தொகுப்பு

Archive for the ‘ஆண்பாவம்’ Category

இப்படியும் சில அசடுகள்!

மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் கணவர் தற்கொலை

திருவள்ளூர், பிப்.8-2011

திருவள்ளூரை சேர்ந்தவர் அன்பரசு (வயது 35). இவரது மனைவி ரம்யா (30). அன்பரசு தினமும் குடித்துவிட்டு வருவதாக தெரிகிறது. அதனால் மனைவி ரம்யா கணவரை கண்டித்தார். அதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. கணவர் மேல் கோபம் கொண்ட ரம்யா கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சில நாள் கழித்து அன்பரசு தன்னுடைய மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி ரம்யாவை குடும்பம் நடத்த வரும் படி அழைத்தார். ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார்.

அதில் மனமுடைந்த அன்பரசு தன்னுடைய வீட்டில் தனியாக இருக்கும் போது விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவள்ளூர் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisements

“கண்டமேனிக்கு” கணவரை திட்டுபவரா நீங்கள், உங்களுக்கு கணவர் “டாட்டா” காட்டி விடுவார் ஜாக்கிரதை!

வீட்டுப் பிரச்னைகளால் கணவருடன் அடிக்கடி சண்டை போடும் மனைவியா நீங்கள்?

சண்டை போடும் போது, இனிமேல் நாகரீகமற்ற, தரக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், உங்களிட மிருந்து, உங்கள் கணவர் விவாகரத்து பெறுவதற்கு இது ஒரு காரணமாகி விடும்.

டில்லியைச் சேர்ந்த பிரபல டாக்டர் அல்கேஷ் சவுத்ரி. இவரது மனைவி சீமா. இவரும் டாக்டர் தான். இவர்களுக்கு கடந்த 1992ல் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதற்கு பின், சின்ன, சின்ன பிரச்னைகளில் கூட, இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம், சண்டை நடந்தன.

சில நேரங்களில் அல்கேஷ் சவுத்ரியை, அவரது மனைவி தரக் குறைவான வார்த்தைகளால் திட்டுவார். இது மட்டுமல்லாது, அல்கேஷ் சவுத்ரியின் குடும்பத்தினரை பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவார்.

பொறுத்துப்பொறுத்துப் பார்த்த அல்கேஷ் சவுத்ரி, கோர்ட் உதவியை நாடினார்.

கீழ் கோர்ட்டில் விவாகரத்து கிடைத்தது.இதை எதிர்த்து, அவரது மனைவி சீமா, டில்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தனக்கும், தனது மனைவிக்கும் இடையே சண்டை நடந்தபோது, அவர் பேசிய கடுமையான வார்த்தைகளை ஒலிப்பதிவு செய்திருந்த டேப்பையும், கோர்ட்டில் தாக்கல் செய்தார், அல்கேஷ் சவுத்ரி.

இறுதியில், நீதிபதி கைலாஷ் காம்பீர், தனது தீர்ப்பில் கூறியதாவது:

“சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துடன் உள்ள ஒரு டாக்டர், தனது மனைவியிடம் இருந்து, தரக்குறைவான வார்த்தைகள் வருவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார். இதுபோன்ற வார்த்தைகளை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். கணவன்-மனைவி இருவரின் சமுதாய அந்தஸ்து, கல்வித் தகுதி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, மனைவி பயன்படுத்திய வார்த்தைகள், கணவரை மனரீதியாக துன்புறுத்தக்கவையாக கருதுவதற்கு இடம் அளிக்கிறது. மனைவியின் இதுபோன்ற வார்த்தைகளை பொறுமையாக தாங்கிக் கொண்டு, மன்னிக்கும் மனப்பான்மையுடன் கணவர் நடந்து கொண்டுள்ளார். இருந்தாலும்,மனைவி தொடர்ந்து அவரை நாகரீகமற்ற வார்த்தைகளால் திட்டியதுடன், அவரது குடும்பத்தினரையும் தரக் குறைவாக திட்டியுள்ளார். இது, கணவரை கொடுமைப் படுத்தியதற்கான தெளிவான ஆதாரமாக உள்ளது. எனவே, சீமாவிடம் இருந்து அல்கேஷ் சவுத்ரிக்கு விவாகரத்து கொடுத்த, கீழ் கோர்ட் உத்தரவை, ஐகோர்ட் உறுதி செய்து தீர்ப்பளிக்கிறது.”

இவ்வாறு நீதிபதி கைலாஷ் காம்பீர் தீர்ப்பளித்தார்.

செய்தி: தினமலர். பிப். 7, 2011.

பெண் அதிகாரியை தோளில் சுமக்கும் கணவர்

ஆணின் தியாகத்தை அங்கீகரிப்போர் யார்??

ஆண் தான் கிரிமினல் ஆயிற்றே; அவன்தான் வன்முறையில் ஈடுபடுபவன்; பெண்களை கொடுமை செய்பவன்; எரிப்பவன்; குழந்தைப் பாசம் அறவே இல்லாதவன்; பாவம், அபலைப் பெண்கள்; ஒரு பாவமும் அறியாதவர்கள்; தவறே செய்யத் தெரியாதவர்கள்!

சேலம்: மாற்றுத்திறன் கொண்ட பெண் அதிகாரியை, கலெக்டர் அலுவலகத்துக்கு நாள்தோறும் தோளில் சுமந்து வருகிறார் அவரது கணவர். இன்ஜினியர் பணியை துறந்து மனைவியுடன் இருந்து, அலுவலக பணிகளை மேற்கொள்ளும் அவரை ஊழியர்களும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.

சேலம் புதிய கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றுபவர் உஷாராணி(46). அவரது கணவன் சேகர், சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. சேலம் அய்யந்திருமாளிகை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் உஷாராணி, சிறு வயதிலேயே போலியா நோயால் பாதிக்கப்பட்டவர். ஆரம்பத்தில் வாழப்பாடி தாலுகா அறுநூத்துமலையில் ஆர்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். விபத்து ஒன்றில் சிக்கி பாதிப்படைந்ததால், வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றினார். இடமாற்றம் மூலம் சேலம் மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அலுவலகத்துக்கு வந்தார்.

“ஸ்டிக்’ உதவியுடன் நடந்து கொண்டிருந்த அவர், விபத்துக்கு பின் கணவர் துணையுடனே நடக்கிறார். மனைவி தனியாக கஷ்டப்படுவதை காண பொறுக்காத, கணவன், அவரை வீட்டில் இருந்து அழைத்து வருவது, முதல் தளத்தில் உள்ள குறைதீர்க்கும் அலுவலகத்துக்கு சுமந்து செல்வது, அலுவலக பணிகளை உடனிருந்து செய்வது, மாலையில் வீட்டுக்கு அழைத்து செல்வது, குழந்தையை கவனிப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். உடன் பணியாற்றும் அலுவலர்களும் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றனர்.

இது பற்றி உஷாராணி கூறியதாவது: போலியோ தாக்கியதில் கால்கள் செயல் இழந்தன. ஸ்டிக் உதவியுடன் ஓரளவு நடந்து வந்தேன். வாழப்பாடியில் பணியாற்றியபோது விபத்தில் சிக்கி காயமடைந்தேன். அதன்பின் நடப்பதில் சிரமம் ஏற்பட்டது. அந்த விபத்துக்கு பின் இடமாற்றம் மூலம் சேலம் வந்து விட்டேன். சிவில் இன்ஜினியரான என் கணவரும், என்னுடனே இருந்து உதவுகிறார். நல்ல கணவன்; கடவுள் கொடுத்த வரம், என்றார்.

இன்ஜினியர் பணியை துறந்து மனைவியுடன் இருந்து அலுவலக பணிகளை மேற்கொள்ளும் அவரை ஊழியர்களும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.

செய்தி: தினமலர் : ஜனவரி 13,2011

ஆண்களை பாடாய் படுத்தும் சட்டம்!

தினமலர் செய்தி:

பெண்களின் நடவடிக்கைகளே, அவர்களுக்கெதிரான குற்றங்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

மேற்கத்திய பாணியில், உடல் பாகங்களை வெளிகாட்டும் நவநாகரிக உடைகள், மது, போதை பழக்கத்திற்கு அடிமையாகுதல், “சாட்டிங்’, “டேட்டிங்’ போன்றவை எதிர் தரப்பினரை குற்றம் புரிவதற்கு தூண்டுகின்றன. பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்ததும், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. சட்டம் கொண்டுவரப்பட்ட புதிதில், பெண்களுக்கு நன்மை பயத்த இந்த சட்டம், காலம் செல்லச் செல்ல, ஆண்களுக்கெதிராக பயன்படுத்தப்படும் சட்டமாக மாறிவிட்டது.

தற்போது அந்த சட்டம், பிடிக்காத ஆண்கள் மற்றும் கணவரை பழிவாங்கும் நோக்குடன் பயன்படுத்தப்பட்டு வருகிறதே தவிர, உண்மை குற்றவாளியை தண்டிப்பதில் பயன்படுத்தப்படுவதில்லை.

சாதாரண வீட்டுச் சண்டை, அலுவலக பிரச்னைகளை கூட பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையில் கொண்டுவந்து, ஆண்களை படாத பாடு படுத்தி விடுகின்றனர்.

ஏற்காட்டில் கொந்தளித்த கணவர்கள்…!

ஆண் பாவம்...!ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள‌ ”ஆண் பாவம்” பற்றிய கட்டு​ரை

”எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்களால் முடியவில்லை. நாங்கள் சிக்கிச் சீரழிந்துகிடக்கிறோம்.”

– இப்படிச் சொல்வது பாலஸ்தீனம் அல்லது இலங்கை அகதிகள் அல்ல. மனைவியால் பாதிக்கப்பட்டு ‘வாழ்க்கை இழந்தவர்கள்‘!

இவர்கள் ‘அகில இந்திய ஆண்கள் நல சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூன்றாம் ஆண்டு மாநாட்டை கடந்த சுதந்திர தினத்தன்று ஏற்காட்டில் நடத்தி இருக்கிறார்கள்!

2005-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஸோரூப் சர்க்கார் என்பவரால் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு. மனைவிமார்களால் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு ரிலாக்ஸ் தேடவோ…. ஹனிமூன் ஜோடிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றோ… சுற்றுலாத் தலங்களாகப் பார்த்து மாநாடுகளை நடத்தி வருகிறார்கள். முதல் மாநாட்டை சிம்லாவிலும், இரண்டாம் மாநாட்டை கோவாவிலும் நடத்தி முடித்தவர்கள், இம்முறை அந்த மாநாடு ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில்!

Save Indian Family from false dowry casesமாநாட்டில் சோகமே உருவாக இருந்த கேரளாவின் கோகுலிடம் பேசினோம். ”எனக்கு சொந்த ஊர் திருச்சூர். வசதியான குடும்பத்தில் நான் ஒரே பையன். எனக்கும் ஆலப்புழாவைச் சேர்ந்த கிருஷ்ணகலாவுக்கும் 2001-ம் வருஷம் கல்யாணம் நடந்துச்சு. நாங்க மும்பையில் குடும்பம் நடத்தினோம். கல்யாணம் ஆனதில் இருந்தே எங்களுக்குள் சின்னச்சின்னப் பிரச்னைகள் முளைச்சது.

அடிக்கடி அவங்க வீட்டு பெருமையைப் பேசுற மாதிரி என்னைக் குத்திக்காட்டுவா. நான் யார்கிட்ட பேசினாலும் அவளுக்கு சந்தேகம்தான். அடிக்கடி ஆபீஸுக்கே வந்து என்னைப்பத்தி விசாரிச்சு அசிங்கப்படுத்தினா. வீட்டுக்கு வந்த உடனே என் மொபைல் போனைப் பிடுங்கி சோதனை செய்றது வழக்கமாப்போச்சு.

ஒருநாள், ‘நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்’னு கேரளாவுக்குப் போயிட்டா. 10 நாளுக்கு மேலாகியும் வரலை. நான் போன் செய்து கூப்பிட்டா, ‘எங்க வீட்டுல உங்களை வீட்டோட மாப்பிள்ளையா இருக்கச் சொல் றாங்க. இஷ்டம் இருந்தா வாங்க…’ன்னு சொல்லிட்டா. நான் வரலைன்னு சொன்னதும், எங்க குடும்பத்துல இருக்குற அத்தனை பேர் மேலயும் வரதட்சணை வழக்கு போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் நீதிமன்றத்துக்கும் அலையவிட்டாள். சமீபத்தில்தான், இந்த அமைப்புபத்தி கேள்விப்பட்டு அதில் சேர்ந்தேன். இவங்க சட்டரீதியாக எனக்குத் துணையா இருக்காங்க…” என்றார்.

சுரேஷ் ராம் என்பவர், ”நான் சென்னையில் வியாபாரம் பண்றேன். என் மனைவியின் குடும்பத்தினர் பொய்யாக என் மேல் வரதட்சணை வழக்கு போட்டு அலையவெச்சாங்க. நானும் இந்த அமைப்பில் சேர்ந்தேன். இவங்கதான், ‘என் மேல் தவறு எதுவும் இல்லை. நான் வரதட்சணை கேட்கவும் இல்லை’ன்னு சட்டரீதியாக நிரூபிச்சாங்க. இந்த அமைப்பு மட்டும் இல்லைன்னா, நான் ஜெயிலுக்குப் போய் இருப்பேன்.” என்றவர் தொடர்ந்து,

”நம் நாட்டில் ஆண்களுக்கு எதிராக பல சட்டங்கள் இருக்கின்றன. அதுவும் ஒரு பெண், கணவனால் தனது மனநலனுக்கு ஆபத்து ஏற்படும் என்று புகார் தெரிவித்தாலே, கணவனையும் அவரது உறவினர்களையும் விசாரணை இன்றி மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம் என்று சட்டம் இருக்கிறது. ஒரு பெண் திருமணமாகி ஏழு ஆண்டுக்குள் தற்கொலை செய்துகொண்டாலோ, வேறு வகையில் இறந்தாலோ, சந்தேகத்தின் பேரில் விசாரணை இன்றி, உடனடியாகக் கணவரையும் உறவினர்களையும் கைது செய்ய முடியும். ஆனால் அதேபோல, ஏழு வருடங்களுக்குள் கணவன் இறந்துவிட்டால், மனைவிக்கும் அவளது உறவினர்களுக்கும் எந்த விசாரணையோ தண்டனையோ கிடையாது. இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டங்களில் திருத்தங்கள் தேவை.” என்றார் ஆதங்கத்துடன்.

இந்த அமைப்பின் தமிழக மாநிலத் தலைவர் பிரான்ஸிஸ், ”எனது மனைவி இன்னொருவனுடன் படுக்கையில் இருந்ததைப் பார்த்துவிட்டேன். ஆனால், என் மீது வரதட்சணை வழக்குப் போட்டு 500 பவுன் நகையும், 75 லட்சம் பணமும் கேட்டு மிரட்டினார்கள். நானும் என் பெற்றோரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். உலகத்தில் அரபு நாடுகளில்கூட இங்கு இருப்பது போல் கணவர்களுக்கு எதிரான சட்டங்கள் இல்லை. இங்கு ஆண்களுக்கு எதிராக சுமார் 30 கிரிமினல் சட்டங்கள் இருக்கின்றன. ஆண்கள் சார்பாக ஒரு சட்டமும் இல்லாத நிலையில், பெண்கள் சார்பாக 84 சட்டங்கள் இருக்கின்றன. திருமணமான ஆண் இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தால், தண்டனை உண்டு. ஆனால், பெண் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தால் தண்டனை எதுவும் கிடையாது!

ஓர் இளைஞர் ஒரு பெண்ணைக் காதலித்துவிட்டு ஏமாற்றினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ஒரு பெண் வாலிபனைக் காதலித்துவிட்டுக் கை கழுவிவிட்டுச் சென்றால் நடவடிக்கை கிடையாது. இதுபோன்ற சட்டங்கள் இருப்பதால்தான் பெண்கள் துணிச்சலுடன் தவறு செய்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற சட்டங்களால் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 512 ஆண்கள் தண்டனை பெற்று இருக்கிறார்கள். நம் நாட்டின் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீலின் சகோதரர் தொடங்கி, அர்ஜுன்சிங், செம்மலை, எஸ்.எஸ்.சந்திரன், பிரசாந்த் எனப் பிரபலமான குடும்பங்கள்கூட பெண்களால் இதுபோல் பழிவாங்கப்பட்டு இருக்கிறார்கள்…” என்று ஒரு வி.ஐ.பி. பட்டியலைப் போட்டார்.

அகில இந்தியத் தேசியத் தலைவர் ஸோரூப் சர்க்கார், ”நான் டெல்லியில் வசிக்கிறேன். என் அனுமதி இல்லாமல் என் மனைவி கருக்கலைப்பு செய்தார். இதனால், மனரீதியாகப் பாதிக்கப்பட்டேன். அப்போதுதான் வலைத்தளம் மூலம் மனைவியால் பாதிக்கப் பட்டவர்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பை ஏற்படுத்தினேன். இதில் சேர சந்தா எதுவும் கிடையாது. இலவசம்தான். இப்போது 84 ஆயிரம் பேர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் சட்டம் சமமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

Victims of false dowry cases

சமீபத்தில் நடத்தப்பட்ட தேசியக் குற்றப் புள்ளியியல் ஆய்வில் ஒரு வருடத்துக்கு மனைவியால் பாதிக்கப்பட்டு 58 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். 32 ஆயிரம் பெண்கள் மட்டுமே ஆண்களால் பாதிக்கப்பட்டுத் தற்கொலைக்குத் தள்ளப் படுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. கால்நடைகளைப் பாதுகாக்கக்கூட இங்கு அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், ஆண்களைப் பாதுகாக்க அமைப்புகள் இல்லை. அதனால், பாதிக்கப்பட்ட ஆண்கள் எங்களை http://www.498a.org, http://www.aimwa.in என்ற வலைத் தளத்தில் தொடர்புகொண்டால் கட்டாயம் உதவுவோம்!” என்றார் நம்பிக்கையுடன்.

அப்புறம் என்னத்தைச் சொல்ல… ஹைய்யோ… ஹைய்யோ!

பெண் புகார் கொடுத்தால் புழல் சிறை நிச்சயம்

பிஎச்டி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார். சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது.

சென்னை: சென்னையில் பிஎச்டி படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்து, கற்பழிப்புக்கு முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் நேஹா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 24 வயதான இவர் மாநிலக் கல்லூரி பொது நிர்வாகத் துறையில் 2ம் ஆண்டு பிஎச்டி ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கடந்த மே 18ம் தேதி துறைத் தலைவரான பேராசிரியர் மாதவன் (54) (இவர் பெயர் மட்டும் மாற்றப்படாது. இது என்ன ஓர வஞ்சனை!) தன்னை அழைத்ததாகவும், துறை அறையில் வைத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், கற்பழிக்க முயன்றதாகவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர், பதிவாளர் ஆகியோரிடம் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்தை ஏதும் எடுக்கவில்லை. இதனால்தான் கால தாமதமாக போலீஸை அணுகியுள்ளேன் என்று தெரிவித்திருந்தார் நேஹா.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், திருவான்மியூரில் உள்ள மாதவனின் வீட்டிற்குச் சென்று அங்கு வைத்து அவரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பேராசிரியர் மாதவன் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களாக மாநிலக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2010/06/05/madras-presidency-college-professor-sexual-harassm.html

மயக்க ஊசி போட்டு டாக்டர் கணவனை சித்ரவதை செய்த மனைவிக்கு வலைவீச்சு

சேலம்: மே 17,2010 செய்தி: தினமலர்

சேலம் அருகே மயக்க ஊசி போட்டு கணவனை சித்ரவதைக்கு ஆளாக்கியதுடன், உறவினர்களுடன் சேர்ந்து வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய டாக்டரின் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

“குடும்பத்தில் வனமுறை செய்வது கணவன் மட்டுமே” என்கிறது “குடும்ப வன்முறைச் சட்டம்” (Domestic Violence Act).

அச்சட்டத்தின் அடிப்படையில் மனைவிதான் கணவன் மீதும் அவனது பெற்றோர் மீதும் கிரிமினல் புகார் கொடுத்து அவர்களை தங்கள் வீட்டிலிருந்தே வெளியேற்றி ஜீவனாம்சமும் கொடுக்கச் செய்யலாம். மனைவி எவ்வளவு கொடுமையும் சித்திரவதையும் செய்தாலும் கணவன் அவள்மீது புகார் கொடுத்து நிவாரணம் பெற இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் இடமில்லை!

எனெனில் இந்தியாவில் சமூகம், சட்ட மன்றங்கள், கோர்ட்டுகள் இவை அத்தனையின் பார்வையிலும் ஆண் என்பவன் கிரிமினல், கொடுமைக்காரன், அனைத்து கணவன்மார்களும் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து கொண்டு மனைவிகளை எரித்துக் கொன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனைவிகள் அனைவரும் அபலைப் பெண்கள். வாயில் விரல் வைத்தால்கூட கடிக்கத் தெரியாதவர்கள்!

இப்படித்தான் இருக்கின்றன இந்நாட்டில் சட்டங்களும் தீர்ப்புகளும்!

மயக்க ஊசி போட்டு கணவனை சித்திரவதை செய்த மனைவிசேலம் மாவட்டம் காகாபாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(41); லேப்ராஸ்கோபி டாக்டர். அவரது மனைவி சித்ரா(44); மகப்பேறு டாக்டர். இவர்களது மகன் நவீன்(16).

காகாபாளையத்தில் சி.கே., மருத்துவமனையை சித்ரா நடத்தி வந்தார். இடைப்பாடியில் நவீன் மருத்துவமனையை கண்ணன் பார்த்து வந்தார். பிரபல மருத்துவமனைகளில் ஆபரேஷன் பணிக்கும் அவர் சென்று வந்தார்.கடந்த 18 ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்த டாக்டர் தம்பதிகளிடையே கடந்த சில ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டது.

இது விவாகரத்து வரை சென்றது. பின் பெற்றோர், உறவினர்கள் தலையீட்டால் பிரித்து வாழ்ந்த தம்பதியர், இரண்டு மாதமாக சேர்ந்து வாழ்ந்தனர்.அவர்கள் வாழ்வில் சொத்துப் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்தது. கண்ணன் பெயரில் உள்ள சொத்துக்களை, தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என, சித்ரா பிரச்னை செய்துள்ளார்.

இதற்கு அவர்களது உறவினர்களும் ஆதரவாக இருந்துள்ளனர்.கடந்த 24ம் தேதி வீட்டுக்கு வந்த கண்ணனை, மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் தனி அறையில் கட்டி வைத்து மயக்க ஊசி போட்டு சித்ரவதை செய்து வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளனர். உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த கண்ணனை, அவரது மாமா மீட்டு சேலம் தரண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அதைத் தொடர்ந்து, மகுடஞ்சாவடி போலீசாரிடம் டாக்டர்கண்ணன் அளித்தபுகார் விவரம்: ஐந்து ஆண்டுகளாக நான் சம்பாதித்த சொத்து சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவிக்கும், எனக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று வாழப்பாடி சென்று விட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். சாப்பிட்ட பின், மனைவி அறைக்கு சென்றேன்.

அப்போது திடீரென லேப் டெக்னீஷியன் மகாதேவன், சித்ராவின் தம்பி கோபு, என் சகலை பாலசுப்பிரமணியம், சித்ராவின் அக்கா விஜயலட்சுமி, கோபுவின் மனைவி விமலா மற்றும் என்னுடைய மனைவி சித்ரா ஆகியோர் என்னை பிடித்து எலக்ட்ரிக் ஒயரால் கைகளையும், கால்களையும் கட்டி, அடித்து படுக்கையில் முகத்தை அமுக்கி, அதிகப்படியான மயக்க மருந்து மூலம் இடுப்பில் ஊசி போட்டனர்.

இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்களாக ஐந்து முறை மயக்க ஊசி போட்டனர். சித்ரா என்னிடம் வந்து, ‘எங்கப்பா பத்திரங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அதில் நான் கையெழுத்து போட்டு சொத்துக்களை அவர் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் ஊசி போட்டு கொலை செய்து விட்டு, நீயே தற்கொலை செய்து கொண்டதாக கூறி விடுவேன்’ என, மிரட்டினார்.உயிருக்கு பயந்து நானும் எழுதிய பத்திரம், எழுதாத பத்திரங்களில் கையெழுத்து போட்டேன்.

அதன் பிறகு மயக்க ஊசி போட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு அறையில் அடைத்து விட்டனர். மயக்கம் தெளிந்து, ‘காப்பாற்றுங்கள்’ என்று கத்தினேன். என் மாமா வந்து என்னை மீட்டு, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் என கூறினார். அதன்படி தரண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கூறுகையில், ”டாக்டர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் அவரது மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ளனர்; தேடி வருகிறோம். இன்று புகார் அளிப்பவர்கள், பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம் என்று வருவர். சித்ராவிடம் விசாரணை நடத்தினால், உண்மை நிலை தெரியவரும்,” என்றார்.

இந்த சம்பவத்துக்கு பின், சித்ரா மற்றும் அவருடன் இருந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர். சேலம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற அவர்கள் முயற்சித்ததாகவும், அந்த மனு தள்ளுபடியானதால், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டுமனு தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.