தொகுப்பு

Archive for 2010-01-17

திருப்தியா, பெண்ணியவாதிகளே!

இந்தியாவின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கும் முதுகெலும்பாக விளங்குவது இந்திய பாரம்பரிய குடும்ப வாழ்க்கை முறையும், குடும்பப் பெண்களின் மனைமாட்சியும், சேமிப்பு மனப்பான்மையும்தான் என்று உலகமே போற்றும் நிலையில், அந்த அடிப்படை ஆணிவேறாகிய குடும்ப வாழ்க்கை முறையை சிதைத்து, சின்னாபின்னமாக்கி அனைவரையும் ஒற்றை மனிதர்களாக மாற்றி வெற்று செலவாளிகளாக, வேண்டாதவற்றை வாங்கிக் குவித்து பன்னாட்டு வணிக நிறுவனங்களின் கல்லாக்களை நிறப்பும் மெஷின்களாக மாற்றிட அல்லும் பகலும் பாடுபட்டுவரும் நம் நாட்டு பெண்ணியவாதிகளின் கனவுகள் கனஜோராக நிறைவேறிவருகிறது என்பதை நாம் தினமும் காணும் நிகழ்வுகளிலிருந்து அறிய முடிகிறது.

இத்தகைய கலாச்சார, பாரம்பரியச் சீரழிவுக்கு இந்த பெண்ணியவாதிகள் கையிலெடுத்திருக்கும் ஆயுதம், “ஐயகோ, இந்த நாட்டில் பெண்கள் அனைவரும் கொடுமைப் படுத்தப்படுகிறார்களே, மனைவிகள் அனைவரும் நாள்தோறும் எரிக்கப் படுகிறார்களே” என்கிற ஓலம். கணவர்கள் மற்றும் அவர்களுடைய ரத்த உறவுகள் மீது பொய் வரதட்சணை கேசுகளை ஒன்றின் மேல் ஒன்றாகப் பாட்டு, அவற்றின் மீது அடுக்கடுக்காக பல்வேறு சட்டங்களைக் கோர்த்து சிக்கவைத்து, அவர்களை சிறையிலடைக்க வைத்து, அதன் காரணமாக (இந்தியப் பெண்களை) திருமணம் செய்துகொள்வதே ஆபத்து என்ற எண்ணப் பாங்கை அனைத்து ஆண்கள் மனத்திலும் தோற்றுவித்து, நம் நாட்டு இளம் பெண்களை தனிமரமாக்கி, தங்கள் வாழ்வில் செக்ஸ்தான் பிரதானம் என்னும் மனப்பாங்கை ஊக்கம் கொடுத்து வளர்த்து, அவர்கள்தம் வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் பெண்ணியவாதிகள்.

இவர்கள் தங்கள் முயற்சியில் நிச்சயம் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது. வெகு சீக்கிறமே தங்கள் இலக்கை இவர்கள் எட்டிவிடுவார்கள். அன்றுதான் நம் நாட்டுப் பெண்கள் அனைவரும் ஆணாதிக்க மனப்பான்மை மிக்க சமுதாயத்திலிருந்து முழு விடுதலை பெற்றதாகக் கொள்ளமுடியும்.

இதோ இந்தச் செய்தி அத்தகைய வெற்றியின் ஒரு மைல்கல்!

சென்னையில் நடன அழகி கற்பழித்து கொலை; ஓட்டல் ஊழியர் தப்பி ஓட்டம்
கொலையை மறைத்த தோழி, கணவருடன் கைது; பரபரப்பு வாக்குமூலம்

சென்னை, ஜன.17 – 2010. செய்தி – தினத்தந்தி (http://www.dailythanthi.com/article.asp?NewsID=540914&disdate=1/17/2010)

சென்னையில் நடன அழகியை கற்பழித்து கொலை செய்துவிட்டு ஓட்டல் ஊழியர் தப்பி ஓடிவிட்டார். கொலையை மறைத்ததாக நடன அழகியின் தோழியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.

அழகி அஸ்மா

நடன அழகி கொலைபெங்களூர் காயத்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்மா (வயது 30). நடன அழகியான இவர், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று ஓட்டல்களில் நடனமாடுவது மூலம் பணம் சம்பாதித்து வந்தார். கடந்த புதன்கிழமையன்று தனது கணவருடன் அஸ்மா சென்னை வந்தார். ஜாபர்கான்பேட்டை திருவீதி அம்மன் கோவில் 2-வது தெருவில் வசிக்கும் தனது தோழி அனு என்ற அன்னம்மா வீட்டில் இரவு தங்கினார். அஸ்மாவின் கணவர் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார்.

அன்று இரவு அஸ்மாவும், அன்னம்மாவும் ஒன்றாக உட்கார்ந்து நீண்ட நேரம் பேசியுள்ளனர். பிறகு மது அருந்தியதாகவும் தெரிகிறது. நள்ளிரவு அன்னம்மாவின் கணவர் ரஞ்சித் வீட்டுக்கு வந்தார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரஞ்சித் பணியாற்றுகிறார். ரஞ்சித் வந்தபிறகு வீட்டின் ஒரு அறையில் அஸ்மா படுத்து தூங்கினார். இன்னொரு அறையில் ரஞ்சித்தும், அன்னம்மாவும் தூங்கினார்கள்.

பிணமாக கிடந்தார்

மறுநாள் வியாழக்கிழமை காலையில் பார்த்தபோது அஸ்மா படுத்த இடத்திலேயே பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் பெரியய்யா உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் பரந்தாமன், குமரன்நகர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அஸ்மாவின் பிணம் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தகவல் தெரிந்து புதுக்கோட்டை சென்றிருந்த அஸ்மாவின் கணவரும் அவசரமாக சென்னை திரும்பினார். போதை அதிகமானதால், மாரடைப்பு ஏற்பட்டு அஸ்மா இறந்திருக்கலாம் என்று போலீசார் முதலில் கருதினார்கள்.

ஆனால் நேற்று முன்தினம் காலையில் அஸ்மாவின் பிணம் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர்கள் அஸ்மா மூச்சு திணறடிக்கப்பட்டு இறந்ததாக கூறினார்கள். இதனால் அஸ்மா கொலை செய்யப்பட்டது, அம்பலமானது. குமரன் நகர் போலீசார் அஸ்மா கொலை செய்யப்பட்டதாக வழக்கை மாற்றி பதிவு செய்தனர்.

தோழி கணவருடன் கைது

பிரேத பரிசோதனையில் அஸ்மா கொலை செய்யப்பட்டது உறுதியானதால், அவரை கொன்றது யார்? என்ற கேள்வி எழுந்தது. ஒரே வீட்டில் அஸ்மா ஒரு அறையிலும், தோழி அன்னம்மாவும், அவரது கணவர் ரஞ்சித்தும் இன்னொரு அறையிலும் படுத்து தூங்கினார்கள். அப்படியிருக்க, அஸ்மாவை கொன்றது யாராக இருக்கும் என்று போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

அன்னம்மா, அவரது கணவர் ரஞ்சித் ஆகியோர் மீது போலீசாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. அவர்களுக்கு தெரியாமல் கொலை நடக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதினார்கள். அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்தனர்.

நாங்கள் கொலை செய்யவில்லை என்றும், அஸ்மா எப்படி இறந்தார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் இருவரும் சாதித்தபடி கூறினார்கள். இதனால் போலீசார் உண்மையை வரவழைக்க ஒரு தந்திரத்தை கையாண்டனர். அன்னம்மா மீதும், அவரது கணவர் ரஞ்சித் மீதும் கொலை வழக்கு போடப்போவதாக சொல்லி போலீசார் நாடகமாடினார்கள். இதை கேட்டு அன்னம்மாவும், அவரது கணவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

உடன் தங்கிய வாலிபர்

ரஞ்சித் வேலை செய்யும் அதே நட்சத்திர ஓட்டலில் கிரிதாஸ் (27) என்ற வாலிபரும் சப்ளையராக வேலை பார்த்தார். அவர் இரவு அன்னம்மா வீட்டில் வந்து தங்கினார். அஸ்மா போதையில் இருக்கும்போது அவரை பலவந்தப்படுத்தி கிரிதாஸ் உல்லாசமாக இருந்துள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த அஸ்மா, கிரிதாசின் `செக்ஸ்’ தொல்லை தாங்க முடியாமல் சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் கிரிதாஸ், அஸ்மாவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த தகவலை போலீசாரிடம் தெரிவிக்காமல் அன்னம்மாவும், அவரது கணவர் ரஞ்சித்தும் மூடி மறைத்துவிட்டனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மை தெரியாமல் இருந்திருந்தால் அஸ்மாவின் கொலையும் மறைக்கப்பட்டிருக்கும். உண்மையை மறைத்த குற்றத்திற்காக அன்னம்மாவையும், அவரது கணவர் ரஞ்சித்தையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

அன்னம்மா வாக்குமூலம்

போலீஸ் விசாரணையில், அன்னம்மா திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக வெளியிட்டார். அவர் கொடுத்த வாக்குமூல விவரம் வருமாறு:-

நானும், அஸ்மாவும் பெங்களூர் காயத்ரி நகர் பகுதியில் வசித்து வந்தோம். நாங்கள் இருவரும் ஏற்கனவே திருமணமானவர்கள். இருவருக்கும் குழந்தை உள்ளது. 8-ம் வகுப்பு வரை படித்துள்ள அஸ்மா அழகு கலை படித்தவர். பெங்களூரில் உள்ள `பினிட்டி பார்லரில்’ முதலில் வேலை செய்தார்.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள ஓட்டல்களில் நடனமாடினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஏஜெண்டு ஒருவர் கூறினார். அதன்படி சுற்றுலா விசாவில் நானும், அஸ்மாவும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு அடிக்கடி சென்று நடனமாடிவிட்டு வருவோம்.

இந்த நிலையில், நான் எனது கணவரை பிரிந்து சென்னை வந்து ரஞ்சித்தோடு வாழ்ந்து வந்தேன். அஸ்மாவும் அவளது முதல் கணவரை விட்டு பிரிந்தாள். முகமது அலி என்ற ரியல் எஸ்டேட் அதிபரை 2-வது திருமணம் செய்து கொண்டார். முகமது அலியும் ஏற்கனவே திருமணமானவர். அவரது குடும்பத்தினர் சொந்த ஊரான புதுக்கோட்டையில் வசிக்கிறார்கள். முகமது அலி புதுக்கோட்டைக்கு சென்று அடிக்கடி அவரது குடும்பத்தினரை பார்த்து வருவார். இவ்வாறு புதுக்கோட்டைக்கு வரும்போது இந்த முறை அஸ்மாவையும் தன்னோடு முகமது அலி அழைத்து வந்தார். வழியில் சென்னையில் எனது வீட்டில் அஸ்மாவை தங்க வைத்துவிட்டு சென்றார்.

(யாருக்கு யார் ஜோடியோ! ஒரே குழப்பமா இருக்கே!)

கிரிதாசின் ஆசை

அஸ்மா எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று இரவு எனது கணவரோடு ஓட்டலில் சப்ளையராக வேலைபார்த்த கிரிதாசும் எங்கள் வீட்டுக்கு வந்தார். கிரிதாஸ் ஏற்கனவே அஸ்மாவுக்கு பழக்கமானவர். எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து மருந்து அருந்தினோம். சுட, சுட கோழி பிரியாணியும் சாப்பிட்டோம். பின்னர் நானும், எனது கணவரும் போதை மயக்கத்தில் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கிவிட்டோம். இன்னொரு அறையில் அஸ்மாவும், கிரிதாசும் படுத்திருந்தனர்.

அப்போது கிரிதாஸ் போதை மயக்கத்தில் இருந்த அஸ்மாவை பலவந்தப்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது கிரிதாஸ், அஸ்மாவிடம் மீண்டும், மீண்டும் `செக்ஸ்’ தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு சம்மதிக்காத அஸ்மா சண்டை போட்டுள்ளார். இதனால் செக்ஸ் வெறியில் இருந்த கிரிதாஸ் கோபத்தில் அஸ்மாவின் கழுத்தை நெரித்துள்ளார். அதில் அவர் இறந்து போனார்.

கொலையை மறைக்க நாடகம்

இதனால் கிரிதாஸ் அதிர்ச்சி அடைந்து தூங்கிக்கொண்டிருந்த என்னையும், எனது கணவரையும் எழுப்பினார். அஸ்மாவை கொலை செய்த விஷயத்தை சொல்லி அழுதார். நானும், எனது கணவரும் என்ன செய்யலாம் என்று யோசித்தோம். மின்சாரம் தாக்கி அஸ்மா இறந்ததாக போலீசாரிடம் சொல்லி தப்பிவிடலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் அது சரியா வராது என்று அந்த திட்டத்தை கைவிட்டோம். அஸ்மாவுக்கு வெளிக்காயங்கள் எதுவும் இல்லை. கோபத்தில் கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் இறந்து போனதை வைத்து, போலீசாரிடம் ஒரு கதைவிட முடிவு செய்தோம். அதிக போதையில் மாரடைப்பு ஏற்பட்டு அஸ்மா இறந்ததாக சொல்லி போலீசை சமாளிக்க திட்டமிட்டோம்.

இந்த திட்டப்படி கிரிதாசை தப்பி செல்லுமாறு கூறிவிட்டோம். அதன்பிறகு போலீசாரை வரவழைத்து அஸ்மா அதிக போதையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கதைவிட்டோம். வெளிக்காயங்கள் இல்லாததால் நாங்கள் சொன்னதை போலீசார் நம்பிவிட்டார்கள். கிரிதாஸ், அஸ்மாவோடு தங்கியது, கொலை செய்தது போன்ற விஷயங்களை மூடி மறைத்துவிட்டோம். ஆனால், உண்மையை மறைத்து கடவுளை எங்களால் ஏமாற்ற முடியவிலை. பிரேத பரிசோதனை வடிவில் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து கடவுள் எங்களை காட்டி கொடுத்துவிட்டார்.

இவ்வாறு அன்னம்மா தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கேரளா தப்பி ஓட்டம்

கொலையாளி கிரிதாஸ் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். அவர் கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

கொலையை மூடி மறைத்ததால் கைதான அன்னம்மாவும், அவரது கணவர் ரஞ்சித்தும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அஸ்மாவின் உடல் நேற்று முன்தினம் இரவு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisements