தொகுப்பு

Archive for 2010-01-18

இதுக்கெல்லாம் பெயர் கல்யாணமா! சீ! தூ!! வெட்கங்கெட்ட ஜன்மங்கள்!

தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை மாற்றிய பட்டதாரி பெண்

சென்னை, ஜன.18 – 2010. செய்தி – தினத்தந்தி

சென்னையில் தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை மாற்றி பட்டதாரி பெண் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இரண்டாம் காதலனை கைப்பிடிக்க நூதன நாடகத்தை அரங்கேற்றி இறுதியில் நிச்சயிக்கப்பட்ட அப்பாவியை ஏமாற்றினார் புதுமைப் பெண்!

(இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனை உடனே கைது செய்திருப்பார்கள். பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சட்டை மாற்றுவதுபோல் கணவனை மாற்றலாம். கள்ளக் காதலுக்காக கணவனை கொலை கூட செய்யலாம்! வெட்கக்கேடு!!)

எம்.சி.ஏ. பட்டதாரி பெண்

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் முதலில் சென்னை அயனாவரத்தில் பெற்றோருடன் வசித்தார். அப்போது அவருடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த காதல் வளர்ந்து வேரூன்றி நிலைத்து நின்றது. இந்த நிலையில் இந்த காதலில் திடீர் விரிசல் ஏற்பட்டது. அகிலா வேறொரு வாலிபரை காதலிக்க ஆரம்பித்தார்.

இதனால் முதலில் காதலித்த வாலிபர் ஒதுங்கிக்கொண்டார். இதற்கிடையில் அகிலாவுக்கு அவரது பெற்றோர் முறைப்படி மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக அகிலா முதலில் காதலித்த வாலிபரை திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர். அகிலாவும் வேறு வழி இல்லாமல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் உள்ளூர அவர் 2-வது காதலித்த வாலிபரையே மணக்க விரும்பினார்.

நூதன நாடகம்

இதற்காக 2-வது காதலரும், அகிலாவும் சேர்ந்து ஒரு நூதன நாடகத்தை அரங்கேற்றினார்கள். 2-வது காதலரை வைத்து முதல் காதலரின் பெற்றோரிடம் செல்போனில் பேசவைத்தார்.

“உங்கள் மகன், அகிலாவின் கழுத்தில் தாலியை மட்டும்தான் கட்ட முடியும், ஆனால் நான்தான் அவளோடு குடும்பம் நடத்துவேன்” என்று மிரட்டும் தோரணையில் 2-வது காதலர் பேசினார். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று காலையில் திருவேற்காடு கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சினை வெடித்தது. மாப்பிள்ளையின் பெற்றோர் அயனாவரம் போலீசில் புகார் கொடுத்து திருமணத்தை நிறுத்த சொன்னார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயவேல் விசாரணை நடத்தினார்.

காதலன் தாலி கட்டினார்

மணப்பெண் அகிலாவை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரும் திருமணத்தை நிறுத்த சம்மதித்தார். முதலில் நிச்சயித்த திருமணம் நிறுத்தப்பட்டது.

ஆனால் முகூர்த்த நேரத்தில் தனது காதலனை வரவழைத்து மணமேடையில் உட்கார வைத்து அகிலா அவருக்கு கழுத்தை நீட்டி விட்டார். தனது நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றி, விரும்பிய காதலன் மாப்பிள்ளையையும் அகிலா மணந்து கொண்டார். போலீசார் கூட எல்லாம் முடிந்த பிறகுதான் அகிலாவின் நாடகத்தை தெரிந்து கொண்டனர்.

முதலில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை எதுவும் தெரியாமல், அகிலாவை எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி விட்டு சென்றார்.

Advertisements

பெத்தவங்க ஜெயிலுக்குப் போகணுமா? இந்தியப் பெண்களை கட்டிக்கோங்க!

இந்தியப் பெண்களின் மேம்பாட்டுக்காகவே (ரவிக், லிப்ஸ்டிக், பாப், ஏசி ரூம் சகிதம் கால்மேல் கால் போட்டு அமர்ந்து) அல்லும் பகலும் உழைத்து ஓடாகத் தேயும் மேட்டுக்குடிப் பெண்ணியவாதிகளும், டுபாக்கூர் என்.ஜி.ஓ-க்களும் ஒருசேரப் “போராடி”ப் பெற்றுக் கொடுத்திருக்கும் Sec 498A IPC மற்றும் D.V.Act போன்ற சட்டங்களைக் கையிலெடுத்து ஒரு ஆண்டுக்கு 75 ஆயிரத்துக்கு மேல் பொய் வழக்குகளைப் போட்டு, கணவனையும், அவனுடைய வயதான பெற்றோர்களையும், மற்றும் உடன் பிறப்புகளையும் கைது செய்து உள்ளே தள்ளும் போக்கு நீடிக்கும் வரை இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொள்வது கொடிய நச்சுப் பாம்பை இடுப்பில் கட்டிக் கொள்வது போலத்தான்!

விழிப்புடன் இருந்தால் பிழைப்பீர்கள்! ”இல்லை, நாங்கள் விட்டில் பூச்சிகளைப் போல் விழுந்து சாவோம்” என்றால் அது உங்கள் விதி!

இதோ, அண்மைய குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்துள்ள கட்டுரை:-

(பட்ங்கள் மேல் கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கலாம்)

இந்தியப் பெண்களா, ஐயையோ!

Your parents are sure to get arrested on false dowry charges if you marry an Indian Girl

Marrying Indian girls is dangerous

இந்தியப் பெண்கள் பொய்க் கேசு போட்டு உங்களை ஜெயிலுக்கு அனுப்புவார்கள்

498A case will haunt you if you marry an Indian girl