தொகுப்பு

Archive for the ‘ஆண்கள் நலன்’ Category

ஆண்கள் நலம் காக்க முற்படுவீர் அரசியல் கட்சிகளே!

Aimwa Logoஅகில இந்திய ஆண்கள் நல இயக்கம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கைகள் அடங்கிய வேண்டுகோளை இங்கு காணலாம்:

அரசியல் கட்சிகளுக்கு AIMWA முன்வைத்துள்ள கோரிக்கைகள்

AIMWA கோரிக்கைகள் - பக்கம்-2

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பிடிஎஃப் வடிவத்தில் பெற (to download the above letter in PDF format) இங்கே கிளிக் செய்யவும்.

Advertisements

ஆண்கள் தற்கொலை

நம் சமூகத்தில் பெண்கள்தான் அதிகம் தற்கொலை செய்துகொள்வதாக ஒரு தவறான பிம்பத்தை மக்கள் மனத்தில் பெண்ணியவாதுகளும் ஊடகங்களும் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றன. உணமை என்னவென்றால் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்களின் தற்கொலைச் சாவு பெண்களைவிட இரண்டு பங்கு. இது அரசே கொடுத்துள்ள புள்ளி விவரம் (NCRB).

இனி இன்றைய ஆண் தற்கொலை பற்றிய செய்தியை வாசியுங்கள்:-

நிச்சயம்செய்து 2 ஆண்டுகள் ஆகியும் திருமணம் நடக்காததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

அம்மாப்பேட்டை,டிச.1- 2009. செய்தி – தினத்தந்தி

அம்மாப்பேட்டை அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயம் ஆகியும் திருமணம் நடக்கவில்லையே என்ற ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விஷம் குடித்து தற்கொலை

அம்மாப்பேட்டை அருகே உள்ள சேர்மாநல்லூர் வளையல்காரத்தெருவைச்சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் கோபி(வயது 22) கூலி வேலை செய்து வந்தார். கோபிக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நிச்சம் செய்திருந்தனர். கோபி 2 வருடமாகியும் திருமணம் நடக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தார். இதனால் மனமுடைந்த அவர் தனது தந்தையிடம் ஏன் எனக்கு இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என கேட்டார். அதற்கு கோபியின் தந்தை பக்கிரிசாமி, ”உன் தங்கைக்கு இந்த வருடத்தில் திருமணம் முடிந்து விடும். பின்பு உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்” என்று கூறினார் (இப்படித்தான் தங்கள் தங்களுக்காக தங்கள் சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள் பல ஆண்கள்). இதில் மனமுடைந்த கோபி விஷத்தை குடித்து விட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஏட்டு குணசேகரன், சுந்தர்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லா திருமணங்களையும் இனி பதிவு செய்ய வேண்டும் – அரசு உத்தரவு

G.O on compulsory marriage registrationதிருமணப் பதிவு விண்ணப்பத்தின் முக்கிய பகுதி வரதட்சணை பற்றியது. அந்தப் படிவத்தில் கணவன், மனைவி இருவரும் ”வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ” இல்லை என்று வாக்குமூலமளித்து சாட்சியங்கள் முன் கையொப்பமிடவேண்டும். அதன் பிறகே திருமணம் பதிவு செய்யப்படும்.

9. We hereby declare:-

(v) no dowry was demanded, given and taken.

இதனால் கணவன்மார்களுக்கு ஒரு நன்மை, இனிமேல் கெடுமதிப் பெண்கள் திடீரென்று நினைத்துக்கொண்டு தற்போது பொய் 498A புகார்களில் சொல்வதுபோல், “திருமணத்தன்று ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்தேன்” என்று அண்டப்புளுகு புளுக முடியாது. ஆனால், இதையும் தாண்டி இந்த சட்டத்தில் இண்டு இடுக்கு கண்டுபிடித்து, வேறு வித பொய்ப் புகார்கள் கொடுப்பதற்கு வழிவகைகள் தேடி வன்கொடுமை செய்யலாம், அதற்கென்றெ இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் வக்கீல்கள் இதற்குத் துணை போகலாம். பொய் சொல்பவர்களையும், சோரம் போகிறவர்களையும் சட்டம் போட்டு முழுவதும் தடுக்க இயலாது.

ஆனால் இந்த அரசாணை ஒரு “ஸ்பீட் பிரேக்கர்”. அவ்வளவுதான்!

இனி செய்தி:-

சென்னை : “அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். உரிய நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் அல்லது தவறான தகவல் அளித்தால் குற்ற வழக்கு தொடரப்படும்’ என்று, பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு:

தமிழக அரசு இந்த ஆண்டு இயற்றிய திருமணங்கள் பதிவுச் சட்டப்படி, பல மதங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்கள், நவம்பர் 24ம் தேதி முதல், தமிழகத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். பல்வேறு மதச் சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இந்த சட்டப்படி, பதிவுத் துறைத் தலைவர், தலைமை திருமணப் பதிவாளராகவும், மாவட்ட பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும், சார்பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருமணப் பதிவுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக, அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

கட்டாய திருமணப் பதிவுக்கான விவரங்கள் மற்றும் படிவங்கள், துறையின் இணையதளத்தில் (www.tnreginet.net) வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்து விவரங்களை அறிந்து, படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.திருமணப் பதிவுக்கான படிவம் மற்றும் விண்ணப்பத்தில் எவ்வித அடித்தலோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையெழுத்துடன், திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் 100 ரூபாய் கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேலானால், 150 ரூபாய் கட்டணம்) திருமணம் நடந்த எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் அளிக்க வேண்டும். அல்லது அஞ்சல் வழி அனுப்ப வேண்டும்.

திருமணத்துக்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆள் அறிவதற்கான அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும். விண்ணப்பமும், ஆதாரங்களும் முறையாக இருந்தால், சம்பந்தப்பட்ட திருமணப் பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய வகையில் இல்லாத மனுக்கள், குறைகளை சரிசெய்து திரும்ப அளிக்குமாறு மனுதாரரிடம் திரும்ப அளிக்கப்படும்.மணமக்கள் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டால், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப் பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.இந்த மறுப்பு உத்தரவு மீது, சம்பந்தப்பட்ட நபர்கள், உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

அந்த மேல்முறையீடு மீது மாவட்ட பதிவாளர் பிறப்பிக்கும் உத்தரவு திருப்தி இல்லையெனில், 30 நாட்களுக்குள் பதிவுத் துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத் துறை தலைவரின் உத்தரவே இறுதியானது.திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நவம்பர் 24ம் தேதி முதல் நடக்கும் அனைத்து திருமணங்களும், எந்த ஜாதி மற்றும் மதமாயிருப்பினும், உரிய நாளில் பதிவு செய்யாவிட்டாலோ, தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தாலோ, விதி மீறல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரிவுகள்:ஆண்கள் நலன் குறிச்சொற்கள்:, , , , , , , ,

புகார் கொடுத்து ஆட்டிப் படைக்கும் பெண்கள் : விடுபட தேசிய ஆண்கள் ஆணையம் தேவை

சென்னை : “புகார் மேல் புகார் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டிப் படைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆண் கள் பாதுகாப்பு சங்கம், சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்தியது. நாடு முழுவதும் ஆண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தங்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சங்கத்தின் மாநில தலைவர் அருள் துமிலன் தலைமை வகித்தார். “பெண்கள் கொடுக்கும் போலியான வரதட்சணை புகார்களின் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது; வரதட்சணைக் கொடுமையில் சிக்கும் அரசு ஊழியர் களை பணி நீக்கம் செய்யக் கூடாது; கள்ளக்காதல் கொலைகளைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டம் 497ல் திருத்தம் செய்து, ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். புகார் மேல் புகார்களைக் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டி வைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்; இந்திய கலாசாரத் திற்கும், குடும்ப அமைப்புகளுக்கும் எதிராக 2005ல் கொண்டு வரப்பட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.

சங்கத்தின் தலைவர் அருள் துமிலன் பேசுகையில், “சமூகத்தில் ஆண்களுக்கு பெண்களால் ஏற்படும் கொடுமைகள் அதிகம். ஆண்கள் வெளியில் சொல்வதில்லை. சொன்னாலும் நிவாரணம் கிடைப்பதில்லை. பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சங்கத் தின் மூலம் சட்ட உதவியும், பாதுகாப்பும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சங்கம் தொடர்ந்து ஈடுபடும். தேசிய ஆண்கள் ஆணையம் அமைய வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்’ என்றார்.

சென்னையில் உலக ஆண்கள் தினம்

உலக ஆண்கள் தினமாகிய நவம்பர் 19, 2009 அன்றுசென்னை மெமோரியல் ஹால் எதிரில் அகில இந்திய ஆண்கள் நலச் சங்கத்தைச் (AIMWA) சார்ந்த தோழர்கள் தர்ணா நிகழ்த்தினார்கள். அதன் காட்சி ஒன்றையும், அவ்வமயம் வழங்கப்பட்ட கோரிக்கைகளடங்கிய கையேட்டையும் இங்கு காணலாம்.

Men's Day Dharna

International Men's Day demands

All India Men's Welfare Association Helpline

ஆண்களுக்கென்று ஒரு நாள்!

அகில உலக ஆண்கள் தினம் (International Men’s Day) நாளை (19-11-2009) அன்று கொண்டாடப்படுகிறது. இது 1999-இல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.

இவ்வாண்டுக்கான உலக ஆண்கள் தினம் (International Men’s Day) 2009 நவம்பர் 19-ம் நாள் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் டில்லி, மும்பை, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பல நகரங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும் என்னும் கேள்வி இன்னும் சிலருக்கு எழுகிறது. சிறப்பான செயல்பாடுகள் அனைத்துமே பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள் மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

சென்னையில் நாளை (19-11-2009) அன்று காலை அகில இந்திய ஆண்கள் நல சங்கம் – “AIMWA” (All India Men’s Welfare Association) சில ஆண்கள் கல்லூரிகளுக்குச் சென்று கொள்கை விளக்கக் கையேடுகளை வினியோகம் செய்வர். பிறகு கார், மற்றும் இரு சக்கர ஊர்தியில் ஊர்வலமாகச் சென்று “ஆண்கள் பாதுகாப்பு இயக்கம்” நிகழ்த்தப் போகும் தர்ணாவில் கலந்து கொள்வர்.

இந்த தர்ணா நாளை (19-11-2009) காலை 11-00 மணி முதல் 12-00 மணி வரை சென்னை பார்க் டவுன் “மெமோரியல் ஹால்” எதிரில் நிகழ இருக்கிறது. இந்த இடம் சென்னை பொது மருத்துவ மனைக்கு எதிரிலும், இன்னொரு பக்கம் பார்க் டவுன் அஞ்சல் நிலையத்திற்கு எதிரிலும் உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் சென்று பங்கெடுத்துக் கொள்ளலாம்.

நாளை இது பற்றி ஒரு செய்திக் குறிப்பும் வெளியாகும்.

நன்றி.