தொகுப்பு

Archive for 2010-01-25

வெற்றி, வெற்றி, பெண்ணியவாதிகளின் முயற்சி முழு வெற்றி!

முழங்கட்டும், சங்கொலி!

இந்தியப் பெண்கள் ஆணாதிக்க சமூகத்திலிருந்து முழு விடுதலை அடைந்து விட்டனர். இந்த மகத்தான சாதனைக்கு முழுக் காரணமாக அமைந்த பெருமை AIDWA போன்ற பெண் விடுதலை இயக்கங்களுக்கும், மற்றும் ஆண்களை அழித்து பெண்களை முன்னேற்றத் துடிக்கும் ஜொள்ளு ஸ்பெஷலிஸ்டு கிழக் கோட்டான்களுக்குமே சேரும்!

இதுநாள் வரை கள்ளக் காதலுக்கு பலியாகிக் கொண்டிருந்தவர்கள் அப்பாவி கணவன்மார்கள்தான் என்பதால் நம் சமூகம் எந்தக் கவலையுமில்லாமல் இருக்கிறது. ஏனென்றால் கணவர்கள்தானே சாகிறார்கள், எப்படியும் கல்யாணம் என்று ஒன்று ஆகிவிட்டால் கணவன் ஒன்று சிறைக்குப் போக வேண்டும் இல்லாவிட்டால் கள்ளக்காதல் மனைவியின் கையால் சாகடிக்கப்பட வேண்டியவந்தானே என்ற கருத்தில் அதைப் பற்றி கவலைப் படாமல் இதுகாரும் இருந்து கொண்டிருந்தது. Husband is an expendable commodity.

ஆனால், இப்போது கள்ளக்கதல் கொலை என்பது கணவனைத் தாண்டி, கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் பேதைகளின் உடன் பிறந்த சகோதரர்களையும் பெற்ற தாயையும் தாக்கத் தொடங்கிவிட்டது இதன் பரிணாம வளர்ச்சியைக் காண்பிக்கிறது!

இதோ, இதைப் படித்துவிட்டு முரசு கொட்டுங்கள்:-

கள்ளக்காதலை கண்டித்த அண்ணனை வெட்டிக் கொன்ற தங்கை
தடுத்த தாய்க்கும் சரமாரி வெட்டு

ஜெயங்கொண்டம், ஜன.23 – 2010. தினத்தந்தி

கள்ளக்காதலை கண்டித்த அண்ணனை தங்கை வெட்டிக்கொன்றார். இதை தடுத்த தாய்க்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெறிசெயலில் ஈடுபட்ட தங்கையை போலீசார் கைது செய்தனர்.

தங்கை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 45). இவரது மனைவி கண்ணகி (வயது43). இவர்களுக்கு சரவணன் என்ற மகனும், ஆனந்தி என்ற மகளும் உள்ளனர்.

ராஜேந்திரனின் தங்கை ராஜாத்தி(வயது38). இவரை காங்கேயங்குறிச்சியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். தனது தங்கைக்கு சொந்த ஊரிலேயே ராஜேந்திரன் வீடு கட்டி கொடுத்து தங்க வைத்திருந்தார்.

கள்ளத்தொடர்பு

ராஜாத்தி அதே பகுதியை சேர்ந்த சில ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவருடைய அண்ணன் ராஜேந்திரன் கண்டித்தார். ராஜாத்தியை மீண்டும் அவருடைய கணவர் ஊருக்கே அனுப்பி வைத்தார். இதனால் அண்ணன் மீது ராஜாத்திக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

வெறியாட்டம்

தன் இன்ப வாழ்வுக்கு இடைனிறாக இருக்கும் அண்ணன் ராஜேந்திரனை தீர்த்து கட்ட ராஜாத்தி முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு சூரியமணலுக்கு ராஜாத்தி வந்தார். ராஜாத்தியின் தாய் கமலம், அண்ணன் ராஜேந்திரன் ஆகியோர் இந்த நேரத்தில் இங்கு என்ன வேலை என்று கேட்டனர். அதற்கு இரவு 11 மணி ஆகி விட்டது. எனக்கு தலைவலியாக இருக்கிறது. நான் வீட்டில் இரவு தங்கி விட்டு காலையில் ஊருக்கு சென்று விடுகிறேன் என்று ராஜாத்தி கூறினார்.

பின்னர் அனைவரும் தூங்க சென்றனர். விடியற்காலை 4 மணியளவில் ராஜாத்தி படுக்கையில் இருந்து எழுந்தார். வீட்டில் ராஜேந்திரன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். தனது கொலை திட்டத்தை நிறைவேற்ற இது தான் சரியான நேரம் என்று ராஜாத்தி முடிவு செய்தார். வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ராஜேந்திரனின் கழுத்து, மார்பு, கை, வயிறு என்று சரமாரியாக வெட்டினார். திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன அவர் வலியால் அலறினார். ராஜேந்திரனின் அந்த சத்தத்தை கேட்டு அவருடைய தாய் கமலம் ஓடி வந்தார். ராஜேந்திரனை வெட்டுவதை தடுக்க முயன்றார். அவரையும் ராஜாத்தி வெட்டினார். வெறியாட்டம் ஆடிய ராஜாத்தி அங்கிருந்து தப்பி ஓடினார். ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.

கைது

இதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கமலத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொடூர சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்காதலுக்காக சொந்த அண்ணனையே கொன்றுவிட்டு பதுங்கியிருந்த ராஜாத்தியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

Advertisements