தொகுப்பு

Archive for 2010-01-21

கள்ளக்காதலுக்கு வயது ஒரு தடையல்ல. ஆனால் அதைத் தடை செய்யும் கணவன் கொலையாவது நிச்சயம்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி
கள்ளக்காதலனுடன் கைது

ஊட்டி, ஜன.20 – 2009. செய்தி: தினத்தந்தி
http://www.dailythanthi.com/article.asp?NewsID=541418&disdate=1/20/2010&advt=2

ஊட்டி தடுப்பணையில் கிடந்த ஆண் பிணம், கொலை செய்யப்பட்டு வீசப்பட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி அருகே சுற்றுலா இடமான தொட்டபெட்டா பகுதி அமைந்து உள்ளது. அந்த வனப்பகுதியை அடுத்து அரசு ஆராய்ச்சி பண்ணை அமைந்துள்ளது. இந்த இடத் தில் இருந்து கார்டன்மந்து செல்லும் குறுக்கு பாதையில் தடுப்பணை கட்டப்பட்டு நீர் தேக்கம் செய்யப்படுகிறது.

இந்த நீர் தேக்கத்தில் கடந்த 7-ந் தேதி 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். அவர்கள் இது குறித்து ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத் துக்கு தகவல் கொடுக்கப்பட் டது. தகவலின் பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றினார்கள். தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கபில்குமார் சராட்கர் உத்தரவின் பேரில் ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக்குமார் மேற்பார்வையில் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலைய (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சத்தியசாதன், சப்-இன்ஸ் பெக்டர்கள் பிரவீனா, சிவசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இது தொடர்பாக கடந்த 9-ந் தேதி `தினத்தந்தி’ யில் இறந்தவரின் படம் மற்றும் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் காரணமாக இறந்தவர் பாலன் என்கிற பாலகிருஷ்ணன் (வயது 55) வெலிங்டன் லூர்துபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்கள்

இதை தொடர்ந்து போலீ சார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

பால கிருஷ்ணனுக்கு திருமணமாகி மல்லிகா (45) என்று மனைவியும், அம்மு (27) என்ற மகளும் உள்ளனர். மகள் அம்மு திருமணம் செய்து கொடுக்கப்பட்டு கார மடையில் கணவருடன் வசித்து வருகிறார். பால கிருஷ்ணன் மத்திய அரசுக்கு சொந்தமான சில்க் பண்ணையில் வேலை செய்து ஓய்வு பெற்று கொண்டு மகள் அம்மு வீட்டில் சிறிது காலம் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மல்லிகா (45 வயது) ஊட்டி காந்தல் குருசடி பகுதிக்கு வந்த போது, அவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த அந்தோணி சார்லஸ் என்கிற சந்திரன் (42) என்பவருக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் சுமார் 8 மாத கால மாக பழகி வந்துள்ளனர்.

உல்லாசம்

மல்லிகாவும் (45), அந்தோணி சார்லஸ் (42) பல இடங்களில் உல்லாசமாக இருந்து உள்ளனர். அடிக்கடி அந்தோணி சார்லஸ் லூர்துபுரம் மல்லிகா வீட்டிற்கு வந்து சென்று உள்ளார்.

இதை அறிந்த பால கிருஷ்ணன் தனது மனைவி மல்லிகாவை கண்டித்து உள்ளார். கள்ளக்காதலுக்கு தனது கணவர் பாலகிருஷ்ணன் இடயூறாக உள்ளார். எனவே கணவரை தீர்த்து கட்டி விட வேண்டும் என்று மல்லிகா முடிவு செய்துள்ளார்.

இதற்காக கள்ளக்காதலன் அந்தோணி சார்லசுடன் சதி திட்டம் தீட்டி கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். பால கிருஷ்ணன் காரமடையில் உள்ள தனது மகள் அம்மு வீட்டில் இருந்து தனது பென்சன் வாங்க கடந்த 6-ந் தேதி குன்னூர் இந்தியன் வங்கிக்கு வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட மல்லிகா தனது கள்ளக்காதலன் அந்தோணி சார்லசுக்கு தகவல் கொடுத் துள்ளார். அன்று அந்தோணி சார்லஸ் பாலகிருஷ்ணனை சந்தித்து பேசி, இருவரும் மது அருந்த லாம் என குன்னூரில் உள்ள ஒரு மதுக்கடைக்கு சென்றனர். அங்கு பாலகிருஷ்ணனை மது அருந்த வைத்தார். பின்னர் ஊட்டிக்கு போகலாம் என்று அழைத்து வந்துள்ளார்.

பின்னர் அந்தோணி சார்லஸ் ஊட்டியில் மேலும் ஒரு பாட்டில் மதுவை வாங்கி பால கிருஷ்ணனிடம் கொடுத்து, வனப்பகுதிக்கு சென்று ஜாலியாக குடித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறி, தொட்டபெட்டா வனப் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு அழைத்து வந்துள்ளார்.அங்கு பாலகிருஷ்ணனை மதுவை குடிக்க செய்துள்ளார்.

கொலை

தொடர்ந்து பாலகிருஷ்ணன் மது அதிகமாக குடித்ததால் நிதானம் இழக்க தொடங்கிய தும் கையில் இருந்த மிளகாய் பொடியை முகத்தில் வீசினார்.பின்னர் அருகில் இருந்த தடுப்பணையில் தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். மேற் கண்ட தகவல் போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தலை மறைவாக இருந்த அந்தோணி சார்லஸ் மற்றும் பாலகிருஷ்ணனின் மனைவி மல்லிகா ஆகிய 2 பேரையும் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீ சார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

பாராட்டு

துரிதமாக சந்தேக மரணம் அடைந்த பாலகிருஷ்ணன் குறித்து விசாரணை நடத்தி, கொலையாளிகளை கைது செய்த ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் மற்றும் போலீசாரை நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு கபில்குமார் சராட்கர் பாராட்டினார்.

Advertisements