தொகுப்பு

Archive for 2010-01-16

காதல் வென்றது!

கணவனுக்கு பயந்து கள்ளக்காதலன் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த பெண்!

ஜனவரி 15, 2010. செய்தி: தினமலர்

மும்பை:கணவனுக்கு பயந்து கள்ளக் காதலன் மீது கற்பழிப்பு புகார் சுமத்திய பெண், கோர்ட்டில் “காதலன் கற்பழிக்கவில்லை’ என சாட்சியம் அளித்தார்.மும்பை திஸ்கான் கல்யான் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், ரமேஷ் காவ்ரி என்ற டாக்டருடன் (கள்ளக் காதலன்) படுக்கை அறையில் படுத்து கொண்டிருந்தார்.

திடீரென அவரது கணவர் வீட்டுக்குள் நுழைந்து விடவே, வேறு வழியின்றி ரமேஷ் காவ்ரி தன்னை கற்பழித்து விட்டதாக கூறி அழுதார்.இதை உண்மையென நம்பிய (முட்டாள்) கணவர், மனைவி உடன் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று, ரமேஷ் காவ்ரி மீது புகார் கொடுத்தார். போலீசார் இந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனை அடிப்படையில் ரமேஷ் காவ்ரி மீது கற்பழிப்பு புகார் சுமத்தப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோர்ட்டில் ஆஜரான இந்த பெண், “ரமேஷ் காவ்ரி தன்னை கற்பழிக்கவில்லை. அவருடன் கடந்த ஓராண்டாக கள்ள உறவில் ஈடுபடுகிறேன். படுக்கையில் அவருடன் (உல்லாசமாக) இருந்த நிலையில், கணவர் திடீரென வந்துவிட்டதால் வேறு வழியின்றி அவர் மீது கற்பழித்ததாக புகார் சொன்னேன்’ என திடீரென வாக்குமூலத்தை மாற்றி சொன்னார். இதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டு வேறு வழக்கு பதிவு செய்யும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

புகார் அளித்த பெண்ணே ரமேஷ் காவ்ரி கற்பழிக்கவில்லை, என கூறியதால் அவரை சிறையிலிருந்து விடுவிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸ் விசாரணையை திசை திருப்பிய குற்றத்துக்காக அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. (கணவனை ஏமாற்றி கள்ளக்காதலில் ஈடுபட்டதற்காக அல்ல!)

ஏனென்றால் கள்ள உறவுகளுக்கு எதிராக (adultery) மனைவிமீது எந்த நடவடிக்கையும் எடுக்க சட்டத்தில் இடமில்லை. அனைத்து சட்டங்களும் ஆண்களுக்கு எதிராகவே அமைந்துள்ளன!

Advertisements