தொகுப்பு

Archive for 2010-01-22

என்று தணியும் பெண்ணியவாதிகளின் ரத்த வெறி!

Slain sub-inspector Vetrivelபட்டப் பகலில் துடிக்கத் துடிக்க சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் வெற்றிவேல். அவர் யார்? அவர் சீருடையில் டூட்டியில் இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்!

அவர் இப்படி காட்டுமிராண்டித்தனமாக வெட்டிச் சாய்க்கப்பட்டதின் அடிப்படைக் காரணம் என்ன?

ஆம்! இபிகோ செக்‌ஷன் 498A தான்!

நம் நாட்டிலிருக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்காக, பல பெண்ணியவாதிகள் போராடிப் பெற்றுத் தந்திருப்பதாக பறை சாற்றிக் கொண்டிருக்கும் அந்தக் கொடுங்கோன்மை பொல்லாங்குச் சட்டமான 498a சட்டத்தின் நீட்சியாகத்தான் ஒரு பாவமும் அறியாத சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை செய்யப்பட்டிருக்கிறார்!

கடையம் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தை கொலை செய்வதாக நினைத்துக் கொண்டு ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ வெற்றிவேலை வெட்டிச் சாய்த்துவிட்டனர்.

இந்தக் கொலையை செய்தது யார்? சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தின் மனைவி சிவகாமி!

ஆம், ஒரு பெண் பேதைதான் கொலைகாரி! பாவம், அவள்தான் என்ன செய்வாள்! கணவனைக் கொலை செய்யமுயன்றது ஒரு தவறா? சரிய்யா, ஆள் மாறாட்டத்தால் இன்னொரு சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டார். அதனால் என்ன? அவரும் ஒரு ஆண்மகன் தானே? இதற்கு ஏன் இந்தப் பாடு படுத்துகிறீர்கள்? ஆஃப்டர் ஆல் ஒரு ஆண் கொலை செய்யப்பட்டார். அவ்வளவுதானே! அதுவா இப்போது முக்கியம்? 20 ஆண்டுகள் முன்னர் ஒரு பெண்ணின் கையை ஒரு ஆண் பிடித்துவிட்டானே, அதுதானே ஐயா பெரிய குற்றம்? நம் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நேபாள பெண் ஒருவளை திருப்பி அனுப்பி அவளது பெற்றோர் வசம் அனுப்பி விட்டார்களே – அந்த அநியாயத்தை எதிர்த்துப் போராடுவதுதானே ஐயா இதைவிட முக்கியம்? பிரதம மந்திரி, உள்துறை மந்திரி ஆகியோர் அதைத்தானே முக்கியமாக கையிலெடுத்து அந்தப் பெண் மனம் கோணாமல் நடந்து கொள்கிறார்கள்! அதுதானே நம் நாட்டில் தலையாய பிரச்னை? அதை விடுத்து ஏதோ ஒரு சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டதைப்போய் – அதுவும் ஒரு பெண்ணால் – பெரிசு படுத்துகிறீர்களே! அகில இந்திய ஜனநாயக மாதர் கழகத்தினர் (AIDWA – All India Democratic Women Association) இந்தப் போக்கை வன்மையாக கண்டிக்கின்றனர்!

சரி. சிவசுப்பிரமணியத்தைப் போல் தோற்றம் கொண்டிருந்த பாவத்திற்காக, நடு ரோட்டில் யூனிஃபார்மோடு சேர்த்து கசாப்புக் கடையில் கொத்துக்கறி வெட்டுவதுபோல் சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டார்! உயிர் தப்பிய அந்த சிவசுப்பிரமணியம் என்ன சொகிறார்?

”எனக்கும் சிவகாமிக்கும் திருமணம் முடிந்த 3வது நாளிலேயே மனக்கசப்பு ஏற்பட்டது.

மனைவி பட்டப்படிப்பு படித்திருப்பதாக சொன்னார்கள். அவரிடம் கேட்டபோது பிளஸ்-2 பெயில் என்றார். சான்றிதழை வாங்கிப்பார்த்த போது 4 வயதை குறைத்துச் சொல்லி என்னை ஏமாற்றியது தெரிய வந்தது. அன்று முதல் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

மனைவி மீதுள்ள வெறுப்பில் வீட்டுக்கு செல்லாமல் நண்பர்களின் அறைகளில் தங்கினேன். என்னை கேட்காமலேயே கர்ப்பத்தை கலைத்தாள். இதனால் நான் கடும் வெறுப்படைந்தேன்.

அதன்பிறகு என்னைவிட்டு பிரிந்து பிறந்த வீட்டுக்கு போய்விட்டாள். அவளது உறவினர் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்தின் திட்டப்படி என்மீது வரதட்சணை புகார் கொடுத்தாள் (Sec 498A IPC). துப்பாகியை காட்டி நான் கர்ப்பத்தை கலைக்க சொன்னதாக புகார் செய்யவே, நான் சஸ்பெண்ட் ஆனேன்.

பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் வேலையில் சேர்ந்தேன். இநி நிலையில் என்னைக் கொலை செய்ய சதி போட்டனர்.

2 முறை என்னை கொல்ல சதி நடந்தது. இரண்டு முறையும் தப்பிவிட்டேன். இப்போது 3வது முறையாக தப்பியிருக்கிறேன். சம்பவத்தன்று நான் ரகசியமாக விடுமுறை எடுத்து கோவிலுக்கு சென்றதால் உயிர் பிழைத்தேன்.”

இதுநாள்வரை கணவன்மார்களுக்குத்தான் மனைவிகள் மூலம் ஆபத்து வரும் என்னும் நிலை இருந்தது. இனிமேல் கணவர்கள் போல் தோற்றமளிக்கும் அனைத்து ஆண்கள் உயிருக்கும் பாதுகாப்பில்லை என்ற பயங்கரமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மக்களைக் காக்கும் கடமையைக் கொண்டிருக்கும் ஒரு காவல் துறை அதிகாரியே இப்படிக் கொடூரமான முறையில் பட்டப் பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்டிருப்பாரேயானால் சாதாரண மக்கள் கதி என்ன?

சரி. இத்தகைய பொய்க் கேசுகளும், கணவர்கள் மற்றும் கணவரைப் போன்றவர்கள் கொலை செய்யப்படும் நிலையும் சமுதாயத்தில் தோன்றியமைக்குக் காரணமானவர்கள் யார்?

இதோ பதில்:

பாவம், பெண்கள். இன்னமும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்

Advertisements