இல்லம் > புதுமைப் பெண் > இதுக்கெல்லாம் பெயர் கல்யாணமா! சீ! தூ!! வெட்கங்கெட்ட ஜன்மங்கள்!

இதுக்கெல்லாம் பெயர் கல்யாணமா! சீ! தூ!! வெட்கங்கெட்ட ஜன்மங்கள்!

தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை மாற்றிய பட்டதாரி பெண்

சென்னை, ஜன.18 – 2010. செய்தி – தினத்தந்தி

சென்னையில் தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை மாற்றி பட்டதாரி பெண் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இரண்டாம் காதலனை கைப்பிடிக்க நூதன நாடகத்தை அரங்கேற்றி இறுதியில் நிச்சயிக்கப்பட்ட அப்பாவியை ஏமாற்றினார் புதுமைப் பெண்!

(இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனை உடனே கைது செய்திருப்பார்கள். பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சட்டை மாற்றுவதுபோல் கணவனை மாற்றலாம். கள்ளக் காதலுக்காக கணவனை கொலை கூட செய்யலாம்! வெட்கக்கேடு!!)

எம்.சி.ஏ. பட்டதாரி பெண்

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் முதலில் சென்னை அயனாவரத்தில் பெற்றோருடன் வசித்தார். அப்போது அவருடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த காதல் வளர்ந்து வேரூன்றி நிலைத்து நின்றது. இந்த நிலையில் இந்த காதலில் திடீர் விரிசல் ஏற்பட்டது. அகிலா வேறொரு வாலிபரை காதலிக்க ஆரம்பித்தார்.

இதனால் முதலில் காதலித்த வாலிபர் ஒதுங்கிக்கொண்டார். இதற்கிடையில் அகிலாவுக்கு அவரது பெற்றோர் முறைப்படி மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக அகிலா முதலில் காதலித்த வாலிபரை திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர். அகிலாவும் வேறு வழி இல்லாமல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் உள்ளூர அவர் 2-வது காதலித்த வாலிபரையே மணக்க விரும்பினார்.

நூதன நாடகம்

இதற்காக 2-வது காதலரும், அகிலாவும் சேர்ந்து ஒரு நூதன நாடகத்தை அரங்கேற்றினார்கள். 2-வது காதலரை வைத்து முதல் காதலரின் பெற்றோரிடம் செல்போனில் பேசவைத்தார்.

“உங்கள் மகன், அகிலாவின் கழுத்தில் தாலியை மட்டும்தான் கட்ட முடியும், ஆனால் நான்தான் அவளோடு குடும்பம் நடத்துவேன்” என்று மிரட்டும் தோரணையில் 2-வது காதலர் பேசினார். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று காலையில் திருவேற்காடு கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சினை வெடித்தது. மாப்பிள்ளையின் பெற்றோர் அயனாவரம் போலீசில் புகார் கொடுத்து திருமணத்தை நிறுத்த சொன்னார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயவேல் விசாரணை நடத்தினார்.

காதலன் தாலி கட்டினார்

மணப்பெண் அகிலாவை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரும் திருமணத்தை நிறுத்த சம்மதித்தார். முதலில் நிச்சயித்த திருமணம் நிறுத்தப்பட்டது.

ஆனால் முகூர்த்த நேரத்தில் தனது காதலனை வரவழைத்து மணமேடையில் உட்கார வைத்து அகிலா அவருக்கு கழுத்தை நீட்டி விட்டார். தனது நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றி, விரும்பிய காதலன் மாப்பிள்ளையையும் அகிலா மணந்து கொண்டார். போலீசார் கூட எல்லாம் முடிந்த பிறகுதான் அகிலாவின் நாடகத்தை தெரிந்து கொண்டனர்.

முதலில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை எதுவும் தெரியாமல், அகிலாவை எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி விட்டு சென்றார்.

Advertisements
 1. 3:55 பிப இல் 2010-01-18

  //முதலில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை எதுவும் தெரியாமல், அகிலாவை எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி விட்டு சென்றார். //

  நல்ல ​வே​லை தப்பிச்சார் இந்த புண்ணியவான்… இல்ல விட்டால் கள்ளக்காதல் ​கொ​லை அல்லது 498ஏ அரக்கனுக்கு பலிஆகியிருப்பார்… திருமணத்தில் ஆ​ளைமாற்றிய அக்கா எங்கிருந்தாலும் வாழ்க (து​ணையிருக்கின்றது 498ஏ)

  498ஏ அப்பாவி

 2. GP
  11:14 பிப இல் 2010-01-18

  The concern person who escaped from this Lady should be very thankful. If she had married the boy she will surely continue her illicit relationship and would have killed him in near future or might have slapped him with false 498a to get the required amount from the innocent plus to marry her lover in near future

  She missed the chance to get hold of two mangoes with one stone (498a).I pity on her innocence 😦

 3. 9:49 முப இல் 2010-01-19

  இ​தொ இ​தைப்படித்துப்பாருங்கள்…
  திருமண நாள் அன்று மனப்​பெண் எஸ்​கேப். காதல​னை ​கைப்பிடித்தரர். ​
  தினத்தந்தியில் ​வெளியான ​செய்தி
  http://www.dailythanthi.com/article.asp?NewsID=541327&disdate=1/19/2010

  கடத்தல் நாடகம் அம்பலம். (பிச்சில லவ்பண்ணும் ​பொழுது ​​யோசிப்பாங்க​லோ)

 4. Selvan
  8:59 பிப இல் 2010-01-20

  இந்த வெட்கங்கெட்ட பெண்களை முதலில் ஆதரிப்பது ஆண்கள்தான். அந்த ஈன வெட்கங்கெட்ட ஆண்களை பற்றி அவர்களுக்கு அறிவு வருவது போல் கொஞ்சம் எழுதுங்களேன் !!!

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: