை தெரிவித்து, அவரையே திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டார். இன்று காலை வேறோரு பெண்ணை திருமணம் செய்ய கனவு கண்டிருந்த சுதாகரின் கனவு சிந்தாமணியின் போராட்டத்தால் வீணானது.

ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த அதே தேதி மற்றும் அதே நேரத்தில் சுதாகர் தனது காதலி சிந்தாமணியை போலீசார் முன்னிலையில் உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் முன்பு திருமணம் செய்து கொண்டார்.

ஆணினத்திற்கு அரசு அளித்திருக்கும் அன்புப் பரிசு

ஆம், தீபாவளி சிறப்புப் பரிசு!!

Catch-22 என்னும் கதையில் சுற்றிச் சுற்றி மறுக்கும் முரண்பாடு ஒன்றைக் காணலாம். அதன்படி போர் விமானங்களை ஓட்டி குண்டு எய்துகொண்டே இருக்கும் விமானிகளுக்கு பயத்தினாலும் சோர்வினாலும் பித்துப் பிடித்ததுபோல் ஆகிவிடுகிறது என்பதால் அத்தகைய வீரர்கள் இனிமேல் விமானம் ஓட்டாமல் ஓய்வெடுக்க வழி அமைக்கப்பட்டது. ஆனால் அதுபோல் ஓய்வு வேண்டுபவர் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் மற்றொரு சட்டத்தின் அடிப்படையில், ஒருவர் தனக்கு ஓய்வு வேண்டும் என்று கேட்டால் அவருக்கு ஒன்றும் பிரச்னையில்லை, சரியான மன நிலையில்தான் உள்ளார் என்று பொருள். அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கக் கூடாது; அவர் மேன்மேலும் விமானங்களை ஒட்டவேண்டும் என்று கட்டமைக்கப்பட்டிருக்கிறது!

இத்தகைய mutually contradictory (circular logic) கருதுகோளின் அடிப்படையில் எந்த வீரரும் சண்டையிடப் போவதை தவிர்க்கவே இயலாது!

இதே போன்ற புனைக்கருத்து சித்தாந்தத்தைத்தான் இந்திய அரசு கைக்கொண்டு “பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு சட்ட மசோதா” ஒன்றை இயற்றியிருக்கிறது.

அந்த சட்டத்தின் இந்த முக்கியமான பகுதியை வாசியுங்கள்:

தவறாக வேண்டுமென்றே பொய்யாக புகார் கொடுக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்த சட்ட மசோதா வழி செய்கிறது. ஆனால், அதே சமயம் புகார் கொடுத்து, அந்த புகாரை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாமல் போகும் பெண்கள் மீது நடவடிக்கை எடுத்திடக் கூடாது என்றும், இந்த சட்ட மசோதா கூறுகிறது.

ஒருவர் தன்னை பாலியல் தொந்திரவு செய்தார் என்று ஒரு பெண்மணி புகார் கொடுத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் புகார் பொய்யானது என்று எப்படி நிரூபிப்பது? அந்தப் பெண்குலத் திலகம் தன் புகாரை நிரூபிக்கத் தவறினால் அது பொய்ப் புகார் என்றுதானே பொருள் – சரிதானே? வேறு எந்த வகையில் ஒரு புகார் பொய்யானது என்று நிரூபிப்பது?

இதைப் படிக்கும்போது ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது – “தலை விழுந்தால் நான் ஜெயித்தேன்; பூ விழுந்தால் நீ தோற்றாய்”! அதுபோல் இந்த மசோதா சட்டமானால் பணியிடங்கள் எந்தப் பெண்ணும் தன் மேலதிகாரி மீதோ, உடன் பணியாற்றுபவர் மீதோ (அவர்கள் ஆணாயிருந்தால்) கோபமடைந்தால் உடனே அவர் தன்மேல் பாலியல் குற்றம் புரிந்ததாக பொய்ப் புகார் கொடுத்து அவரை சீரழிக்க முடியும். இனிமேல் கொண்டாட்டம்தான்!!

இன்னும் பல சிறப்புகள் உள்ளன இந்தச் சட்டத்தில். நீங்களே படியுங்கள் இந்தச் செய்தியை:


அடிமையான ஆண்கள்அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி புகார் மனு அளித்து, 90 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். இந்த மசோதா எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்படும்.

அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் வாயிலாக பாலியல் தொந்தரவுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. விரைவில் துவங்கவுள்ள குளிர்கால கூட்டத்தொடரின் போது, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த மசோதாவின் மூலம் அலுவலக பணிகளுக்கு செல்லும் பெண்கள் படும் பாலியல் தொந்தரவுகளுக்கு முடிவு கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணி இடங்களில் `செக்ஸ் தொல்லை’ என்பதற்கு உச்ச நீதிமன்றம் சில வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி உடலை தொடுதல், செக்ஸ் காரணத்துக்காக மிரட்டுதல் அல்லது வேண்டுகோள் விடுத்தல், உடல் மற்றும் வார்த்தை ரீதியாக விரும்பத்தகாத செயல்கள், வார்த்தைகளால் அல்லாத செக்ஸ் தொடர்பு போன்றவை செக்ஸ் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, பெண்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு அளிப்பதாக உறுதிமொழி அளித்தோ அல்லது அச்சுறுத்தியோ செக்ஸ் தொல்லை கொடுப்பது மற்றும் செக்ஸ் தேவைக்காக பணியிடத்தில் விரும்பத்தகாத சூழ்நிலையை உருவாக்குவது போன்றவையும் செக்ஸ் தொல்லைகளாக கருதப்படும்.

அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு தான் என்றில்லாமல், அலுவலகங்களுக்கு வந்து போகும் பெண்கள், பயிற்சி பெற வரும் பெண்கள் என, எல்லா தரப்புக்குமே இந்த மசோதா பாதுகாப்பை அளிக்க உள்ளது. மேலும் கல்லூரிகளில் ஆய்வுக்கு வரும் மாணவியர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பெண்களும் இதில் பாதுகாப்பு பெறுவர். அமைப்பு சாரா தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், வாடிக்கையாளர்கள், தினசரி கூலி தொழிலாளர் ஆகியோரும் இதில் அடங்குவர்.

இந்த மசோதாவின்படி ஒவ்வொரு நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்தை வகுத்திட வேண்டும். அந்த செயல் திட்டத்தின்படி அங்கு பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் நேராவண்ணமும், அவ்வாறு நேர்ந்தால் உரிய நடவடிக்கையும் எடுத்தாக வேண்டும். இந்த செயல் திட்டத்தை உருவாக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும். மேலும் அபராதமாக 50 ஆயிரம் ரூபாய் வரை விதிக்க நேரிடும்.

அலுவலகங்களில் தங்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கும் பெண்ணுக்கு மிரட்டலோ, வேறு அச்சுறுத்தல்களோ இல்லாது பார்த்து கொள்ள வேண்டியது, நிறுவனத்தின் பொறுப்பு. அந்த புகார் கொடுத்த பெண்ணுக்கு இடைக்கால நிவாரணமும் நிறுவனமே வழங்கிட வேண்டும். தேவைப்பட்டால், வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து, அந்த பெண்ணுக்கு பாதுகாப்பை வழங்கிட வேண்டும். புகார் மனு அளிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் அனைத்து விசாரணைகளையும், நிறுவனத்தின் நிர்வாகம் முடித்திட வேண்டும். அடுத்த 60 நாட்களுக்குள் என்ன தண்டனை என்பது குறித்து நடவடிக்கை எடுத்து முடித்திருக்க வேண்டும்.

தவறாக வேண்டுமென்றே பொய்யாக புகார் கொடுக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்த சட்ட மசோதா வழி செய்கிறது. ஆனால், அதே சமயம் புகார் கொடுத்து, அந்த புகாரை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாமல் போகும் பெண்கள் மீது நடவடிக்கை எடுத்திடக் கூடாது என்றும், இந்த சட்ட மசோதா கூறுகிறது. (வேறு எப்படி அது பொய்ப் புகார் என்று முடிவு செய்வது!) மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் குறித்து பாலியல் தொந்தரவுகள் மீது நட வடிக்கை எடுக்கும் பொறுப்புக்களை மத்திய அரசும், மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் சம்பந்தமாக மாநில அரசும் நடவடிக்கை எடுக்குமென்றும் இந்த மசோதா கூறுகிறது.

சில நிறுவனங்களில் 10க்கும் குறைவான எண்ணிக்கையில் ஊழியர்கள் என்றிருந்தால், அதற்கென உள்ளூர் கமிட்டி மூலம் இப்பிரச்னை கையாளப்பட்டு விசாரிக்கப்படும்.

இந்த சட்டத்தின்படி ஒரு அலுவலத்திலோ, கல்லூரியிலோ, அல்லது வேறு எந்த நிறுவனத்திலோ ஒரு பெண்ணின் அருகில் நீங்கள் சென்றாலே அது “செக்ஸ்” குற்றமாகக் கருதப்படும் (லிஃப்டில் கை இடித்தால் கூட!). பணியிடத்தில் பலவகை சச்சரவுகள் தோன்றுவது சகஜம். மேலதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் ஒரு பெண் பணியாளர் சரியாக வேலை செய்யவில்லை என்று கடிந்து கொள்ள நேரிடும்; மெமோ கொடுக்க வேண்டியிருக்கும்; அல்லது பதவி உயர்வை கொடுக்காமலிருக்கலாம்; அல்லது Annual Confidential Report-ல் சில ரிமார்க்குகள் எழுத வேண்டியிருக்கும். உடன் பணி புரியும் ஆண்கள் ஏதாவது கடிந்து சொல்ல நேரிடும். இவை எல்லாமே ஆணுக்கும் பெண்ணூக்கும் பொதுவானவை. ஆனால் இந்த சட்டப்படி ஒரு பெண் தொடர்பான அனைத்து பிரச்னைகளுமே “செக்ஸ்” தொல்லையாகக் கருதப்படும். மேலும் பெண் பணியாளர் மீது மேலதிகாரிகள் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கமுடியாது – அவர்கள் எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும்! உடனே அந்தப் பெண் தன்மீது செக்ஸ் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் கொடுத்து விடுவார்!

False complaints fo sexual harassment of women

கல்லூரிகளில் பேராசிரியர்கள் மாண்விகளுக்கு குறைவான மதிப்பெண் கொடுத்தாலோ, டாக்டர்கள் பெண் நோயாளிகள் கேட்டதெல்லாம் செய்யாமலிருந்தாலோ இனிமேல் அவர்கள் காலி!!

என்னைக் கேட்டால் இந்தச் சட்டம் இன்னும் விரிவாக்கப்பட்டு, இந்தியாவிலுள்ள கோர்ட்டுகள், சட்டசபைகள், பார்லிமெண்ட், மந்திரிசபைகள் – இதுபோன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் பொருந்தும்படியாக அமுலாக்கப்படவேண்டும்.

அப்போது பார்க்கலாம் வேடிக்கையை!!

மேலும் விவரங்களுக்கு வாசிக்கவும்:

1. Government approves Sexual Harassment at Workplace Bill, 2010 – Merinews
2. Thatsamil News
3. தினமலர் செய்தி
4. “மருமகள்” வலைப்பதிவு கட்டுரை
5. ஆண்களும் பெண்களால் செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள்.

போன ஜன்மத்தில் என்னை மானபங்கப்படுத்தினார்!

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஒருவர் ஒரு அழகியை (!) மானபங்கப்படுத்தி செக்ஸ் தொந்திரவு செய்தாராம். இப்போது புகார் கொடுத்துள்ளார் ஒரு பெண்மணி. (செய்தி)

இதுபோல் பல கேசுகள்.

40-க்கும் அதிகமான ஒருதலைப்பட்சமாக இயற்றப்பட்டிருக்கும் சட்டங்கள், ஒட்டுமொத்த ஆண்களையும் பிறவியிலேயே கிரிமினல்களாக கருதி, ஒரு பெண் புகார் ஒன்றைக் கொடுத்த மாத்திரத்தில் கைது செய்து சிறையிலடைக்கும் வகையில் கட்டமைத்திருக்கும் நிலையில் இதுபோன்ற புகார்கள், கைதுகள் நாள் தோறும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன.

இனிமேல் ஒரு மேலதிகாரி ஒரு பெண்ணை சரியாக பணியாற்றவில்லை என்று கடிந்து கொண்டாலோ, அந்தப் பெண் கேட்ட சலுகையை கொடுக்காமலிருந்தாலோ, ஒரு இயக்குனர் ஒரு நடிகை கேட்கும் ரோலை கொடுக்க மறுத்தாலோ, ஒரு பேராசிரியர் மாணவியை கடிந்து கொண்டாலோ அவர்கள் மேல் இத்தகைய செக்ஸ் புகார்கள் பாயும் அபாயம் இருக்கிறது. இதுபோல் நிகழ்ந்துகொண்டும் இருக்கின்றதை செய்தித்தாள்களில் காண்கிறோம்.

இந்திய கோர்ட்டுக்கள் சமீப காலங்களில் வழங்கியுள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் ஒரு ஆணை தண்டிக்க ஒரு பெண்ணின் வாக்குமூலம் மட்டுமே போதுமானது; எவ்வித சோதனையோ, சாட்சியமோ தேவையில்லை. ஏனென்றால் பெண்கள் பொய்யே சொல்ல மாட்டார்களாம்; ஆண்கள்தான் அனைத்து குற்றங்களையும் செய்வார்களாம்.

நல்லா இருக்குங்க நியாயம்!

ஆணுக்கு இழைக்கப்படும் அநீதி

செய்திகள் இரண்டு. இரண்டிலும் பாதிக்கப்பட்டது ஆண்களே!

செய்தி – 1:

”தாலி கட்டும் நேரத்தில் மணமகன் பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால், திருமணம் நின்றது.”

மொபைல் போனால் தாலி கட்டும் நேரத்தில் நின்றது திருமணம்

தினமலர் : ஆகஸ்ட் 23,2010. (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68592)

திண்டுக்கல் : திண்டுக்கலில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால், திருமணம் நின்றது. இருவரும் பிரிய மொபைல் போன் காரணமாக அமைந்தது.

திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த மரியலூயிஸ் மகன் டோமினிக் லாரன்ஸ்(27). எலக்ட்ரீஷியன். இவருக்கும், பெரியகுளம் தாமரைக்குளத்தை சேர்ந்த ஹென்றி மகள் சூரியாவிற்கும்(20) மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திண்டுக்கல் புனித வளனார் சர்ச்சில் நேற்று காலை 11 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது. அப்போது பங்கு தந்தை மணமகன் விருப்பத்தை கேட்டார். அவர் இந்த திருமணத்திற்கு சம்மதம் என்றார். மணமகள் விருப்பத்தை கேட்ட போது, அவர் இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றார். இதையடுத்து திருமணம் நின்றது. உறவினர்கள் மணமகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை சம்மதிக்க வைத்தனர்.

ஆனால் மணமகனோ, “என்னை பிடிக்கவில்லை என்று கூறிய பெண்ணுடன் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும். பெண் பார்க்கும் போதே பிடிக்கவில்லை என்று கூறியிருக்கலாம். நிச்சயதார்த்தம் நடந்த போதும், திருமண உடைகளை அணியும் போது கூட கூறியிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி திருமணம் நடக்கும் நேரத்தில் என்னை வேண்டாம் என்று கூறி அவமானப்படுத்தி விட்டார்’ என்றார். திருமணம் நின்று போனதால் திருமணத்திற்கான செலவுத் தொகையை தருமாறு மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் கேட்டனர். இரு வீட்டார் உறவினர்களும் மாறி, மாறி ஆலோசனை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டார் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இருதரப்பினரையும் அழைத்து நகர் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவு ஏற்படாததால், இருதரப்பினரும் திருமணம் முடிக்காமல் பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்து போலீசார் முன்னிலையில் பிரிந்து சென்றனர்.

மொபைல் போன் காரணம்: போலீசார் கூறியதாவது:

மணமகன் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மணமகளுக்கு ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். (அசட்டுப் பயப்புள்லைகளுக்கு மூளையே கிடையாது. எத்தையாவ்து வாங்கிக் கொடுத்து நட்டப் பட்டுகிட்டே கிடaப்பானுக!)

இதில் இருவரும் பேசும் போதே, திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் வரவேண்டும் என்று மணமகள் வற்புறுத்தியுள்ளார். இதற்கு மணமகன் மறுத்துள்ளார்.. (திருமணத்திற்கு முன்னாலேயே தனிக்குடுத்தன ஆசை) இதில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெண் அழைப்புக்கு வேன் அனுப்பாமல், பஸ்சில் ஏறி மணமகளை வரச் சொல்லியுள்ளனர். இதையெல்லாம் மனதில் வைத்து தான் மணமகனை பிடிக்கவில்லை என்று மணமகள் தெரிவித்துள்ளார்.திருமண செலவுத்தொகை 25 ஆயிரம் ரூபாய் தருவதாக மணமகள் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரும் பிரிந்து செல்ல ஏற்பாடு செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

======================

செய்தி: 2

காதலனுக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இளம்பெண் போராட்டம்

செய்தி – தினமலர்: ஆகஸ்ட் 22,2010. (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68097)

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, காதலனுக்கு நேற்று நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இளம்பெண் போராட்டம் நடத்தி வருவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியை அடுத்த மேகலசின்னம்பள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி முனுசாமி. அவரது மகன் விஜயேந்திரன்(30). அவர், பெங்களூரில் தங்கி பெயின்டராக வேலை பார்த்தார். அப்போது, அவருக்கும், பெங்களூரைச் சேர்ந்த நர்ஸ் அம்மு(23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்தனர்.

சில மாதம் முன்னர் இருவரின் காதல் விவகாரம், விஜயேந்திரன் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே பெற்றோரும், அவரது உறவினர்களும் பெங்களூரு சென்று காதலை கைவிடுமாறும், தாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படியும் விஜயேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளனர். வேறு வழியில்லாமல் விஜயேந்திரன் வேலையை விட்டு விட்டு பெற்றோருடன் மேகலசின்னம்பள்ளிக்கு வந்துள்ளார். விஜயேந்திரனின் பெற்றோர் அவருக்கு கிருஷ்ணகிரி அடுத்த ஐகொந்தம் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா(20) என்ற பெண்ணை பார்த்து திருமணம் பேசி முடித்தனர். உறவினர்களுக்கு பத்திரிகை அடித்து வினியோகம் செய்து, நேற்று காலை விஜயேந்திரன் வீட்டில் வைத்து திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணத்திற்காக மணப்பெண் உறவினர்கள், நேற்று முன்தினம் இரவு மேகலசின்னப்பள்ளிக்கு வந்தனர். இரவு நிச்சயதார்த்தம் நடந்தது.

நேற்று காலை 9 மணிக்கு மணமக்கள் இருவரும் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு சடங்குகள் நடந்தன. இந்நிலையில், விஜயேந்திரனுக்கு திருமணம் நடப்பதை அறிந்த காதலி அம்மு, நேற்று காலை மகாராஜகடை இந்நிலையில், விஜயேந்திரனுக்கு திருமணம் நடப்பதை அறிந்த காதலி அம்மு, நேற்று காலை மகாராஜகடை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தான் காதலனால் ஏமாற்றப்பட்டதையும், திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

போலீசார் அவரை அழைத்துக் கொண்டு, திருமணம் நடக்க இருந்த மேகலசின்னம்பள்ளிக்கு வந்தனர். அங்கு விஜயேந்திரன், மணமகள் திவ்யா கழுத்தில் தாலி கட்டுவதற்காக மணமேடையில் அமர்ந்து சடங்குகள் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அவரது காதலி அம்மு, திடீரென்று மணமேடைக்கு சென்று அவரது சட்டையை பிடித்து, தரதரவென பந்தலுக்கு வெளியே இழுத்து வந்தார்.

பின், அவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அம்மு, மகாராஜகடை போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாகச் சென்றார். கண் இமைக்கும் நேரத்தில் திருமணம் நின்றதால், இரு வீட்டு உறவினர்களும் அதிர்ச்சியில் செய்வதறியால் திகைத்து நின்றனர். மணமகனை மீட்டு, மீண்டும் திருமணம் நடத்துவதற்கு இரு வீட்டு உறவினர்களும் மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு, மகாராஜகடை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது காதலி அம்மு, “ஐந்து ஆண்டுகளாக காதலித்து தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்ட விஜயேந்திரனுக்கு தன்னை திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என போலீசாரிடம் தெரிவித்தார். (இது எப்படி முடியும்? உடலுறவு இரண்டு பேரும் சேர்ந்துதானே அனுபவித்தார்கள். பிறகு ஆண் மட்டும் “கொண்டான்” என்று எப்படி கூற முடியும்?)உடனே மணமகள் திவ்யா எழுந்து, “விஜயேந்திரனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், மணப்பெண் உறவினர்கள் திருமணத்தை நிறுத்தி விட்டு ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

மணமகன் வீட்டார் போலீசாரிடம், “விஜயேந்திரனை காதலித்த அம்மு வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், அவரை திருமணம் செய்து வைக்க முடியாது’ என தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து நடந்து வருகிறது.

————
சட்டம் ஒழுங்கைக் கவனிக்கிறார்களோ இல்லையோ, இந்த மாதிரி கட்டப்பஞ்சாயத்துகள் போலீஸ் ஸ்டேஷனில் கட்டாயம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதுதான் நிதர்சனம்!
————

பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா ஆண்களுக்கு எதிரானது

கொடி தூக்கும் ஆண்கள் அமைப்பு.

(http://www.dinamalar.com/News_Detail.asp?Id=53457)

புதுடில்லி : “குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டு வரப்படவுள்ள பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா, பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கு பாதகமாகவும் உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்’ என, ஆண்களுக்கான அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், “பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா’ இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மசோதா, “அலுவலகங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க, அவற்றின் தலைமையாதிகாரி உட்பட பெண்கள் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிந்துரைக்கிறது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த “தி சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன்’ என்ற ஆண்களுக்கான அரசு சாரா அமைப்பு ஒன்று, இம்மசோதா தற்போதைய நிலையில் நிறைவேற்றப்பட கூடாதென, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து அவ்வமைப்பின் பொதுச்செயலர் நீலாத்ரி சேகர் தாஸ் கூறியதாவது:

பெண்கள் எப்போதும் பொய்யே பேச மாட்டார்கள் என்றும், ஆண்கள் பிறக்கும் போதே “கிரிமினல்’களாக தான் பிறக்கின்றனர் என்றும் அம்மசோதா கருதுகிறது. ஆனால், பெண்களால் ஆண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இம்மசோதா, பெண்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. அதனால், இருபாலினத்தவரையும் சமமாக மதிக்கும் முறையில் மசோதா திருத்தப்பட வேண்டும். இதன் தற்போதைய வடிவம், இந்திய அரசியல் சாசனத்தின் 15வது பிரிவின், மத அல்லது பாலின ரீதியில் பாகுபாடு காட்டப்படக் கூடாதென்ற உரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவையில்லாமல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

மசோதா கூறியுள்ள இத்தகைய கமிட்டிகள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஏற்கனவே உள்ளன. அந்த கமிட்டியில் இடம் பெறுபவர்களுக்கான அடிப்படை தகுதியாக, ஒருவர் பெண்கள் நலம் குறித்து கவலை கொள்பவராக இருந்தால் போதும் என்று மசோதா கூறுகிறது. பெண்களே பெரும்பான்மையாக உள்ள கமிட்டியில் எப்படி ஆண்களுக்கான நீதி கிடைக்கும்? ஆண்கள் குற்றம் செய்யக் கூடாதென கூறும் மசோதா, பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், அவர்களையும் விசாரிக்க வேண்டுமென்பதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? பெண்களால், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கற்பனை செய்திகளின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது, அபாயகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி விடும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும், ஆண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும் நடவடிக்கை ரீதியாகவோ, சம்பவ ரீதியாகவோ சம நோக்கில் பார்க்க கூடாதென, அமைச்சகம் கருதுகிறது. இது தவறு.

இவ்வாறு நீலாத்ரி சேகர் தாஸ் தெரிவித்தார்.

பிரிவுகள்:ஒருதலைச் சார்பு குறிச்சொற்கள்:, , , , , , ,