தொகுப்பு

Archive for 2010-01-19

498A கேசு போட்ட பிளஸ் டூ மாணவி

திருமணமான 3வது நாளில் வரதட்சணை கேசு (498A) : கலெக்டரிடம் பள்ளி மாணவி புகார்
ஜனவரி 19,2010. தினமலர்

498A கேசு போட்ட பிளஸ் டூ மாணவிராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வரதட்சணை கொடுமையால் திருமணம் முடிந்து மூன்று நாட்களில், தாய்வீட்டிற்கு வந்த பிளஸ் 2 மாணவி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கலெக்டரிடம் புகார் கொடுத்தார்.

ராமநாதபுரம் கருவப்பிள்ளைக்கார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா (18). இங்குள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கும், மண்டபம் கேம்ப் மணிகூண்டு பகுதியை சேர்ந்த மற்றொரு ஆறுமுகம் மகன் சரவணன் என்பவருக்கும் 2009ம் ஆண்டு நவ., 29ம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது, 11 சவரன் நகை , 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. சரவணன், ரேஷன் கடை விற்பனையாளராக உள்ளார். திருமணம் நடந்த மூன்று நாட்களிலே அனிதா, தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பெற்றோர் விசாரித்ததில், சரவணன் மற்றும் அவரது தாயார் கஸ்தூரி, அண்ணன் மனைவி முனீஸ்வரி ஆகியோர் மேலும், 20 சவரன் நகை மற்றும் டூவீலர் வாங்கி வரக்கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அனிதா, ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகார் மீது சரியான நடவடிக்கை இல்லாததால், ராமநாதபுரத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், தன்னை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தார். இம்மனு, பிரதீப்குமார் எஸ்.பி.,க்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, மகளிர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

அனிதா கூறியதாவது:

எனது அக்காவை பெண் பார்க்க வந்தவர்கள், படித்து கொண்டிருந்த என்னை திருமணம் செய்வதாக கூறியதால், பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர். ஆனால், திருமணம் முடிந்த மறுநாளே, எனது கணவர் சரவணன் குடிபோதையில் என்னை துன்புறுத்தினார். உன்னை பிடிக்கவில்லை. உனது அக்காவைத்தான் திருமணம் செய்ய இருந்தேன். நான் கேட்கிறபடி கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொலை செய்து, வேறு திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி அடித்தார். இவ்வாறு அனிதா கூறினார்.

Advertisements